எண்ஜோதிடம் : 26-1-2015 முதல் 1-2-2015 வரை

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

கதிரவனுக்காக கணித்து எழுதியவர்.ஞானயோகி.டாக்டர்.ப.இசக்கி, தமிழ்நாடு, இந்தியா.

  • 1,10,19,28ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும், கூட்டு; எண்ணாகவும், பெயர் எண்ணா
    கவும்; பிறந்த அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு. மற்றவர்களுக்கு உதவுவதில் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். தேவையற்ற காரியங்களில் தவிர்த்தல் நல்லது தீர்த்த யாத்திரை சென்று வருவீர்கள்.புதிய பெரிய மனிதர்களின் எதிர் பாராத நட்புக்கள் ஏற்பட்டு அவர்களால் ஆதாயம் அடைவீர்கள்.அரசியல் வாதிகளால் எதிர் பார்த்த ஆதாயம் கிடைப்பதில் இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம். நெருப்பு,ராணுவம், போலீஸ் துறை சார்ந்தவர்கள், இணைய தளத்தவர்கள் நற்பலன் அடைவார்கள்.உடம்பில் நரம்பு,வாயு சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும். உறவினர் வரவால் பணம் சேரும்.ஒரு சிலருக்கு வீடு மாற்றங்கள் உண்டாகக் கூடிய காலமாகும். அண்டை அயலார்களுடன் கவனமாகப் பேசி; பழகுதல் சிறந்தது..கமிசன் தொழில் செய்வோர் எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது.விட்டுப் போன பழைய பிரச்சனைகள் மீண்டும் தொடர வாய்ப்புள்ளது.பொருளாதார நெருக்கடி வந்து விலகும்.

    அதிர்ஷ்டமான எண்:-2
    அதிர்ஷ்டமான நிறம்:-வெள்ளை
    அதிர்ஷ்டமான திசை:-மேற்கு
    சாந்தி:-அம்மன் வழிபாடு செய்து வரவும்.

  • 2,11,20,29ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும், கூட்டு; எண்ணாகவும், பெயர் எண்ணா
    கவும்; பிறந்த அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு ஆடம்பர அலங்காரப் பொருள்கள் வியாபாரிகள்,சினிமா,நாடகத் துறை சார்ந்தவர்கள் நற் பலன் அடைவார்கள்.கணவன் மனைவி உறவுகளுக்குள் நீண்ட காலமாக இருந்து வந்துள்ள கருத்து வேறு பாடுகள் தீர்ந்து ஒற்றுமையுடன் காணப்படுவீர்கள். பொது தொண்டு நிறுவனங்களை நடத்துவோர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.அனாதைச் சிறுவர்களுக்கு உதவுவதால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். தடைப் பட்ட கட்டிட வேலைகள் நடை பெறும்.எதிர் பார்த்த பணம் கைக்கு வந்து சேரும்.வீட்டுக்குத்தேவையான அலங்காரப் பொருட்களை வாங்குவதில் பொருட் செலவு உண்டாகும்.உடல் நிலையில் கண், காதுகளில் கவன
    முடன் இருக்கவும்.அடுத்தவர் விசயத்தில் அக்கறை எடுத்து அவமானப்பட நேரிடலாம்.
    எச்சரிக்கை தேவை.கைவிட்டுப் போன பொருள் சம்பந்தம் இல்லாத நபர்களால் வீடு வந்து சேரும்.

    அதிர்ஷ்டமான எண்:-5
    அதிர்ஷ்டமான நிறம்:-பச்சை
    அதிர்ஷ்டமான திசை:-வடக்கு
    சாந்தி:-மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்

  • 3,12,21,30ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும், கூட்டு; எண்ணாகவும், பெயர் எண்ணா
    கவும்; பிறந்த அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதிய நண்பர்களின் சேர்க்கையால் வீண் மன சஞ்சலமும் பிரச்சனைகளும் வந்து சேரக் கூடும். உடம்பில் வயிறு மற்றும் சுரம் சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும்.பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். வேலையாட்களால் மன நிம்மதி உண்டாகும். புதிய விளை நிலங்கள் மூலம் லாபம் கிடைக்க வாய்ப்புக்கள் உள்ளது.வட்டித் தொழில் தங்கம்,வெள்ளி போன்ற நகை வியாபாரிகள், நீர்;; வளத்துறை சார்ந்தவர்கள்,மருத்துவர்கள் லாபம் அடைவார்கள். தந்தையின் உடல் நிலையில் சில பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது.கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்..புதிய ஆடை அணிகலன்களை வாங்குவதைத் தவிர்க்கவும். புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள்.சொத்து சம்பந்தமான வழக்கு விசயங்களில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதுகுல தெய்வ வழிபாடு செய்து வருதல் நல்லது.

    அதிர்ஷ்டமான எண்:-8
    அதிர்ஷ்டமான நிறம்:-நீலம்.
    அதிர்ஷ்டமான திசை:-தென்மேற்கு
    சாந்தி:-சனீஸ்வர வழிபாடு செய்து வரவும்.

  • 4,13,22,31ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும், கூட்டு; எண்ணாகவும், பெயர் எண்ணா
    கவும்; பிறந்த அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு விபரீதமான எண்ணங்களை விட்டொழிப்பது நல்லது.திடீர் அதிர்ஷ்டம் மூலம் தனம் கிடைக்கும். உற்றார் உறவினர்
    களின் திடீPPPPPர் வரவுகளால் எதிர் பாராத பொருட் செலவுகள் உண்டாகும்.விளையாட்டுத் துறை சாரந்தவர்கள் பரிசுகள் மற்றும் பாராட்டுக்களைப் பெறுவார்கள். மனைவிக்கு எதிர் பாராத மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். திருட்டு போன பொருட்கள் திரும்பக் கிடைக்கும்.கலைத் துறையினர்கள் பரிசுகள் பெறுவார்கள்.மாணவர்கள் கல்வியில் மிகுந்த கவனமுடன் இருப்பது நல்லது. கட்டிட சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள் மற்றும் சினிமா,நாடகத்துறை சார்ந்தவர்கள்,கலைஞர்கள் நற்பலன்கள் அடைவார்கள் நண்பர்களால் ஆதாயம் இல்லை.மாணவர்கள் கல்வியில் நற் பெயர் எடுப்பார்கள். பிள்ளைகளுக்கு சுப காரியங்கள் நடக்கும்.எதிர் பார்த்த பணம் கைவந்நு சேரும்.

    அதிர்ஷ்டமான எண்:-8
    அதிர்ஷ்டமான நிறம்:-நீலம்
    அதிர்ஷ்டமான திசை:-தென்மேற்கு
    சாந்தி:-ஐயப்பன் வழிபாடு செய்து வரவும்..

  • 5,14,23ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு; எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும்; பிறந்த அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு உடம்பில் தலை மற்றும் முகம் சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும். பெண்கள் சம்பந்தமான காதல் போன்ற விசயங்களில்மிகுந்த கவனமுடன் இருப்பது நல்லது.கார்,லாரி போன்ற வாகனத் தொழிற்சாலை நடத்துவோர்கள் இவற்றில் பணி புரிவோர்கள் நல்ல லாபம் அடைவார்கள். நீண்ட காலமாக வராத கடன் கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்ப வீடு வந்து சேர வாய்ப்பு உள்ளது. நெருப்பு, மின்சாரங்களில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இட மாற்றம் உண்டாகும்.புதிய ஆடை,அணி கலன்கள் வாங்குவீர்கள்.புதிய நிலம் சம்பந்தமான பேச்சுக்களைத் தள்ளிப் போடவும். தாய் மகன் உறவில் சில பிரச்சனைகள் உருவாகலாம்.சுபகாரியச் செலவுகள் உண்டாகும்..பூர்வீகச் சொத்துகள் சம்பந்தமான நீண்ட நாள் பிரச்சனைகள் ஒரு நல்ல முடிவுக்கு வரும்.

    அதிர்ஷ்டமான எண்:-9
    அதிர்ஷ்டமான நிறம்:-சிகப்பு
    அதிர்ஷ்டமான திசை:-தெற்கு
    சாந்தி:-முருகன் வழிபாடு செய்து வரவும்.

  • 6,15,24.ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு; எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும்; பிறந்த அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு வெளிநாடு சென்று வருவதற்கான புதிய முயற்சிகளில் வேற்று மதத்தவரால் எதிர் பார்த்த ஆதாயங்களை அடைவீர்கள்.மனைவி வழி மூலம் தன வரவு உண்டாகும்.கோர்ட் வழக்கு விசயங்களில் எதிர் பார்த்த நல்ல முடிவுகள் கிடைக்கும்.மஹான்களின் எதிர் பாராத தரிசனங்களால் மன நிம்மதி உண்டாகும்.புதிய தொழில் ஆரம்பம் செய்வதைத் தள்ளிப் போடவும்.கண் மற்றும் காதுகளில் நோய் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகலாம்.விபரிதமான எண்ணங்களை விட்டொழித்து காரியத்தில் கண்ணாயிருங்கள். மருத்துவத் துறை சார்ந்த மருத்துவர்கள்,மருந்து வியாபாரிகள்,ஜவுளி,நூல் வியாபாரிகள் நற்பலன் அடைவர். பொருளாதார விசயங்களில் மனநிம்மதி உண்டாகும்.உத்தியோக துறையினர்கள் இலாபம் அடைவார்கள்.பிள்ளைகளால் சிறிது மன நிம்மதி உண்டு. சகோதரர் குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடக்கும்.

    அதிர்ஷ்டமான எண்:-5
    அதிர்ஷ்டமான நிறம்:-பச்சை
    அதிர்ஷ்டமான திசை:-வடக்கு
    சாந்தி:-மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.

  • 7,16,25ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு; எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும்; பிறந்த அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு யாத்திரையின் போது சம்பந்தம் இல்லாத நபர்களின் மூலமாக வீண் பிரச்சனைகள் வர இருப்பதால் எச்சரிக்கையுடன் பயணம் செய்யவும். தாய் வழி சொந்தங்களுடன் சில பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது.பிள்ளைகளால் மருத்துவச் செலவுகள் உண்டாகும்..புதிய வீடு சம்பந்தமான காரியங்களைச் சற்று தள்ளிப் போடுதல் நல்லது. வாய் மற்றும் பல் சம்மந்தமான உபாதைகள் வந்து போகும்.கூட்டுத் தொழில் ஆரம்பம் செய்ய பண உதவிகள் கிடைக்கும். அநாதைச் சிறுவர்கள்,பொது நலத் தொண்டு நிறுவனங்களுக்கு உதவி செய்வீர்கள்.பொதுக் காரியங்கள் சம்பந்தமாக போட்ட திட்டங்கள் நிறை வேறக் கூடிய வாய்ப்பு உள்ளது. கட்டிட சம்மந்தமான கல்,மணல்,மண், செங்கல் வியாபாரிகள் மற்றும் அற நிலையத் துறை சார்ந்தவர்கள் நற்பலன் அடைவார்கள்.

    அதிர்ஷ்;டமான எண்:-6
    அதிர்ஷ்டமான நிறம்:-வெள்ளை
    அதிர்ஷ்டமான திசை:-தென்கிழக்கு
    சாந்தி:-மஹாலெட்சுமி வழிபாடு செய்து வரவும்.

  • 8,17,26 ஆகிய எண்களைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் உள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு விவசாயிகளுக்கு எதிர்பார்த்தை விட நல்ல லாபம் தரும்.விபரீத எண்ணங்களால் காவல் துறை தண்டனைக்கு ஆளாக நேரிடும்.வீட்டைப் பழுது பார்த்து கட்டுவீர்கள்.வழக்கு விசயங்களில் எதிர் பார்த்த நல்ல முடிவு கிடைக்கும். தொலை தூரப் பயணங்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.உங்களுக்கு வீடு, நிலம் சம்பந்தமான அரசுக் கடன் மற்றும் உதவித் தொகைகள் கிடைக்கச் சற்று கால தாமதம் ஆகலாம். உடம்பில் நரம்பு மற்றும் இரத்த சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும். நண்பரின் சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மன நிம்மதி அடைவீர்கள்.தீர்த்த யாத்திரை சென்றுவர முயற்சிப்பீர்கள். வெகு காலமாகக் காணாமற் போன நகைகள் மற்றும் பணங்கள் காவல் துறையினர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும்.மூத்த சகோதர்களால் லாபம் உண்டு.

    அதிர்ஷ்டமான எண்:-6
    அதிர்ஷ்டமான நிறம்:-வெள்ளை
    அதிர்ஷ்டமான திசை:-தென்கிழக்;கு
    சாந்தி:-மஹாலெட்சுமி வழிபாடு செய்து வரவும்.

  • 9,18,27ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும்; பிறந்த அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு குல தெய்வ ஆலயத் திருப் பணிகளில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. பொதுநலத் தொண்டுகளைப் பிரியமுடன் செய்வீர்கள்.காய்கறி, பூ,பழம்,இலை,கீரை சம்பந்தமான தொழில் செய்வோர்கள் லாபம் அடைவார்கள். நண்பர்களால் உதவிகள் ஏதும் இல்லை. ரேஸ் லாட்டரி போன்ற விசயங்களுக்களின் மூலம் பணம் வந்து சேரும் எனக் கருதி ஏமாற்றம் அடைய வேண்டாம். தென் திசையில் இருந்து நல்ல செய்திகளைக் கேட்பீர்கள்.தந்தை மகன் உறவில் கவனமுடன் செயல் படவும்.நாட் பட்ட நோய்க்கு புதிய மருத்துவர்களின் உதவியால் தீர்வு கிடைக்கும்.வீண் மருத்துவச் செலவுகள் உண்டாகும்.தாயின் உடல் நிலையில் கவனம் தேவை. குழந்தைகளின் மன மகிழ்ச்சிகளுக்காக உல்லாசப் பயணங்கள் சென்று வருவதற்கான முயற்சிகளில் ஈடு படுவீர்கள்.புதிய நண்பர்களின் சேர்க்கையால் வீண் பிரச்சனைகள் வந்து சேர இருப்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும். குடும்பத்தில் சிற்சில சச்சரவுகள் வந்து நீங்கும். சுப காரிய நிகழ்ச்சிகளாக வெளியூர் பயணம் உண்டாகும்.

    அதிர்ஷ்டமான எண்:-3
    அதிர்ஷ்டமான நிறம்:-மஞ்சள்
    அதிர்ஷ்டமான திசை:-வடகிழக்கு
    சாந்தி:-சிவ வழிபாடு செய்து வரவும். தொடரும்!

http://www.kathiravan.com/?page_id=1302
Share with your friends










Submit