இராசிபலன்கள் 21-9-2015 முதல் 27-9-2015 வரை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கதிரவனுக்காகக் கணித்து எழுதியவர் ஞானயோகி டாக்டர்.ப.இசக்கி,IBAM, RMP,DISM,தமிழ்நாடு, இந்தியா

 • மேசராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரமாகும்.செப்டம்பர்21,22,23தீர்த்த யாத்திரைகள் சென்று வருவதற்கான முயற்சிகளில் ஈடு பட்டுப் புதிய கடன்களை வாங்குவீர்கள். வீடு மற்றும் தொழிற் சாலைகளில் கவனமுடன் இருந்தால் திருட்டு போவதைத் தவிர்க்கலாம்.பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடி நிலைகள் மாறிப் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்படும். கண் காதுகளில் கவனம் தேவை.மாணவர்கள் கல்வியில் மிகுந்த கவனமுடன் பயின்று வருதல் நல்லதாகும்.செப்டம்பர்24,25,26தந்தை மகன் உறவுகளில் இருந்து வந்த கருத்து வேறு பாடுகள் குறைந்து மன நிம்மதி அடைவீர்கள். நண்பர்களிடம் நாம் விட்டுக் கொடுத்துப் போவதால் மனக் கசப்புகளைத் தவிர்க்கலாம்.புதிய தொழில்களை ஆரம்பம் செய்வதைச் சிறிது காலம் தள்ளிப் போடுதல் உகந்ததாகும்.கருத்து வேறுபாடுகளுடன் இருந்து வந்த கணவன் மனைவி உறவுகளில் உள்ள பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமையுடன் காணப்படுவீர்கள்.செப்டம்பர்27பூர்வீகச் சொத்து சம்பந்தமான வழக்கு விசயங்களில் எதிர் பார்த்த நல்ல முடிவுகள் கிடைக்கலாம்.வேலை இல்லாத படித்த இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கக் கூடிய காலமாகும்.காதல் சம்பந்தமான விசயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் செயல் படவும். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும். இராசியான எண்:-1 இராசியான நிறம்:-வெள்ளை இராசியான திசை:-கிழக்கு பரிகாரம்:-சூரிய நமஸ்காரம் வழிபாடு செய்து வரவும்.

 • ரிசபராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். செப்டம்பர்21,22,23வெளிநாடு சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளுக்காக கடன் கேட்டு எதிர் பார்த்து இருந்த பணம் கிடைக்க வாய்ப்பு உளளது. கோர்ட் சம்பந்தமான வழக்கு விசயங்களில் முடிவுகள் கிடைக்க இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம். காணாமற் போன பொருட்கள் காவல் துறையினரின் உதவியால் திரும்பக் கிடைக்கும்.தொழிலாளர்களுடன் முன் கோபத்தை தவிர்த்து எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது.செப்டம்பர்24,25தீராத நோய்கள் தீர வேண்டி நீண்ட தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள்.விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ள காலமாகும். வராத கடன் கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் சம்பந்தமாக வீண் பிரச்சனைகள் உருவாகலாம்.. மன உற்சாகத்துடன் பெரிய மனிதர்களின் சந்திப்பின் மூலம் காரியங்களைச் சாதித்துக் கொள்ளுவீர்கள். செப்டம்பர்26,27கமிசன், தரகு,எஜன்சி போன்ற தொழிற் செய்வோர்கள்,பழைய பொருட்களாகிய பேப்பர்,பிளா~;டிக்,இரும்பு போன்ற வியாபாரிகள்,மருத்துவ மனைகளில் பரிசோதனைப் பணி செய்பவர்கள்,காட்டு இலாகா துறை சாரந்தவர்கள்,இயந்திரம், கம்யுட்டர் போன்ற பொருட்கள், எண்ணை, பலசரக்கு வியாபாரிகள்,காண்டிராக்ட், கமிசன் தொழிற் செய்வோர்கள், இன்சினியரிங்துறை சார்ந்தவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். குல தெய்வ ஆலய வழி பாடுகள் செய்து வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு மன நிம்மதியை அடைவீர்கள். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும். இராசியான எண்:-8 இராசியான நிறம்:-நீலம் இராசியான திசை:-தென்மேற்கு பரிகாரம்:-சனீஸ்வர வழிபாடு செய்து வரவும்.

 • மிதுனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும்..செப்டம்பர்21புதிகடன் கொடுப்பதைத் தவிர்த்தல் நல்லது. நண்பர்களின் வீட்டுச் சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். குடும்பத்தில் தடை பட்டு வந்த சுப காரியங்கள் நிறைவேற இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம்.செப்டம்பர்22,23,24ஒரு சிலருக்கு வீடு மற்றும் தொழிற் சாலைகளை இட மாற்றம் செய்ய திட்டம் போடுவீர்கள். ரேஸ் லாட்டரி போன்ற சூதாட்டங்களின் மூலமாகப் பணம் கிடைக்கும் எனக் கருதி ஏமாற்றம் அடைய வேண்டாம். நீண்ட தூரப் பயணங்கள் மூலம் காரியங்கள் நிறைவேறும் காலமாகும்.பொதுத் தொண்டுகளில் ஈடு படுவோர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பணி செய்வது நல்லதாகும்.செப்டம்பர்25,26,27கணவன் மனைவி உறவுகளில் வெகு நாட்களாக இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் சற்று குறைந்து மன நிம்மதி அடைவீர்கள். கட்டிட சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்வோர்கள், கலைக் கல்லூரி நடத்துபவர்கள் இவைகளில் பணி செய்வோர்கள்,பூஜை சாதனப் பொருட்கள்,ஆலயப்பணியாளர்கள்,உப்பு வியாபாரிகள்,கப்பல் பணி ஆற்றுபவர்கள்,தண்ணீர் டீல்டிரிங்ஸ் போன்ற திரவப் பொருள் வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும். இராசியான எண்:-2 இராசியான நிறம்:-வெள்ளை இராசியான திசை:-மேற்கு பரிகாரம்:-அம்மன் ஆலய வழிபாடு செய்து வரவும்.

 • கடகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும்.செப்டம்பர்21,22,23தந்தை வழி சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் சற்று குறையும்.வங்கிகள் மூலமாக எதிர் பார்த்து இருந்த கடன் கேட்டு இருந்த பணங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நீண்ட காலமாகத் தடை பட்டு வந்த திருமணம் போன்ற சுப காரியங்கள் நடை பெறலாம்..வெளி நாட்டில் இருந்து எதிர்பார்த்த பண உதவிகள் மற்றும் நல்ல செய்திகள் வந்து சேரும்.செப்டம்பர்24,25கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். மறைமுக எதிரிகளால் இருந்து வந்த தொல்லைகள் குறைய வாய்ப்பு உள்ள காலமாகும். குல தெய்வ ஆலய வழிபாடுகள் செய்து வருவது சிறந்ததாகும். சொத்து சம்பந்தமான விசயங்களில் இருந்து வந்த மனக் கசப்புகள் குறைந்து ஒற்றுமை உண்டாகும்.அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது.செப்டம்பர்26,27கட்டிட சம்பந்தமான ஆடம்பரஅலங்கார பொருட்கள்,பூஜைப் பொருள் வியாபாரிகள்,அற நிலையத்துறை சார்ந்தவர்கள்,பொதுத் தொண்டு நிறுவனங்கள், அநாதை ஆசிரமங்கள் நடத்துபவர்கள்,கம்யுட்டர் பணி செய்பவர்கள், பேராசிரியர்கள், பழ வியாபாரிகள், ஆலயங்களில் பணி புரிபவர்கள்,பொது நலத் துறைகளைச் சார்ந்துள்ள பணியாளர்கள் ஆகியோர்கள் லாபம் அடைவார்கள். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும். இராசியான எண்:-6 இராசியான நிறம்:-வெள்ளை இசராசியான திசை:-தென்கிழக்கு பரிகாரம்:-மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.

 • சிம்மராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும்.செப்டம்பர்21,22வெளிநாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் நல்ல தகவல்கள் வந்து சேரும்.காதல் விசயங்களில் நற் செய்திகள் வந்து சேரும்.உடல் நிலையில் மூலம் மற்றும் வயிறு போன்ற உபாதைகள் வந்து போகும். புதிய ஆடை மற்றும் ஆபரணங்கள் வாங்குவதைத் தவிர்த்தல் நல்லது.செப்டம்பர்23,24,25பூர்வீகச் சொத்துக்களில் நீண்ட நாட்களாக இருந்து வந்துள்ள பிரச்சனைகளுக்குப் பெரிய மனிதர்களின் தலை யிடுதலால் நல்ல தொரு சாதகமான முடிவுகள் கிடைக்கும். பிள்ளைகளுக்கு கல்வித் துறையில் பரிசுகள் மற்றும் பாராட்டுக்களைப் பெறுவதன் மூலம் குடும்பத்தில் மன மகிழச்சி உண்டாகும். நண்பர்களின் மூலமாகப் புதிய கடன்கள் வாங்கிப் பழைய கடனைகள் அடைப்பீர்கள். பிரிந்து போன கணவன் மனைவி இருவரும் திரும்ப ஒன்று சேருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.செப்டம்பர்26,27தங்கம் வெள்ளி போன்ற நகை வியாபாரிகள்,சேர் மார்க்கெட் நடத்துபவர்கள், கட்டில் மெத்தை போன்ற அலங்காரப் பொருட்களின் வியாபாரிகள்,அரசுத் துறை சார்ந்த வெளி நாட்டுத் தூதுவரகங்களில் பணி ஆற்றுபவர்கள்,மந்திரிப் பதவிகளை வகிப்பவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும். இராசியான எண்:-1 இராசியான நிறம்:-வெள்ளை இராசியான திசை:-கிழக்கு பரிகாரம்:-சூரிய வழிபாடு செய்து வரவும்.

 • கன்னிராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு கேது நன்மை தரும் கிரகமாகும்.செப்டம்பர்21,22கூட்டுத் தொழில் செய்வதற்கான முயற்சிகளுக்காக எதிர் பார்த்து இருந்த பணம் கை வந்து சேரும் காலமாகும். அண்டை அயல் வீட்டுக்காரர்களு டன் வீண் பிரச்சனைகள் உருவாகலாம். வெளி நாட்டில் வசிப்வர்கள் தாய் நாடு சென்று உறவினர்களைச் சந்தித்து திரும்ப வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் நீண்ட காலமாகத் தடை பட்டு வந்த சுப காரிய நிகழ்ச்சிகள் நிறை வேறுவதற்காக புதிய கடன்கள் வாங்குவீர்கள்.செப்டம்பர்23,24,25யாத்திரையில் மிகுந்த கவனமுடன் பிரயாணம் செய்து வருதல் நல்லது. மீன், முட்டை, மாமிசம் போன்ற உணவுப் பொருள்களின் வியாபாரிகள், பழைய பொருட்கள் விற்பனை செய்வோர்கள்,இரசாயனத் தொழிற் சாலைகளில் பணி;கள் செய்வோர்கள்,அணு ஆராய்ச்சிகளில் பங்கு கொள்வோர்கள்,பழைய இரும்பு சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல பலனை அடைவார்கள்.செப்டம்பர்26,27 திருட்டுப் போன பொருட்கள் மற்றவர்களின் உதவியால் திரும்ப கிடைக்கும். வெளி நாட்டில் இருப்பவர்கள் நீண்ட கால நினைவுகளாக இருந்த தாய் நாட்டிற்கு சென்று வர வாய்ப்பு உள்ளது. நீண்ட காலமாக வராத கடன் கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும். இராசியான எண்:-7 இராசியான நிறம்:-கருஞ்சிகப்பு இராசியான திசை:-வடமேற்கு புரிகாரம்:-கணபதி வழிபாடு செய்து வரவும்.

 • துலாம்ராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும்.செப்டம்பர்21,22பிள்ளைகளால் எதிர்பாராத சில தொல்லைகள் வந்து சேர வாய்ப்ப உள்ளதால் மிகுந்த கவனமுடன் பாரத்துக் கொள்ளுதல் நல்லது. அரசு சம்பந்தமான வழக்கு விசயங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நீண்ட காலமாகத் தடை பட்டு வந்த திருமண விசயமாக நல்ல முடிவுகள் கிடைக்கலாம். செப்டம்பர்23,24,25கணவன் மனைவி உறவுகள் நன்றாக இருக்கும். பிரிந்து போன உறவுகள் மீண்டும் ஒன்றுசேர வாய்ப்பு உள்ளது.செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச் சொல்லுக்க ஆளாக நேரிட இருப்பதால் நண்பர்களிடம் கவனமாகப் பழகுவது சிறந்தது. கணவன் மனைவி உறவுகளில் சற்று எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும்.வேற்று மதத்தவர்களால் வெளி நாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் நல்ல தகவல்கள் வந்த சேரும்.செப்டம்பர்26,27தபால் தந்தித் துறைகளைச் சார்ந்தவர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள்,பாடலாசிரியர்கள்,அச்சுத் தொழிற் செய்பவர்கள்,புத்தகம் மற்றும் பேப்பர் வியாபாரிகள்,நாடகத் துறை சார்ந்தவர்கள் ஆகியோர்கள் நற்பலன்களை அடைவார்கள். பெண்களால் எதிர் பாராத ஆதாயங்களைத் தென் திசையில் இருந்து அடைவீர்கள். மற்றவர்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்களை கடன் கொடுத்து ஏமாற்றம் அடையாதீர்கள்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும். இராசியான எண்:-5 இராசியான நிறம்:-பச்சை இராசியான திசை:-வடக்கு பரிகாரம்:-மஹாவி~;ணு ஆலய வழிபாடு செய்து வரவும்.

 • விருச்சிகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும்..செப்டம்பர்21குடும்பத்தில் இருந்து வந்துள்ள மருத்துவ செலவுகள் சற்று குறைந்து காணப்படும். நீண்ட காலமாகத் தடைபட்டு வந்த சகோதர சகோதரிகளின் சுப காரிய நிகழ்ச்சிகளுக்காக நடை பெற வாய்ப்பு உள்ளது.செப்டம்பர்22,23,24வராத கடன் கொடுத்து இருந்த பணம் மீண்டும் கைக்கு வந்து சேரும் காலமாகும். சினிமா,நாடகம் மற்றும் கலைத் துறை சம்பந்தமான பொருட்கள் விற்பனை செய்வோர்கள்,நடிகர்கள் நடிகைகள்,கலைத் தொழிற் செய்வோர்கள்,பாத்திர வியாபாரிகள்,கலைக் கல்லூரி சார்ந்தவர்கள் ஆகியோர்கள் நல்ல பலன்களை அடைவார்கள். புதிய கடன்களை வாங்கி பழைய கடனை அடைக்க முயற்சி செய்வீர்கள்.செப்டம்பர்25,26,27பூமி நிலம் சம்பந்தமான பிரச்சனைகளில் நல்ல முடிவுகள் கிடைக்கும். திடீர் அதிர்~;;டமான ரேஸ் லாட்டரி போன்ற வற்றின் மூலமாகத் தன வரவுகள் உண்டாகலாம். வங்கிகளில் இருந்து எதிர் பார்த்து இருந்த பண உதவிகள் கிடைக்கலாம். வீடு வாகனங்களை பழுது பார்ப்பதன் மூலம் பொருட் செலவுகள் உண்டாகும்.உடம்பில் கண் காதுகளில் கவனமுடன் இருக்கவும்.காதல் சம்பந்தமான பெண்கள் விசயங்களில் மிகுந்த எச்சரிக்கை யுடன் நடந்து கொள்வது நன்றாகும்.பொதுவாக இது ஒரு எச்சரிக்கை நிறைந்த வாரமாகும். இராசியான எண்:-6 இராசியான நிறம்:-வெள்ளை இராசியான திசை:-தென்கிழக்கு பரிகாரம்:-மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.

 • தனுசராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும்.செப்டம்பர்21,22நண்பர்களால் வீண் பிரச்சனைகளும்,மன நிம்மதிக் குறைவும் ஏற்பட இருப்பதால் எச்சரிக்கையுடன் பழகி வருதல் சிறந்தது.மாமிச உணவுப் பொருட்களின் வியாபாரிகள் நல்ல லாபம் அடைவார்கள். மஹான்களின் எதிர் பாராத தரிசனங்களால் மன மகிழ்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது.செப்டம்பர்.23,24,25பொது நலத் தொண்டுகளில் பிரியமுடன் ஈடு பட்டு நற்பெயர் புகழ் அடைவீர்கள்.பழுது பட்ட ஆலயங்களை மற்றும் வீடுகளைப் புதுப்பிப்பதற்கான முயற்சிகளுக்காகப் புதிய கடன் வாங்குவீர்கள் கடன் மற்றம் சொத்து போன்ற விசயங்களில் பிறருக்காக ஜாமீன் போடுவதை தவிர்க்கவும். உற்றார் உறவினர்களால் எதிர் பார்த்த ஆததாயம் இல்லை.குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக உல்லாசப் பயணங்கள் சென்று வருவீர்கள். உற்றார் உறவினர்களின் திடீர் வரவுகளால் மன நிம்மதியுடன் கூடிய பொருட் செலவுகள் உண்டாகும்.செப்டம்பர்26,27உடல் நிலையில் வாயு மற்றும் வயிறு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும்.பெண்களின் விசயங்களில் செய்யாத குற்றங்களுக்காக அவப் பெயர் ஏற்படலாம்.புதிய ஆடை அணிகலன்களை வாங்க புதிய கடன்களை வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மற்றவர்களுக்காக உதவுவதாக எண்ணி வீண் பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டு மன நிம்மதி இழக்க வேண்டாம்.. பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும். இராசியான எண்:-4 இராசியான நிறம்:-கருப்ப இராசியான திசை:-வடமேற்கு புரிகாரம்:-பிதுர்க்கள் மற்றும் அம்மன் ஆலய வழிபாடு செய்து வரவும்.

 • மகரராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்.செப்டம்பர்21,22மற்றவர்களின் விசயங்களில் அநாவசியமாகத் தலையிட்டு வீண் பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டு மன நிம்மதி இழக்காதிருங்கள்.. யாத்திரையின் போது புதிய பெரிய மனிதர்கள் மற்றும் அரசியல் வாதிகள் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் சில ஆதாயங்களை அடைவீர்கள். தாயின் உடல் நிலையில் இருந்து வந்த பாதிப்புகள் சற்று குறைந்து காணப்படும்.செப்டம்பர்23,24,25புதியதாக வீடு நிலங்கள் வாங்குவதற்கான முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். சகோதர சகோதரிகளுடன் இருந்து வந்த நாட் பட்ட மனக் கசப்புகள் தீர்ந்து ஒற்றுமை அடைவீர்கள். வேற்று மதத்தவரால் வெளி நாடு சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளில் வெற்றி பெற இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம். வட்டித் தொழில்,கமிசன்,தரகு ஏஜன்சி குத்தகைத் தொழில்கள் செய்வோர்கள்,நெருப்பு ராணுவம், காவல் துறை சார்ந்தவர்கள்,ஹோட்டல் நடத்துபவர்,மின் சாரத் துறை சார்ந்த பணியாளர்கள் இவைகளை உற்பத்தி விற்பனை செய்வோர்கள் ஆகியோர் நல்ல பலனை அடைவார்கள்.செப்டம்பர்26,27குடும்பத்தில் களவு போன பொருட்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் உதவியால் திரும்ப கிடைக்கும்.பிள்ளை களுக்கு உடல் நிலையில் வந்த பாதிப்புகளால் வெளியுர் பயணங்களும் மருத்துவச் செலவுகளும் உண்டாகும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும். இராசியான எண்:-9 இராசியான நிறம்:-சிகப்பு இராசியான திசை:-தெற்கு பரிகாரம்:-துர்க்கை ஆலய வழிபாடு செய்து வரவும்.

 • கும்பராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும்.செப்டம்பர்21,22இராசாயனம்,எண்ணை, பெட்ரோல் டீசல் போன்ற வியாபாரிகள், மீன்,முட்டை மாமிசம் போன்ற உணவுப் பொருள்களின் வியாபரிகள்,விஞ்ஞானத்துறை சார்ந்தவர்கள்,வெளி நாட்டுத் தூதுவர்கள் மற்றும் இவ்வலுவலகங்களில் பணி புரிவோர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். செப்டம்பர்23,24,25 தீராத நோய்களுக்குப் புதிய முறை மருத்துவங்களின் மூலமாக நோய்தீர வாய்ப்புள்ளது.பிரிந்துபோன பழைய உறவுகள் மீண்டும் தொடரலாம். கண்களில் கவனம் தேவை. மனைவியின் உடல் நிலையில் பாதிபு;புகள் எற்பட்டு அவர்களால் மருத்துவச் செலவுகள் உண்டாகும்.பங்காளி களுடன் சேர்ந்து நடத்தும் கூட்டுத் தொழில்களில் காரணமற்ற மனக் கசப்புகள் வர இருப்பதால் முன் கோபத்தை விலக்குதல் சிறந்தது.செப்டம்பர்26,27கணவன் மனைவி உறவுகள் சுமாராக காணப்படும். மாணவர்கள் கல்வி பயிலும் இடங்களில் வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக நேரிடும் என்பதால் மிகுந்த கவனமுடன் இருத்தல் நல்லதாகும்.அரசியல் வாதிகளின் மூலமாக எதிர்பார்த்து இருந்த உதவிகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. உத்தியோகத் துறையினருக்குப் பதவி உயர்வுகளும் பணி இட மாற்றங்களும் ஏற்படலாம்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும். இராசியான எண்:-8 இராசியான நிறம்:-நீலம் இராசியான திசை:-தென்மேற்கு பரிகாரம்:-சனீஸ்வர வழிபாடு செய்து வரவும்.

 • மீனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும்.செப்டம்பர்21,22யாத்திரையில் சில புதிய சந்திப்பகளால் நன்மை அடைவீர்கள். வங்கிகள் மூலமாக வெகு நாட்களாக எதிர் பார்த்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் மற்றவர்களின் உதவியால் திரும்பக் கை வந்து சேரும்.வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலை வாப்ப்புகள் கிடைக்கும்.செப்டம்பர்23,24,25 சூதாட்டமாகிய ரேஸ் லாட்டரி மூலம் பொருள் இழப்புக்கள் ஏற்பட இருப்பதால் எச்சரிக்கை தேவை. அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் விட்டுக் கொடுத்து போவதின் மூலம் சில ஆதாயத்தை அடைவீர்கள். சினிமா,நாடகம் போன்ற துறை சார்ந்தவர்கள்,இசைக் கலைஞர்கள்,இசைக் கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் இவற்றில் பணி புரிவோர்கள்,இணைய தளங்கள் நடத்து பவர்கள் ஆகியோர்கள் நல்ல பலன் அடைவார்கள்.செப்டம்பர்26,27அடிமை ஆட்களால் எதிர் பாராத ஆதாயங்களும் மன மகிழ்ச்சியும் ஏற்படும். அரசியல் வாதிகளால் எதிர் பார்த்து இருந்த ஆதாயம் கிடைக்க கூடிய வாய்ப்பு உள்ளது.சூதாட்டங்களில் பணம் பொருட்கள் ஏமாற்றம் அடையாமல் எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது. யாத்திரையில் மற்றவர்களை நம்பி ஏமாற்றம் அடைய வேண்டாம்..பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும். இராசியான எண்:-3 இராசியான நிறம்:-மஞ்சள் இராசியான திசை:-வடகிழக்கு பரிகாரம்::-சிவ ஆலய வழிபாடு செய்து வரவும். தொடரும்!

http://www.kathiravan.com/?page_id=1302