இராசிபலன்கள் 5-10-2015முதல்11-10-2015வரை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கதிரவனுக்காகக் கணித்து எழுதியவர் ஞானயோகி டாக்டர்.ப.இசக்கி,IBAM, RMP,DISM,தமிழ்நாடு, இந்தியா

 • மேசராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும்.அக்டோபர்5,6மற்றவர்களின் விசயங்களில் அநாவசியமாகத் தலையிட்டு வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக வேண்டாம். தாயின் உடல் நிலையில் சில பாதிப்புகள் மூலமாக மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடி கள் சற்று குறைந்து காணப்படும்.அக்டோபர்7,8,9காண்டிராக்ட் தொழிற் செய்வோர்கள், காய்கறி வியாபாரிகள், அச்சுத் தொழிற் சாலைகளை நடத்துபவர்கள்,தபால் தந்தித் துறைகளைச் சார்ந்தவர்கள்,வங்கிகளில் பணி புரிவோர்கள்,ஸ்டேசனரி சம்பந்தமான பேனா பென்சில் நோட்புக் போன்ற பொருட்களை விற்பனை செய்வோர்கள் ஆகியோர்கள் ஆதாயம் பெறுவார்கள்.பொருளாதாரம் சுமாராகக் காணப்படும். புதிய வீடு நிலம் மற்றும் வாகனங்கள் வாங்குவதற்காக வங்கிகள் மூலம் எதிர் பார்த்து இருந்த கடன் கேட்ட பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.அக்டோபர்10,11குடும்பத்தில் மருத்துவ செலவுகள் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் பணம் மற்றும் பொருட்கள் ஏமாற்றம் அடையாமல் இருக்கவும். மனைவிக்கு சிற்சில மருத்துவச் செலவுகள் செய்வதற்காகப் புதிய கடன்களை வாங்குவதற்காக முயறச்pப்பீர்கள்.ரேஸ் லாட்டரி போன்றவற்றின் மூலமாகப் பணம் பொருள் ஏமாற்றம் அடையாமல் இருக்கவும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும். இராசியான எண்:-5 இராசியான நிறம்:-பச்சை இராசியான திசை:-வடக்கு பரிகாரம்:-புதன் கிழமையில் மஹாவிஷ;ணு வழிபாடு செய்து வரவும்.

 • ரிசபராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும்.அக்டோபர்5,6குல தெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வருவதன் மூலமாக மன நிம்மதி அடைவீர்கள். மஹான்களின் சந்திப்புகளால் மன நிம்மதி அடையலாம். நண்பர்கள் வீட்டுச் சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்வீர்கள் அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிட்டு மன நிம்மதி இழக்க வேண்டாம்.அக்டோபர்7,8,9,10வங்கிகளின் மூலம் எதிர் பார்த்து இருந்த உதவித் தொகைகள் கிடைக்கும்.விட்டுப் போன பழைய வழக்குகள் மீண்டும் தொடரலாம். குல தெய்வ ஆலயத் திருப்பணிகளுக்கான விசயங்களில் பணி ஆற்றுவதன் மூலம் நற் பெயர் புகழ் ஏற்படும். கலைப் பொருட்கள் விற்பனையாளர்கள், கலைத் துறை சார்ந்த கலைஞர்கள்,தங்கம்,வெள்ளி போன்ற நகை வியாபாரிகள்,உணவுக் கூடங்கள் நடத்துபவர் கள்,அழகுக்கலை கூடங்களை நடத்துபவர்கள்,சிற்றுண்டி உணவுப் பொருட்களின் வியாபாரிகள்,சினிமா மற்றும் நாடகத் துறைகளைச் சார்ந்தவர்கள் ஆகியோர்கள் நல்ல பலன் அடைய வாய்ப்பு உள்ளது.அக்டோபர்11கோர்ட் வழக்கு விசயங்களுக்காக புதிய வழக்கறிஞர்களின் உதவியை நாடி அவர்களால் நன்மை அடைவீர்கள். பூர்வீகச் சொத்துக்கள் கை வந்து சேரக் கூடிய காலமாகும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும். இராசியான எண்:-6 இராசியான நிறம்:-வெள்ளை இராசியான திசை:-தென் கிழக்கு பரிகாரம்:-வெள்ளிக் கிழமையில் மஹா லட்சுமி வழிபாடு செய்து வரவும்.

 • மிதுனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும்.அக்டோபர்5,6,7குல தெய்வ ஆலயத் தொண்டுகளைப் பிரியமுடன் செய்து நற் பெயர் எடுப்பீர்கள். அழகுக் கலைக்கூடங்களை நடத்துபவர்கள் கட்டிட சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்வோர்கள், கட்டில், மெத்தை, ஆடம்பர அலங்காரப் பொருட் ளின் வியாபாரிகள்,சினிமா மற்றும் நாடகத் துறைகளை சார்ந்தவர்கள்,ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள்.அக்டோபர்8,9உறவினர்களின் உதவியால் திருமணம் நடை பெற வாய்ப்பு உள்ளது.யாத்திரையில் மிக கவனம் தேவை.காதல் விசயத்தில் அனுகூலம் ஏற்படாது. நீண்ட தூரப் பயணங்களின் மூலமாக எதிர் பார்த்த பெரிய மனிதர்களின் உதவிகள் கிடைக்கும். நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு நண்பர்கள், உடம்பில் தலை மற்றும் முதுகுவலி போன்ற சில உபாதைகள் வந்து போகலாம். நண்பர்களின் வீட்டுச் சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள்.அக்டோபர்10,11விட்டுப் போன பழைய பிரச்சனைகள் மீண்டும் தலை தூக்கும்.. திருட்டுப் போன பொருட்கள் காவல் துறையினர் உதவியால் திரும்பக் கிடைக்கும்.அரசு வழக்கு விசயங்களில் எதிர் பார்த்து இருந்த சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும்.நீண்ட தூரப் பயணங்களைத் தள்ளிப் போடுதல் நல்லது. புதிய நண்பர்களிடம் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லதாகும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும். இராசியான எண்:-6 இராசியான நிறம்:-வெள்ளை இராசியான திசை:-தென்கிழக்கு பரிகாரம்:-வெள்ளிக் கிழமையில் மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.

 • கடகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும்..அக்டோபர்5,6மாணவர்களுக்கு கல்வியில் பரிசு மற்றும் பாராட்டுக்கள் கிடைக்ககூடும்.சமுதாய முன்னேற்றத்திற்கான பொது நலத் தொண்டுகளில் ஈடுபட்டு நற்பெயர் எடுப்பீர்கள். வேற்று மதத்தவர்கள் மற்றும் அரசியல் வாதிகளால் சிற் சில ஆதாயங்களை அடைவீர்கள். வங்கிகளில் இருந்து எதிர் பார்த்த பணம் கை வந்து சேரும்.வெளி நாடு சென்று வர வெகு காலமாகப் போட்ட திட்டங்கள் நிறைவேறும். அக்டோபர்7,8,9குடும்பச் சொத்துக்களில் நீண்ட காலமாக இருந்து வந் பிரச்சனைகள் குறையும். தண்ணீர் கூல்டிரிங்ஸ்,திரவ சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,பூஜைப் பொருட்களை விற்பனை செய்வோர்கள், மருத்துவத் துறைகளைச் சார்ந்தவர்கள்,தாய் சேய் நல விடுதிகளை நடத்துவோர்கள் ஆகியோர்கள் ஆதாயம் அடைவீர்கள்.பெண்களால் தென்திசையில் இருந்து எதிர் பாராத பண வரவுகள் உண்டாகும்.அக்டோபர்10,11 உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவுடன் பதவி உயர்வும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சூதாட்டங்களில் பணம் மற்றும் பொருட்கள் ஏமாற்றம் அடையாமல் எச்சரிக்கையுடன் இருக்கவும். குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகளுக்காக புதிய கடன் வாங்குவீர்கள் காதல் விசயங்களில் மிகுந்த கவனமுடன் இருப்பதால் வீண் பிரச்சனை களைத் தவிர்க்கலாம்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும். இராசியான எண்:-2 இராசியான நிறம்:-வெள்ளை இராசியான திசை:-மேற்கு பரிகாரம்:-திங்கட் கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு செய்து வரவும்

 • சிம்மராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும்.அக்டோபர்5வெளி நாடுகளில் நீண்ட காலமாக வசிப்பவர்கள் தாய்நாடு சென்று உறவுகளைச் சந்தித்து திரும்புவதற்கான வாய்ப்புகள் உள்ள காலமாகும்..புதிய வீடுகள், வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளை இடமாற்றம் செய்யப் போட்டிருந்த திட்டங்களில் சற்றுப் பின்னடைவு ஏற்படலாம்.ஒரு சிலருக்கு சூட்டுத் தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.அக்டோபர்6,7,8வீடு மற்றும் வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலமாகப் பொருட் செலவுகள் வந்து சேரலாம்.கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த மனக் கசப்புகள் தீர்ந்து மீண்டும் ஒன்று சேரக் கூடிய காலமாகும்.. உடம்பில் அலர்ஜி மற்றும் சளி சம்பந்தமாகிய உபாதைகள் வந்து போகும். இரும்பு,இயந்திரம், இரசாயனம்,பழைய கழிவுப் போருட்களின் வியாபாரிகள்,பல சரக்கு மற்றும் எண்ணை வியாபாரிகள்,கல், மணல் வியாபாரிகள்,அலுவலக உதவிப் பணிகளைச் செய்பவர்கள்,பெட்ரோல் டீசல் மற்றும் எண்ணை சம்பந்தமான வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல பலன்களை அடைவார்கள்.அக்டோபர்9,10,11உடம்பில் வாயு மற்றும் வயிறு போன்ற உபாதைகள் வந்து போகலாம். குடும்பச் சொத்துக்களில் ஏற்பட்டு இருந்த வழக்குகளில் நல்ல முடிவுகள் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களால் ஆதாயம் இல்லை. தந்தை மகன் உறவுகளில் பிரச்சனைகள் குறைந்து முன்னேற்றம் காணப்படும். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும். இராசியான எண்:-8 இராசியான நிறம்:-நீலம் இராசியான திசை:-தென்மேற்கு பரிகாரம்:-சனிக் கிழமையில் ஐயப்பன் வழிபாடு செய்து வரவும்.

 • கன்னிராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும்.அக்டோபர்5,6பண வரவுகளுக்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்ள வாய்ப்பு உள்ளது.பூர்வீக சொத்துக்களில் நீண்ட காலமாக இருந்து வந்துள்ள பிரச்சனைகள் தீர இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம். வர வேண்டிய கடன் கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் வந்து சேரும்.அக்டோபர்7,8,9வீடு, நிலம் வாங்குவது சம்பந்தமான புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.தீராத நோய்களுக்கு புதிய மருத்துவர்களின் உதவியால் நோய் நீங்க கூடிய காலமாகும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும்.அரசியல் வாதிகளால் ஆதாயம் உண்டாகும். எழுத்தாளர்கள்,கவிஞர்கள்,பாடலாசியர்கள்,நாடகக் கலைஞர்கள்,மருத்துவத் துறை சார்ந்தவர்கள்,அச்சுத் தொழிற் செய்வோர்கள்,தபால் தந்தித் துறைகளைச் சார்ந்தவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள்,வங்கிகளில் பணி செய்வோர்கள் ஆகியோர்கள் நல்ல பலன்களை அடைவார்கள்.அக்டோபர்10,11உடல் நிலையில் நரம்பு எலும்பு போன்ற உபாதைகள் வந்து போகும்.உடல் நிலையில் கண் மற்றும் காதுகளில் சில உபாதைகள் வந்து போகும்.மஹான்களின் தரிசனங்களால் மன நிம்மதியை அடைவீர்கள்.உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு எதிர் பார்த்து இருந்த இட மாற்றம் கிடைக்க இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும். இராசியான எண்:-5 இராசியான நிறம்:-பச்சை இராசியான திசை:-வடக்க பரிகாரம்:-புதன் கிழமையில் மஹாவிஷ;ணு மற்றும் ஆஞ்சனேயர் வழிபாடு செய்து வரவும்.

 • துலாம்ராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்;.அக்டோபர்5,6பழைய கடன்களை அடைப்பதற்காகப் புதிய கடன்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளால் சில தொல்லைகள் வந்து சேர இருப்பதால் கவனமுடன் இருத்தல் நல்லது.தடை பட்டு வந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் சம்பந்தமாகப் புதிய தொடர்புகள் ஏற்பட்டு அதன் மூலம் நன்மை அடைவீர்கள்.அக்டோபர்7,8,9நிலக்கரி, பெட்ரோல்,டீசல் பலசரக்கு, எண்ணை போன்ற தொழிற் செய்வோர்கள்,காவல் துறை ராணுவம் சார்ந்தவர்கள்,தீயணைப்பு நிலையப் பணியாளர்கள்,நெருப்பு சம்பந்தமான தொழில்களைச் செய்வோர்கள்,பூமி நில புலன்கள் சம்பந்தமான வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள்.பெண்களால் தென் திசையில் இருந்து நற் செய்திகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ள காலமாகும். தாயின் உடல் நிலையில் சில பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் உண்டாகலாம்.கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த மனக் குழப்பங்கள் மாறி மிகுந்த ஒற்றுமைகள் உண்டாகும். அக்டோபர்10,11யாத்திரையில் புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் ஆதாயம் அடைவீர்கள். செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக நேரிடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும்.பிள்ளைகளின் சுப காரிய நிகழ்ச்சிகளில் ஏற்பட்டு வந்த தடைகள் நீங்கும்.வெளி நாட்டு விசயங்களில் வேற்று மதத்தவரால் ஆதாயங்கள் உண்டு.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.. இராசியான எண்:-9 இராசியான நிறம்:-சிகப்பு இராசியான திசை:-தெற்கு பரிகாரம்:-செவ்வாய் கிழமையில் முருகன் வழிபாடு செய்து வரவும்.

 • விருச்சிகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும்.அக்டோபர்5,6புதிய தொழில்களை ஆரம்பம் செய்யப் போட்டிருந்த எண்ணங்கள் நிறை வேறும்.உடல் நிலையில் வாயு மற்றும் வாத சம்பந்தமான சிற் சில தொல்லை கள் வந்து போகுவதன் மூலம் மருத்துவச் செலவுகள் உண்டாகும். வெளி நாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் நண்பர்களின் உதவிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அக்டோபர்7,8அரசியல் வாதிகளால் ஆதாயம் ஏற்படாது. நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீட்டுச் சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்ளுவீர்கள். ரேஸ் லாட்டரி போன்றவற்றின் மூலமாகப் பணம் கிடைக்கும் என எண்ணி ஏமாற்றம் அடைய வேண்டாம். திருட்டுப் போன பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்ப வீடு வந்து சேரும்.வெகு காலமாக வராத கடன் கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் மற்றவர்களின் உதவிகளால் திரும்பக் கிடைக்கும்.அக்டோபர்9,10,11குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகள் சம்பந்தமாகிய பேச்சு வார்த்தைகளில் நல்லதொரு முடிவுகள் கிடைக்கும். மீன் முட்டை மாமிச உணவுகளின் வியாபாரிகள்,பழைய இரும்பு,தகரம் போன்ற பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள்,அணு ஆராய்ச்சித் துறைகளைச் சார்ந்தவர்கள்,மடாதிபதிகள்,அலுவலக உதவிப் பணிகளைச் செய்பவர்கள் ஆகியோர்கள் நற் பலன்அடைவீர்கள். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும். இராசியான எண்:-4 இராசியான நிறம்:-கரப்ப இராசியான திசை:-வடமேற்கு பரிகாரம்:-ஞயிற்றுக் கிழமையில் பிதுர் வழிபாடு செய்து வரவும்.

 • தநுசுராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்குசூரியன் நன்மை தரும் கிரகமாகும்.அக்டோபர்5,6,7சகோதர சகோதரிகளின் தடை பட்ட திருமண காரியங்கள் நிறைவேறும் காலமாகும். திடீர் அதிர்ஷ;டமாகிய ரேஸ் லாட்டரி போன்றவற்றின் மூலம் பணம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. முதியோர் இல்லங்களை நடத்துபவர்கள்,நெருப்பு சம்பந்தமான தொழிற் சாலைகளை நடத்துபவர்கள்,வெளி நாட்டுத்தூதரகங்களில் பணி செய்வோர்கள், தந்தை மகன் உறவுகளில் சுமூகமான சூழ்நிலை உருவாகும். அக்டோபர்8,9ஜவுளி நூல் போன்ற வியாபாரிகள், மருந்து கம்பெனிகளை நடத்துபவர்கள், மருந்து சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள், ஹோட்டல் தொழிற் செய்வோர்கள்,அரசுத் துறை சார்ந்த ஆலயப் பணியாளர்கள் ஆகியோர்கள் நல்ல பலனை அடைவார்கள். பிள்ளைகளால் மன நிம்மதியும் பொருள் வரவும் உண்டாலாம்.அநாதைச் சிறுவர்களுக்காக உதவுவதில் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். அக்டோபர்10,11அடுத்தவர்களின் விசயங்களில் தலையிட்டு அவமானப்பட இருப்பதால் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லதாகும். குடும்பத்தில் இருந்து வந்த மருத்துவச் செலவுகள் வெகுவாகக் குறையும். உற்றார் உறவினர்களால் ஆதாயம் இல்லை. வர வேண்டிய பணம் மற்றவர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும்.யாத்திரையில் புதிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் சிற் சில ஆதாயம் அடைவீர்கள். பொது வாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும். இராசியான எண்:-1 இராசியான நிறம்:-வெள்ளை இராசியான திசை-கிழக்கு பரிகாரம்:-ஞயிற்றுக் கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வரவும்.

 • மகரராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும்.அக்டோபர்5,6பொருளாதார சம்பந்தமாகத் தொலை தூரப் பயணங்களை மேற் கொண்டு வெற்றி பெறுவீர்கள்.குழந்தைகளின் மன மகிழ்ச்சிக்காக உல்லாசப் பயணங்கள் சென்று வர முயற்சிப்பீர்கள்.அடிமை ஆட்களால் வீண் பொருள் விரையமும் மனஉழைச்சலும் உண்டாகும். பெண்கள் சம்பந்தமான விசயங்களில் செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச் சொல் வர இருப்பதால் மிக எச்சரிக்கையுடன் பேசிப் பழகுதல் நல்லது.அக்டோபர்7,8,9அடுத்தவர்களின் விசயங்களில் தலையிட்டு மன நிம்மதி இழக்க வேண்டாம். பூ,பழம்,பூஜை சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,அநாதை ஆசிரமங்கள்,முதியோர் இல்லங்களை நடத்துபவர்கள், தாய் சேய் நல விடுதிகளை நடத்துபவர்கள்,இனிப்புப் பொருட்களின் தின் பண்ட வியாபாரிகள்,பேராசிரியர்கள்,அற நிலையத்துறை சார்ந்தவர்கள், ஆலயப் பணி செய்வோர்கள் ஆகியோர்கள் நற்பலன்களை அடைவார்கள்.அக்டோபர்10,11உத்தியோகத் துறையினர்களுக்கு மேலதிகாரிகளுடன் வீண் மன சஞ்சலமும் பதவி இட மாற்றமும் ஏற்பட இருப்பதால் முன் கோபத்தைத் தவிர்த்துப் பொருப்புடன் பணி ஆற்றவும். பழைய கடன்களை அடைத்துப் புதிய கடன்களை வாங்குவீர்கள். சமுதாய முன்னேற்றம்,அநாதை ஆசிரமங்கள் மற்றும் பொதுத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணி ஆற்றுவதன் மூலம் மனநிம்மதியும் பெயர்,புகழும் அடைவீர்கள்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும். இராசியான எண்:-3 இராசியான நிறம்:-மஞ்சள் இராசியான திசை:-வடகிழக்கு பரிகாரம்:-வியாழக் கிழமையில் தட்சிணா மூர்த்தி வழிபாடு செய்து வரவும்.

 • கும்பராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்.அக்டோபர்5,6வெகு காலமாகக் கட்டப் படாத ஆலயத் திருப் பணிகளுக்கான பணிகளை செய்வீர்கள்.கூட்டுத் தொழிற் செய்வோர்கள் புதிய தொழில் முயற்சிகளில் ஈடு பட்டுப் பயனடைவார்கள். வங்கிகளின் மூலமாக எதிர் பார்த்து இருந்த கடன் தொகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ள காலமாகும்.சார்ந்தவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார் கள்.அக்டோபர்7,8நீண்ட நாட்களாக எதிர் பார்த்து இருந்த வர வேண்டிய பணம் திரும்பக் கைக்கு வந்து சேரும்.காதல் விசயத்தில் எதிர் பார்த்து இருந்த தகவல்கள் கிடைக்க இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம். தங்கம், செம்பு,வெள்ளி போன்ற உலோகப் பொருள்களின் வியாபாரிகள்,மருந்துப் பொருட்கள் விற்பனை செய்வோர்கள் மற்றும் மருத்துவத் துறை சார்ந்தவர்கள்,பூமி நில புலன்களை வாங்கி விற்போர்கள்,கேஸ், வெல்டிங் தொழிற் செய்வோர்கள்,ஹோட்டல் தொழிற் செய்வோர்கள் ஆகியோர்கள் நற் பலன்களை அடைவார்கள்.அக்டோபர்9,10,11பழமையான கட்டிடங்களைப் பழுது பார்ப்பதன் மூலம் பொருட் செலவுகள் ஏற்படலாம். திடீர் அதிர்ஷ;டமாகிய ரேஸ்,லாட்டரி ஆகியவற்றின் மூலம் பண வரவு உண்டாகும். நீண்ட காலமாக தீர்க்கப் படாத அரசு சம்பந்தமான வழக்கு விசயங்களில் சாதகமான முடிவுகள் வந்து சேரும் வெளி நாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் எதிர்பார்த்த நல்ல முடிவுகள் கிடைக்கும்.பொது வாக இது ஒரு நற் பலன் தரும் வாரமாகும். இராசியான எண்:-9 இராசியான நிறம்:-சிகப்ப இராசியான திசை:-தெற்கு பரிகாரம்:-செவ்வாய் கிழமையில் துர்க்கை ஆலய வழிபாடு செய்து வரவும்.

 • மீனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு கேது நன்மை தரும் கிரகமாகும்.அக்டோபர்5பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறி முன்னேற்றம் காணப்படும். நீண்ட காலமாகத் தடை பட்டு வந்த குல தெய்வ வழிபாடுகளை செய்து வருவீர்கள்.திடீர் அதிர்ஷ;டம் மூலமாகப் பணம் வந்து சேரும்.அக்டோபர்6,7,8உற்றார் உறவினர்களின் வரவால் மன மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாகும்.யாத்திரையின் போது மிகுந்த கவனமுடன் பயணம் செய்து வருதல் நல்லது.மஹான்களின் எதிர்பாராத தரிசனங்களால் மனநிறைவை அடைவீர்கள். பூர்வீகச் சொத்துக்களில் நீண்ட காலமாக இருந்து வந்த பிர்ச்சனைகளுக்கு நல்லதொரு முடிவு கிடைக்கும்.யாத்திரையின் போது மிகுந்த கவனமுடன் பயணம் செய்து வருவது நல்லதாகும்.விட்டுப் போன உறவுகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது.அக்டோபர்9,10,11தேவையற்ற புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்த்தால் வீண் பிரச்சனைகளில் இருந்து விடு படுவீர்கள். பழைய கழிவுப் பொருட்களாகிய பேப்பர்,பிளாஸ்டிக் மற்றும் பழைய இரும்புப் பொருட்களின் வியாபாரிகள்,அணு ஆராய்ச்சி மற்றும் விஞ்ஞானத் துறை சார்ந்த பணியாளர்கள்,மத போதகர்கள்,மடாதிபதிகள்,அழுகல் சம்பந்தமான மீன் முட்டை மாமிசம் போன்ற உணவுப் பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் நற் பலன் அடைவார்கள்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும். இராசியான எண்:-7 இராசியான நிறம்:-கருஞ்சிகப்பு இராசியான திசை:-வடமேற்கு பரிகாரம்:-திங்கள் கிழமையில் கணபதி வழிபாடு செய்து வரவும். தொடரும்!

http://www.kathiravan.com/?page_id=1302