
கதிரவனுக்காகக் கணித்து எழுதியவர் ஜோதிடமணி பிரம்மஸ்ரீ ரகுநாத ஐயர் தமிழ்நாடு, இந்தியா
-
நினைப்பது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருந்து மன வருத்தம் உண்டாகும். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வரவிற்கு குறைவிருக்காது. குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் அதிக முனைப்போடு செயல்படுவீர்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் விரயம் தரும். உடன் பிறந்தோரால் சிரமங்களுக்கு ஆளாக நேரிடும். தேவையற்ற பிரயாணத்தைத் தவிர்ப்பது நல்லது. வாகனங்களால் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். மாணவர்கள் சிந்தனைச் சிதறலால் அவதியுறுவர். பிள்ளைகளின் செயல்கள் எதிர்பார்ப்பிற்கு எதிராக அமையும்.
-
உத்யோகம் மற்றும் வாழ்க்கை தரம் இரண்டிலும் எதிர்பார்த்த சிறப்பான நிலையை எட்ட உள்ளீர்கள். பொருளாதார நிலை திருப்தி தரும். எதிர்கால சிந்தனைகள் மனதை ஆக்கிரமிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடன்பிறந்தோருக்கு உதவுவீர்கள். தகவல் தொடர்பு சாதனங்களால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் இல்ல விசேஷங்களுக்கு செல்ல நேரிடும். வாகனங்கள், பிரயாணங்களால் நன்மை உண்டு. பிரயாணத்தின் போது உருவாகும் புதிய நட்பு ஆதாயம் தரும். மாணவர்கள், ஆசிரியர்களின் ஒத்துழைப்போடு முன்னேற்றம் காண்பர். பிள்ளைகளின் வாழ்வியல் நிலை உயர்வடையும். வாழ்க்கைத்துணை உங்களுக்கு மிகுந்த பக்கபலமாக இருந்து செயல்படுவார். கலைத்துறையினர் தொழில்முறையில் முன்னேற்றம் காண்பர். உங்களை சுற்றி நிகழும் சம்பவங்கள் உங்கள் தன்னம்பிக்கையை உயர்த்தும். பெரியோர்கள், சான்றோர்களிடம் நற்பெயர் வாங்குவீர்கள். தொழில்ரீதியாக உச்ச பட்ச உழைப்பினை வெளிப்படுத்துவீர்கள். தான தருமங்களில் மிகுந்த ஈடுபாடு உண்டாகும். நற்பலனை காணும் வாரம் இது.
-
மனதில் தர்ம சிந்தனைகள் அதிகரிக்கும். பொருளாதார நிலை உங்களை சற்றே அசைத்துப் பார்க்கும். குடும்பத்தில் சலசலப்புகள் இருந்தாலும் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. உடன்பிறந்தோரின் நலனில் அதிக அக்கறை கொள்வீர்கள். தகவல்தொடர்பு சாதனங்கள் மிகுந்த பயன் தரும். பிரயாணங்களின்போதும் வாகனங்களை இயக்கும்போதும் கூடுதல் கவனம் அவசியம். பிள்ளைகளால் ஒரு சில செலவுகளை சந்திக்க நேரிடும். மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டிய நேரம் இது. வாழ்க்கைத்துணையுடன் ஒருசில விஷயங்களில் லேசான கருத்து வேறுபாடு கொள்ளும் சூழ்நிலை உருவாகும். அடுத்தவர்களை நம்பி ஒப்படைத்த காரியங்கள் தாமதமாவது கண்டு மனவருத்தம் கொள்வீர்கள். செலவுகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் அதிகம் சிரமப்படுவீர்கள். தான தர்மங்களுக்காக அதிகம் செலவழிக்க வேண்டி வரும். கலைத்துறையினருக்கு தொலைதூர பிரயாணத்திற்கான வாய்ப்புகள் தேடி வரும். தொழில்ரீதியாக சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பீர்கள். நற்பலன்களைக் காணும் வாரம் இது.
-
எடுத்த காரியங்களில் தடைகள் உருவாகி நினைப்பது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். வரவில் தாமதம் இருக்கும். பொருளாதார ரீதியாக சிரமம் இருக்கும். குடும்பத்தில் சலசலப்பு தோன்றும். பேச்சால் தேவையற்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடும். உடன்பிறந்தோர் உதவிக்கரம் நீட்டுவார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் பயன் தரும். வாகனங்களை இயக்கும்போதும், பிரயாணத்தின்போதும் கூடுதல் கவனம் அவசியம். மாணவர்கள் கல்வியில் முன்னேற கடுமையான உழைப்பு அவசியம். பிள்ளைகளால் கூடுதல் செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத்துணையின் வார்த்தைகள் உங்களுக்கு கூடுதல் நம்பிக்கை ஊட்டும். நண்பர்கள் உதவியுடன் செய்யும் விஷயங்களில் வெற்றி காண்பீர்கள். செலவுகள் கூடும். முன்னோர்களின் சொத்துகளில் பாகப்பிரிவினைக்கான வாய்ப்புகள் உருவாகலாம். கலைத்துறையினர் கூடுதல் அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். கூட்டுத்தொழில் நல்ல லாபம் தரும். உத்யோகத்தில் இடமாற்ற வாய்ப்புகள் உருவாக கூடும். சுமாரான பலன்களை தரும் வாரம் இது.
-
செயல்வேகம் கூடும். நினைத்த காரியத்தை உடனடியாக செய்து முடிக்க அவசரப்படுவீர்கள். குடும்ப பொருளாதார நிலை உயர்வடையும். மனதில் மகிழ்ச்சி நிலவும். உங்கள் பேச்சு அடுத்தவர் மனதைப் புண்படுத்தக் கூடும் என்பதால் கவனம் அவசியம். உடன்பிறந்தோருக்கு உதவுவீர்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் ஆதாயம் தரும். வாகனங்கள், பிரயாணங்களால் ஆதாயம் காண்பீர்கள். மாணவர்கள் கேள்விகளை நிதானமாக படித்து புரிந்துகொள்வது அவசியம். பிள்ளைகளின் செயல்கள் வருத்தம் தரும். உடல்நிலை சீராக இருந்து வரும். வாழ்க்கைத்துணை உங்களுக்கு துணை நிற்பார். நண்பர்களுடன் இணைந்து செய்யும் காரியங்களில் ஓரளவு வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினருக்கு ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துகள் ஆதாயம் தரும். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் உடன் பணிபுரிவோருடன் கவனத்துடன் பழகுவது நல்லது. சுயதொழில் செய்வோர் சிறப்பான தனலாபம் காண்பார்கள். நற்பலன்களைத் தரும் வாரம் இது.
-
மனதில் நல்ல எண்ணங்கள் ஊற்றெடுக்கும். குடும்பத்தில் சலசலப்புகள் இருந்தாலும் கலகலப்பிற்கு குறைவிருக்காது. பேச்சில் நகைச்சுவை வெளிப்படும். உடன்பிறந்தோர் உதவிகரமாக செயல்படுவார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் ஆதாயம் தரும். மற்றவர்கள் செய்யத் தயங்கும் விஷயங்களில் தைரியத்துடன் இறங்கி செயல்படுவீர்கள். வாகனங்களால் செலவுகள் ஏற்படும். உடல்நிலையில் சோர்வு, களைப்பு ஏற்படும். பிள்ளைகளின் வாழ்வில் சுபநிகழ்வுகளுக்கான வாய்ப்புகள் உண்டு. மாணவர்களின் கல்வி நிலை சிறப்பான முன்னேற்றம் அடையும். வாழ்க்கைத்துணையுடன் அவ்வப்போது சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். பூர்வீக சொத்துகளில் பாகப்பிரிவினை பற்றிய பேச்சுக்கள் எழும். தொழில் நிலை சிறப்பாக இருந்து வரும். கலைத்துறையினர் போட்டியான சூழலில் வெற்றி காண்பர். உத்யோகஸ்தர்கள் தனித்திறமையை வெளிப்படுத்தி நற்பெயர் வாங்குவர். வியாபாரிகள் திறமையான பேச்சுகள் மூலம் தனலாபம் பெறுவர். நற்பலன்களைக் காணும் வாரம் இது.
-
மன விருப்பங்கள் நிறைவேறும் என்றாலும் சிரமமான சூழலை சந்திக்க நேரிடும். அநாவசிய பிரச்னைகள் வரும் என்பதால் கூடுதல் எச்சரிக்கை அவசியம். மன ஆசைகள் பேச்சில் வெளிப்படும். இடம், பொருள் அறிந்து பேசுவது நல்லது. குடும்பத்தில் லேசான சலசலப்புகள் தோன்றும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டாகும். வண்டி, வாகனங்கள், பிரயாணங்களால் கூடுதல் செலவுகள் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண கடும் உழைப்பு அவசியம். உடல்நிலையில் தீவிர கவனம் செலுத்துவது நல்லது. அநாவசிய பிரச்னைகளைத் தவிர்க்க சம்பந்தமில்லாத விஷயங்களில் முன்நிற்பதைத் தவிர்க்கவும். ஆடம்பர செலவுகளைக் குறைக்கும் முயற்சியில் ஓரளவு வெற்றி காண்பீர்கள். பெற்றோர் உடல்நிலையில் கவனம் அவசியம். தொழில் முறையில் சிறப்பான நிலையை காண்பீர்கள். கலைத்துறையினர் எதிர்பார்க்கும் தனலாபத்தினை அடைய சிறிது காலம் காத்திருக்க வேண்டியது அவசியம். தொலைதூரப் பிரயாணத்தின்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும். சரிசம பலனைத் தரும் வாரம் இது.
-
யோசிக்கும் திறன் கூடும். சிந்தனையில் தோன்றுவதை உடனுக்குடன் செயல்படுத்த நினைப்பீர்கள். செய்ய நினைக்கும் செயல்களை திட்டமிட்டு ஒவ்வொன்றாக வரிசைப்படுத்தி செய்து முடித்தல் நலம். உங்கள் பேச்சு அடுத்தவர் மனதை எளிதில் மாற்றும் வலிமை உடையதாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தினருடன் திடீர் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள். பிரயாணங்கள், வண்டி, வாகனங்கள் ஆதாயம் தரும். மாணவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். பிள்ளைகளின் வாழ்க்கை நிலை உயரும். கலைத்துறையினர் எதிர்கால நலன் கருதி சேமிப்பில் ஈடுபட வேண்டிய நேரம் இது. வாழ்க்கைத்துணை உங்களது வார்த்தைகளுக்கு மிகுந்த மதிப்பளித்து செயல்படுவார். யோசிக்காமல் செலவு செய்வதை குறைத்துக் கொள்வது நல்லது. முன்னோர்களின் சொத்துகளை விற்க வேண்டிய சூழல் உருவாகலாம். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் நற்பெயர் வாங்குவார்கள். தொழிலில் திட்டங்கள் வெற்றி பெறும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். நற்பலன்களை தரும் வாரம்.
-
எதிலும் விவேகத்துடன் செயல்படுவீர்கள். சமயோஜித புத்தியால் தேக்கத்தில் இருந்த பணிகளை விரைவாக செய்து முடிப்பீர்கள். பொருளாதார ரீதியாக சிரமம் இருக்கும். குடும்பத்தில் லேசான சலசலப்புகள் தோன்றும். யோசிக்காமல் பேசும் வார்த்தைகள் மற்றவர்கள் மனதைப் புண்படுத்தக் கூடும். அந்நியப் பெண்களால் பிரச்னைகளை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. உடன்பிறந்தோர் உதவிகரமாக செயல்படுவார்கள். எதிர்பாராத பிரயாண வாய்ப்பு வந்து சேரும். வண்டி, வாகனங்கள் ஆதாயம் தரும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். வாழ்க்கைத்துணையின் செயல்பாடுகள் உங்களுக்கு மிகுந்த பக்கபலமாக அமையும். அவரது ஆலோசனைகள் இக்கட்டான நேரத்தில் மிகுந்த பயனுள்ளதாக அமையும். நண்பர்களோடு இணைந்து செய்யும் கூட்டு முயற்சியில் அசாத்தியமான வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினர் புதிய முயற்சியில் வெற்றி காண்பர். பெற்றோரின் உடல்நிலையில் கவனம் அவசியம். தொழில் ரீதியாக சிறப்பாக செயல்பட்டு நற்பெயர் காண்பீர்கள். சரிசம பலனைக் காணும் வாரம் இது.
-
தன்னம்பிக்கை கூடும். உத்வேகத்துடன் செயல்பட்டு எடுத்த செயல்களில் வெற்றி காண்பீர்கள். இக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் நற்பெயரை பெற்று தரும். கூடுதல் செலவுகளை சந்தித்தாலும், நல்ல தன லாபம் காண்பீர்கள். குடும்பத்தில் சலசலப்புகள் தோன்றி மறையும். உடன்பிறந்தோரால் தர்ம சங்கடமான சூழ்நிலைக்கு ஆளாக நேரிடும். மறதியால் அவதிப்பட நேரிடும். வண்டி, வாகனங்கள், பிரயாணங்களால் ஆதாயம் காண்பீர்கள். மாணவர்கள் கல்வி நிலையில் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பார்கள். பிள்ளைகளின் செயல்கள் பெருமைகொள்ளத்தக்க வகையில் அமையும். வாழ்க்கைத்துணை உங்களுக்கு மிகுந்த பக்கபலமாக இருந்து செயல்படுவார். செலவுகளைக் குறைக்கும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். பூர்வீக சொத்துகளில் பாகப்பிரிவினைப் பற்றிய பேச்சுகள் எழக்கூடும். கலைத்துறையினர் புதிய வாய்ப்பு பெறுவார்கள். சுயதொழில் செய்பவர்கள் கூடுதல் அலைச்சலை சந்திக்க நேர்ந்தாலும், அதற்கேற்ற தனலாபம் காண்பார்கள். வீண் கற்பனையால் நிம்மதியான உறக்கம் கெடும். சரிசம பலன்களை காணும் வாரம் இது.
-
சிறப்பான நற்பலன்கள் ஏற்படும். நினைத்த காரியங்கள் எளிதில் நிறைவேறும். மனதில் மகிழ்ச்சி நிலவும். பல்வேறு வழிகளில் வரும் வரவால் பொருளாதார நிலை உயரும். நேரத்தைப் பயன்படுத்தி சேமிப்பில் ஈடுபடுவதும், அசையாச் சொத்துகளில் முதலீடு செய்வதும் நல்லது. எதிர்பாராத செலவுகள் தோன்றும். உடன்பிறந்தோருக்கு உதவி செய்வீர்கள். புதிய வாகனம் வாங்க நினைப்போருக்கு நேரம் சாதகமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளின் வாழ்க்கை நிலை உயரும். மதிப்பு உயரும். மாணவர்கள் மனப்பாடத் திறனில் கவனம் கொள்வது அவசியம். தம்பதியருக்குள் கருத்து வேறுபாடு தோன்றி மறையும். நண்பர்களுடன் இணைந்து செய்யும் காரியங்களில் தடை உண்டாகும். கலைத்துறையினர் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தர்ம காரியங்களுக்காக முன் நின்று செயல்படுவீர்கள். உத்யோக ரீதியாக சிறப்பாக செயல்பட்டு நற்பெயர் காண்பீர்கள். வியாபாரிகள் சிறப்பான தனலாபம் காணும் நேரம் இது. நற்பலன்களைக் காணும் வாரம் இது.
-
எடுத்த செயல்களில் வேகமாக செயல்பட்டு போட்டியாளர்களை வெற்றி காண்பீர்கள். மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி குடிகொள்ளும். பல்வேறு வழிகளிலும் வரவு இருக்கும். அதே நேரத்தில் கவுரவ செலவுகள் கூடும். நேரத்தைப் புரிந்துகொண்டு சிக்கன நடவடிக்கையில் ஈடுபடுவது நல்லது. குடும்பத்தில் சலசலப்புக்கு மத்தியில் மகிழ்ச்சி நிலவி வரும். நீங்கள் கிண்டலாகப் பேசும் வார்த்தைகள் மற்றவர்கள் மனதைப் புண்படுத்தக்கூடும். தகவல் தொடர்பு சாதனங்கள் ஆதாயம் தரும். மாணவர்களின் கல்வி நிலை எழுச்சி பெறும். உறவினர்களின் வருகை குடும்பத்தில் கலகலப்பைக் கூட்டும். வாழ்க்கைத்துணையின் வார்த்தைகள் உங்கள் செயல்களுக்கு ஆதரவாக அமையும். கலைத்துறையினர் எதிர்பார்த்த தனலாபம் வந்து சேரும். பூர்வீக சொத்துகள் லாபம் தரும். உத்யோகஸ்தர்கள் தங்கள் தனித்திறமையை வெளிப்படுத்தி மிகுந்த நற்பெயரை அடைவதோடு பதவி உயர்விற்கான வாய்ப்பினையும் வலுப்படுத்திக் கொள்வார்கள். வியாபாரிகள் திறமையான பேச்சுக்களின் மூலம் சிறப்பான தனலாபத்தினைக் காண்பார்கள். நற்பலன்களைக் காணும் வாரம் இது.