இராசிபலன்கள் 28-07-2016 முதல் 04-08-2016 வரை

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

வார பலன், ஜாதகம், Weekly Astrology Tamil, Weekly Astrology In Tamil, Tamil Weekly Astrology, Tamil Astrology For This Week, Tamil Astrology Weekly Predictions, Astrology In Tamil, Free Tamil Astrology, Tamil Astrology Horoscope, Tamil Astrology Rashi, Tamil Astrology Rashi Chart

கதிரவனுக்காகக் கணித்து எழுதியவர் ஜோதிடமணி பிரம்மஸ்ரீ ரகுநாத ஐயர் தமிழ்நாடு, இந்தியா

 

  • சமூக சீர்த்திருத்த சிந்தனை கொண்டவர்களே! உங்களின் பாக்யாதிபதி குருபகவான் சாதகமாக இருப்பதால் எல்லா வகையிலும் வெற்றி கிட்டும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பெரிய மனிதர்கள் ஆதரவாக இருப்பார்கள். திடீர் பணவரவு உண்டு. ஷேர் மூலமும் பணம் வரும். தந்தைவழியிலும் சில உதவிகள் கிடைக்கும். சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். வீடு வாங்குவது, கட்டுவது சாதகமாக அமையும். வங்கிக் கடன் கிடைக்கும். பழுதான வாகனத்தை மாற்றி புது வண்டி வாங்குவீர்கள். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சொந்த-பந்தங்களால் மகிழ்ச்சி உண்டாகும். சூரியன் 4-ம் வீட்டில் நீடிப்பதால் கொஞ்சம் வேலைச்சுமை இருக்கும். தாயாரின் உடல் நிலை லேசாக பாதிக்கும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். 8-ம் வீட்டில் செவ்வாய் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் ஒரு வகையில் நல்லது நடக்கும் ஆனால் உங்கள் ராசிநாதன் சனியுடன் இணைந்திருப்பதால் அவ்வப்போது எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. கன்னிப் பெண்களே! தவறான எண்ணங்களுடன் பழகியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். கேது வலுவாக இருப்பதால் புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். வேலையாட்களால் வியாபாரத்தின் தரம் உயரும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் மனம் விட்டுப் பேசுவார்கள். பல ஆலோசனைகள் தருவீர்கள். கலைத்துறையினரே! எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தொலை நோக்கு சிந்தனையால் முன்னேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 26, 28, 30 அதிஷ்ட எண்கள்: 1, 9 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே அதிஷ்ட திசை: தென்கிழக்கு

  • பகிர்ந்தளித்து பிறர் பசி போக்கி மகிழ்பவர்களே! சூரியன் 3-ம் வீட்டில் இருப்பதால் மனோபலம் அதிகரிக்கும். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். உங்களுடைய ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். அரசியலில் செல்வாக்குக் கூடும். கௌரவப் பதவிகள் தேடி வரும். பெற்றோரின் ஆரோக்யம் சீராகும். புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் சாதுர்யமாகப் பேசி பல காரியங்களை முடிப்பீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வேலைக் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். பழைய இனிய சம்பவங்களை நினைவுக் கூர்ந்து மகிழ்வீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். செவ்வாய் 7-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் சொத்து வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். சகோதரங்கள் மதிப்பார்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். ஆனால் சனியும் 7-ம் வீட்டிலேயே நிற்பதால் மனைவிக்கு கழுத்து, முதுகுத் தண்டில் வலி, தூக்கமின்மை வந்துப் போகும். 4-ல் ராகுவும், குருவும் தொடர்வதால் வீட்டை விரிவுப்படுத்துவது, புதுப்பிப்பது போன்ற பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். கன்னிப் பெண்களே! பெற்றோர் உங்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு பாசமழைப் பொழிவார்கள். வியாபாரத்தில் லாபம் வரும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. பங்குதாரர்களுடன் கவனமாகப் பழகுங்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகளை திருப்திப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். சக ஊழியர்களால் நெருக்கடிகள் வந்து நீங்கும். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவீர்கள். கடந்த கால அனுபவங்களால் சாதிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 25, 26, 31 அதிஷ்ட எண்கள்: 2, 6 அதிஷ்ட நிறங்கள்: இளம்சிவப்பு, ஊதா அதிஷ்ட திசை: வடக்கு

  • தனக்கென எதையும் தேக்கி வைத்துக் கொள்ளாதவர்களே! சனியும், செவ்வாயும் வலுவாக 6-ம் வீட்டில் நீடிப்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பாதிப்பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதித் தொகை தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சகோதரிக்கு திருமணம் முடியும். கௌரவப் பதவிகளும், பொறுப்புகளும் தேடி வரும். வேற்றுமதம், மொழி, இனத்தவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் விலகிச் சென்ற உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். சிலருக்கு குழந்தை பாக்யம் கிடைக்கும். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். ராசிக்கு 2-ம் வீட்டில் சூரியன் நிற்பதால் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. 3-ல் நிற்கும் ராகு உங்களுக்கு வி.ஐ.பிகளை அறிமுகப்படுத்துவார். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு அயல்நாட்டில் அல்லது வேற்று மாநிலத்தில் வேலைக் கிடைக்கும். 3-ம் வீட்டில் குரு அமர்ந்திருப்பதால் பல வேலையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். கன்னிப் பெண்களே! பெற்றோருக்கு சில ஆலோசனைகள் வழங்குவீர்கள். வியாபாரம் செழிக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். கலைத்துறையினரே! உங்களின் கற்பனைத் திறன் வளரும். எங்கும், எதிலும் வெற்றி வாகை சூடும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 28, 30, 31 அதிஷ்ட எண்கள்: 4, 7 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், பிஸ்தாபச்சை அதிஷ்ட திசை: தென்மேற்கு

  • வருங்காலத் திட்டங்களை வடிவமைப்பதில் வல்லவர்களே! உங்கள் ராசிக்குள்ளேயே சூரியன் நிற்பதால் அடிக்கடி உணர்ச்சிவசப்படுவீர்கள். சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் கோபப்படாதீர்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். ஆனால் குரு வலுவாக அமர்ந்திருப்பதால் பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். பணமும் கைக்கு வரும். புது வாகனம் வாங்குவீர்கள். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். மகிழ்ச்சிகரமான செய்திகள் வரும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். புதனும், சுக்ரனும் சாதகமாக இருப்பதால் பழைய நண்பர்களால் ஆதாயம் உண்டு. பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். 5-ம் இடத்தில் செவ்வாய் ஆட்சிப் பெற்று வலுவாக அமர்ந்திருப்பதால் மகளுக்கு நல்ல வரன் அமையும். மகன் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வீர்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். 5-ம் வீட்டிலேயே சனியும் தொடர்வதால் கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால் ஏமாற்றம், இழப்பு, வீண் விரையங்கள் வந்துச் செல்லும். கன்னிப் பெண்களே! உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வந்து இணைவர். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். கலைத்துறையினரே! வசதி, வாய்ப்புகள் பெருகும். ராஜ தந்திரத்தால் முன்னேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 25, 27, 29 அதிஷ்ட எண்கள்: 5, 7 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை அதிஷ்ட திசை: வடக்கு

  • சாதுர்யமான பேச்சால் எதிராளிகளை கலங்கடிப்பவர்களே! ராசிக்குள் குருவும், ராகுவும் நிற்பதால் சின்ன சின்ன தொந்தரவுகள் இருக்கும். செரிமானக் கோளாறு, காய்ச்சல், சளித் தொந்தரவு, கை, கால் வலி, உடல் பலவீனமாகுதளெல்லாம் வந்துப் போகும். அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. தர்ம சங்கடமான சூழல்களில் அவ்வப்போது சிக்குவீர்கள். எந்த ஒரு வேலையையும் முதல் முயற்சியிலேயே முடியாமல் இரண்டாவது, மூன்றாவது கட்டத்தில் முடியும். ஆனால் சுக்ரனும், புதனும் சாதகமாக இருப்பதால் பணவரவு உண்டு. கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வாகன வசதிப் பெருகும். லோன் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். உங்கள் ராசிநாதன் சூரியன் 12-வது வீட்டில் மறைந்துக் கிடப்பதால் வேலைச்சுமை இருக்கும். எந்த காரியத்தை தொட்டாலும் தடங்களாகி முடியும். சோர்வு, களைப்பு வரும். புரோக்கர், ஏஜென்டுகளை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால் நீங்கள் ஒன்று சொல்லப் போய் அதை சிலர் வேறு விதமாகப் புரிந்துக் கொள்வார்கள். உங்களின் புகழ், கௌரவம் குறைய வாய்ப்பிருக்கிறது. கன்னிப் பெண்களே! திறமையான வகையில் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளும், மறைமுக எதிர்ப்புகளும் வந்து நீங்கும். கலைத்துறையினரே! உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். நாசுக்காகப் பேசி சாதிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 28, 30, 31 அதிஷ்ட எண்கள்: 1, 3 அதிஷ்ட நிறங்கள்: வெளிர்நீலம், பிங்க் அதிஷ்ட திசை: கிழக்கு

  • நாடி வந்தவர்களுக்கு நல்லதையே செய்பவர்களே! சனியும், செவ்வாயும் 3-ம் இடத்தில் தொடர்வதால் நினைத்தது நிறைவேறும். பெரிய பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். பங்குச் சந்தை மூலமாக பணம் வரும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப செயல்படுவீர்கள். வீட்டு விசேஷங்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். பாகப்பிரிவினை சுமூகமாக முடியும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். மாற்றுமதத்தவர்களால் ஆதாயம் உண்டு. பிரபல யோகாதிபதி சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். சிலருக்கு பதவிகள் தேடி வரும். ராசிநாதன் புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். சூரியன் லாப வீட்டில் நிற்பதால் அரசால் அனுகூலம் உண்டு. மூத்த சகோதர வகையில் நன்மை உண்டு. ராசிக்கு 12-ல் ராகுவும், குருவும் நீடிப்பதால் சுபச் செலவுகள் அதிகமாகும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது தூக்கம் குறையும். கன்னிப் பெண்களே! காதல் கைக்கூடும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. பழைய வேலையாட்கள், பங்குதாரர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகளால் பிரச்னைகள் இருந்தாலும், சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள். கலைத்துறையினரே! பொது நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்கும் அளவிற்கு பிரபலமாவீர்கள். அச்சம் விலகி அதிகாரம் பெருகும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 25, 29, 30 அதிஷ்ட எண்கள்: 4, 8 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, க்ரீம் வெள்ளை அதிஷ்ட திசை: வடமேற்கு

  • நாலு பேர் நாலுவிதமாகப் பேசினாலும் கலங்காதவர்களே! ராசிநாதன் சுக்ரன் சாதகமாக இருப்பதால் அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். எதிர்பாராத திடீர் திருப்பங்கள் ஏற்படும். கணவன்-மனைவிக்குள் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றி புது வாகனம் வாங்குவீர்கள். சிலர் வேறு வீடு மாற வேண்டுமென நினைப்பீர்கள். வராது என நினைத்து ஏமாந்த தொகையும் கைக்கு வரும். புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் தந்தைவழியில் உதவிகள் கிடைக்கும். தந்தைவழி சொத்து சேரும். வழக்குகள் சாதகமாக அமையும். வேலைக் கிடைக்கும். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். சூரியன் வலுவாக இருப்பதால் புண்ணிய காரியங்கள், சுப காரியங்களுக்கெல்லாம் தலைமைத் தாங்குவீர்கள். பெரிய பதவி, பொறுப்புகளும் வரும். மூத்த சகோதரங்கள் ஆதரவாக இருப்பார்கள். அரசாங்க வேலைகள் சாதகமாக முடியும். ராசிக்கு 2-ல் சனியும், செவ்வாயும் நீடிப்பதால் சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும். காலில் அடிப்பட வாய்ப்பிருக்கிறது. சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள். ராகுவும், குருவும் லாப வீட்டில் தொடர்வதால் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். வேலையாட்கள், பங்குதாரர்கள் மதிப்பார்கள். வி.ஐ.பிகளும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். கலைத்துறையினரே! வெகுநாட்களாக தடைபட்ட வாய்ப்புகள் கூடி வரும். கனவுகள் நனவாகும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 25, 26, 27 அதிஷ்ட எண்கள்: 6, 9 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, பிங்க் அதிஷ்ட திசை: தென்மேற்கு

  • வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை அறிந்தவர்களே! புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் எல்லாப் பிரச்னைகளையும், நெருக்கடிகளையும் சமாளிக்கும் சக்தி கிடைக்கும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். மனைவிவழியில் சில உதவிகள் கிடைக்கும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை சரி செய்வீர்கள். 9-ம் வீட்டில் சூரியன் நிற்பதால் திடீர் செலவுகளை தவிர்ப்பது நல்லது. தந்தைக்கு அசதி, சோர்வு, டென்ஷன் வந்துப் போகும். ராசிநாதன் செவ்வாய் ராசிக்குள் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். ஒரு சொத்தை விற்று சில பிரச்னைகளிலிருந்து வெளி வருவீர்கள். ராசிக்குள் சனி நிற்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். மூட்டு வலி, மூச்சுத் திணறல், கை, கால் மரத்துப் போகுதல் வந்துப் போகும். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியில் கொண்டிருக்காதீர்கள். ராகுவும், குருவும் 10-ல் தொடர்வதால் மறைமுக அவமானம், வீண் பழி, தர்மசங்கமான சூழல்களெல்லாம் வந்துப் போகும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். கன்னிப் பெண்களே! பெற்றோரின் ஆலோசனையின்றி எந்த முடிவுகளும் வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க வேண்டி வரும். வேலையாட்கள், பங்குதாரர்களிடம் அதிக கண்டிப்பு காட்ட வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கலைத்துறையினரே! விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். காத்திருந்து காய் நகர்த்த வேண்டிய வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 25, 26, 28 அதிஷ்ட எண்கள்: 3, 5 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், மஞ்சள் அதிஷ்ட திசை: மேற்கு

  • வாதாடும் குணம் கொண்டவர்களே! கேது 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். புதிதாக சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். வருங்காலத்தை உணரும் சக்தியும் உங்களுக்கு கிடைக்கும். நீண்ட காலமாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். புதனும், சுக்ரனும் சாதகமான நட்சத்திரங்கில் செல்வதால் மகிழ்ச்சியான சம்பவங்கள் குடும்பத்தில் நிகழும். பழைய நண்பர், உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். சூரியன் 8-ம் வீட்டில் தொடர்வதால் வீண் செலவுகள், ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கோவில் விழாக்களை நீங்கள் தான் முன்னின்று நடத்த வேண்டியிருக்கும். ஆனால் சிலர் உங்களை வேறு மாதிரியாக குற்றம் சாட்டி பேசினாலும் பலர் உங்களை பாராட்டி பேசுவார்கள். ராசிநாதன் குருபகவான் வலுவாக இருப்பதால் வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். கல்யாணப் பேச்சு வார்த்தை கைக்கூடும். ராசிக்கு 9-ல் ராகு தொடர்வதால் அவ்வப்போது தாழ்வு மனப்பான்மை வரும். தந்தையின் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். கன்னிப் பெண்களே! காதல் கசந்து இனிக்கும். கல்வித் தகுதிக்கேற்ப புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். வேலையாட்களின் பிரச்னைகள் ஓயும். வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் பக்கபலமாக இருப்பார்கள். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். அனுபவ அறிவால் வெற்றி பெறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 25, 27, 29 அதிஷ்ட எண்கள்: 2, 4 அதிஷ்ட நிறங்கள்: சில்வர்கிரே, ப்ரவுன் அதிஷ்ட திசை: கிழக்கு

  • இடம் பெயர்ந்து சென்றாலும் குலப்பெருமையை காப்பவர்களே! ராசிநாதன் சனியும், செவ்வாயும் வலுவாக இருப்பதால் உங்களின் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். வீட்டை விரிவுப்படுத்துவது, அழகுப்படுத்துவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அயல்நாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். சுக்ரனும், புதனும் சாதகமாக இருப்பதால் பிள்ளைகளின் நட்பு வட்டம் விரிவடையும். உறவினர், நண்பர்களில் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். சிலர் புது வீடு வாங்குவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள்-. ராசிக்கு 7-ல் சூரியன் நிற்பதால் கொஞ்சம் படபடப்பு வரும். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வரக்கூடும். குருவும், ராகுவும் 8-ல் தொடர்ந்துக் கொண்டிருப்பதால் வேலைச்சுமை, அலைச்சல் இருக்கும். சின்ன சின்ன காரியங்களைக் கூட இரண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். கன்னிப் பெண்களே! தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். பள்ளிக் கல்லூரிக் காலத் தோழியை சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு. வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். பங்குதாரருடன் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உங்கள் உழைப்பிற்கு வேறு சிலர் உரிமைக் கொண்டாடுவார்கள். கலைத்துறையினரே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். எதிர்பார்ப்புகளில் ஒரு சில நிறைவேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 28, 29, 31 அதிஷ்ட எண்கள்: 5, 8 அதிஷ்ட நிறங்கள்: இளம்சிவப்பு, வெள்ளை அதிஷ்ட திசை: தெற்கு

  • தன் பத்து விரல்களையே சொத்தாக நினைப்பவர்களே! சூரியன் 6-ம் வீட்டில் நிற்பதால் எதிர்ப்புகள் அடங்கும். அரசாங்க அதிகாரிகளின் தொடர்புக் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. உங்களைப் பற்றி அவதூறாகப் பேசியவர்களின் மனசு மாறும். மனதில் தன்னம்பிக்கை வரும். பழைய கடனைத் தீர்க்க சில வழி கிடைக்கும். புதன் உங்கள் ராசிக்கு 7-ல் அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்த்து கொண்டியிருப்பதால் சோர்வு, களைப்பு நீங்கி உற்சாகமடைவீர்கள். உறவினர், நண்பர்களுடன் இருந்து வந்த கசப்புணர்வுகள் விலகும். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். குரு வலுவாக இருப்பதால் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்குக் கூடி வரும். பணவரவு உண்டு. ஷேர் லாபம் தரும். சுக்ரன் 6-ம் வீட்டில் மறைந்திருப்பதால் மின்னணு, மின்சார சாதனங்கள் பழுதாகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகத்தால் கருத்து மோதல்களும், பிரச்னைகளும் வரக்கூடும். ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால் அவ்வப்போது சின்ன சின்ன மனக்குழப்பங்கள், தலைச்சுற்றல், முதுகு வலி, மூச்சிப் பிடிப்பு, வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலி வரக்கூடும். மின்சாரம், கத்திரி கோள், நக வெட்டி போன்றவற்றை கவனமாக கையாளுங்கள். கன்னிப் பெண்களே! சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். செவ்வாய் 10ல் அமர்ந்திருப்பதால் வியாபாரம் தழைக்கும். வேலையாட்கள், வாடிக்கையாளர்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் அலுவலகச் சூழ்நிலை அமைதி தரும். சக ஊழியர்கள் அனுசரித்துப் போவார்கள். கலைத்துறையினரே! உங்களுடைய வதந்திகளும், கிசுகிசுத் தொந்தரவுகளும் வந்துப் போகும். பதட்டப்படாமல் பகுத்தறிவை பயன்படுத்த வேண்டிய வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 25, 30, 31 அதிஷ்ட எண்கள்: 7, 9 அதிஷ்ட நிறங்கள்: பழுப்பு, ஊதா அதிஷ்ட திசை: வடமேற்கு

  • தன்னலத்தை ஒருபோதும் விரும்பாதவர்களே! ராகுவின் பலத்தால் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். ஆன்மீக ஆற்றல் கிட்டும். தெய்வ பலம் கூடி வரும். மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பெரிய பதவிகள், பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். புது வேலை அமையும். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். புதன் 6-ம் வீட்டில் மறைந்திருப்பதால் நண்பர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். உறவினர்களில் சிலர் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். சளித் தொந்தரவு, நரம்புச் சுளுக்கு, கழுத்து வலி வந்து நீங்கும். உங்கள் ராசிநாதன் குரு 6-ம் வீட்டில் மறைந்துக் கிடப்பதால் உங்களுக்கு தெரிந்த வி.ஐ.பியை நீங்கள் அறிமுகப்படுத்தி வைக்க வேண்டுமென பிடிவாதமாக கேட்பார்கள். இதுபோல சில தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டி வரும். சுக்ரன் வலுவாக இருப்பதால் விலை உயர்ந்தப் பொருட்கள், ஆபரணங்கள் வாங்குவீர்கள். வங்கிக் கடன் உதவிக் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். சூரியன் 5-ல் நிற்பதால் மனஇறுக்கம் உண்டாகும். பிள்ளைகளின் போக்கை கண்காணிப்பது நல்லது. பூர்வீக சொத்து விஷயத்தில் இப்போது தலையிட வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. கன்னிப் பெண்களே! புதியவர்கள் நண்பர்களாவார்கள். பெற்றோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சில சலுகைகளை அறிவிப்பீர்கள். பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. மேலதிகாரியை பகைத்துக் கொள்ளாதீர்கள். கலைத்துறையினரே! வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வரும். தடைகளையும் தாண்டி முன்னேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 25, 27, 28 அதிஷ்ட எண்கள்: 2, 6 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம்வெள்ளை, ரோஸ் அதிஷ்ட திசை: தெற்கு

http://www.kathiravan.com/?page_id=1302
Share with your friends










Submit