எண்ஜோதிடம் : 29-12-2014 முதல் 4-1-2015 வரை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கணித்து எழுதியவர் ஞானயோகி டாக்டர்.ப.இசக்கி,
தமிழ்நாடு,  இந்தியா

  • 1,10,19,28ஆகிய எண்களைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் உள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு யாத்திரையின் போது எச்சரிக்iகையுடன் பயணம் செய்வது நல்லது.நண்பர்களுக்குவீண் பொருட் செலவு செய்வதைத் தவிர்க்கவும். பள்ளிக்கூடங்கள்,அநாதைவிடுதிகள் நடத்துவோர்கள்,சமுதாய தலைவர்கள்,அற நிலையத் துறையை சார்ந்தவர்கள்,தங்கம் வெள்ளி போன்ற நகை வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன்களை அடைவார்கள். ரேஸ்,லாட்டரி போன்றவற்றின் மூலமாகத் திடீர் தன வரவு ஏற்படலாம்..நீண்ட காலமாக வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் ஒப்பந்தம் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.பங்காளிகளு டன் சேர்ந்து புதிய தொழில் மாற்றம் செய்யலாம். வேலையாட்களில் ஆதாயம் உண்டு. புதிய நிலம் மற்றும் வீடு வாங்கத் திட்டம் போடுவீர்கள். முன் கோபத்தை தவிர்த்தல் உகந்ததாகும். அதிர்ஷ்டமான எண்:-9 அதிர்ஷ்டமான நிறம்:-சிகப்பு அதிர்ஷ்டமான திசை:-தெற்கு சாந்தி:-துர்க்கை வழிபாடு செய்து சிகப்பு ஆடை தானம் செய்யவும்.

  • 2,11,20,29ஆகிய எண்களைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் உள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு குல தெய்வ வழிபாடுகளைச் செய்து வருவதன் மூலமாக மன சஞ்சலம் தீரும்.மாணவர்கள் கல்வியில் பரிசு மற்றும் பாராட்டுக்களை பெறுவதன் மூலம் நற் பெயரும் புகழும் உண்டாகும். விட்டுப் போன பழைய பிரச்சனைகள் மீண்டும் தலை தூக்கும்..இரும்பு இயந்திரம் இரசாயன சம்பந்தமான தொழிற் செய்வோர்கள்,பழைய பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவர். தொழிற் சாலைகளை விருத்திகள் செய்வீர்கள்.உடம்பில் சுரம்,மற்றும் உஷ்ண சம்பந்தமான உபாதைகள் வந்து தீரும். கண்களில் கவனம் தேவை. உறவினர்களால் ஆதாயங்கள் இல்லை.குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகளில் சில தடைகள் வந்து விலகும். சகோதரர்களால் ஆதாயம் உண்டு. பிள்ளைகளுக்கு உத்தியோகம் கிடைக்கும். அதிர்ஷ்டமான எண்:-3 அதிர்ஷ்டமான நிறம்:-மஞ்சள் அதிர்ஷ்டமான திசை:-வடகிழக்கு சாந்தி:-சிவ வழிபாடு செய்து மஞ்சள் ஆடை தானம் செய்யவும்.

  • 3,12,21,30ஆகிய எண்களைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் உள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு கணவன் மனைவி உறவுகள் சுமாராக இருக்கும். ஆலயத் திருப்பணிகளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் உள்ளது. சமுதாய நல்லிணக்கத்திற்கான பொதுத் தொண்டுகளில் ஈடு பட்டு உழைப்பதன் மூலம் நற் பெயரும் புகழும் அடைவீர்கள். இரும்பு இயந்திரம் இரசாயன சம்பந்தமான தொழிற் செய்வோர்கள்,இன்சினியரிங்துறை சார்ந்தவர்கள் நற்பலன் அடைவார்கள்.. வெளி வட்டாரப் பழக்க வழக்கங்கள் மூலம் சிலலாபம் கிடைக்கும். உத்தியோகத் துறையினர்கள் மிகஎச்சரிக்கையுடன் பணியாற்றுதல் நல்லது.ஒரு சிலருக்குப் பணி இட மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.அரசு சம்பந்தமான வழக்குகளில் எதிர் பார்த்த வெற்றிகள் கிடைக்கும். துலைதூர பயணங்களால் சில ஆதாயங்களை அடைவீர்கள்.பிள்ளைகளால் ஆதாயம் உண்டு.தீராத நோய்க்கு புதிய மருத்துவ சிகிச்சை மூலம் விடை காணுவீர்கள். அதிர்ஷ்டமான எண்:-6 அதிர்ஷ்டமான நிறம்:-வெள்ளை அதிர்ஷ்டமான திசை:-தென்கிழக்கு சாந்தி:-மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.

  • 4,13,22,31ஆகிய எண்களைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் உள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு வீட்டைத் திருத்திக் கட்டப் போட்ட திட்டங்கள் நிறை வேறும்.விபரீதமான எண்ணங்களை விலக்கவும்அண்டை அயல் வீட்டு காரர்களுடன் மிகவும் கவனமகப் பேசிப் பழகுதல் நல்லது. இளையதளங்கள் தொலைக் காட்சி,வானொலி நடத்துவோர்கள் லாபம் அடைவார்.தாய் வழிச் சொத்துக்கள் கிடைக்கும்.கலைத்துறையினர் மற்றும் அரசியல் வாதிகள் ஆதாயம் அடைவர். கண்களில் கவனம் தேவை.கூட்டுத் தொழில் முயற்சிகளால் மன நிம்மதி அடைவீர்கள்.கிழக்குத் திசையிலிருந்து நற் செய்திகள் கிடைக்கும். வெகு காலமாக எதிர் பார்த்து இருந்த வங்கிகளில் இருந்து பணம் கிடைக்கும். அரசு சம்பந்துமான வழக்கு விஷயங்களில் எதிர் பார்த்த வெற்றி கிடைக்கும். யாத்திரைகளை விலக்குதல் நல்லது.புதிய ஆடை அணிகலன்களை வாங்குவதன் மூலமாகப் பொருட் செலவகள் வந்து சேரும். அதிர்ஷ்டமான எண்:-3 அதிர்ஷ்டமான நிறம்:-மஞ்சள் அதிர்ஷ்டமான திசை:-வடகிழக்கு சாந்தி:-சிவ வழிபாடு செய்து மஞ்சள் வஸ்திரம் தானம் செய்யவும்.

  • 5,14,23ஆகிய எண்களைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் உள்ளஅன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு வராத பணம் பிள்ளைகளால் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது.சூதாட்டத்தை தவிர்க்கவும். பூசைப் பொருள் வியாபாரிகள், அநாதை ஆசிரமங்களை நடத்துபவர்கள்,பூ பழம் ஆகிய பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள்.யாத்திரையில் புதிய பெரிய மனிதர்களைச் சந்தித்து அவர்களால் சில ஆதாயங்களை அடைவீர்கள்.ஒரு சிலருக்கு வீடு மாற்றம் உண்டாகலாம். நண்பர்கள்; மற்றும் உறவினர்களின் சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் நிம்மதி அடைவீர்கள.; வங்கிகள் மூலம் எதிர் பார்த்த கடன் கிடைக்கும்.தாய் மாமன் வழி மூலம் சில ஆதாயங்களை அடைவீர்கள். உற்றார் மற்றும் உறவினர்களின் திடீர் வரவுகளால் பொருட் செலவுகளும் பிரச்சனை களும் வந்து போகும். அதிர்ஷ்டமான எண்:-7 அதிர்ஷ்டமான நிறம்:-கருஞ்சிகப்பு அதிர்ஷ்டமான திசை:-வடமேற்கு சாந்தி:-கணபதி வழிபாடு செய்து கருஞ் சிகப்பு வஸ்திர ஆடை தானம் செய்யவும்.

  • 6,15,24ஆகிய எண்களைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் உள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு தாயின் உடல் நிலை பாதிப்புகளால் குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் ஏற்படும். வெகு காலமாகத் திருமணம் ஆகாதவர் களுக்கு மணமாகின்ற காலமாகும். செய் தொழிலில் கவனம் தேவை.துலை தூரப் பயணங்களில் சுமாரன வெற்றி கிடைக்கும். பொது நலக் காரியங்களில் கவனமுடன் செயல் படுவது நல்லது. பொருளாதாரம் சுமாராக இருக்கும்.பங்காளிகளால் ஆதாயம் உண்டு. நண்பர்கள் மற்றும் உறவினர்களால் எதிர் பாராத ஆதாயம் அடைவதோடு மன நம்மதியும் அடைவீர்கள்.கலைத் துறையினர்கள் மற்றும் அழகு சாதான பொருள் வியாபாரிகள்,கலைத்துறை சம்பந்தமான பொருள் விற்பனை செய்வோர்கள்,கலை கல்லூரி மாணவர்கள் பேராசியர்கள் ஆகியோர்கள் லாபம் அடைவார்கள். உடல் நிலையில் நரம்பு மற்றும் எலும்பு சம்பந்தமான சில பாதிப்புகள் உண்டாகும். அதிர்ஷ்டமான எண்:-8 அதிர்ஷ்டமான நிறம்:-நீலம் அதிர்ஷ்டமான திசை:-தென்மேற்;கு சாந்தி:-சனீஸ்வர வழிபாடு செய்து கருப்பு ஆடை தானம் செய்யவும்.

  • 7,16,25ஆகிய எண்களைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் உள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு நீண்ட நாட்களாக வராத கடன் கொடுத்த பணம் திரும்பக் கை வந்து சேரும். சினிமா நாடகம் போன்ற துறை சார்ந்த கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.வெளி நாடு சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளில் வேற்று மதத் தவரால் ஆதாயம் உண்டு. பொருளாதாரம் நெருக்கடி ஏற்படலாம்.நண்பர் உதவியால் சிறிது பண உதவி கிடைக்கும்.உடம்பில் வாயு மற்றும் வயிறு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் தொடரும். பேராசிரியர்கள்,மருத்துவர்களுக்கு பணியில் இட மாற்றம் உண்டாகும். புதிய ஆடை,அணிகலன்கள் வாங்குவதைத் தள்ளிப் போடவும்.பழைய கட்டிடங்களைப் புதுப்பித்துக் கட்டுவீர்கள். குழந்தைகளின் மன நிம்மதிக்காக உல்லாசப் பயணங்கள் செல்லுவீர்கள்.காதல் விசயங்களில் பிரச்சனைகள் வரலாம்;. அதிர்ஷ்டமான எண்:-2 அதிர்ஷ்டமான நிறம்:-வெள்ளை.. அதிர்ஷ்டமான திசை:-மேற்கு சாந்தி:-அம்மன் வழிபாடு செய்து வெள்ளை ஆடைதானம் செய்யவும்.

  • 8,17,26ஆகிய எண்களைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் உள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு தங்களிடம் பணி ஆற்றும் அடிமை ஆட்களால் ஆதாயம் இல்லை. வீட்டிற்குத் தேவையான கட்டில் மெத்தை போன்ற ஆடம்பர அலங்காரப் பொருட்களை வாங்குவதைச் சற்று தள்ளிப் போடவும்.. கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முயற்சிப்பீர்;கள். கோவில் திருப்பணிகளில் பங்கு கொண்டு மன நிம்மதி அடைவீர்கள்.உறவினர் வரவால் பொருட் செலவுகள் உண்டாகும். கல்வித் துறையினர் நன் மதிப்பைப் பெறுவர்.மன தைரியத்துடன் எடுத்த காரியத்தைச் செய்து முடிப்பீர்கள்.தண்ணீர் போன்ற திரவ சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,உப்பு உர வியாபாரிகள், தாய் சேய் நல விடுதிகளை நடத்துவோர்கள் ஆகியோர் நற்பலன் அடைவார்கள். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் குறையும்.விவசாயம் சுமாராகக் காணப்படும்.விவசாயம் சுமாராக காணப்படும். அதிர்ஷ்டமான எண்:-5 அதிர்ஷ்டமான நிறம்:-பச்சை அதிர்ஷ்டமான திசை:-வடக்கு சாந்தி:-மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.

  • 9,18,27ஆகிய எண்களைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் உள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதிய கார் மற்றும் வாகனங்களை வாங்குவதைத் தள்ளிப் போடவும். துலை தூரப் பயணங்கள் மூலம் எதிர் பார்த்த காரியங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.தாயின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பெண்கள் சம்பந்தமான காதல் விசயங்களில் மிகுந்த கவனம் தேவை.புதிய நண்பர்கள் சேர்க்கையைத் தவிர்த்தல் நல்லது.உடம்பில் கண் மற்றும் காது சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். பெரிய மனிதர்கள் சந்திப்பால் மன மகிழ்ச்சி உண்டாகும்.தந்தை மகன் உறவில் சில பிரச்சனைகள் வந்து தீரும்.ஆடு, மாடு, கார்,லாரி போன்ற வாகனத் தொழில் செய்வோர்கள் லாபம் அடைவார்கள். ஆலயப்பணி மற்றும் மன நல விடுதி சார்ந்தவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.தேவையற்ற காரியங்களில் தலையிட்டு சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம். அதிர்ஷ்டமான எண்:-6 அதிர்ஷ்டமான நிறம்:-வெள்ளை அதிர்ஷ்டமான திசை:-தென்கிழக்கு சாந்தி:-மஹாலட்சுமி வழிபாடு செய்து வெள்ளை ஆடை தானம் செய்யவும். தொடரும்!

http://www.kathiravan.com/?page_id=1302