இராசிபலன்கள் 3-1-2017 முதல் 10-1-2017 வரை

பிறப்பு : - இறப்பு :

வார பலன், ஜாதகம், Weekly Astrology Tamil, Weekly Astrology In Tamil, Tamil Weekly Astrology, Tamil Astrology For This Week, Tamil Astrology Weekly Predictions, Astrology In Tamil, Free Tamil Astrology, Tamil Astrology Horoscope, Tamil Astrology Rashi, Tamil Astrology Rashi Chart

கதிரவனுக்காகக் கணித்து எழுதியவர் ஜோதிடமணி பிரம்மஸ்ரீ ரகுநாத ஐயர் தமிழ்நாடு, இந்தியா

  • சிந்தனையை உடனடியாக செயல்படுத்த அவசரப்படுவீர்கள். கவுரவத்திற்காக சில விஷயங்களை உடனடியாக செய்ய வேண்டிய கட்டாய சூழல் தோன்றும். குடும்ப பொருளாதார நிலைக்கும், மகிழ்ச்சிக்கும் குறைவு நேராது. சொன்ன சொல்லைக் காப்பாற்ற கடுமையான முயற்சி தேவை. தொலைதொடர்பு சாதனங்கள், அஞ்சல் வழி தாமதங்களால் இழப்புகளுக்கு ஆளாகலாம். மாணவர்களின் கல்வி நிலை நன்றாக இருக்கும். உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பு உண்டு. உடல்நிலையில் உணரும் மாற்றங்களை உடனுக்குடன் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது. உங்கள் செயல்களுக்கு வாழ்க்கைத்துணை உறுதுணையாய் செயல்படுவார். எதிர்பாராத செலவுகள் உண்டானாலும் வீட்டினில் புதிய பொருட்கள் சேரும். பிரயாணங்களின் போது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் ரீதியாக போட்டி, பொறாமைகளைச் சந்திக்க நேரிடும். தேவையற்ற சிந்தனைகளால் கலைத்துறையினரின் உறக்கம் கெடும். சமபலனைத் தரும் வாரமிது.

  • மனதில் தர்ம சிந்தனைகள் கூடும். விட்டுக்கொடுத்து செல்லும் மனப்பான்மையினால் நற்பெயர் கிடைக்கும். குடும்பப் பெரியோர்கள், சாதுக்கள், சந்யாசிகள் மீது மரியாதை உண்டாகும். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தினரின் விருப்பங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து செயல்படுவீர்கள். பேச்சில் மகிழ்ச்சி வெளிப்படும். மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக இருக்கும். வாகனங்கள் லாபம் பெற்று தரும். பிள்ளைகளின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். கலைத்துறையினரின் புகழ் உயரும். வாழ்க்கைத்துணை உங்களுக்கு மிகுந்த பக்கபலமாக இருந்து செயல்படுவார். நண்பர்கள் மற்றும் கூட்டு முயற்சி விவகாரங்களில் உங்கள் திட்டத்தினை மாற்றிக் கொள்ள எண்ணுவீர்கள். தர்ம காரியங்களுக்கு அதிகம் செலவழிக்க வேண்டி இருக்கும். தொழில் ரீதியாக கடும் போட்டி இருந்தாலும் வெற்றி ஒன்றையே உங்கள் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவீர்கள். உங்களது முயற்சிக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும். நற்பலன்களைத் தரும் வாரம் இது.

  • எதிலும் கூடுதல் உழைப்பை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்ற முயற்சிப்பீர்கள். உடல்நிலையை பேண உணவில் கூடுதல் கவனம் அவசியம். தகவல் தொடர்பு சாதனங்களால் நன்மை காண்பீர்கள். மாணவர்களின் கல்வித் தரம் உயரும். வண்டி, வாகனங்கள், பிரயாணங்களால் நன்மை அடைவீர்கள். கலைத்துறையினருக்கு அலைச்சல் அதிகரித்தாலும் அதற்கான பயன் கிடைக்கும். சிந்தனைகளில் நிலவும் குழப்பங்களைக் களைய முயற்சிப்பீர்கள். உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. வாழ்க்கைத்துணையின் முயற்சிகளுக்கு உறுதுணையாய் இருந்து செயல்படுவீர்கள். ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். தொலைதூரப் பிரயாணங்களின் போது கவனம் அவசியம். தான தரும செலவுகள் அதிகரிக்கும். உங்களது உண்மையான உழைப்பும், அர்ப்பணிப்பும் தொழில் ரீதியாக மிகுந்த நற்பெயரையும், புகழையும் பெற்றுத் தரும். வியாபாரிகள் நல்ல தனலாபத்தினைக் காண்பார்கள். நற்பலனைத் தரும் வாரம் இது.

  • பல்வேறு விதமான பிரச்னைகளை எதிர்கொள்ள நேரும். நிதி நெருக்கடிகள் இருக்கும். அடுத்தவர்களால் இடைஞ்சல்கள் இருக்கும். அத்தியாவசியத் தேவைகளுக்காக செலவுகள் கூடும். பிரச்னைகளை துணிவுடன் சமாளிப்பீர்கள். உடன்பிறந்தோர் உதவிகரமாய் செயல்படுவார்கள். புதிய நண்பர்கள் சேருவார்கள். மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக இருக்கும். வாகனங்களால் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளின் வேகமான செயல்பாடுகளால் கூடுதல் செலவுகள் உண்டாகும். கலைத்துறையினர் போட்டியாளர்களை சமாளிக்க நேரும். உடல்நிலைக்கு முக்கியத்துவம் தர வேண்டிய நேரம் இது. வாழ்க்கைத்துணையின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள். அலுவலகத்தில் உங்களுடன் பணிபுரிபவர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றும். நேரத்தை நினைவில் கொண்டு சுற்றியுள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரிகள் அகலக்கால் வைக்காது நிதானத்துடன் செயல்படவேண்டும். ஆன்மிகப் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். சரிசமபலனைத் தரும் வாரம் இது.

  • உங்கள் முயற்சிகளில் வெற்றி பெற மற்றவர்களை சார்ந்திருக்க நேரும். கூட்டுமுயற்சிகள் வெற்றி பெறும். நண்பர்களால் கூடுதல் செலவுகள் ஏற்படும். குடும்ப பொருளாதார நிலையை உயர்த்தி கொள்ள சிரமம் இருக்கும். பேச்சில் கூடுதல் கவனம் அவசியம். தகவல்தொடர்பு சாதனங்களின் கோளாறுகள் உங்கள் வேகத்தை குறைக்கும். வாகனங்கள், பிரயாணங்கள் பயனுள்ள வகையில் அமையும். குழப்பங்கள் அநாவசிய பயத்தை உருவாக்கும். பிள்ளைகளால் கூடுதல் செலவுகளுக்கு ஆளாவீர்கள். கலைத்துறையினருக்கு எதிலும் கூடுதல் எச்சரிக்கை தேவை. உடல்நிலையில் கவனம் அவசியம். வாழ்க்கைத்துணை உங்களுக்கு பக்கபலமாக இருப்பார். நண்பர்களை நம்பி ஒப்படைத்த காரியங்கள் வெற்றி பெறும். குடும்பத்தில் சுப செலவுகளுக்கான வாய்ப்புகள் உருவாகும். குடும்பப் பெரியவர் ஒருவருடனான சந்திப்பு மகிழ்ச்சி தரும். உத்யோக ரீதியாக கடும் போட்டி இருக்கும். வியாபாரிகள் அடையும் லாபத்தினை மீண்டும் தொழிலிலேயே முதலீடு செய்ய வேண்டியிருக்கும். சுமாரான பலன்களைத் தரும் வாரம் இது.

  • எடுத்த செயல்களில் நன்மை உண்டாகும். எந்த ஒரு விஷயத்திலும் அடுத்தவர்களின் துணையுடன் செயல்பட்டு வெற்றி காண வேண்டி இருக்கும். பொருளாதார நிலையில் எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் லேசான சலசலப்பு தோன்றி மறையும். உடன்பிறந்தோரின் செயல்களால் மனவருத்தம் உருவாகும். அஞ்சல் மற்றும் தகவல் தொடர்பில் தாமதம் இழப்புகளை உண்டாக்கும். வாகன லாபம் உண்டு. மாணவர்களின் கல்வி நிலை சிறக்கும். கலைத்துறையினர் போட்டியான சூழலைக் காண்பர். ரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு கூடுதல் கவனம் அவசியம். சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. வாழ்க்கைத்துணை உங்களுக்கு மிகுந்த பக்கபலமாக இருந்து செயல்படுவார். நண்பர்களுடனான கூட்டு முயற்சிகள் வெற்றி பெற்று தரும். செலவுகள் கட்டுக்குள் வரும். ஆன்மிகப் பிரயாணங்கள் செல்ல திட்டமிடுவீர்கள். தொழில் ரீதியாக சிறப்பான நற்பலன்களைக் காண்பீர்கள். தேவையற்ற பயத்தால் உறக்கம் கெடும். நற்பலன்களைத் தரும் வாரம் இது.

  • மகிழ்ச்சி கூடும். வரவில் குறையிருக்காது. பொருளாதார நிலை உயரும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்தினை நிறைவேற்றுவீர்கள். உறுதி கூடும். தொலைதொடர்பு சாதனங்கள் தகுந்த நேரத்தில் கைகொடுக்கும். உடன்பிறந்தோர் உதவிகரமாய் செயல்படுவார்கள். வீட்டினில் மாற்றங்கள் செய்வீர்கள். வாகனங்களை புதிதாக மாற்றுவீர்கள். உறவினர்களுடனான சந்திப்பு குடும்பத்தில் கலகலப்பான சூழலை உருவாக்கும். பிள்ளைகளின் வேகமான செயல்கள் பெருமைகொள்ள செய்யும். மனதில் தோன்றுவதை அவசரப்பட்டு பேசி அவப்பெயர் வாங்குவீர்கள். சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு உடல்நிலையில் தீவிர கவனம் நல்லது. நண்பர்களில் நல்லவர், தீயவரைப் பிரித்தறிந்து பழகுவது நல்லது. ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்வது அவசியம். தொலைதூரப் பிரயாணத்தில் பொருளிழப்பு உண்டாகும் என்பதால் எச்சரிக்கை நன்று. தொழிலில் சிறப்பான நிலையை காண்பீர்கள். கலைத்துறையினர் புதிய முயற்சிகளை தவிர்க்கவும். நற்பலன்களை விளைவிக்கும் வாரம் இது.

  • எண்ணும் காரியங்களை உடனடியாக செய்து முடித்துவிட நினைப்பீர்கள். அவசரப்படாமல் நிதானித்து செயல்பட்டால் எதிலும் முழுமையான வெற்றி காண்பீர்கள். பொருளாதார நிலை உயர்ந்து சேமிப்புகளும் உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பேச்சில் கடுமையை தவிர்க்கவும். புதிய நண்பர்கள் சேருவார்கள். தொலைதொடர்பு சாதனங்கள் பயன்தரும். வாகனங்களில் செல்லும்போது கூடுதல் கவனம் தேவை. குடியிருக்கும் வீட்டினை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் உண்டு. மாணவர்கள் கூட்டுப்பயிற்சியில் வெற்றி காண்பர். உடல்நிலையை பராமரிக்க அதிக அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. ஒரு சில விஷயங்களில் வாழ்க்கைத்துணை உங்களோடு கருத்து வேறுபாடு கொள்வார். நண்பர்களை நம்பி ஒப்படைத்த காரியங்களில் லேசான சுணக்கம் காண்பீர்கள். பிள்ளைகளுக்காக அதிகம் செலவு செய்ய வேண்டி இருக்கும். குடும்ப பெரியவர்களின் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உத்யோக ரீதியாக சிறப்பான நிலையைக் காண்பீர்கள். வியாபாரிகளின் தொழில் நிலை சிறக்கும். கலைத்துறையினருக்கு தனலாபம் பெருகும். நற்பலன்களைக் காணும் வாரம் இது.

  • வாழ்க்கை நிலை மேம்படும். ஆயினும் பொருளாதார ரீதியாக சில சங்கடங்களை சந்திப்பீர்கள். எதிர்பார்க்கும் பண வரவில் தடை இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுவீர்கள். பிறர் செய்யத் தயங்கும் செயல்களைக் சவாலாக ஏற்று மிகுந்த தைரியத்துடன் செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தோர் உதவிகரமாய் செயல்படுவார்கள். வாகனங்கள் ஆதாயம் தரும். மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக இருக்கும். உறவினர்களுடனான சந்திப்பு மனதிற்கு சந்தோஷம் தரும். புதிய வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கு சாதகமான நேரம் இது. கலைத்துறையினர் வளர்ச்சி தரும் புதிய திட்டங்களை செயல்படுத்துவார்கள். வாழ்க்கைத்துணையின் செயல்கள் உங்கள் வெற்றிக்கு மிகுந்த துணை புரியும். ஆடம்பர செலவுகள் கூடும். முன்னோர்களின் சொத்துகளில் பாகப்பிரிவினைக்கான வாய்ப்பு உருவாகும். தொழில் நிலை வலுப்பெறும். உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்விற்கான வாய்ப்புகள் இருக்கும். வியாபாரிகள் தன லாபம் அடைவார்கள். சரிசம பலன்களைத் தரும் வாரம் இது.

  • மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்களது நெடுநாளைய கற்பனைகளும், கனவுகளும் மீண்டும் சிந்தனையில் இடம்பிடிக்கும். இன்பமயமான சூழலை அனுபவிக்க உள்ளீர்கள். குடும்பத்தில் நிலவும் சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிப்பீர்கள். பொருளாதார நிலைக்கு குறைவு உண்டாகாது. மனதில் தைரியம் அதிகரித்து சிறப்பாக செயல்படுவீர்கள். உடன்பிறந்தோருக்கு உதவ வேண்டிய சூழல் உருவாகும். தகவல் தொடர்பு சாதனங்கள் ஆதாயம் தரும். மாணவர்களின் அறிவுத்திறன் அதிகரிக்கும். வீட்டில் புதிய மாற்றங்கள் செய்வீர்கள். நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். பிள்ளைகளின் வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவை. வாழ்க்கைத்துணையின் எண்ணங்களுக்கு உறுதுணையாய் நிற்பீர்கள். செலவுகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். உணவுப் பொருட்களுக்காக அதிகம் செலவழிப்பீர்கள். கலைத்துறையினர் முன்னேற்றம் காண்பர். உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு இருக்கும். நற்பலன்களை அனுபவிக்கத் தொடங்கும் நேரமிது.

  • செயல்திறன் கூடும். எடுத்த காரியத்தில் மற்றவர்களை திறம்பட இயக்கி நினைத்த காரியத்தை நடத்தி முடிப்பீர்கள். பொருளாதார நிலையில் சங்கடம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திறமையான பேச்சால் கவுரவம் உயரும். மன உறுதி அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களுக்கு உதவி செய்வதில் இன்பம் காண்பீர்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் மிகுந்த ஆதாயம் தரும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். வாகனங்களால் செலவுகள் கூடும். உடல்நிலையில் கவனம் செலுத்தவேண்டியது அவசியம். வாழ்க்கைத்துணையின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள். செலவுகளைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுத்தாலும் திடீர் செலவுகளால் திக்குமுக்காட நேரும். முன்னோர்களின் சொத்துகளில் பிரச்னைகள் தோன்றும் வாய்ப்பு உள்ளது. உத்யோக ரீதியாக மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்படுவீர்கள். கலைத்துறையினர் தங்கள் உழைப்பிற்கான பலனை அடைவார்கள். சரிசம பலன்களைக் காணும் வாரம் இது.

  • எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுத்துவது அவசியம். அநாவசிய செலவுகள் அதிகரித்து வருத்தம் தரும். குடும்பத்தில் லேசான சலசலப்புகள் தோன்றும். உடன்பிறந்தோரால் சங்கடங்கள் உண்டாகும். தகவல்தொடர்பு சாதனங்கள் முக்கியமான நேரத்தில் செயலிழந்து சிரமம் தரும். மாணவர்களின் கல்வித் தரம் உயரும். வாகனங்கள் ஆதாயம் தரும். புதிய வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கு நேரம் சாதகமாக இருக்கும். பிள்ளைகளின் வாழ்க்கை தரம் உயரும். கொடுக்கல் வாங்கலில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. உடல்நிலையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. வாழ்க்கைத்துணையின் செயல்களுக்கு மிகுந்த பக்கபலமாக இருந்து செயல்படுவீர்கள். நண்பர்களால் நன்மை உண்டாகும். முன்னோர்களின் சொத்துகளில் பிரச்னைகள் தோன்றும். தொழில் ரீதியாக கடும் உழைப்பை வெளிப்படுத்தி நற்பெயர் காண்பீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்விற்கான வாய்ப்பு உண்டு. கலைத்துறையினர் நினைத்த லாபத்தை அடைய சிறிது காலம் காத்திருக்க வேண்டும். சரிசம பலன்களைத் தரும் வாரம் இது.

http://www.kathiravan.com/?page_id=1302
Share with your friends










Submit