இராசிபலன்கள் 4-10-2016 முதல் 11-10-2016 வரை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]
வார பலன், ஜாதகம், Weekly Astrology Tamil, Weekly Astrology In Tamil, Tamil Weekly Astrology, Tamil Astrology For This Week, Tamil Astrology Weekly Predictions, Astrology In Tamil, Free Tamil Astrology, Tamil Astrology Horoscope, Tamil Astrology Rashi, Tamil Astrology Rashi Chart

கதிரவனுக்காகக் கணித்து எழுதியவர் ஜோதிடமணி பிரம்மஸ்ரீ ரகுநாத ஐயர் தமிழ்நாடு, இந்தியா

 

 • இந்த வாரம் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். கோவில், குளம் என புனித யாத்திரைகள் மேற்கொள்வர். வாழ்க்கையில் முன்னேற்றமும் கல்வியில் தேர்ச்சியும் ஏற்படும். எதிர்பார்த்த இனங்களில் இருந்து ஏற்படும் பணவரவால், இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். தங்கள் திறமைக்கு ஏற்றபடி புகழும், கௌரவமும் கூடும். அனைத்து வேலைகளையும் நம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். உங்கள் அசாத்தியத் திறமையால் சம்பாதிக்கும் திறன் அதிகரிக்கும். அரசு வேலைகளுக்கு மனுச் செய்தவர்கள் சாதகமான பதில்களை எதிர்பார்க்கலாம். நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் தர்க்கம் செய்யாதிருப்பது நல்லது. அடிக்கடி தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள நேரும்.

 • இந்த வாரம் நீங்கள் ஈடுபடும் காரியங்களில் வெற்றி கிட்டும். அரசுப் பணிபுரிபவர்களுக்கு உயர்அதிகாரிகளின் உதவியால் பதவி உயர்வுகள் கிடைக்கலாம். பக்திப் பிரசங்கங்கள் கேட்பதில் ஆர்வம் ஏற்படும். புதிய தொழில் தொடர்புகளால் முன்னேற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்பட்டும், பதவி உயர்வின் மூலமாகப் பணப்பயன்களை அடைவீர்கள். புண்ணிய ஸ்தல யாத்திரைகள் சென்று மகிழ்வீர்கள். வியாபாரத்தில் திட்டமிட்டபடி புதிய விரிவாக்கங்களைச் செய்து முடிப்பீர்கள். அதன் காரணமாக வருவாயும் ஓரளவு அதிகரிக்கும். சென்ற வாரம் இருந்த கவலைகளையெல்லாம் மறந்து மகிழ்ச்சி அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் சீர்படும். பிறரிடம் கோபத்தைக் காட்டாது அமைதியைக் கடைப்பிடியுங்கள்.

 • இந்த வாரம் பல வழிகளிலும் பணம் குவியும். உறவுகளின் உதவி உரிய நேரத்தில் கிடைக்கும். யாத்திரையும், வெளிநாட்டுப் பயணங்களும் மகிழ்ச்சி தரும். ஆன்மிக வழிகளில் ஆர்வம் அதிகரிக்கும். சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். புகழ், மரியதை ஆகியவை கூடும். குடும்பத்தில் நல்ல பல முன்னேற்றங்கள் ஏற்படும். நல்ஆரோக்கியம் ஏற்படும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். எடுத்த முயற்சிகள் அனைத்திலும் முன்னேற்றம் அடைவீர்கள். நல்ல நண்பர்களின் சேர்க்கை ஏற்பட்டு அவர்களால் ஆதாயம் அடைவீர்கள். பணவிஷயமான அலைச்சல்கள் அதிகம் இருக்கும். உடன் பிறப்புக்களிடையே கருத்து வேறுபாடு காரணமாக வாய்த் தகராறுகள் எழலாம்.

 • இந்த வாரம் தொழிலில் எதிர்பார்த்தபடி பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். சிலருக்கு நல்ல குரு வாய்க்கப் பெற்று ஆன்மிக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும், மனோதைரியம் காரணமாக எவரையும் எதிர்த்து வெற்றி பெறுவீர்கள். முழுமூச்சுடன் ஈடுபடும் வேலைகளில் புதிய சாதனைகளைப் படைப்பீர்கள். மனதிற்கினிய பெண்கள் சல்லாபம், முயற்சிகளில் வெற்றி போன்றவற்றால் மனம் மகிழும். பெரியோர்களின் ஆசியும், மேலதிகாரிகளின் ஆதரவும், புதிய நண்பர்களால் நன்மையும் ஏற்படும். மாணவர்களுக்கு விளையாட்டு, டி.வி ஆகியவற்றால் கவனச் சிதறல்கள் ஏற்படும். அதன் காரணமாகப் படிப்பில் ஆர்வம் குறையலாம். எனவே, ஆழ்ந்து படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறலாம்.

 • இந்த வாரம் எதிர்பார்த்த இடங்களிலிருந்து பணவரவு ஏற்படும். உறவுகள் மூலமாகவும் பணவுதவிகள் கிடைக்கலாம். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான செய்திகள் வந்து சேரும். பாசம் மிக்க பெண்களால் மனமகிழ்ச்சி ஏற்படும். பயணங்களால் சுகம் ஏற்படும். உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்த அளவுக்கு இலாபம் அடைய புதிய யுக்திகளைக் கடைப்பிடிப்பீர்கள். செலவுக்கும் குறைவிருக்காது. அரசுவகையில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைத்து வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பருவமாற்றம் காரணமாக சளி, தலைவலி, காய்ச்சல் என சிறு உடல் உபாதைகள் ஏற்படலாம். அதன் காரணமாக வைத்தியச் செலவுகள் கூடலாம்.

 • இந்த வாரம் நீங்கள் விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள். சுகமும், ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத பணவரவுகள் ஆகியவை ஏற்படும். புதிய தொழில் முயற்சிகளுக்காக எதிர்பார்க்கப்படும் வங்கிக் கடனுதவிகள் தாமதத்திற்குப் பின்னரே கிடைக்கும். அரசுப் பணியாளர்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். குடும்பத்தாரிடையே ஓரளவே ஒற்றுமை நிலவும். அவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பயணங்களில் இடையூறுகள் ஏற்படலாம். அரசு சம்பந்தமான வேலைகள் தாமதப்படலாம். தந்தை வகை உறவுகளால் தோல்லைகள் ஏற்படலாம். சிலருக்கு எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.

 • இந்த வாரம் உங்கள் விருப்பத்துக்கு இணங்க அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும், எவ்விதத் தடையின்றி வெற்றி பெறும். சுபகாரியங்களுக்காக வீடே விழாக்கோலம் பூணும். திடீரென ஏற்படும். பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடி வரும். தங்கள் சேவைகள் மேலதிகாரிகளால் அங்கீகரிக்கப்படும். அத்துடன் நல்ல பாராட்டும் பெறுவீர்கள். வியாபாரம் மற்றும் தொழிலில் புதுப்புது மாற்றங்களால் பண வருமானம் அதிகரிக்கும். வாடிக்கையாளரிடம் நெளிவு சுளிவாக நடக்கும் வியாபாரிகளுக்கு அதிக இலாபம் கிடைக்கும்

 • இந்த வாரம் இல்லத்துக்குத் தேவையான நவீன வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கி அனுபவிப்பீர்கள். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். விரும்பியதெல்லாம் கிடைக்கும். கணவன், மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் பாசமழை பொழிவர். பிள்ளைகளின் முன்னேற்றங்கண்டு பெருமை கொள்வீர்கள். பணிபுரியும் இடத்தில் உங்கள் உழைப்பின் சிறப்பு பாராட்டுப் பெறுவதோடு, பதவி உயர்வுக்கும் கைகொடுக்கும். வண்டி, வாகனங்களில் அபராதம் கட்டாதிருக்க அனைத்து ஆவணங்களையும் மறவாமல் கையோடு எடுத்துச் செல்லுங்கள். பொருளாதார நிலையை பொறுத்தவரை சீராக இருக்கும். சிலருக்கு ஏற்படும் திடீர் செலவுகளால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

 • இந்த வாரம் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடைபெறும். மனைவியின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்தால் இல்லத்தில் இன்பம் பொங்குவதோடு, முன்னேற்றங்களும் தேடிவரும். திறமை மிக்கவராக விளங்குவார். ஆயினும், அனுகூலமற்ற பயணங்களும் அதனால் லாபக் குறைவும் ஏற்படும். குடும்பத்திற்கு அதிகப்படியான வருமானம், கடின உழைப்புக்குப் பின் கிடைக்கும். பக்தி மார்க்கத்தில் அதிக ஈடுபாடு ஏற்படும். சிலர் பிறரால் ஏமாற்றப்படலாம். கவனம் தேவை. உத்தியோக முயற்சியில் இருப்பவர்களுக்குப் போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும். சிலருக்குப் புதிய தொழில் தொடங்க வங்கிக் கடன்களுக்கான முயற்சிகள் வெற்றி பெறும்

 • இந்த வாரம் பல திசைகளில் இருந்தும் பணம் கூடுதலாக வரும். பெண்களின் வாழ்க்கையில் துன்பங்கள் மறைந்து, முன்னேற்றம் ஏற்படும். வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும் சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கை, தொழில் இலாபம் ஆகியவை ஏற்படும். எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீர்கள். இனிய பயணங்கள் மற்றும் புண்ணியத் தல யாத்திரைகள் நல்ல பலன் அளிக்கும். விற்பனைப் பிரதிநிதிகளுக்கு அலைச்சலுக்குத் தக்க ஆதாயம் ஏற்படும். தாய் மூலமாக நன்மைகள் ஏற்படும். பழைய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் நல்ல வருமானத்தை அடைவார்கள். அந்தஸ்து உயரும்

 • இந்த வாரம் புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். புதிய விரிவாக்கங்கள் செய்வதினால் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு, அதிகாரிகளின் உதவியால் உயர்பதவிகள் கிடைக்கும். சுபச் செய்திகள் வந்து காதுகளில் தேனைப் பாய்ச்சும். புதிய கொள்முதல்களால் வியாபாரம் பெருகி இலாபம் அதிகரிக்கும். தொட்டது துலங்கும். பொழுது போக்குச் செலவுகள் அதிகமாகும். கடினமாக உழைத்தாலும், உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காது. சிலருக்குப் புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். புதிய கடன்களை அடைக்க, சேமிப்புக்களில் இருக்கும் பணத்தில் கை வைக்கவேண்டிய நிலை ஏற்படும்.

 • இந்த வாரம் நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். சிலருக்கு விஐபி களின் நட்பு கிடைக்கும். அவர்கள் மூலமாக ஆதாயங்கள் ஏற்படும். உங்கள் கீர்த்தி பெருகும். புனித காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். அரசுப் பணிக்கு முயல்பவர்களுக்கு அனுகூலமான காலமாகும். வழக்கு விவகாரங்களை ஒத்திப் போடுவது நல்லது. கால்நடைச் செல்வம், பால்வளம் பெருகும். மனதில் நினைத்ததை நினைத்தபடியே நடத்தி முடிப்பீர்கள். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் தயவால் அதிகாரம் பண்ணும் தலைப்பதவி கிடைக்கும். அவர்களுக்கு உதவியாளர்கள் அமைவர். பலவகைப் பயணங்களும் அதனால் இலாபமும் ஏற்படும்.

http://www.kathiravan.com/?page_id=1302