இராசிபலன்கள் 7-3-2017 முதல்14-3-2017 வரை

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

வார பலன், ஜாதகம், Weekly Astrology Tamil, Weekly Astrology In Tamil, Tamil Weekly Astrology, Tamil Astrology For This Week, Tamil Astrology Weekly Predictions, Astrology In Tamil, Free Tamil Astrology, Tamil Astrology Horoscope, Tamil Astrology Rashi, Tamil Astrology Rashi Chart

கதிரவனுக்காகக் கணித்து எழுதியவர் ஜோதிடமணி பிரம்மஸ்ரீ ரகுநாத ஐயர் தமிழ்நாடு, இந்தியா

  • சற்று சிரமப்பட்டாலும் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடித்து விடுவீர்கள். அதிக அலைச்சல் காண நேரிடும். இதனால் வீண் மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். உங்கள் மனக்கவலையை மறைத்து குடும்பத்தினரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதில் கவனம் செலுத்துவீர்கள். பண வரவு சிறப்பாக இருக்கும். சுபசெலவுகள் கூடும். மளிகை உட்பட எந்தப் பொருள் வாங்கினாலும் அதன் தரத்தை அறிய வேண்டியது அவசியம். அண்டை வீட்டாருக்கு உதவி செய்ய நேரிடும். மின்சாதனங்களைக் கையாளும்போது அதிக கவனம் அவசியம். எதிர்பாராத வெளியூர் பிரயாணத்தை சந்திக்க நேரிடும். பிள்ளைகளால் செலவுகள் உண்டாகும். உத்யோகம் பார்ப்போர் அலுவல் பணி காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க நேரலாம். மாணவ, மாணவியர் சிந்தனை சிதறலால் அவதியுற நேரிடும். கலைத்துறையினர் கவனத்தை சிதறவிடாது திறமையை வெளிக்காட்ட வேண்டியது அவசியம். இரவில் கனவுத்தொல்லையால் நிம்மதியான உறக்கம் கெடும். சரிசம பலன்களைக் காணும் வாரம் இது

  • ஜீவன மற்றும் லாப ஸ்தானங்களின் வலிமையோடு இந்த வாரத்தினை எதிர்கொள்கிறீர்கள். உங்களது முழுத்திறமையும் வெளிப்படும் நேரம் இது. உச்ச பலத்துடன் சஞ்சரிக்கும் சுக்ர பகவான் சிறப்பான வெற்றி பெற்றுத் தருவார். உங்கள் பணிகளின் மூலம் அடுத்தவரின் கவனத்தை ஈர்ப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களைப் புரிந்துகொண்டு நிறைவேற்றுவீர்கள். பண வரவு சீராக இருந்து வரும். கடன் பிரச்னைகள் குறையும். முகராசிக்காக உங்களோடு நட்புறவு கொள்ள அனைவரும் விரும்புவர். உறவினர் வழியில் எதிர்பார்த்த நற்தகவல் வந்து சேரும். பிள்ளைகளின் அறிவுக்கூர்மையைக் கண்டு பெருமிதம் கொள்வீர்கள். கீழ் இடுப்பு, தொடைகள் ஆகிய பகுதிகளில் தசைப்பிடிப்பினால் அவதியுற நேரிடும். தம்பதியருக்குள் வீண் மனஸ்தாபம் தோன்றி மறையும். பூர்வீக சொத்துகளில் புதிய பிரச்னை தோன்றும். வேலைக்குச் செல்வோர் போட்டியான சூழலை வெற்றிகொண்டு பதவி உயர்வு காண்பர். மாணவர்கள் எழுதும் கலையில் சிறப்பாக விளங்குவர். கலைத்துறையினர் சிறப்பான வெற்றி காண்பர். வெற்றி தரும் வாரமிது

  • எந்த ஒரு காரியத்தையும் சிரத்தையோடு செய்வீர்கள். ஏனோதானோவென்று வேலை செய்யும் மனிதர்களைக் கண்டு மன வருத்தம் கொள்வீர்கள். நல்ல காரியத்திற்காக பொய் சொல்ல தயங்க மாட்டீர்கள். எடுத்த செயல்களில் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் கலந்திருக்கும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற பெரும்பாடு பட வேண்டியிருக்கும். உறவினரிடமிருந்து எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். எலக்ட்ரானிக் உபகரணங்களை புதிதாக மாற்ற நேரிடும். பிள்ளைகளின் செயல்கள் உங்கள் கவுரவத்தை உயர்த்தும். உஷ்ண உபாதையால் உடல்நிலையில் சிரமம் உண்டாகலாம். தம்பதியருக்குள் அன்யோன்யம் கூடும். சிக்கன முயற்சிகள் தோல்வியில் முடியும். வேலை பார்ப்போர் அலுவலகத்தில் தங்கள் நிலை உயரக் காண்பர். மாணவர்கள் சுற்றி வளைத்து விடையளிக்காமல் நேரடி பதில்களை விடைத்தாளில் வெளிப்படுத்தும் கலையில் பயிற்சி பெற வேண்டியது அவசியம். கலைத்துறையினர் சென்டிமென்ட் விவகாரங்களால் சற்று சிரமம் காண நேரிடலாம். நிம்மதி காணும் வாரம் இது

  • சாதக பாதகங்கள் கலந்திருக்கும். இருந்தாலும் நற்பலன்கள் ஏற்படும். நெடுநாட்களாக தடைபட்ட காரியம் ஒன்று நடந்தேறும். எதிர்பாராத செலவுகளால் அல்லல்படுவீர்கள். ஆளுக்கொரு அபிப்ராயத்தைச் சொல்லும் குடும்ப உறுப்பினர்களை ஒருங்கிணைப்பதில் சிரமம் காண்பீர்கள். சொன்ன சொல்லைக் காப்பதில் இடைஞ்சல் உண்டாகலாம். நெருங்கிய உறவினர் ஒருவரோடு வீண் மனஸ்தாபம் தோன்றக்கூடும். அவசரப்பட்டு பேசுவதால் வீண் கலகம் தோன்றும். பிள்ளைகளின் வேகமான செயல்களை எண்ணி பெருமிதம் கொள்வீர்கள். அதிக ஈடுபாட்டோடு பொறுப்பை சுமக்கும் நீங்கள் சரியான வேளையில் உணவருந்த வேண்டியது அவசியம். தம்பதியருக்குள் தனிமையில் கலந்தாலோசிக்கும் நேரம் குறையும். வேலைக்குச் செல்வோர் அலுவலகத்தில் பணிச்சுமை கூடுவதால் அவதிக்குள்ளாவர். மாணவ, மாணவர்கள் அவசரத்தால் சிறு சிறு தவறுகள் நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். கலைத்துறையினர் அலைச்சலைக் காண நேரிடும். சிரமங்களை சமாளித்து வெற்றி காணும் வாரமிது

  • சரிசம பலனை காண உள்ளீர்கள். எதிலும் தயக்கம் இருக்கும். அதனால் செயலில் தடுமாற்றமாக வெளிப்படும். உங்கள் இயலாமையால் சுற்றி உள்ளோரிடம் கோபமாக வெளிப்படலாம். முக்கியமான பணிகளுக்கு குடும்பத்தினரை சார்ந்திருக்க வேண்டியிருக்கும். பண வரவு எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும். குடும்ப செலவுகளுக்கு பட்ஜெட் போட்டு சமாளிப்பீர்கள். உறவினர்கள் வழியில் புதிக கலகங்கள் தோன்றும். பிரயாணத்தின்போது முன்பின் அறிந்திராத நபர்களோடு பழகுவதைத் தவிர்ப்பது அவசியம். பிள்ளைகளின் பிடிவாதமான செயல்கள் வருத்தம் தரும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகள் முக்கியமான தருணத்தில் துணை நிற்கும். பூர்வீக சொத்துகளில் வில்லங்க விவகாரங்கள் முளைக்கும். வேலை பார்ப்போர் அலுவலகத்தில் மேலதிகாரியோடு மோதல் போக்கினைக் காண நேரிடும். கலைத்துறையினர் முயற்சியில் தடை காண்பர். மாணவர்கள் தேர்வின்போது உடன் படிக்கும் மாணவருக்கு உதவப்போய் சங்கடத்திற்கு ஆளாகலாம். எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய வாரம் இது

  • எந்த ஒரு காரியத்தையும் மிகுந்த விருப்பத்தோடு செய்வீர்கள். அதனால் எடுத்த காரியத்தில் எதிர்பார்த்த வெற்றி எளிதாக கிட்டும். படபடவென்று காரியமாற்றும் நீங்கள் அடுத்தவர்கள் செய்ய வேண்டிய வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வீர்கள். குடும்பத்தில் உங்கள் எண்ணத்திற்கு மாற்றுக் கருத்து தோன்றலாம். கடன்பிரச்னைகளை சமாளிப்பதில் சேமிப்பு கரையும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற மிகுந்த சிரமப்பட வேண்டியிருக்கும். நெருங்கிய உறவினர் ஒருவருக்கு உதவி செய்யப்போய் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். மனதில் தோன்றுவதை யோசிக்காமல் உடனுக்குடன் முடித்துவிட அவசரப்பட்டு இழப்புகளை சந்திக்க நேரிடும். பிள்ளைகளின் வாழ்க்கைத் தரம் உயர்வடையும். பொழுதுபோக்கு அம்சங்களில் அதிக நாட்டம் உண்டாகும். உடல்நிலையில் சிறப்பு கவனம் அவசியம். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த உதவி கிட்டும். பணிக்குச் செல்வோர் அலுவலகத்தில் புதிய பிரச்னைகளை சந்திக்க நேரிடும். மாணவர்கள் தேர்வினை முழு ஈடுபாட்டோடு எதிர்கொள்வர். சரிசம பலன்களைக் காணும் வாரம் இது

  • முக்கியமான பிரச்னையில் முடிவெடுக்க இயலாது தடுமாறுவீர்கள். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் உங்கள் மனதில் பட்டதை பின்பற்றுவது நல்லது. குடும்பத்தில் சலசலப்புகள் தோன்றி மறையும். குறைந்த விலையுள்ள பொருட்களை கூடுதல் விலை கொடுத்து வாங்க நேரிடும். கடைக்கு செல்லும்போது தகுந்த துணையோடு செல்வது நல்லது. நகைச்சுவைக்காக பேசும் வார்த்தைகள் அடுத்தவர் மனதைப் புண்படுத்தக்கூடும். அண்டை வீட்டார் உங்கள் உதவி நாடி வருவர். பிள்ளைகளின் செயல்கள் வருத்தம் தரும். உஷ்ண உபாதையால் உடல்நிலையில் சிரமம் தோன்றும். வாழ்க்கைத்துணையின் செயல்களைப் புரிந்துகொள்வதில் தடுமாற்றம் உண்டாகும். நிலுவையில் இருக்கும் வழக்கு விவகாரங்கள் முடிவிற்கு வரும். வேலைக்குச் செல்வோர் அலுவலகத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். மாணவர்கள் ஆசிரியரின் ஆலோசனையால் பயன் பெறுவர். கலைத்துறையினர் போட்டியில் வெற்றி காண்பர். தடுமாற்றத்தைத் தாண்டி வெற்றி காண வேண்டிய வாரம் இது

  • எதிலும் மிகுந்த ஈடுபாட்டோடு பணியாற்றுவீர்கள். பொறுப்புகளைச் சுமப்பதில் முழு ஆர்வம் கொள்வீர்கள். கடுமையான பணிகளையும் எளிதாகச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற எண்ணத்தால் பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்வீர்கள். உறவினர் ஒருவர் நீங்கள் எப்போதோ செய்த உதவியை நினைவில் கொண்டு தற்போது நன்றிக்கடன் செலுத்துவார். அடுத்தவர்களுக்கு உதவப்போய் அதிக அலைச்சலுக்கு ஆளாவீர்கள். உறவினர்களின் சந்திப்பு உற்சாகம் தரும். பிள்ளைகளின் வேகமான செயல்களைக் கண்டு பெருமிதம் கொள்வீர்கள். வளர்ப்புப் பிராணிகளிடம் எச்சரிக்கையோடு பழகுவது நல்லது. மனதில் தோன்றுவதை உடனுக்குடன் செயல்படுத்துவதில் வெற்றி காண்பீர்கள். வயிற்றுவலி சார்ந்த உபாதைகளால் அவதியுற நேரலாம். பணிக்குச் செல்வோர் சுறுசுறுப்பான பணிகளின் மூலம் தனிமதிப்பைப் பெறுவர். மாணவர்கள் முழு ஈடுபாட்டோடு தேர்வை எதிர்கொள்வர். கலைத்துறையினரின் கற்பனைகள் செயல்வடிவம் பெறும். நற்பலன்களைத் தரும் வாரம் இது.

  • தைரியம் வலிமை பெறும். தயக்கத்தால் நிறுத்தி வைத்திருந்த காரியங்களை தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற எண்ணத்தால் சுதந்திரமாக செயல்படாமல் தவித்து வந்த உங்களுக்கு தைரியம் தற்போது கைகொடுக்கும். குடும்பத்தில் லேசான சலசலப்பிற்கு இடையே கலகலப்பான சூழல் நிலவும். பண வரவு சிறப்பாகி கடன் சுமை குறையும். உடன் பிறந்தோரிடமிருந்து எதிர்பார்த்திருந்த உதவி கிட்டும். அண்டை வீட்டாரை அனுசரித்துச் செல்வது அவசியம். எதிர்பாராத பிரயாணத்திற்கு வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் செயல்கள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். மனதில் தோன்றும் சந்தேகங்களை உரியவர்களிடம் அவ்வப்போது தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது. வாழ்க்கைத்துணையின் தேவையறிந்து உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். வேலை பார்ப்போர் அலுவலகத்தில் தங்கள் உழைப்பிற்கான பரிசினைப் பெறுவர். கலைத்துறையினரின் பேச்சில் நகைச்சுவை கலந்திருக்கும். மாணவர்கள் தங்கள் எழுத்துத்திறமையை உயர்த்திக் கொள்வர். நற்பலன்களை அனுபவிக்கும் வாரமாக அமையும்

  • எதிலும் நிதானமாக செயல்படுவீர்கள். முதிர்ச்சியோடு குடும்பப் பிரச்னைகளை எதிர்கொள்வீர்கள். பணவரவில் குறையேதும் இராது. சேமிப்பு உயர்வடையும். மனதில் தோன்றும் எண்ணங்களை நெருங்கிய நண்பரோடு மட்டும் பகிர்ந்து கொள்வது நல்லது. எலக்ட்ரானிக் பொருட்களை புதிதாக மாற்ற நேரிடும். உடன் பிறந்த சகோதரி உங்கள் உதவி நாடி வருவார். வீட்டை அழகுபடுத்தும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். மரச்சாமான்கள், பர்னிச்சர் பொருட்களை புதிதாக மாற்ற எண்ணுவீர்கள். பிள்ளைகளின் நடவடிக்கைகளைப் புரிந்து கொள்வதில் தடுமாற்றம் உண்டாகும். நேரத்திற்கு உணவருந்துவது உடல்நலத்திற்கு நல்லது. வாழ்க்கைத்துணையின் கருத்துகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பீர்கள். வேலை பார்ப்போர் பிரச்னையான நேரத்தில் அமைதியாக இருக்காமல் தங்கள் தரப்பு நியாயத்தை தைரியத்துடன் எடுத்துரைக்க வேண்டியது அவசியம். கலைத்துறையினர் புதிய வாய்ப்பு பெறுவர். மாணவர்கள் தேர்வில் நேரமின்மையால் அவதிக்குள்ளாகலாம். சராசரி பலன்களை காணும் வாரம் இது

  • திட்டமிட்டிருந்த பணிகளை தகுதியானவர்களின் துணையோடு வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். சொன்ன சொல்லைக் காப்பதை கவுரவமாக எண்ணுவீர்கள். குடும்பத்தில் உள்ள சலசலப்பைப் போக்க முயற்சிப்பீர்கள். ஆளுக்கொரு திசையில் பயணிக்கும் குடும்ப உறுப்பினர்களை கட்டுக்குள் கொண்டு வருவீர்கள். பண வரவு சிறப்பாக இருக்கும். கடன் பிரச்னைகள் குறையும். மின் சாதனங்களைக் கையாளும்போது அதிக கவனம் தேவை. உடல்நிலையைக் காக்க எண்ணெய் பலகாரங்களைத் தவிர்க்க வேண்டியது அவசியம். மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களால் உதவி கிட்டும். வளர்ப்புப் பிராணிகளிடம் பழகும்போது அதிக எச்சரிக்கை தேவை. பிள்ளைகள் தங்கள் தேவைகளுக்கு உங்களைப் பெரிதும் சார்ந்திருப்பர். தம்பதியருக்குள் அன்யோன்யம் கூடும். பணிபுரிவோர் அலுவலகத்தில் தங்கள் அதிகாரமான பேச்சின் மூலம் வேலைகளை சாதித்துக் கொள்வர். கலைத்துறையினர் முழுத்திறமையையும் வெளிப்படுத்தி நற்பெயர் காண்பர். மாணவர்கள் எழுத்து வேகம் உயரக் காண்பர். சாதகமான வாரம் இது

  • கடந்த சில நாட்களாக இருந்த டென்ஷன், மனக்கலக்கம் விலகி சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். விவேகத்துடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். எரிபொருட்களைக் கையாளும்போது அதிக எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் சலசலப்பும் கலகலப்பும் கலந்திருக்கும். சங்கடமான சூழலில் வீண் விவாதத்தைத் தவிர்த்து அமைதி காப்பது நல்லது. உடன்பிறந்தாரோடு கருத்து வேறுபாடு தோன்றி மறையும். உறவினர்கள் வழியில் கலகத்தினை சந்திக்க நேரும். பிரயாணத்தின்போது பொருளிழப்பு உண்டாகும் வாய்ப்பு உள்ளதால் கூடுதல் கவனம், எச்சரிக்கை அவசியம். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் அதிக கவனம் தேவை. உஷ்ண உபாதையால் உடல்நிலையில் சிரமம் காண்பீர்கள். தம்பதியருக்குள் அன்யோன்யம் கூடும். வேலைக்குச் செல்வோர் அலுவல் கோப்புகளைக் கையாளும்போது சிறப்பு கவனம் கொள்ள வேண்டியது அவசியம். மாணவர்கள் மறதியைத் தவிர்க்க போராட வேண்டியிருக்கும். கலைத்துறையினர் எதிலும் சிறப்பான வெற்றி கண்டு வருவர். எதிலும் நிதானத்தோடு செயல்பட வேண்டிய வாரம் இது.

http://www.kathiravan.com/?page_id=1302
Share with your friends










Submit