இராசிபலன்கள் 24-05-2016 முதல் 31-05-2016 வரை

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

வார பலன், ஜாதகம், Weekly Astrology Tamil, Weekly Astrology In Tamil, Tamil Weekly Astrology, Tamil Astrology For This Week, Tamil Astrology Weekly Predictions, Astrology In Tamil, Free Tamil Astrology, Tamil Astrology Horoscope, Tamil Astrology Rashi, Tamil Astrology Rashi Chart

கதிரவனுக்காகக் கணித்து எழுதியவர்  ஜோதிடமணி பிரம்மஸ்ரீ ரகுநாத ஐயர் தமிழ்நாடு, இந்தியா

  • மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழும் நீங்கள், நிர்வாகத் திறமை அதிகம் உள்ளவர்கள். குருபகவான் 5-ல் வலுவாக அமர்ந்திருப்பதால் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய வீட்டை புதுப்பிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். புது வேலை அமையும். குழந்தை பாக்யம் கிடைக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். அஷ்டமத்துச் சனி தொடர்வதால் சிலர் மீது நம்பிக்கையின்மை, எதிலும் ஆர்வமின்மை, உள்மனதில் ஒருவித அச்சம் வந்துப் போகும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. 2-ல் சூரியன் தொடர்வதால் பிள்ளைகளால் அலைச்சல், கண் எரிச்சல், வீண் வாக்குவாதம், கணுக்கால் வலி வந்துப் போகும். அரசியல்வாதிகளே! கட்சித் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். கன்னிப் பெண்களே! உங்களின் தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் நவீன யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தன்னம்பிக்கையால் தலைநிமிரும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 26, 27, 29 அதிஷ்ட எண்கள்: 8, 9 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் நீலம், ஆரஞ்சு அதிஷ்ட திசை: தென்மேற்கு

  • நீங்கள், தொடர் முயற்சியால் எடுத்த காரியத்தை முடிப்பதில் வல்லவர்கள். உங்கள் ராசிநாதன் சுக்ரன் உங்கள் ராசியிலேயே ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் உங்கள் ரசனை மாறும். கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். அழகு, இளமைக் கூடும். வீட்டில் கூடுதலாக ஒரு அறைக் கட்டுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். கண்டகச் சனி தொடர்வதால் மனைவியின் குற்றம், குறைகளை அடிக்கடி குத்திக் காட்ட வேண்டாம். உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகளை பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். புதன் 12-ல் மறைந்திருப்பதால் உறவினர்களால் அன்புத் தொல்லைகள் வந்துப் போகும். வாகனத்தை சரி செய்வீர்கள். சூரியன் ராசிக்குள் நிற்பதால் காரியத் தாமதம், முன்கோபம், பெற்றோருடன் மனத்தாங்கல் வந்துச் செல்லும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடன் செலுத்துங்கள். வழக்குகளில் கவனம் தேவை. அரசியல்வாதிகளே! கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். கன்னிப் பெண்களே! சமயோஜித புத்தியுடன் நடந்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் அதிகப் பேச்சு வேண்டாமே! அதிகாரிகளை அனுசரித்துப் போங்கள். சகிப்புத் தன்மையால் சங்கடங்கள் தீரும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 23, 27, 28 அதிஷ்ட எண்கள்: 2, 7 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தாபச்சை, பிங்க் அதிஷ்ட திசை: தெற்கு

  • திட்டமிட்டு முறையாக எதையும் செய்யும் நீங்கள், சில நேரங்களில் அதிரடியாக இறங்கி அசத்துவீர்கள். 6-ல் செவ்வாய் வலுவாக நிற்பதால் சவாலில் வெற்றி பெறுவீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பாதிபணம் தந்து முடிக்காமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். புது பொறுப்புகள் தேடி வரும். சிலருக்கு அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும். பிள்ளைகள் நல்ல வழிக்கு திரும்புவார்கள். சகோதரிக்கு இருந்த பிரச்னை தீரும். வேற்றுமதத்தவர், மாநிலத்தவர்கள் அறிமுகமாவார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். விலை உயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். சூரியன் 12-ல் மறைந்திருப்பதால் மனஇறுக்கம், அலைச்சல், செலவுகள், திடீர் பயணங்கள் வந்துப் போகும். அரசு காரியங்கள் இழுபறியாகும். அரசியல்வாதிகளே! தலைமையின் ஆணையை மீறி தனி ஆவர்த்தனம் வேண்டாம். கன்னிப் பெண்களே! பெற்றோர் பக்கபலமாக இருப்பார்கள். காதல் விவகாரத்தில் தள்ளி இருங்கள். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து புது முடிவு எடுப்பீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். சமயோஜித புத்தியால் சாதிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 23, 24, 25 அதிஷ்ட எண்கள்: 4, 6 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெள்ளை அதிஷ்ட திசை: வடமேற்கு

  • விறுவிறுப்பாக எதையும் செய்து முடிக்கும் நீங்கள், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எப்போதும் யோசிப்பீர்கள். சூரியன் லாப வீட்டில் நிற்பதால் எங்கு சென்றாலும் முதல் மரியாதைக் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகமாகும். ஷேர் மூலமும் பணம் வரும். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். தடைப்பட்ட திருமணம் கூடி வரும். அரசால் அனுகூலம் உண்டு. காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். உல்லாசப் பயணங்கள் செல்வீர்கள். நாத்தனாரின் வளையல் காப்பை எடுத்து நடத்துவீர்கள். நீண்ட காலமாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த இடத்திற்கு குடும்பத்தினருடன் சென்று வருவீர்கள். சனி 5-ல் தொடர்வதால் மனதில் குழப்பம், தடுமாற்றம், பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகளெல்லாம் வந்துப் போகும். பிள்ளைகளை எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில், விரும்பியப் பாடப்பிரிவில் போராடி அலைந்து சேர்க்க வேண்டி வரும். அரசியல்வாதிகளே! கட்சி மேலிடம் உங்களை நம்பி சில போராட்டங்களுக்கு தலைமை தாங்க வைக்கும். கன்னிப் பெண்களே! பள்ளி, கல்லூரி கால தோழியை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவன புகழ் கூடும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். புது பொறுப்பும், வாய்ப்புகளும் கதவைத் தட்டும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 23, 25, 28 அதிஷ்ட எண்கள்: 3, 5 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், கிரே அதிஷ்ட திசை: தென்மேற்கு

  • சமயோஜித புத்தியால் சாதிக்கும் நீங்கள், எதிரிக்கும் உதவும் பரந்த மனசுக்காரர்கள். சுக்ரன் 9-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் அடிப்படை வசதிகள் பெருகும். பணவரவு அதிகரிக்கும். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். உங்களுக்கும் விட்டுக் கொடுக்கும் மனசு வரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு வேலைக் கிடைக்கும். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். சமையலறையை நவீன மயமாக்குவீர்கள். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உறவினர்கள் வீட்டுக் கல்யாணத்தை முன்னின்று நடத்துவீர்கள். பழைய வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அயல்நாடு சென்று வருவீர்கள். 12-ல் குருவும், ராகுவும் நிற்பதால் வீண் விரையங்கள், பொருள் இழப்புகள், தூக்கமின்மை, திடீர் பயணங்களால் அலைச்சல், பழைய கடனை நினைத்து பயம் வந்துச் செல்லும். அரசு காரியங்கள் தாமதமாகி முடியும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்பட்டாலும் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள். எதிர்பாராத திடீர் நன்மைகள் சூழும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 26, 27, 29 அதிஷ்ட எண்கள்: 6, 9 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ஊதா அதிஷ்ட திசை: கிழக்கு

  • சமயோஜித புத்தியால் சாதிக்கும் நீங்கள், எதிரிக்கும் உதவும் பரந்த மனசுக்காரர்கள். சுக்ரன் 9-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் அடிப்படை வசதிகள் பெருகும். பணவரவு அதிகரிக்கும். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். உங்களுக்கும் விட்டுக் கொடுக்கும் மனசு வரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு வேலைக் கிடைக்கும். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். சமையலறையை நவீன மயமாக்குவீர்கள். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உறவினர்கள் வீட்டுக் கல்யாணத்தை முன்னின்று நடத்துவீர்கள். பழைய வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அயல்நாடு சென்று வருவீர்கள். 12-ல் குருவும், ராகுவும் நிற்பதால் வீண் விரையங்கள், பொருள் இழப்புகள், தூக்கமின்மை, திடீர் பயணங்களால் அலைச்சல், பழைய கடனை நினைத்து பயம் வந்துச் செல்லும். அரசு காரியங்கள் தாமதமாகி முடியும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்பட்டாலும் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள். எதிர்பாராத திடீர் நன்மைகள் சூழும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 26, 27, 29 அதிஷ்ட எண்கள்: 6, 9 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ஊதா அதிஷ்ட திசை: கிழக்கு

  • இளகிய மனசுள்ள நீங்கள் காயப்பட்டு வருபவர்களின் புகலிடமாக இருப்பவர்கள். ராசிநாதன் சுக்ரன் 8-ம் இடத்தில் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் உங்களின் நீண்ட நாள் கனவுகள் நனவாகும். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். உங்கள் ரசனைக் கேற்ப வீடு, வாகனம் அமையும். வெள்ளிச் சாமான்கள் வாங்குவீர்கள். வருமானம் உயரும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வழக்கு சாதகமாக திரும்பும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். புது பதவி, பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வேலை அமையும். பாதச் சனி தொடர்வதால் யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். சூரியன் 8-ல் மறைந்திருப்பதால் அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். அரசியல்வாதிகளே! தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் மேலிடத்துக்கு கொண்டு செல்லுங்கள். கன்னிப் பெண்களே! காதல் கசந்து இனிக்கும். உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகளின் குறைகளை சுட்டிக் காட்டுவீர்கள். சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கடின உழைப்பால் முதலிடம் பிடிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 23, 27, 28 அதிஷ்ட எண்கள்: 4, 8 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், பிஸ்தாபச்சை அதிஷ்ட திசை: தெற்கு

  • தொடங்கியதை போராடி முடிக்கும் நீங்கள், வாக்குக் கொடுத்துவிட்டால் தவறமாட்டீர்கள். 6-ல் மறைந்துக் கிடக்கும் சுக்ரன் 7-ம் வீட்டில் நுழைந்து உங்கள் ராசியைப் பார்த்துக்கொண்டியிருப்பதால் மனப்போராட்டங்கள், விபத்துகளிலிருந்து மீள்வீர்கள். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். புதன் 6-ல் மறைந்திருப்பதால் சிக்கனமாக இருங்கள். உறவினர், தோழிகளுடன் விரிசல்கள் வரக்கூடும். சூரியனும் ராசிக்கு 7-ல் அமர்ந்திருப்பதால் உஷ்ணத்தால் வேனல் கட்டி, அலைச்சல், வந்துப் போகும். ராகு, கேதுவின் சஞ்சாரம் சரியில்லாததால் வேலைச்சுமையால் டென்ஷன், எதிலும் பிடிப்பற்ற போக்கு, தர்ம சங்கடமான சூழ்நிலை, சின்ன சின்ன அவமானம் வந்துச் செல்லும். அரசியல்வாதிகளே! கட்சி மூத்த தலைவர் உங்களிடம் சில ரகசியங்களை பகிர்ந்துக் கொள்வார். கன்னிப் பெண்களே! போலியாக பழகியவர்களிடமிருந்து ஒதுங்குவீர்கள். தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியின் ஆலோசனையின்றி புது முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். உணர்ச்சிவசப்படாமல் மூளைக்கு வேலை தர வேண்டிய வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 23, 24, 29 அதிஷ்ட எண்கள்: 2.6 அதிஷ்ட நிறங்கள்: சில்வர்கிரே, மஞ்சள் அதிஷ்ட திசை: வடகிழக்கு

  • தர்க்கங்கள் செய்வதில் வல்லவர்களான நீங்கள் குதர்க்கமாகப் பேசுபவர்களை ஒதுக்கி வைப்பீர்கள். சூரியன் 6-ல் நிற்பதால் திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் உதவிகள் உண்டு. பிதுர்வழி சொத்து கைக்கு வரும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை ஒருவழியாக தந்து முடிப்பீர்கள். வழக்கு சாதகமாகும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் போக்கில் அக்கறை செலுத்துவீர்கள். நகர எல்லையைத் தாண்டி வீட்டு மனை வாங்குவீர்கள். புது நட்பு மலரும். பழைய உறவினர்களை சந்தித்து மகிழ்வீர்கள். சுக்ரன் 6-ல் மறைந்திருப்பதால் தொண்டைப் புகைச்சல், சளித் தொந்தரவு, சிறுசிற விபத்துகள், வாகனப் பழுது வந்து நீங்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அரசியல்வாதிகளே! சிலர் உங்களைப் பற்றி தவறான வதந்திகளை மேலிடத்திற்கு கொண்டு செல்லக்கூடும். விழிப்புடன் இருங்கள். கன்னிப் பெண்களே! எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். புதிதாக அறிமுகமாகுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சூழச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். தடைகளையும் தாண்டி முன்னேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 23, 25, 27 அதிஷ்ட எண்கள்: 3, 7 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், சிவப்பு அதிஷ்ட திசை: கிழக்கு

  • மற்றவர்களை மதிக்கத் தெரிந்த நீங்கள் தன் மானம் மிக்கவர்கள். சனியும், செவ்வாயும் லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் நினைத்தது நிறைவேறும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். தடைப்பட்ட வீடு கட்டும் பணி விரைந்து முடியும். பூர்வீக சொத்தால் வருமானம் வரும். பிள்ளைகளை கொஞ்சம் போராடி அவர்கள் விரும்பிய கல்லூரியில் சேர்ப்பீர்கள். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால் ஏமாற்றம், வீண் விரையம், பேச்சால் பிரச்னை, கண் வலி வந்துப் போகும். முக்கிய கோப்புகளை கவனமாக கையாளுங்கள். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். குரு 8-ல் நிற்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். அரசியல்வாதிகளே! சகாக்கள் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். கன்னிப் பெண்களே! சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் நீங்கள் பொறுப்பாக நடந்து கொண்டாலும், மேலதிகாரி குறை கூறத்தான் செய்வார். அதிரடி மாற்றங்கள் நிகழும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 23, 24, 26 அதிஷ்ட எண்கள்: 2, 5 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ஆரஞ்சு அதிஷ்ட திசை: வடக்கு

  • எதார்த்தமாகப் பேசி பழகும் நீங்கள், நெருக்கடி நேரத்திலும் நேர்மையாக இருப்பீர்கள். சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்கள் செயலில் வேகம் கூடும். கனத்த மனசு லேசாகும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். உங்கள் ரசனைக் கேற்ற சொத்து வாங்குவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். புது வேலை அமையும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். குடும்பத்தினருடன் குல தெய்வக் கோவிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க தோழியை சந்திப்பீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் தங்கும். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததால் உடல் அசதி, மனச்சோர்வு, வீண் டென்ஷன், மறைமுக எதிர்ப்புகள் வந்துப் போகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். அரசியல்வாதிகளே! தொகுதியில் நடக்கும் நல்லது கெட்டதில் கலந்து கொண்டு மக்களின் அனுதாபத்தை பெறுவீர்கள். கன்னிப் பெண்களே! மனசை அலைபாயவிடாமல் ஒருநிலை படுத்துங்கள். வியாபாரத்தில் லாபம் வரும். வேலையாட்களிடம் கனிவாகப் பேசி வேலை வாங்குவது நல்லது. உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். திட்டமிடுதல் மூலம் சாதிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 26, 28, 29 அதிஷ்ட எண்கள்: 6, 9 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், ஆலிவ்பச்சை அதிஷ்ட திசை: தெற்கு

  • கறாராகவும், கனிவாகவும் பேசும் நீங்கள், எதையும் புதிய கோணத்தில் அணுகுவீர்கள். சூரியன் 3-ல் நிற்பதால் துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். நீண்ட காலமாக தள்ளிப் போன காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். அரசால் ஆதாயம் உண்டு. மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு உயர்கல்வி நல்ல விதத்தில் அமையும். பழைய சொந்தம் தேடி வரும். வீடு கட்டப் ப்ளான் அப்ரூவலாகி வரும். டி.வி., ஃப்ரிட்ஜ் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். பணவரவு உண்டு. 6-ல் குரு மறைந்திருப்பதால் உங்களுடைய கருத்துக்களுக்கு எதிர்கருத்து அதிகமாகும். மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம். அரசியல்வாதிகளே! எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். கன்னிப் பெண்களே! தவறான எண்ணங்களுடன் பழகியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். கல்வித் தகுதிக்கேற்ப நல்ல வேலைக் கிடைக்கும். வியாபாரம் செழிக்கும். புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் பாராட்டினாலும் சக ஊழியர்களால் டென்ஷன் அதிகரிக்கும். வி.ஐ.பிகளால் ஆதாயமடையும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 23, 25, 26 அதிஷ்ட எண்கள்: 2, 5 அதிஷ்ட நிறங்கள்: கிரே, வெள்ளை அதிஷ்ட திசை: மேற்கு

http://www.kathiravan.com/?page_id=1302
Share with your friends










Submit