இராசிபலன்கள் 20-07-2016 முதல் 27-07-2016 வரை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]
வார பலன், ஜாதகம், Weekly Astrology Tamil, Weekly Astrology In Tamil, Tamil Weekly Astrology, Tamil Astrology For This Week, Tamil Astrology Weekly Predictions, Astrology In Tamil, Free Tamil Astrology, Tamil Astrology Horoscope, Tamil Astrology Rashi, Tamil Astrology Rashi Chart

கதிரவனுக்காகக் கணித்து எழுதியவர் ஜோதிடமணி பிரம்மஸ்ரீ ரகுநாத ஐயர் தமிழ்நாடு, இந்தியா

 • எல்லோருக்கும் நல்லதே செய்யும் நீங்கள், வெள்ளை உள்ளம் கொண்டவர்கள். புதன் சாதகமான நட்சத்திரங்களின் செல்வதால் புதிய சிந்தனைகள் தோன்றும். கற்பனை வளம் பெருகும். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். கல்யாண பேச்சு வார்த்தைக் கூடி வரும். பணவரவு அதிகரிக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சகோதரிக்கு திருமணம் முடியும். உறவினர், தோழிகள் உங்கள் உதவியை நாடுவார்கள். சமையலறையை நவீன மயமாக்குவீர்கள். சூரியனும் சாதகமான வீடுகளில் செல்வதால் பிள்ளைகள் எதிர்த்துப் பேசுவார்கள். அரசாங்க விஷயங்கள் சற்று தாமதமாக முடியும். பூர்வீக சொத்துப் பங்கை போராடி பெறுவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். அஷ்டமத்துச் சனி தொடர்வதால் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. யாருக்காகவும் சாட்சி கையப்பமிட வேண்டாம். மற்றவர்கள் விவகாரத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம். கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். அரசியல்வாதிகளே! சகாக்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமைகள் வெளிப்படும். பெருந்தன்மையாகப் பேசி சாதிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 18, 20, 22 அதிஷ்ட எண்கள்: 3, 7 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், ஆலிவ் பச்சை அதிஷ்ட திசை: வடமேற்கு

 • தேனீக்களைப் போல் சேமிக்கும் குணம் கொண்ட நீங்கள், சரியென பட்டதை செய்வீர்கள். சூரியன் 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. ஒரு சொத்தை விற்று மறு சொத்து வாங்குவீர்கள். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். பள்ளிக் கல்லூரி காலத் தோழியை சந்திப்பீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். ராகுவும், குருவும் 4-ல் தொடர்வதால் வேலைச்சுமையால் டென்ஷன் அதிகரிக்கும். கூடா பழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது. சிலர் வீடு மாற வேண்டி நிர்பந்தம் உண்டாகும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். கன்னிப் பெண்களே! பெற்றோரின் ஆதரவுப் பெருகும். அரசியல்வாதிகளே! கட்சித் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். பங்குதாரரை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். வளைந்துக் கொடுத்து சாதிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 21, 23, 24 அதிஷ்ட எண்கள்: 5, 9 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு அதிஷ்ட திசை: தென்கிழக்கு

 • சகிப்புத் தன்மை உடைய நீங்கள், சண்டைக்காரர்களிடமும் சகஜமாகப் பேசுவீர்கள். செவ்வாயும், சனியும் 6-ல் வலுவாக அமர்ந்திருப்பதால் உங்களின் புகழ், கௌரவம் பல மடங்கு உயரும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்பொழுது நிறைவேறும். விலகிச் சென்ற சொந்த-பந்தங்கள் உங்கள் வளர்ச்சிக் கண்டு வலிய வந்து உறவாடுவார்கள். பழைய கடன் பிரச்னைகள் தீரும். சூரியன் 2-ல் அமர்ந்திருப்பதால் பதட்டப்பட்டு பேச வேண்டாம். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். குரு 3-ல் மறைந்துக் கிடப்பதால் சோர்வு, களைப்பு வந்துப் போகும். இளைய சகோதரர் குறைப்பட்டுக் கொள்வர். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். அரசியல்வாதிகளே! கட்சி ரகசியங்களை மூத்த தலைவர் உங்களிடம் பகிர்ந்துக் கொள்வார். கன்னிப் பெண்களே! பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் ஒரே நேரத்தில் பல வேலைகளை பார்க்க வேண்டி வரும். அதிரடியாக செயல்பட்டு வெற்றி பெறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 19, 23, 24 அதிஷ்ட எண்கள்: 1, 3 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு அதிஷ்ட திசை: கிழக்கு

 • சீர்திருத்த சிற்பிகளான நீங்கள், பிறரின் சுதந்திரத்தில் தலையிட மாட்டீர்கள். புதனும், சுக்ரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் உங்கள் செயலில் வேகம் கூடும். பிரபலங்கள் உதவுவார்கள். பூர்வீக சொத்தை மாற்றியமைப்பீர்கள். பிள்ளைகளின் எண்ண ஓட்டத்தை அறிந்து அதற்கேற்ப வழி நடத்துவீர்கள். உங்களிடம் பழகும் தோழிகள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வேற்றுமதத்தவரால் ஆதாயம் உண்டு. மச்சினருக்கு புது வேலைக் கிடைக்கும். சூரியன் ராசிக்குள் நிற்பதால் முன்கோபம், காரியத் தாமதம், மாதவிடாய்க் கோளாறு வந்துச் செல்லும். அரசு காரியங்கள் இழுபறியாகும். ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால் ஏமாற்றம், வீண் விரையம், இரத்த அழுத்தம், பல் வலி வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளே! கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். கன்னிப் பெண்களே! பள்ளிக் கல்லூரி காலத் தோழியை சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி சில ரகசியப் பொறுப்புகளை ஒப்படைப்பார். பழைய சிக்கல்களில் ஒன்று தீரும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 18, 20, 21 அதிஷ்ட எண்கள்: 2, 6 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன் அதிஷ்ட திசை: வடகிழக்கு

 • தெளிந்த நீரோடை போல் தீர்க்கமாக முடிவெடுக்கும் நீங்கள், நீதி, நெறிமுறைகளை மீற மாட்டீர்கள். சுக்ரனும், புதனும் சாதகமாக இருப்பதால் கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். பழைய இடத்தை விற்று புது வீடு வாங்குவீர்கள். திடீர் பணவரவு உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். சுபச் செலவுகள் அதிகமாகும். பழுதான ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷினை மாற்றுவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளிடம் மறைந்திருந்த திறமைகளை இனம் கண்டறிவீர்கள். உறவினர், தோழிகள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். மச்சினருக்கு வேலைக் கிடைக்கும். ராசிநாதன் சூரியன் 12-ல் மறைந்திருப்பதால் திடீர் செலவுகள், பயணங்கள் அதிகரிக்கும். அரசாங்க விஷயம் தாமதமாகி முடியும். அர்த்தாஷ்டமச் சனி நீடிப்பதால் முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பிழப்பு, மூட்டு வலி, தலைச்சுற்றல், கழுத்து வலி வந்துப் போகும். அரசியல்வாதிகளே! கட்சித் தலைமைக்கு பல ஆலோசனைகள் தருவீர்கள். கன்னிப் பெண்களே! கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும். மூளை பலத்தால் முன்னேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 18, 19, 21 அதிஷ்ட எண்கள்: 4, 6 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, மெரூண் அதிஷ்ட திசை: வடமேற்கு

 • துயரங்களைக் கண்டு துவளாத நீங்கள், நாளை நமதே என்ற நம்பிக்கையில் வாழ்வீர்கள். சனியும், செவ்வாயும் வலுவாக அமர்ந்திருப்பதால் எதிலும் வெற்றி கிட்டும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பிள்ளைகள் முன்னேற வேண்டுமென துடிப்பார்கள். பாதியில் நின்று போன வீடு கட்டும் வேலையை தொடங்குவீர்கள். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். ராசிக்கு 12-ல் குருவும், ராகுவும் தொடர்வதால் வீண் டென்ஷன், தூக்கமின்மை, எதிலும் ஆர்வமின்மை, செலவினங்கள், பழைய கடனைப் பற்றிய கவலைகள் வந்துப் போகும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி பெறுவீர்கள். அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் உங்கள் கருத்துக்கு ஆதரவுப் பெருகும். கன்னிப் பெண்களே! வேற்றுமதத்ததை சேர்ந்தவர்கள் தோழிகளாக அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புது ஏஜென்சி எடுப்பீர்கள். அனுபவமிக்க வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். எதையும் சாதித்துக் காட்டும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 19, 20, 22 அதிஷ்ட எண்கள்: 2, 7 அதிஷ்ட நிறங்கள்: கிரே, கிளிப் பச்சை அதிஷ்ட திசை: மேற்கு

 • நீதியை விரும்பும் நீங்கள், அநியாயத்திற்கு துணை போக மாட்டீர்கள். சூரியன் 10-ல் நுழைந்திருப்பதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். பதவிகள் தேடி வரும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். பிள்ளைகள் தங்கள் தவறை உணருவார்கள். உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். அரசியலில் செல்வாக்குக் கூடும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். செவ்வாயும், சனியும் 2-ல் நிற்பதால் சிறுசிறு விபத்து, நெருப்புக் காயங்கள், திடீர் செலவினங்கள், கடன் தொந்தரவுகள் வந்துப் போகும். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். அலைப்பேசியில் பேசிக் கொண்டே சமையலறையில் சமைக்க வேண்டாம். யோகா, தியானம் செய்வது நல்லது. அரசியல்வாதிகளே! கட்சியின் மூத்த உறுப்பினர்களைச் சந்தித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கன்னிப் பெண்களே! காதலில் சிக்கிக் கொள்ளாதீர்கள். தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொட்டதெல்லாம் துலங்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 21, 23, 24 அதிஷ்ட எண்கள்: 2, 5 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, மஞ்சள் அதிஷ்ட திசை: கிழக்கு

 • தனக்கென எடுத்து வைக்கத் தெரியாத நீங்கள் தராதரம் அறிந்து பழகுபவர்கள். புதனும், சுக்ரனும் சாதகமாக இருப்பதால் எடுத்த வேலைகளை முடிக்காமல் ஓய மாட்டீர்கள். கடனாக கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பிள்ளைகளின் உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சற்று தாமதமாகி முடியும். வீட்டை விரிவுப்படுத்துவது குறித்து யோசிப்பீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். சூரியன், சர்ப்ப கிரகங்கள், குரு மற்றும் சனி உங்களுக்கு சாதகமாக இல்லாததால் எதிலும் நிம்மதியற்றப் போக்கு நிலவும், பழைய பிரச்னைகள் போல் மீண்டும் ஏதேனும் புதிதாக சிக்கல்கள் வந்துவிடுமோ என்ற அச்சம் இருந்துக் கொண்டேயிருக்கும். சேமிப்புகள் கரையும். வங்கிக் காசோலையில் முன்னரே கையப்பமிட்டு வைக்க வேண்டாம். சின்ன சினன் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. சிலர் சொத்தை விற்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். தந்தையின் உடல் நலம் பாதிக்கும். அரசாங்க விஷயங்கள் தள்ளிப் போகும். அரசியல்வாதிகளே! கோஷ்டி பூசல்களிலிருந்து விடுபடுவீர்கள். கன்னிப் பெண்களே! பெற்றோர் உங்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். பொறுப்புகள் அதிகரிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 18, 23, 24 அதிஷ்ட எண்கள்: 1, 9 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், இளம்சிவப்பு அதிஷ்ட திசை: தெற்கு

 • மென்மையான சிந்தனை உடைய நீங்கள் வன்முறைகளை கண்டு அஞ்சமாட்டீர்கள். கேதுவும், குருவும் வலுவாக அமர்ந்திருப்பதால் உங்களின் நிர்வாகத் திறமை, ஆளுமைத் திறன் அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். ஷேர் மூலம் பணம் வரும். நகர எல்லையைத் தாண்டி வீட்டு மனை வாங்குவீர்கள். கணவர் நேசிப்பார். கடன் பிரச்சனைகள் ஒரு பக்கம் விரட்டினாலும் இங்கிதமாகப் பேசி வட்டியை தருவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உறவினர் ஒருவரை சந்திப்பீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். ஏழரைச் சனி தொடர்வதால் மந்தம், மறதி, வீண் விரையம், சின்ன சின்ன ஏமாற்றம் வந்துச் செல்லும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். அரசியல்வாதிகளே! பொதுக்கூட்டம், போராட்டங்களில் முன்னிலை வகிப்பீர்கள். கன்னிப் பெண்களே! கெட்ட நண்பர்களின் சகவாசங்களிலிருந்தும் விடுபடுவீர்கள். புது முதுலீடு செய்து வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமைத் தருவார்கள். தன்னடக்கத்துடன் செயல்படும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 18, 20, 21 அதிஷ்ட எண்கள்: 5, 8 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், ரோஸ் அதிஷ்ட திசை: தென்மேற்கு

 • விழுவதெல்லாம் எழுவதற்கே என்பதை அறிந்த நீங்கள் இலக்கை எட்டும் வரை ஓயமாட்டீர்கள். செவ்வாயும், சனியும் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வீட்டை விரிவுப்படுத்தி கட்டுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். உடன்பிறந்தவர்கள் மதிப்பார்கள். 7-ல் சூரியன் நுழைந்திருப்பதால் வேலைச்சுமை, உடல் உஷ்ணத்தால், கணவருக்கு அலைச்சல், முடி உதிர்தல், வேனல் கட்டி அதிகரிக்கும். அரசாங்க அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததால் பல வேலைகள் தடைப்பட்டு முடியும். வெகுளித்தனமாகப் பேசி விமர்சனத்திற்குள்ளாவீர்கள். முன்பின் தெரியாதவர்களிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். அரசியல்வாதிகளே! கோஷ்டி சண்டையிலிருந்து ஒதுங்குங்கள். கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை தள்ளுபடி விலையில் விற்று முடிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 19, 21, 23 அதிஷ்ட எண்கள்: 3, 9 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ப்ரவுன் அதிஷ்ட திசை: மேற்கு

 • சொல்லாலோ, செயலாலோ மற்றவர்களை காயப்படுத்தாத நீங்கள் அன்புக்கு அடிமையாவீர்கள். சூரியன் வலுவாக 6-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். ஆளுபவர்கள் அறிமுகமாவார்கள். அரசாங்க விஷயங்கள் விரைந்து முடியும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். செவ்வாயும் சாதகமாக இருப்பதால் சகோதர வகையில் அனுகூலம் உண்டு. வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். வழக்கு சாதகமாகும். சுக்ரன் 6-ல் மறைந்திருப்பதுடன், 23-ந் தேதி வரை புதனும் 6-ல் நிற்பதால் வாகனம், மின்னணு, மின்சார சாதனப் பழுது, தொண்டைப் புகைச்சல், உறவினர் பகை வந்துப் போகும். சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததால் தாழ்வுமனப்பான்மை, முன்கோபம், எதிலும் பிடிப்பற்றப் போக்கு வந்துச் செல்லும். உணவில் கட்டுப்பாடு அவசியம். 24-ந் தேதி முதல் புதன் 7-ல் அமர்வதால் சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். அரசியல்வாதிகளே! தலைமையின் ஆதரவால் கட்சியில் செல்வாக்குக் கூடும். கன்னிப் பெண்களே! பெற்றோரின் அரவணைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். புது சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். விடாமுயற்சியால் விட்டதைப் பிடிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 18, 20, 22 அதிஷ்ட எண்கள்: 5, 8 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், சில்வர்கிரே அதிஷ்ட திசை: தென்கிழக்கு

 • மண் மனம் மாறாதவர்களான நீங்கள் கண்டம் தாண்டிப் போனாலும் கலாச்சாரத்தை மறக்க மாட்டீர்கள். சுக்ரன் சாதகமாக இருப்பதால் மாறுபட்ட அணுகுமுறையால் முன்னேறுவீர்கள். யதார்த்தமான பேச்சால் கவர்வீர்கள். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வீட்டில் கூடுதலாக ஒரு அறைக் கட்டுவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். ராகு 6-ல் வலுவாக அமர்ந்திருப்பதால் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். ஹிந்தி, மலையாளம் பேசுபவர்களால் உதவிகள் உண்டு. 5-ல் சூரியன் அமர்ந்திருப்பதால் பிள்ளைகள் பிடிவாதகமாக இருப்பார்கள். கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. 24-ந் தேதி முதல் புதன் 6-ல் மறைவதால் நரம்புச் சுளுக்கு, கழுத்து வலி, சளித் தொந்தரவு வந்துப் போகும். உறவினர், தோழிகள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். குரு சாதகமாக இல்லாததால் இனந்தெரியாத கவலைகள் வரக்கூடும். மற்றவர்களைக் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். அரசியல்வாதிகளே! முக்கிய விழாக்களுக்கு தலைமை தாங்குவீர்கள். கன்னிப் பெண்களே! தவறான எண்ணங்களுடன் பழகியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் வரும். உத்யோகத்தில் அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். போராடி வெற்றி பெறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 18, 22, 24 அதிஷ்ட எண்கள்: 4, 7 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், மஞ்சள் அதிஷ்ட திசை: வடக்கு

http://www.kathiravan.com/?page_id=1302