சனிப் பெயர்ச்சி பலன்கள் (16.12.2014 முதல் 17.12.2017 வரை) க.ப.வித்யாதரன் (வீடியோ )

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

2014ஆ‌ம் ஆ‌ண்டு சனி பெயர்ச்சி பல‌ன்களை ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.வி‌த்யாதர‌ன் க‌ணி‌த்து‌ள்ளா‌ர்.

 • நிகழும் ஜய வருடம் மார்கழி மாதம் 1&ம் தேதி செவ்வாய் கிழமை (16.12.2014) கிருஷ்ண பட்சத்து தட்சணாயன புண்ய காலம் ஹேமந்த ருது, ஆக்ரஹாயனம், தசமி திதி, அஸ்தம் நட்சத்திரம், சௌபாக்யம் நாமயோகம், பத்தரை நாம கரணம், நேத்தரம், ஜீவனம், சித்தயோகம் கூடிய சுபயோக, சுப தினத்தில் பஞ்ச பட்சியில் காகத்தின் வல்லமை காலத்தில் மதியம் 2 மணி 16 நிமிடத்திற்கு திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி நிகழ்கிறது. சனிபகவான் துலாம் ராசியை விட்டு விலகி விருச்சிகம் ராசிக்குள் நுழைகிறார். இங்கு 16.12.2014 முதல் 17.12.2017 வரை அமர்ந்து தன்னுடைய கதிர்வீச்சுகளை உலகெங்கும் செலுத்துவார். கடந்த இரண்டரை ஆண்டு காலமாக வியாபார வீடான துலாம் ராசியில் அதாவது தராசு தட்டில் அமர்ந்து வியாபாரத்தை முடக்கிய சனிபகவான் இப்போது பூமிக்காரகனாகிய செவ்வாயின் வீட்டில் நுழைகிறார். விருச்சிக ராசிக்குள் சனி அமர்வதால் வியாபாரம் தழைக்கும். மக்களிடையே ஓரளவு பணப்புழக்கமும் அதிகரிக்கும். ஆனால் பூமிக்காரகன் செவ்வாய் வீட்டில் அமர்வதால் உலகெங்கும் பூமி விலை அதிகரிக்கும். பூமியின் பயன்பாடும் அதிகரிக்கும். இயற்கை சீற்றங்களாலும் சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களாலும் வெள்ளப் பெருக்காலும் மண் வளம் குறையும். அதேப் போல மணல் தட்டுப்பாடு உலகெங்கும் அதிகரிக்கும். கட்டுமானப் பொருட்களுக்கு மணலைப் பயன்படுத்தாமல் வேறு மாற்றுப் பொருள் பயன்பாட்டிற்கு வரும். மணலின் பயன்பாடு குறையத் தொடங்கும். வனங்களெல்லாம் வளமிழக்கும். பழமையான மூலிகை, மரம், செடி கொடிகளெல்லாம் அழியும். வனங்களைப் பாதுகாக்க கடுமையான சட்ட, திட்டங்களெல்லாம் நடைமுறைக்கு வரும். வன விலங்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறையும். ரசாயனப் பொருட்கள், உரங்களைப் பயன்படுத்தாமல் இயற்கை உரங்கள், தழை உரங்கள் பயன்படுத்தி உருவாகும் தானியங்களுக்கு மவுசு அதிகரிக்கும். சகோதரக்காரகனாகவும் செவ்வாய் வருவதால் கூட்டுக் குடும்பங்களெல்லாம் பிரியும். சகோதரங்களுக்கிடையே சண்டை, சச்சரவுகள் அதிகமாகும். சொத்துப் பிரச்னைகளால் பாரம்பரிய குடும்பகளிடையே மோதல்கள் மூளும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் அதிகரிக்கும். 20 வயது முதல் 45 வயதிற்குள்ளானவர்கள் விபத்துகள் மற்றும் விநோத நோயால் உயிரிழப்புகளுக்குள்ளவார்கள். உலகெங்கும் வன்முறை சம்பவங்கள், மனிதாபிமானமற்றச் செயல்கள் அதிகரிக்கும். பாலியல் தொடர்பான வழக்குகள் அதிகமாகும். முறையற்ற பாலுறவுகள் அதிகரிக்கும். ஒருபக்கம் உணவுப் பொருள் தட்டுப்பாடும், மற்றொரு பக்கம் அதிக விளைச்சல் உருவாகும். பருப்பு வகைகள் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு உள்ளிட்ட பருப்புகளின் விலை அதிகரிக்கும்.

 • உழைப்பால் உயரும் நீங்கள், அடுத்தவர் நிழலில் அமர யோசிப்பீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 6-வது வீட்டில் அமர்ந்து எதிலும் முன்னேற்றத்தை தந்த சனிபகவான் இப்போது 16.12.2014 முதல் 17.12.2017 வரை உள்ள காலக்கட்டங்களில் உங்கள் ராசிக்கு 7-வது வீட்டில் நுழைந்து பலன் தரப்போகிறார். 7-வது வீட்டில் சனி அமர்ந்து கண்டகச் சனி வருகிறாரே? என்று பதட்டப்படாதீர்கள். சனிபகவான் உங்களுக்கு யோகாதிபதியாக வருவதால் உங்களுக்கு ஓரளவு நன்மையே உண்டாகும். இனி எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். வீரியம் பெரிதா காரியம் பெரிதா என்று யோசிக்கும் போது காரியம் தான் முக்கியம் என்பதை உணருவீர்கள். என்றாலும் களத்திர ஸ்தானமான 7-ம் வீட்டில் சனி அமர்வதால் திருமணம் தள்ளிப் போகும். ஈகோ பிரச்னை, வீண் சந்தேகத்தால் கணவன்-மனைவிக்குள் பிரிவுகள் ஏற்படக்கூடும். உன் சொந்தம், என் சொந்தம் என்று மோதிக் கொள்ளாமல் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. குடும்பத்தில் வரும் சின்ன சின்னப் பிரச்னைகளையெல்லாம் பெரிதுப்படுத்திக் கொண்டிருக்காதீர்கள். இருவரும் மனம் விட்டு பேசுவது நல்லது. மனைவிக்கு கர்ப்பச் சிதைவு, ஹார்மோன் பிரச்னை, முதுகு தண்டில் வலி வந்துப் போகும். பலர் வேலையாகும் வரை உங்களைப் பயன்படுத்திக் கொண்டு கருவேப்பில்லையாக வீசி விட்டார்கள் என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளுங்கள். வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கப்பாருங்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். கூடாப்பழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்க்கப்பாருங்கள். உறவினர், நண்பர்களுடன் உரிமையில் வரம்பு மீறிப் பேச வேண்டாம். உத்தியோகம், வியாபாரத்தின் பொருட்டு குடும்பத்தை பிரிய வேண்டி வரும். மரியாதைக் குறைவான சம்பவங்கள் அவ்வப்போது நிகழும்.

 • சமாதானத்தை விரும்பும் நீங்கள், சச்சரவுகளை தவிர்ப்பீர்கள். இதுவரை உங்களின் 5-ம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் இடையே ஒரு இடைவெளியை ஏற்படுத்தி, பிரச்னைகளையும் தந்து உங்களை நிம்மதியில்லாமல் செய்த சனிபகவான் இப்போது 16.12.2014 முதல் 17.12.2017 வரை உள்ள காலக்கட்டங்களில் அதிரடி யோகம் தரும் 6-ஆம் வீட்டில் அமர்ந்து பல இன்ப அதிர்ச்சிகளையும், பணவரவையும் அள்ளித் தரவுள்ளார். இதுவரை முன்னுக்குப்பின் முரணாக யோசித்தீர்களே! எப்போது பார்த்தாலும் ஒரு குழப்பத்துடன், முகவாட்டதுடன் காணப்பட்டீர்களே! குடும்பத்தில் எப்போதும் சண்டை சச்சரவுகள் நிலவி வந்ததே! பிள்ளைகள் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்தும் அவர்களை திருப்திபடுத்த முடியாமல் திணறினீர்களே! அந்த அவல நிலையெல்லாம் இனி மாறும். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். குடும்பத்தில் தென்றல் வீசும். அழகு, ஆரோக்யம் கூடும். சமயோஜித புத்தியாலும், மாறுபட்ட அணுகுமுறைகள் மூலமாகவும் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உடம்பு தூங்கினாலும், மூளைத் தூங்காமல் இருந்ததே! இனி ஆழ்ந்த உறக்கம் வரும். நண்பர்கள், உறவினர்களெல்லாம் மாறி மாறி உங்களை ஏமாற்றினார்களே! இனி அவர்களெல்லாம் உங்களிடம் மன்னிப்புக் கேட்பார்கள். பூர்வ புண்ய ஸ்தானமான 5-ம் வீட்டை விட்டு சனி விலகுவதால் எவ்வளவோ சிகிச்சைகள் செய்தும், மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டும் வீட்டில் துள்ளி விளையாட ஒரு குழந்தை இல்லையே என்று வருத்தப்பட்டீர்களே! அறிவு, அழகுள்ள குழந்தை பிறக்கும். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். உங்கள் பேச்சிற்கு முக்கியத்துவம் தருவார்கள். கூடாபழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பிலிருந்து விடுபடுவார்கள். அவர்களின் அடிமனதில் மறைந்துக் கிடக்கும் திறமைகளை வெளிக் கொண்டுவருவீர்கள். வாய்தா வாங்கி தள்ளிப் போன பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். மகளின் திருமணம் ஏதோ ஒரு வகையில் தள்ளிப் போய் கொண்டே இருந்ததே! இனி கண்ணுக்கு அழகான மணமகன் வந்தமைவார். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் புது வேலை அமையும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனை சிறுக சிறுக பைசல் செய்ய வழி, வகைப் பிறக்கும்.

 • மனிதநேயம் உள்ள நீங்கள், மரம், செடி, கொடிகளையும் நேசிப்பீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்ந்து ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையையும், தாயாருக்கு ஆரோக்ய குறைவையும், பணப்பற்றாக்குறையையும் தந்து உங்களை நாலாவிதத்திலும் அவஸ்தைப்படுத்திய சனிபகவான் இப்போது 16.12.2014 முதல் 17.12.2017 வரை உள்ள காலக்கட்டங்களில் 5-ம் வீட்டில் அமர்வதால் நல்லதே நடக்கும். இதுவரை சுக ஸ்தானத்தில் அமர்ந்து சின்ன சின்ன சந்தோஷங்களைக் கூட அனுபவிக்கவிடாமல் சனிபகவான் அலைக்கழித்தாரே! வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு வீட்டு உரிமையாளர்களால் சின்ன சின்ன நெருக்கடிகளை சந்தித்தீர்களே! முக்கியமான இடத்திற்கு புறப்படும் போதெல்லாம் வாகனம் பழுதானதே! சொந்த வீட்டில் இருப்பவர்களுக்கும் அடிக்கடி வீட்டில் தண்ணீர் பிரச்னை, கழிவு நீர் குழாய் அடைப்பு என பராமரிப்புச் செலவுகளும் அதிகரித்ததே! இனி அந்த நிலை மாறும். குடும்பத்தில் சந்தோஷம் குடிக்கொள்ளும். சங்கடங்கள் தீரும். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். தாயார் எப்போது பார்த்தாலும் ஏதாவது ஒரு வலி, வேதனையைச் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்தாரே! அவரின் ஆரோக்யம் சீராகும். நோய் குணமடையும். கணவன்-மனைவிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்தார்களே! இனி அவர்களையெல்லாம் இனம் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கிற்காக கோர்ட், கேஸ் என்று அலைந்து ஓய்ந்துப் போனீர்களே! தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வரும். சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ. ப்ளான் அப்ரூவல் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த கசப்புணர்வுகள் விலகும். மனதில் தொக்கி நிற்கும் தாழ்வான எண்ணங்களை தூக்கி எறிவீர்கள். எப்படியாவது ஒரு சொத்து வாங்கிவிட வேண்டுமென்று முயற்சி செய்வீர்கள், அந்த முயற்சியும் நல்ல விதத்தில் முடியும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். சனிபகவான் பூர்வ புண்ய ஸ்தானமான 5-ம் வீட்டில் அமர்வதால் குழந்தை பாக்யம் கிடைக்கும். என்றாலும் பிள்ளைகள் கொஞ்சம் முரண்டு பிடிப்பார்கள். அவர்களின் நட்பு வட்டத்தையும் கண்காணியுங்கள். சில நேரங்களில் உங்கள் உள்மனதில் எதிர்மறை எண்ணங்கள் உருவாகும். யோகா, தியானம் மூலம் நேராக்குங்கள். மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு மகனை விட்டு பிரிய வேண்டி சூழ்நிலை உருவாகும். கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களை தவிர்க்கப்பாருங்கள். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னையில் மூக்கை நுழைக்காதீர்கள். உறவினர்கள் விஷயத்தில் நியாயம் பேசப் போய் பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

 • சொன்ன சொல்லை நிறைவேற்றும் நீங்கள், தன்னை நம்பி வந்தவர்களை ஆதரிப்பீர்கள். இதுவரை ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு புது முயற்சிகளில் வெற்றியையும், வசதியையும் பெற்று தந்த சனிபகவான் இப்போது 16.12.2014 முதல் 17.12.2017 வரை சுக வீடான 4-ம் வீட்டில் அமர்வதால் இக்காலக்கட்டத்தில் வாழ்க்கையே கொஞ்சம் சவாலாக தான் தெரியும். உங்கள் ராசிக்கு ஆறு மற்றும் ஏழாம் வீட்டதிபதியாக சனி வருவதால் உங்கள் மனைவிக்கு அடிக்கடி உடல் நிலை பாதிக்கும். சிலர் சொந்த ஊரை விட்டு இடம் பெயர்வீர்கள். அர்த்தாஷ்டமச் சனியாக அமர்வதால் உங்களுடைய அணுகுமுறையை மாற்றுவது நல்லது. மற்றவர்களுடன் உங்களை ஒப்பீட்டுக் கொண்டிருக்க வேண்டாம். ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களைக் கூட கொஞ்சம் செலவு செய்து, அலைந்து போராடித் தான் முடிக்க வேண்டி வரும். தோல்விமனப்பான்மையால் மனஇறுக்கம் உண்டாகும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்குவீர்கள். வீடு, மனை, சொத்து வாங்குவதாக இருந்தால் பட்டா, வில்லங்க சான்றிதழ், தாய் பத்திரங்களையெல்லாம் சரி பார்த்து வழக்கறிஞரை கலந்தாலோசித்து வாங்குவது நல்லது. வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். சிறுசிறு வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். தாயாருக்கு இரத்த அழுத்தம், மூச்சுத் திணறல், வாயுக் கோளாறால் நெஞ்சு வலி வந்துப் போகும். மின்சாரம், கத்திரி கோள், நக வெட்டி போன்றவற்றை கவனமாக கையாளுங்கள். கணவன்-மனைவிக்குள் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். அவர்களின் பேச்சை கேட்டு வீணாக சந்தேகப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். அரசின் அனுமதிப் பெறாமல் கூடுதல் தளங்கள் அமைத்து வீடு கட்ட வேண்டாம். வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். நேரம் கடந்து சாப்பிடுவதை தவிர்க்கப்பாருங்கள். அல்சர் வரக்கூடும். முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். யாருக்காகவும் சாட்சி கையப்பமிட வேண்டாம்.

 • அல்லது செய்தவர்க்கும் நல்லதே செய்யும் நீங்கள், நாலும் தெரிந்தவர்கள். இதுவரை உங்கள் ராசிக்குள் அமர்ந்து ஜென்மச் சனியாக இருந்து உங்களை வெடித்து சிதற வைத்தார். எப்போதும் பிரச்னையிலேயே மூழ்கி கிடந்தீர்களே! இப்படி உங்களை வாட்டி வதைத்த சனிபகவான் இப்பொழுது 16.12.2014 முதல் 17.12.2017 வரை உள்ள காலக்கட்டங்களில் உங்கள் ராசியை விட்டு விலகி பாதச் சனியாக அமர்ந்து பலன் தரப் போகிறார். உங்களின் பிரபல யோகாதிபதியான சனிபகவான் 2-ம் வீட்டிற்கு வந்தமர்வதால் பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரம்மை நீங்கும். அழகு, இளமைக் கூடும். எப்போது பார்த்தாலும் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலையுடன், சோகம் படர்ந்திருந்த உங்கள் முகத்தில் இனி சந்தோஷம் பொங்கும். மற்றவர்களின் பிரச்சனைகளை கையிலெடுத்து நீங்கள் சிக்கலில் சிக்கித்தவித்தீர்களே! வீட்டு விசேஷங்களில் கூட உங்களை அவமானப்படுத்தி உங்களை ஒதுக்கி வைத்தார்களே! அந்த தர்மசங்கடமான நிலைகளிலிருந்து விடுபடுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் எப்போதும் ஒரு இறுக்கமான சூழ்நிலை நிலவியதே இனி மகிழ்ச்சிப் பொங்கும். வீண் சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். இனி அன்யோன்யம் அதிகரிக்கும். மற்றவர்களின் மனநிலையை உணரத் தொடங்குவீர்கள். என்றாலும் பாதச்சனியாக வருவதால் வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். குடும்பத்திலும் அவ்வப்போது சலசலப்புகள் வரும். சிலர் உங்களை சீண்டிப் பார்ப்பார்கள். உடனே உணர்ச்சிவசப்பட்டு கத்தாதீர்கள். எதிர்மறை எண்ணங்களுடன் பேசுபவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது. கண் எரிச்சல், பார்வைக் கோளாறு, பல் வலி, காது வலி வந்துப் போகும். காலில் அடிப்பட வாய்ப்பிருக்கிறது. நெருக்கடியான நேரத்தில் உங்களை பயன்படுத்தி விட்டு கருவேப்பில்லையாய் தூக்கி எறிந்துவிட்ட நண்பர்கள், உறவினர்களை நினைத்து ஆதங்கப்படுவீர்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வழக்கை நினைத்து அவ்வப்போது நிம்மதி குறையும். அரசு காரியங்கள் தாமதமாகி முடியும். பிள்ளைகளிடம் எதிர்மறையாகப் பேச வேண்டாம்.

 • சுய கௌரவத்தை விட்டுக் கொடுக்காத நீங்கள், கொள்கை பிடிப்புடன் வாழ்பவர்கள். இதுவரை உங்களின் ராசிக்கு பனிரெண்டில் அமர்ந்து கொண்டு அடுக்கடுக்காக பல பிரச்னைகளையும், தூக்கமின்மையையும் தந்த சனிபகவான் இப்பொழுது 16.12.2014 முதல் 17.12.2017 வரை உள்ள காலக்கட்டங்களில் ராசிக்குள்ளேயே ஜன்மச் சனியாக அமர்கிறார். ஜென்மச் சனி என்ன செய்யப் போகிறதோ! என்றெல்லாம் அஞ்சாதீர்கள். சனிபகவான் உங்களுக்கு திருதியாதிபதியாகவும், சுகாதிபதியாகவும் வருவதால் ஒரளவு நல்லதையே செய்வார். எவ்வளவு தான் சிக்கனம் பிடித்து சேமிக்க நினைத்தாலும் அடுத்தடுத்த செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறினீர்களே! முதல் முயற்சியிலேயே எந்த ஒரு விஷயங்களையும் முடிக்க முடியாமல் தவித்தீர்களே! இழப்புகளும், அவமானங்களும் உங்களை துரத்தியதே! இனி இடம், பொருள் ஏவல் அறிந்து செயல்படத் தொடங்குவீர்கள். சமயோஜித புத்தியுடனும் நடந்து கொள்வீர்கள். அவசர தேவைக்கு கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் விலகி அமைதி திரும்பும். சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வீர்கள். ஆனால் ராசிக்குள் சனி அமர்ந்து ஜென்மச் சனியாக வருவதால் ஆரோக்யத்தில் இனி நீங்கள் அதிக அக்கறை காட்ட வேண்டியது வரும். வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலிக்கும். ஆனால் ஹார்ட் அட்டாக்காக இருக்குமோ என்றெல்லாம் அச்சம் வரும். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரம்மையும் வந்துப் போகும். கவலைப்படாதீர்கள். சரியான நேரத்திற்கு மருத்துவரை ஆலோசித்து மருந்து, மாத்திரை உட்கொள்வது நல்லது. மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள். கொழுப்புச் சத்துள்ள உணவுகள் வேண்டாமே. சர்க்கரை நோய் எட்டிப் பார்க்கும். சாப்பாட்டில் உப்பை குறைத்துக் கொள்ளுங்கள். உடல் பருமனாவதை தவிர்க்க தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. நேரம் தவறி சாப்பிடுவதால் அல்சர் வரக்கூடும். விளம்பரங்களை பார்த்து ஏமாந்து சோப்பு, ஷாம்புவையெல்லாம் மாற்றிக் கொண்டிருக்காதீர்கள். தோலில் தடிப்பு, அலர்ஜி வரக்கூடும். யூரினரி இன்பெக்ஷன் வரக்கூடும். சில நேரங்களில் எங்கே நிம்மதி என்று தேட வேண்டி வரும். தன்னைச் சுற்றியிருப்பவர்கள் தன்னை ஏமாற்றுவதாக நினைத்துக் கொள்வீர்கள். தன்னைச் சுற்றி ஏதோ சதி நடப்பதாக சிலரை சந்தேகப்படுவீர்கள். இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். கணவன்-மனைவிக்குள் சின்ன சின்ன விவாதங்கள் வந்துப் போகும். எதுவாக இருந்தாலும் மனம் விட்டு பேசி முடிவுகள் எடுக்கப்பாருங்கள். உறவினர், நண்பர்களில் ஒருசிலர் உங்களை விட்டு ஒதுங்குவார்கள். யாராக இருந்தாலும் நெருங்கிப் பழகுவதை தவிர்க்கவும். ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்தை காப்பாற்ற வேண்டி வரும். அயல்நாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். யோகா, தியானத்தில் ஈடுபடுத்திக் கொள்வது நல்லது. யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். திடீரென்று அறிமுகமாகுபவர்களிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். வழக்கில் வழக்கறிஞரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. மறதியால் விலை உயர்ந்த பொருட்களை இழக்க நேரிடும். வி.ஐ.பிகளின் நட்பால் சில காரியங்களை சாதிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். சொத்து வரி, வருமான வரி எதுவாக இருந்தாலும் தாமதிக்காமல் செலுத்துவது நல்லது.

 • குனியக் குனியக் குட்டினாலும் கோபப்படாதவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு கிடைக்கின்ற வாய்ப்புகளையெல்லாம் தட்டிவிட்டதுடன், கையில் ஒரு காசும் தங்கவிடாமல் துடைத்தெடுத்த உங்கள் ராசிநாதன் சனிபகவான் இப்போது 16.12.2014 முதல் 17.12.2017 வரை உள்ள காலக்கட்டங்களில் 10-ம் வீட்டில் அமர்வதால் புதிய முயற்சிகள் வெற்றியடையும். சதா சர்வகாலமும் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருந்த நீங்கள் இனி அதற்கான நற்பலனை அடைவீர்கள். தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். மனப்போராட்டங்கள் ஓயும். குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். எங்குச் சென்றாலும் முதல் மரியாதைக் கிடைக்கும். உங்களுடைய நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். உங்களுடைய ஆலோசனைக்கு இனி முக்கியத்துவம் தருவார்கள். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த ஈகோப் பிரச்னை, வீண் சந்தேங்களெல்லாம் விலகும். இருவரும் மனம் விட்டு பேசி சில முடிவுகள் எடுப்பீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துக் கொள்வார்கள். தந்தையாரின் உடல் நலம் சீராகும். தந்தைவழி உறவினர்களுடனான கசப்புணர்வுகள் நீங்கும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். அரசு காரியங்கள் விரைந்து முடிவடையும். சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ. ப்ளான் அப்ரூவல் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். வங்கி கடன் உதவி கிடைக்கும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சொந்த ஊர் பொதுக் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். உங்களுடன் பழகிக் கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை புறந்தள்ளுவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். இயக்கம், சங்கம் இவற்றில் புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள். சிலர் சொந்தமாக தொழில் தொடங்குவீர்கள்.

 • ஏமாற்றங்களைக் கண்டு அஞ்சாத நீங்கள், நேர்மறைச் சிந்தனை அதிகம் உள்ளவர்கள். இதுவரை அஷ்டமத்தில் நின்று கொண்டு திக்கு திசையறியாது திண்டாட வைத்ததுடன், காரண காரியமே இல்லாமல் பிரச்சனைகளில் சிக்க வைத்து, வாழ்க்கை மீதே ஒருவித வெறுப்புணர்வை ஏற்படுத்திய சனிபகவான் இப்போது 16.12.2014 முதல் 17.12.2017 வரை உள்ள காலக்கட்டங்களில் 9-ம் வீட்டில் அமர்வதால் இருளில் இருந்த நீங்கள் இனி வெளிச்சத்திற்கு வருவீர்கள். எப்போதும் கோபப்பட்டு கொண்டேயிருந்தீர்களே! இனி சாந்தமாவீர்கள். தொட்டதுக் கெல்லாம் வீண் விவாதங்களும், மன உளைச்சலும், டென்ஷனும் தான் மிஞ்சியதே. அவையெல்லாம் இனி விலகும். சின்ன வேலையை கூட முடிக்க முடியாமல் தடுமாறினீர்களே! இனி உற்சாகத்துடன் அனைத்தையும் முடித்துக் காட்டுவீர்கள். எந்த விஷயமாக இருந்தாலும் மற்றவர்களின் ஆலோசனையின்றி சுயமாக சிந்தித்து முடிவெடுங்கள். வாழ்க்கையில் வெற்றி பெறுவோமோ, மாட்டோமோ என்றெல்லாம் குழம்பினீர்களே! இனி தெளிவுப் பிறக்கும். பல நாட்கள் தூக்கமின்றி அவஸ்தைப்பட்டீர்களே! இனி நிம்மதியாக உறக்கம் வரும். உங்களை விட வயத்தில் குறைவானவர்கள், தகுதியில் குறைந்தவர்களிடமெல்லாம் கூனிக் குறுகி அவமானப்பட்டு நின்றீர்களே! அந்த நிலையெல்லாம் மாறும். இனி தன்னம்பிக்கையுடன் தலை நிமருவீர்கள். குடும்பத்தினர் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கசப்புணர்வுகள் நீங்கும். உங்களுக்குள் கலகமூட்டியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். சிலர் வாஸ்து படி வீட்டை மாற்றி, விரிவுப்படுத்துவீர்கள். மனதில் தொக்கி நின்ற தாழ்வான எண்ணங்களை தூக்கி எறிவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி புதுசு வாங்குவீர்கள். அடகிலிருந்த நகை, வீட்டு பத்திரங்களையெல்லாம் மீட்பீர்கள். தோல்விமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். பழைய பிரச்னைகள், சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். நீங்கள் சொல்லாததையும், சொன்னதாக நினைத்துக் கொண்டு மனக்கசப்பால் ஒதுங்கியிருந்த உறவினர்கள் வலிய வந்துப் பேசத் தொடங்குவார்கள். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த பணத்தை குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி பைசல் செய்வீர்கள். ஏளனமாகவும், இழிவாகவும் திட்டியவர்கள் எல்லாம் இனி உங்களை பாராட்டுவார்கள். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். சிறுக சிறுக சேமித்து ஒரு வீடோ, அல்லது மனையோ வாங்கிவிட வேண்டுமென்று ஆசைப்பட்டீர்களே! இப்போது நிறைவேறும். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரம்மையிலிருந்து விடுவீர்கள். அழகு, ஆரோக்யம் கூடும். வாய்தா வாங்கித் தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். ஆனால் தந்தையாருடன் வாக்குவாதம், அவருக்கு நரம்புச்சுளுக்கு, மூட்டுத் தேய்மானம், சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்துப் போகும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை விஸ்வரூபமெடுக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தும்.

http://www.kathiravan.com/?page_id=1302