அமரர்.சி.மூ.இராசமாணிக்கமும் அவரது பணிகளும்

Fri,Mar 15, 2013. By

உலகெலாம் தமிழ் ஓசை ஓங்கி ஒலிக்கின்ற இக்காலத்தில் இலங்கையில்; பிறந்து தாய் நாட்டிலோ புலம் பெயர்ந்து வெளிநாடுகளிலோ வாழ்கின்ற தமிழ், சிங்கள,முஸ்லீம் மக்களுள்

அறுபது வயதுக்கு மேற்பட்ட மூத்த பிரசைகளின் மனதில் அரசியல் சமூகப் பணிகளாலும் மற்றும் பல நற்பண்புகளாலும் பசுமரத்தாணி போல நினைவில் நிலைத்து நிற்கும் தமிழ் அரசியல் வாதிகளுள் பட்டிருப்புத் தொகுதியின் பாராளுமன்றப் பிரதிநிதியும் தமிழரசுக் கட்சியின் தலைவரும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளரும் களுவாஞ்சிகுடி சைவ மகாசபையின் தலைவரும் பலநோக்கு கூட்டுறவுச் சங்க சமாஜத்தின் தவிசாளருமாக விளங்கிய அமரர் சி.மூ இராசமாணிக்கம் அவர்களும் ஒருவராவார் என்பது வெள்ளிடைமலை. 20.01.1913 ஆம் ஆண்டு மண்ணுலகில் பிறந்த இராசமாணிக்கம் அவர்கள்; 07.09.1974 ஆம் ஆண்டு தமது 61வது வயதில் விண்ணுலகம் புகுந்தார்.அமரர் இராசமாணிக்கம்  அவர்களின் வாழ்கை வரலாறு,அரசியல், சமூகப் பணிகள், தனித்துவமான சிறப்பியல்புகள் என்பன பற்றி முறையாக ஆய்வு செய்து ஆவணப்படுத்தப்படவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. 2013 ஆம் ஆண்டு ஜனவரி இருபதாம் நாள் இராசமாணிக்கம் அவர்களின் நூற்றாண்டு ஜனன தினமாகும்;. அத்தினத்தை முன்;னிட்டு பேச்சுப் போட்டி,கட்டுரைப் போட்டி நடாத்தவும் ஆய்வுக் கட்டுரைகளை சிறப்பு மலராக வெளியிடவும் பேருரை நிகழ்த்தி விழா எடுக்கவும் அவரது குடும்பத்தினரும் உற்றார் உறவினர்களும் அவர் சார்ந்திருந்த தமிழரசுக் கட்சியின் அரசியல் பிரமுகர்களும்  ஆதரவாளர்களும் செயலில் ஈடுபட்டுள்ளமை காலத்தின் கட்டாய தேவையாகும். அவர் மறைந்து 38 வருடங்களின்  பின்னர் காலம் கடந்தாயினும் ஆக்க ப+ர்வமாக எடுக்கப்படும் இப்பணி வரவேற்கப்பட வேண்டியதாகும்.அமரர் இராசமாணிக்கம் அவர்களின் தன்னலம்; அற்ற தியாக சேவைக்கு இது கைம்மாறாக அமையும்.

~சிங்காரக் கண்டி’ என்று சிறப்பாக அழைக்கப்படும் திருப்பழுகாமத்தின் ஏரோட்டி, பயிரைச் சீராட்டி, உயிர்களுக்கு உணவ+ட்டி தாலாட்டி மகிழும் காராளர் குலத்தில் பிறந்த சோமநாதர்- சின்னப்பு உடையார் நில வளமும் நீர் வளமும் நிறை செந்நெல் வளமும்இ பால் வளமும்இ பலாக்கனியின் சுவை வளமும் பைந்தமிழின் மொழி வளமும் நிறைந்த இயற்கை எழில் கொஞ்சி விளையாடும் “சின்னக் கதிர்காமம்” என்று சிறப்புடன் அழைக்கப்படும் தில்லை மண்டூர் பதியில்; பிறந்த சின்னப்பு-சின்னப்பிள்ளையை கரம் பிடித்தார்.இவர்களுக்கு மூத்ததம்பி, சிவகுரு, சங்கரப்பிள்ளை, நடராசா, சிவப்பிரகாசம், நேசம்மா என்ற பிள்ளைகள் பிறந்தனர். மூத்ததம்பி மண்டூர் சைவப்பள்ளியிலும்இ   கல்முனை லீஸ் உயர்தரப் பாடசாலையிலும் (வெஸ்லி கல்லூரியிலும்)இ யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலும் கல்வி கற்று கொழும்பு பல்கலைக்கழகத்தில் பயின்று  பொருளியல் துறையில் இலண்டன் பல்கலைக்கழக சிறப்புப் பட்டம் பெற்றார்.பட்டதாரியாக திரும்பி வந்த இராசமாணிக்கத்தை மண்டூர்த் துறையில் மாலை அணிவித்து மேள வாத்தியம் முழங்க ஊர் மக்கள் வரவேற்றனர்.  இராச – மாணிக்கமாக ஒளிவீசி பிரகாசிக்க விரும்பி இராசமாணிக்கம் என்ற பெயரையும் இணைத்துக் கொண்டனர்.இதனால் சின்னப்பு உடையார் மூத்ததம்பி இராசமாணிக்கம் என்று பெயர் நீண்டது.இதனை ஆங்கிலத்தில் எஸ்.எம்.ஆர்.  என்று சுருக்கிக் கொண்டனர்.இராசமாணிக்கம் அவர்கள் கூட்டுறவு உத்தியோகத்தர்இ  உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரிஇ உதவி அரச அதிபர்இ காணி ஆணையாளார் என்று பல பதவிகளில் சேர்வதும் இராஜனாமா(மூன்று தடைவ) செய்வதுமாக பதுளைஇ அம்பாந்தோட்டை மாவட்டங்களில் பதவி வகித்துள்ளார். இவரது சகோதரர்களில் சிவகுரு,சிவப்பிரகாசம் ஆகியோர் தபால் அதிபராகினர்.சங்கரப்பிள்ளை காணி மிகுந்த நிலக்கிழாரானார்.நடராசா விவசாய உத்தியோகத்தாரானார்;. குடியேற்றத்திட்ட அதிகாரியாக கடமையாற்ற வந்த யாழ்ப்பாணம் புலோலியைச் சேர்ந்த ஏரம்பமூர்த்தி இராசமாணிக்கத்தின் சகோதரியான ஆங்கில ஆசிரியர் நேசம்மாவின் கணவரானார்.

கடல் அலையின் தாலாட்டில் கல்வி கலை வளர்க்கும் களுவாஞ்சிகுடியின் அரசாங்க வைத்தியராக புகழ் பெற்று விளங்கிய  வைரமுத்து ஜேம்ஸ் செல்லையா –மார்கிறட் தங்கம்மா தம்பதிகளின் மூத்தபுதல்வி லீலா செபரத்தினம் ஆவார். வைத்தியர் அற்புதராஜா, பொறியியலாளர் கிருபைராஜா, இலங்கை போக்குவரத்து சபை,சிறிலங்கா வானூர்தி சேவை என்பவற்றில் பணியாற்றிய  செல்வராஜா,ஆங்கில ஆசிரியரான நற்குணராஜா ஆகியோர் லீலாவின்  சகோதரர்கள். இராசமாணிக்கம் 1948 ஆம்  ஆண்டு லீலா செபரத்தினம் அவர்களை வாழ்க்கைத் துணைவியாக்கி களுவாஞ்சிகுடியில் குடியமர்ந்தார்;. இவர்களுக்கு 4 பெண்களும் 4ஆண்களும் பிள்ளைகள் ஆயினர்.அவர்களுள் ரதினி,மாலினி, சக்கரவர்த்தி; மூவரும் ஆசிரியர்கள்.  றமணி மக்கள் வங்கி உத்தியோகத்தர்;. ராஜபுத்திரன் வைத்தியர், கீர்த்திவர்மன் பொறியியலாளர்,யாமினி;, இளங்கோபன் ஆகிய இருவரும் வெளிநாட்டுக்குப் புலம் பெயர்ந்து உயர் கல்வி பெற்றனர்.இப்பொழுது ரதினியும் ராஜபுத்திரனும் இலங்கையில் உள்ளனர். அமைதி காக்க வந்த இந்தியப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் (1988ல்) சக்கரவர்த்தி அகாலமரணமானார்.  ஏனையோர் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். (31.03.2006ம்) திகதி லீலா இறைவனடி சேர்ந்தார்;.இராசமாணிக்கம்,லீலா ஆகியோரும் அவர்களுடன் பிறந்தோரும் விண்ணுலகு அடைந்தனர்.

ஆங்கில மொழி மூலம் கல்வி கற்று பட்டம் பெற்ற இராசமாணிக்கம் அவர்கள் அரச உயர் பதவியில் சேர்ந்தார். தமிழினத்தின் பிரச்சினைகள் பட்டிருப்புத் தொகுதியின் அபிவிருத்திகள் என்பனவாய பொதுநல நோக்கம் காரணமாகவே எஸ்.எம்.ஆர். அரசியலில் பிரவேசித்தார். சுதந்திர இலங்கையின் ஆரம்ப கால தேர்தல்கள் தொகுதி வாரி பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருந்தன. மட்டக்களப்பு வாவியை அடிப்படையாக கொண்ட எழுவான்கரை, படுவான்கரை என்ற பிரிவினையும் முக்குகர்,வேளாளர்,சீர்பாதர், பொற்கொல்லர் என்ற இறுக்கமான சாதிப் பிரிவினையும் இருந்த பட்டிருப்புத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர்களாக இராசமாணிக்கம்  அவர்கள் 1947 ஆம் ஆண்டு மூக்குக் கண்ணாடி சின்னத்திலும்இ சோ.உ எதிர்மன்னசிங்கம் அவர்கள் குருவிச் சின்னத்திலும்,யூ.வி.ஒ.குருகுலசிங்கம் அவர்கள் கை-(கரம்) சின்னத்திலும் தேர்தலில் குதித்தனர். எதிர்மன்னசிங்கம் வெற்றி பெற்றார். இராசமாணிக்கம் காணி ஆணையாளர் பதவிக்கு திரும்பவும் சென்றார். பிரபல சட்டத்தரணி    பொன்னம்பலம் அவர்களோடு தமிழ் மக்களின் அரசியல் உரிமை பற்றிய கருத்து முரண்பாடு ஏற்பட்டமையினால் தமிழ்க் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஈழத்துக் காந்தி தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் தலைமையிலான குழுவினர் பிரிந்து சென்று தமிழரசுக் கட்சியினை ஆரம்பித்து வீட்டுச்; சின்னத்தினை நிலை நிறுத்தினர். இராசமாணிக்கம் அவர்களின் அறிவு,ஆற்றல்,ஆளுமை, துணிச்சல்,ஒழுக்கம்,அடக்கம்,மதிநுட்பம்,செயற்றிறன் ஆஜானுபாகுவான தோற்றம், நிமிர்ந்த நடை,நேரிய பார்வை என்பவற்றால் கவரப்பட்ட தீர்க்கதரிசியான செல்வநாயகம் இராசமாணிக்கத்தை ஈர்த்திழுத்து  தமிழரசுக் கட்சியின் முக்கிய பிரமுகர்களுள் ஒருவராக்கினார்.இராசமாணிக்கம் அரசியலில் கிழக்கின் விடிவெள்ளியாகப் பிரகாசித்தார்.

தொடரும்...


தங்களின் ஆக்கபூர்வமானதும் நாகரிகமானதுமான கருத்துக்களை இங்கே பகிரவும்!


விளம்பரங்கள்

சுவிஸ் சூரிச் அருள்மிகு சிவன்கோவிலில் பொன் சுந்தரலிங்கம் அவர்கள் பாடிய பாடல்

 

Archives

July (2014)
June (2014)
May (2014)
April (2014)
March (2014)
February (2014)