இராசிபலன்கள் 18-10-2016 முதல் 25-10-2016 வரை

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

வார பலன், ஜாதகம், Weekly Astrology Tamil, Weekly Astrology In Tamil, Tamil Weekly Astrology, Tamil Astrology For This Week, Tamil Astrology Weekly Predictions, Astrology In Tamil, Free Tamil Astrology, Tamil Astrology Horoscope, Tamil Astrology Rashi, Tamil Astrology Rashi Chart

கதிரவனுக்காகக் கணித்து எழுதியவர் ஜோதிடமணி பிரம்மஸ்ரீ ரகுநாத ஐயர் தமிழ்நாடு, இந்தியா

 

  • இந்த வாரம் சுபச் செய்திகளால் மனம் மகிழ்ச்சி ஏற்படும். தனவரவு அதிகமாவதால் தான தருமங்களில் ஈடுபாடு ஏற்படும். மாணவர்கள் தங்கள் தெளிவான அறிவினால் பாடங்களைச் சுலபமாக கிரகித்துக் கொண்டு அதிக மதிப்பெண்கள் பெறுவர். அதனால் அவர்களின் பெற்றோர்களுக்கு மனமகிழ்ச்சி ஏற்படும். அரசுப் பணி புரிபவர்களுக்கு அனுகூலமாகவும், அற்புதமாகவும் இருக்கும். எல்லாம் சாதகமாகவே அமையும். அவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு இருப்பதால், எதிரிகளின் கொட்டம் அடங்கும். அரசுப் பணிபுரியும் பெண்கள் தங்களுக்கு விருப்பமான இடத்திற்கு மாற்றம் பெற முயற்சிப்பர். அந்த முயற்சிகளில் அவர்கள் வெற்றியும் பெறுவார்கள்.

  • இந்த வாரம் புத்திர பாக்கியம் ஏற்படும். கௌரவப் பட்டங்கள், பதவிகள் ஆகியவை கிடைக்கும். அரசாங்கத் துறைகளின் மூலமாக எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும். சில விஷயங்களில், சிலருக்குத் தடை, தாமதங்கள் ஏற்படலாம். மேடைப் பேச்சாளர்கள் தங்கள் பேச்சின் மூலமாக வருமானம் ஈட்டுவர். உடன் பிறப்புக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். அரசுதத் துறைகளில் பெண் ஊழியர்களின் கை ஓங்கும். வியாபாரிகள் எதிர்பார்த்த வங்கிக் கடன்கள் உடனடியாகக் கிடைக்கும். சில வீட்டு விஷயங்களில் குடும்பத்தினரிடையே கருத்து மோதல்கள் ஏற்படலாம். அந்த நேரங்களில் ஒற்றுமையே பலம் தரும். ஆயினும், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள்.

  • இந்த வாரம் மனதுக்குப் பிரியமான மங்கையுடன் நட்பு ஏற்படும் இனிய பயணங்களால் இன்புறுவீர்கள். குடும்பத்தில் மனமகிழ்ச்சி நிலவும். பகைகளை வெல்லும் திறன் ஏற்படும். வாழ்க்கையில் சுகானுபவங்களையும், கௌரவத்தையும் அடைவீர்கள். தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். புத்தக வெளியீட்டாளர்களுக்கு தங்கள் தொழிலில் ஏற்றமான காலம். தீயநண்பர்களின் சவகாசத்தால் சிலரின் மனம் தீயவழிமுறைகளை நாடும். எனவே, கவனம் தேவை. சிலருக்குத் தேவையற்ற காரணங்களால் அரசுக்கு அபராதம் செலுத்த நேரலாம். சிலருக்கு உறவுகளுக்குள் ஒற்றுமை இன்மையால் மனகுறைகள் ஏற்படலாம்.

  • இந்த வாரம் உங்களுக்குத் தெய்வ சிந்தனைகளால் மனதில் அமைதி நிலவும். ஆடை, ஆபரணங்கள், நல்ல உணவு, எதிர்பாராத தனவரவு ஆகியவை ஏற்படும். கௌரவப் பட்டங்கள், பதவிகள் தேடிவரும். மனம் விரும்பிய பொருட்களை வாங்கக் கூடிய அளவுக்குத் திருப்திகரமான கையிருப்பு இருக்கும். அரசுப் பணியாளர்கள் மேலதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். புதிய நண்பர்களால் நன்மையும் ஏற்படும். மாணவர்களுக்குக் கவனச் சிதறல்கள் காரணமாகப் படிப்பில் ஆர்வம் குறையலாம். உங்களுக்குப் பயணங்களில் எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்படலாம். தந்தைவழி உறவுகளால் உதவி இருக்காது. விருந்தினர் வருகையால் மனம் மகிழ்ச்சி ஏற்படும்.

  • இந்த வாரம் பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்காக வீடே விழாக்கோலம் பூணும். இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புக்கள் ஏற்படும். வியாபாரத்தில் விரிவாக்கத் திட்டங்களால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். எதிர்பார்த்தபடி தனவரவுகள் கைக்கு வந்து சேரும். வந்த பணத்தை தரும காரியங்களுக்குத் தாராளமாகச் செலவு செய்து மகிழ்வீர்கள். பிறந்த நாள் விருந்துகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். நல்லோர் சேர்க்கையால் மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டு. சிலருக்கு உழைப்பு அதிகமாகி அதற்கேற்றார் போல் ஆதாயமும் அதிகரிக்கும்.

  • இந்த வாரம் கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு உயர் ரக வாகனங்கள் கிடைக்கும். பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். எதிர்பாராத தனவரவுகள், வஸ்திர லாபம், சுகபோஜனம் ஆகியவை ஏற்படும். அரசுத்துறை மூலமாக எதிர்பார்த்த ஆதாயங்கள் அனைத்துமே விரைவில் கிடைக்கும் சினத்தை அடக்கினால் சிரமங்கள் குறையும். உடன் பிறந்தவர்களோடு அனுசரித்துச் செல்வது நல்லது. பொறுமையைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் வாக்குவாதங்களைத் தவிர்க்கலாம். சிலருக்கு உழைப்பு அதிகமாகி அதற்கேற்ற ஆதாயம் இராது. தொலைதூரச் செய்திகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும்.

  • இந்த வாரம் பல புண்ணியத் தலங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்புக் கிட்டும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். சிலருக்குப் புதுப்புதுப் பதவிகளும் அதனால் வருவாய்ப் பெருக்கமும் ஏற்படும். ஆசிரியர்களின் ஆலோசனைப்படி ஆழ்ந்து படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறலாம். சிலருக்கு இடமாற்றங்கள், பயணத்தில் துன்பம், கடன் கொடுத்தவர்களின் கெடுபிடி, சகோதரர் விரோதம், அரசு வகைத் தொல்லை, ஆகியவை ஏற்படும். எனவே துன்பம் வரும் போது துவளாமல், தைரியத்துடன் வாழ்க்கையில் முன்னேற முயலுங்கள். எப்போதும் தங்கள் சேவைகள் அனைவராலும் அங்கீகரிக்கப்படும்.

  • இந்த வாரம் உடன்பிறப்புக்களிடம் இருந்து நீங்கள் எதிர்பார்க்கும் பணவுதவிகள் கிடைக்கும். புதிய வீடு, பூமி வாங்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகலாம். நல்ல உயர்ந்த மனிதர்களின், பண்புமிக்கவர்களின் நட்பு ஏற்படும். சிலருக்குப் பயணங்களிலும், அரசுவகையிலும் தொல்லைகள் ஏற்படலாம். வாகனங்களில் செல்லும் போது கவனமாகச் செல்லவும். எல்லா வசதிகளும் இன்பமும் ஏற்படும் என எதிர்பார்க்க முடியாது. ஏதாவது மனக்குறை இருந்து கொண்டே இருக்கும். அரசு வேலைக்கு மனுச் செய்தவர்களுக்கு அனுகூலமான பதில்கள் வரும். வியாபாரிகளுக்கு வியாபாரம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும்.

  • இந்த வாரம் எல்லா நிகழ்வுகளும் மகிழ்ச்சியை வரவழைக்கும். பெரியோர்களின் ஆசி, பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு ஆகியவற்றால் நல்ல மனிதர்களின் தொடர்புகள் ஏற்படும். உறவுகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் மூலமான உதவிகள் தடைப்படாது. எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றி அடைய அதிக உழைப்பு தேவைப்படும். கடின உழைப்பே எப்போதும் உங்கள் பையை பணத்தால் நிரப்பும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். அதிகாரிகளுடன் வீண் சச்சரவுகளை விலக்கினால் பணியில் எதிர்பார்த்த உயர்வுகள் இருக்கும். சம்பாதிக்கும் திறன் மேம்படும். சிலநேரங்களில் சுறுசுறுப்பற்ற நிலையும் மனோபயமும் நிலவும்.

  • இந்த வாரம் தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து மகிழ்ச்சி அளிக்கும். உதவிகரமான புதிய நண்பர்கள் கிடைப்பர். எழுத்துத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தாய் மாமனுக்கும் நன்மை ஏற்படும். சிலருக்குக் கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். இரவுப் பயணங்களில் எச்சரிக்கை தேவை. பல திசைகளில் இருந்தும் பணம் கூடுதலாக வரும். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படாதிருக்க அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீர்கள். உறவுகள் வருகையால் சந்தோஷம் பெருகுவது பொல், செலவுகளும் அதிகரிக்கும். சிறப்பான பொதுஜனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும்

  • இந்த வாரம் தாராளமான பணவரவு இருக்கும். இனிய தகவல்கள் இல்லம் தேடி வரும். சுற்றமும், நட்பும் சூழ சுபகாரியப் பேச்சுகள் இனிதே நடைபெறும். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும். புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். வாகன வசதிகள் மேம்படும். அந்தஸ்து உயரும். சிலருக்கு அதிகாரப் பதவியும், அமைச்சர் போன்ற பதவிகளும் கிடைக்கும். தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து மகிழ்ச்சி அளிக்கும். சமயோஜிதமாகச் செயல்பட்டு எதிரிகளின் திட்டங்களை முறியடிப்பீர்கள். நவீன காலத்துக்கு ஏற்றபடி புதுப்புது சாமான்களை அறிமுகப்படுத்தி வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்கள். அரசுப் பணியாளர்கள் அக்கறையுடன் பணிபுரிந்து, அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள்.

  • இந்த வாரம் மனைவியை மகிழ்விக்க, புதிய ஆடைகள், ஆபரணங்கள் என வாங்கிக் கொடுத்து அசத்துவீர்கள். கலைஞர்களுக்குச் சிறப்பான வாரம். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, கைநிறைய முன் பணம் பெற்று மகிழ்வர். தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு இதுநாள்வரை இருந்து வந்த இழுபறி நிலைகள் பகலவனைக் கண்ட பனி போல் விலகும், சிலருக்கு வருமானவரிப் பிரச்சனைகள் தலைதூக்கலாம் எனவே, கம்பெனிக் கணக்குகளை சீராக எழுதிவைக்கவும். இல்லையெனில் சிக்கல்களைச் சந்திக்கலாம். வந்தபின் ஓடுவதைவிட, வருமுன் காப்பது தானே புத்திசாலித்தனம். வீட்டில் பிடிவாதங்களைத் தளர்த்தினால் பிணக்குகள் தீரும்.

http://www.kathiravan.com/?page_id=1302
Share with your friends










Submit