எண்ஜோதிடம் 14-9-2015 முதல் 20-9-2015 வரை

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

கதிரவனுக்காகக் கணித்து எழுதியவர் ஞானயோகி டாக்டர்.ப.இசக்கி,IBAM, RMP,DISM,தமிழ்நாடு, இந்தியா

  • 1,10,19,28ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும், கூட்டு; எண்ணாகவும், பெயர் எண்ணாக
    வும்;பிறந்த அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு வாய் மற்றும் பல் சம்மந்தமான உபாதைகள் வந்து போகும்.கூட்டுத் தொழில் ஆரம்பம் செய்ய பண உதவிகள் கிடைக்கும்.தாய் வழிச் சொந்தங்களுடன் சில பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது.வீட்டுக்குத் தேவையான அலங்காரப் பொருட்களை வாங்குவதில் பொருட் செலவு உண்டாகும். பொது தொண்டு நிறுவனங்களை நடத்துவோர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.கை விட்டுப் போன பொருள் சம்பந்தம் இல்லாத நபர்களால் வீடு வந்து சேரும்.தடைப் பட்ட கட்டிட வேலைகள் நடைபெறும்.எதிர் பார்த்த பணம் கைக்கு வந்து சேரும்.பொதுக் காரியங்கள் சம்பந்தமாக போட்ட திட்டங்கள் நிறை வேறக்கூடிய வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி உறவுகளுக்குள் நீண்ட காலமாக இருந்து வந்துள்ள கருத்து வேறு பாடுகள் தீர்ந்து ஒற்றுமையுடன் காணப்படுவீர்கள்.

    அதிர்ஷ்டமான எண்:-8
    அதிர்ஷ்டமான நிறம்:-நீலம்.
    அதிர்ஷ்டமான திசை:-தென்மேற்கு
    சாந்தி:-சனீஸ்வர வழிபாடு செய்து வரவும்.

  • 2,11,20,29ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும், கூட்டு; எண்ணாகவும், பெயர் எண்ணாக
    வும்; பிறந்த அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு யாத்திரையின் போது சம்பந்தம் இல்லாத நபர்களின் மூலமாக வீண் பிரச்சனைகள் வர இருப்பதால் எச்சரிக்கையுடன் பயணம் செய்யவும். பிள்ளைகளால் மருத்துவச் செலவுகள் உண்டாகும்;.உடல் நிலையில் கண்,காதுகளில் கவனமுடன் இருக்கவும்.அடுத்தவர்விசயத்தில் அக்கறை எடுத்து அவமான பட நேரிடலாம்.காதல் விசயங்களில் எச்சரிக்கை தேவை.அனாதை சிறுவர்களுக்கு உதவுவதால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். ஆடம்பர அலங்கார பொருள்கள் வியாபாரிகள்,
    சினிமா,நாடகத்துறை சார்ந்தவர்கள், கட்டிட சம்மந்தமான கல், மணல்,மண்,செங்கல் வியாபாரிகள் மற்றும் அற நிலையத் துறை சார்ந்தவர்கள் நற் பலனகள் அடைவார்கள்.
    அநாதைச் சிறுவர்கள்,பொது நலத் தொண்டு நிறுவனங்களுக்கு உதவி செய்வீர்கள். புதிய வீடு சம்பந்தமான காரியங்களைச் சற்று தள்ளிப் போடுதல் நல்லது.

    அதிர்ஷ்டமான எண்:-9
    அதிர்ஷ்டமான நிறம்:-சிகப்பு
    அதிர்ஷ்டமான திசை:-தெற்கு
    சாந்தி:-முருகன் வழிபாடு செய்து வரவும்.

  • 3,12,21,30ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும், கூட்டு; எண்ணாகவும், பெயர் எண்ணாக
    வும்; பிறந்த அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள்.பூர்வீகச் சொத்துகள் சம்பந்தமான நீண்ட நாள் பிரச்சனைகள் ஒரு நல்ல முடிவுக்கு வரும். வட்டித் தொழில் தங்கம்,வெள்ளி போன்ற நகை வியாபாரிகள், நீர்;;; வளத்துறை சார்ந்தவர்கள்,மருத்துவர்கள் லாபம் அடைவார்கள்.உடம்பில் வயிறு மற்றும் சுரம் சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும். புதிய ஆடை அணிகலன்கள் வாங்குவதைத் தவிர்க்கவும்.புதிய விளை நிலங்கள் மூலம் லாபம் கிடைக்க வாய்ப்புக்கள் உள்ளது. நீண்ட காலமாக வராத கடன் கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்ப வீடு வந்து சேர வாய்ப்பு உள்ளது. உடம்பில் தலை மற்றும் முகம் சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும்.நெருப்பு,மின்சாரங்களில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இட மாற்றம் உண்டாகும்.புதிய ஆடை, அணி கலன்கள் வாங்குவீர்;கள். புதிய நிலம் சம்பந்தமான பேச்சுக்களைத் தள்ளிப் போடவும்.

    அதிர்ஷ்டமான எண்:-6
    அதிர்ஷ்டமான நிறம்:-வெள்ளை
    அதிர்ஷ்டமான திசை:-தென்கிழக்;கு
    சாந்தி:-மஹாலெட்சுமி வழிபாடு செய்து வரவும்.

  • 4,13,22,31ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும், கூட்டு; எண்ணாகவும், பெயர் எண்ணாக
    வும்; பிறந்த அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு தேவையற்ற காரியங்களில் தவிர்த்தல் நல்லது.உறவினர் வரவால் பணம் சேரும். வெகு காலமாகக் காணாமற் போன நகைகள் மற்றும் பணங்கள் காவல் துறையினர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும். அண்டை அயலார்களுடன் கவனமாகப் பேசி; பழகுதல் சிறந்தது.நெருப்பு,ராணுவம்,போலீஸ் துறையை சார்ந்தவர்கள், இணைய தளத்தவர்கள் நற்பலன் அடைவார்கள் உடம்பில் நரம்பு,வாயு சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும்.தீர்த்த யாத்திரை சென்று வருவீர்கள். நண்பரின் சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மன நிம்மதி அடைவீர்கள்.வழக்கு விசயங்களில் எதிர் பார்த்த நல்ல முடிவு கிடைக்கும்.ஒரு சிலருக்கு வீடு மாற்றங்கள் உண்டாக கூடிய காலமாகும். மூத்த சகோதர்களால் லாபம் உண்டு.விவசாயிகளுக்கு எதிர்பார்த்தை விட நல்ல லாபம் தரும்.உடம்பில் நரம்பு மற்றும் இரத்த சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும்..

    அதிர்ஷ்டமான எண்:-8
    அதிர்ஷ்டமான நிறம்:-நீலம்
    அதிர்ஷ்டமான திசை:-தென்மேற்கு
    சாந்தி:-ஐயப்பன் வழிபாடு செய்து வரவும்..

  • 5,14,23ஆகிய எண்களைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் உள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு உடல் நிலையில் இருந்து வந்து தொல்லை தீரும்.பெண்களால் ஆதாயம் இல்லை.தந்தை மகன் உறவில் பிரச்சனைகள் ஏற்படும்.வங்கிகளின் மூலம் எதிர்பார்த்த கடன் கிடைக்கும்.கண்,பல் சம்பந்தமான உபாதைகள் வந்து போகும்.எதிர் பார்த்த கடன் கொடுத்த தொகை திரும்பக் கிடைக்கும். பொதுத் தொண்டு நிறுவனத்தினர்கள்,ஆலயப் பணி செய்வோர்கள்,கட்டிடப் பணியாளர்கள்,
    சிறு தின் பண்ட வியாபாரிகள் லாபம் அடைவார்கள். அடுத்தவர்களுக்காக உதவுவதில் மன மகிழ்ச்சி அடைவீர்கள். உடம்பில் வயிறு சம்பந்தமான சிறிய உபாதைகள் வந்து நீங்கும்.தந்தை மகன் உறவு நன்றாக இருக்கும். குடும்பச் சொத்துகள் சம்பந்தமாகப் புதிய பிரச்சனைகள் ஏற்படும்.பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக பொருட் செலவு உண்டாகும்.
    உறவினர்களால் ஆதாயம் உண்டு.

    அதிர்ஷ்டமான எண்:-8
    அதிர்ஷ்டமான நிறம்:-நீலம்
    அதிர்ஷ்டமான திசை:-தென்மேற்கு
    சாந்தி:-ஆஞ்சநேயர் வழிபாடு செய்து வரவும்.

  • 6,15,24ஆகிய எண்களைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் உள்ள அன்பர்களே இந்தவாரம் உங்களுக்கு கலைத் துறையினர்கள் பரிசுகள் பெறுவார்கள். திடீர் அதிர்ஷ்டம் ஆகிய ரேஸ்,லாட்டரி மூலம் தனம் கிடைக்கும்.திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். தங்கம் வெள்ள்p போன்ற நகை வியாபாரிகள்,ஆடம்பர அலங்கார பொருட்களின் வியாபாரிகள்,சினிமா மற்றும் நாடகத்துறை சார்ந்தவர்கள்,கமிசன் தொழிற் செய்வோர்கள் ஆகியோர்கள் நற் பலன் அடைவார்கள். ஆதரவுஅற்ற ஏழைகளுக்கு உதவி செய்ய எண்ணுவீர்கள். சிலருக்கு வீடு மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.செய் தொழிலை மாற்றி அமைக்க திட்டம் போடுவீர்கள்.வங்கிகள் மூலம் எதிர் பார்த்த கடன் கிடைக்கும்.விபரீத எண்ணங்களை விட்டொழிப்பது நல்லது.வெளி நாட்டு விசயங்களில் வெற்றி கிடைக்கும். அரசியல் வாதிகளால் ஆதாயம் உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் இல்லை.

    அதிர்ஷ்டமான எண்:-6
    அதிhஷ்;;டமான நிறம்:-வெள்ளை
    அதிர்ஷ்டமான திசை:-தென்கிழக்கு
    சாந்தி:-மஹாலெட்சுமி வழிபாடு செய்து வரவும்.

  • 7,16,25ஆகிய எண்களைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும், பெயர் எண்ணாகவும்
    உள்ள அன்பர்களே இந்தவாரம் உங்களுக்கு பிள்ளைகளால் ஆதாயம் உண்டு.கமிசன்,தரகு தொழிற் செய்வோர்கள் மற்றும் வக்கீல்கள்,எழுத்தாளர்கள் லாபம் அடைவார்கள்.மனைவி வழிச் சொந்த பந்தங்களால் சில ஆதாயம் அடைவீர்கள்.வராத கடன் கொடுத்த பணம் திரும்பக் கைவந்து சேரக் கூடிய காலமாகும்.பேராசையை விலக்குதல் நல்லது.உடம்பில் நரம்பு மற்றும். இரத்த சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும்.புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தந்தைக்கு மருத்துவச் செலவுகள் உண்டாகும். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் சற்று குறைந்து சிறிது முன்னேற்றம் காண்பீர்கள். மாணவர்கள் கல்வியில் பரிசு மற்றும் பாராட்டுதல்களைப் பெறுவார்கள்.வெகு காலமாகக் காணாமற் போன பொருட்கள் சம்பந்தமான தகவல்கள் கிடைக்கும்.பங்காளிகளுடன் புதிய பிரச்சனைகள் உருவாகலாம்.

    அதிர்ஷ்;டமான எண்:-6
    அதிர்ஷ்டமான நிறம்:-வெள்ளை
    அதிர்ஷ்டமான திசை:-தென்கிழக்கு
    சாந்தி:-மஹாலெட்சுமி வழிபாடு செய்து வரவும்.

  • 8,17,26ஆகிய எண்களைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் உள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு உறவினர் வரவால் பொருட் செலவுகள் உண்டு.அரசு சம்பந்தமான அலுவலகப் பணிகளில் எதிர் பார்த்த நல்ல முடிவுகள் கிடைக்கும். தந்தைக்கு மருத்துவ செலவுகள் உண்டாகும்.வீண் பெருமைகளுக்காக மற்றவர்களின் காரியங்களில் தலையிட வேண்டாம். யாத்திரை வெற்றி தராது.சம்பந்தமில்லாத நபர்களால் பிரச்சனைகள் மற்றும் பொருள் இழப்புகள் உண்டாகும்.
    வீட்டில் கவனமுடன் இருத்தல் நல்லது. பழைய தொழிலை மாற்றி அமைக்க திட்டம் போடுவீர்கள்.கணவன் மனைவி உறவில் நல்ல மகிழ்ச்சி உண்டாகும். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.புதிய நண்பர்கள் சேர்க்கையை தவிர்க்கவும்.தேவையற்ற வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. செய் தொழில் இடமாற்றம் ஏற்படலாம். வீடுகளை திருத்திக் கட்டத் திட்டம் போடுவீர்;கள்.

    அதிர்ஷ்;டமான எண்:-9
    அதிர்ஷ்டமான நிறம்:-சிகப்பு
    அதிர்ஷ்டமான திசை:-தெற்கு
    சாந்தி:-முருகன் வழிபாடு செய்து வரவும்.

  • 9,18,27ஆகிய எண்களைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் உள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதிய தொழில் முயற்சிகளில் சிலமுன்னேற்றம் காணப்படும். பூர்வீகச் சொத்துக்களில் வெகு காலமாக இருந்து வந்துள்ள பிரச்சனைகளில் பெரியவர்களின் உதவியால் நல்ல முடிவுக்கு வரும். தந்தைக்கு சில கண்டங்கள் வந்து நீங்கும்.செய்தொழிலில் கவனம் தேவை.காதல் விசயங்
    களில் எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது.சகோதரிகளால் ஆதாயம் இல்லை. தரகு, ஏஜன்சி, கமிசன் தொழில் செய்வோர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும்.பிற மதத்தவர்களால் ஆதாயம் அடைவீர்கள்.புதிய செல்வந்தர்கள் தொடர்பால் தொழில் தொடங்க எண்ணுவீர்கள்.தங்கம் வெள்ளி போன்ற நகைகள் செய்வோர்கள்,அற நிலையத் துறை சார்ந்தவர்கள்வெளி நாட்டு வர்தததகம் செய்வோர்கள் ஆகியோர்கள் நன்மை அடைவார்கள்.

    அதிர்ஷ்டமான எண்:-8
    அதிர்ஷ்டமான நிறம்:-நீலம்
    அதிர்ஷ்டமான திசை:-தென்மேற்கு
    சாந்தி:-ஐயப்பன் வழிபாடு செய்து வரவும்.

    தொடரும்!

http://www.kathiravan.com/?page_id=1302
Share with your friends










Submit