எண்ஜோதிடம் : 16-2-2015 முதல் 22-2-2015 வரை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கதிரவனுக்காகக் கணித்து எழுதியவர் ஞானயோகி டாக்டர்.ப.இசக்கி, தமிழ்நாடு, இந்தியா.

  • 1,10,19,28ஆகிய தேதிகளை பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் பிறந்துள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு கொடுக்கல் வாங்கலில் நாணயம் காப்பாற்ற இயலாது.எதிர் பார்த்த கடன்கள் கிடைக்கும். பணப் புழக்கம் நன்றாக இருக்கும்.காதல் போன்ற பெண்கள் விசயத்தில் எச்சரிக்கையுடன் இருக்கவும்.பங்குத் தொழிலில் நஷ்டத்தை அடைவீர்கள். பிள்ளைகளால் ஆதாயம் உண்டாகும்.குடும்பத்தில் வீண் சல சலப்புகள் வந்து நீங்கும்.பொருளாதாரம் நெருக்கடி உண்டாகும். பிள்ளைகளால் பொருட் செலவுகள் உண்டு. அரசுத் துறையின் மூலம் உதவிகள் கிடைக்கும்.நீண்ட தூர யாத்திரைகள் மூலம் நற் பலன் ஏற்படும். கூல்டிரிங்ஸ்,தண்ணீர் சம்பந்தமான பொருட்கள் வியாபாரம் செய்வோர்களும்,பூசை சாதனங்கள்,பொதுத் தொண்டு நிறுவனத்தோர்கள் மருத்துவர்கள்,மருத்துவமனை நடத்துவோர்களும் நல்ல லாபம் பெறக் கூடிய காலமாகும். அதிர்ஷ்டமான எண்:-8 அதிர்ஷ்டமான நிறம்:-நீலம் அதிர்ஷ்டமான திசை:-தென்மேற்கு சாந்தி-ஆஞ்சநேயர் வழிபாடு செய்து வரவும்.

  • 2,11,20,29ஆகியதேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் பிறந்துள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு அரசியல்வாதிகள் சற்று எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது.வராத நாட்பட்ட கடன் கொடுத்துள்ள பணம் திரும்பக் கிடைக்கும்.காதல் விசயங்களில் வெற்றி தேடித் தரக் கூடிய காலமாகும். தெற்கு திசையிலிருந்து பெண்களால் நன்மை அடைவீர்கள். பங்காளிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.உடம்பில் மேகம் மற்றும் உஷ்;ண சம்பந்தமான பீடைகள் வந்து நீங்கும். பூ பழம் இலை போன்ற வியாபாரிகள் ஆலயப் பணி செய்வோர்கள்;,வக்கீல்கள், நீதி பதிகள், பேராசிரியர்களுக்கு மற்றும் சேர் மார்க்கெட் மற்றும் பைனான்ஸ் தொழில் நடத்துவோர்களுக்கு நற் பலன் உண்டாகும்.பழையை கடன்களை அடைத்துப் புதிய கடன் வாங்குவீர்;கள்.பொருளாதாரம் சுமாராக காணப்படும்.செய் தொழிலில் எச்சரிக்கை யுடன் இருக்கவும். அதிர்ஷ்டமான எண்:-2 அதிர்ஷ்டமான நிறம்:-வெள்ளை அதிர்ஷ்டமான திசை:-மேற்கு சாந்தி:-அம்மன் வழிபாடு செய்து வரவும்.

  • 3,12,21,30ஆகியதேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் பிறந்துள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு திருமணம் ஆகாதவர்களுக்கு மணம் ஆகுகின்ற காலமாகும்.வண்டி மற்றும் வாகனங்களில் எச்சரிக்கையுடன் பயணம் செய்யவும். பொருளாதாரம் சீராக இருக்கும்.புதிய வீடு,நிலம் கார் போன்றவை வாங்குவீர்கள்.நண்பர்கள் மற்றும் பங்காளிகளால் ஆதாயம் உண்டாகும். புதிய தொழில் தொடங்குவதற்கான கூட்டு முயற்சிகளை சற்றுதள்ளி போடவும்.குடும்பத்தில் அமைதி ஏற்படும். உடம்பில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள் நரம்பு சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும்..இனிப்புப் பொருட்கள் வியாபாரம் நடத்துவோர்கள், கோயிலில் பணி புரிவோர்கள்,சினிமா,நாடகம் போன்ற கலைத்துறை சார்ந்தவர்கள்,அழகு சாதனப் பொருட்களை உற்பத்தி விற்பனை செய்வோர்கள்,கலைத்துறை பேராசிரியர்கள் ஆகியோர்களுக்கு நற்பலன் தரும் காலமாகும். அதிர்ஷ்டமான எண்:-5,7 அதிர்ஷ்டமான நிறம்:-பச்சை,கருஞ்சிகப்பு அதிர்ஷ்டமான திசை:-வடக்கு,வடமேற்கு சாந்தி:-கணபதி,மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.

  • 4,13,22,31ஆகியதேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் பிறந்துள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு;. சகோதரர்களால் அனுகூலம் ஏற்படும்.வங்கிகளில் இருந்து பிள்ளைகளுக்கு பொருட் செலவு உண்டாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். வாகன தொழில்கள்,ஆடம்பர அலங்காரப் பொருட்கள்,இனிப்புப் பொருள் வியாபாரிகள்,உணவு கூடங்கள் நடத்துபவர்கள்,உணவு சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி போன்ற தொழில் செய்வோர்கள், நாடகக் கலைஞர்கள்,விளையாட்டுத் துறை சார்ந்தவர் இவர்களுக்கு நற்பலன் உண்டாகும். நீண்ட காலமாக பூர்வீக சொத்துக்கள் விற்பதில் இருந்து வந்துள்ள பிரச்சனைகள் நீங்கி பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. யாத்திரைகளில் மிக கவனம் தேவை. விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் கல்வியல் தேர்ச்சி அடைவதுடன் பாராட்டுக்களையும் பெறுவார்கள். வெகுகாலமாக எதிர்பார்த்து இருந்த கடன் உதவித் தொகைகள் கிடைக்கலாம். அதிர்ஷ்டமான எண்:-6,8 அதிர்ஷ்டமான நிறம்:-வெள்ளை,நீலம் அதிர்ஷ்டமான திசை:-தென்கிழக்கு,தென்மேற்கு சாந்தி:-மஹாலட்சுமி,ஐயப்பன் வழிபாடு செய்து வரவும்.

  • 5,14,23ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் பிறந்துள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும்.உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு உத்தியோக உயர்வுகள் மற்றும் மேலதிகாரிகளின் ஆதரவுகள் வந்து சேரும். நாட்பட்ட தீராத நோய்களுக்குப் புதிய மருத்துவர்களின் உதவியால் தீர்;வு காண்பீர்கள்.கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும்.வெளி வட்டார பழக்க வழக்கங்களால் ஆதாயம் உண்டாகும். வேற்று மதத்தவரால் வெளி நாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் நல்ல தகவல்கள் வந்து சேரும்.விட்டுப்போன தந்தை மகன் உறவுகள் மீண்டும் பலப்படும் காலமாகும்.கட்டிட சம்பந்தமான கல், மணல், சிமிண்ட்,செங்கல் வியாபாரிகள் சினிமாத் துறையைச் சார்ந்தவர்கள் கார் போன்ற வாகனத் தொழில் செய்வோர்கள, காண்டிராக்ட் தொழில் செய்வோர்கள், இன்சினியரிங் துறை சார்ந்த அரசு ஊழியர்கள் ஆகியோர்கள்; லாபம் அடைவர். அதிர்ஷ்டமான எண்:-6 அதிர்;ஷ்டமான நிறம்:-வெள்ளை அதிர்ஷ்டமான திசை:-தென் கிழக்கு சாந்தி:-மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.

  • 6,15,24ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் பிறந்துள்ள அன்பர்களே இந்தவாரம் உங்களுக்கு குடும்பத்தில் வெகு காலமாகத் தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும்.தூரத்து யாத்திரை மேற்;; கொள்வீர்கள்.கணவன் மனைவி உறவுகள் நன்றாக இருக்கும். தன புழக்கம் நன்றாக இருக்கும்.வங்கிகளால் எதிர் பார்த்த பணம் கிடைக்கும். உத்தியோகத்தில் கவனம் தேவை.அரசியல் வாதிகளுக்கு நற்பெயர் புகழ் உண்டாகும்.குடும்பத்தில் சிற்சில பிரச்சனைகள் வந்து விலகும்.தாய் தந்தைகளுக்கு சிற்சில பிரச்சனைகள் வந்து விலகும்.உடம்பில் நரம்பு, மற்றும் உணவுக் குழல் சம்பந்தமான பீடைகள் உண்டாகும். முன் கோபம் தவிர்த்தல் நல்லதாகும். நெருப்பு சம்பந்தபட்ட தொழில்கள்,இராணுவத் தொழில்,போலீஸ் துறையைச் சார்ந்தவர்கள,கம்யுட்டர் தெழிற் செய்வோர்கள்; நற்பலன் அடைவார்கள். . அதிர்ஷ்டமான எண்:-3 அதிர்ஷ்டமான நிறம்:-மஞ்சள் அதிர்ஷ்டமான திசை:-வடகிழக்கு சாந்தி:-சிவ வழிபாடு செய்து வரவும்.

  • 7,16,25ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் பிறந்துள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு வீட்டைத் திருத்திக் கட்டுவதற்கு முயற்சி செய்வீர்;கள். இரும்பு, இயந்திர சம்பந்தமான தொழில்கள்,எண்ணை வியாபாரம் செய்வோர்கள்,பல சரக்குத்; தொழில்கள் வியாபாரம் செய்வோர்கள் பெட்ரோல்,டீசல் மற்றும் எண்ணை வியாபாரம் செய்வோர்கள் லாபம் அடைவார்கள். சுப காரிய நிகழ்ச்சிகள் குடும்பத்தில் ஏற்படும் .பொருளாதாரம் நன்றாக இருக்கும்.சகோதர்களால் ஆதாயம் உண்டாகும். கடன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எதிரிகளின் தொல்லைகள் தீரும். வாகனங்களில் யாத்திரை செல்லும் போது சிறிய கண்டங்கள் வந்து நீங்கும். குடும்பத்தில் பிரச்சனைகள் வந்து நீங்கும்.உடம்பில் வாயு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும்.திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் போன்ற சுப காரியம் நிறைவேறும். உடம்பில் வயிறு மூலம் சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும அதிர்ஷ்டமான எண்:-5 அதிர்ஷ்டமான நிறம்:-பச்சை அதிர்ஷ்டமான திசை:-வடக்கு சாந்தி:-மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.

  • 8,17,26ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் பிறந்துள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு உடம்பில் மூளை,நரம்பு,முதுகு சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும். எழுத்துப் பணி செய்வோர்கள், பத்திரிக்கை யாளர்கள்,அச்சுத் தொழிற் செய்வோர்கள்,தபால் தந்தித் துறை சாரந்தவர்கள்,வங்கிப் பணியாளார்கள்,காய்கறி வியாபாரிகள்லாபம் அடைவார்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடம்பில் சளி சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும்.நீண்டகாலமாக உள்ள பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் தீர்ந்து சுமூகமான சூழல் உருவாகும். புதிய முயற்சி களை தள்ளிப் போடுதல் நல்லது. வங்கிகள் மூலம் எதிர்பார்த்து இருந்த கடன் தொகைகள் கிடைக்கும். உத்தியோகம் இல்லாத படித்த இளைஞர்களுக்குப் புதிய உத்தியோகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.குல தெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வருவதன் மூலம் மன மகிழ்ச்சி அடைவீர்கள். வெளி நாட்டில் இருப்பவர்கள் தாய் நாடு சென்று திரும்பி வர வாய்ப்பு உள்ளது. அதிர்ஷ்டமான எண்:-9 அதிர்ஷ்டமான நிறம்:-சிகப்பு அதிர்ஷ்டமான திசை:-தெற்கு சாந்தி:-முருகன் வழிபாடு செய்து வரவும்.

  • 9,18,27ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் பிறந்துள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு கலை துறையினர்களும்,அரசியல் வாதிகளும் லாபம் அடைவார்கள். புதிய நண்பர்களின் சேர்க்கையால் வீண் பிரச்சனைகள் வர இருப்பதால் மிகுந்த கவனமுடன் நடந்து கொள்வது நல்லதாகும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்பட்டலும் அவர்களால் ஆதாயம் உண்டாகும்.நீண்ட தூரப் பயணங்களைத் தள்ளிப் போடுவதால் விபத்துக்களை தடுக்கலாம்.வர வேண்டிய பணம் கை வந்து சேரும் காலமாகும். .உடம்பில் மேகம் சம்பந்தமான பிணிகள்,உஷ்ண சம்பந்தமான பீடைகள் வந்து விலகும்.இரசாயனத் தொழில், வட்டித் தொழில்,கண்ஸ்டிரக் ஸன்ஸ், காண்டிராக்ட்கமிசன் தொழில் செய்வோர்கள்,மீன்கள், முட்டை, மாமிசம் போன்ற உணவுப் பொருட்கள்,பழயை பேப்பர்கள்,பிளாஷ்டிக் போன்ற பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் ஆகியோர்கள் லாபம் அடைவார்கள். அதிர்ஷ்டமான எண்:-6 அதிர்ஷ்டமான நிறம்:-வெள்ளை அதிர்ஷ்டமான திசை:-தென்கிழக்கு சாந்தி-மஹாலெட்சுமி வழிபாடு செய்து வரவும். (தொடரும்!)

http://www.kathiravan.com/?page_id=1302