எண் ஜோதிடம்: 17-11-2014முதல்23-11-2014வரை

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

கணித்து எழுதியவர்:ஞான யோகி டாக்டர்.ப.இசக்கி,
தமிழ்நாடு ,இந்தியா

 • 1,10,19,28ஆகிய தேதிகளை பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் கொண்டுள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு பலசரக்கு,டீசல்எண்ணை,பெட்ரோல், சம்பந்தமான பொருள் வியாபாரிகள் நல்ல பலன் அடைவார்கள். உடம்பில் தலை மற்றும் முகம் ஆகிய உபாதைகள் வந்து தீரும்.விட்டுப்போன பழைய பிரச்சனைகள் மீண்டும் தலை தூக்கும். உற்றார்,கணவன் மனைவி உறவுகளில் பிரச்சனைகள் வந்து நீங்கும். கோர்ட் வழக்கு சம்ப்நதமாகிய விசயங்களில் சற்று எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது.உத்தியோக துறையினர்கள் மேலதிகாரிகளிடம் மிகு எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும்..திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண காரியங்கள் கை கூடும்.புதிய நண்பர்களின் சேர்க்கையால் கூட்டுத் தொழில் முயற்சிகளில் எதிர் பாராத லாபம் அடையலாம். உறவினர்களின் வரவால் மன மகிழ்ச்சியும் நிம்மதியும் வந்து சேரும்.கலைத் துறையினர்கள் மற்றும் அரசியல் வாதிகளிடம் ஏமாற்றம் அடையாமல் இருங்கள்.

  அதிர்ஷ்டமான எண்:-4
  அதிர்ஷ்டமான நிறம்:-கருப்பு
  அதிர்ஷ்டமான திசை:-வடமேற்கு
  சாந்தி:-பிதுர் வழிபாடு செய்து வரவும்..

 • 2,11,20,29ஆகிய தேதிகளை பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் கொண்டுள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு திருமணம் போன்ற சுப காரியங்கள் சம்பந்தமாக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்வீர்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப் பெண்களையும், பரிசு மற்றும் பாராட்டுதல்களையும் பெறக் கூடிய காலமாகும்.ரேஸ்,லாட்டரி போன்றவற்றின் மூலம் திடீர் தன வரவு உண்டாகும்.உடம்பில் எலும்பு, நரம்பு சம்பந்தமாகிய பிணிகள் வந்து போகும்..புதிய நண்பர்கள் சேர்கையால் எதிர் பாராத தன லாபம் அடைய வாய்ப்பு உள்ளது.கலைப் பொருள்கள்,ஆடம்பர அலங்
  காரப் பொருட்கள்,சினிமா மற்றும் நாடகத்துறை சார்ந்தவர்கள்,அரசியல் வாதிகள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள்.எதிர் பாராமல் மஹான்களின் நல்லாசிகள் கிடைத்து அதனால் மன திருப்தி அடையலாம்.வீடு மாற்றம் செய்வதற்கான முயற்சிகளில் சற்று கால தாமதம் ஏற்படலாம். யாத்திரையில் மிகுந்த கவனம் தேவை.

  அதிர்ஷ்டமான எண்:-6
  அதிர்ஷ்டமான நிறம்:-வெள்ளை
  அதிர்ஷ்டமான திசை:-தென்கிழக்கு
  சாந்தி:-மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.

 • 3,12,21,30ஆகியதேதிகளை பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் கொண்டுள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு உறவினர்களின் வருகையால் பொருள் வரவு உண்டாகும்.தேவையில்லாமல் பழைய பிரச்சனைகள மீண்டும் தலை தூக்க வாய்ப்பு உள்ளது. சேர் மார்க்கெட்டில் ஈடுபாடு உடையவர்கள் கவனமுடன் இருக்
  கவும்.செய் தொழிலில் புதிய கூட்டு முயற்சிகளைத் தவிர்க்கவும்.வெளிநாடு சென்று வருதல் சம்பந்தமான முயற்சிகளில் நல்ல செய்திகள் வந்து சேரும். புது தொழில்களை ஆரம்பம் செய்ய எண்ணுவீர்;கள்.காதல் விசயங்களில் கவனம்தேவை.சம்பந்தமில்லாத நபர்களால் காணாமற் போன பொருட்கள் திரும்ப வீடு வந்து சேரும்.ஒரு சிலருக்கு வீடு மற்றும் தொழிற் சாலைகள் இட மாற்றம் ஏற்படலாம். குல தெய்வ வழிபாடு செய்து வருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.கலைத்துறைகள் சார்ந்த கல்வி நிறுவனங்கள்,
  வக்கீல்கள், எழுத்தாளர்கள்,புகைப்பட கலைஞர்கள்ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள்.

  அதிர்ஷ்டமான எண்:-8
  அதிர்ஷ்டமான நிறம்:-நீலம்.
  அதிர்ஷ்டமான திசை:-தென்மேற்கு
  சாந்தி:-சுவாமி ஐயப்பன் வழிபாடு செய்து வரவும்

 • 4,13,22,31ஆகிய தேதிகளை பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் கொண்டுள்ள இந்த வாரம் உங்களுக்கு பழைய கடன்களை அடைத்துப் புதிய கடன் வாங்வீர்கள். தீர்த்த யாத்திரைகள் சென்று வர எண்ணுவீர்கள்.நீண்ட தூரப் பயணங்களின் போது பெரிய மனிதர்கள் சந்திப்பு ஏற்பட்டு அவர்களால் சில காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். உறவினர்களின் வரவால் எதிர் பாராத பொருட் செலவுகள் உண்டாகும். விவசாயம் செய்வோர்களுக்கு விவசாயம் நன்கு பலிதமாகும்.தூரத்து காதல் விசயங்களில் மிகுந்த மனச் சந்தோசம் ஏற்படும். இதுவரை இருந்து வந்த பொருளாhதார நெருக்கடிகள் மாறி மனச் சந்தோசம் அடையலாம்.புதிய வீடு, நிலம் வாங்குவதற்காக எடுத்துக் கொண்ட முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். உடம்பில் சுரம் உஷ்ணம் ஆகிய உபாதைகள் வந்து போகும .கூட்டுத் தொழில் முயற்சிகளில் மிகுந்த கவனமுடன் செயல் படுவது நல்லது. பிறர் விசயங்களுக்காக ஜாமீன் போடுவதைத் தவிர்க்கவும்.

  அதிர்ஷ்டமான எண்:-9
  அதிர்ஷ்டமான நிறம்:-சிகப்பு
  அதிர்ஷ்டமான திசை:-தெற்கு
  சாந்தி:-துர்க்கை ஆலய வழிபாடு செய்து வரவும்.

 • 5,14,23ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் கொண்டுள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செய்தொழிலில் பங்காளிகளால் எதிர் பார்த்த பணம் கைவந்து சேரும். விட்டுப்போன பழைய வழக்குகள் மீண்டும் தொடர்ந்து அவற்றில் வெற்றி பெறுவீர்பொருளாதாரம் சுமாராகக் காணப்படும்.உற்றார் உறவினர்களால் மன நிம்மதி இன்மையும், காரணமற்ற பொருட் செலவுகளும் உண்டாகும். தீராத பழைய வழக்குகளில் நல்ல முடிவுகளை எதிர் பார்க்கலாம்.வடக்குத் திசையில் இருந்து சில நற் செய்திகள் வந்து சேரும். காய்கரிகள்,பழங்கள்,கீரை வகை
  கள் ஆகிய வியாபாரிகள் எழுத்துதுறை சார்ந்தவர்கள் நற்பலன்களை அடைவார்கள். நீண்ட தூரப் பயணங்களின் மூலம் சந்திக்க வேண்டிய நபர்களை சந்திப்பதில் கால தாமதம் ஏற்படலாம்.அரசியல் வாதிகளால் எதிர் பார்க்காத ஆதாயங்களை அடைவீர்கள்.
  வண்டி வாகனங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் யாத்திரை செய்து வருதல் நல்லது.

  அதிர்ஷ்டமான எண்:-9
  அதிர்ஷ்டமான நிறம்:-சிகப்பு
  அதிர்ஷ்டமான திசை:-தெற்கு
  சாந்தி:-அம்மன் வழிபாடு செய்து வரவும்.

 • 6,15,24ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும், பெயர் எண்ணாகவும் கொண்டுள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு குழந்தைகளுக்காக திடீர் மருத்துவச் செலவுகள் ஏற்படும்.விவசாயத்தில் புதிய முறைத் திட்டங்களின் மூலம் மாற்றம் செய்ய எண்ணுவீர்கள்.வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். வங்கிகளில் உதவியால் எதிர்பார்த்திருந்த கடன் தொகைகள் தாமதமின்றி உடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது.நண்பர்களின் உதவியால் புதிய தொழில் துவங்கப் போட்ட திட்டங்கள் தடையின்றி நிறை வேறும். குடும்பத்தில காரணமற்ற மனக் கசப்புகள் வந்து போகும். கல்வித்துறை சார்ந்தவர்கள் சற்று எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. லாட்டரி போன்ற விசயத்தில் பணம் பொருள் ஏமாற்றம் அடையாமல் இருக்கவும்.தங்கம் வெள்ளி போன்ற நகை வியாபாரிகள், அலங்காரப்; நல்ல லாபம் பெறுவார்கள்.விபரீதமான எண்ணங்களை விட்டுச் செயல் பாட்டில் கவனம் செலுத்துங்கள

  அதிர்ஷ்டமான எண்:-1
  அதிர்ஷ்டமான நிறம்:-வெள்ளை
  அதிர்ஷ்டமான திசை:-கிழக்கு
  சாந்தி:-சூரிய நமஸ்காரம் வழிபாடு செய்து வரவும்.

 • 7,16,25ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும், கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் கொண்டுள்ள அன்பர்களே இந்தவாரம் உங்களுக்கு பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து நல்ல முடிவுகள் கிடைக்கும். வங்கிகளில் எதிர் பார்த்து இருந்த பணம் கிடைக்கும்.பிள்ளைகளால் தன வரவும்மன நிம்மதியும் உண்டாகும். கண்களில் கவனம் தேவை.பிள்ளைகளின் சுப காரிய நிகழ்ச்சிகளுக்கான முயற்சிகளில் நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். வீடுகளைப் புதுப்பித்துக் கட்ட போட்ட திட்டங்களில் கால தாமதம் ஏற்படும்.மிகுந்த பிரயாசையின் மேல் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைச் சமாளித்து; கொள்ளுவீர்கள். ரேஸ்,லாட்டரி போன்ற விசயத்தில் பணம், பொருள் ஏமாறாமல் இருக்கவும்.காதல் விசயங்களில் எதிர் பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும். யாத்திரையின் போது புதிய பெரிய மனிதர்கள் தொடர்பால் மன மகிழ்ச்சியும் பொருள் வரவு உண்டாகும். தண்ணீர்,குளிர் பானங்கள் மற்றும் திரவ சம்பந்தமாகிய பொருட்களின் வியாபாரிகள் நல்ல லாபம் அடைவார்கள்.

  அதிர்ஷ்டமான எண்:-3
  அதிர்ஷ்டமான நிறம்:-மஞ்சள்
  அதிர்ஷ்டமான திசை:-வடகிழக்கு
  சாந்தி:-சிவ வழிபாடு செய்து வரவும்.

 • 8,17,26ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் கொண்டுள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு விருந்தினர் வரவால் மன மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாக வாய்ப்புகள் உள்ளதுபொருளாதார நெருக்கடிகள் மாறி தேவையான பொருள் வரவு உண்டாகும்.பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்று
  வோர்கள,பொதுப்பணித் துறை சார்ந்தவர்கள்,எழுத்தாளர்கள்,வக்கீல்கள் ஆகியோர்கள் நல்ல பலன் அடைவார்கள்.செல்வ செல்வாக்கு,புகழ் கூடும்.பெரிய மனிதர்கள் சந்திப்பால் சில காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். மகான்களின் தரிசனத்திற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்ள திட்டம் போடுவீர்கள்.புதிய வீடு,நிலம் வாகனங்களை வாங்கக் கூடிய காலமாகும். ஆலயத் திருப்பணிகளில் பங்கு கொண்டு மன மகிழ்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது.மற்றவர்களுக்காக சொத்து சம்பந்தமான விசயங்களுக்கு ஜாமீன் போட்டு வீண் பிரச்சனைகளை விலைக்கு வாங்காதீர்கள்.

  அதிர்ஷ்டமான எண்:-5
  அதிர்ஷ்டமான நிறம்:-பச்சை
  அதிர்ஷ்டமான திசை:-வடக்கு
  சாந்தி:-மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.

 • 9,18,27ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் கொண்டுள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு உடல் நிலையில் அலர்ஜி மற்றும் தொற்று நோய் போன்ற உபாதைகள் வரக்கூடும் என்பதால் உண்ணும் உணவில் கவனம் தேவை. பொருளாதார நெருக்கடியில் மனைவி அல்லது மனைவி வழிச் சொந்த பந்தங்களால் மாற்றம் உண்டாகி மன நிறைவை அடைவீர்கள்.காணாமற் போன பொருட்கள் சம்பந்த மில்லாத நபர்களால் வீடு வந்து சேரும். வேற்று மதத்தவர்களால் ஆதாயம் அடைவீர்கள். வீடுகளில் மிகுந்த கவனமுடன் இருத்தல் நல்லது. புதிய வீடு நிலம் வாங்க எதிர் பார்த்திருந்த கடன் கேட்ட பணம் கை வந்து சேரும்.தாயின் உடல் நிலையில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கி மருத்துவச் செலவுகள் குறையும்.மன தைரியமுடன் எடுத்த காரியத்தை சிரத்தையுடன் செய்து முடிப்பீர்கள். தீடீர் அதிர்ஸ்ட
  மாகிய ரேஸ் லாட்டரி மூலம் பணம் கிடைக்கும் என்று ஏமாற்றம் அடைய வேண்டாம்.

  அதிர்ஷ் டமான எண்:-3
  அதிர்ஷ்டமான நிறம்:-மஞ்சள
  அதிர்ஷ்டமான திசை:வடகிழக்கு
  சாந்தி:-சிவ வழிபாடு செய்து வரவும்.


  தொடரும்!

http://www.kathiravan.com/?page_id=1302
Share with your friends


Submit