இராசிபலன்கள் 8-11-2016 முதல் 15-11-2016 வரை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]
வார பலன், ஜாதகம், Weekly Astrology Tamil, Weekly Astrology In Tamil, Tamil Weekly Astrology, Tamil Astrology For This Week, Tamil Astrology Weekly Predictions, Astrology In Tamil, Free Tamil Astrology, Tamil Astrology Horoscope, Tamil Astrology Rashi, Tamil Astrology Rashi Chart

கதிரவனுக்காகக் கணித்து எழுதியவர் ஜோதிடமணி பிரம்மஸ்ரீ ரகுநாத ஐயர் தமிழ்நாடு, இந்தியா

 • செலவுகள் அதிகரிக்கும். நினைப்பது ஒன்றும் நடப்பது ஒன்றுமாக இருக்கும். என்னதான் உழைத்தாலும், முழு திருப்தி கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் மனதில் ஏற்படும். புதிய நண்பர் ஒருவர் மூலமாக உங்கள் செயல்களை சாதித்து கொள்வீர்கள். பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வு இருக்கும். குடும்பத்தில் அநாவசிய பிரச்னைகள் தோன்றும். பேசும் வார்த்தைகளில் விரக்தியான எண்ணங்கள் வெளிப்படும். உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு உண்டாகும். வண்டி, வாகனங்களால் கூடுதல் செலவுகள் ஏற்படும் -

 • இடைஞ்சல்களை தாண்டி நற்பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் காண்பீர்கள்.பேசும் வார்த்தைகளில் நகைச்சுவை வெளிப்படும். உடன்பிறந்தோர் உதவிகரமாக செயல்படுவார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் மிகுந்த பயன் தரும்.வண்டி, வாகனங்களை இயக்கும்போது எச்சரிக்கை தேவை. அநாவசிய பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் கூட்டுப்பயிற்சி நன்மை தரும். பிள்ளைகளின் வாழ்வினில் சுபநிகழ்வு ஏற்படும்.உடல்நிலையில் கவனம் அவசியம். வாழ்க்கைத்துணையின் செயல்கள் வெற்றிக்கு துணை நிற்கும்.

 • சங்கடங்களை சந்தித்தாலும் அதை சமாளிக்கும் மனநிலை இருக்கும். எந்த ஒரு பணியை துவங்கும்போதும் எதிர்ப்புகளை சந்திப்பீர்கள். காரியங்களில் தடைகளை சந்தித்தாலும் விடாமுயற்சியால் வெற்றி காண்பீர்கள். தனாதிபதியால் பொருளாதார நிலை நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பேசும் வார்த்தைகளில் நிதானம் அவசியம். ராகு உங்களின் மன உறுதிக்கும், விடாமுயற்சிக்கும் துணை நிற்பார். உடன்பிறந்தோரால் நன்மை உண்டாகும். வண்டி, வாகனங்களை இயக்கும்போது எச்சரிக்கை அவசியம். -

 • சிரமங்கள் ஏற்படும்.எண்ணிய காரியங்களை முடிக்க முனைப்புடன் செயல்படுவீர்கள். சுறுசுறுப்புடன் செயல்பட்டாலும், மனதளவில் தோன்றும் குழப்பத்தால் இடைஞ்சல்களை சந்திப்பீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுக்க முடியாமல் திணறுவீர்கள்.பேசும் வார்த்தைகளில் கறார்தன்மை வெளிப்படும். குடும்பத்தில் சலசலப்புகள் தோன்றி மறையும்.

 • செயல் வேகம் கூடும். நினைத்த காரியங்களை உடனடியாக செய்து முடிப்பீர்கள். பிடிவாத நிலையினை தளர்த்தி கொள்வது வெற்றிக்கு துணை புரியும். பேசும் வார்த்தைகள் அடுத்தவர் மனதினை புண்படுத்தும். குடும்பத்தில் அமைதி நிலவும். பொருளாதார நிலை முன்னேற்றம் கண்டு வரும். உடன்பிறந்தோர் உதவிகரமாய் செயல்படுவர். தகவல் தொடர்பு சாதனங்கள் தக்க சமயத்தில் உதவும்.வண்டி, வாகனங்களால் ஆதாயம் காண்பீர்கள்.

 • தைரியம் கூடும். வாழ்வில் முன்னேற்றம் காண கூடுதல் உழைப்பு தேவை.முக்கியமான காரியங்களில் ஈடுபட தயக்கம் இருந்தாலும் நடப்பது நடக்கட்டும் என்று தைரியத்துடன் செயல்பட கிரக நிலை துணை நிற்கும்.பேசும் வார்த்தைகளில் கறார் தன்மை வெளிப்படும். முக்கிய பிரச்னைகளில் உங்கள் கருத்துக்களை எழுத்துக்கள் மூலம் வெளிப்படுத்துவது நல்லது. பொருளாதார நிலையில் முன்னேற்றம் இருக்கும்.குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் மாறி, மாறி வரும்.

 • நற்பலன்களை காண உள்ளீர்கள். நினைத்த காரியங்களை செய்து முடிப்பதில் வேகம் இருக்கும்.பேச்சுத்திறன் செயல்வெற்றிக்கு துணை புரியும். இடம், பொருள், ஏவல் அறிந்து பேசுவது நல்லது. குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் மாறி, மாறி இருந்து வரும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.உடன்பிறந்தோருடன் இணைந்து செய்யும் செயல்களில் வெற்றி காண்பீர்கள்.

 • அயராத உழைப்பின் மூலம் வெற்றி கண்டு வருவீர்கள். நினைத்த காரியங்கள் நடந்தேறும். மனதில் உறுதியும், உத்வேகமும் கூடும். நேரத்திற்கு தகுந்தவாறு விவேகத்துடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவி வரும். பேசும் வார்த்தைகளில் விவேகமான கருத்துக்கள் வெளிப்படும்.

 • சிரமமான சூழலை எதிர்கொள்ள உள்ளீர்கள். நினைத்த காரியங்களை செய்து முடிக்க கூடுதல் அலைச்சல் இருக்கும். எளிதில் முடிந்துவிடும் என்று எண்ணிய காரியங்கள் இழுபறி தரும். நினைப்பது ஒன்றும், நடப்பது ஒன்றுமாக இருக்கும். ஜென்ம ராசியில் சுக்ரன் அமர்வு சுகமான சூழலை உண்டாக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பேசும் வார்த்தைகளில் குழப்பமான கருத்துக்கள் இடம் பெறும். உடன்பிறந்தோருக்கு உதவி செய்வீர்கள்.

 • விருப்பங்கள் நிறைவேறும். மனதில் தர்ம சிந்தனைகள் அதிகரிக்கும். விட்டு கொடுப்பதன் மூலம் காரியத்தடை விலகும். மனதில் தத்துவ சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்ப பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பொருளாதார நிலையில் முன்னேற்றம் இருக்கும். பேசும் வார்த்தை அடுத்தவர்களை சிந்திக்க வைக்கும். உடன்பிறந்தோருக்கு உதவி செய்வீர்கள்.தகவல் தொடர்பு சாதனங்கள் நன்மை தரும்.ஆன்மிக பயணம் செல்வீர்கள்

 • வாழ்க்கை தரம் உயரும். பொருளாதார நிலை மேம்படும்.குடும்பத்தில் அமைதி நிலவி வரும். பேசும் வார்த்தைகளில் அனுபவ கருத்துக்கள் வெளிப்படும். முக்கியமான நேரத்தில் பேசுவதை விட உங்கள் கருத்துக்களை எழுத்துக்கள் மூலம் வெளிப்படுத்தி வெற்றி காண்பீர்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் வெற்றிக்கு துணை நிற்கும்

 • நற்பலன்கள் ஏற்படும்.குரு பகவானின் பார்வையால் புத்தி கூர்மை அதிகரிக்கும்.குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் மாறி, மாறி வரும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்படும். பேசும் வார்த்தைகளில் அறிவுரை கருத்துக்கள் அதிகம் வெளிப்படும். சம்பந்தமில்லாத பிரச்னைகளை தவிர்ப்பது நல்லது.பேசும் வார்த்தைகளில் நிதானம் தேவை.உடன்பிறந்தோரால் சங்கடங்களை சந்திக்க நேரிடும். தகவல் தொடர்பு சாதனங்கள் பயன் தரும். உயர்கல்வி மாணவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.

http://www.kathiravan.com/?page_id=1302