குருப்பெயர்ச்சி பலன் : 12 ராசிகளுக்கும் என்ன மார்க்?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிகளுக்கு மட்டும்

பிரகஸ்பதி என்று பிரபஞ்சமே போற்றித் துதிக்கும் குருபகவான்தான் ஞானத்தின் பிதாமகனாய்த் திகழ்கிறார். காலசர்ப்ப தோஷம், பிரம்மஹத்தி தோஷம் போன்ற சகல தோஷங்களையும் நீக்கும் ஆற்றல் கொண்டவர். குருவின் பார்வை பட்டால்தான் திருமணம் நடைபெறும். ஒருவரின் ஜாதகத்தில் மற்ற கிரகங்கள் எப்படி இருந்தாலும், குரு மட்டும் நல்ல நிலையில் இருந்தால் எதையும் சாதிக்கும் சக்தி கிடைக்கும்.

இந்த துர்முகி வருடம், ஆடி மாதம் 18 ம் தேதி (2.8.16) செவ்வாய்க்கிழமை கிருஷ்ண பட்சத்து அமாவாசை திதி மேல்நோக்குள்ள பூசம் நட்சத்திரம், ஸித்தி நாமயோகம், சதுஷ்பாத நாமகரணம், நேத்திரம், ஜீவனம் மறைந்த சித்தயோகத்தில், புதன் ஹோரையில், இரண்டாம் ஜாமத்தில், பஞ்ச பட்சியில் ஆந்தை துயில் கொள்ளும் நேரத்தில், தட்சிணாயன புண்ணிய கால கிரீஷ்ம ருதுவில் காலை மணி 9.24-க்கு கன்யா லக்னத்தில் பிரகஸ்பதி எனும் தேவ குருவாகிய வியாழபகவான் சிம்ம ராசியிலிருந்து உபய வீடான கன்னி ராசிக்குள் சென்று அமர்கிறார். 1.9.17 வரை கன்னி ராசியில் அமர்ந்து தன் அதிகாரத்தை வெளிப்படுத்துவார்.

இந்த குருப்பெயர்ச்சியால், எந்த ராசி எப்படி இருக்கும், எந்த ராசி எத்தனை மதிப்பெண்கள் பெறும், என்பதைப் பார்க்கலாம். இந்த துர்முகி வருடம் ஆடி மாதம் நடைபெறும் குருப்பெயர்ச்சி பலன்கள் குறித்து விவரிக்கிறார் ‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்.

 • இந்த குருப்பெயர்ச்சியில் உங்களின் மதிப்பெண் 55/100. எதையுமே உடனே கிரகித்துக்கொள்ளும் ஆற்றல் மிக்கவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்து சுப பலன்களைத் தந்த குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை 6-வது வீட்டுக்குள் பிரவேசிக்கிறார். சின்னச் சின்ன இழப்புகளும், ஏமாற்றங்களும் இருக்கும் என்றாலும், அதற்காக அஞ்ச வேண்டாம். எந்த ஒரு காரியத்தையும் நன்கு யோசித்துச் செய்தால் ஏமாற்றங்களைத் தவிர்க்கலாம்.

 • இந்த குருப்பெயர்ச்சியில் உங்களின் மதிப்பெண் 80/100 எந்தச் சூழலிலும் மற்றவர்களின் தயவில் வாழ விரும்பாதவர்கள் நீங்கள். இதுவரை உங்களின் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ம் இடத்தில் அமர்ந்து, உங்களைப் பல வகைகளிலும் சிரமப்படுத்திய குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5-ம் வீட்டில் அமர்கிறார். இதனால் உங்களுடைய அடிப்படை வசதி வாய்ப்புகள் பெருகும். எதிலும் வெற்றி உண்டாகும். கடன் தொல்லைகள் குறையும். கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் உண்டாகும். சேமிக்கத் தொடங்குவீர்கள். மகளுக்குத் திருமணம் நிச்சயமாகும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.

 • இந்த குருப்பெயர்ச்சியில் உங்களின் மதிப்பெண் 60/100 யதார்த்த நிலையை உணர்ந்து செயல்படுபவர்கள், நீங்கள். இதுவரை உங்களின் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்து உங்களை முடக்கி வைத்திருந்த குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை 4-ம் வீட்டில் அமர்வதால், எதிலும் உணர்ச்சி வசப்படாமல் பிரச்னைகளை அறிவுபூர்வமாகவும், அனுபவ பூர்வமாகவும் அணுகுங்கள். சுற்றியிருப்பவர்களில் நல்லவர் யார் கெட்டவர் யார் என்பதை அறிவதில் குழப்பம் ஏற்படும். எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகள் துரத்தும். வேலைச் சுமையால் டென்ஷன் அதிகரிக்கும். உத்தியோகத்தின் பொருட்டோ, வீண் சந்தேகத்தாலோ தம்பதிக்கு இடையே பிரிவுகள் ஏற்படலாம்.

 • இந்த குருப்பெயர்ச்சியில் உங்களின் மதிப்பெண் 70/100 உலக நடப்புகளை உன்னிப்பாக கவனிப்பவர்கள், நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்ந்து பலன்களை அருளிய குருபகவான், இப்போது 3-ம் வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். 2.8.16 முதல் 1.9.17 வரை உங்களின் சஷ்டம-பாக்கிய ஸ்தானாதிபதியான குருபகவான் மூன்றாம் வீட்டில் மறைவதால், உங்களின் அணுகுமுறையை மாற்றிக்கொள்வது நல்லது. வேலைகளை முடிப்பதில் இழுபறி நீடிக்கும். தன்னம்பிக்கை குறையும். கணவன்-மனைவிக்குள் சச்சரவுகள் வந்தாலும், அன்பும், அந்நியோன்யமும் குறையாது.

 • சிம்மம் 85/100 காரியத்தில் கண்ணாக இருந்து காய் நகர்த்தும் அன்பர்கள் நீங்கள். இதுவரை ஜன்ம குருவாக அமர்ந்து, பல வகைகளிலும் இன்னல்களைத் தந்த குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை 2-ம் வீட்டில் அமர்வதால், புத்துணர்ச்சி பெறுவீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால், குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். தடைப்பட்ட சுபநிகழ்ச்சிகள் நல்லபடியாக நிறைவேறும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள். நோய்களில் இருந்து விடுபடுவீர்கள்.

 • கன்னி 52/100 கலாரசனை உள்ளவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் இருந்து வீண் விரயங்களையும், பணப் பற்றாக்குறையையும் ஏற்படுத்தி வந்த குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்குள் அமர்கிறார். ஜன்ம குரு என்று கலக்கம் கொள்ள வேண்டாம். பொறுப்புகள் அதிகரிக்கத்தான் செய்யும். ஒரே சமயத்தில் பல வேலைகளை இழுத்துப் போட்டு செய்ய வேண்டி இருக்கும். கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகம், சச்சரவுகள் வரக்கூடும். ராசியிலேயே குரு அமர்வதால், உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். பணம் எவ்வளவுதான் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். அவ்வப்போது அவநம்பிக்கை வந்து நீங்கும்.

 • துலாம் 70/100 நடுநிலைமை தவறாதவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து கொண்டு நினைத்த காரியங்களையெல்லாம் நிறைவேற்றியதுடன், பதவி, அந்தஸ்தையும் தந்த குரு பகவான் இனி 2.8.16 முதல் 1.9.17 வரை விரயஸ்தானமான 12-ம் இடத்துக்கு வருகிறார். சுபச் செலவுகள் அதிகரிக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய வேண்டி இருக்கும். மனக் குழப்பம் அதிகரிக்கும். வீண் கவலைகள் மனதை வாட்டும். வழக்குகளில் எச்சரிக்கை தேவை.

 • விருச்சிகம் 83/100 கேள்விக் கணைகள் தொடுப்பதில் வல்லவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு, உங்களைப் பலவகைகளிலும் அலைக்கழித்த குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால், இனி முன்னேற்றம் உண்டாகும். எதிலும் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மரியாதை கிடைக்கும். கொடுத்த கடன் திரும்பும். கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். புகழும் செல்வாக்கும் கூடும். மழலை பாக்கியம் கிடைக்கும்.

 • தனுசு 58/100 வளைந்து கொடுக்கத் தெரியாதவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு புதிய அனுபவங்களைத் தந்து, உங்களை முன்னேற்றப் பாதையில் நடத்திய குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து பலன் தரப்போகிறார். பத்தில் குரு, பதவிக்கு ஆபத்து என்று அச்சம் கொள்ளவேண்டாம். ஓரளவு நன்மையே உண்டாகும். வேலைச் சுமை அதிகரிக்கும். உங்கள் உழைப்பையும் திறமையையும் வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவார்கள். சிலர் வேலையின் காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிய வேண்டி இருக்கும். கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வரும்.

 • மகரம் 90/100 மனச்சாட்சிப்படி நடப்பவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் அமர்ந்து மன இறுக்கத்தையும், வீண் அலைச்சல்களையும் கொடுத்து வந்த குருபகவான், இனி 2.8.16 முதல் 1.9.17 வரை உங்களின் பாக்கிய ஸ்தானமான 9-ம் வீட்டில் அமர்வதால், புதிய பாதையில் பயணித்து சாதிப்பீர்கள். பிரச்னைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டாகும். தன்னம்பிக்கை கூடும். கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் கூடும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்களின் ராசியைப் பார்ப்பதால், ஆரோக்கியம் கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புது பதவி, பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

 • கும்பம் 73/100 மற்றவர்களின் வெற்றிக்காகப் பாடுபடுபவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு குடும்பத்தில் மகிழ்ச்சியையும், பதவி, புகழ், கௌரவத்தையும் தந்த குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் மறைவதால், எதிலும் பொறுமையும் நிதானமும் தேவை. நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டி இருக்கும். எவ்வளவுதான் பணம் வந்தாலும், பற்றாக்குறை நீடிக்கும். எந்த ஒரு விஷயத்தையும் குடும்பத்தினருடன் ஆலோசித்து முடிவு செய்யுங்கள். எதிர்காலத்தைக் குறித்த அச்சம் வந்து போகும். உங்களது திறமையை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள்.

 • மீனம் 87/100 இயற்கையை உணரும் சக்தி கொண்டவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 6-ல் அமர்ந்துகொண்டு, பலவகைகளிலும் உங்களை சிரமப்படுத்திய குருபகவான் இனி 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்க்க இருப்பதால், தன்னம்பிக்கை கூடும். தடைப்பட்ட திருமணம் கூடி வரும். கடனாகக் கொடுத்த பணம் திரும்ப வரும். பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேருவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். புது வேலை கிடைக்கும். வெளிவட்டாரத்தில் உங்கள் புகழ் கூடும்.

http://www.kathiravan.com/?page_id=1302