இராசிபலன்கள் 29-3-2017 முதல்5-4-2017 வரை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]
வார பலன், ஜாதகம், Weekly Astrology Tamil, Weekly Astrology In Tamil, Tamil Weekly Astrology, Tamil Astrology For This Week, Tamil Astrology Weekly Predictions, Astrology In Tamil, Free Tamil Astrology, Tamil Astrology Horoscope, Tamil Astrology Rashi, Tamil Astrology Rashi Chart

கதிரவனுக்காகக் கணித்து எழுதியவர் ஜோதிடமணி பிரம்மஸ்ரீ ரகுநாத ஐயர் தமிழ்நாடு, இந்தியா

 • அலைச்சல் அதிகரிக்கும். எளிதில் முடிய வேண்டிய காரியத்திற்கும் கூடுதலாக முயற்சிக்க வேண்டியிருக்கும். விரக்தியான எண்ணங்களை விரட்டியடிப்பீர்கள். குடும்பத்தில் சலசலப்பு தோன்றி மறையும். உங்களை யாரும் புரிந்துகொள்ளவில்லை என்ற வருத்தம் இருக்கும். எதிர்பாராத செலவுகள் சேமிப்பைக் கரைக்கும். சொன்ன வார்த்தையைக் காப்பாற்ற அதிகம் மெனக்கெட வேண்டியிருக்கும். செல்போன், ரிமோட் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களில் பழுது உண்டாகலாம். உறவினர்களால் கலகம் தோன்றும். வாகன பயணத்தின் போது அதிக எச்சரிக்கை அவசியம். பிள்ளைகளின் எதிர்கால முன்னேற்றத்திற்காக திட்டமிட்டிருந்த பணிகள் தள்ளிப்போகும். திடீர் மருத்துவ செலவினை சந்திக்க நேரலாம். கலைத்துறையினர் சரியாக திட்டமிட இயலாது தடுமாறுவர். வேலைக்குச் செல்வோர் அலுவலகத்தில் புதிய திருப்புமுனையை சந்திப்பார்கள். கனவுத்தொல்லையால் இரவில் நிம்மதியான உறக்கம் கெடும். மாணவர்கள் சோம்பலாக உணர்வர். அலைச்சல் தரும் வாரம் இது

 • எதிலும் உங்கள் செயல்பாடு சிறப்பாக இருக்கும். நினைத்த காரியத்தை உடனுக்குடன் நடத்தி முடிப்பீர்கள். எடுத்த செயல்களில் இடைஞ்சல் வந்தாலும் எதிலும் நேர்மையை கடைபிடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சேமிப்பு உயர்வடையும். கடன் விவகாரங்கள் முடிவிற்கு வரும். நெடுநாட்களாக நிலுவையில் இருந்த தொகை ஒன்று வசூலாகும். பேச்சில் நகைச்சுவை உணர்வு வெளிப்படும். முன் பின் தெரியாத பெண்ணுக்கு உதவப்போய் சிரமத்திற்கு ஆளாவீர்கள். உறவினர்கள் வழியில் சுபசெலவுகளை சந்திக்க நேரிடும். பிள்ளைகளின் செயல்கள் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்வதோடு உறவினர்கள் மத்தியில் உங்களை தலைநிமிரச் செய்யும். உடல்நிலையில் சிரமம் தோன்றலாம். தம்பதியருக்குள் கருத்து வேறுபாடு தோன்றி மறையும். வேலை பார்ப்போர் அலுவலகத்தில் பிரச்னைகளை எளிதில் சமாளிப்பார்கள். மாணவர்கள் ஆராய்ச்சியில் வெற்றி காண்பர். கலைத்துறையினர் தங்கள் விருப்பம் நிறைவேறக் காண்பர். சிறப்பான நற்பலன்களைத் தரும் வாரம் இது

 • எதிலும் உங்கள் செயல்பாடு சிறப்பாக இருக்கும். நினைத்த காரியத்தை உடனுக்குடன் நடத்தி முடிப்பீர்கள். எடுத்த செயல்களில் இடைஞ்சல் வந்தாலும் எதிலும் நேர்மையை கடைபிடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சேமிப்பு உயர்வடையும். கடன் விவகாரங்கள் முடிவிற்கு வரும். நெடுநாட்களாக நிலுவையில் இருந்த தொகை ஒன்று வசூலாகும். பேச்சில் நகைச்சுவை உணர்வு வெளிப்படும். முன் பின் தெரியாத பெண்ணுக்கு உதவப்போய் சிரமத்திற்கு ஆளாவீர்கள். உறவினர்கள் வழியில் சுபசெலவுகளை சந்திக்க நேரிடும். பிள்ளைகளின் செயல்கள் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்வதோடு உறவினர்கள் மத்தியில் உங்களை தலைநிமிரச் செய்யும். உடல்நிலையில் சிரமம் தோன்றலாம். தம்பதியருக்குள் கருத்து வேறுபாடு தோன்றி மறையும். வேலை பார்ப்போர் அலுவலகத்தில் பிரச்னைகளை எளிதில் சமாளிப்பார்கள். மாணவர்கள் ஆராய்ச்சியில் வெற்றி காண்பர். கலைத்துறையினர் தங்கள் விருப்பம் நிறைவேறக் காண்பர். சிறப்பான நற்பலன்களைத் தரும் வாரம் இது

 • எடுத்த காரியத்தை முடிக்கும் வரை அதே சிந்தனையுடன் இருப்பீர்கள். பணிச்சுமை கூடும். அடுத்தவர்களின் பணிகளையும் இழுத்துப் போட்டு செய்வீர்கள். சிரமங்களை எளிதாக எடுத்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பப் பெரியவர்களின் உடல்நிலையில் கவனம் தேவை. கடன்பிரச்னைகளை சமாளிப்பதில் சேமிப்பு குறையும். சொன்னபடி நடப்பதில் அதிக கவனம் கொள்வீர்கள். உடன்பிறந்தோரிடமிருந்து எதிர்பார்த்த உதவி கிட்டும். நண்பர் ஒருவர் தன் குடும்பப் பிரச்னைக்கு ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார். பிள்ளைகளின் செயல்கள் உங்கள் கவுரவத்தை உயர்த்தும். இடுப்புவலி பிரச்னைகள் உடல்நிலையில் சிரமம் தரும். வாழ்க்கைத்துணையின் தேவைகளைப் புரிந்துகொண்டு உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். வேலை பார்ப்போர் அலுவலக பணி தொடர்பாக அதிக அலைச்சலுக்கு ஆளாவார்கள். மாணவர்கள் மனப்பாடத் திறன் மூலம் தேர்வினை சிறப்பாக எதிர்கொள்வர். கலைத்துறையினரின் புகழ் உயரும். கடமை உணர்வினால் ஓய்வின்றி செயல்படும் வாரம் இது

 • எடுத்த பணியை செய்து முடிப்பதற்குள் பல வழிகளிலும் தடைகளை சந்திப்பீர்கள். மிகவும் நம்பிக்கைக்குரிய நபர் ஒருவர் உங்களுக்கு எதிராக செயல்படுவதாக எண்ணுவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் கருத்துக்கு எதிர்மறையாக செயல்படுவர். எதிர்பாராத செலவுகள் சேமிப்பைக் கரைக்கும். சொன்னபடி நடப்பதில் அதிக சிரமம் காண்பீர்கள். அண்டை அயலாரோடு வீண் மனஸ்தாபம் தோன்றும். எலக்ட்ரானிக் சாதனங்களில் உண்டாகும் பழுது உங்கள் பணிகளை பாதிக்கலாம். உறவினர்களின் கலகத்தால் அவப்பெயர் வரும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை மனதில் தீவிரமாக இடம்பிடிக்கும். நுரையீரல், சுவாசக்குழாய் பகுதிகளில் அலர்ஜியால் சிரமம் தோன்றும். தம்பதியருக்குள் அன்யோன்யம் கூடும். கலைத்துறையினரின் முன்னேற்றத்தில் தடுமாற்றம் உண்டாகும். குறைந்த விலையுள்ள பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க நேரிடும். பணிக்குச் செல்வோர் அலுவலகத்தில் மேலதிகாரியோடு மோதல் போக்கினை சந்திக்க நேரும். மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியது அவசியம். தடைகளைத் தாண்டி வெற்றி காண வேண்டிய வாரம் இது

 • நெடுநாட்களாக நிலுவையில் உள்ள பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். இக்கட்டான சூழலில் ஏதேனும் ஒரு வழியில் உதவி வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் மன நிலையைப் புரிந்துகொண்டு உங்களுக்கு துணைநிற்பர். உங்கள் பேச்சில் வெளிப்படும் கடுமை மற்றவர் மனதைப் புண்படுத்தக்கூடும். வரவு சிறக்கும். சேமிப்பு உயர்வடையும். உடன்பிறந்தோருக்கு உதவுவீர்கள். தகவல் தொடர்பு சாதனங்களால் உங்கள் பணிச்சுமை குறையும். வீட்டை சுத்தமாக வைத்திருக்க அதிக கவனம் செலுத்துவீர்கள். பிள்ளைகளின் பேச்சு உங்களை பிரமிப்பில் ஆழ்த்தும். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் உடல்நிலையில் அதிக கவனம் கொள்வது அவசியம். தம்பதியராக இணைந்து செய்யும் காரியங்கள் வெற்றி தரும். கலைத்துறையினர் எதிர்பார்க்கும் உதவி வந்து சேரும். வேலைக்குச் செல்வோர் அலுவலக பணிகளை உடன் பணிபுரிவோர் துணையுடன் எளிதாக செய்து முடிப்பர். மாணவர்கள் மனப்பாடத் திறனை உயர்த்தி கொள்வது அவசியம். முன்னேற்றம் காணும் வாரம் இது.

 • மன உறுதி அதிகரிக்கும். சோதனைகள் இருந்தாலும் எந்த ஒரு விஷயத்திலும் வெற்றி பெற வேண்டும் என்ற உறுதியோடு இறுதி வரை போராடுவீர்கள். எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் கூட இழுபறி தரும். குடும்பத்தினர் உங்களை புரிந்துகொள்ளவில்லை என்ற வருத்தம் இருக்கும். உடன்பிறந்தாரோடு கருத்து வேறுபாடு தோன்றும். உறவினர்களுக்கு ஓடோடிச் சென்று உதவுவதில் மகிழ்ச்சி கொள்வீர்கள். பிள்ளைகள் தங்கள் தேவைகளுக்கு உங்களைப் பெரிதும் சார்ந்திருப்பர். மருத்துவ செலவுகள் உண்டாகும் வாய்ப்புள்ளதால் உடல்நிலையில் கவனம் தேவை. சம்பந்தமில்லாத விவகாரங்களில் தலையிடுவதால் சங்கடங்களை சந்திக்க நேரிடும். தம்பதியருக்குள் கருத்து வேறுபாடு தோன்றி மறையும். பணிபுரிவோர் அலுவலகத்தில் தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவார்கள். மாணவர்கள் மனப்பாடத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். கலைத்துறையினர் கடும் போட்டியை சந்திப்பர். சோதனைகளைக் கடந்து வெற்றி காணும் வாரம் இது.

 • மனதில் உள்ள ஆசைகளை வெளிப்படுத்த சரியான சந்தர்ப்பம் அமையும். நெடுநாட்களாக நிலுவையில் உள்ள பணி ஒன்றை சரியான நபர்கள் துணையோடு செய்து முடிப்பீர்கள். கவுரவம் உயரும். குடும்பத்தில் உள்ள சலசலப்பினை போக்க முயற்சிப்பீர்கள். பேச்சால் காரியங்களை எளிதாக சாதித்துக் கொள்வீர்கள். சேமிப்பு உயரும். சிக்கன நடவடிக்கைகள் வெற்றி தரும். செல்போன் முக்கியமான நேரத்தில் செயலிழந்து போய் சங்கடம் தரும். உறவினர்களை உபசரிப்பதில் அதிக கவனம் கொள்வீர்கள். பிள்ளைகளின் சாமர்த்தியம் மிக்க செயல்பாடுகள் உங்கள் கவுரவத்தை உயர்த்தும். மனதில் தோன்றும் கருத்துகளை தம்பதியருக்குள் மட்டும் பகிர்ந்து கொள்வது நல்லது. வீட்டுச் செலவுகள் அதிகரித்திருப்பதாக உணர்வீர்கள். கலைத்துறையினரின் கற்பனைகள் செயல்வடிவம் பெறும். வேலைக்குச் செல்வோர் தனித்திறமை மூலம் மேலதிகாரியின் நம்பிக்கைக்கு பாத்திரமாவர். மாணவர்கள் எழுத்து வேகத்தினை உயர்த்திக் கொள்வது அவசியம். நற்பலன்களைத் தரும் வாரம் இது.

 • வாழ்க்கை தரம் உயர்வடையும். நீண்ட நாட்களுக்குப் பிறகு சுகமான சூழலை சந்திப்பீர்கள். எதிர்பார்த்து காத்திருந்த பொருள் ஒன்று உங்கள் கைக்கு வந்து சேரும். உங்களைத் தவறாக எண்ணியவர்கள் உண்மையை உணர்ந்து நட்புறவு நாடி வருவர். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பேச்சில் உறுதி இருக்கும். சொன்ன வாக்கை காப்பாற்ற அதிக கவனம் கொள்வீர்கள். பண வரவு உயர்ந்து கடன்சுமை குறையும். உறவினர் ஒருவரோடு உண்டான மனஸ்தாபம் நீங்கும். கைகால் தளர்ச்சி, அசதி, மயக்கத்தால் உடல்நிலையில் சிரமம் உண்டாகலாம். பிள்ளைகளின் செயல்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும். குடியிருக்கும் வீட்டை அலங்கரிப்பதில் அதிக நாட்டம் கொள்வீர்கள். தம்பதியராக இணைந்து வெளியூர் பிரயாணம் செல்வீர்கள். கடன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. வேலை பார்ப்போர் கவனக்குறைவால் செய்யும் தவறுகளால் சிரமத்திற்கு உள்ளாவர். மாணவர்கள் நண்பர்களோடு இணைந்து கூட்டுப் பயிற்சி மேற்கொள்வது நல்லது. கலைத்துறையினர் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். சுகம் தரும் வாரம் இது

 • செயற்கரிய சாதனைகள் படைப்பீர்கள். பயத்தால் ஒதுக்கிய காரியங்களை மீண்டும் கையிலெடுத்து வெற்றி காண்பீர்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். குடும்பத்தில் லேசான சலசலப்பு தோன்றும். பணவரவில் காணும் தடைகள் பொருளாதார ரீதியாக சிரமம் தரலாம். பேச்சில் எச்சரிக்கை அவசியம். எதிலும் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் தன்னம்பிக்கையோடு காரியமாற்றுவீர்கள். அண்டை அயலாரின் துணையோடு பொதுப்பிரச்னைகளை தீர்க்க முயற்சிப்பீர்கள். செல்போன், இன்டர்நெட் முதலானவை உங்கள் பணியை வெகு சுலபமாக்கும். அரசுத்துறை சார்ந்த பணிகள் முடிவிற்கு வரும். பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக ஆர்வத்தோடு பாடுபடுவீர்கள். வேலைக்குச் செல்வோர் வாக்கு சாதுர்யத்தால் அலுவலகத்தில் தங்கள் காரியங்களை எளிதாக சாதித்துக் கொள்வர். மாணவர்கள் எழுத்து வேகத்தினால் உயர்வடைவர். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். முயற்சியால் வெற்றி காணும் வாரம் இது.

 • உங்கள் கனவுகள் நிறைவேறும். விரும்பிய பொருள் ஒன்றை வாங்க சந்தர்ப்பம் சாதகமாக அமையும். சேமிப்பு உயர்வடையும். தங்கம், வெள்ளியிலான நகைகளில் முதலீடு செய்வது உத்தமம். குடும்பத்தில் கலகலப்பும், சலசலப்பும் கலந்திருக்கும். பேச்சில் அதிகாரம் இருக்கும். உறவினர்கள் மத்தியில் உங்கள் வார்த்தைகள் அதிக முக்கியத்துவம் பெறும். முன்பின் அறிந்திராத விவகாரங்களில் கூட தைரியத்துடன் இறங்கி சாதிப்பீர்கள். வீட்டில் ஏ.சி., ஃபிரிட்ஜ், ஏர்கூலர் முதலான குளிர்சாதனப் பொருட்கள் சேரும். பிள்ளைகளின் துறுதுறுப்பான பேச்சுகள் மகிழ்ச்சி தரும். முகத்தினில் அலர்ஜியால் புதிய பிரச்னைகள் தோன்றலாம். வாழ்க்கைத்துணையின் வார்த்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பீர்கள். செலவுகள் வெகுவாக குறையும். பணிபுரிவோர் திறமையான பேச்சால் பதவி உயர்வு காண்பர். மாணவர்கள் மனப்பாடத்திறன் மூலம் தேர்வை எளிதாக எதிர்கொள்வர். கலைத்துறையினருக்கு பேச்சுத்திறமை கூடும். லாபம் தரும் வாரம் இது.

 • எதிலும் சிறப்பான செயல்பாடு இருக்கும். உங்கள் கவுரவத்தை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காமல் செயல்படுவீர்கள். சுறுசுறுப்பு கூடும். குடும்பத்தினர் தங்கள் தேவைகளுக்கு உங்களையே பெரிதும் சார்ந்திருப்பர். சிறப்பான வரவு இருக்கும். சேமிப்பு உயரும். சொன்ன வாக்கை காப்பாற்ற கவனம் கொள்வீர்கள். திடீர் விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். அலங்காரப் பொருட்களை சேகரிப்பதில் அதிக ஆர்வம் கொள்வீர்கள். உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். பிள்ளைகளின் நடவடிக்கைகளை அதிக அக்கறையோடு கண்காணிப்பீர்கள். உஷ்ணத்தால் உடல்நிலையில் பிரச்னைகள் உருவாகக் கூடும். தம்பதியருக்குள் அன்யோன்யம் கூடும். பண விவகாரங்களைத் தனித்துக் கையாள்வது நல்லதல்ல. வேலை பார்ப்போர் கவனக்குறைவால் மேலதிகாரியின் கண்டிப்புக்கு ஆளாக நேரிடும். கலைத்துறையினர் இலக்கு நிர்ணயித்து செயல்படுவார்கள். மாணவர்கள் சுறுசுறுப்பின் காரணமாக நற்பெயர் அடைவர். தன்னம்பிக்கையால் உயர்வடையும் வாரம் இது

http://www.kathiravan.com/?page_id=1302