இராசிபலன்கள் 29-03-2016 முதல் 04-04-2016 வரை

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

வார பலன், ஜாதகம், Weekly Astrology Tamil, Weekly Astrology In Tamil, Tamil Weekly Astrology, Tamil Astrology For This Week, Tamil Astrology Weekly Predictions, Astrology In Tamil, Free Tamil Astrology, Tamil Astrology Horoscope, Tamil Astrology Rashi, Tamil Astrology Rashi Chart

கதிரவனுக்காகக் கணித்து எழுதியவர் ஞானயோகி டாக்டர்.ப.இசக்கி,IBAM, RMP,DISM,தமிழ்நாடு, இந்தியா

  • கடந்த காலத்தை மறக்காதவர்களே! குரு பகவான் 5-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் மாறுபட்ட யோசனைகள் மனதில் பிறக்கும். பெரிய பதவியில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். புது வீடு கட்டி குடிப் புகுவீர்கள். வெளியில் கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர், தோழிகள் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துக் கொள்வார்கள். சூரியன் 12-ம் வீட்டில் மறைந்திருப்பதால் வீண் அலைச்சல், பழைய கடன் நினைத்த கவலைகள், அடிவயிற்றில் வலி வந்துச் செல்லும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வழக்கால் நெருக்கடிகள் வந்து நீங்கும். 11-ம் வீட்டில் கேது அமர்ந்திருப்பதால் ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் ஆதாயம் உண்டாகும். ஷேர் மூலம் பணம் வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். அரசியல்வாதிகளே! கோஷ்டி பூசலாலும், உங்களைப் பற்றிய வதந்திகளாலும் உங்கள் புகழ் குறையும். கன்னிப்பெண்களே! பெற்றோர் உங்களின் விருப்பங்களை நிறைவேற்றுவார்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். தொழில் ரீதியாக மற்றவர்களை நம்பி முடிவுகள் எடுக்க வேண்டாம். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். நீண்ட நாள் கனவுகள் நனவாகும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 1, 2, 4 அதிஷ்ட எண்கள்: 3, 5 அதிஷ்ட நிறங்கள்: கிளிப் பச்சை, ரோஸ் அதிஷ்ட திசை: தென்மேற்கு

  • செய்நன்றி மறவாதவர்களே! புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வீடு கட்ட லோன் கிடைக்கும். பிள்ளைகளின் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். சமையலறையை நவீனமயமாக்குவீர்கள். உறவினர், தோழிகள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். சகோதரிக்கு திருமணம் முடியும். ராகுவும், குருவும் சாதகமாக இல்லாததால் தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். நீங்கள் மறக்க நினைத்த கடந்த கால கசப்பான சம்பவங்கள் அவ்வப்போது நினைவுக்கு வரும். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். அரசியல்வாதிகளே! கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். கன்னிப் பெண்களே! உண்மையான காதல் எது என்பதை உணருவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தையும் சாதகமாகும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களின் குறைகளை சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 28, 29, 3 அதிஷ்ட எண்கள்: 1, 8 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பிங்க் அதிஷ்ட திசை: வடக்கு

  • வருங்காலத்தைப் பற்றி அதிகம் யோசிப்பவர்களே! செவ்வாய், சூரியன், சனி ஆகிய மூன்று கிரகங்கள் சாதகமாக இருப்பதால் வசதி, வாய்ப்புகள் பெருகும். தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும். பணப்புழக்கம் அதிகமாகும். நீண்ட காலமாக போக வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். திருமண முயற்சிகள் பலிதமாகும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். அரசால் ஆதாயமடைவீர்கள். வழக்கு சாதகமாக திரும்பும். வாஷிங் மெஷின், ஃப்ரிட்ஜ் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. குரு 3-ம் வீட்டில் இருப்பதால் அவ்வப்போது குழம்புவீர்கள். யாருக்கும் சாட்சி, கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். அரசியல்வாதிகளே! கட்சி தலைமை அதிசயிக்கும் படி சிலவற்றை செய்வீர்கள். கன்னிப் பெண்களே! காதல் இனிக்கும். உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். சிலர் சொந்த தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளின் அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்ல வேண்டாம். புதிய பாதை தென்படும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 28, 30, 2 அதிஷ்ட எண்கள்: 2, 4 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன் அதிஷ்ட திசை: தெற்கு

  • சமயோஜித புத்தி அதிகமுள்ளவர்களே! சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக் கேற்ப மாற்றிக் கொள்வீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். பிரபலங்களை சரியாகப் பயன்படுத்தி முன்னேறுவீர்கள். பழைய மனையை விற்று புது வீடு வாங்குவீர்கள். பணவரவு திருப்தி தரும். மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைப் போல நல்ல குடும்பத்திலிருந்து பெண் அமையும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால் வீண் விரையம், ஏமாற்றம், பண இழப்புகள், வேலைச்சுமை வந்துச் செல்லும். தந்தையின் ஆரோக்யம் பாதிக்கும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். அரசியல்வாதிகளே! எதிர்கட்சிக்காரர்களை நகைச்சுவையாகவும், நாசூக்காகவும் தாக்கிப் பேசி பொது மக்களின் ஆதரவைப் பெறுவீர்கள். கன்னிப் பெண்களே! கோபம் குறையும். பெற்றோரின் அறிவுரையை ஏற்றுக் கொள்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியாக சில மாற்றங்கள் செய்வீர்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் நினைப்பதை முடித்துக் காட்டுவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 28, 30, 2 அதிஷ்ட எண்கள்: 7, 9 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு அதிஷ்ட திசை: கிழக்கு

  • யாருக்காகவும் கொள்கையை மாற்றிக் கொள்ளாதவர்களே! புதன் சாதகமாக இருப்பதால் பிரச்சனைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து களைவீர்கள். கடனாக கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். சிலர் நல்ல காற்றோட்டம், குடிநீர் வசதி உள்ள வீட்டிற்கு மாறுவீர்கள். பழைய சொந்த-பந்தங்கள் வீடு தேடி வந்துப் பேசுவார்கள். ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள். ராசிக்குள் குருவும், ராகுவும் நிற்பதால் நெஞ்சு வலி, செரிமானக் கோளாறு, அசதி, சோர்வு, வாகன விபத்து வந்துச் செல்லும். கோபத்தால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வழக்கால் நிம்மதி இழப்பீர்கள். 4-ல் செவ்வாய் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் புது வேலை அமையும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். ஒரு சொத்தை விற்று மறுசொத்து வாங்குவீர்கள். அரசியல்வாதிகளே! சமயோஜித புத்தியாலும், காரசாரமான பேச்சாலும் எதிர்கட்சியினரை திணறடிப்பீர்கள். கன்னிப் பெண்களே! தடைப்பட்ட உயர்கல்வியை தொடரும் வாய்ப்பு வரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். வேலையாட்கள், பங்குதாரர்களால் மனஉளைச்சலுக்கு ஆளாவீர்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செல்லுங்கள். விமர்சனங்களையும் தாண்டி முன்னேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 30, 1, 3 அதிஷ்ட எண்கள்: 4, 8 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், நீலம் அதிஷ்ட திசை: வடமேற்கு

  • கலகலப்பாக பேசி சாதிப்பவர்களே! சனியும், செவ்வாயும் 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். தைரியம் கூடும். வீட்டை விரிவுப்படுத்தி, அழகுப்படுத்துவீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். கமிஷன், ஷேர் மூலம் பணம் வரும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். தள்ளிப் போன திருமணம் கூடி வரும். ராசிநாதன் புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் பாதியில் நின்ற வேலைகளெல்லாம் முடிவடையும். பள்ளிக் கல்லூரி காலத் தோழியை சந்தித்து மகிழ்வீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். சூரியன் 7-ல் நிற்பதாலும், 2-ந் தேதி வரை சுக்ரன் 6-ல் மறைந்திருப்பதாலும் மனஇறுக்கம், வீண் டென்ஷன், குழப்பம், உடல் உஷ்ணத்தால் வேனல் கட்டி வந்துச் செல்லும். அரசு காரியங்கள் இழுபறியாகும். அரசியல்வாதிகளே! சகாக்களைப் பற்றிக் குறைக் கூற வேண்டாம். கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் அக்கறை காட்டுங்கள். அரட்டைப் பேச்சை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து புது முடிவுகள் எடுப்பீர்கள். உத்யோகத்தில் உங்களுடன் பகைமை பாராட்டிக் கொண்டிருந்த உயரதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். கனிவாகப் பேசி காரியம் சாதிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 1, 2, 4 அதிஷ்ட எண்கள்: 1, 6 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, அடர் சிவப்பு அதிஷ்ட திசை: வடகிழக்கு

  • பாகுபாடு பார்க்காமல் பழகுபவர்களே! சூரியன், குரு மற்றும் ராகு உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நினைத்த காரியம் நிறைவேறும். ஆட்சியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். கௌரவப் பதவி, பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். மச்சினருக்கு வேலைக் கிடைக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வேற்றுமதத்தவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். மாமனார், மச்சினர் மனம் விட்டு பேசுவார்கள். 30-ந் தேதி வரை புதன் 6-ம் வீட்டில் மறைந்திருப்பதாலும், 2-ந் தேதி முதல் சுக்ரன் 6-ல் மறைவதாலும் வேலைச்சுமை, சயனஸ் இருப்பதைப் போல லேசான தலை வலி, இருமல், வாகன விபத்துகள் வந்துச் செல்லும். கணவர் குறைப் பட்டுக் கொள்வார். குடி நீர் குழாய், கழிவு நீர் குழாய் அடைப்பு வந்து நீங்கும். உறவினர், தோழிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். அரசியல்வாதிகளே! கட்சி மேல்மட்டத்தை சகாக்கள் மத்தியில் விமர்சிக்க வேண்டாம். கன்னிப் பெண்களே! உங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். தன் பலவீனங்களை சரி செய்துக் கொள்ளும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 28, 29, 4 அதிஷ்ட எண்கள்: 2, 6 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வெள்ளை அதிஷ்ட திசை: வடக்கு

  • நினைத்ததை மறைக்காமல் பேசுபவர்களே! சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் எடுத்த வேலைகளை முடிக்காமல் ஓய மாட்டீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். ராசிக்குள்ளேயே செவ்வாய் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் சகோதரங்கள் உங்களுக்கு சரியான நேரத்திற்கு உதவுவார்கள். புதிதாக சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் வந்துப் போகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். எதிர்மறை எண்ணங்கள் வரக்கூடும். வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசிப்பது நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். மற்றவர்கள் விஷயத்தில் அத்துமீறி மூக்கை நுழைக்காதீர்கள். அரசியல்வாதிகளே! கட்சி மேல்மட்டம் உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைக்கும். கன்னிப் பெண்களே! சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். குருவும், ராகுவும் சாதகமாக இல்லாததால் வேலைச்சுமை இருக்கும். வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். சுற்றியிருப்பவர்களின் உள்மனசை அறியும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 28, 30, 1 அதிஷ்ட எண்கள்: 4, 9 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், வைலெட் அதிஷ்ட திசை: கிழக்கு

  • நெருக்கடி நேரத்திலும் தன்னிலை தவறாதவர்களே! சுக்ரனும், சூரியனும் சாதகமான வீடுகளில் செல்வதால் எதிலும் வெற்றி அடைவீர்கள். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். வீட்டில் கூடுதலாக ஒரு அறைக்கட்டும் முயற்சி பலிதமாகும். வங்கி லோன் கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். தாம்பத்யம் இனிக்கும். பிள்ளைகளின் தேர்வு பயத்தை போக்குவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வாகனம் வாங்கவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். சிலருக்கு வேற்றுமாநிலத்தில் வேலைக் கிடைக்கும். ராகு, கேதுவின் சஞ்சாரம் சரியில்லாததால் இனந்தெரியாத கவலை, ஏமாற்றம், வீண் பழி வந்துச் செல்லும். அரசியல்வாதிகளே! சகாக்கள் உங்கள்மீது அதிருப்தியடைவார்கள். கன்னிப் பெண்களே! பெற்றோருக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் தனித்திறமையை வெளிப்படுத்துவீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். புகழ், கௌரவம் ஒருபடி உயரும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 30, 2, 4 அதிஷ்ட எண்கள்: 5, 7 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, மஞ்சள் அதிஷ்ட திசை: மேற்கு

  • தன்மானம் தவறாதவர்களே! சூரியன், செவ்வாய் மற்றும் சனி உங்களுக்கு சாதகமாக இருப்பதால் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது பதவிக்கு உங்களுடைய பெயர் பரிந்துரை செய்யப்படும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி அமையும். ஆடை, ஆபரணம் சேரும். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். அயல்நாட்டிலிருக்கும் தோழிகளால் உதவிகள் உண்டு. நிழல் கிரகங்களான ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால் வீண் டென்ஷன், மனஉளைச்சல், ஹார்மோன் பிரச்னை, பசியின்மை வந்து நீங்கும். அரசியல்வாதிகளே! இடம், பொருள், ஏவல் அறிந்து பேசுவது நல்லது. கன்னிப் பெண்களே! உங்களை ஏமாற்றி வந்த சிலரிடமிருந்து விடுபடுவீர்கள். வியாபாரம் தழைக்கும். இங்கிதமாகப் பேசி வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் மாறுபட்ட அணுகுமுறையால் மேலதிகாரியை வியக்க வைப்பீர்கள். என்றாலும் வேலைச்சுமை அதிகரிக்கும். திடீர் திருப்பங்கள் நிறைந்த வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 31, 1, 3 அதிஷ்ட எண்கள்: 4, 5 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, மெரூண் அதிஷ்ட திசை: வடமேற்கு

  • மகிழ்வித்து மகிழ்பவர்களே! சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் எதையும் சமாளிக்கும் மனப்பக்கும் கிடைக்கும். ஓரளவு பணவரவு உண்டு. வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்பொழுது நிறைவேறும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். வேற்றுமதத்தவர்கள், மொழியினர்கள் உதவுவார்கள். உறவினர், தோழிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். சர்ப்ப கிரகங்கள் மற்றும் சூரியன் சாதகமாக இல்லாததால் கறாராகப் பேசுவீர்கள். பல் வலி, பார்வை கோளாறு வந்துச் செல்லும். முக்கிய கோப்புகளை கவனமாக கையாளுங்கள். தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். அரசியல்வாதிகளே! கட்சியின் மூத்த உறுப்பினர்களைச் சந்தித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கன்னிப் பெண்களே! புதிய நண்பர்களின் வருகையால் மகிழ்யடைவீர்கள். அரசியல்வாதிகளே! கட்சியின் மூத்த உறுப்பினர்களைச் சந்தித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கன்னிப் பெண்களே! புதிய நண்பர்களின் வருகையால் மகிழ்யடைவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். எதிர்பார்ப்புகளில் சில நிறைவேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 29, 1, 2 அதிஷ்ட எண்கள்: 2, 7 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, வைலெட் அதிஷ்ட திசை: தெற்கு

  • தொட்ட காரியத்தை ஓய்வெடுக்காமல் முடிப்பவர்களே! செவ்வாய் 9-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் யதார்த்தமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். பழைய காலி மனையை விற்று புதிதாக வீடு வாங்குவீர்கள். வழக்கு சாதகமாகும். பிள்ளைகளை உற்சாகப்படுத்த கேட்டதை வாங்கித் தருவீர்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்தி வரும். புதிதாக வாகனம் வாங்குவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச் செலவுகள் அதிகமாகும். உறவினர், தோழிகளால் அனுகூலம் உண்டு. புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ராசிக்குள் சூரியனும், 6-ல் குருவும் நிற்பதால் முன்கோபம், ஒற்றை தலை வலி, உடல் உஷ்ணம், காரியத் தாமதம் வந்துச் செல்லும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். அரசியல்வாதிகளே! வீண் பேச்சை தவிர்த்து தொகுதி நலனில் அக்கறை காட்டுங்கள். கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் தள்ளி இருங்கள். வெலுத்ததெல்லாம் பாலாக நினைத்து ஏமாறாதீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். உத்யோகத்தில் அதிகாரியால் சில நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். மனோபலத்தால் நினைத்ததை முடிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 28, 30, 1 அதிஷ்ட எண்கள்: 1, 5 அதிஷ்ட நிறங்கள்: வெளீர்நீலம், மஞ்சள் அதிஷ்ட திசை: தென்மேற்கு

http://www.kathiravan.com/?page_id=1302
Share with your friends










Submit