இராசிபலன்கள் 3-02-2016 முதல் 9-02-2016 வரை

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

வார பலன், ஜாதகம், Weekly Astrology Tamil, Weekly Astrology In Tamil, Tamil Weekly Astrology, Tamil Astrology For This Week, Tamil Astrology Weekly Predictions, Astrology In Tamil, Free Tamil Astrology, Tamil Astrology Horoscope, Tamil Astrology Rashi, Tamil Astrology Rashi Chart

கதிரவனுக்காகக் கணித்து எழுதியவர் ஞானயோகி டாக்டர்.ப.இசக்கி,IBAM, RMP,DISM,தமிழ்நாடு, இந்தியா

 • மேலோட்டமாக இல்லாமல் எதையும் ஆழ, அகலமாக சிந்திப்பவர்களே! சுக்ரனும், புதனும் சாதகமாக இருப்பதால் மாறுபட்ட அணுகுமுறையால் எதையும் சாதிப்பீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். புது வீடு கட்ட வங்கி லோன் உதவி கிடைக்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். என்றாலும் ராகு, சனி மற்றும் செவ்வாயின் போக்கு சரியில்லாததால் எதிலும் பிடிப்பற்ற போக்கு, ஒருவித படபடப்பு, வீண் டென்ஷன், நெஞ்சு எரிச்சல், ஃபைப்ராய்டு, கணவருக்கு களைப்பு வந்துச் செல்லும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். சிலர் உங்களை காரியம் ஆகும் வரை பயன்படுத்தி விட்டு பிறகு உங்களை விட்டு விலகுகிறார் என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். அரசியல்வாதிகளே! உங்களின் கோரிக்கையை மேலிடம் பரிசீலிக்கும். கன்னிப் பெண்களே! பெற்றோர் உங்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு பாசமழைப் பொழிவார்கள். வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளால் மறைமுக நெருக்கடிகள் வந்துப் போகும். உழைப்பால் உயரும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 5, 7, 9 அதிஷ்ட எண்கள்: 2, 7 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, இளம்சிவப்பு அதிஷ்ட திசை: வடமேற்கு

 • கலங்கி வருபவர்களுக்கு கலங்கரை விளக்கமாய் இருப்பவர்களே! ராசிக்கு 6-ல் செவ்வாய் நிற்பதால் சவாலில் வெற்றி பெறுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பூர்வீக சொத்தால் வருமானம் வரும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துக் கொள்வார்கள். உறவினர், தோழிகளின் வருகையால் வீடு களைக்கட்டும். சமையலறையை நவீன மயமாக்குவீர்கள். சூரியன் 9-ல் நிற்பதால் அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால் உங்கள் திறமை மீது அவ்வப்போது சந்தேகம் வரும். குடிநீரை காய்ச்சி அருந்துங்கள். காய்ச்சல், வயிற்றுப் புண் வந்துச் செல்லும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். அரசியல்வாதிகளே! கட்சி மேல்மட்டத்திற்கு நெருக்கமாவீர்கள். கன்னிப்பெண்களே! காதல் இனிக்கும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் ஆலோசனையை முதலில் மறுத்தாலும் பிறகு ஏற்றுக் கொள்வார்கள். வருங்காலத் திட்டத்தில் ஒன்று முடியும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 3, 4, 8 அதிஷ்ட எண்கள்: 4, 8 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தாபச்சை, மஞ்சள் அதிஷ்ட திசை: மேற்கு

 • நினைத்ததை முடிக்கும் வரை நெருப்பாய் இருப்பவர்களே! ராசிநாதன் புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் சாதுர்யமாக பேசி பழைய பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் அல்லது அறை கட்டுவீர்கள். உறவினர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். ராகு வலுவாக அமர்ந்ததால் வேற்றுமதத்தவர்கள், இனத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். புது வேலை அமையும். சூரியன் 8-ல் நிற்பதால் சிறுசிறு நெருப்புக் காயங்கள், மாதவிடாய் கோளாறு வந்துச் செல்லும். அரசு காரியங்கள் இழுபறியாகும். வழக்கில் அலட்சியம் வேண்டாம். கன்னிப்பெண்களே! காதல் விவகாரத்தில் தள்ளியிருங்கள். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். அரசியல்வாதிகளே! மறைமுக எதிர்ப்புகள் வந்துச் செல்லும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். கடையை மாற்ற வேண்டிய சூழல் வரும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றி பெறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 6, 7, 9 அதிஷ்ட எண்கள்: 3, 7 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், ஆலிவ்பச்சை அதிஷ்ட திசை: தெற்கு

 • பகுத்தறிவும், பட்டறிவும் உள்ள நீங்கள், எதார்த்தமான முடிவுகள் எடுப்பதில் வல்லவர்கள். செவ்வாய் 4-ல் நிற்பதால் தடைகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். விடாமுயற்சியால் சில வேலைகளை முடிப்பீர்கள். பணப்பற்றாக்குறை இருந்துக் கொண்டேயிருக்கும். சொத்து வாங்குவது, விற்பது சுமூகமாக முடியும். என்றாலும் முக்கிய கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இல்லாததால் சிறுசிறு விபத்துகள், முன்கோபம், அலைச்சல், அடிவயிற்றில் வலி, காய்ச்சல் வந்துச் செல்லும். நீங்கள் யதார்த்தமாக பேசுவதைக் கூட கணவர் தவறாகப் புரிந்துக் கொள்வார். பிள்ளைகளின் நட்பு வட்டதை கண்காணிப்பது நல்லது. அரசாங்க அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். வழக்கை நினைத்து கவலையடைவீர்கள். உறவினர்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். அரசு காரியங்கள் தாமதமாகி முடியும். கன்னிப் பெண்களே! புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். அரசியல்வாதிகளே! சகாக்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள், பங்குதாரர்களால் நட்டங்கள் ஏற்படும். யாருக்கும் முன் பணம் தர வேண்டாம். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு வேறு சிலர் உரிமைக் கொண்டாடுவார்கள். வீரியத்தை விட்டு விட்டு காரியத்தில் கவனம் செலுத்த வேண்டிய வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 3, 5, 9 அதிஷ்ட எண்கள்: 1, 9 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, மயில்நீலம் அதிஷ்ட திசை: தென்கிழக்கு

 • கஷ்ட, நஷ்டங்களைக் கண்டு கலங்காதவர்களே! 6-ந் தேதி வரை அதிசாரத்தில் குரு 2-ம் வீட்டில் நிற்பதால் எதிர்ப்புகளை எளிதாக சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். வி.ஐ.பிகளின் அறிமுகம் கிட்டும். பழைய சொத்தை விற்று உங்கள் ரசனைக் கேற்ப புது வீடு வாங்குவீர்கள். வழக்கு சாதகமாக திரும்பும். கடனாக கொடுத்து ஏமாந்த தொகை கைக்கு வரும். வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் புது வேலை அமையும். விலகிச் சென்ற உறவினர், தோழிகள் வலிய வந்து உதவுவார்கள். ஆனால் 7-ந் தேதி முதல் குரு ராசியிலேயே ஜென்ம குருவாக அமர்வதால் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததால் வீண் செலவுகள், சையனஸ் தொந்தரவு, மூச்சுப் பிடிப்பு, தலைச் சுற்றல், வீட்டில் குடி நீர் குழாய் அடைப்பு, வாகனப் பழுது வந்து நீங்கும். அரசியல்வாதிகளே! கட்சித் தலைமைக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். கன்னிப் பெண்களே! பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் போட்டியாளர்களை முறியடிக்க அதிகம் உழைக்க வேண்டி வரும். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 5, 7, 8 அதிஷ்ட எண்கள்: 4, 6 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ஊதா அதிஷ்ட திசை: வடக்கு

 • பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் மீறாதவர்களே! சனி 3-ம் வீட்டில் நிற்பதால் துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய புது வழி பிறக்கும். வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார். நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சூரியன் 5-ல் நிற்பதால் வேலைச்சுமை, கழுத்து வலி, நரம்புச் சுளுக்கு, வீண் டென்ஷன் வந்துச் செல்லும். பிள்ளைகளிடம் முக்கிய குடும்ப விஷயங்களை பகிர்ந்துக் கொள்வதில் தவறில்லை. கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. சந்தேகத்தால் நெருங்கிய தோழியை பகைத்துக் கொள்ளாதீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்னையை அறிவுப்பூர்வமாக அணுகுவது நல்லது. 6-ந் தேதி வரை ராசியிலேயே குரு அமர்ந்திருப்பதால் நெஞ்சு எரிச்சல், வாய் புண், யூரினரி இன்பெக்ஷன் வந்துச் செல்லும். வங்கிக் காசோலையில் முன்னரே கையப்பமிட்டு வைக்க வேண்டாம். அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கன்னிப் பெண்களே! காதல் கசந்து இனிக்கும். உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தன்னம்பிக்கை துளிர்விடும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 3, 7, 9 அதிஷ்ட எண்கள்: 3, 6 அதிஷ்ட நிறங்கள்: வெளிர்நீலம், கிரே அதிஷ்ட திசை: வடகிழக்கு

 • ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக சாதிப்பவர்களே! சுக்ரனும், புதனும் சாதகமாக இருப்பதால் வருமானம் உயரும். சுபச் செலவுகளும் கூடும். பிரச்னைகளை சமாளிக்கும் யுக்திகளையும் தெரிந்துக் கொள்வீர்கள். வாகனத்தை மாற்றுவீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். உறவினர், தோழிகள் மத்தியில் செல்வாக்கு உயரும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். பூர்வீக சொத்தில் சேர வேண்டிய பங்கை கேட்டு வாங்குவீர்கள். ராசிக்குள் செவ்வாயும், 2-ல் சனியும் நிற்பதால் வெளுத்ததெல்லாம் பாலென நம்பி ஏமாந்துவிடாதீர்கள். சிறுசிறு நெருப்புக் காயங்கள், சகோதர வகையில் பிணக்குகள், வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்துச் செல்லும். வழக்கில் வழக்கறிஞரை மாற்ற வேண்டிய சூழல் உருவாகும். அரசியல்வாதிகளே! தலைமையின் ஆணையை மீறி தனி ஆவர்த்தனம் வேண்டாம். கன்னிப் பெண்களே! பெற்றோரின் ஆலோசனைகள் இப்போது கசப்பாக இருந்தாலும் பின்னர் அது சரியானது தான் என்பதை நீங்கள் உணர்வீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களிடம் கறாராக இருங்கள். உத்யோகத்தில் இரண்டாம் கட்ட உயரதிகாரிகளால் அவ்வப்போது ஒதுக்கப்பட்டாலும் மூத்த அதிகாரிகளால் முன்னுக்கு வருவீர்கள். மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 3, 4, 6 அதிஷ்ட எண்கள்: 2, 5 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், க்ரீம் வெள்ளை அதிஷ்ட திசை: தெற்கு

 • கறைபடியாத களங்கமற்ற மனசு கொண்டவர்களே! சூரியன் 3-ம் வீட்டில் நிற்பதால் எதிர்பார்த்த காரியத்தில் வெற்றி உண்டு. வீடு கட்ட அனுப்பியிருந்த கட்டிட வரைபடத்திற்கு அரசு அனுமதி கிட்டும். வழக்கு சாதகமாகும். புது வேலை அமையும். கமிஷன் வகைகளால் பணம் வரும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளின் பிடிவாத குணம் தளரும். மகனுக்கு நல்ல மணப்பெண் அமைவார். வெள்ளிப் பொருட்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதைக் கூடும். சகோதரிக்கு இருந்த பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். 12-ல் செவ்வாயும், ராசிக்குள் சனியும் தொடர்வதால் இனந்தெரியாத கவலை, கடன் தொந்தரவு, பணப்பற்றாக்குறை, தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும். யாருக்காகவும் சாட்சி கையப்பமிட வேண்டாம். அரசியல்வாதிகளே! தொகுதி மக்கள் நலனில் அதிக கவனம் செலுத்தப்பாருங்கள். கன்னிப் பெண்களே! உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளையும் தாண்டி அதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். புதிய திட்டங்கள் நிறைவேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 4, 6, 7 அதிஷ்ட எண்கள்: 1, 5 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், ஆலிவ்பச்சை அதிஷ்ட திசை: மேற்கு

 • பிரச்னையென வந்து விட்டால் சட்டம் பேசுபவர்களே! லாப வீட்டில் செவ்வாய் நிற்பதால் மனோபலம் அதிகரிக்கும். பாதித் தொகை தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதி பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். உடன்பிறந்தவர்கள் ஒடி வந்து உதவுவார்கள். திடீர் பயணங்கள் உண்டு. வேற்றுமதத்தவரின் ஆதரவுக் கிட்டும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். நவீன ரக எலக்ட்ரானிக் சாதனங்கள் வாங்குவீர்கள். 2-ல் சூரியன் நிற்பதால் சில நேரங்களில் பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும். கண் பார்வையை பரிசோதித்துக் கொள்ளுங்கள். 6-ந் தேதி வரை 10-ல் குரு நீடிப்பதால் சில நேரங்களில் ஏமாற்றங்களை உணர்வீர்கள். அரசியல்வாதிகளே! பரபரப்புடன் காணப்படுவீர்கள். கன்னிப் பெண்களே! உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன் அமையும். நட்பு வட்டம் விரியும். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. தைரியமான முடிவுகளால் முன்னேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 6, 8, 9 அதிஷ்ட எண்கள்: 5, 7 அதிஷ்ட நிறங்கள்: சில்வர்கிரே, மஞ்சள் அதிஷ்ட திசை: மேற்கு

 • நெருக்கடி நேரத்திலும் அடுத்தவர்களிடம் உதவி கேட்க தயங்குபவர்களே! சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் புதிய எண்ணங்கள் செயல் வடிவம் பெறும். புது பதவியும், பொறுப்பும் தேடி வரும். கல்யாணம், சீமந்தம், காதுகுத்து போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக் கட்டும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய வீட்டை இடித்து உங்கள் ரசனைக் கேற்ப கட்டுவீர்கள். வாகனத்தை மாற்றுவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். உறவினர், தோழிகள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ராசிக்குள் சூரியன் இருப்பதால் உடல் உஷ்ணத்தால் வேனல் கட்டி, சிறுசிறு விபத்துகள், வேலைச்சுமை வந்துச் செல்லும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. சர்ப்ப கிரகங்கள் உங்களுக்கு சாதமாக இல்லாததால் எதிலும் அவசரப்பட வேண்டாம். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். அரசியல்வாதிகளே! வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். கன்னிப் பெண்களே! புதிய நண்பர்களின் வருகையால் மகிழ்யடைவீர்கள். கூடாபழக்க வழக்கங்களை தவிர்த்துவிடுங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் கூடும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். வீண் சந்தேகம், மனக்கலக்கத்தை விலக்க வேண்டிய வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 3, 5, 7 அதிஷ்ட எண்கள்: 2, 9 அதிஷ்ட நிறங்கள்: இளம்சிவப்பு, பழுப்பு அதிஷ்ட திசை: வடக்கு

 • மற்றவர்களின் பலம் பலவீனம் அறிந்து செயல்படுபவர்களே! புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். பாதியிலேயே நின்று போன வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். அதிக வட்டிக்கு வாங்கிய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். ராசிக்குள் கேதுவும், 7-ல் ராகுவும் நிற்பதால் உணர்ச்சிவசப்படுவீர்கள். இரத்த அழுத்தம் அதிகரிக்கும். மற்றவர்களின் அறிவுரைகளை முழுமையாக நம்பி அதிரடியான முடிவுகளை எடுக்க வேண்டாம். அரசாங்க விஷயம் இழுபறியாகும். திடீர் பயணங்கள் உண்டு. அவ்வப்போது தூக்கம் குறையும். அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் மேல்மட்டத்தை விமர்சிக்க வேண்டாம். கன்னிப் பெண்களே! பெற்றோரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். அலுவலக சூட்சுமங்கள் அத்துபடியாகும். சக ஊழியர்களால் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். அலுப்பு, சலிப்பை தவிர்க்க வேண்டிய வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 5, 7, 9 அதிஷ்ட எண்கள்: 4, 7 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், ரோஸ் அதிஷ்ட திசை: தென்மேற்கு

 • சச்சரவுகளுடன் வருபவர்களை சமாதானப்படுத்துபவர்களே! சூரியனும், சுக்ரனும் லாப வீட்டில் நிற்பதால் நினைத்த காரியம் நிறைவேறும். அரசியலில் செல்வாக்கு உயரும். அதிகாரத்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். புதிதாக சொத்து சேர்க்கை உண்டாகும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையை உணர்வார்கள். சிலர் வெளிநாடு சென்று வருவீர்கள். பணவரவு உண்டு. எதிரும், புதிருமாக இருந்த உறவினர்கள் தன் தவறை உணர்வார்கள். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். 8-ல் செவ்வாய் தொடர்வதால் உள்மனதில் ஒருபயம், சின்ன சின்ன போராட்டம் வந்துப் போகும். ராகு 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் பிறமொழியினரால் ஆதாயமடைவீர்கள். வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அரசியல்வாதிகளே! வீண் பேச்சை தவிர்த்து தொகுதி நலனில் அக்கறை காட்டுங்கள். கன்னிப் பெண்களே! வெலுத்ததெல்லாம் பாலாக நினைத்து ஏமாறாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். புதுக் கிளைகள் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வி.ஐ.பிகளின் ஆதரவால் முன்னேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 6, 7, 8 அதிஷ்ட எண்கள்: 4, 6 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், வெள்ளை அதிஷ்ட திசை: தென்கிழக்கு

http://www.kathiravan.com/?page_id=1302
Share with your friends


Submit