எண்ஜோதிடம் 14-12-2015 முதல் 20-12-2015 வரை

பிறப்பு : - இறப்பு :

Astrology

கதிரவனுக்காகக் கணித்து எழுதியவர் ஞானயோகி டாக்டர். ப. இசக்கி,IBAM, RMP,DISM, தமிழ்நாடு, இந்தியா

  • 1,10,19,28ஆகிய எண்களைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் உள்ள

    அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு வீடு மற்றும் வாகன மாற்றங்கள் உண்டாகும்.வட திசையில் இருந்து

    நற் செய்திகள் கிடைக்கும்.பெண்களால் ஆதாயம் இல்லை. அரசியல் வாதிகளால் ஆதாயம் உண்டாகும்.அரசு

    சம்பந்தமான அலுவலகப் பணிகளில் எதிர் பார்த்த நல்ல முடிவுகள் கிடைக்கும்.வங்கிகள் மூலம்

    எதிர்பார்த்த கடன் கிடைக்கும்.புதிய தொழில் முயற்சிகளில் சில முன்னேற்றம் காணப்படும்.

    வெளிநாட்டு விசயங்களில் வெற்றி கிடைக்கும்.வீண் பெருமைகளுக்காக மற்றவர்களின் காரியங்களில்

    தலையிட வேண்டாம். யாத்திரையில் புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால்

    ஆதாயம் அடைவீர்கள். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிக கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லதாகும்.

    ஆதரவு அற்ற ஏழைகளுக்கு உதவி செய்ய எண்ணுவீர்கள்.தந்தைக்கு மருத்துவ செலவுகள்

    உண்டாகும்.பிள்ளைகளால் ஆதாயம் உண்டு.

    ஆதிர்ஷ்;டமான எண்:-6

    அதிர்ஷ்டமான நிறம்:-வெள்ளை

    அதிர்ஷ்டமான திசை:-தென்கிழக்கு

    சாந்தி:-மஹாலெட்சுமி வழிபாடு செய்து வரவும்.

  • 2,11,20,29ஆகிய எண்களைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் உள்ள

    அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதியசெல்வந்தர்கள் தொடர்பால் தொழில் தொடங்க

    எண்ணுவீர்கள்.கலைத் துறையினர்எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது. வீடு,நகைகளின் மூலமாக வங்கிகளில்

    இருந்து புதிய கடன் வாங்க முயற்சிப்பீர்;கள். சமுதாய முன்னேற்றத்திற்கான பொதுப் பணிகளில்

    ஈடு பட்டு நற் பெயர் எடுப்பீர்கள்.

    சூதாட்டம் சம்பந்தமான விசயங்களுக்காக பணம் மற்றும் பொருட்கள் ஏமாற்றம் அடையா

    மல் இருப்பது நல்லது. யாத்திரையின் போது வண்டி வாகனங்களில் கவனமுடன் பயணம் செய்யவும்.

    பூர்வீகச் சொத்:துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.புதிய நண்பர்கள் சேர்க்கையைத்

    தவிர்க்கவும். தேவையற்ற வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக

    பொருட் செலவு உண்டாகும்.பிற மதத்தவர்களால் ஆதாயம் அடைவீர்;கள்.

    அதிர்ஷ்;டமான எண்:-9

    அதிர்ஷ்டமான நிறம்:-சிகப்பு

    அதிர்ஷ்டமான திசை:-தெற்கு

    சாந்தி:-முருகன் வழிபாடு செய்து வரவும்.

  • 3,12,21,30ஆகிய எண்களைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் உள்ள

    அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சிலருக்கு வீடு மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.சகோதரிகளால்

    ஆதாயம் இல்லை. கமிசன் தொழில் செய்வோர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும். பூர்வீகச்

    சொத்துக்களில் வெகு காலமாக இருந்து வந்துள்ள பிரச்சனைகளில் பெரியவர்களின் உதவியால் நல்ல

    முடிவுக்கு வரும். புதிய வீடு நிலம் வாங்குவீர்கள். பிள்ளைகளால் லாபம் உண்டு. செல்வ செல்வாக்கு

    ழுரச றநடிளவைந.றறற.பயெயெலழாi.உழஅ

    புகழ் கூடும் காலமாகும். வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். திடீர் அதிர்ஷ்டம் மூலம் தனவரவு

    உண்டாகும்.தந்தைக்கு சில கண்டங்கள் வந்து நீங்கும்.செய் தொழிலில் கவனம் தேவை.காதல் விசயங்களில்

    எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது.தங்கம் வெள்ளி போன்ற நகைகள் செய்வோர்கள்,அறநிலைத்துறை

    சார்ந்தவர்கள் வெளி நாட்டு வர்த்தகம் செய்வோர்கள் ஆகியோர்கள் நன்மை அடைவார்கள்..

    அதிர்ஷ்டமான எண்:-9

    அதிர்ஷ்டமான நிறம்:-சிகப்பு

    அதிர்ஷ்டமான திசை:-தெற்கு

    சாந்தி:-துர்க்கை வழிபாடு செய்து வரவும்.

  • 4,13,22,31ஆகிய எண்களைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் உள்ள

    அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு தந்தை மகன் உறவில் பிரச்சனைகள் ஏற்படும். காதல் விசயங்களில்

    கவனம் தேவை. தீராத நோய்களுக்குப் புதிய மருத்துவர்களை நாடுவீர்கள். வெகு காலமாக வங்கிகள் மூலம்

    எதிர் பார்த்த பணம் கிடைக்க இன்னும் காலதாமதம் ஆகும்.குடும்பச் சொத்துகள் சம்பந்தமாகப் புதிய

    பிரச்சனைகள் ஏற்படும். உறவினர் வரவால் பொருட் செலவுகள் உண்டு. அடுத்தவர்களுக்

    காக உதவுவதில் மன மகிழ்ச்சி அடைவீர்கள் பொதுத் தொண்டு நிறுவனத்தினர்கள்,

    ஆலயப் பணி செய்வோர்கள்,கட்டிடப் பணியாளர்கள்,சிறு தின் பண்ட வியாபாரிகள் லாபம்

    அடைவார்கள்.வீடுகளைத் திருத்திக் கட்டத் திட்டம் போடுவீர்கள். எரி பொருட்கள், மின்சாரம்,ராணுவம்

    போன்ற துறையைச் சார்ந்தவர்களும்,வழக்கறிஞர்களும்,கம்யுட்டர் வியாபாரிகளும் ஆதாயம்

    அதிர்ஷ்டமான எண்:-5

    அதிர்ஷ்டமான நிறம்:-பச்சை

    அதிர்ஷ்டமான திசை:-வடக்கு

    சாந்தி:-மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.

  • 5,14,23 ஆகிய எண்களைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் உள்ள

    அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு. பேராசையை விலக்குதல் நல்லது. யாத்திரையில் எச்சரிக்கையுடன்

    பயணம் செய்யவும்.பங்காளிகளுடன் புதிய பிரச்சனைகள் உருவாகலாம்.கமிசன்,தரகு தொழிற்

    செய்வோர்கள் மற்றும் வக்கீல்கள்,எழுத்தாளர்கள் லாபம் அடைவார்கள்..இரும்பு,செங்கல்

    சிமிண்ட்,மணல் போன்ற கட்டிட சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள் மற்றும் சினிமா,

    நாடகத் துறை சார்ந்தவர்கள்,இசைத்துறை சார்ந்த கலைஞர்கள் நற்பலன் அடைவார்கள். உடல் நிலையில்

    இருந்து வந்து தொல்லைகள் தீரும்.உடம்பில் வயிறு சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும்.எதிர்

    பார்த்த கடன் கொடுத்த தொகை திரும்பக் கிடைக்கும்.யாத்திரைகள் வெற்றியளிக்கும்.

    வீட்டை திருத்தி; கட்டுவீர்கள்.குடும்பத்தில் அமைதி நிலவும்.கணவன் மனைவி உறவில் நல்ல மகிழ்ச்சி

    உண்டாகும்.உறவினர்களால் ஆதாயம் உண்டு.

    அதிர்ஷ்டமான எண்:-8

    அதிர்ஷ்டமான நிறம்:-நீலம்

    அதிர்ஷ்டமான திசை:-தென்மேற்கு

    சாந்தி:-ஆஞ்சநேயர் வழிபாடு செய்து வரவும்.

  • 6,15,24 ஆகிய எண்களைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் உள்ள

    அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு பொது நலத்தொண்டுகளில் ஈடுபட வாய்ப்புள்ளது. செய் தொழில்

    விசயமாக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்ளுவீர்

    கள்.தாயின் உடல் நிலை பாதிப்புகள் அடையும். பிள்ளைகளால் மன நிம்மதி இல்லை.உடம்பில் தோல்

    மற்றும் முதுகு சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும்.தந்தைக்கு மருத்துவ செலவுகள்

    உண்டாகும்.மற்றவர்களிடம் இருந்து எதிர் பார்த்த பணம் கை வந்நு சேரும். எதிரிகளின்

    தொல்லைகளிலிருந்து விடுதலை கிடைக்கும்.

    கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.தாயின் உடல் நிலையில் இருந்து வந்த பாதிப்புகள் குறைந்து

    சற்று முன்னேற்றம் காண வாய்ப்பு உள்ளது. ஏதிர் பார்த்த பணம் கிடைக்க சற்று கால தாமதம் ஆகும்.

    பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் சற்று குறைந்து சிறிது முன்னேற்றம்

    காண்பீர்கள்.வராத கடன் கொடுத்த பணம் திரும்பக் கை வந்து சேரக் கூடிய காலமாகும்.

    அதிர்ஷ்டமான எண்:-8

    அதிர்ஷ்டமான நிறம்:-நீலம்

    அதிர்ஷ்டமான திசை:-தென்மேற்கு

    சாந்தி:-ஐயப்பன் வழிபாடு செய்து வரவும்.

  • 7,16,25ஆகிய எண்களைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் உள்ள

    அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு உடம்பில் நரம்பு மற்றும்,இரத்த சம்பந்தமான பிணிகள் வந்து

    நீங்கும்.பெரிய மனிதர்கள் சந்திப்பில் மன மகிழ்ச்சி அடைவீர்கள்.உத்தியோகத் துறையினருக்கு

    பதவி உயர்வு ஏற்படும். கலைப் பொருட்கள் மற்றும் ஆடம்பர அலங்கார பொருள் வியாபாரிகள்

    நற்பலன் அடைவார்கள்.வங்கிகளால் ஆதாயம் உண்டாகும். மனைவி வழிச் சொந்த பந்தங்களால் சில

    ஆதாயம் அடைவீர்கள். பிள்ளைகளுக்கு மருத்துவ செலவுகள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் பரிசு

    மற்றும் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். செய் தொழிலை மாற்றி அமைக்க திட்டம்

    போடுவீர்கள்.தங்கம் வெள்ள்p போன்ற நகைவியாபாரிகள்,ஆடம்பர அலங்கார பொருட்களின்

    வியாபாரிகள்,சினிமா மற்றும் நாடகத்துறை சார்ந்தவர்கள்,கமிசன் தொழிற் செய்வோர்கள்

    ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள்.

    அதிர்ஷ்டமான எண்:-6

    அதிhஷ்;;டமான நிறம்:-வெள்ளை

    அதிர்ஷ்டமான திசை:-தென்கிழக்கு

    சாந்தி:-மஹாலெட்சுமி வழிபாடு செய்து வரவும்.

  • 8,17,26ஆகிய எண்களைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் உள்ள

    அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு அண்டைஅயலார்களுடன் எச்சரிக்கையுடன் பேசிப் பழகுதல் நல்லது.

    வங்கிகளின் மூலம் எதிர் பார்த்த கடன் கிடைக்கும். பூமி,நிலம் சம்பந்தமான காரியங்களில்

    எதிர்பார்த்த நல்ல முடிவுகள் கிடைக்கும்.சம்பந்தமில்லாத நபர்களால் பிரச்சனைகள் மற்றும்

    பொருள்இழப்பு உண்டாகும். வீட்டில் கவனமுடன் இருத்தல் நல்லது. பழைய தொழிலை மாற்றியமைக்கத் திட்டம்

    போடுவீர்கள தந்தை மகன் உறவு நன்றாக இருக்கும். நீர்வளம்,நில வளத்துறை சார்ந்தவர்கள் நற்

    பலன் அடைவார்கள்.புதியதொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.பழைய கடன்கள்அடைபடும்.

    புதிய கடன் வாங்குவீர்கள். கம்யூட்டர் மற்றும் மின்சாரத்துறை சார்ந்தவர்களுக்கு புதிய

    ஒப்பந்தங்கள் ஏற்படும்.

    அதிர்ஷ்டமான எண்:-3,4

    அதிர்ஷ்டமான நிறம்:-மஞ்சள், கருப்பு

    அதிர்ஷ்டமான திசை:-வடகிழக்கு,வடமேற்கு

    சாந்தி:-சிவன் மற்றும் பிதுர் வழிபாடு செய்து வரவும்.

  • 9,18,27ஆகிய எண்களைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் உள்ள

    அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு குல தெய்வ வழிபாடு செய்து வரப் போட்ட திட்டங்கள் நிறை

    வேறும் காலமாகும். வெகு காலமாகக் காணாமற் போன பொருட்கள் சம்பந்தமான தகவல்கள் கிடைக்கும்.

    விபரீத எண்ணங்களை விட்டொழிப்பது நல்லது செய்தொழில் இடமாற்றம் ஏற்படலாம்..நண்பர்களால்

    ஆதாயம் இல்லை. கலைத்துறையினர்கள் பரிசுகள் பெறுவார்கள்.திடீர் அதிர்ஷ்டம் ஆகிய

    ரேஸ்,லாட்டரி மூலம் தனம் கிடைக்கும்.தேவையற்ற காரியங்களில் தலையிட்டு வீண் பிரச்சனை களில்

    மாட்டிக் கொள்ளரீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் போன்ற சுப காரியங்கள்

    நடக்கும்.பிறருக்காக ஜாமீன் போடுவதைத் தவிர்க்கவும்.கண், பல் சம்பந்தமான உபாதை

    கள் வந்து போகும்.யாத்திரை வெற்றி தராது.நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்களால்

    பொருட் செலவு உண்டாகும்.பெண்கள் விசயத்தில் மிக எச்சரிக்கை தேவை.மனைவிக்கு மருத்துவ செலவுகள்

    அதிர்ஷ்டமான எண்:-3

    அதிர்ஷ்டமான நிறம்:-மஞ்சள்

    அதிர்ஷ்டமான திசை:-வடகிழக்கு

    சாந்தி:-சிவ வழிபாடு செய்து வரவும். தொடரும்!

http://www.kathiravan.com/?page_id=1302
Share with your friends










Submit