இராசிபலன்கள் : 30-3-2015 முதல் 5-4-2015 வரை

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

கதிரவனுக்காகக் கணித்து எழுதியவர் ஞானயோகி டாக்டர்.ப.இசக்கி,தமிழ்நாடு,இந்தியா.

 • மேசராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும்.மார்ச்30இ31பூ பழம் பூஜைப் பொருட்கள்இ கம்யுட்டர் துறைகளைச் சார்ந்தவர்
  கள்இதங்கம் வெள்ளி போன்ற பொருட்களை விற்பனை செய்வோர்கள்இபொதுப் பணித் துறைகள சார்ந்தவர்கள்இ ஆலயப் பணி செய்வோர்கள்இஅநாதை ஆசிரமங்களை நடத்துபவர்கள் ஆகியோர்கள் நற் பலன் அடைவீர்கள்.நீண்ட தூர யாத்திரையின் போது கை மற்றும் கால்களில் கவனம் தேவை.ஏப்ரல்1இ2இ3குழந்தைகளின் உடல் நிலையில் மிகவும் கவனமுடன் இருக்கவும்.பொருளாதாரத்தில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் மிக சிரமத்தின் பேரில் சரி செய்வீர்கள். வீடு மற்றும் தொழிற்சாலைகளை இட மாற்றம் செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளது.வங்கி உதவிகளின் மூலம் புதிய வாகனங்களை வாங்குவதற்கு முயற்சிகளைச் செய்வீர்கள்.தாய் உடல் நிலை பாதிப்பால் மருத்துவச் செலவுகள் உண்டாகலாம்.ஏப்ரல்4இ5கணவன் மனைவி உறவுகளில் இது நாள் வரையில் இருந்து வந்துள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமையுடன் காணப்படுவார்
  கள்.வேற்று மதத்தவர்களிடம் இருந்து எதிர் பார்த்திருந்த ஆதாயம் கிடைப்பதற்கு இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம்.குடும்பத்தில் தடை பட்டு வந்த சுப காரிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். பொது
  வாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

  இராசியான எண்:-3
  இராசியான நிறம்:-மஞ்சள்
  இராசியான திசை:-வடகிழக்கு
  பரிகாரம்:-சிவ வழிபாடு செய்து வரவும்.

 • ரிசபராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு கேது நன்மை தரும் கிரகமாகும்.மார்ச்30இ31அரசியல் வாதிகளுக்கு நல்ல ஆதாயம் பெறக் கூடிய காலமாகும். யாத்திரையின் போது மிக கவனமுடன் பயணம் செய்து வருவது நல்லது.சகோதர சகோதரிகளின் சுபகாரிய நிகழ்ச்சிகளுக்காகப் புதிய கடன்கள் வாங்குவதற்கு முயற்சிப்பீ;ர்
  கள். தீர்த்த யாத்திரை செய்து வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.காணாமற் போன பொருட்கள் காவல் துறையினர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும்.ஏப்ரல்1இ2 மஹான்களின் எதிர் பாராத தரிசனங்களால் மன நிம்மதி அடைவீர்கள்.கேட்ட இடத்தில் பணம் கிடைக்க இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம்.அரசு வழக்குகளில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது. பழைய நண்பர்களின் சந்திப்பால் ஒரு சிலருக்கு ஆதாயம் உண்டாகும். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகஎச்சரிக்கையாய் பேசி; பழகவும். ஏப்ரல்3இ4இ5தோல் சம்பந்தமான தொழில்கள்இஇரசாயனப் பொருட்களின் வியாபாரிகள்இபழைய இரும்பு கழிவுப் பொருள் வியாபாரிகள்இநாடகத் துறை சார்ந்தவர்கள்இமருத்துவப் பரிசோதனைக் கூடங்களை நடத்துபவர்கள்இஅணு ஆராய்ச்சித் துறைகளைச் சார்ந்த விஞ்ஞானிகள்இகழிவுப் பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் நற் பலன் அடைவீர்கள். வெளி நாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் சம்பந்தம் இல்லாத நபர்களின் உதவிகள் கிடைக்கும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.


  இராசியான எண்:-7
  இராசியான நிறம்:-கருஞ்சிகப்பு
  இராசியான திசை:-வடமேற்கு
  பரிகாரம்:-கணபதி வழிபாடு செய்து வரவும்.

 • மிதுனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்.மார்ச்30இ31உடம்பில் நரம்பு மற்றும் எலும்பு சம்பந்தமான உபாதைக்ள வந்து போகும். வெகு காலமாக விட்டுப் போன பழைய உறவினர்களுடன் தொடர்புகள் ஏற்படும்.காதல் சம்பந்தமான விசயங்களில் நல்ல செய்திகள் வந்து சேர சற்று கால தாமதம் ஆகலாம்.ஏப்ரல்1இ2இ3நெருப்பு சம்பந்தமான கேஸ் வெல்டிங் போன்ற தொழில்கள் சார்ந்தவர்கள்இகாவல் துறையை சார்ந்தவர்கள்இதீயணைப்பு நிலையத்தவர்கள்இவிளயாட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள்இஹோட்டல் தொழிற் செய்வோர்கள்இவிறகு மற்றும் நிலக்கரி போன்ற எரி பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன் அடைவீர்கள். மாணவர்
  கள் கல்வி மற்றும் விளையாட்டுக்களில் கவனமுடன் இருக்கவும். பிள்ளைகளுக்கு மருத்துவச் செலவுகள் உண்டாகும்.தந்தை மகன் உறவுகளில் இது வரையில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமையாய் இருப்பார்கள்.ஏப்ரல்4இ5காதல் விசயங்களில் எதிர் பார்த்து இருந்த நல்ல செய்திகள் வந்து சேரும் உடல் நிலையில் முதுகு மூலம் போன்ற தொல்லைகள் வந்து போகும்.செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச் சொல் வர இருப்பதால் எந்த விசயத்திலும் மிகவும் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது.வீடு வாகனங்களபை; புதுப்பித்தலுக்காகப் புதியகடன் வாங்குவதற்கு முயற்சிகளை செய்வீர்கள்..பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

  இராசியான எண்:-9
  இராசியான நிறம்:-சிகப்ப
  இராசியான திசை:-தெற்கு
  பரிகாரம்:-துர்க்கை வழிபாடு செய்து வரவும்.

 • கடகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும்.மார்ச்30இ31பூஜைப் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள்இகம்யுட்டர் சாதன வியாபாரிகள்இஆலயப்பணி செய்வோர்கள்இ நறுமணப் பொருட்களின் வியாபாரிகள்இ
  அநாதை ஆசிரமங்களை நடத்துவோர்கள்இ இனிப்புப் பொருட்களின் வியாபாரிகள்இ கம்யுட்டர் தயாரிப்பாளர்கள்இபேராசிரியர்கள்இபொதுப்பணி செய்வோர்கள்இஅற நிலைய துறைகளைச் சார்ந்தவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவீர்கள்.ஏப்ரல்1இ2இ3நண்பர்களின் உதவிகளால் நீண்ட தூர பயணங்களின் மூலம் எதிர் பார்த்து இருந்த காரியங்கள் நிறைவேறுதற்கு வாய்ப்புகள் உள்ளது.புதிய வீடு மாற்றம் செய்வதற்கான முயற்சிகளில் நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். விளையாட்டுத் துறை சார்ந்தவர்களுக்குப் பரிசு மற்றும் பாராட்டுக்களைப் பெறுவார்கள்.வராத கடன் கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் காவல் துiறியினர்களின் உதவியால் திரும்ப கிடைக்கும்.ஏப்ரல்4இ5கண் காதுகளில் சிற்சில உபாதைகள் வந்து போகலாம். நீண்ட காலமாக எதிர் பார்த்து இருந்த புதிய தொழில்களை ஆரம்பம் செய்வதற்காகப் போட்ட திட்டங்களில் வெற்றி பெறுவீர்கள்.யாத்திரையின் போது சம்பந்தம் இல்லாத புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் எதிர் பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள்.பொது
  வாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

  இராசியான எண்:-3
  இராசியான நிறம்:-மஞ்சள்
  இராசியான திசை:-வடகிழக்கு
  பரிகாரம்:-தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வரவும்.

 • சிம்மராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை கிகமாகும். மார்ச்30இ31ஏப்ரல்1தாயின் உடல் நிலையில் இருந்து வந்த பாதிப்புகள் சற்று குறையும். காதல் விசயங்களில் நண்பர்களின் உதவியால் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.மாண
  வர்கள் கல்வியில் சில தடைகள் வர இருப்பதால் கவனமுடன் சென்று வரவும்.மஹான்
  களின் எதிர் பாராத தரிசனங்களால் மன நிம்மதி அடைவீர்கள். வீடு வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலமாகப் புதிய பொருட் செலவுகள் வந்து சேரலாம்.தண்ணீர் கூல்டிரிங்ஸ்இதிரவ சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்இ கடல் துறை சார்ந்தவர்கள்இ
  கப்பல் பணி செய்வோர்கள் இதாய் சேய் நல விடுதிகளை நடத்துவோர்கள்இமருத்துறை சார்ந்த மாணவர்கள்இ பூஜைப் பொருள் வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்
  கள்.ஏப்ரல்2இ3நீண்ட காலமாப் பிரச்சனைகளில் இருந்து வந்து பூர்வீகச் சொத்துக்கள் பெரிய மனிதர்களின் தலையிடுதலால் கைக்கு வந்து சேரும்.குல தெய்வ ஆலயங்களை திருத்திக் கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடு பட்டு நற் பெயர் எடுப்பீர்கள்.ஏப்ரல்4இ5வெளி நாடு சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளில் வேற்று மதத்தவரால் ஆதாயம் உண்டாகும். கணவன் மனைவி உறவுகளில் காரணமற்ற சச்சரவுகள் வந்து நீங்கும். சுப காரிய சம்பந்தமாக வட திசையில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும் காலமாகும்.ரேஸ் லாட்டரிபோன்ற விசயங்களின் மூலமாகத் திடீர் தனவரவுகள் உண்டாக
  லாம்.பொதுவாக இது ஒரு நற் பலன் தரும் வாரமாகும்.

  இராசியான எண்:-2
  இராசியான நிறம்:-வெள்ளை
  இராசியான திசை:-மேற்கு
  பரிகாரம்:-அம்மன் வழிபாடு செய்து வரவும்.

 • கன்னிராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும்.மார்ச்30இ31கண் மற்றும் காதுகளில் மிக கவனமுடன் இருப்பது நல்லது. நணபர்களால் வீண் பிரச்சனைகள் வர இருப்பதால் மிக கவனமுடன் இருக்கவும்.அண்டை அயலார்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லதாகும்.ஏப்ரல்1இ2இ3நில புலன்கள் வாங்குவோர் விற்போர்கள்இகட்டிட சம்பந்தமான தொழிற் செய்வோர்கள்இகார் லாரி போன்ற வாகனத் தொழிற் செய்வோர்கள்இகலைத்துறை சார்ந்தவர்கள்இசினிமா மற்றும் நாடகத் துறைகளைச் சார்ந்த நடிகர்கள்இஆபரண அலங்காரப் பொருட்களின் வியாபாரிகள்இசிற்றுண்டி உணவுப் பொருட்கள் மற்றும் நறுமணப் பொருள் வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன் அடைவீர்கள். யாத்திரையின் போது புதிய நபர்களின் சந்திப்பால் சிற்சில காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளுவீர்கள்.மற்றவர்களின் விசயங்களில் தலையிட்டு மனநிம்மதி இழக்க வேண்டாம்.ஏப்ரல்4இ5பிள்ளைகளால் சிற்சில தொல்லைகள் ஏற்பட்டாலும் அவர்களால் பெயர்இபுகழ் அடைவீர்கள்.உற்றார் உறவினர்களின் வரவுகளால் நன்மை அடைவீர்கள்.தீராத நோய்கள் தீருவதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்ளுவீர்கள்.குல தெய்வ ஆலயத் திருப்பணிகளில் பங்கு கொண்டு மன நிறைவடை
  வீர்கள்.வங்கிகளின் மூலமாக நீண்ட காலமாக எதிர் பார்த்து இருந்த பணம் கிடைக்க இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

  இராசியான எண்:-6
  இராசியான நிறம்:-வெள்ளை
  இராசியான திசை:-தென்கிழக்கு
  பரிகாரம்:-மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.

 • துலாம் ராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும்.மார்ச்30இ31மற்றவர்களிடம் இருந்த எதிர் பாரத்த உதவிகள் கிடைக்கக் கூடிய காலமாகும்.புதிதாகக் கடன் வாங்கினால் திருப்பிச் செலுத்த இயலாமற் போக வாய்ப்பு உள்ளதால் கடன் வாங்குவதை தவிர்க்கவும்.விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் துலங்கும்.திருமணம் போன்ற சுப காரிய சம்பந்தமான முயற்சிகளில் சில தடைகள் வந்து சேரும்.ஏப்ரல்1இ2அரசு வழக்கு விசயங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கலாம். நண்பர்
  களால் வீண் பொருட் செலவுகளும் மன நிம்மதி இன்மையும் ஏற்படலாம். வாகனங்கள் மற்றும் மின்சார பணிகளில் ஈடுபடுவோர்கள் மிக கவனமுடன் இருக்கவும். வேண்டாத விசங்களில் தலையிட்டு வீண் வம்புகளை விலைக்கு வாங்காதீர்கள்.வெளி நாடு செல்லுதல் போன்ற விசயங்களில் வேற்று மதத்தவரால் ஆதாயம் அடைவீர்கள். ஏப்ரல்3இ4இ5தீராத நாட் பட்ட நோய்கள் தீர்வதற்காகப் புதிய மருத்துவர்களின் உதவிகள் கிடைக்கும்.குழந்தைகளின் மன மகிழ்ச்சிக்காக உல்லாசப் பயணங்களை மேற் கொள்ளு
  வீர்கள்.வெகு நாட்களாக வராத கடன் கொடுத்துள்ள பணம் திரும்ப கிடைக்கும்.பங்காளி
  யுடன் சேர்ந்த புதிய கூட்டுத் தொழிற் செய்வதற்கான மயற்சிகளைச் சற்று தள்ளிப் போடுதல் நல்லது.கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும்.சேர் மார்க்கெட்டில் ஈடு படுவோர்கள் சற்று கவனமுடன் இருக்கவும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

  இராசியான எண்:-1
  இராசியான நிறம்:-வெள்ளை
  இராசியான திசை:-கிழக்கு
  பரிகாரம்:-சிவ வழிபாடு செய்து வரவும்.

 • விருச்சிகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்.மார்ச்30இ31மாணவர்களுக்கு கல்வியில் எதிர் பாராத சில தடைகள் வந்து போக வாய்ப்பு உள்ளதால் மிக எச்சரிக்கையுடன் பயின்று வருதல் நல்லது. துலை தூரப் பயணங்களால் எதிர் பார்த்த காரியம் நிறைவேறும். குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வருவதற்கான முயற்சிகளில் ஈடு படுவீர்கள்.ஏப்ரல்1இ2பூமி நிலம் சம்பந்தமான தொழில்கள்இதங்கம் வெள்ளி போன்ற நகை வியாபாரிகள்இநெருப்பு தொழிற் செய்வோர்கள்இ
  காவல்துறை ராணுவம்இதீயணைப்பு போன்ற துறை சார்ந்தவர்கள்இகேஸ் வெல்டிங் சம்பந்தமான தொழிற் செய்வோர்கள் ஆகியோர்கள் நற் பலன் அடைவார்கள்.உற்றார் உறவினர்களின் எதிர் பாராத வரவுகளால் பொருட் செலவுகள் ஏற்பட்டாலும் அவர்களால் சில ஆதாயங்களை அடைவீர்கள்.ஏப்ரல்3இ4இ5நீண்ட காலமாக வராமல் இருந்த பணம் மற்றும் பொருட்கள் மிகுந்த சிரமத்தின் பேரில் வந்து சேரும் காலமாகும். தாயின் உடல் நிலை பாதிப்புக்களால் சிற்சில மருத்துவச் செலவுகள் வந்து சேரும். பணப் புழக்கத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறி நல்ல முன்னேற்றம் காணப்படும். பூர்வீகச் சொத்துக்களில் நீண்டகாலமாக இருந்து வந்துள்ள பிரச்சனைகள் தீர்ந்து சொத்துக்கள் கை வந்து சேரும் காலமாகும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

  இராசியான எண்:-9
  இராசியான நிறம்:-சிகப்பு
  இராசியான திசை:-தெற்கு
  பரிகாரம்:-முருகன் வழிபாடு செய்து வரவும்.

 • தனுசுராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும்.மார்ச்30இ31ஏப்ரல்1யாத்திரையின்போது மிகுந்த கவனமுடன் பயணம் செய்வதால் விபத்துக்களைத் தடுக்கலாம்.கலைத் துறை சார்ந்த நடிகர் நடிகைகள்இ கலைக் கல்லூரி மாணவர்கள்இ கட்டிட சம்பந்தமான கல் மணல் சிமிண்ட் செங்கல் போன்ற வியாபாரிகள்இ
  சிற்றுண்டி உணவு விடுதிகளை நடத்தும் வியாபாரிகள்இதிருமண மண்டபங்களை நடத்து
  பவர்கள்இஆடு மாடுஇ கார் லாரி வேன் போன்ற வாகனங்களை வைத்து இயக்குபவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவீர்கள். புதிய வீடு மற்றும் வாகனங்களை வாங்குவதற்கான முயற்சிகளில் சிலபின்னடைவுகள் வந்து சேரும்.ஏப்ரல்2இ3உடம்பில் வாயு மற்றும் வயிறு சம்பந்தமான உபாதைகள் வந்து போகலாம் நீண்ட காலமாக வராத கடன் கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் ஆகியன திரும்பக் கை வந்து சேரும். வேண்டாத விசயங்களில் தலையிட்டு வீண் பிரச்சனைகளை விலைக்கு வாங்காதீர்கள்.குடும்பத்தில் தடைபட்டு வந்த சுப காரிய நிகழ்ச்சிகள் நடைபெற இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம்.ஏப்ரல்4இ5குடும்பத்தில் நடைபெற வேண்டிய சுப காரிய நிகழ்ச்சிகளுக்காகப் புதிய கடன் வாங்குவீர்கள்.தந்தை வழிச் சொந்த பந்தங்களால் எதிர் பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள்.புதிய நண்பர்களிடம் சற்று எச்சரிக்கையுடன் பேசிப் பழகுதல் நல்லது..பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

  இராசியான எண்:-6
  இராசியான நிறம்:-வெள்ளை
  இராசியான திசை:-தென்கிழக்கு
  பரிகாரம்:-மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.

 • மகரராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும்.மார்ச்30இ31பழைய இரும்புஇபழமையான இயந்திரங்கள்இஇரசாயனம்இதரகு ஏஜன்சி குத்தகை போன்ற தொழிற் செய்வோர்கள்இசாயப் பவுடர் வியாபாரிகள்இபழைய பேப்பர்இ பிளா~;டிக் போன்ற பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள்இமடாலயப் பணிகளைச் செய்வோர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவீர்கள்.ஏப்ரல்1இ2இ3உடல் நிலையில் வயிறு மற்றும் மூல சம்பந்தமான உபாதைகள் வந்து போகும்.காணாமற் போன பொருட்கள் மற்றும் நபர்கள் திரும்ப வீடு வந்து சேர வாய்ப்பு உள்ளது. புதிய வீடு நிலங்களை வாங்குவதற்காக வங்கிகளில் இருந்து நீண்ட காலமாக எதிர் பார்த்து இருந்த பணம் கைக்கு வந்து சேரும். உத்தியோகம் பாரப்பவர்களுக்கு உத்தியோக உயர்வுடன் கூடிய பணி மாற்றங்கள் ஏற்படலாம். நண்பர்கள் வீட்டுச் சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்ளுவீர்
  கள்.ஏப்ரல்4இ5பொருளாதாரத்தில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் மாறி சற்று முன்னேற்ற
  மான சூழ்நிலை காணப்படும். பொருளாரத்தில் இது வரையில் இருந்த நெருக்கடிகள் மாறி முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். ரேஸ்இ லாட்டரி போன்ற சூதாட்டம் சம்பந்தமான விசயங்களில் பணம் மற்றும் பொருட்களை ஏமாறாமல் எச்சரிக்கையாய் இருப்பது நல்லது.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

  இராசியான எண்:-4
  இராசியான நிறம்:-கருப்பு
  இராசியான திசை:-வடமேற்கு
  பரிகாரம்:-பிதுர் மற்றும் அம்மன் வழிபாடு செய்து வரவும்.

 • கும்பராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும்.மார்ச்30இ31கணிதம் எழுத்துத் துறை சார்ந்தவர்கள்இஅச்சுத் தொழிற் செய்வோர்
  கள்இவழக்கறிஞர்கள்இகவிஞர்கள்இ பாடலாசிரியர்கள்இ தபால் தந்தித் துறை சார்ந்தவர்கள்இ
  புகைப்பட கலைஞர்கள்இவங்கிப் பணியாளர்கள்இபுகைப் படக் கலைஞர்கள்; ஆகியோர்கள் நற்பலனகள் அடைவீர்கள்.குல தெய்வ ஆலயங்களை திருத்திக் கட்டுவதற்கான நீண்ட கால முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.ஏப்ரல்1இ2தீராத நாட் பட்ட நோய்கள் தீர்வதற்காக புதிய பெண் மருத்துவர்களின் உதவிகளை நாடுவதன் மூலம் நற்பலன் அடைவீர்கள்.
  அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகு கவனதாகப் பேசிப் பழகுதல் நல்லது. விளையாட்டுத் துறை சார்ந்தவர்கள் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.நாட் பட்ட பழைய பிரச்சனைகள் மீண்டும் தலை தூக்குவதன் மூலம் மன நிம்மதிக் குறைவு ஏற்படலாம். வெகு காலமாகப் பிரிந்து போன கணவன் மனைவி இருவரும் ஒன்று சேரும் காலமாகும்.ஏப்ரல்3இ4இ5புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள். பங்காளிகளுடன் சேர்ந்து புதிய தொழில் ஆரம்பம் செய்வதற்கான முயற்சிகளில் எதிர் பார்த்த வெற்றி கிடைக்கும்.குடும்பத்தில் இதுவரையில் ஏற்பட்டு வந்துள்ள மருத்துவச் செலவுகள் குறையும்.பூர்வீகச் சொத்து சம்பந்தமான வழக்கு விசயங்களில் பெரிய மனிதர்களின் தலையிடுதலால் நல்லதொரு முடிவுக்கு வரும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

  இராசியான எண்:-5
  இராசியான நிறம்:-பச்சை
  இராசியான திசை:-வடக்கு
  பரிகாரம்:-மஹாவி~;ணு வழிபாடு செய்து வரவும்.

 • மீனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். மார்ச்30இ31வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. பழைய கடன்களை அடைத்து விட்டுப் புதிய கடன் வாங்குவீர்கள்.ஒரு சிலருக்கு வீடு மற்றும் வாகனங்களை மாற்றிப் புதியன வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது.தந்தை மகன் உறவுகளில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமையுடன் இருப்பார்கள்.ஏப்ரல்1.2இ3இரும்புஇஇயந்திரம் இரசாயனம் போன்ற தொழில் செய்வோர்கள்இஆலை அதிபர்கள்இஎண்ணை வியாபாரிகள்இபலசரக்கு கடை நடத்துவோர்கள்இ
  பழைய பொருட்களை விற்பனை செய்வோர்கள்இஇன்சினியரிங் துறைகளைச் சார்ந்தவர்கள்; ஆகியோர்கள் நற் பலன் அடைவீர்கள்.நெருப்புஇஹோட்டல்இமின்சாரம் போன்ற துறை சார்ந்த
  வர்கள்இஅரசுத்துறை சார்ந்த உயர் பதவி வகிப்பவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள்.ஏப்ரல்4இ5பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் சற்று குறைந்து காணப்படும்.சமுதாய வழர்ச்சிக்கான விசயங்களில் ஈடு படும் போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.பெண் சம்பந்தமான காதல் விசயங்களில் மிகுந்த கவனமுடன் இருப்பது நல்லது.மற்றவர்களை நம்பி புதிய கடன்களைக் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்.
  உற்றார் உறவினர்களின் எதிர் பாராத திடீர் வரவுகளால் பொருட் செலவுகள் வந்து சேரும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

  இராசியான எண்:-8
  இராசியான நிறம்:-நீலம்
  இராசியான திசை:-தென்மேற்கு
  பரிகாரம்:-சனீஸ்வர வழிபாடு செய்து வரவும். தொடரும்!

http://www.kathiravan.com/?page_id=1302
Share with your friends


Submit