2011 சனிப் பெயர்ச்சி பொதுப் பலன்கள்

பிறப்பு : - இறப்பு :

news_457

2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி (தமிழ் கர வருடம் மார்கழி மாதம் 4 ஆம் தேதி செவ்வாய் கிழமை உதயாதி நாழிகை 57 விநாடி 26க்கு (அதிகாலை மணி 4 நிமிடம் 28 க்கு கன்னி இராசியில் இருந்து துலாம் ராசிக்கு சித்திரை 3 ஆம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆகுகிறார். சனி பகவான் இரண்டரை ஆண்டுகள் துலாம் ராசியில் இருப்பார்.இக்கால கட்டத்தில் 12 இராசிகளுக்கும் சனி பகவானால் ஏற்படப் போகும் பொதுவான பலாபலன்களைப் பற்றிப் பார்ப்போம்!

 

 

அசுபதி 1,2,3,4 ஆம் பாதம்,பரணி 1,2,3,4 ஆம் பாதம், கார்த்திகை 1ஆம் பாதம் முடிய உள்ள மேசராசி அன்பர்களே இந்த 2011 ஆம் ஆண்டில் சனி பகவான் தங்களது ஜென்ம ராசிக்கு 6ஆம் இடமாகிய கன்னி ராசியில் இருந்து 7ஆம் இடமாகிய துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகுகிறார். இதன் படி காதல் சம்பந்தமான விசயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும். சகோதர சகோதரிகளின் தடைபட்டு வந்த திருமண காரியங்கள் நடைபெறப் போகும் காலமாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் எதிர் பாராத சிற் சில ஆதாயங்களை அடைய வாய்ப்பு உள்ளது. குல தெய்வ ஆலய வழிபாடுகளுக்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். உடம்பில் கண் மற்றும் வாய் சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். பிள்ளைகளால் சிற் சில தொல்லைகள் ஏற்பட்ட போதிலும், சில ஆதாயங்களையும் பாராட்டுக்களையும் பெறுவீர்கள். நீண்ட தூரப் பயணங்களின் போது புதிய நபர்களின் சந்திப்புக்களின் மூலமாகச் சில ஆதாயங்களை அடைய வாய்ப்பு உள்ளது. நீண்ட காலமாக விற்பனை ஆகாத பொருட்களை விற்பதன் மூலமாகப் பணம் வந்து சேரலாம். வெளி நாட்டு முயற்சிகளில் மிகவும் எச்சரிக்கையுடன் செயல் படவும். விசா சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும். வெளிநாடு சென்று வருவதற்கான புதிய முயற்சிகளுக்காகப் பணம் கொடுப்பதை சற்று யோசித்துச் செய்யவும்.பழுது பட்ட வீடு மற்றும் வாகனங்களைப் பழுது பார்ப்பதற்காகப் பொருட் செலவுகள் வந்து சேரும். ஒரு சிலருக்கு வீடு நில புலன்களை விற்பதன் மூலமாகப் பணம் வந்து சேரலாம்.வெகு காலமாகக் காணாமற் போன பொருட்கள் திரும்பக் கிடைக்கும்.மற்றவர்களுக்காக ஜாமீன் போட்டு வீண் சிக்கல்களில் மாட்டிக் கொண்டு அவதிப் படாமல் மிகு கவனமுடன் நடந்து கொள்வது நல்லதாகும். தொலைபேசித்துறை சார்ந்தவர்கள்,தபால் தந்தித் துறையினர்கள்,அச்சுத் தொழிற் செய்வோர்கள்,பேனா புத்தகம் பேப்பர் பென்சில் போன்ற ஸ்டேசனரி சம்பந்தமான தொழிற் செய்வோர்கள்,கவிஞர்கள் பாடலாசிரியர்கள் எழுத்தாளர்கள்,மருந்துப் பொருட்களின் வியாபாரிகள்,மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரியைச் சார்ந்த மாணவர்கள்,காய்கரி,இலை,கீரை வகைகள் போன்ற பொருட்களின் வியாபாரிகள்,காவல் துறை உளவுப் பிரிவுகளைச் சார்ந்த அதிகாரிகள்,வெளி நாட்டுத் தூதுவர்கள்,நாடகக் கலைஞர்கள் அகியோர்கள் நற் பலன்களை அடைவார்கள். பொருளாதாரத்தில் சற்று நெருக்கடிகள் ஏற்பட்ட போதிலும் மிகுந்த சிரமத்தின் பேரில் சரிசெய்து விடுவீர்கள். வழக்கு விசயங்களில் சாதகமான முடீவுகள் கிடைக்க இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம். புதிய தொழில்களை ஆரம்பம் செய்வதற்கான முயற்சிகளில் வெற்றி பெறப் போகும் காலமாகும். புதிய வீடுகள் மற்றும் வாகனங்களை வாங்குவதற்கான காலமாகும்.ஒரு சிலருக்கு வேற்றிடங்களுக்கு வீடு மாற்றம் ஏற்படலாம். காணாமற்போன பொருட்கள் மற்றும் நபர்களைப் பற்றிய தகவல்கள் வந்து சேரும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் சில சுப காரியங்கள் நடை பெறலாம். விட்டுப் போன பழைய உறவுகளுடன் மீண்டும் ஒன்று சேர வாய்ப்பு உள்ளது.

 

கார்த்திகை 2,3,4 ஆம் பாதம், ரோகிணி 1,2,3,4 ஆம் பாதம், மிருகசீரிடம் 1,2ஆம் பாதம் முடிய உள்ள ரிசபராசி அன்பர்களே இவ்வாண்டில் உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 5ஆம் இடத்தில் இருந்து 6ஆம் இடமாகிய துலாம் ராசிக்கு சனி பெயர்ச்சி ஆகுகிறார். இதன் பயனாக ரேஸ் லாட்டரி போன்ற விசயங்களில் சற்று எச்சரிக்கையுடன் இருக்கவும்.நீண்ட காலமாக வராத கடன் கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் திரும்பக் கை வந்து சேரலாம். சமுதாய முன்னேற்றத்திற்கான பொதுத் தொண்டுகளில் ஈடு படுவன் மூலமாக நற் பெயர் மற்றும் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். பெட்ரோல் டீசல் மண் எண்ணை, கேஸ், மற்றும் விறகு நிலக்கரி போன்ற பொருட்களின் வியாபாரிகள், காவல் துறை ராணுவம், தீயணைப்புத் துறைகளைச் சார்ந்தவர்கள், காரமான உணவுப் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் வியாபாரிகள்,சிறு தின்பண்ட வியாபாரிகள், ஹோட்டல் தொழிற் செய்வோர்கள், மின்சார சம்பந்தமான பொருட்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் வியாபாரிகள், இரத்தம் நரம்பு எலும்பு சம்பந்தமான மருத்துவத் துறைகளைச் சார்ந்தவர்கள், கம்யுட்டர்,செல் போன் வியாபாரிகள், பருப்பு, வத்தல், மிளகு, மசால் பொடி சம்பந்தமான உணவுப் பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன்களை அடைவார்கள். நாட் பட்ட தீராத வழக்கு சம்பந்தமான விசயங்களில் சாதகமான நல்ல தீர்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் நல்ல செய்திகளும் பிறர் உதவிகளும் கிடைக்கும்.வங்கிகளால் எதிர் பார்த்த பணம் கிடைக்கும் காலமாகும். கூட்டுத் தொழிற் செய்வதற்கான புதிய முயற்சிகளைச் சற்று தள்ளிப் போடவும்.அரசியல் வாதிகளால் எதிர் பாராத சில ஆதாயங்களும், பொருள் வரவும் உண்டாகும். விளையாட்டுத் துறைகளைச் சார்ந்தவர்களுக்குப் பரிசு மற்றும் பாராட்டுக்களைப் பெறுவார்கள். புதிய வீடுகள் வாங்குவதற்கும் மற்றும் புதிய தொழில்களைத் தொடங்குவதற்கான வங்கிகளில் இருந்து எதிர் பார்த்து இருந்த கடன்உதவித் தொகைகள் கிடைப்பற்கு வாய்ப்புகள் உள்ளது. பெரிய மனிதர்களின் தலையிடுதலால் பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். நீண்ட காலமாகக் குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்குப் புத்திர பாக்கியம் உண்டாகும்.உடல் நிலையில் உஷ்ணம் மற்றும் நீர் சம்பந்தமான உபாதைகள், வயிற்றுஉபாதைகள் வந்து போகலாம்.சகோதர சகோதரிகளுடன் சம்பந்தம் இல்லாத பிரச்சனைகளுடன் மனக் கசப்புகள் வர இருப்பதால் கவனமுடன் இருத்தல் நல்லது. கணவன் மனைவி இருவருக்கும் இருந்து வந்து கருத்து வேறுபாடுகள் இன்னும் சிறிது காலம் நீடிக்கும். திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு சுப காரியங்கள் நடத்துவதற்காக நீண்ட தூரப் பயணங்களுடன் பொருட் செலவுகளும் வந்து சேரலாம். வீடு மற்றும் நிலம் வாகனம் போன்றவற்றின் வழக்குவிசயங்களில் இது வரையில் இருந்து வந்துள்ள தடைகள் நீங்கி நல்ல சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். தாயின் உடல் நிலையில் இருந்து வந்துள்ள பாதிப்புகள் சற்று குறைந்து மருத்துவச் செலவுகள் குறையும்.உற்றார் உறவினர்களின் எதிர் பாராத வரவுகளால் பொருட் செலவுகள் வந்து சேரும்.வெளி நாடு சென்று வருவதற்கான புதிய முயற்சிகளில் நல்ல தகவல்கள் வந்து சேரும் காலமாகும்.வேற்று மதத்தவர்களால் ஆதாயம் உண்டு.

 

மிருகசீரிடம் 3,4ஆம் பாதம்,திருவாதிரை 1,2,3,4 ஆம் பாதம், புனர்பூசம் 1,2,3 ஆம் பாதம் முடிய உள்ள மிதுனராசி அன்பர்களே இந்த வருடம் 4ஆம் இடமாகிய கன்னியில் இருந்து 5ஆம் இடமாகிய துலாத்திற்கு சனி பெயர்ச்சி ஆகுகிறார். இதன் பயனாக காதல் சம்பந்தமாக இது வரையில் இருந்து வந்துள்ள கருத்து வேறுபாடுகள் தீர்ந்து சுமூகமான உறவுகள் ஏற்படும். நண்பர்களால் எதிர் பார்த்த ஆதாயங்கள் கிடைக்கும். காரமான உணவுப் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் வியாபாரிகள், சிறு தின்பண்ட வியாபாரிகள், பருப்பு, வத்தல், மிளகு, மசால் பொடிகள் சம்பந்தமான உணவுப் பொருட்களின் வியாபாரிகள், ஹோட்டல் தொழிற் செய்வோர்கள், பெட்ரோல் டீசல் மண்எண்ணை, கேஸ் மற்றும் விறகு நிலக்கரி போன்ற பொருட்களின் வியாபாரிகள், காவல் துறை ராணுவம், தீயணைப்புத் துறைகளைச் சார்ந்தவர்கள், மின்சார சம்பந்தமான பொருட்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் வியாபாரிகள், இரத்தம் நரம்பு எலும்பு சம்பந்தமான மருத்துவத் துறைகளைச் சார்ந்தவர்கள், கம்யுட்டர்,செல்போன் வியாபாரிகள் ஆகியோர்கள் நற் பலன்களை அடைவார்கள். அரசியல் வாதிகளால் ஒரு சிலர் ஆதாயம் அடைவீர்கள். இரும்பு சம்பந்தமான தொழிற் செய்பவர்கள் எதிர் பாராத நல்ல லாபம் அடைவீர்கள்.காதல் சம்பந்தமான விசயங்களில் வெற்றி கடைக்கும். கணவன் மனைவி உறவுகள் மிகவும் பலப்படும்.புதிய சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. விவசாயம் செய்பவர்களுக்கு நல்லலாபம் அடையும் காலமாகும்.பெண்களால் எதிர் பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள். உடல் நிலையில் கண், காது சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். உடன் பிறந்த சகோதர சகோதரிகளால் ஆதாயம் இல்லை. பழைய பொருட்களை விற்றுப் புதிய பொருட்களை வாங்குவதன் மூலமாக ஆதாயம் அடையப் போகிறீர்கள். குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடை பெறுவதற்காகப் புதிய கடன்களை வாங்குவதற்கு முயற்சிப்பீர்கள். பழுதுபட்ட வீடு மற்றும் வாகனங்களைப் பழுதுபார்த்தல் மூலமாக பொருட் செலவுகள் ஏற்படலாம். கணவன் மனைவிகளுக்கள் நீண்ட காலமாக இருந்த வந்த கருத்து வேறுபாடுகள் தீரந்து ஒற்றுமையுடன் இருப்பார்கள். தந்தை வழிச் சொத்துக்கள் கை வநது சேர வாய்ப்பு உள்ளது. ஆலயத் திருப்பணிகளில் பங்கு கொண்டு மனம் நிம்மதி அடைவீர்கள். தாயின் உடல் நிலையின் பாதிப்புக்களால் மருத்துவச் செலவுகள் கூடும். புதிய சொத்துக்களை வாங்குவதற்கான முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.உத்தியோகத் துறையினர்களுக்கு மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகிப் பணி இட மாற்றங்கள் ஏற்படலாம்.புதிய ஆடை அணிகலன்களை வாங்குவதற்கான முயற்சிகளில் சற்று பின்னடைவுகள் ஏற்படலாம். பொது நலத் தொண்டுகளை; செய்வதில் கவனம் செலுத்துவதன் மூலம் சமுதாயப் பொருப்புகளில் நல்ல பெயர் புகழ் அடைவீPர்கள்.செய் தொழில் அபி விருத்திக்காக வங்கிகளிடம் இருந்து எதிர் பார்த்து இருந்த கடன் உதவித் தொகைகள் கிடைக்கும்.குடி இருக்கும் வீடு மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து பொருட்கள் காணாமற் போக இருப்பதால் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவும்.

 

 

புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம் 1,2,3,4ஆம் பாதம், ஆயில்யம் 1,2,3,4ஆம் பாதம் முடிய உள்ள கடகராசி அன்பர்களே இந்த ஆண்டில் உங்களுக்கு 3ஆம் இடமாகிய கன்னியில் இருந்து 4ஆம் இடமாகிய துலாத்திற்கு சனி பெயர்ச்சி ஆகுகிறார். இதன் பலனாக பங்குத் தொழிற் செய்வோர்கள் தனது பங்காளிகளுடன் காரணமற்ற மனக் கசப்புகளும் பிரச்சனைகளும் வர இருப்பதால் கவனமுடன் இருக்கவும். சூப்பர் மார்க்கெட் நடத்து புவர்கள், பூ பழம், நறுமண சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள், அநாதை ஆசிரமங்கள் நடத்துபவர்கள், இனிப்புத் தின பண்ட சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் வியாபாரிகள், ஆலயப் பணி செய்வோர்கள், அற நிலையத் துறைகளைச் சார்ந்தவர்கள், வேதம் ஓதுபவர்கள், தங்கம் வெள்ளி போன்ற நகை வியாபாரிகள், கம்யுட்டர் சம்பந்தமான இணையதளங்களை நடத்துபவர்கள் ஆகியோர்கள் மிக நல்ல பலன்களை அடைவார்கள். வெளிநாடு சென்று வரப் போட்டிருந்த திட்டங்கள் நிறை வேறும் காலமாகும். புதிய தொழில் ஆரம்பம் செய்வதற்கான முயற்சிகளைச் சற்று தள்ளிப் போடவும். அண்டை அயல் வீட்டுக்காரரகளுடன் பிரச்சனைகள் வர இருப்பதால் முன் கோபத்தைத் தவிர்ப்பது நல்லதாகும். விளையாட்டுத்துறையைச் சார்ந்தவர்களுக்குப் பரிசு மற்றும் பாராட்டுக்களைப் பெறுவார்கள். மாணவரகள் கல்வியில் சிற்சில தடைகள் வர இருப்பதால் கவனமுடன் பயின்று வருதல் சிறந்ததாகும். வெளிநாடு சென்று வருவதறட்கான புதிய முயற்சிகளில் மற்வரகளின் ஆதரவுகள் கிடைக்கும். நண்பர்களை நம்பிப் பணம்பொருட்களைக் கொடுப்பதில் எச்சரிக்கையுடன் இருக்கவும். தீராத நாட் பட்ட நோய்கள் தீருவதற்காக தீர்த்த யாத்திரைகளை மேற்கொள்ளுவீர்கள். வங்களிடம் இருந்து எதிர் பார்த்து இருந்த பணம் கிடைப்பதற்கு இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம். நாட் பட்ட வழக்கு விசயமாக புதிய வழக்கறிஞர்களின் உதவிகளை நாடுவதால் நிம்மதி வந்து சேரும். பெண்கள் சம்பந்தமான காதல் விசயங்களில் நல்ல செய்திகள் கிடைக்கும். இது வரையில் பொருளாதாரத்தில் இருந்து வந்துள்ள நெருக்கடியான சூழ் நிலைகள் மாற்சற்று முன்னேற்றம் காணப்படும்.குடும்பத்தின் அபி விருத்திக்காகப் புதிய கடன்களை வாங்குவீர்கள். நீண்ட காலமாக இருந்து வந்துள்ள பழைய கடன்களை அடைப்பீர்கள். வேற்று மதத்தவர்களிடம் இருந்து எதிர் பார்த்து இருந்த ஆதாயங்கள் கிடைக்கும்.நீண்ட காலமாக வராத பணம் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ள காலமாகும். வாடகை வீட்டில் குடி இருப்பவர்களுக்குப் பிரச்சனைகளினால் புதிய வீடு மாற்றங்களைச் செய்வீர்கள்.அரசு சம்பந்தமான உதவி தொகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மஹான்களின் எதிர் பாராத தரிசனங்களால் மனம் நிம்மதி அடைவீர்கள். நண்பர்களின் வீட்டு சுப காரிய நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்ளுவீர்கள். தீராத நாட் பட்ட நோய்கள் தீருவதற்காகப் புதிய மருத்துவர்களின் உதவிகளை நாடுவதூல் நன்மை உண்டாகும்.

 

 

மகம்1,2,3,4 ஆம் பாதம்,பூரம்1,2,3,4 ஆம் பாதம்,உத்திரம்1 ஆம் பாதம் முடிய சிம்மராசி அன்பர்களே இந்த ஆண்டில் உங்களுக்கு 2ஆம் இடமாகிய கன்னியில் இருந்து 3ஆம் இடமாகிய துலாம் ராசிக்கு சனி பெயர்ச்சி ஆகுவதால் சசகோதர சகோதரிகளின் மூலமாக எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும்.அரசியல் வாதிகளால் எதிர் பாராத ஆதாயங்கள் கிடைக்கும். உத்தியோகம் பார்பவர்களுக்குப் பதவி உயர்வுகள் ஏற்படுவதோடு,சம்பள உயர்வுகளும் ஏற்படலாம்.காணமற் போன நபர்கள் மற்றும் பொருட்களை தேடி பணச் செலவுகளைச் செய்வீர்கள்.வீடு மற்றும் வாகனங்களை விற்றுப் புதிய வீடு வாகனங்களை வாங்குவதற்கு வாய்ப்பு உள்ளது.தாய் தந்தையர்களுக்குள் இருந்து வந்துள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமையுடன் இருப்பார்கள்.பூர்வீகச் சொத்து விசயமாக பிரச்சனைகள் உண்டாகி மனம் நிம்மதி இன்மையை அடைவீர்கள்.பிள்ளைகளின் உடல் நிலையில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகள் ஏற்படலாம்.. நண்பர்களால எதிர் பாராத ஆதாயங்களை அடைவீர்கள்.பழைய இருப்பிடங்களை விற்றுப் புதிய இடங்களை வாங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது.மற்றவர்களின் விசயங்களில் தலையிட்டு நிம்மதியை இழக்காதீர்கள். திடீர் அதிர்ஷ்டம் மூலமாகப் பணம் வந்து சேரும் காலமாகும். கலைஞர்களுக்குப் பரிசு மற்றும் பாராட்டுதல்கள் கிடைக்கும்.நண்பர்கள், உறவினர்களின் திடீர் வரவுகளால் பொருட் செலவுகள் உண்டாகலாம்.செய்தொழில் விசயமாக ஒரு சிலருக்கு ஆலைகளை இடமாற்றம் செய்யப் போட்டு இருந்த திட்டங்கள் நிறைவேறுவதற்கான காலமாகும். சம்பந்தம் இல்லாத நபர்களால் பொருள் வரவுகள் உண்டாகலாம். இது வரையில் சேர் மார்க்கெட் தொழிற் செய்வோர்கள், அரசியல் வாதிகள்,இரும்பு இயந்திர சம்பந்தமான தொழிற் சாலைகளில் பணிகள் செய்பவர்கள்,பெட்ரோல் டீசல் மண் எண்ணை போன்ற எண்ணை வியாபாரிகள்,அழுகல் சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள், இரும்பு,இயந்திரம், இரசாயனம், பழைய பொருட்களின் வியாபாரிகள்,மதுக்கடைகளை நடத்துபவர்கள்,பலசரக்கு வியாபாரிகள்,சூப்பர் மார்க்கெட் நடத்துபவர்கள்,அலுவலக உதவிப் பணிகளைச் செய்பவர்கள்,வாகன சம்பந்தமான உதிரி பாகங்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல பலன்களை அடைவார்கள். பிரச்சனைகளில் இருந்து வந்துள்ள குடும்பச் சொத்துக்கள் கை வந்து சேரும் காலமாகும்.தடை ப்டடிருந்த சுப காரியங்கள் தடையின்றி நடைபெறும் காலமாகும்.போட்டி,லாட்டரி போன்றவற்றின் மூலமாக எதிர்பாராத பணவரவுகள் உண்டாக வாய்ப்பு உள்ளது. செய் தொழிலில் எதிர் பாராத தன லாபங்களும், புதிய ஒப்பந்தங்களும் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.மற்றவர்களின் விசயங்களில் அநாவசியமாகத் தலையிட்டு நிம்மதியை இழக்காதீர்கள். ஒரு சிலருக்கு மனைவியின் உடல் நிலை பாதிப்புகளால் மருத்துவச் செலவுகள் வந்து சேரும்.வீடுகளில் மின்சாரம் நெருப்பு போன்றவற்றில் கவனமுடன் இருப்பது நல்லதாகும்.

 

 

உத்திரம்2,3,4 ஆம் பாதம், ஹஸ்தம்1,2,3,4 ஆம் பாதம், சித்திரை1,2 ஆம் பாதம் முடிய உள்ள கன்னி ராசி அன்பர்களே இவ்வாண்டில் உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2ஆம் இடமாகிய துலாத்திற்கு சனி பெயர்ச்சி ஆகுவதால் குல தெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.படித்த உத்தியோகம் இல்லாதவர்களுக்கு உத்தியோகம் கிடைக்கும்.உடம்பில் நரம்பு மற்றும் எலும்பு சம்பந்தமான உபாதைகள் வந்து போகலாம்.புதிய வீடு வாகனங்களை வாங்குவதற்கான முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். செய் தொழில் விசயமாப் பெரிய மனிதர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலமாக ஆதாயங்களை அடைவீர்கள். யாத்திரையின் போது வண்டி வாகனங்களில் மிகவும் கவனமுடன் பயணம் செய்து வரவும்.மனைவி வழிச் சொந்தங்களாலும் மனைவியாலும் எதிர் பாராத ஆதாயங்கள் கிடைக்கலாம்.மற்றவர்களின் விசயங்களில் அநாவசியமாகத் தலையிட்டு பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ளாதீர்கள்.வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் வந்து சேரும் காலமாகும்.புதிய வீடு வாகனம் மற்றும் நில புலன்களை வாங்குவீர்கள். தன்னிடம் வேலை செய்யும் பணி ஆட்களிடம் முன் கோபத்தைத் தவிர்த்து விட்டுக் கொடுத்துப் போகவும்.ஒரு சிலருக்கு உத்தியோக சம்பந்தமாக பணி இட மாற்றம் ஏற்படும் காலமாகும்.ரேஸ் லாட்டரி போன்ற சூதாட்டம் சம்பந்தமானவற்றில் மூலமாகப் பணம் மற்றும் பொருட்களை ஏமாறாமல் இருக்கவும்.மறை முகமான எதிரிகளால் ஏற்பட்டு வந்த தொல்லைகள் தீர்ந்து மனம் நிம்மதி அடைவீர்கள். வேற்று மதத்தவர்களால் எதிர் பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள்.வங்களின் மூலமாக எதிர் பார்த்து இருந்த கடன் தொகைகள் கிடைப்பதற்கான காலமாகும். பிரிந்து போன கணவன் மனைவி இருவரும் மீண்டும் ஒன்று சேர வாய்ப்பு உள்ளது.குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடை பெறுவதற்காகப் புதிய கடன்களை வாங்குவீர்கள். இதுவரையில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் மாறிப் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.நீண்ட காலமாக வராமல் இருந்த குடும்பச் சொத்துக்கள் பெரிய மனிதர்களின்தலையிடுதலால் கைவந்து சேரும் காலமாகும்.கூட்டுத் தொழில்களைச் செய்வது சம்பந்தமான புதிய முயற்சிகளில் சற்று பின்னடைவுகள் ஏற்படலாம்.வேண்டாத விசயங்களில் அநாவசியமாகத் தலையிட்டு வீண் சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள். மீன் முட்டை மாமிசம் போன்ற உணவுப் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் வியாபாரிகள்,அணு துறையைச் சார்ந்தவர்கள்,அலுவலக உதவியாளர்கள்,மடாதிபதிகள்,பழைய இரும்பு இயந்திர சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள், பழைய பேப்பர் மற்றும் பிளாஷ்டிக் சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,தோல் வியாபாரம் செய்பவர்கள்,சாயப் பவுடர் வியாபாரிகள் அகியோர்கள் நல்ல லாபம் அடைய வாய்ப்பு உள்ளது.மாணவர்கள் கல்வியில் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லதாகும்.

 

 

சித்திரை 3,4 ஆம் பாதம், சுவாதி1,2,3,4 ஆம் பாதம், விசாகம்1,2,3 ஆம் பாதம் முடிய உள்ள துலாம் ராசி அன்பர்களே இவ்வருடம் உங்களது ராசிக்கு 12ஆம் இடத்தில் இருந்து ஜென்ம ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகுவதால் துப்புரவு தொழில் செய்வோர்கள், அணு ஆராய்ச்சி சம்பந்தமான துறையை சார்ந்தவர்கள்,அலுவலக உதவியாளர்கள்,மடாதிபதிகள்,பழையஇரும்பு இயந்திர சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள், பழைய பேப்பர் மற்றும் பிளாஷ்டிக் சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,மீன் முட்டை மாமிசம் போன்ற உணவுப் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் வியாபாரிகள்,சாயப் பவுடர் வியாபாரிகள், வட்டித் தொழிற் செய்வோர்கள்,பைனான்ஸ் கம்பெனிகளை நடத்துபவர்கள்,தோல் வியாபாரம் செய்பவர்கள் அகியோர்கள் நல்ல லாபம் அடைய வாய்ப்புகள் உள்ளது.தொழிற்சாலை மற்றும் அலுவலகங்களை மாற்றி அமைக்கப் போட்டிருந்த திட்டங்கள் நிறைவேறும்.மற்றவர்களிடம் இருந்து எதிர் பார்த்து இருந்த பணம் கிடைக்கும்.வெளி நாடுகளில் இருந்து நல்ல தகவல்களை எதிர் பார்க்கலாம்.சிறு குழந்தைகளை கவனமுடன் பார்த்து கொள்வது சிறந்தது.காண்டிராக்ட்,கமிசன் தொழிற் செய்வோர்களுக்கு தன வரவுகள் உண்டாகும். சிறு குழந்தைகளுக்குத் தண்ணீரில் கண்டம் வந்து விலக இருப்பதால் மிக எச்சரிக்கையுடன் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளவும். கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் கிடைபதன் மூலமாகத் தன வரவும் மன நிம்மதியும் உண்டாகும்.வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் வீண் பிரச்சனைகள் வரஇருப்பதால் எச்சரிக்கையுடன் பேசிப் பழகவும். பிள்ளைகளின் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் வந்து சேரும் காலமாகும்.விளையாட்டுத் துறைகளைச் சார்ந்தவர்கள் மிகவும் கவனமுடன் விளையாடுதல் நல்லது.உடல் நிலையில் மேகம் மற்றும் இரத்தம் சம்பந்தமான பிணிகள் வரலாம்.வழக்கு விசயமாகப் புதிய வழக்குறைஞர்களை நாடுவதன் மூலமாக வெற்றி பெறுவீர்கள். கணவன் மனவி இருவருக்கும் இடையே இது வரையில் இருந்து வந்துள்ள கருத்து வேறுபாடுகள் இன்னும் சிறிது காலம் நீடிக்கும்.குடும்பத்தில் காரணமற்ற சச்சரவுகளும்,மனக் கசப்புகளும் வர இருப்பதால் முன் கோபத்தை தவிர்க்கவும்.தந்தை மகன் உறவுகளுக்குள் சிற்சில கருத்து வேறுபாடுகள் வந்து போகும்.தன்னிடம் வேலை செய்யும் பணி ஆட்களால் மன நிம்மதியும் பொருள் வரவுகளும் உண்டாகும்.பெரிய மனிதர்களின் தலையிடுதலால் வர வேண்டிய குடும்பச் சொத்துக்கள் வந்து சேருவதற்கு வாய்ப்பு உள்ளது.வீடு நிலம் சம்பந்தமான தொழிற் செய்வோர்களுக்கு எதிர் பாராத தன லாபம் வந்து சேரலாம்.வீடு மற்றும் தொழிற்சாலைகளில் பணம் ,பொருட்கள் திருடு போக இருப்பதால் மிகவும் எச்சரிக்கைடன் இருப்பது நல்லதாகும்.பொருளாதார விசயங்களில் இது வரையில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் தீருவதற்காக எதிர் பார்த்த நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து பொருள் உதவிகள் வந்து சேரும்.தாய் மற்றும் தாய் மாமன் வழி மூலமாகச் சில ஆதாயங்களை அடைவீர்கள்.

 

 

விசாகம்4ஆம் பாதம், அனுசம்1,2,3,4 ஆம் பாதம், கேட்டை1,2,3,4 ஆம் பாதம் முடிய உள்ள விருச்சிகராசி அன்பர்களே உங்களுக்கு ராசிக்கு 11ஆம் இடத்தில் இருந்த சனி பகவான் ராசிக்கு 12ஆம் இடமாகிய துலாத்திற்கு பெயர்ச்சி ஆகுவதால் உற்றார் மற்றும் உறவினர்கள் நண்பர்களால் எதிர் பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள். மாணவர்கள் கல்வி பயிலும் இடங்களில் காரணமற்ற பிரச்சனைகள் வரஇருப்பதால் கவனமுடன் கல்வி பயின்று வரவும்.தீராத நாட் பட்ட நோய்கள் தீருவதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்ளுவீர்கள்.வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் மற்றவர்களை நம்பிப் பணம் பொருட்களைக் கொடுத்து ஏமாற்றம் அடையாமல் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும். விவசாயம் செய்பவர்களுக்குப் புதிய முறை விவசாயங்கள் மூலம் நல்ல விளைச்சலும் லாபமும் அடைவார்கள்.நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண காரியங்கள் நிறைவேறும் காலமாகும். தண்ணிர் கூல்டிரிங்ஸ் திரவ சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,உப்பு உர வியாபாரிகள்,பூஜைப் பொருட்களின் வியாபாரிகள், மருந்துப் பொருட்களின் வியாபாரிகள்,மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மற்றும் பேராசரியர்கள்,ஜவுளி,நூல் போன்றவற்றை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் வியாபாரிகள்,தாய் சேய் விடுதிகளை நடத்துபவர்கள்,பால் வியாபாரம் செய்பவர்கள்,நவ ரத்தின வியாபாரிகள்,முத்து சங்கு,சிப்பி போன்ற கடல்சார்ந்த பொருட்களின் வியாபாரிகள்,கடல்வளத் துறையை சார்ந்த அதிகாரிகள்,தர்மசாலைகளை நடத்துபவர்கள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள். புதிய தொழில்களை ஆரம்பம் செய்வதற்கான முயற்சிகளைச் சற்று தள்ளிப் போடுதல் நல்லது. வராத நாட் பட்ட கடன் கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் திரும்பக் கைக்கு வந்து சேரும் காலமாகும்.பிள்ளைகளால் மன நிம்மதியும் ஆதாயங்களையும் அடைய வாய்ப்பு உள்ள காலமாகும்.உடல் நிலையில் உஷ்ணம் மற்றும் சுரம் சம்பந்தமான பீடைகள் வந்து போகலாம். குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடை பெற வாய்ப்பு உள்ளது.இது வரையில் விற்கப் படாத குடும்பச் சொத்துக்களை விற்பதன் மூலமாகப் பணம் வந்து சேரும்.விளையாட்டுத் துறையைச் சார்ந்தவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுக்கள் கிடைக்கும்.புதிய நண்பர்களின் சேர்க்கையால் வீண் பிரச்சனைகள் வர இருப்பதால் கவனமுடன் பேசிப் பழகி வரவும்.அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் காரணமற்ற பிரச்சனைகள் வர இருப்பதால் முன் கோபத்தை தவிர்த்துப் பேசிப் பழகவும். வீடு மற்றும் தொழிற்சாலைகளை இட மாற்றம் செய்வதை சற்று தள்ளிப் போடவும்.பிறருக்காக சொத்து சம்பந்தமான விசயங்களுக்காக ஜாமீன் போடுவதைத் தவிர்க்கவும்.உத்தியோக விசயமாக மற்றவர்களை நம்பி; பணம் மற்றும் பொருட்களை கொடுப்பது பற்றி தீர ஆலோசித்துச் செயல் படவும். அநாதை ஆசிரமங்களில் வசிக்கும் முதியவர்கள்,குழந்தைகளைக் கவனமுடன் பார்த்துக் கொள்ளுதல் நல்லது. செய் தொழிலில் சம்பந்தம் இல்லாத நபர்களால் பிரச்சனைகள் வர இருப்பதால் கவனம் தேவை.செய்யாத குற்றங்களுக்காக அவப் பெயர்கள் ஏற்பட்டு காவல் துறையினர்களின் தண்டனைக்கு ஆளாக நேரிடலாம்.வெளி நாடுகளில் இருந்து நண்பர்கள் மற்றும் உறவினர்களால் பண வரவுகள் உணடு.

 

 

மூலம்1,2,3,4ஆம் பாதம்,பூராடம்1,2.3.4 ஆம் பாதம்,உத்திராடம்1 ஆம் பாதம் முடிய உள்ள தனுசுராசி அன்பர்களே உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 10ஆம் இடமாகிய கன்னியில் இருந்து 11ஆம் இடமாகிய துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகுவதால் ஒரு சிலருக்கு விச சம்பந்தமான பீடைகள் வந்து விலகும்.வங்கிகளில் இருந்து எதிர் பார்த்து இருந்த கடன் தொகைகள் கிடைப்பதில் சில தடைகள் வந்து பின் பணம் வந்து சேரும்.படித்த வேலை இல்லாத பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.யாத்திரையின் போது வண்டி வாகனங்களில் கவனமுடன் பயணம் செய்து வரவும்.பழுது பட்ட ஆலயங்களைத் திருத்திக் கட்டுவதற்காக எடுத்துக் கொண்ட முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண காரியங்கள் நிறை வேறும்.மருத்துவத் துறையினை சார்ந்தவர்கள் நல்ல பலன்களை அடைவார்கள்.யாத்திரையில் வாகனங்களில் மிகுந்த கவனமுடன் பயணம் செய்து வரவும். வெகு காலமாகக் காணாமற் போன பொருட்களைப் பற்றிய தகவல்கள் வந்து சேரும்.மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களையும் பாராட்டுக்களையும் பெறுவார்கள்.கூட்டுத் தொழில்களை ஆரம்பம் செய்ய போட்டிருந்த திட்டங்கள் நிறைவேறுவதற்கு இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம்.வங்கிகளிடம் இருந்து எதிர் பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். வராத கடன் கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் திரும்பக் கைவந்து சேருவதற்கு வாய்ப்பு உள்ளது.சொத்து சம்பந்தமான வழக்கு விசயங்களில் சம்பந்தம் இல்லாத நபர்களின் உதவிகளால் சாதகமான தீர்ப்புகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.தீராத நாட் பட்ட நோய்கள் தீருவதற்காகப் புதிய மருத்துவர்களின் உதவிகளை நாடுவதால் நல்ல பலனை அடைவீர்கள்.குல தெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வருவதற்கான முயற்சிகளில் ஈடு படுவதன் மூலம் மன மகிழ்ச்சி அடையலாம். படித்த உத்தியோகம் இல்லாத இளைஞர்களுக்க வேலை வாய்ப்புகள் தேடி வருவதற்கான வாய்ப்புகள் உள்ள காலமாகும்.புதிய ஆடைகள் மற்றும் ஆபரணங்களை வாங்குவீர்கள்.திடீர் அதிர்ஷ்டம் மூலமாகப் பணம் வந்து சேரும்.வேற்று மதத்தவர்களிடம் இருந்து எதிர்பார்த்து இருந்த ஆதாயங்கள் கிடைப்பதில் சில தடைகள் வந்து விலகும்.நண்பர்களின் சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதன் மூலமாக மனச் சந்தோசம் அடைவீர்கள்.குடும்பத்தில் உடல் நிலை பாதிப்புகளால் ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் சற்று குறைந்து காணப்படும். சேர் மார்க்கெட் தொழிற் செய்வோர்கள்,அரசியல் வாதிகள்,இரும்பு,இயந்திரம்,இரசாயனம்,பழைய பொருட்களின் வியாபாரிகள், பெட்ரோல்,டீசல் மண் எண்ணை போன்ற எண்ணை வியாபாரிகள், அழுகல் சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,மதுக் கடைகளை நடத்துபவர்கள்,பல சரக்கு வியாபாரிகள்,சூப்பர் மார்க்கெட் நடத்துபவர்கள்,அலுவலக உதவி பணிகளைச் செய்பவர்கள்,இரும்பு இயந்திர சம்பந்தமான தொழிற்சாலைகளில் பணியைச் செய்பவர்கள், வுhகன சம்பந்தமான உதிரி பாகங்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல பலன்களை அடைவார்கள்.

 

 

உத்திராடம்2,3,4ஆம் பாதம்,திருவோணம்1,2,3,4 ஆம் பாதம்,அவிட்டம்1,2 ஆம் பாதம் முடிய உள்ள மகரராசி அன்பர்களே இந்த ஆண்டில் உங்களுக்கு ராசிக்கு 9ல் இருந்து வந்த சனி பகவான் 10ஆம் இடமாகிய துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகுவதால் ஆடம்பர அலங்காரப் பொருட்களை வாங்குவதன் மூலமாக மன மகிழ்ச்சி அடைவீர்கள். கார் லாரி மற்றும் ஆடு மாடு போன்ற வாகனத் தொழிற் செய்வோர்கள், கட்டிட சம்பந்தமான செங்கல் மணல் மண்,கம்பி போன்ற பொருட்களின் வியாபாரிகள்,சினிமாத் துறையைச் சார்ந்த நடிகர் நடிகைகள்,நாடகத் துறை சார்ந்தவர்கள்,ஊடகங்களை நடத்துபவர்கள்,உல்லாச பயணங்களை ஏற்பாடு செய்பவர்கள்,ஆடம்பர அலங்காரப் பொருட்களின் வியாபாரிகள்,கலைக் கல்லூரியைச் சார்ந்த மாணவ மாணவியர்கள்,பேராசிரியர்கள்,இனிப்புத் தின்பண்ட வியாபாரிகள், செண்ட் சவ்வாது அத்தர்,நறுமணம் உள்ள பூ வியாபாரிகள், திருமண மண்டபங்களை நடத்துபவர்கள்,கட்டில் மெத்தை போன்ற பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன்களை அடைவார்கள்.புதிய பெண்களின் உறவுகளின் மூலமாக மனம் நிம்மதி அடைவீர்கள்.சூதாட்டங்கள் மூலமாகப் பொருள் இழப்புகள் வர இருப்பதால் கவனம் தேவை.பிள்ளைகளால் மன நிம்மதியும் பொருள் வரவும் உண்டாகும். நீண்ட தூரப் பயணங்களில் வெற்றி கிடைக்கும்.புதிய வீடு கட்டுவதற்கு எடுத்துக் கொண்ட முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும். உடல்நிலையில் ஏற்பட்டிருந்த பாதிப்புகள் நீங்குவதற்கான ஆபரேசன் போன்ற காரியங்களைச் சற்று தள்ளி; போடவும். செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச்சொல் வருவதோடு வழக்குகளையும் சந்திக்க வேண்டி இருப்பதால் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவும். புதிய கடன்களை வாங்கினால் திருப்பிச் செலுத்த இயலாமற் போக வாய்ப்பு உள்ளதால் கடன் வாங்குவதைத் தவிர்க்கவும். பொருளாதார சம்பந்தமாக மற்றவர்களிடம் இருந்து எதிர் பார்த்து இருந்த பணம் கிடைப்பதற்கு இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம்.உடல் நிலையில் கண் காது வாய் போன்ற உருப்புகளில் காயங்கள் ஏற்படாதவாறு மிக கவனமுடன் இருக்கவும்.புதிய வீடு கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடு பட்டு நல்ல பலனை பெறுவீர்கள்.பிள்ளைகள் கல்வி மற்றும் விளையாட்டுத் துறைகளின் மூலமாக பரிசுகள் மற்றும் பாராட்டுக்களைப் பெறுவார்கள். இதுநாள் வரையில் திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமண காரியங்கள் நிறைவேற வாய்ப்பு உள்ள காலமாகும்.தாய் தந்தை இருவருக்கும் உள்ள கருத்து வேறுபாடகள் தீர்ந்து ஒற்றுமையுடன் இருப்பார்கள்.மற்றவர்களின் விசயங்களில் அநாவசியமாகத் தலையிட்டுச் சிக்கலில் மாட்டிக் கொண்டு அவதிப் படாதீர்கள்.புதிய நண்பர்களின் சேர்க்கையால் வீண் பிரச்னைகள் வர இருப்பதால் மிக கவனமுடன் பேசிப் பழகுதல் நல்லது. வெளி நாட்டில் வசிப்பவர்கள் தங்களது உறவுகளைக் காண தாய்நாடு சென்று திரும்புவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ரேஸ் லாட்ரி போன்ற சூதாட்டம் சம்பந்தமான விசயங்களின் மூலமாகப் பணம் பொருட்கள் கிடைக்கும் என எண்ணி ஏமாற்றம் அடைய வேண்டாம்.பிள்ளைகளின் சுப காரிய நகழ்ச்சிகள் சம்பந்தமாக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்ளுவீர்கள்.உயரமான இடங்களில் கவனமான ஏறி இறங்குவது நல்லது.

 

 

அவிட்டம்3,4ஆம் பாதம்,சதயம்1,2,3,4ஆம் பாதம், பூரட்டாதி1,2,3ஆம் பாதம் முடிய உள்ள கும்பராசி அன்பர்களே உங்களுக்கு ராசிக்கு 8ஆம் இடத்தில் இருந்து வந்துள்ள சனி 9ஆம் இடமாகிய துலா ராசிக்கு பெயர்ச்சி ஆகுவதால் ஒரு சிலருக்குப் பதவி உயர்வுடன் கூடிய பணி இட மாற்றங்கள் ஏற்படலாம்.பொருளாதார விசமாக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொண்டு சந்திக்க வேண்டிய நபர்களைச் சந்தித்து நல்ல பலன்களை அடைவீர்கள்.வண்டி மற்றும் வாகனங்களால் எதிர் பாராத சிற் சில ஆபத்துக்கள் வந்து விலக இருப்பதால் கவனமுடன் சென்று வரவும். பூ பழம்,நறுமணசம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,அநாதை ஆசிரமங்களை நடத்துபவர்கள்,இனிப்புத் தின்பண்டம் சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் வியாபாரிகள்,கம்யூட்டர் சாதன வியாபாரிகள்,சூப்பர்மார்க்கெட் நடத்துபவர்கள்,ஆலயப் பணி செய்வோர்கள்,அறநிலையத் துறைகளைச் சார்ந்தவர்கள்,வேதம் ஓதுபவர்கள்,தங்கம் வெள்ளி போன்ற நகை வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல பலன்களை அடைவார்கள்..கணவன் மனைவி உறவுகளுக்குள் இருந்து வந்துள்ள பிரச்சனைகள் சற்று குறைந்து நிம்மதி அடைவீர்கள்.ஏற்றுமதி இறக்குமதி தொழிற் செய்வோர்கள் நல்ல லாபம் அடைவார்கள்.திடீர் அதிர்ஷ்டம் மூலமாகத் தன வரவுகள் உண்டாகும்.விட்டுப் போன உறவுகளுடன் மீண்டும் ஒன்று சேருவீர்கள். குல தெய்வ ஆலயங்களைத் திருத்திக் கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடு படுவீர்கள்.தந்தை மகன் உறவுகளுக்குள் காரணமற்ற கருத்து வேறுபாடுகளும்,மனக் கசப்புகளும் வந்து சேரலாம்.நீண்ட காலமாக விட்டுப் போன பழைய வழக்குகளை மீண்டும் தொடருவதன் மூலமாக நல்ல தீர்ப்புகள் கிடைக்கும். நீண்ட காலமாகக் காணாமற் போன பொருட்கள் காவல் துறையினர்களின் உதவிகளால் திரும்பக் கிடைக்கும்.உற்றார் மற்றும் உறவினர்களின் வரவுகளால் பொருட் செலவுகள் உண்டாகும்.பொருளாதாரத்தில் இது வரையில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் சற்று மாறிச் சற்று முன்னேற்றம் காண்பீர்கள்.யாத்திரையின் போது சம்பந்தம் இல்லாத நபர்களுடன் வீண் பிரச்சனைகள் வர இருப்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணம் செய்யவும். செய் தொழில் விசயமாக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்ளுவீர்கள். வேற்று மதத்தவர்களிடம் எதிர் பார்த்த ஆதாயங்கள் கிடைக்க இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம்.புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள். ரேஸ் லாட்டரி போன்ற விசயங்களின் மூலமாக எதிர் பாராத தன வரவுகள் உண்டாகும்.விட்டுப் போன காதல் சம்பந்தமான பிரச்சனைகள் தீர்ந்து மீண்டும் காதல் தொடருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.உத்தியோகத் துறையினர்கள் மேலதிகாரிகளோடு சில பிரச்சனைகள் ஏற்பட்டுப் பணிஇட மாற்றம் உண்டாக வாய்ப்பு உள்ளது.வெளி நாட்டில் வசிப்பவர்கள் தாய் நாடு சென்று தங்கள் உறவுகளைச் சந்தித்துப் பின் திரும்புவீர்கள்.

 

 

பூரட்டாதி4ஆம் பாதம்,உத்திரட்டாதி1,2,3,4 ஆம் பாதம்,ரேவதி1,2,3,4 ஆம் பாதம் முடிய உள்ள மீனராசி அன்பர்களே இந்த ஆண்டில் உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 7ஆம் இடமாகிய கன்னியில் இருந்து 8ஆம் இடமாகிய துலாத்திற்கு பெயர்ச்சி ஆகுவதால் நீண்ட தூரப் பயணங்களின் போது மிகுந்த எச்சரிக்கையுடன் பயணம் செய்து வருவது நல்லதாகும்.செய் தொழிலில் கவனமுடன் இருந்து வருவதால் வர இருக்கும் பிரச்சனைகளைக் குறைத்துக் கொள்ளலாம். மீன் முட்டை மாமிசம் போன்ற உணவுப் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் வியாபாரிகள், சாயப் பவுடர் வியாபாரிகள், வட்டித் தொழிற் செய்வோர்கள்,பைனான்ஸ் கம்பெனிகளை நடத்துபவர்கள்,துப்புரவு தொழில் செய்வோர்கள்,அணு ஆராய்ச்சி சம்பந்தமான துறையைச் சார்ந்தவர்கள்,அலுவலக உதவியாளர்கள்,மடாதிபதிகள்,பழைய இரும்பு இயந்திர சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள், பழைய பேப்பர் மற்றும் பிளாஷ்டிக் சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,தோல் வியாபாரம் செய்பவர்கள் அகியோர்கள் நல்ல லாபம் அடைய வாய்ப்புகள் உள்ளது.சொத்து சம்பந்தமான வழக்கு விசயங்கள் தீருவதற்கு இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம். முன்கோபத்தை தவிர்த்துக் காரியத்தில் கவனமாய் இருங்கள்.குடும்பத்தில் நீண்ட காலமாகத் தடை பட்டு வந்த சுப காரிய நிகழ்ச்சிகள் நடைபெறும் காலமாகும்.ரேஸ் லாட்டரி போன்ற திடீர் அதிர்ஷ்டங்கள் மூலமாகப் பணம் வந்து சேரலாம். புதிய தொழில் ஆரம்பம் செய்வற்கான முயற்சிகளைச் சற்று தள்ளிப் போடவும்.நண்பர்களால் எதிர் பாராத ஆதாயங்கள் மற்றும் பண கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.ஒரு சிலருக்குப் புதிய வீடு மாற்றங்களின் மூலமாக நிம்மதி வந்து சேரும்.பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் சற்று குறைந்து காணப்படும். உத்தியோகத் துறையினர்கள் மேலதிகாரிகளிடம் விட்டுக் கொடுத்துப் போவதால் பிரச்னைகளைக் குறைத்துக் கொள்ளலாம்.தாயின் உடல் நிலையில் இது வரையில் இருந்து வந்துள்ள பாதிப்புகள் குறைந்து காணப்படும். பிள்ளைகளின் உடல் நிலையில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.உடல் நிலையில் வாயு மற்றும் குடல் சம்பந்தமான உபாதைகள் வந்து போகும்.. எந்த விசயத்திலும் சற்று நிதானமாக ஆலோசித்துச் செயல்படுவது நல்லதாகும்.தந்தை மகனுக்குள் காரணமற்ற சிற்சில கருத்து வேறபாடுகள் வந்து தீரும்.அரசியல் சார்ந்தவர்களுக்குப் புதிய தொடர்புகளின் மூலமாக மறைமுகமான தனம் கைவந்து சேர வாய்ப்பு உள்ளது.வுர வேண்டிய குடும்பச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து சொத்துக்கள் கிடைக்க வேண்டிய காலமாகும்.தந்தையின் உடல் பாதிப்பால் மருத்துவச் செலவுகள் ஏற்படுவதோடு, தந்தைக்கும் தனக்கும் கருத்து வேறுபாடுகள் வந்து விலகும்.வெகு காலமாகத் திருமணம் ஆகாத இளைஞர்களுக்குத் திருமண காரியங்கள் நிறைவேறும்.விளையாட்டுத் துறையை சார்ந்தவர்களுக்கு எதிர் பாராத பரிசு மற்றும் பாராட்டுதல்கள் கிடைக்கும்.

http://www.kathiravan.com/?page_id=1302
Share with your friends


Submit