இராசிபலன்கள் 4-12-2016 முதல் 11-12-2016 வரை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]
வார பலன், ஜாதகம், Weekly Astrology Tamil, Weekly Astrology In Tamil, Tamil Weekly Astrology, Tamil Astrology For This Week, Tamil Astrology Weekly Predictions, Astrology In Tamil, Free Tamil Astrology, Tamil Astrology Horoscope, Tamil Astrology Rashi, Tamil Astrology Rashi Chart

கதிரவனுக்காகக் கணித்து எழுதியவர் ஜோதிடமணி பிரம்மஸ்ரீ ரகுநாத ஐயர் தமிழ்நாடு, இந்தியா

 • செவ்வாய் பத்தாம் வீட்டில் இருப்பதால் திடீரென்று உத்யோக மாற்றங்கள் ஏற்படும். அவர் பதினோராம் வீட்டுக்கு நகர்வதால் திடீர் லாபங்கள் உண்டாகும். மருத்துவம், ரியல் எஸ்டேட் துறைகளில் இருப்பவர்களுக்கு லாபம் உண்டு. ஐந்தில் ராகு இருப்பதால் குழந்தை பிறப்பதில் சில சிக்கல்கள் இருந்தாலும் குடும்ப ஸ்தானத்திற்கு குருவின் பார்வை இருப்பதால் குறைகள் தீரும். ஒன்பதாம் வீட்டில் உள்ள சுக்கிரன் உங்களின் மூன்றாம் வீட்டைப் பார்ப்பதால் சகோதர, சகோதரிகள் வாழ்வில் பெயரும் புகழும் அடைவார்கள்.

 • எட்டாம் வீட்டில் கிரகங்கள் கூட்டமாக இருப்பதால் ஆரோக்யத்தை மிக எச்சரிக்கையாகப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். ஆரோக்யத்தை போக்கும் எந்தச் செயலிலும் ஈடுபடவேண்டாம். சிறு பிரச்னை ஏற்பட்டாலும் உடனே மருத்துவரைப் போய்ப் பார்ப்பது நல்லது. ஏழில் சூரியனும், சனியும் இருப்பதால் கணவன் - மனைவிக்கிடையே பிரச்னை ஏற்படாதபடி அனுசரித்துப் போகவேண்டும். ஐந்தாம் வீட்டில் குரு இருப்பதால் புண்ணியங்கள் செய்வீர்கள்.

 • நாலில் குரு. கல்வி சிறக்கும். வீடு வாங்குவதற்காக எதிர்பார்த்திருந்த கடன் தொகை கிடைக்கும். ராசிநாதன் ஏழில் இருப்பதாலும், ராசியைப் பார்ப்பதாலும் நற்பலன்கள் அதிகரிக்கும். தன்னம்பிக்கையும் தைரியமும் கூடும். ஏழில் சுக்கிரன் இருப்பதால் கணவன்-மனைவிக்கிடையே நல்லுறவு இருக்கும். திருமணமாகாதவர்களுக்குத் திருமணம் கைகூடும்; அது காதல் திருமணமாகவும் இருக்கலாம். ஒன்பதில் செவ்வாய். தந்தையின் உடல் நலனில் கவனம் தேவை

 • இரண்டில் ராகு. வாக்கினிலே இனிமை வேண்டும் என்பதை மறக்கவே வேண்டாம். ஏழாம் வீட்டிற்கு இரண்டுவித நன்மைகள் வரவிருக்கின்றன. இத்தனை காலம் இந்த வீட்டில் அமர்ந்திருந்த உச்ச செவ்வாய் இந்த வாரம் நகர்கிறார். ஆறில் இதுவரை இருந்த சுக்கிரன் நகர்ந்து ஏழாம் வீட்டுக்கு வருகிறார். காதலில் இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கும். கணவன் - மனைவி பிரச்னைகள் சரியாகும்.

 • இரண்டாம் வீட்டில் குரு. குடும்ப சுபிட்சம் அதிகரிக்கும். பேச்சில் மென்மையும் நன்மையும் கூடும். ஐந்தாம் வீட்டில் புதனும் சுக்கிரனும் இருப்பதால் குழந்தைகள் தங்கள் புத்திசாலித்தனத்தால் புகழ் பெறுவார்கள். ராசியின்மீது ராகு அமர்ந்திருப்பதால் வெற்றிப் படியில் சில தடைகள் நேரிடலாம். பொருட்படுத்த வேண்டாம். ஏழாம் வீட்டுக்குச் செவ்வாய் வருவதால் திருமணம் சம்பந்தமான விஷயங்களில் அவசரப்பட வேண்டாம். ஏழில் ஏற்கனவே உள்ள கேதுவும் திருமணத்தை தடை செய்ய முயற்சிக்கலாம். காலம் கனியக் காத்திருங்கள்.

 • இத்தனை காலம் ஐந்தில் உச்ச செவ்வாய் இருந்ததால் குழந்தைகளின் முரட்டுத் தனம் அதிகமாக இருந்திருக்கலாம் அல்லது அவர்களுக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், இந்த வாரம் செவ்வாய் இடம் மாறுவதால் குழந்தைகள் உங்கள் மனதில் தென்றல் வீசச் செய்வார்கள். பன்னிரண்டில் ராகு இருப்பதால் அவசியமற்ற செலவுகள் செய்ய வேண்டியிருக்கலாம். நாலில் புதன் இருப்பதால் கல்வியில் சிறப்புபெற்று வெற்றியடைவீர்கள். ஆறாம் வீட்டில் கேது இருப்பதால் தேவையற்ற வகைகளில் கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

 • மூன்றாம் வீட்டிற்கு குருவின் பார்வை கிடைத்திருப்பதால் சகோதர சகோதரி களுக்கு நன்மை ஏற்படும். அவர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். நான்காம் வீட்டில் கேது இருப்பதால் படிப்பு தடைபடக்கூடிய அபாயம் இருந்தாலும் செவ்வாயும் உடன் இருப்பதால் நிலைமை திடீரென்று சீரடையும். இரண்டாம் வீட்டில் புதனும் சுக்கிரனும் இருப்பதால் பேச்சில் மிகுந்த புத்திசாலித்தனமும் கவர்ச்சி அம்சமும் கூடும். பதினோராம் வீட்டில் குரு. லாபங்கள் அதிகரிக்கும். முன்பிருந்ததைவிட அதிக சம்பளத்தில் வேலை கிடைக்கும்.

 • இரண்டில் இருந்த செவ்வாய் உங்களை கோபமாகவும் வேகமாகவும் பேச வைத்துக் கொண்டிருந்தார். ஆனால், இந்த வாரம் பேச்சைக் குறிக்கும் இரண்டாம் வீட்டுக்கு சுக்கிரன் வருவதால் பேச்சில் கவர்ச்சியும் இனிமையும் அதிகரிக்கும். ராசியின் மீதுள்ள புதன் வக்ரகதியில் இருப்பதால் சில சமயங்களில் குடும்பத்தினருடன் வாக்குவாதம் ஏற்படலாம். குடும்ப ஒற்றுமை கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அமைதியாகவும், அனுசரித்தும் போக வேண்டியிருக்கும். பத்தாம் வீட்டில் குரு இருப்பதால் பெரிய முடிவுகளை எடுக்க வேண்டாம்

 • ராசியின் மீது அமர்ந்திருந்த உச்ச செவ்வாய் நகர்வதால் ஆரோக்யம் நல்ல முறையில் மீளும். கோபங்கள் குறையும். ஏழாம் வீட்டிற்கு செவ்வாயின் பார்வை நகர்வதால் கணவன்-மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்னைகள் சரியாகும். ராசியை குரு பார்ப்பதால் நன்மையும், மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிலவும். இரண்டில் கேது இருப்பதால் பேச்சில் கவனம் தேவை. அந்த வீட்டுக்குச் செவ்வாயும் வருவதால் கோபமான பேச்சைத் தவிர்க்க வேண்டும். நல்லவேளை குரு பகவான் நல்ல நிலையில் இருப்பதால் எல்லாம் நன்மையாகவே முடியும். -

 • ராசியின் மீது அமர்ந்திருந்த உச்ச செவ்வாய் நகர்வதால் ஆரோக்யம் நல்ல முறையில் மீளும். கோபங்கள் குறையும். ஏழாம் வீட்டிற்கு செவ்வாயின் பார்வை நகர்வதால் கணவன்-மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்னைகள் சரியாகும். ராசியை குரு பார்ப்பதால் நன்மையும், மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிலவும். இரண்டில் கேது இருப்பதால் பேச்சில் கவனம் தேவை. அந்த வீட்டுக்குச் செவ்வாயும் வருவதால் கோபமான பேச்சைத் தவிர்க்க வேண்டும். நல்லவேளை குரு பகவான் நல்ல நிலையில் இருப்பதால் எல்லாம் நன்மையாகவே முடியும். -

 • எட்டில் குரு இருப்பதால் ஜீரண சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் உணவு விஷயத்தில் கவனமாகவும், சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருங்கள். பன்னிரண்டில் செவ்வாய் இருப்பதால் மருத்துவச் செலவுகள் ஏற்படுவதுபோல் இருந்தாலும் வாரக் கடைசியிலேயே செவ்வாய் நகர்ந்து விடுவதால் பிரச்னை தீரும். பன்னிரண்டில் சுக்கிரன் இருப்பதால் ஆபரணங்கள், அணிமணிகள் வாங்க சற்று அதிகம் செலவு செய்வீர்கள். குருபகவான் பன்னிரண்டைப் பார்ப்பதால் சுபச் செலவுகள் மற்றும் கோயில்களுக்கான செலவுகள் நிகழும்

 • பதினோராம் வீட்டில் செவ்வாய் உச்சமாக இருப்பதால் வார ஆரம்பத்தில் திடீர் பணவரவு கிடைக்கும். வார இறுதியில் பன்னிரண்டாம் வீட்டில் இரண்டு கிரகங்கள் சேர்வதால் செலவுகள் அதிகரிக்கும். அதிலும், செவ்வாய் இருப்பதால் திடீரென்று செலவுகள் வரும். பதினோராம் வீட்டில் பல கிரகங்கள் இருப்பதால் ஒன்றிற்கு மேற்பட்ட வருமானங்கள் வரும். பத்தாம் வீட்டில் புதன் வக்கிரமாகியிருப்பதால் புதிய வேலை தேடும் பணி இப்போதைக்கு வேண்டாம். ஒன்பதில் சூரியன் இருப்பதால் தந்தைக்கு அவருடைய தந்தை வழிச் சொத்துகள் கிடைக்கும்

http://www.kathiravan.com/?page_id=1302