இராசிபலன்கள் 24-2-2017 முதல்2-3-2017 வரை

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

வார பலன், ஜாதகம், Weekly Astrology Tamil, Weekly Astrology In Tamil, Tamil Weekly Astrology, Tamil Astrology For This Week, Tamil Astrology Weekly Predictions, Astrology In Tamil, Free Tamil Astrology, Tamil Astrology Horoscope, Tamil Astrology Rashi, Tamil Astrology Rashi Chart

கதிரவனுக்காகக் கணித்து எழுதியவர் ஜோதிடமணி பிரம்மஸ்ரீ ரகுநாத ஐயர் தமிழ்நாடு, இந்தியா

  • நீங்கள் நினைத்த காரியங்கள் எளிதில் முடிவிற்கு வரும். இக்கட்டான தருணங்களில் எவரேனும் ஒருவர் மூலம் உதவி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பண வரவு தொடர்வதால் சேமிப்பு உயர்வடையும். வீண் பேச்சை தவிர்ப்பதில் கவனம் கொள்ளுங்கள். நெருங்கிய உறவினரோடு இருந்த மனஸ்தாபம் நீங்கும். புதிய முயற்சிகள் அலைச்சலைத் தரும். வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவீர்கள். 21, 22 தேதிகளில் உறவினர்களின் இல்ல விசேஷங்களில் முக்கியப் பங்காற்றுவீர்கள். பிள்ளைகளின் உத்யோகம் சார்ந்த கவலை மனதினை வாட்டும். குடும்பப் பிரச்னைகளை சமாளிப்பதில் சிரமம் காண்பீர்கள். கலைத்துறையினரின் நவீன முயற்சிகள் பலன் தராது போகலாம். வயதில் மூத்த பெண்மணி ஒருவரின் அறிவுரை உங்களை அதிக சிந்தனைக்குள்ளாக்கும். வேலைக்குச் செல்வோர் இதுநாள் வரை உழைத்ததற்கான பலனை இந்த வாரத்தில் காண்பர். மாணவ, மாணவியர் மாதிரித் தேர்வுகளை எழுதிப் பார்ப்பது நல்லது. சாதகமான பலன்களைத் தரும் வாரம் இது.

  • பணிச்சுமை அதிகரிக்கும். சிரமமான பணிகளையும் முழு ஈடுபாட்டுடன் அனுபவித்து செய்வீர்கள். சந்தோஷமான மனநிலையைத் தக்க வைத்துக் கொள்வதால் எடுத்த காரியங்களை எளிதாகச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பண வரவு சீராக இருந்து வரும். எதிர்காலம் பற்றி அதிகம் கவலைப்படாமல் தற்போதைய வாழ்க்கை முறையை மட்டும் கருத்தில் கொள்வீர்கள். வாழ்க்கை வாழ்வதற்கே என்ற கருத்தில் அசையாத நம்பிக்கை கொண்டிருப்பீர்கள். கலைத்துறையினரின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 22, 23 தேதிகளில் நண்பர்களின் உதவி தேவைப்படலாம். உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். பிள்ளைகளின் வாழ்வினில் சுபநிகழ்வுகள் பற்றிய பேச்சுகள் நடைபெறும். கடன் கொடுக்கும் விவகாரங்களில் நிதானித்துச் செயல்படுவது அவசியம். வேலைக்குச் செல்வோர் அலுவலகத்தில் தங்கள் சிறப்பான செயல்பாடுகள் மூலம் நல்ல முன்னேற்றம் காண்பர். மாணவர்கள் பாடங்களைப் புரிந்து படிப்பதில் சிறந்து விளங்குவர். நற்பலன்களை அனுபவிக்கும் வாரம் இது.

  • பலவிதமான அனுபவங்களைச் சந்திக்க உள்ளீர்கள். சற்று சிரமமாக உணர்ந்தாலும் அனுபவம் தரும் பாடங்கள் உங்களை மேலும் திறம்படச் செயலாற்ற வைக்கும். நீங்கள் ஒன்று நினைத்து, நடப்பது வேறாக அமையும்போது அதற்கான காரணத்தை ஆராய்வீர்கள். எடுத்த காரியங்களைச் செய்து முடிப்பதில் கால தாமதம் உண்டாகலாம். குடும்பத்தில் ஒரு சில பிரச்னைகள் தோன்றி மறையும். வரவு சிறப்பாக இருக்கும். நண்பரின் ஆலோசனை உங்களைக் குழப்பத்திற்கு ஆளாக்கும். உறவினர் ஒருவருடனான சந்திப்பு மனமகிழ்ச்சி தரும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கவனம் அவசியம். கொடுக்கல் வாங்கலை முற்றிலும் தவிர்க்கவும். வீண் விவாதம் காரணமாக வாழ்க்கைத்துணையோடு கருத்து வேறுபாடு தோன்றலாம். குடும்பப் பெரியவர்களின் மூலமாக பாரம்பரிய வழிபாட்டு முறைகளைத் தெரிந்து கொள்வீர்கள். கலைத்துறையினர் தொழில்முறையில் புதிய வாய்ப்பு பெறுவர். வேலைக்குச் செல்வோர் உரிய அங்கீகாரம் கிட்டாமல் மனம் வருந்துவர். மாணவர்கள் எழுதும் கலையில் நுட்பமாகச் செயல்படுவர். முன்னேற்றம் தரும் வாரம் இது

  • எடுத்த காரியங்களை முடிப்பதற்குள் சற்று சிரமத்திற்கு உள்ளாவீர்கள். எனினும் நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். முக்கியமான பணிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் கலந்துரையாட நேரம் கிடைக்காமல் போய் மனஸ்தாபம் தோன்றும். எதிர்பாராத திடீர் செலவுகள் பொருளாதார சிக்கல்களை தோற்றுவிக்கும். தகவல் தொடர்பு சாதனங்கள் சமயத்திற்கு உதவாது சங்கடம் தரும். உறவினர்கள் உங்கள் பேச்சினில் குற்றம் காண்பர். புதிய முயற்சிகள் நேரத்தை வீணாக்குவதோடு அநாவசிய செலவும் தரும். பிள்ளைகளின் செயல்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக அமையும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகள் உதவிகரமாய் அமையும். சிக்கன நடவடிக்கைகள் பயன்தராது போய் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். உத்யோகத்திற்குச் செல்வோர் அலுவலகத்தில் வீண் விவாதத்தினைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் அறிவியல் பாடத்தில் நல்ல முன்னேற்றம் காண்பர். கலைத்துறையினருக்கு புகழ் கூடும். எதிர்நீச்சலில் வெற்றி காண வேண்டிய வாரம் இது

  • சிரமமான நிலை மாறி நற்பலன்களை அனுபவிக்கத் துவங்கியிருப்பீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் உங்கள் உதவி நாடி வருவர். உங்களை விமர்சித்தரித்தவர்கள் உங்களைப் பாராட்டுவர். குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் கலந்திருக்கும். பொருளாதார நிலை சீரான உயர்வு காணும். விவேகமான பேச்சால் மதிப்பு உயரும். அண்டை அயலாருக்கு உதவ போய் தர்மசங்கடத்திற்கு ஆளாக நேரிடும். உறவினர்கள் இல்ல பிரச்னைகளுக்கு தீர்வு காண முற்படுவீர்கள். புதிய சொத்து வாங்கும் முயற்சிகள் தள்ளிப் போகும். பிள்ளைகளின் வாழ்க்கை தரம் உயர்வடையும். உறவினர்களின் வழியில் நற்செய்திகள் வந்து சேரும். வாழ்க்கைத்துணையின் எண்ண ஓட்டத்தை புரிந்துகொள்வதில் சிரமம் காண்பீர்கள். திடீர் ஆன்மிகப் பயண வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உங்களுக்கு தொல்லை தந்த ஒருவர் மனம் மாறி நட்புறவு கொள்வார். மாணவர்கள் நண்பர்களோடு இணைந்து படித்து சந்தேகங்களில் தெளிவு பெறுவர். கலைத்துறையினருக்கு அலைச்சல் கூடும். சுற்றியுள்ளோரின் பாராட்டுதல்கள் பெறும் வாரம் இது -

  • ஓய்வின்றி உழைக்க நேரும். எதிலும் படபடப்புடன் செயல்படுவீர்கள். ஒவ்வொரு இடத்திலும் போட்டியான சூழல் இருக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு எதிர்வார்த்தை தோன்றும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்காது. உறவினர்கள் உங்கள் பேச்சில் குற்றம் கண்டுபிடித்து வீண் மனஸ்தாபம் கொள்வர். வண்டி வாகனங்களை இயக்கும்போது எச்சரிக்கை தேவை. பிள்ளைகளின் சுறுசுறுப்பான செயல்பாடுகள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும். குடும்பத்தினருடன் கேளிக்கை, கொண்டாட்டங்களில் பங்கு பெறும் வாய்ப்பு உண்டு. உடல்நிலையில் தோன்றும் சிரமத்தை அலட்சியப்படுத்தாது உடனுக்குடன் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். வாழ்க்கைத்துணையின் பணிச்சுமையில் பங்கெடுத்து அவரது சிரமத்தினைக் குறைப்பீர்கள். பணிக்குச் செல்வோர் அலுவலகத்தில் ஈகோ பிரச்னையால் அநாவசிய போட்டியை சந்திக்க நேரிடும். மாணவர்கள் செய்முறைத் தேர்வுகளில் நல்ல முன்னேற்றம் காண்பர். கலைத்துறையினர் எதிர்பார்த்த உதவி வந்து சேரும். பரபரப்பாக செயல்படும் வாரம்

  • மன விருப்பங்கள், ஆசைகள் நிறைவேறும். சுறுசுறுப்பாக செயல்பட்டு நற்பெயர் வாங்குவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். கேளிக்கை, கொண்டாட்டங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவற்றிற்காக அதிகம் செலவழிப்பீர்கள். குடும்பத்தினருடன் உல்லாசப் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டு. உறவினர் ஒருவருக்கு உதவப் போய் தர்ம சங்கடத்திற்கு ஆளாக நேரலாம். புதிய முயற்சிகள் வீண் செலவினைத் தரும். உறவினர்களின் இல்ல விசேஷங்களில் முக்கியப் பொறுப்புகளைச் சுமக்க நேரிடும். பிள்ளைகளின் செயல்கள் சுற்றியுள்ளோரின் பாராட்டுதலுக்கு ஆளாவதைக் கண்டு பெருமிதம் கொள்வீர்கள். வாழ்க்கைத்துணையின் விருப்பங்களை உடனுக்குடன் நிறைவேற்றுவதில் அதிக கவனம் செலுத்துவீர்கள். ஆன்மிக செலவுகள் உயரும். பணிக்குச் செல்வோர் மேலதிகாரிகளால் சங்கடங்களை சந்திக்க நேரிடும். மாணவர்கள் மொழிப்பாடங்களில் சிறப்பான முன்னேற்றம் காண்பர். கலைத்துறையினர் போட்டியில் வெற்றி காண்பர். மனமகிழ்ச்சி தரும் வாரம் இது

  • சுகமான சூழலைத் அனுபவிக்க உள்ளீர்கள். நினைத்த காரியங்களை வீட்டில் அமர்ந்து கொண்டே சாதிக்க முயற்சிப்பீர்கள். எனினும் ஒரு சில விவகாரங்களுக்கு உறவினர் இல்லங்களுக்கு நேரடியாக செல்ல வேண்டியிருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். வரவு சிறப்பாக இருந்தாலும் அதற்குரிய செலவுகள் வரிசையில் காத்திருக்கும். உறவினருக்கு உதவபோய் விரயம் ஏற்படும். குடும்பத்தினர் விருப்பத்தினை நிறைவேற்றுவீர்கள். மின்சாதனங்கள் சமயத்தில் பழுதாகி சிரமம் தரும். வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க கால நேரம் சாதகமாக அமையும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் வாழ்க்கை தரம் உயரும். முதுகுவலிப் பிரச்னையால் அவதிப்படுவீர்கள். வாழ்க்கைத்துணையின் உடல்நிலையில் கவனம் தேவை. தான தரும காரியங்களில் ஈடுபடுவீர்கள். பணிக்குச் செல்வோர் உடன் பணிபுரிவோருடன் பணிச்சுமையை பங்கிட்டுக் கொள்வர். மாணவர்கள் விரைவாக விடையளிக்க பழகிக் கொள்வது அவசியம். கலைத்துறையினரின் கற்பனைகள் செயல்வடிவம் பெறும். சுகம் தரும் வாரம் இது.

  • ஓய்வின்றி செயல்பட நேரும். போட்டியான சூழலை சமாளிக்க சற்று வேகமாக பணியாற்ற வேண்டியிருக்கும். அச்சத்தைத் தவிர்த்து நம்பிக்கையோடு செயல்பட்டால் வெற்றி நிச்சயம் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சிறப்பான வரவு இருக்கும். சேமிப்பு உயர்வடையும். முன்பின் தெரியாத நபர்களிடம் அதிக கவனம் தேவை. அண்டை அயலாரோடு இணைந்து பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். உறவினர்களின் வழியில் வரும் வதந்திகளை நம்பக்கூடாது. மற்றவர்களின் ஆலோசனைகளால் குழப்பம் வரும் என்பதால் உங்கள் மனதிற்கு சரியென்று தோன்றுவதை மட்டும் செய்வது நல்லது. பிள்ளைகளின் மனநிலையைப் புரிந்து கொள்வதில் சிரமம் காண்பீர்கள். தம்பதியருக்குள் கலந்தாலோசிக்கும் நேரம் குறையலாம். கலைத்துறையினர் படைப்புகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். வேலைக்குச் செல்வோர் அலுவலக ரீதியாக பயணம் செல்ல நேரும். மாணவர்கள் எழுத்து வேகம் உயரும். சுயமுயற்சியால் வெற்றி காணும் வாரம் இது.

  • உங்கள் விருப்பங்கள் நிறைவேற விடாமுயற்சியுடன் செயல்படுவீர்கள். உழைப்பிற் குரிய பலனை நிச்சயம் காண்பீர்கள். சிறப்பான வரவு இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவும் குணம் கொண்ட நீங்கள் அவர்களின் உண்மை நிலையை அறிந்து உதவ வேண்டியது அவசியம். குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் கலந்திருக்கும். மனதில் இருப்பதை ஒளிவு மறைவு இல்லாமல் படபடவென்று வெளிப்படுத்துவதால் சிலர் கேலி பேசுவர். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். பிள்ளைகளின் செயல்கள் உங்களது எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும். காது, மூக்கு, தொண்டை பிரச்னைகளுக்கு உடனுக்குடன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. வாழ்க்கைத்துணையின் உடல்நிலையில் கவனம் தேவை. கலைத்துறையினரின் புதிய முயற்சிகள் வெற்றி பெறும். கவுரவம் கருதி செய்ய வேண்டிய செலவுகள் கூடும். உத்யோகம் பார்ப்போர் அலுவலகத்தில் உழைப்பினால் உயர்வு காண்பர். மாணவர்கள் பாடங்களை மனப்பாடம் செய்வதில் நல்ல முன்னேற்றம் காண்பர். உயர்வு தரும் வாரம் இது

  • எடுத்த உங்கள் பணிகள் எளிதாக நடைபெறும். இக்கட்டான சூழலில் ஏதோ ஒரு வழியில் உதவி கிட்டும். உங்களது வேகமான செயல்பாடு சுற்றியுள்ளோரை பிரமிக்க வைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பண வரவு சீராக இருக்கும். அடுத்தவர்கள் செய்யத் தயங்கும் காரியத்தையும் அசாத்தியமான தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். செல்போன் போன்ற தகவல் தொடர்பு சாதனங்களின் பராமரிப்பு செலவு கூடும். முக்கியமான பணிகளுக்கு இடைத்தரகர்களை நம்பாது நீங்களே நேரடியாக செயலில் இறங்க வேண்டியிருக்கும். உறவினர்களின் வருகையால் கூடுதல் செலவுகளுக்கு ஆளாவீர்கள். பிள்ளைகளின் மனநிலையைப் புரிந்துகொள்வதில் தடுமாற்றம் காண்பீர்கள். குடும்பப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். பணிக்குச் செல்வோர் கூடுதல் பணிச்சுமையை அசாதாரணமாகச் செய்து முடிப்பார்கள். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர். கலைத்துறையினர் பேச்சுத்திறமையால் வெற்றி காண்பர். துணிச்சலாகக் காரியமாற்றும் வாரம் இது

  • சோதனை காலமாக அமையும். அன்றாட அனுபவம் ஒவ்வொன்றும் உங்கள் எதிர்கால முன்னேற்றத்திற்கு துணைபுரியும். எளிதாக முடிய வேண்டிய காரியமும் இழுபறி தரும். குடும்பத்தில் சலசலப்புகள் தோன்றி மறையும். எதிர்பாராத செலவுகள் சேமிப்பை கரைக்கும். அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்லப் போய் அது உங்களுக்கே பாதகமாய் முடியலாம். நண்பர்களின் ஆலோசனைகள் உங்களை குழப்பத்திற்கு உள்ளாக்கும். ஆரோக்கியமான உணவு வகைகளை சாப்பிடுவது அவசியம். உறவினர்கள் வழியில் கலகங்கள் தோன்றும். பிள்ளைகளின் செயல்கள் மனதிற்கு மிகுந்த சந்தோஷம் தரும். வாழ்க்கைத்துணையின் உடல்நிலையில் கவனம் தேவை. நம்பியிருந்த நபர் ஒருவர் உங்களுக்கு எதிராக செயல்படலாம். வேலைக்குச் செல்வோர் அலுவலக கோப்புகளைக் கையாளுவதில் அதிக கவனம் கொள்வது அவசியம். மாணவர்கள் ஞாபகமறதியால் அவதிப்படுவர். கலைத்துறையினர் புதிய வாய்ப்பு வந்து சேரும். சோதனைகளைத் தாண்டி சாதனை படைக்க வேண்டிய வாரம் இது

http://www.kathiravan.com/?page_id=1302
Share with your friends










Submit