இராசிபலன்கள் 28-09-2016 முதல் 04-10-2016 வரை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]
வார பலன், ஜாதகம், Weekly Astrology Tamil, Weekly Astrology In Tamil, Tamil Weekly Astrology, Tamil Astrology For This Week, Tamil Astrology Weekly Predictions, Astrology In Tamil, Free Tamil Astrology, Tamil Astrology Horoscope, Tamil Astrology Rashi, Tamil Astrology Rashi Chart

கதிரவனுக்காகக் கணித்து எழுதியவர் ஜோதிடமணி பிரம்மஸ்ரீ ரகுநாத ஐயர் தமிழ்நாடு, இந்தியா

 

  • எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை

  • குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை

  • திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்

  • குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை

  • கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். தோற்றப் பொலிவுக் கூடும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்

  • மதியம் மணி 1.45 வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்

  • குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மதியம் மணி 1.45 முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் எதிலும் முன்யோசனையுடன் செயல்பட வேண்டும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை

  • குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே

  • தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்

  • சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

  • மதியம் 1.45 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்

  • கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். ஆடை, ஆபரணம் சேரும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மதியம் மணி 1.45 முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்

http://www.kathiravan.com/?page_id=1302