இராசிபலன்கள் 18-1-2017 முதல் 25-1-2017 வரை

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

வார பலன், ஜாதகம், Weekly Astrology Tamil, Weekly Astrology In Tamil, Tamil Weekly Astrology, Tamil Astrology For This Week, Tamil Astrology Weekly Predictions, Astrology In Tamil, Free Tamil Astrology, Tamil Astrology Horoscope, Tamil Astrology Rashi, Tamil Astrology Rashi Chart

கதிரவனுக்காகக் கணித்து எழுதியவர் ஜோதிடமணி பிரம்மஸ்ரீ ரகுநாத ஐயர் தமிழ்நாடு, இந்தியா

  • எடுத்த காரியங்கள் இழுபறி தரும். வாழ்க்கை தரம் முன்னேற்றம் காணும். கவுரவம் உயரும். சில நேரத்தில் கவுரவத்திற்காக ஆதாயமின்றி செயல்பட வேண்டியிருக்கும். வரவில் தடங்கல்கள் இருக்கும். குடும்பத்தில் தொடர்ந்து சலசலப்பு நிலவி வரும். ஆயினும் குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்காக அதிக நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பீர்கள். தகவல் தொடர்பில் குழப்பங்களால் இழப்புகளுக்கு ஆளாகலாம். மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது. உடல் உஷ்ண உபாதைக்கு ஆளாகும் வாய்ப்பு உள்ளதால் கவனத்தோடு இருப்பது அவசியம். வாழ்க்கைத்துணையோடு கருத்து வேறுபாடு தோன்றும். தொலைதூரப் பிரயாணங்களில் பொருளிழப்பு உண்டாகக் கூடும் என்பதால் எச்சரிக்கை தேவை. தகப்பனார் வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றக்கூடும். சில குடும்பங்களில் சொத்துப் பிரச்னைகள் தலை தூக்கலாம். தொழில் முறையில் அடுத்தவர்கள் செய்த தவறுக்கு பொறுப்பேற்க வேண்டியிருக்கும். கலைத்துறையினர் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. சரிசம பலனைத் தரும் வாரம் இது.

  • நினைத்த விஷயங்களில் எளிதாக வெற்றி கிடைக்கும். செலவுகள் கூடும். நேரத்தைப் புரிந்துகொண்டு சிக்கன நடவடிக்கையில் ஈடுபடுவது எதிர்காலத்திற்கு நன்மை தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பேச்சில் நகைச்சுவை வெளிப்படும். தகவல் தொடர்பு சாதனங்கள் ஆதாயம் தரும். புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சியை சிறிது காலத்திற்கு தள்ளி வைப்பது நல்லது. மாணவர்கள் நினைவுத்திறனில் சிறந்து விளங்குவர். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்ற அதிகம் செலவழிப்பீர்கள். அலட்சிய மனோபாவத்தைத் தவிர்ப்பது நல்லது. சர்க்கரை வியாதிக்காரர்கள் உணவுப் பழக்கத்தில் கடுமையான கட்டுப்பாட்டை கடைபிடிப்பது அவசியம். வாழ்க்கைத்துணையின் செயல்கள் நற்பலன்களை விளைவிக்கும். புதிய நட்புறவினால் கூடுதல் செலவுகளைச் சந்திக்க நேரலாம். பெற்றோர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தொழில் முறையில் உங்கள் ஆலோசனைகள் வெற்றி பெற்று தரும். கலைத்துறையினர் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். தொழில் சிறக்கும். சிறப்பான நற்பலன்களை கொடுக்கும் வாரமாக அமையும்.

  • ஆதாயம் கருதாது செயல்பட்டு வரும் நீங்கள் பணவரவை தேடும் நிலை இருக்கும். மனப்பக்குவம் கூடும். எதிர்கால நலன் கருதி பொறுமையுடன் பணியாற்றி வரும் உங்களுக்கு வெகுவிரைவில் நல்ல நேரம் காத்திருக்கிறது. அவ்வப்போது மன சஞ்சலம் இருக்கும். பொருளாதார நிலையை சமாளிப்பதில் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் இருந்து வரும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற முக்கியத்துவம் அளிப்பீர்கள். இக்கட்டான தருணத்தில் உறவினர்களின் உதவி வெற்றி தேடி தரும். பிள்ளைகளின் வாழ்க்கை தரம் உயரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும். மாணவர்களுக்கு கூட்டுப்பயிற்சி நன்மை தரும். வாழ்க்கைத்துணையின் செயல்பாடுகள் தொழிலில் உதவிகரமாய் அமையும். பூர்வீக சொத்துகளில் பாகப்பிரிவினை பற்றிய பேச்சுக்கள் எழலாம். தொழிலில் வெற்றி காண்பீர்கள். கூட்டுத்தொழிலில் தனலாபம் கிடைக்கும். உத்யோகஸ்தர்கள், கலைத்துறையினர் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். தைரியத்துடன் செயலில் இறங்கும் விஷயங்களில் கூடுதல் தன லாபம் கிடைக்கும். நற்பலன்களைத் தரும் வாரம் இது

  • தர்ம காரியங்களுக்காக அதிகம் அலைய நேரிடும். வெறும் தன ஆதாயத்தினை மட்டும் கருத்தில் கொள்ளாது செய்யும் செயலில் கிடைக்கும் பெயரையும், மரியாதையையும் கருத்தில் கொண்டு செயல்பட்டு வருவீர்கள். சங்கடங்கள் இருக்கும். பொருள் வரவு திருப்தி தரும். தடைபட்டிருந்த வரவுகள் வரத்துவங்கும். பேச்சால் மதிப்பும் மரியாதையும் உயரும். உடன்பிறந்தோருக்கு உதவி செய்யப் போய் தர்மசங்கடத்திற்கு ஆளாகும் வாய்ப்பு உண்டு. தகவல் தொடர்பால் தொழிலில் சங்கடங்களை எதிர்கொள்ள நேரும். முக்கியமான தகவல்களை நேரடியாக கொண்டு சேர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு உைழப்பது நல்லது. வாழ்க்கைத்துணையுடன் செலவழிக்கும் நேரம் குறையும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உயர்கல்வி, ஆடிட்டிங், மாணவர்கள் சிறப்பான நிலையை அடைவர். உத்யோக முறையில் மேலதிகாரிகளின் ஆதரவோடு பதவி உயர்வு காண்பீர்கள். வியாபாரிகளுக்கு கூடுதல் அலைச்சல் இருந்தாலும் தனலாபம் இருக்கும். கலைத்துறையினர் நிதானம் காப்பது நல்லது. நற்பலன்களைத் தரும் வாரம் இது.

  • பிரச்னைகளைப் பொருட்படுத்தாது, எதிலும் சாதக, பாதகங்களை அலசி ஆராய்ந்து செயல்படுவீர்கள். காரியத்தில் வெற்றி காண கூடுதல் அலைச்சல் இருக்கும். எடுத்த காரியம் இழுபறி தரும். வரவில் தடையும் அதிக செலவுகளும் இருக்கும். எதிர்கால நலன் கருதி புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உடன்பிறந்தோரால் கூடுதல் செலவுகளுக்கு ஆளாக நேரிடும். அடுத்தவர்களை நம்பி ஒப்படைத்த காரிய தாமதம் மனவருத்தம் தரும். வாகனங்களால் செலவுகள் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். மாணவர்களுக்கு வகுப்பில் கவுரவம் உயரும். கலைத்துறையினர் எண்ணம் நிறைவேற கூடுதலாக செலவு செய்ய வேண்டியிருக்கும். தொலைதூரப் பிரயாணங்களில் நிம்மதி காண்பீர்கள். உஷ்ண உபாதைகள் முகத்தில் பிரச்னை தரக்கூடும். தொழில்முறை தடைகளை களைய பல்வேறு வழிகளிலும் முயற்சி செய்து வருவீர்கள். எதிர்பார்த்த விஷயங்களை நிறைவேற்றிக்கொள்ள காத்திருப்பு அவசியம். இந்த வாரத்தினை சாமர்த்தியமாக எதிர்கொண்டால் எளிதில் சமாளிக்கலாம்

  • எதிலும் பொறுமை காக்க வேண்டிய நேரம் இது. எந்த ஒரு விஷயத்திலும் அடுத்தவர்களை சார்ந்து இருக்க வேண்டிய சூழல் இருக்கும். பேச்சால் இழப்புகளை தவிர்க்க கவனம் தேவை. வரவு சிறப்பாக இருக்கும். எதிர்பாராத செலவுகளும் உண்டு. சேமிப்பிற்கான முயற்சிகள் தள்ளிப் போகும். உடன்பிறந்தோர் உதவிகரமாய் செயல்படுவார்கள். மாணவர்கள் மாதிரித் தேர்வுகளில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பிள்ளைகளின் செயல்களால் பெருமிதம் கொள்வீர்கள். சிலருக்கு பல், தொண்டை பகுதியில் பிரச்சினைகள் தோன்றும். வாழ்க்கைத்துணை மிகுந்த பக்கபலமாக இருந்து செயல்படுவார். அவரது உடல்நிலையில் கவனம் அவசியம். நண்பர்களால் ஆதாயம் காணும் அதே நேரத்தில் அவர்களுக்கு பிரதி உபகாரம் செய்ய வேண்டி வரும். அநாவசிய செலவுகள் கட்டுப்படும். ஆனால் கவுரவ செலவுகள் அதிகரிக்கும். கலைத்துறையினர் போட்டியான சூழலைக் காண்பர். தொழில் முறையில் உடன்பணிபுரிவோரின் ஒத்துழைப்பைப் பெற மிகுந்த சிரமப்படுவீர்கள். சரிசமபலனைக் காணும் நேரம் இது.

  • எடுத்த விஷயத்தை போராடி முடிக்க வேண்டிய சூழல் இருக்கும். பொருளாதார நிலை சீராக இருக்கும். வரவு தடைப்பட்டு கையில் பணப்புழக்கம் இன்றி இருக்கும் நிலை ஏற்படும். ஆயினும் எச்சூழலிலும் மனம் தளராது செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். வாகன செலவுகள் இருக்கும். மாணவர்கள் மாதிரித் தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண்கள் பெறுவர். பூர்வீக சொத்துகளை விற்று புதிய சொத்துகளை வாங்கும் எண்ணம் உருவெடுக்கும். பிள்ளைகளின் விருப்பத்திற்காக அதிகம் செலவழிப்பீர்கள். வாழ்க்கைத்துணையோடு கருத்து வேறுபாடு வந்து நீங்கும். நண்பர்களை நம்பி இறங்கிய செயல்களில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். உடல்நிலையில் மிகுந்த எச்சரிக்கை அவசியம். கலைத்துறையினரின் கற்பனைகள் செயல்வடிவம் பெறும். பெற்றோருடன் கருத்து வேறுபாடு தோன்றும். தொழில் முறையில் சிறப்பான நிலையை எட்டுவீர்கள். கூட்டுத்தொழில் லாபம் தரும். உத்யோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்ல வேண்டியது அவசியம். சுமாரான பலன்களைத் தந்தாலும் வாரத்தின் இறுதியில் நன்மை காண்பீர்கள்.

  • வாழ்க்கைத்தரம் உயரும். சேமிப்புகள் கரைந்தாலும் மனநிம்மதி காண்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே இருந்து வரும் மனக்கசப்பினைப் போக்க முயல்வீர்கள். பல புதிய மனிதர்களின் தொடர்புகளினால் ஆதாயம் உண்டாகும். மாணவர்களின் முயற்சிகள் வெற்றி தரும். உறவினர்கள் அனுசரணையாய் செயல்படுவார்கள். பிள்ளைகளால் பெருமைகொள்ளத் தக்க சம்பவங்கள் நிகழும். ரத்தக் கொதிப்பு நோய் உள்ளவர்கள் உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. வாழ்க்கைத்துணையின் செயல்பாடுகள் உங்களுக்கு பக்கபலமாய் இருந்து வரும். கலைத்துறையினர் தங்களின் நெடுநாள் விருப்பத்தினை நிறைவேற்றிக் கொள்ள சந்தர்ப்பம் சாதகமாக அமையும். தகப்பனார் வழி உறவினர் இல்ல விசேஷங்களில் முக்கியப் பங்காற்ற வேண்டியிருக்கும். தொழில் முறையில் போராட்டம் இருந்தாலும் வெற்றி காண்பீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளோடு மோதல் போக்கை தவிர்க்க அவசரப்படாமல் அமைதி காப்பது நல்லது. நற்பலன்களைத் தரும் வாரம் இது.

  • தைரியத்துடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். சீரான வரவு தொடரும். பொருளாதார நிலையில் பெருத்த முன்னேற்றம் இருக்காது. குடும்பத்தில் நிம்மதி நிலவும். தகவல் தொடர்பு சாதனங்களால் நன்மை காண்பீர்கள். உறவினர்களின் வருகை குடும்பத்தில் கலகலப்பைத் தோற்றுவிக்கும். உங்களின் தனித்திறமைகளால் நற்பெயர் கிடைக்கும். தேவயைற்ற சிந்தனைகளால் உடல்நிலை பாதிக்கப்படும். பிள்ளைகளால் உங்கள் கவுரவம் உயரும்படியான சம்பவங்கள் நிகழும். வாழ்க்கைத்துணையின் செயல்பாடுகள் உங்களுக்கு பக்கபலமாய் இருந்து வரும். நண்பர்களால் நன்மை காண்பீர்கள். குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்காக அதிக செலவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஆன்மிகப் பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு நிம்மதி தரும். கலைத்துறையினர் வெளியூர் பயணம் செல்வதற்கான வாய்ப்பு உண்டு. மாணவர்களின் செயல்திறன் கூடும். தொழிலில் உழைப்பிற்கேற்ற ஊதியம் தொடரும். வியாபாரிகள் தனலாபம் காண்பார்கள். நற்பலன்களை தரும் வாரம் இது.

  • மிகுந்த தைரியத்துடன் செயல்படுவீர்கள். உறுதியோடு செயல்பட்டு எடுத்த செயல்களில் வெற்றி காண்பீர்கள். பொருளாதார நிலை சீராக இருக்கும். கடன் சுமைகள் குறைந்து புதிய சேமிப்பில் ஈடுபடுவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். தகவல் தொடர்பு சாதனங்கள் மிகுந்த பயன் தரும். பிரயாணங்களின்போது பொருளிழப்பு உண்டாகும் வாய்ப்பு உண்டு. மாணவர்கள் எழுத்துப்பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. கலைத்துறையினர் முன்பின் தெரியாத பெண்களால் பிரச்னைகளை சந்திக்க நேரலாம். வாழ்க்கைத்துணையின் செயல்பாடுகள் உங்கள் வெற்றிக்கு உதவும். அவரது நெடுநாள் விருப்பம் ஒன்றினை நிறைவேற்றி வைப்பீர்கள். பிள்ளைகளின் வாழ்வில் சுபநிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். பூர்வீக சொத்துக்களில் பாகப்பிரிவினைப் பற்றிய பேச்சுகள் எழும். தொழில்முறையில் தைரியத்துடன் செயல்பட்டு நற்பெயர் வாங்குவீர்கள். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் துணையுடன் பதவி உயர்வுக்கான வாய்ப்புகளைத் தக்க வைத்துக்கொள்வர். நற்பலன்களைத் தரும் வாரம் இது.

  • கவலைகள் காணாமல் போகும். குடும்பத்தில் சலசலப்புகள் இருக்கும். பேச்சில் நகைச்சுவை இருக்கும். உங்கள் வார்த்தைகள் மற்றவர்களுக்கு மனமகிழ்ச்சியோடு ஆறுதலும் தரும். முன்கோபத்தினைக் குறைத்துக் கொள்வது நல்லது. உடன்பிறந்தோர் உதவிகரமாய் இருப்பார்கள். மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பினைப் பெறுவர். புதிய நண்பர்களின் சேர்க்கை ஆதாயம் தரும். புதிய வாகனம் வாங்கும் முயற்சியில் உள்ளோருக்கு நேரம் சாதகமாக இருக்கும். பிள்ளைகளின் வாழ்வில் சுபநிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்வீர்கள். வாழ்க்கைத்துணையோடு கருத்து வேறுபாடு தோன்றி மறையும். செலவுகளை குறைக்கத் திட்டமிட்டாலும் தவிர்க்க இயலாத வகையில் அத்தியாவசிய செலவுகள் வந்து சேரும். தொழில்முறையில் திறமையான பேச்சுகளின் மூலம் வெற்றி கண்டு வரும் நீங்கள் இனி செயலில் இறங்கி சாதிக்க வேண்டியிருக்கும். கலைத்துறையினர் சிறப்பான தனலாபத்தினைக் காண்பார்கள். மொத்தத்தில் சிறப்பான நற்பலன்களைத் தரும் வாரமாக அமையும்.

  • எதிலும் தைரியத்துடன் தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். உங்கள் மதிப்பைக் குறைக்கலாம் என்பதால் பிடிவாதத்தை தவிர்ப்பது நல்லது. உங்கள் சொல்வாக்கு மிகுந்த செல்வாக்கு பெறும். குடும்பத்தில் சலசலப்புகளுக்கு மத்தியில் கலகலப்பும் நிறைந்திருக்கும். புதிய நண்பர்களின் தொடர்பு உண்டு. தகவல் தொடர்பு சாதனங்கள் மிகுந்த பயனுள்ள வகையில் அமையும். மாணவர்கள் செய்முறை வகுப்பில் அதிக ஈடுபாடு கொள்வர். எதிர்பாராத பிரயாண வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் வாழ்க்கை தரம் முன்னேற்றம் காணும். உடல் உஷ்ண உபாதைகளுக்கு ஆட்படக்கூடும் வாய்ப்பு உள்ளதால் கவனத்துடன் இருப்பது அவசியம். அதிகரித்து வரும் ஆடம்பர செலவுகளைக் கட்டுப்படுத்துவது நல்லது. பெற்றோரின் உடல்நிலையில் கவனம் அவசியம். தொழில்முறையில் கூடுதல் அலைச்சல் இருக்கும். தொழில் சிந்தனையால் மற்ற விஷயங்களில் மறதி உண்டாகும். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு கொள்ளும் வாய்ப்பு உண்டு. கலைத்துறையினருக்கு கூடுதல் அலைச்சல் இருக்கும். நற்பலன்களைத் தரும் வாரமாக அமையும்.

http://www.kathiravan.com/?page_id=1302
Share with your friends










Submit