இராசிபலன்கள் 22-11-2016 முதல் 27-11-2016 வரை

பிறப்பு : - இறப்பு :

வார பலன், ஜாதகம், Weekly Astrology Tamil, Weekly Astrology In Tamil, Tamil Weekly Astrology, Tamil Astrology For This Week, Tamil Astrology Weekly Predictions, Astrology In Tamil, Free Tamil Astrology, Tamil Astrology Horoscope, Tamil Astrology Rashi, Tamil Astrology Rashi Chart

கதிரவனுக்காகக் கணித்து எழுதியவர் ஜோதிடமணி பிரம்மஸ்ரீ ரகுநாத ஐயர் தமிழ்நாடு, இந்தியா

  • ஒன்பதில் சுக்கிரன். தந்தையின் புகழ் கூடும். உங்கள் அதிர்ஷ்டம் முன்பைவிட அதிகரிக்கும். ராசிநாதன் செவ்வாய் பத்தாம் வீட்டில் உச்சம் பெற்றிருக்கிறார். தன்னம்பிக்கையும். தைரியமும், வெற்றி வாய்ப்பும், பணியில் கவனமும் அதிகரிக்கும். இதனால் செய்யும் வேலையில் முழுகவனம் செலுத்தி நல்ல பெயர் எடுப்பீர்கள். நான்காம் வீட்டைச் செவ்வாய் பார்ப்பதால் தாயாருக்கு அறுவை சிகிச்சை தவிர்க்கப்பட்டு சாதாரண சிகிச்சையிலேயே குணமாகும். மாணவர்களுக்கு அருமையான வெற்றிகள் கிடைக்கும்.

  • இரண்டாம் வீட்டை சுக்கிரன் பார்க்கிறார். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். காதல் திருமணம் நடக்கும். நாலில் குரு என்பதால் தாயாருக்கு வீடு வாங்குவதாலோ விற்பதாலோ நன்மையும் லாபமும் கிடைக்கும். கல்வியில் மேன்மை அடைவீர்கள். நான்கில் ராகு என்பதால் வெளிநாட்டிற்குப் பறப்பீர்கள். பத்தாம் வீட்டை ராகு பார்ப்பதால் உங்கள் அலுவலகம் மூலமாக வெளிநாட்டுக்குப் போவீர்கள். உத்யோகத்தில் வெற்றி பெறுவீர்கள்.

  • ஏழில் சுக்கிரன் இருப்பதால் கணவன், மனைவிக்குள் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் நிலவும். நாலில் குரு இருப்பதால் மாணவர்கள் மிகவும் திருப்திகரமான நிலையை எட்டிப் பாராட்டைப் பெறுவார்கள். தாயாரின் ஆரோக்யம் சீராக இருக்கும். ராசிநாதன் புதன் ஏழில் அமர்ந்து தன் வீட்டைப் பார்ப்பதால் உங்களின் புத்திசாலித்தனமும் சமயோசிதமும் அறிவாற்றலும் மிகவும் பளிச்சிடும். அவர் உங்கள் கல்வி அறிவை மேம்படுத்துவார். நாலில் ராகு அமர்ந்திருப்பதால் வெளிநாட்டிற்குச் சென்று படிப்பவர்களுக்கு நல்ல பலன் கிட்டும்.

  • ஒன்பதை குரு பார்ப்பதால் தந்தையின் வாழ்வில் அனைத்து வகையிலும் முன்னேற்றங்கள் இருக்கும். அவருக்கும் உங்களுக்கும் இடையே நல்லுறவு அமையும். ஒன்பதாம் வீடு அதிர்ஷ்டத்தைக் குறிப்பது என்பதால் உழைப்புடன் கூடிய அதிர்ஷ்டம் உதவும். எட்டில் கேது இருப்பதால் ஆரோக்யத்தில் மிகுந்த கவனம் தேவை. ஆரோக்யத்தை கெடுக்கும் பழக்கங்கள் உங்களைத் தொற்றாமலும் அவற்றைத் தொற்ற விடும் நண்பர்கள் அண்டாமலும் பார்த்துக் கொள்ளுங்கள். பாதுகாப்பான உணவை சுத்தமான சூழலில் நேரம் தவறாமல் சாப்பிடுங்கள்.

  • ஒன்பதை குரு பார்க்கிறார். தந்தைக்கு லாபங்களும், தந்தையால் லாபங்களும் கூடும். மேலும் தந்தையின் வாழ்வில் அனைத்து வகையிலும் முன்னேற்றங்கள் இருக்கும்; அவருக்கும் உங்களுக்கும் இடையே நல்லுறவு அமையும். அர்த்தாஷ்டமச் சனி சற்று அதிகமாக உழைக்க வைப்பார். எனினும் குருபகவான் மிக நல்ல இடங்களைப் பார்ப்பதால் உழைப்புக்கேற்ற பலன் இருக்கும். ஐந்தில் சுக்கிரன் இருப்பதால் குழந்தைகளின் செல்வாக்கும் கவர்ச்சியும் அதிகரிக்கும். ஐந்தில் புதன் இருப்பதால் குழந்தைகளின் புத்திசாலித்தனமும் கல்வியும் சிறக்கும்.

  • இரண்டில் சுக்கிரன் பயணிப்பதால் உங்களின் தனிப்பட்ட கவர்ச்சி அம்சம் அதிகமாகும். பேச்சில் அது மிகவும் அதிகமாக இருக்கும். இரண்டாம் வீடு புதன் - குரு பரிவர்த்தனை காரணமாக பலம் பெறுகிறது. பேச்சினால் மிகுந்த நன்மை விளையும். குடும்பத்தில் புது வரவு சேரும். வார்த்தைகளில் புத்திசாலித்தனம் அதிகரித்து நன்மைகள் ஏற்படும். குழந்தைகளை குறிக்கும் ஐந்தாம் வீட்டிற்கு குருவின் பார்வை இருப்பதால் குழந்தைகள் பற்றி ஏதாவது பயம் இருந்தால் அந்த பயம் இனி தேவை இல்லை. குழந்தைப் பேறு இல்லாத குடும்பங்களில் அந்த பாக்கியம் ஏற்படும்.

  • இரண்டாம் வீட்டில் சனிபகவான் இருப்பதால் குடும்ப நிகழ்வுகளில் சற்று மெதுவான போக்கு இருக்கலாம். அதைக் கண்டு பயம் வேண்டாம். நான்காம் வீட்டை குரு பார்ப்பதால் மாணவர்கள் மிகவும் திருப்திகரமான நிலையை எட்டிப் பாராட்டைப் பெறுவார்கள். பன்னிரண்டில் உள்ள குரு நல்ல செலவுகளை ஏற்படுத்தி மகிழ்ச்சியும், திருப்தியும் அளிப்பார். அதாவது, திருமணம், சீமந்தம், வளைகாப்பு போன்ற சுபமான செலவுகள் ஏற்படும். இரண்டில் சூரியன். தந்தை வழி உறவினர்களை சந்திப்பீர்கள். நாலில் செவ்வாய். தாயின் கெளரவம் ஓங்கும்.

  • மூன்றாம் வீட்டுக்கு குருவின் பார்வை இருப்பதால் மூத்த சகோதர, சகோதரிகளின் வாழ்வில் நன்மை அதிகரிக்கும். ராசியின் மீது புதன் இருப்பதால் உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும்படியான காரியங்களில் ஈடுபடுவீர்கள். அவை உங்களின் திறமையையும் புகழையும் உலகிற்குப் புரிய வைக்கும். பதினோராம் வீட்டில் குரு இருப்பதால் லாபமும் வருமானமும் அதிகரிக்கும். பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும்.

  • பன்னிரண்டில் சூரியன் இருப்பதால் அரசாங்க செலவுகள் ஏற்படும். ஆனால், அந்த செலவுகளால் மிகுந்த நன்மையும் லாபமும் ஏற்படும். ராசியின்மீது சந்திரன் இருப்பதால் வேண்டாத பயங்களும், குழப்பங்களும், வீண் கற்பனைகளும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கவலை வேண்டாம். இது வார ஆரம்பநிலை மட்டுமே. பிறகு எல்லாம் சரியாகிவிடும். நான்காம் வீட்டை குரு பார்ப்பதால் தாயாருக்கு மிகுந்த நன்மைகள் ஏற்படும். கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். வாகனம் புதிதாக வாங்குவீர்கள்

  • உங்கள் ராசிக்கே குருவின் பார்வை சுப விஷயங்களெல்லாம் நலமாய் முடியும். விரயத்தில் சுக்கிரன் இருப்பதால் செலவுகள் இருந்து கொண்டேதான் இருக்கும். ஆனால், புதன் உடன் இருப்பதால் செலவுக்கேற்ற நன்மைகளும் ஏற்படும். அதே வீட்டில் புதன் பலம் பெற்று ஆட்சியாக அமர்ந்திருப்பதால் கல்விக்கான செலவுகள் ஏற்பட்டு அவை நற்பலன்கள் அளிக்கும். சந்திராஷ்டமம் வார மத்தியில் வருகிறது. எங்கும் எதிலும் கவனமாயிருங்கள். முக்கியமாக, அநாவசியப் பேச்சே வேண்டாம்.

  • பன்னிரண்டாம் வீட்டை குரு பார்ப்பதால் திருமணம் போன்ற விசேஷங்களுக்காகச் செலவுகள் செய்வீர்கள். வார மத்தியில் சந்திராஷ்டமம் வருகிறது. தேவையில்லாமல் யாரிடமும் பேச வேண்டாம். வார மத்தியில் சற்று அதிக கவனமாக இருந்தால் பிரச்னைகள் வராமல் காத்துக் கொள்ளலாம். ஏனெனில், ராசிக்கு எட்டில் சந்திரன். அதாவது, சந்திராஷ்டமம். ஆனால், சாதகமாக ஒன்பதாம் வீட்டில் அமர்ந்திருக்கும் குருபகவான் எல்லா வகைகளிலும் உங்களுக்கு நன்மை செய்வார்.

  • நாலாம் வீட்டைப் பார்க்கும் புதன் மாணவர்களின் முயற்சிக்கு மிக நல்ல பலனை அளிப்பார். சந்திரன் இடம் மாறிவிட்டார். சென்ற வாரம் இருந்த மனக்குழப்பங்களோ, பிரச்னைகளோ இந்த வாரம் இருக்காது. உங்களின் ராசியை குரு பார்க்கிறார். எனவே எதிலும் வெற்றிதான். ஒன்பதிலுள்ள சூரியன் அரசாங்க நன்மைகளை சற்று தாமதப்படுத்தினாலும் நிச்சயம் கிடைக்க வைப்பார். ஏழாம் வீட்டில் குரு அமர்ந்து அவர் உங்கள் ராசியைப் பார்ப்பதால் நன்மைகள் யாவும் கைகூடும். புண்ணியச் செயல்கள் செய்வீர்கள். ஆறில் ராகு இருப்பதால் வெளிநாட்டு நண்பர்கள் உதவுவார்கள்.

http://www.kathiravan.com/?page_id=1302
Share with your friends










Submit