இராசிபலன்கள் 20-01-2016 முதல் 26-01-2016 வரை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]
வார பலன், ஜாதகம், Weekly Astrology Tamil, Weekly Astrology In Tamil, Tamil Weekly Astrology, Tamil Astrology For This Week, Tamil Astrology Weekly Predictions, Astrology In Tamil, Free Tamil Astrology, Tamil Astrology Horoscope, Tamil Astrology Rashi, Tamil Astrology Rashi Chart

கதிரவனுக்காகக் கணித்து எழுதியவர் ஞானயோகி டாக்டர்.ப.இசக்கி,IBAM, RMP,DISM,தமிழ்நாடு, இந்தியா

 • சொன்ன சொல்லைக் காப்பாற்றும் குணமுடைய நீங்கள், எப்பொழுதும் நல்லதையே நினைப்பீர்கள். உங்கள் பூர்வ புண்யாதிபதி சூரியன் 10-ல் அமர்ந்திருப்பதால் உங்களின் நிர்வாகத் திறமை, ஆளுமைத் திறன் அதிகரிக்கும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். முக்கிய பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். பணவரவு உண்டு. புது வேலை அமையும். பூர்வீக சொத்தை மாற்றி புது வீடு வாங்கும் யோகம் உண்டாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் கூடா நட்பு விலகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். அயல்நாட்டிலிருக்கும் தோழியால் ஆதாயமடைவீர்கள். ராசிநாதன் செவ்வாய் 7-ல் நிற்பதால் உடல் உஷ்ணம், வேனல் கட்டி வந்துச் செல்லும். 8-ல் சனி இருப்பதால் நன்றி மறந்தவர்களை நினைத்து வருந்துவீர்கள். சிலர் மீது நம்பிக்கையில்லாமல் போகும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன் சட்ட ஆலோசகரை கலந்தாலோசிப்பது நல்லது. அரசியல்வாதிகளே! உங்களின் கோரிக்கையை மேலிடம் பரிசீலிக்கும். கன்னிப் பெண்களே! பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். பழைய பிரச்னைகளிலிருந்து விடுபடும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்:18,19,21 அதிஷ்ட எண்கள்:5,8 அதிஷ்ட நிறங்கள்:ப்ரவுன், ஊதா அதிஷ்ட திசை:கிழக்கு

 • விடாப்பிடியான செயல்திறனும், விட்டுக் கொடுக்கும் மனசும் கொண்ட நீங்கள், இனிமையான பேச்சுக்கு சொந்தக்காரர். சப்தமாதிபதி செவ்வாய் 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் புதிய கோணத்தில் சிந்தித்து பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். பிள்ளைகளின் கலைத் திறனை கண்டறிந்து வெளிக் கொணர்வீர்கள். பழைய உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்று கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால் எதிலும் நாட்டமின்மை, வேலைச்சுமை, சிறுசிறு மரியாதைக் குறைவான சம்பவங்கள், வீண் பழிகளெல்லாம் வந்துச் செல்லும். சூரியன் 9-ம் வீட்டில் நுழைந்திருப்பதால் வீண் செலவுகள், தந்தைக்கு நெஞ்சு வலி, சளித் தொந்தரவு, அவருடன் கருத்து மோதல்கள் வந்துச் செல்லும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள். வியாபாரத்தில் புது நிறுவனங்களின் தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் மறைமுகப் பிரச்னைகள் வந்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவால் சமாளிப்பீர்கள். துணிச்சலான முடிவுகளெடுக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்:17,19,23 அதிஷ்ட எண்கள்:3,9 அதிஷ்ட நிறங்கள்:ஆலிவ்பச்சை, மஞ்சள் அதிஷ்ட திசை:வடகிழக்கு

 • அமைதியை விரும்பும் நீங்கள், போட்டியென வந்து விட்டால் விஸ்வரூபம் எடுத்து மற்றவர்களை மிரள வைப்பீர்கள். சனியும், ராகுவும் வலுவாக அமர்ந்திருப்பதால் புதிய முயற்சிகள் பலிதமாகும். பணவரவு திருப்தி தரும். ஷேர் மூலமும் பணம் வரும். வேற்றுமதம், மொழியினரால் உதவிகள் கிடைக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். செவ்வாய் 5-ல் நிற்பதால் பிள்ளைகள் கோபப்படுவார்கள். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. குரு சாதகமாக இல்லாததால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள், தாயாருக்கு கை, கால் வலி, உங்களுக்கும் அசதி, சோர்வு, சலிப்பு வந்துச் செல்லும். 20-ந் தேதி முதல் சுக்ரன் சாதகமாவதால் கணவருடனான மோதல்கள் விலகும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். அரசியல்வாதிகளே! தகுந்த ஆதாரமின்றி எதிர்கட்சியினரை தாக்கி பேச வேண்டாம். கன்னிப் பெண்களே! பள்ளி கல்லூரி கால தோழியை சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். மற்றவர்களை நம்பி முதலீடுகள் செய்ய வேண்டாம். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். வளைந்து நிமிரும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்:18,21,22 அதிஷ்ட எண்கள்:2,4 அதிஷ்ட நிறங்கள்:மெரூண்,கிரே அதிஷ்ட திசை:தெற்கு

 • நியாயமாக கிடைக்க வேண்டியதைக்கூட சில நேரங்களில் விட்டுக்கொடுக்கும் நீங்கள் மற்றவர்களின்மீது அதிக பாசம் வைப்பீர்கள். செவ்வாய் கேந்திர பலம் பெற்று அமர்ந்திருப்பதால் போராட்டங்களை சளைக்காமல் சமாளிப்பீர்கள். சகோதர வகையில் உதவிகள் உண்டு. ஒரு சொத்தை விற்று சில பிரச்னைகளிலிருந்து வெளி வருவீர்கள். என்றாலும் புதன் 6-ல் மறைந்திருப்பதால் உறவினர், தோழிகளுடன் பகைமை வந்துப் போகும். சூரியன் 7-ல் அமர்ந்திருப்பதாலும், 20-ந் தேதி முதல் சுக்ரன் 6-ல் மறைவதாலும் சளித் தொந்தரவு, சையனஸ் இருப்பதைப் போல் தலை வலி, மின்னணு, மின்சார சாதனப் பழுது வந்துச் செல்லும். பிள்ளைகள் எதிர்த்து கேள்வி கேட்டால் கோபப்படாதீர்கள். அவர்களின் உரிமையில் தலையிடாதீர்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். அரசியல்வாதிகளே! தலைமைப் பற்றிய ரகசியங்களை யாரிடமும் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். கன்னிப் பெண்களே! மனசை அலைபாயவிடாமல் ஒருநிலை படுத்துங்கள். வியாபாரம் சுமார்தான், போட்டிகளால் விழி பிதுங்குவீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். நிதானமும், பொறுப்புணர்வும் தேவைப்படும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்:18,20,22 அதிஷ்ட எண்கள்:1,9 அதிஷ்ட நிறங்கள்:ரோஸ், சில்வர்கிரே அதிஷ்ட திசை:கிழக்கு

 • அடிப்படை உரிமைகளை எப்போதும் விட்டுக்கொடுக்காத நீங்கள் அடுத்தவர்களின் சுதந்திரத்தில் அநாவசியமாக தலையிடமாட்டீர்கள். ராசிநாதன் சூரியன் வலுவாக 6-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் எதிர்ப்புகள் அடங்கும். தன் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். வருமானம் உயரும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். மகளுக்கு வேலைக் கிடைக்கும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். புதிதாக இன்டெக்ஷன் ஸ்டவ், குக்கர், மிக்சி வாங்குவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சர்ப்ப கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இல்லாததால் பேச்சால் பிரச்னை, கண் வலி, பல் ஈறில் இரத்தம் கசிதல் வந்துப் போகும். அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால் தாயாருடன் மனத்தாங்கல், சிறுசிறு விபத்துகள் வந்துச் செல்லும். அரசியல்வாதிகளே! சகாக்கள் உங்கள்மீது அதிருப்தியடைவார்கள். கன்னிப் பெண்களே! உயர்கல்வி நல்ல விதத்தில் அமையும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது. என்பதை அறிந்து புது முடிவு எடுப்பீர்கள். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களுடன் இடைவெளி விட்டுப் பழகுவது நல்லது. எதிர்ப்புகளை கடந்து சாதிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்:18,19,21 அதிஷ்ட எண்கள்:4,6 அதிஷ்ட நிறங்கள்:சிவப்பு, வெள்ளை அதிஷ்ட திசை:மேற்கு

 • சமயோஜித புத்தியால் எதையும் செய்து முடிக்கும் நீங்கள், எப்பொழுதும் பரபரப்பாக இருப்பீர்கள். 3-ல் சனியும், 6-ல் கேதுவும் வலுவாக அமர்ந்திருப்பதால் திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். தொழிலதிபர்கள் அறிமுகமாவார்கள். தடைப்பட்டிருந்த வீடு கட்டும் வேலையை மீண்டும் தொடர்வீர்கள். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். வாகனப் பழுது நீங்கும். உறவினர், தோழிகள் வீட்டு விசேஷங்களை எடுத்து நடத்துவீர்கள். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் நன்மை உண்டு. அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். 5-ல் சூரியன் அமர்ந்திருப்பதால் மனஉளைச்சல், கர்பப்பை வலி, தலைச்சுற்றல், மாதவிடாய்க் கோளாறு வந்துச் செல்லும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசித்து முடிவெடுங்கள். ஜென்ம குரு தொடர்வதால் காய்ச்சல், கை, கால் மரத்துப் போகுதல், இரத்த அழுத்தம், எதிர்காலம் பற்றிய பயமெல்லாம் வந்துச் செல்லும். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். அரசியல்வாதிகளே! கட்சி தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். கன்னிப் பெண்களே! காதல் கைக்கூடும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ற பொருட்களை கொள்முதல் செய்து லாபத்தை பெருக்குவீர்கள். பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். அனுபவ அறிவால் முன்னேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்:20,22,23 அதிஷ்ட எண்கள்:3,7 அதிஷ்ட நிறங்கள்:மயில் நீலம், பழுப்பு அதிஷ்ட திசை:வடக்கு

 • நம்பிவந்தவர்களுக்கு நல்லதை செய்யும் நீங்கள், சமூகத்தின் மீது அக்கறையுள்ளவர்கள். புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் மற்றவர்களின் ரசனைக் கேற்ப உங்களுடைய அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பங்குச் சந்தை மூலமாக பணம் வரும். பூர்வீக சொத்தை புதுபிப்பீர்கள். பிள்ளைகளின் இசை, ஒவிய, விளையாட்டுத் திறனை வளர்க்க பயிற்சி வகுப்பில் சேர்ப்பீர்கள். புதிதாக செல்போன், கேமரா வாங்குவீர்கள். சொந்த-பந்தங்களின் அன்புத் தொல்லைகள் குறையும். அரசால் அனுகூலம் உண்டு. ராசிக்குள் செவ்வாயும், 2-ல் சனியும் தொடர்வதால் அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். பார்வைக் கோளாறு, எதிலும் ஒரு பிடிப்பற்ற போக்கு, செரிமானக் கோளாறு வந்துச் செல்லும். பேச்சில் கடுமை காட்டாதீர்கள். அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லி பின்னர் நெளிய வேண்டாம். அரசியல்வாதிகளே! மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். கன்னிப் பெண்களே! தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். சக ஊழியர்கள் உதவுவார்கள். கடின உழைப்பால் ஒருபடி உயரும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்:17,22,23 அதிஷ்ட எண்கள்:5,8 அதிஷ்ட நிறங்கள்:க்ரீம் வெள்ளை, பிங்க் அதிஷ்ட திசை:தென்கிழக்கு

 • மனதில் பட்டதை பளிச்சென பேசும் உங்களுக்கு, பகுத்தறிவும், பட்டறிவும் அதிகமுண்டு. சூரியன் 3-ம் வீட்டில் நுழைந்திருப்பதால் தடுமாற்றம் நீங்கி தன்னம்பிக்கை உண்டாகும். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளின் கல்யாண விஷயம் சாதகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். உறவினர் வருகையால் வீடு களைக்கட்டும். வாகனம் வாங்க லோன் கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். உங்கள் ரசனைக் கேற்ப சொத்து வாங்குவீர்கள். வெளிநாட்டிலிருக்கும் தோழியால் திருப்பம் உண்டாகும். 12-ல் செவ்வாயும், ராசிக்குள் சனியும் தொடர்வதால் திடீர் பயணங்கள், அலைச்சல், செலவுகள், தூக்கமின்மை வந்துச் செல்லும். அவ்வப்போது நெஞ்சு எரிச்சல், தோலில் நமைச்சல், முடி உதிர்தல் வரக்கூடும். அரசியல்வாதிகளே! வீண் பேச்சை தவிர்த்து தொகுதி நலனில் அக்கறை காட்டுங்கள். கன்னிப் பெண்களே! உங்களுக்கு இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். காதலில் வெற்றி உண்டு. வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். கடையை மாற்ற வேண்டிய சூழல் வரும். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள் என்றாலும் சின்ன சின்ன நெருக்கடிகளையும் சமாளிக்க வேண்டி வரும். புதிய முயற்சிகள் கைக்கூடும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்:18,20,21 அதிஷ்ட எண்கள்:6,8 அதிஷ்ட நிறங்கள்:சில்வர்கிரே, மஞ்சள் அதிஷ்ட திசை:தெற்கு

 • எங்கும் எதிலும் புதுமையும், புரட்சியும் செய்யும் நீங்கள், சுற்றியிருப்பவர்களை அனுசரித்துப் போகும் குணமுடையவர்கள். 3-ம் வீட்டில் கேது வலுவாக அமர்ந்திருப்பதால் உங்கள் நீண்ட நாள் கனவுகள் நனவாகும். பிரபலங்கள் உதவுவார்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வீட்டை விரிவுப்படுத்துவது குறித்து யோசிப்பீர்கள். பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள். ஆடை, அணிகலன் சேரும். உறவினர், தோழிகளுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். பூர்வீக சொத்து கைக்கு வரும். அண்டை மாநிலத்தவர்கள், அயல்நாட்டிலிருப்பவர்களால் உதவிகள் உண்டு. ராசிநாதன் குரு 10-ல் அமர்திருப்பதால் மறைமுக விமர்சனம், வீண் பழி, பகை, தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். சூரியன் 2-ல் அமர்ந்திருப்பதால் கோபம் குறையும் என்றாலும் வீண் வாக்குவாதம், பணப்பற்றாக்குறை வந்துச் செல்லும். அரசியல்வாதிகளே! அனைத்துக் கட்சியினரையும் அனுசரித்துப் போகும் மனப்பக்குவம் வரும். கன்னிப் பெண்களே! உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் புது யுக்திகளால் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். சமயோஜித புத்தியால் வெற்றி பெறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்:18,20,22 அதிஷ்ட எண்கள்:1,5 அதிஷ்ட நிறங்கள்:அடர்நீலம், ரோஸ் அதிஷ்ட திசை:வடகிழக்கு

 • தோல்வி கண்டு துவளாமல், விசையுறு பந்தை போல் மீண்டு எழும் நீங்கள், கடின உழைப்பாளிகள். குரு 9-ல் நிற்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவிர்கள். வீட்டை கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். பூர்வீக சொத்தால் வருமானம் வரும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைப் போல நல்ல குடும்பத்திலிருந்து பெண் அமையும். வீட்டிற்கு தேவையான அடிப்படை சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்களால் அனுகூலம் உண்டு. குலதெய்வப் பிரார்த்தனையை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். சூரியன் ராசிக்குள் அமர்ந்திருப்பதாலும், சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததாலும் முன்கோபம், காரியத் தாமதம், அடி வயிற்றில் வலி, மாதவிடாய்க் கோளாறு, சிறுசிறு விபத்துகள், நெருப்புக் காயங்கள் வந்துச் செல்லும். அரசு காரியங்கள் தள்ளிப் போய் முடியும். வழக்கில் அலட்சியம் வேண்டாம். அரசியல்வாதிகளே! வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். கன்னிப் பெண்களே! பெற்றோரின் ஆலோசனைகள் உதவிகரமாக இருக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களை விட அதிகாரிகள் மத்தியில் செல்வாக்குக் கூடும். திடீர் திருப்பங்கள் உண்டாகும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்:20,21,22 அதிஷ்ட எண்கள்:4,6 அதிஷ்ட நிறங்கள்:ஆலிவ்பச்சை,மெரூண் அதிஷ்ட திசை:தென்மேற்கு

 • கள்ளங்கபடமில்லாத வெள்ளையுள்ளமும், மற்றவர்களது தேவையறிந்தும் உதவுபவர்களே! ராசிநாதன் சனிபகவான் 10-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். தைரியம் கூடும். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். பூர்வீக சொத்தை விற்று புது வீடு, மனை வாங்குவீர்கள். வருமானத்தைப் பெருக்க சில முயற்சிகள் மேற்கொள்வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். வேற்றுமதத்தவரின் நட்பு கிடைக்கும். ராகு, கேது மற்றும் குரு ஆகிய கிரகங்களின் போக்கு சரியில்லாததால் தூக்கமின்மை, வீண் அலைச்சல், வரவுக்கு மிஞ்சிய செலவுகள், மனைவிக்கு ஆரோக்ய குறைவு, எதிர்மறை எண்ணங்கள், அசதி, சோர்வு வந்துச் செல்லும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வழக்கால் நிம்மதி இழப்பீர்கள். சமையலறையில் நெருப்பு, மின்சாரத்தைக் கவனமாக கையாளுங்கள். அரசியல்வாதிகளே! கட்சி மேல்மட்டத்தைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் தள்ளி இருங்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரம் சுமார்தான். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் கால நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும். விட்டுக் கொடுத்து விட்டதைப் பிடிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்:20,22,23 அதிஷ்ட எண்கள்:4,7 அதிஷ்ட நிறங்கள்:பிஸ்தாபச்சை, கிரே அதிஷ்ட திசை:வடகிழக்கு

 • கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி சாதிப்பதில் வல்லவர்களே! முக்கிய கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் தொட்டது துலங்கும். புது பதவிகள் தேடி வரும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். கட்டிட வேலைகளை தொடங்குவீர்கள். வழக்கு சாதகமாகும். புதுத் தொழில் தொடங்குவார். பிள்ளைகளின் நினைவாற்றல் அதிகரிக்கும். அரசால் ஆதாயம் உண்டு. தூரத்து சொந்தங்கள் தேடி வரும். சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள். பழைய கடன் பிரச்னைகள் தீரும். ஷேர் மூலமாக லாபம் வரும். 8-ல் செவ்வாய் நிற்பதால் வீண் விரையம், ஏமாற்றம், பணத்தட்டுப்பாடு, சகோதர வகையில் மனவருத்தம், சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்துச் செல்லும். அரசியல்வாதிகளே! கட்சிக்குள் நடக்கும் கோஷ்டி பூசலில் தலையிடாதீர்கள். கன்னிப் பெண்களே! உங்கள் பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் வெளிநாட்டு நிறுவனங்களின் தொடர்புகள் கிடைக்கும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சர்வ சாதாரணமாக செய்து முடித்து அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். முன்னேற்றப் பாதையில் பயணிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்:17,18,22 அதிஷ்ட எண்கள்:6,8 அதிஷ்ட நிறங்கள்:க்ரீம்வெள்ளை, மஞ்சள் அதிஷ்ட திசை:மேற்கு

http://www.kathiravan.com/?page_id=1302