
கதிரவனுக்காகக் கணித்து எழுதியவர் ஜோதிடமணி பிரம்மஸ்ரீ ரகுநாத ஐயர் தமிழ்நாடு, இந்தியா
-
அனுபவ பாடங்கள் மூலம் பல விஷயங்களை தெரிந்து கொள்வீர்கள். எதிலும் புத்துணர்வுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் சலசலப்புகள் இருந்து வரும். பல வழிகளில் இருந்து பண வரவு இருந்தாலும் செலவுகள் வரிசையில் காத்து நிற்கும். அடுத்தவர்களிடம் நகைச்சுவையாக பேசினாலும் குடும்பத்தினரிடம் கடுமையான வார்த்தைகளை பிரயோகிக்க நேரிடும். உடன்பிறந்தோருக்கு உதவி செய்வீர்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் மிகுந்த பயன் தரும். திடீர் பிரயாண வாய்ப்பு உண்டு. வாகன ஆதாயம் உண்டு. நெடுநாளைக்குப் பிறகு தாயார் வழி உறவினர் ஒருவரை சந்திப்பீர்கள். பிள்ளைகளின் செயல்கள் பெருமிதம் தரும். வாழ்க்கைத்துணையின் பேரில் சேமிப்பில் ஈடுபடும் வாய்ப்புகள் தோன்றும். கலைத்துறையினருக்கு கூடுதல் அலைச்சல் இருக்கும். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வது நல்லது. கூட்டுத்தொழில் லாபம் தரும். இரவில் கனவுத்தொல்லையால் நிம்மதியான உறக்கம் கெடும். அனுபவப் பாடங்கள் மூலம் நற்பலன்களை காணும் வாரம் இது.
-
நினைத்த காரியங்களில் தடைகளை தாண்டி வெற்றி பெறுவீர்கள். ஒவ்வொரு விவகாரத்திலும் ஏதேனும் ஒரு வகையில் சிக்கலை சந்திக்க நேரிடும். ஆயினும் நிதானத்துடன் செயல்பட்டு சிக்கலில் இருந்து விடுபட முயற்சிப்பீர்கள். உங்களது திட்டங்கள் அடுத்தவர்களுக்கு உதவிகரமாய் அமையும். உங்கள் ஆலோசனைகள் மற்றவர்களுக்கு வெற்றி தேடித்தரும். ஆயினும் தனக்கென்று வரும்போது சரியாகத் திட்டமிடுவதில் சற்று சிரமம் இருக்கும். குடும்பத்தில் இருந்து வரும் சலசலப்புகள் தொடரும். சமயோஜிதமான பேச்சால் மதிப்பு உயரும். பொருளாதார நிலையில் சுணக்கம் இருக்கும். தகவல் தொடர்பு சாதனங்கள் எதிர்பார்த்த நன்மை தரும். உடன்பிறந்தோருக்கு உதவி செய்ய நேரிடும். கலைத்துறையினர் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணையின் நெடுநாளைய விருப்பத்தினை நிறைவேற்றி வைப்பீர்கள். தொழிலில் உங்களது திட்டங்கள் வெற்றி காணும். மாணவர்கள் ஆசிரியர்களின் கண்டிப்பிற்கு ஆளாக நேரிடலாம். நற்பலன்களை காணும் வாரம் இது.
-
மிகுந்த தைரியத்துடன் புதிய முயற்சிகளில் இறங்குவீர்கள். திட்டமிடும் காரியங்கள் எதிர்கால நலன் கருதியே என்றாலும் பலமுறை யோசித்து இறங்குவது நல்லது. உங்கள் செயல்களால் மதிப்பும், மரியாதையும் உயரும். திறமையான பேச்சுகள் உங்கள் செயலுக்கு உறுதுணையாய் அமையும். குடும்பத்தில் அமைதி நிலவும். தொலைத்தொடர்பு சாதனங்கள் உங்களுக்கு மிகுந்த உபயோகமாக இருக்கும். புதிய வாகனங்கள் வாங்க முயற்சிப்போருக்கு சாதகமான நேரம் அமையும். குடியிருக்கும் வீட்டினை அலங்கரிப்பதில் தனி ஆர்வம் உண்டாகும். பிள்ளைகளால் கூடுதல் செலவுகளை சந்திக்க நேரிடும். மாணவர்களுக்கு குழப்பங்கள் தொடர்ந்து இருக்கும். வாழ்க்கைத்துணையோடு கருத்து வேறுபாடு தோன்றக்கூடும். கலைத்துறையினர் நெடுநாளாக இழுபறியில் இருந்த முக்கிய காரியம் ஒன்றை நிறைவேற்றி கொள்வார்கள். தொழிலில் சிறப்பான தனலாபம் காண்பீர்கள். ஆசைகளால் நிம்மதியான உறக்கம் கெடும். தன் நிலை அறிந்து செயல்பட்டால் நிச்சயம் வெற்றி காணும் நேரமாக இருக்கும்.
-
மன உறுதியால் நினைத்த காரியங்களை தடைகளை தாண்டி ஏதேனும் ஒரு வகையில் சாதித்து வெற்றி காண்பீர்கள். உங்கள் வார்த்தைகள் மிகுந்த செல்வாக்கு பெறும். குடும்பத்தில் அமைதி நிலவும். பொருளாதார நிலை சீராக உயரும். உடன்பிறந்தவர்கள் உதவி செய்வார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் நன்மை உண்டாக்கும். புதிதாக வாகனங்கள் வாங்க முயற்சிப்போருக்கு நேரம் சாதகமாக இருக்கும். ஒரு சிலருக்கு மனை, நிலம் போன்ற அசையாச் சொத்துக்கள் சேரும். மாணவர்கள் கூடுதல் பயிற்சியில் கவனம் செலுத்துவது நல்லது. நெடுநாளாக விலகி இருந்த சொந்தம் ஒன்று உங்கள் உறவு நாடி வரக்கூடும். கலைத்துறையினருக்கு கவுரவம் உயரும். அவர்களது வாழ்வில் சுபநிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உடலில் நரம்பியல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தோன்றக்கூடும். வாழ்க்கைத்துணை உங்களின் விருப்பத்தை நிறைவேற்றுவார். தொழிலில் உங்கள் செயல்திட்டங்கள் வெற்றி பெறும். சிறப்பான பலனை அனுபவித்து உணரும் நேரம் இது
-
எதிலும் தடாலடியாக செயல்படுவீர்கள். படபடப்பை தவிர்க்கவும். எந்த ஒரு விஷயத்தையும் நிதானத்துடன் அணுகுவது நல்லது. தனித்து செயல்படுவதைவிட கூட்டாகச் செயல்படும் விஷயங்களில் வெற்றி காண்பீர்கள். உங்கள் பேச்சு மற்றவர்களால் தவறாகப் பொருள் காணப்பட்டு அநாவசிய பிரச்னைகள் தோன்றும். குடும்பத்தில் அமைதி நிலவும். பொருளாதார நிலை சீராக இருக்கும். கண்டிப்பாக கொடுக்கல் வாங்கலை தவிர்க்கவும். உடன்பிறந்தோரால் ஆதாயம் உண்டு. விலகியிருந்த உறவு ஒன்று உங்கள் உதவி நாடி வரக்கூடும். பிள்ளைகளின் செயல்கள் வருத்தம் தரும். சர்க்கரை வியாதிக்காரர்கள் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாழ்க்கைத்துணையின் செயல்களுக்கு துணை நிற்பீர்கள். மாணவர்களுக்கு போட்டியான சூழல் இருக்கும். கலைத்துறையினர் பொதுக்காரியங்களில் முன்நின்று செயல்பட நேரும். கவுரவ செலவுகள் அதிகரிக்கும். தொழில்முறையில் சற்று சிரமங்களை சந்திக்க நேரிடும். வியாபாரிகள் அகலக்கால் வைக்காது நிதானத்துடன் செயல்படுவது நல்லது. சரிசம பலனைக் காணும் நேரம் இது.
-
உங்கள் ஆலோசனைகள், செயல்திட்டங்கள் அடுத்தவர்களுக்கு ஆதாயம் தரும். விட்டுக்கொடுத்துச் செல்லும் மனப்பான்மை அதிகரிக்கும். எதிலும் அளவான லாபத்தினை மட்டும் அடைய முயற்சிப்பீர்கள். வேலை நேரத்தில் கடுமையான உழைப்பினை வெளிப்படுத்தும் நீங்கள் வேலை இல்லாத நேரத்தில் சற்று சோம்பல்தன்மைக்கு இடம் கொடுப்பீர்கள். ஓய்வான நேரத்தினைப் பயன்படுத்திக்கொண்டு எதிர்காலத்திற்குத் தேவையானவற்றைத் திட்டமிட்டு வைப்பது நல்லது. உடன்பிறந்தோரால் ஆதாயம் உண்டாகும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கும். பிள்ளைகளின் செயல்கள் பெருமைப்படத்தக்க வகையில் அமையும். ரத்தக் கொதிப்பு மற்றும் இதய நோய் உள்ளவர்கள் உடல்நிலையில் தீவிர கவனம் செலுத்துவது நல்லது. மருத்துவச் செலவுகள் நேர்வதற்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணையுடன் விவாதங்களில் ஈடுபட்டு வந்தாலும் விட்டுக் கொடுத்துச் செல்வீர்கள். கலைத்துறையினர் தொழிலில் வெற்றி காண்பர். நற்பலன்களைக் காணும் வாரம் இது.
-
வாழ்க்கை தரம் முன்னேறும். இழுபறியில் இருந்த செயல்கள் முடியும். போராட்ட குணம் மனதை அதிகம் ஆக்கிரமிக்கும். பொதுக் காரியங்களில் முன்நின்று செயல்படுவீர்கள். மதிப்பும், மரியாதையும் உயரும். வரவு பல்வேறு வழிகளில் வந்தாலும் அதற்கும் மிஞ்சிய செலவுகள் காத்து நிற்கும். சேமிப்பில் ஈடுபட முடியாது போகும். அநாவசியமான பொருள் விரயத்தை தடுக்க வாழ்க்கைத்துணையின் பெயரில் அசையாச் சொத்து ஒன்றினை வாங்குவது நல்லது. கடன் பிரச்னைகள் முடிவிற்கு வரும். உடன்பிறந்தோர் உதவிகரமாக செயல்படுவார்கள். மாணவர்கள் வகுப்பில் முக்கியத்துவம் பெறுவர். வாகனங்களால் செலவுகள் அதிகரிக்கும். பிரயாணத்தின் போது பொருளிழப்பு உண்டாகும் வாய்ப்பு உள்ளதால் கவனம் அவசியம். பிள்ளைகளின் விருப்பத்தினை நிறைவேற்ற கூடுதல் செலவுகளை சந்திக்க நேரிடும். வாழ்க்கைத்துணையோடு விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழிலில் வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினர் தனித்திறமையை நிரூபிக்கும் வாய்ப்பு உருவாகும். நற்பலன்களைக் காணத்துவங்கும் நேரமாக அமையும்.
-
நினைத்த காரியங்களை அனுபவ அறிவை பயன்படுத்தி செய்து முடிப்பீர்கள். பேச்சில் தெளிவும், நிதானமும் வெளிப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் காண்பீர்கள். கடன்பிரச்னைகள் படிப்படியாக முடிவிற்கு வர துவங்கும். மனதில் தைரியம் கூடும். எதிர்பாராத பிரயாண வாய்ப்பு உண்டு. உறவினர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றக்கூடும். பிள்ளைகளின் செயல்கள் பெருமிதம் கொள்ளத்தக்க வகையில் அமையும். கலைத்துறையினர் சிந்தனையை செயல்படுத்தி பார்க்க முனைவார்கள். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் தனி ஆர்வம் உண்டாகும். இதய நோய் உள்ளவர்களுக்கு உடல்நிலையில் தீவிர கவனம் அவசியம். வாழ்க்கைத்துணையை நம்பி ஒப்படைத்த காரியங்களில் உங்களின் தலையீடு தேவைப்படும். அந்நிய தேசத்திலிருந்து எதிர்பார்த்துக் காத்திருந்த தகவல் ஒன்று வந்து சேரும். தொழிலில் லாபம் காண்பீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு வாய்ப்பு உண்டு. மாணவர்களின் மனம் சஞ்சலத்திற்கு உள்ளாகும். நற்பலன்களைக் காணும் நேரம் இது.
-
தடைகளை உடைத்து எதிலும் வெற்றி காண்பீர்கள். நினைக்கும் செயல்களில் வெற்றி கிடைக்கும். மனதில் தோன்றுவதை உடனுக்குடன் செயல்படுத்துவீர்கள். சில விஷயங்களில் சிரமம் இருந்தாலும் இறுதியில் வெற்றி பெறுவீர்கள். வரவில் தடை இருக்கும். குடும்பத்தில் சலசலப்புகள் தோன்றக்கூடும். பேசும் வார்த்தைகளில் கறார்தன்மை வெளிப்படும். முன்னோர்களின் சாயலை பிள்ளைகளிடம் கண்டு பெருமிதம் கொள்வீர்கள். மாணவர்கள் கணிதப்பாடத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகள் மிகுந்த பயனைத் தரும். கலைத்துறையினர் அற்புதமான வெற்றி காண்பார்கள். குடும்பப் பெரியவர்களின் மூலமாக பண வரவு வருவதற்கான வாய்ப்பு உண்டு. தர்ம காரியங்களுக்காக கூடுதலாக செலவழிக்க நேரிடும். தொழில்முறையில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வியாபாரிகள் சிறப்பான தன லாபம் காண்பார்கள். பெறுகின்ற லாபத்தினை மீண்டும் தொழிலிலேயே முதலீடு செய்வது நல்லது. நற்பலன்களைக் காணுகின்ற வாரம் இது. - See more at:
-
நற்பலன்களை எதிர்கொள்ள உள்ளீர்கள். நினைத்த காரியங்களில் வெற்றி கிட்டும். மகிழ்ச்சி கூடும். சிரமமான சூழலைக் கண்டு வந்த உங்களுக்கு தற்போதைய சூழல், வெற்றிகள் ஆறுதல் தரும். தன்னம்பிக்கை உயரும். எதிலும் பொறுமையுடன் இருந்தால் நினைத்ததை சாதிக்கலாம் என்பதை உணர்ந்த நீங்கள் அதற்கேற்ப செயல்படுவீர்கள். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். பேச்சில் அனுபவம் எதிரொலிக்கும். உடன்பிறந்தோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வண்டி, வாகனங்களால் செலவுகள் அதிகரிக்கக்கூடும். அவ்வப்போது உடல் அசதிக்கு ஆளாவீர்கள். மாணவர்கள் உடலும், மனமும் புத்துணர்வுடன் இருக்க யோகா போன்ற பயிற்சிகளில் ஈடுபடுவது நல்லது. வாழ்க்கைத்துணையின் பெயரில் புதிய சேமிப்பில் ஈடுபடும் வாய்ப்பு உருவாகும். கலைத்துறையினருக்கு தொழில்முறையில் மதிப்பும் மரியாதையும் உயரும். உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வோடு இடமாற்றமும் உண்டாகலாம். நற்பலன்களை காணும் வாரம் இது.
-
மனதில் நற்சிந்தனைகள் அதிகரிக்கும். எதிரிகளையும் நண்பர்களாக்கிக்கொள்ள முயற்சிப்பீர்கள். ஆயினும் வீண் வம்புகள் வந்து சிரமத்திற்கு உள்ளாக்கும். பொருளாதார நிலை சீராக இருக்கும். கடன்பிரச்னைகள் ஓரளவிற்கு குறையும். உடன்பிறந்தோர் உங்கள் உதவி நாடி வருவார்கள். மாணவர்களின் கல்வித்தரம் உயரும். விளையாட்டுத்துறையைச் சேர்ந்தவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். நீங்கள் நன்கு அறிந்த பெண்களால் பிரச்னைகளை சந்திக்க நேரலாம். உடல்நிலையில் தீவிர கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. வாழ்க்கைத்துணையுடன் சிறு கருத்து வேறுபாடு தோன்றக்கூடும். கூட்டுத்தொழில் சிறப்பான தனலாபம் தரும். கலைத்துறையினருக்கு தொழில் முறையில் வெளியூர் பிரயாணம் செல்ல வேண்டியிருக்கும். வியாபாரிகள் அகலக்கால் வைக்காது நிதானித்து செயல்படுவது நல்லது. இரவில் கனவுத்தொல்லைகளால் உறக்கம் கெடலாம். இந்த வாரம் குரு பகவானின் அனுகூலமான பார்வை உங்களைக் காத்து நற்பலன்களை அளிக்கும்.
-
நினைத்த காரியங்கள் முடிவடையும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். காரியத்தில் கண்ணாக இருப்பீர்கள். இறங்கிய பணியை செய்து முடிக்க விட்டு கொடுத்துச் செல்வீர்கள். எதிலும் கூடுதல் அலைச்சல் இருந்தாலும் வெற்றி காண்பீர்கள். எல்லா விஷயங்களிலும் திட்டமிட்டு செயல்பட்டு தோல்வி என்ற வார்த்தைக்கு இடமில்லாமல் செய்வீர்கள். உடன்பிறந்தோர் உங்கள் உதவியை நாடி வரக்கூடும். புதிய வண்டி, வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். புதிதாக மனை, நிலம் வாங்க நினைப்போருக்கு நேரம் காலம் சாதகமாக அமையும். பிள்ளைகளின் செயல்பாடுகள் உங்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் இருந்து வரும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகள் சரியான நேரத்தில் உதவிகரமாய் அமையும். மாணவர்கள் இழந்த நட்பினை மீண்டும் புதுப்பித்துக் கொள்வார்கள். தொழில்முறையில் அலைச்சல் அதிகரித்தாலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பதவி உயர்விற்கான வாய்ப்பு உண்டு. கலைத்துறையினர் புதிய வாய்ப்புகள் பெறுவர். நற்பலன்களை காணும் வாரமிது.