எண்ஜோதிடம் 9-11-2015 முதல் 15-11-2015 வரை

பிறப்பு : - இறப்பு :

Astrology

கதிரவனுக்காகக் கணித்து எழுதியவர் ஞானயோகி டாக்டர். ப. இசக்கி,IBAM, RMP,DISM, தமிழ்நாடு, இந்தியா

  • 1,10,19,28ஆகிய எண்களைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் உள்ள

    அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு கட்டிட சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள் மற்றும்

    சினிமா,நாடக துறை சார்ந்தவர்கள்,கலைஞர்கள் நற்பலன் அடைவார்கள்.புதிய கடன் வாங்கிப் பழைய

    கடன்களை அடைப்பதற்கான முயற்சிகளைச் செய்வீர்கள்.அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகுந்த கவனமுடன்

    பேசிப் பழகுதல் நல்லது. விபரீத எண்ணங்களை விட்டொழிப்பது நல்லது. மனைவிக்கு மருத்துவச் செலவுகள்

    உண்டாகும். எதிர் பார்த்த பணம் கைவந்நு சேரும்.எழுது பொருள் நோட்டு புத்தகம் பிரிண்டிங்

    சம்பந்தமான தொழில்களைச் செய்வோர்கள் லாபம் அடைவார்கள்.பெண்களால் ஆதாயம் இல்லை.

    பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காகப் பொருட் செலவு ஏற்படும்..தேவையற்ற வீண் செலவுகள் ஏற்பட

    வாய்ப்புள்ளது திருட்டுப் போன பொருட்கள் திரும்ப கிடைக்கும்.அடுத்தவர்களுக்காக உதவுவதில் மகிழ்ச்சி

    அடைவீர்கள்.

    அதிர்ஷ்டமான எண்:-5

    அதிர்ஷ்டமான நிறம்:-பச்சை

    அதிர்ஷ்டமான திசை:-வடக்கு

    சாந்தி:-மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.

  • 2,11,20,29ஆகிய எண்களைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் உள்ள

    அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு பொதுப் பணிகளில் ஈடு பட்டு நற் பெயர் எடுப்பீர்கள்.

    உடம்பில் தோல் மற்றும் முதுகு சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும்.தங்கம் வெள்ளி போன்ற நகை

    வியாபாரிகள்,சேர் மார்க்கெட் தொழிலில் ஈடு படுவோர்கள் ஆகியோர்கள் நற் பலன்களை

    அடைவார்கள். வீடுகளை திருத்திக் கட்டத் திட்டம் போடுவீர்கள்.பொதுநலத் தொண்டுகளில் ஈடுபட

    வாய்ப்புள்ளது.நீண்ட தூரப் பயணங்களைத் தள்ளிப் போடவும்..சூதாட்டத்தை தவிர்த்தல் நல்லது யாத்திரை

    வெற்றியளிக்கும்.வீட்டைத் திருத்திக் கட்டுவீர்கள்.உடம்பில் வயிறு வாயு சம்பந்தமான உபாதைகள் வந்து

    நீங்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. எதிர் பார்த்த கடன் கொடுத்த தொகை திரும்பக்

    கிடைக்கும்.தந்தை மகன் உறவு நன்றாக இருக்கும். பிள்ளை

    களால் மன நிம்மதி இல்லை

    அதிhஷ்;டமான எண்:-6

    அதிர்ஷ்டமான நிறம்:-வெள்ளை

    அதிர்ஷ்டமான திசை:-தென்கிழக்கு

    சாந்தி:-மஹாலெட்சுமி வழிபாடு செய்து வரவும்.

  • 3,12,21,30ஆகிய எண்களைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் உள்ள

    அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

    பூமி,நிலம் சம்பந்தமான காரியங்களில் எதிர் பார்த்த நல்ல முடிவுகள் கிடைக்கும். குல தெய்வ ஆலய

    ழுரச றநடிளவைந.றறற.பயெயெலழாi.உழஅ

    வழிபாடு செய்து வருவது நன்றாகும். உறவினர் வரவால் பொருட் செலவுகள் உண்டு. பிள்ளைகளுக்கு சுப

    காரியங்கள் நடக்கும். கணவன் மனைவி உறவுகளில் நல்ல மகிழ்ச்சி உண்டாகும். பங்கு தொழிலில் ஈடு

    படுவோர்கள் கவனமுடன் இருக்கவும். பிற மதத்தவர்களால் ஆதாயம் அடைவீர்கள்.ஒரு சிலருக்கு வீடு

    மற்றும் வாகன மாற்றங்கள் உண்டாகும்.பழைய கடன்கள் அடைபடும். கண்களில் மிகுந்த எச்சிரிக்கை

    தேவை.புதியகடன் வாங்குவீர்கள்.குடும்பத்தில் இது நாள்வரையில் இருந்து வந்துள்ள பிரச்சனை குறைந்து மன

    அமைதி நிலவும். வட திசையில் இருந்து நற் செய்திகள் கிடைக்கும். மாணவர்கள ;கல்வியில் நல்ல

    மதிப்பெண்களைப் பெற்று பரிசு மற்றும் பாராட்டுக்களைப் பெறுவார்கள்.

    அதிர்ஷ்டமான எண்:-8

    அதிர்ஷ்டமான நிறம்:-நீலம்

    அதிர்ஷ்டமான திசை:-தென்மேற்கு

    சாந்தி:-ஆஞ்சநேயர் வழிபாடு செய்து வரவும்.

  • 4,13,22,31ஆகிய எண்களைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் உள்ள

    அன்பர்களே இந்தவாரம் உங்களுக்கு புதிய நண்பர்களின் சேர்க்கையால் பொருட் செலவுகள் வந்து

    சேரும். நெடுநாட்களாக வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் வந்து சேரும்.சிலருக்கு வீடு

    மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.அரசியல் வாதிகளால் ஆதாயம் உண்டாகும்.நீர்வளம்,நிலவளத்

    துறை சார்ந்தவர்கள் நற்பலன் அடைவார்கள்.அரசு சம்பந்தமான அலுவலகப் பணிகளில் எதிர்பார்த்த

    நல்ல முடிவுகள் கிடைக்கும்.தேவையற்ற காரியத்தில தலையிட வேண்டாம். செய் தொழிலை மாற்றி அமைக்க

    திட்டம் போடுவீர்கள். .தாயின் உடல் நிலை பாதிப்படையும். புதிய வீடு மாற்றம்

    ஏற்படலாம்.தந்தை மகன் உறவில் பிரச்சனைகள் ஏற்படும். வங்கி மூலம் எதிர் பார்த்த கடன் கிடைக்கும்.

    பழைய பொருட்கள் மற்றும் இடங்களை விற்றுப் புதியன வாங்க முயற்சிப்பீர்கள்.எதிர் பார்த்த

    பணம் கிடைக்க சற்று கால தாமதம்ஆகும்.

    அதிர்ஷ்டமான எண்:-6

    அதிhஷ்;;டமான நிறம்:-வெள்ளை

    அதிர்ஷ்டமான திசை:-தென்கிழக்கு

    சாந்தி:-மஹாலெட்சுமி வழிபாடு செய்து வரவும்.

  • 5,14,23ஆகிய எண்களைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் உள்ள

    அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் மூலம் தனம் கிடைக்கும். புதிய செல்வந்தர்கள்

    தொடர்பால் தொழில் தொடங்க எண்ணுவீர்கள்.கலைத் துறையினர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருத்தல்

    நல்லதுகம்யூட்டர் மற்றும்மின்சாரத் துறை சார்ந்தவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள்

    ஏற்படும்.அரசியல் வாதிகளிடம் இருந்து எதிர் பார்த்து இருந்த ஆதாயங்கள் கிடைக்க இன்னும் சற்று

    கால தாமதம் ஆகலாம். பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள்,அரசியல் வாதிகள் நன்மை அடைவார்கள்.

    விவசாயம் செய்பவர்களுக்கு எதிர் பார்த்து இருந்த அரசு உதவித் தொகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ள

    காலமாகும். அரசு வழக்குகளில் நல்ல முடிவுகள் கிடைக்கும்.உற்றார் உறவினர்களால் பொருட் செலவுகள்

    உண்டாகும்.நண்பர்களால் ஆதாயம் இல்லை.கலைத் துறையினர்கள் பரிசுகளை பெறுவார்

    அதிர்ஷ்டமான எண்:-9

    அதிர்ஷ்டமான நிறம்:-சிகப்பு

    அதிர்ஷ்டமான திசை:-தெற்கு

    சாந்தி:-துர்க்கை வழிபாடு செய்து வரவும்.

  • 6,15,24ஆகிய எண்களைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் உள்ள

    அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு தண்ணீர் கூல்டிரிங்ஸ் மற்றும் திரவ சம்பந்த மான பொருட்களை

    விற்பனை செய்வோர்கள், நீர்வளத் துறை,நில வளத் துறையைச் சார்ந்தவர்கள், பூஜைப் பொருள்

    வியாபாரிகள் நற்பலன் அடைவார்கள்.பழைய தொழிலை மாற்றியமைக்கத் திட்டம்

    போடுவீர்கள்.சகோதர சகோதரிகளால் ஆதாயம் இல்லை.ஆலயப் பணி செய்வோர்கள் மற்றும்

    அறநிலைத்துறை சார்ந்தவர்கள் நன்மை அடைவார்கள்.வீட்டில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடக்கும். திடீர்

    அதிர்ஷ்டம் மூலம் தன வரவு உண்டாகும்.பிள்ளைகளால் லாபம் உண்டு..செய்தொழிலில் கவனம் தேவை.

    வீட்டில் கவனமுடன் இருத்தல் நல்லது. யாத்திரையில் மிகுந்த கவனமுடன் சென்று வருவது நல்லதாகும்.குடும்பச்

    சொத்துகள் சம்பந்தமாகப் புதிய பிரச்சனைகள் ஏற்படும்.துலை தூர யாத்திரைகள் வெற்றியை தராது.

    பிறருக்காக சாமீன் போடுவதை தவிர்க்கவும். காணாமற் போன பொருட்கள் காவல் துறையினர்களின்

    உதவியால் திரும்பக் கை வந்து சேரும் காலமாகும்.

    அதிர்ஷ்டமான எண்:-8

    அதிர்ஷ்டமான நிறம்:-நீலம்

    அதிர்ஷ்டமான திசை:-தென்மேற்கு

    சாந்தி:-ஐயப்பன் வழிபாடு செய்து வரவும்.

  • 7,16,25ஆகிய எண்களைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் உள்ள

    அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு மஹான்களின் எதிர் பாராத தரிசனங்களால் மன நிம்மதி அடைய

    வாய்ப்புகள் உள்ள காலமாகும். ஆதரவு அற்ற ஏழைகளுக்கு உதவி செய்ய எண்ணுவீர்கள். கலைப்

    பொருட்கள் மற்றும் ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள் நற்பலன்களை அடைவார்கள்.

    வங்கிகளால் ஆதாயம் உண்டாகும்.கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.காதல் சம்பந்தமாகிய

    விசயங்களில் எதிர் பார்த்து இருந்த நற் செய்திகள் வந்து சேரும். குழந்தைகளால் திடீர் மருத்துவச்

    செலவுகள் ஏற்பட இருப்பதால் கவனமுடன் இருப்பது நல்லது.மனைவி வழி சொந்த பந்தங்களால் சில ஆதாயம்

    அடைவீர்கள். கமிசன், தரகு தொழிற் செய்வோர்கள் மற்றும் வக்கீல்கள்,எழுத்தாளர்கள் லாபம்

    அடைவார்கள்.வங்கிகள் மூலம் எதிர்பார்த்த கடன் கிடைக்கும்.தேவையற்ற காரியங்களில் தலையிட்டுப்

    பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ளா

    அதிர்ஷ்;டமான எண்:-9

    அதிர்ஷ்டமான நிறம்:-சிகப்பு

    அதிர்ஷ்டமான திசை:-தெற்கு

    சாந்தி:-முருகன் வழிபாடு செய்து வரவும்.

  • 8,17,26 ஆகிய எண்களைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் உள்ள

    அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு தந்தைக்கு மருத்துவச் செலவுகள் உண்டாகும்.செல்வாக்கு,புகழ்

    கூடும.;பெரிய மனிதர்கள் சந்திப்பில் மனம் மகிழ்ச்சியை அடைவீர்கள். பிள்ளைகளால் ஆதாயம்

    உண்டு. யாத்திரையில் எச்சரிக்கையுடன் பயணங்கள் செய்யவும்.வேற்று மதத்தவரால் ஆதாயம்

    உண்டு.பங்காளிகளுடன் புதிய பிரச்சனைகள் உருவாகலாம். எதிரிகளின் தொல்லைகளில் இருந்து விடுதலை

    கிடைக்கும்.பேராசையை விலக்குதல் நல்லது. வெளிநாட்டு விசயங்களில் வெற்றி கிடைக்கும்.திடீர்

    அதிர்ஷ்டமாகிய ரேஸ் லாட்டரி போன்றவற்றின் மூலமாகப் பணம் கிடைக்கும் என எண்ணி ஏமாற்றம்

    அடைய வேண்டாம். உத்தியோக துறையினருக்கு பதவி உயர்வு ஏற்படும்.பிள்ளைகளுக்கு மருத்துவச் செலவுகள்

    உண்டாகும்.உடம்பில் நரம்பு மற்றும்.இரத்த சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும்.

    அதிர்ஷ்டமான எண்:-3

    அதிர்ஷ்டமான நிறம்:-மஞ்சள்

    அதிர்ஷ்டமான திசை:-வடகிழக்கு

    சாந்தி:-சிவ வழிபாடு செய்து வரவும்.

  • 9,18,27 ஆகிய எண்களைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் உள்ள

    அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு கமிசன் தொழில் செய்வோர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும். புதிய

    வீடு நிலம் வாங்குவீர்;கள். பணம் கொடுக்கல் வாங்கல் விசயங்களில் கவனம் தேவை. வங்கிகள் மூலம்

    எதிர் பார்த்த பணம் கிடைக்க கால தாமதமாகும்.கண்,பற்கள் சம்பந்தமான உபாதைகள் வந்து போகும்.

    சம்பந்தமில்லாத நபர்களால் பிரச்சனைகள் மற்றும் பொருள் இழப்பு உண்டாகும். தந்தைக்கு மருத்துவச்

    செலவுகள் உண்டாகும்.பிறருக்காக ஜாமீன் போடுவதை தவிர்க்கவும்.செய் தொழிலில் இட மாற்றம்

    ஏற்படலாம்.வெளி நாடு சென்று வருதல் போன்ற விசயங்களில் சாதகமான நற் செய்திகள் வந்து

    சேரும்.பிள்ளைகளின் மன மகிழ்ச்சிக்காக உல்லாச பயணங்களை மேற் கொள்ளுவீர்கள்.தந்தைக்கு சில

    கண்டங்கள் வந்து நீங்கும்.காதல் விசயங்களில் எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது.

    அதிர்ஷ்டமான எண்:-3,4

    அதிர்ஷ்டமான நிறம்:-மஞ்சள், கருப்பு

    அதிர்ஷ்டமான திசை:-வடகிழக்கு,வடமேற்கு

    சாந்தி:-சிவன் மற்றும் பிதுர் வழிபாடு செய்து வரவும்.

    தொடரும்!

http://www.kathiravan.com/?page_id=1302
Share with your friends










Submit