இராசிபலன்கள் 27-01-2016 முதல் 02-02-2016 வரை

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

வார பலன், ஜாதகம், Weekly Astrology Tamil, Weekly Astrology In Tamil, Tamil Weekly Astrology, Tamil Astrology For This Week, Tamil Astrology Weekly Predictions, Astrology In Tamil, Free Tamil Astrology, Tamil Astrology Horoscope, Tamil Astrology Rashi, Tamil Astrology Rashi Chart

கதிரவனுக்காகக் கணித்து எழுதியவர் ஞானயோகி டாக்டர்.ப.இசக்கி,IBAM, RMP,DISM,தமிழ்நாடு, இந்தியா

 • மனித நேயத்தின் மறுஉருவமாய் விளங்குபவர்களே! உங்கள் பூர்வபுண்யாதிபதி சூரியன் 10-ம் வீட்டில் கேந்திர பலம் பெற்றிருப்பதால் உங்களின் நிர்வாகத் திறன் கூடும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பணவரவு உண்டு. வீடு கட்ட பூமி பூஜைப் போடுவீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். புதனும், சுக்ரனும் சாதகமாக இருப்பதால் பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய முயல்வீர்கள். நட்பு வகையில் நல்ல செய்தி கேட்பீர்கள். மனைவிவழியில் உதவிகள் உண்டு. மனைவிவழி உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பழைய சொந்த-பந்தங்களை சந்திப்பீர்கள். குரு 6-ல் மறைந்திருப்பதால் அடுக்கடுக்காக செலவுகள், ஓய்வெடுக்க முடியாத அளவிற்கு வேலைச்சுமை, சில நேரங்களில் தூக்கமின்மை வந்துச் செல்லும். 7-ல் செவ்வாய் நிற்பதால் எதிர்மறை எண்ணங்கள், வீண் சந்தேகம், மனைவியுடன் சண்டை, சச்சரவு வரக்கூடும். வங்கிக் காசோலைகளில் முன்னரே கையெழுத்திட்டு வைக்க வேண்டாம். கன்னிப் பெண்களே! எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். கசந்த காதல் இனிக்கும். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சக ஊழியர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். கலைத்துறையினரே! உங்களின் திறமைகள் வெளிப்படும். கடின உழைப்பால் இலக்கை எட்டும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 25, 27, 31 அதிஷ்ட எண்கள்: 3, 6 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, நீலம் அதிஷ்ட திசை: தென்கிழக்கு

 • எதையும் இலவசமாக பெற்றுக் கொள்ள விரும்பாதவர்களே! உங்கள் ராசிநாதன் சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் எதிலும் உங்கள் கை ஓங்கும். பெரிய பதவிக்கு உங்கள் பெயர் முன்மொழியப்படும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வீடு கட்ட அப்ரூவலுக்கு அனுப்பியிருந்த கட்டிட வரை படத்திற்கு முறைப்படி அனுமதி கிடைக்கும். ஆனாலும் 7-ல் சனி நிற்பதால் சில நேரங்களில் சோர்வு, களைப்புடன் காணப்படுவீர்கள். நல்லவர்களின் நட்பை இழந்து விடாதீர்கள். பழைய கசப்பான சம்பவங்களை அசைப் போட்டு தூக்கத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம். செவ்வாய் 6-ல் நிற்பதால் மனைவி வழியில் உதவி உண்டு. சகோதரருக்கு திருமணம் முடியும். வழக்கு சாதகமாகும். புதன் சாதகமாக இருப்பதால் பிள்ளைகள் பொறுப்பாக இருப்பார்கள். சூரியன் 9-ம் வீட்டில் தொடர்வதால் தந்தையாருடன் விவாதம் வரும். சேமிப்புகள் கரையும். குரு அதிசாரத்தில் 5-ல் நிற்பதால் வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். கன்னிப் பெண்களே! பெற்றோரின் ஒத்துழைப்பு உண்டு. ஆடை அணிகலன்கள் சேரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். வேலையாட்கள் எதிர்த்துப் பேசுவார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவீர்கள். தள்ளிப் போன காரியங்கள் விரைந்து முடியும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 26, 25, 27 அதிஷ்ட எண்கள்: 2, 7 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை அதிஷ்ட திசை: கிழக்கு

 • எதிலும் புதுமையை விரும்புபவர்களே! தைரிய ஸ்தானமான 3-ம் வீட்டில் ராகு அமர்ந்ததால் சவாலான விஷயங்களைக் கூட எளிதாக முடிப்பீர்கள். உங்களின் தனித்திறமை அனைத்திலும் பளிச்சிடும். வி.ஐ.பிகளால் பாராட்டப்படுவீர்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். ராசிநாதன் புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் எதிர்பார்த்த பணம் வரும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். புதிதாக ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்குவீர்கள். 5-ல் செவ்வாய் நிற்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். சனி 6-ம் வீட்டில் வலுவாக நிற்பதால் சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்களால் உதவிகள் உண்டு. பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சூரியன் 8-ல் மறைந்திருப்பதால் எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். இயக்கம், சங்கம் இவற்றில் கௌரவப் பதவிகள் தேடி வரும். அரசால் அனுகூலம் உண்டு. கன்னிப் பெண்களே! திருமணப் பேச்சு வார்த்தைக் கைக்கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சில சலுகைகளை அறிவிப்பீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். புது பங்குதாரர் இணைவார். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். சக ஊழியர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். கலைத்துறையினரே! உங்களுக்கு பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும். விடாமுயற்சியால் விட்டதைப் பிடிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 25, 27, 30 அதிஷ்ட எண்கள்: 5, 9 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, ஆரஞ்சு அதிஷ்ட திசை: மேற்கு

 • மனதில் தோன்றுவதை மறைக்காமல் பேசுபவர்களே! யோகாதிபதியான செவ்வாய் கேந்திர பலம் பெற்று அமர்ந்திருப்பதால் சகோதரங்கள் உங்களின் உண்மையான அன்பை, பாசத்தைப் புரிந்துக் கொள்வார்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். சுக்ரனும், புதனும் ராசிக்கு 6-ல் மறைந்திருப்பதுடன், சூரியனும் 7-ல் நிற்பதால் வேனல் கட்டி, தொண்டை வலி, சளித் தொந்தரவு, சையனஸ் இருப்பதைப் போல் தலை வலி, மின்னணு, மின்சார சாதனப் பழுது, சிறுசிறு விபத்துகள் வந்துப் செல்லும். உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள் வந்துச் செல்லும். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோப் பிரச்னையால் பிரிவுகள் வரக்கூடும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். தந்தைவழியில் உதவிகள் உண்டு. குரு சாதகமாக இல்லாததால் யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். கன்னிப் பெண்களே! பரபரப்பாக காணப்படுவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். வேலையாட்கள் கொஞ்சம் முரண்டு பிடிக்கத்தான் செய்வார்கள். பங்குதாரரை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் மேலதிகாரியின் அறிமுகம் கிடைக்கும். சக ஊழியர்களின் குறைகளில் கவனம் செலுத்த வேண்டாம். கலைத்துறையினரே! உங்களின் படைப்புத் திறன் வளரும். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 25, 26, 27 அதிஷ்ட எண்கள்: 4, 8 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, பிஸ்தா பச்சை அதிஷ்ட திசை: தெற்கு

 • ஆரவாரம் இல்லாமல் அமைதியாக சாதிப்பவர்களே! ராசிநாதன் சூரியன் வலுவாக 6-ம் வீட்டிலேயே நிற்பதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பணபலம் உயரும். நாடாளுபவர்களின் தொடர்பு கிடைக்கும். அரசியலில் செல்வாக்குக் கூடும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பிதுர்வழி சொத்து பிரச்னை முடிவுக்கு வரும். தந்தைவழியில் மதிப்பு, மரியாதைக் கூடும். புதன் சாதகமாக இருப்பதால் உறவினர், நண்பர்களின் ஆதரவுப் பெருகும். செவ்வாய் ராசிக்கு 3-ம் வீட்டில் இருப்பதால் உங்களின் புகழ், கௌரவம் உயரும். சகோதரங்கள் மதிப்பார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். முன்பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்துக்கு மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். சர்ப்ப கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இல்லாததால் நெஞ்சு வலி, செரிமானக் கோளாறு, மனைவிக்கு டென்ஷன், மனஇறுக்கம் வந்துச் செல்லும். கன்னிப் பெண்களே! காதல் மற்றும் உயர்கல்வி சம்பந்தப்பட்ட குழப்பங்கள் நீங்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் புது பொறுப்பை ஒப்படைபார்கள். சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். கலைத்துறையினரே! உதாசீனப் படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும். திடீர் திருப்பங்கள் நிகழும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 25, 28, 31 அதிஷ்ட எண்கள்: 1, 9 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள் அதிஷ்ட திசை: வடகிழக்கு

 • தோல்விக் கண்டு துவளாதவர்களே! புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். சூரியன் 5-ல் இருப்பதால் பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. சனி வலுவாக 3-ல் அமர்ந்திருப்பதால் இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வேற்றுமதம், மொழி, இனந்தவரால் ஆதாயம் உண்டு. 2-ல் செவ்வாய் தொடர்வதால் தவிர்க்க முடியாத செலவுகள் இருந்துக் கொண்டேயிருக்கும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். பார்வைக் கோளாறு வந்துச் செல்லும். சகோதரங்களுடன் பகைமை வரக்கூடும். அதிசாரத்தில் குரு ராசிக்குள் அமர்ந்திருப்பதால் குடும்பத்தில் சலசலப்புகள், காய்ச்சல், கை, கால் வலி வந்துப் போகும். வங்கிக் காசோலையில் முன்னரே கையப்பமிட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். புது நட்பு மலரும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளுங்கள். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் ஒரே நேரத்தில் பல வேலைகளை பார்க்க வேண்டி வரும். சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கலைத்துறையினர்களே! விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 25, 26, 28 அதிஷ்ட எண்கள்: 2, 5 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், ப்ரவுன் அதிஷ்ட திசை: தென்மேற்கு

 • விருப்பு, வெறுப்பு இல்லாமல் நடுநிலையாக பேசுபவர்களே! ராகு வலுவாக அமர்ந்திருப்பதால் தொட்ட காரியம் துலங்கும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பு கிடைக்கும். புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள். குடும்பத்தில் நல்லது நடக்கும். சுப நிகழ்ச்சி, பொது விழாக்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். சூரியன் 4-ம் வீட்டில் நிற்பதால் தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். அரசால் ஆதாயம் உண்டு. மூத்த சகோதரர் சாதகமாக இருப்பார். சுக்ரன் சாதகமாக இருப்பதால் உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் தங்கும். மனைவிவழியில் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். நவீன ரக ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள். சொத்து வாங்குவீர்கள். ராசிக்குள் செவ்வாய் நிற்பதால் எதிலும் நம்பிக்கையின்மை, வீண் கவலைகள், ஒருவித படபடப்பு, சகோதர வகையில் மனத்தாங்கல் வந்துச் செல்லும். சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். 12-ல் குரு நிற்பதால் அவ்வப்போது தூக்கம் குறையும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து வேலையாட்களை மாற்றுவீர்கள். புது கிளைகள் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் நேரங்காலம் பார்க்காமல் உழைத்தும் எந்த பயனும் இல்லையே, என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். கலைத்துறையினரே! எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். காத்திருந்து காய் நகர்த்த வேண்டிய வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 25, 27, 30 அதிஷ்ட எண்கள்: 3, 7 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பழுப்பு அதிஷ்ட திசை: வடக்கு

 • கனிவான விசாரிப்பால் மற்றவர்களை கவர்ந்திழுப்பவர்களே! சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் நீண்ட நாள் கனவு நனவாகும். பழுதான வண்டியை மாற்றுவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னை தீரும். பழுதான மின், மின்னணு சாதனங்களை மாற்றுவீர்கள். யோகாதிபதி சூரியன் 3-ல் நிற்பதால் புது வேலை கிடைக்கும். அரசாங்க வேலைகள் உடனே முடியும். வெளிநாட்டு பயணங்கள் உண்டு. சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். ஏழரைச் சனி தொடங்கியிருப்பதால் கொஞ்சம் மனதில் கலக்கமும், சின்ன சின்ன ஏமாற்றங்களும் வந்த வண்ணமிருக்கும். யாருக்காகவும் ஜாமீன், காரெண்டர் கையெழுத்திட வேண்டாம். அனாவசியமாக யாரையும் வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். உடற்பயிற்சி செய்வது நல்லது. கன்னிப் பெண்களே! பெற்றோருக்கு சில ஆலோசனை வழங்குவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். வேலையாட்களால் ரகசியங்கள் கசியக் கூடும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் சொந்த விஷயங்களை உங்களிடம் சொல்லி ஆறுதல் அடைவார்கள். சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கலைத்துறையினரே! புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். சமயோஜித புத்தியால் சாதிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 26, 28, 29 அதிஷ்ட எண்கள்: 2, 9 அதிஷ்ட நிறங்கள்: இளம்சிவப்பு, வெள்ளை அதிஷ்ட திசை: வடகிழக்கு

 • சமூக அவலங்களைத் தட்டிக் கேட்க தயங்காதவர்களே! 2-ல் நிற்கும் சூரியன் கறாராகப் பேச வைப்பார். ஆனால் ரொம்பவும் காரமாகப் பேசினால் நீங்கள் முன்பு போல இல்லை இப்போது மாறி விட்டதாக சிலர் குறைக் கூறுவார்கள். மூக்குக் கண்ணாடி மாற்றுவீர்கள். பல் வலி சரியாகும். புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் பணவரவு அதிகரிக்கும். மனைவிவழியில் செல்வாக்குக் கூடும். புது வேலை அமையும். பூர்வீகச் சொத்தை புதுபிப்பீர்கள். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனை பைசல் செய்வீர்கள். வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவது, வீடு மாறுவது போன்ற முயற்சிகள் பலிதமாகும். வழக்கில் வெற்றி உண்டு. கல்யாண பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும். பூர்வ புண்யாதிபதி செவ்வாய் லாப வீட்டில் நிற்பதால் பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்வீர்கள். மதிப்பு, மரியாதைக் கூடும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். சொந்த-பந்தங்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். கேது 3-ம் வீட்டில் இருப்பதால் வீடு, மனை வாங்க லோன் கிடைக்கும். சாதுக்களின் ஆசிர்வாதம் பெறுவீர்கள். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். கன்னிப் பெண்களே! தோற்றப் பொலிவுக் கூடும். பெற்றோர் பாசமழைப் பொழிவார்கள். வியாபாரத்தில் புதுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். பணியாட்களிடம் கண்டிப்பு காட்ட வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கலைத்துறையினரே! வசதி, வாய்ப்புகள் பெருகும். சின்ன சின்ன எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 26, 28, 31, அதிஷ்ட எண்கள்: 6, 9 அதிஷ்ட நிறங்கள்: பச்சை, ஆரஞ்சு அதிஷ்ட திசை: தெற்கு

 • படிப்பறிவை விட பகுத்தறிவு அதிகமுள்ளவர்களே! குரு சாதகமாக இருப்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பொன் வைக்குமிடத்தில் பூவைப்பது போல தர வேண்டிய பணத்தில் ஒரு பகுதியை தந்து முடிப்பீர்கள். விலை உயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் விலகிச் சென்ற நண்பர்கள், உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சூரியன் ராசிக்குள் நிற்பதால் முன்கோபம், வேலைச்சுமை, காரியத் தாமதம் வந்துச் செல்லும். அரசு காரியங்கள் இழுபறியாகி முடியும். எட்டில் நிற்கும் ராகுவும், 2-ல் நிற்கும் கேதுவும் உங்களின் தன்னம்பிக்கையை சிதைக்கும். இடம், பொருள் ஏவலறிந்து பேசுங்கள். தவறை தவறென்று சொல்லாமல் இப்படி செய்தால் நன்றாக இருந்திருக்கும். நசூக்காக சுட்டிக் காட்டப்பாருங்கள். மறப்போம் மன்னிப்போம் என்றிருப்பது நல்லது. ராசிநாதன் சனிபகவான் லாப வீட்டில் நிற்பதால் மதிப்பு, மரியாதை கூடும். உங்களுடன் பழகிக் கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை ஒதுக்குவீர்கள். கன்னிப் பெண்களே! உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன் அமையும். தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். வியாபாரத்தில் கூடுலாக லாபம் பெறுவீர்கள். வேலையாட்கள் விசுவாசமாக நடந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்னுரிமைத் தருவார்கள். சக ஊழியர்கள் நேசக்கரம் நீட்டுவார்கள். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகள் பரவலாகப் பாராட்டிப் பேசப்படும். தன்னம்பிக்கையால் வெற்றி பெறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 25, 27, 29 அதிஷ்ட எண்கள்: 1, 5 அதிஷ்ட நிறங்கள்: வெளிர்நீலம், ப்ரவுன் அதிஷ்ட திசை: கிழக்கு

 • மறப்போம் மன்னிப்போம் என்ற கொள்கை உடையவர்களே! புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். பணவரவு திருப்தி தரும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பிள்ளைகளின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். வெள்ளிச் சாமான்கள் வாங்குவீர்கள். ராசிக்கு 12-ல் சூரியன் நிற்பதால் உடல் உஷ்ணத்தால் அடி வயிற்றில் வலி வந்துப் போகும். வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவீர்கள். ராசிநாதன் சனிபகவான் 10-ல் நிற்பதால் மனோ பலம் அதிகரிக்கும். கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். குரு 8-ல் நிற்பதால் வீண் விரையம், வேலைச்சுமை, திடீர் பயணங்கள் வந்துப் போகும். நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதம் ஏற்படக்கூடும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். ராசிக்குள் கேதுவும், 7-ல் ராகுவும் நிற்பதால் அசதி, சோர்வு, வயிற்றுப் புண், இன்பெக்ஷன், மனைவியுடன் விவாதங்கள் வந்துப் போகும். கன்னிப் பெண்களே! வருங்காலம் குறித்து சில புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகளை சாமார்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். பாக்கிகளை அலைந்து வசூலிப்பீர்கள். வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்யோகத்தில் அதிகாரிகள் சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். கலைத்துறையினரே! புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 25, 26, 27 அதிஷ்ட எண்கள்: 3, 8 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, பிங்க் அதிஷ்ட திசை: மேற்கு

 • தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பவர்களே! சூரியன் லாப வீட்டில் நிற்பதால் மேல்மட்ட அரசியல்வாதிகளின் தொடர்பு கிடைக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். பணபலம் உயரும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகள் உங்கள் மனங்கோணாமல் நடந்துக் கொள்வார்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் புதிதாக டி.வி., ஃப்ரிட்ஜ், செல்போன் வாங்குவீர்கள். புது நட்பு மலரும். ராகு 6-ல் வலுவாக அமர்ந்திருப்பதால் எதிர்த்தவர்கள் உங்களிடம் மனம் திருந்தி மன்னிப்பு கேட்பார்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டு மனை வாங்குவீர்கள். 7-ல் குரு நிற்பதால் சொந்த-பந்தங்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஷேர் பணம் தரும். கோவில் கும்பாபிஷேகத்திற்கு நன்கொடை வழங்குவீர்கள். 8-ல் செவ்வாய் தொடர்வதால் சகோதர வகையில் பிணக்குகள், சொத்து சிக்கல்கள், சிறுசிறு நெருப்புக் காயங்கள் வந்துச் செல்லும். இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பர். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்வீர்கள். பழைய பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரி மட்டத்தில் செல்வாக்கு கூடும். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். கலைத்துறையினரே! உங்களின் கற்பனைத் திறன் வளரும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 26, 27, 29 அதிஷ்ட எண்கள்: 3, 7 அதிஷ்ட நிறங்கள்: பழுப்பு, ஊதா அதிஷ்ட திசை: கிழக்கு

http://www.kathiravan.com/?page_id=1302
Share with your friends


Submit