இராசிபலன்கள் 18-04-2016 முதல் 24-04-2016 வரை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]
வார பலன், ஜாதகம், Weekly Astrology Tamil, Weekly Astrology In Tamil, Tamil Weekly Astrology, Tamil Astrology For This Week, Tamil Astrology Weekly Predictions, Astrology In Tamil, Free Tamil Astrology, Tamil Astrology Horoscope, Tamil Astrology Rashi, Tamil Astrology Rashi Chart

கதிரவனுக்காகக் கணித்து எழுதியவர்  ஜோதிடமணி பிரம்மஸ்ரீ ரகுநாத ஐயர் தமிழ்நாடு, இந்தியா

 • மனித நேயம் அதிகம் உள்ளவர்களே! தொடர்ந்து சுக்ரன், புதனின் ஆதரவு உங்களுக்கு இருப்பதால் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வாகன வசதிப் பெருகும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். கல்யாண விஷயங்கள் உடனே முடியும். வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவீர்கள். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள். பழைய நண்பர், உறவினர்களை சந்தித்து மகிழ்வீர்கள். ராசிக்கு லாப வீட்டில் கேது தொடர்வதால் வேற்றுமொழிக்காரர்கள் உதவுவார்கள். ஷேர் மூலம் பணம் வரும். சூரியன் ராசிக்குள் நுழைந்திருப்பதால் டென்ஷன் அதிகரிக்கும். இரத்த அழுத்தம் கூடும். கோபப்படாதீர்கள். அடிவயிற்றில் வலி, நீர்சுளுக்கு வந்துப் போகும். அரசு காரியங்களில் அலட்சியம் வேண்டாம். 5-ல் ராகு நீடிப்பதால் பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் குறித்த கவலைகள் வந்துப் போகும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். ராசிநாதன் செவ்வாய் 8-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் வீட்டு மனை வாங்குவீர்கள். சகோதர ஒற்றுமை பலப்படும். ஆனால் 8-ல் சனியும் தொடர்ந்துக் கொண்டிருப்பதால் உங்கள் பலவீனத்தை பயன்படுத்தி சிலர் தவறான வழியில் சம்பாதிக்க உங்களை தூண்டுவார்கள். அதற்கு உடன்படாதீர்கள். கூடாப்பழக்கமுள்ளவர்களிடம் அதிக நெருக்கம் காட்ட வேண்டாம். கன்னிப் பெண்களே! புதியவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் விளம்பர யுக்திகளை கையாண்டு லாபம் சம்பாதிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் தேங்கிக் கிடந்தப் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். கலைத்துறையினரே! கலைநயமிகுந்த உங்களின் படைப்புகள் பட்டித்தொட்டியெங்கும் பேசப்படும். சாதுர்யமான பேச்சால் சாதிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 19, 20, 22 அதிஷ்ட எண்கள்: 3, 7 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், ஆலிவ் பச்சை அதிஷ்ட திசை: வடமேற்கு

 • உழைப்பால் உயர்ந்தவர்களே! ராசிநாதன் சுக்ரன் உச்சம் பெற்று லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் புதிய முயற்சிகள் பலிதமாகும். இழுபறியான வேலைகள் உடனே முடியும். வி.ஐ.கள் உங்களின் நேர்மையைப் புரிந்துக் கொண்டு பாராட்டுவார்கள். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையறிந்துப் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். நண்பர்கள் உதவுவார்கள். உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்வீர்கள். பூர்வீக சொத்தை செலவு செய்து சீர்படுத்துவீர்கள். சிலர் வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். 7-ல் சனி நிற்பதால் வீண் சந்தேகம் வரும். மனைவியுடன் மோதல்கள் வரும். அவருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வரக்கூடும். கடந்த கால கசப்பான அனுபவங்களை மறந்து விடுவது நல்லது. ராகுவும், குருவும் சாதகமாக இல்லாததால் யாரிடமும் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். செவ்வாய் 7-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வழக்கு சாதகமாக திரும்பும். ராசிக்கு 12-ல் சூரியன் மறைந்திருப்பதால் வேலைச்சுமையால் ஓய்வின்மையும், திடீர் பயணங்கள், மனஇறுக்கம் வந்துச் செல்லும். கன்னிப் பெண்களே! பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். கடையை உங்கள் ரசனைக்கேற்றபடி மாற்றுவீர்கள். உத்யோகத்தில் நேரங்காலம் பார்க்காமல் உழைத்தும் எந்த பயனும் இல்லையே, என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். கலைத்துறையினரே! உங்களின் கலைத்திறன் வளரும். விடாமுயற்சியால் வெற்றி பெறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 21, 23, 24 அதிஷ்ட எண்கள்: 5, 8 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு அதிஷ்ட திசை: தென்கிழக்கு

 • அதிமேதாவித்தனம் அதிகம் உள்ளவர்களே! சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்களின் ஆளுமைத் திறன், நிர்வாகத் திறமை அதிகரிக்கும். கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போய் சாதிப்பீர்கள். புது பொறுப்புகள் தேடி வரும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். 3-ல் ராகு வலுவாக அமர்ந்திருப்பதால் உங்களின் புகழ், கௌரவம் உயரும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். ஷேர் மூலம் பணம் வரும். தூரத்து சொந்தங்கள் தேடி வரும். 9-ல் கேது நிற்பதால் கை, கால் வலி, தந்தையாருடன் மோதல்கள் வந்துப் போகும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். ஆனால் 6-ல் செவ்வாய் நிற்பதால் சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் சுற்றுலா சென்று வருவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணம் முயற்சிகள் எதிர்பார்த்தபடி நல்ல விதத்தில் அமையும். 6-ம் வீட்டிலேயே சனி தொடர்வதால் வேற்றுமதம், மொழியினரால் ஆதாயம் உண்டு. கன்னிப் பெண்களே! சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் காலநேரமில்லாமல் உழைக்க வேண்டி வரும். சக ஊழியர்களிடம் இடைவெளி தேவை. கலைத்துறையினரே! உங்களுக்கு பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும். நினைத்ததை நிறைவேற்றிக் காட்டும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 19, 22, 24 அதிஷ்ட எண்கள்: 1, 3 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு அதிஷ்ட திசை: வடக்கு

 • தோல்வி கண்டு துவளாதவர்களே! குருபகவான் ராசிக்கு 2-ல் நிற்பதால் தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். எதிர்பாராத பயணம் உண்டு. சாதுக்கள், ஆன்மிகப் பெரியோரின் ஆசிப் பெறுவீர்கள். சூரியன் 10-ல் அமர்ந்திருப்பதால் புது பொறுப்புகளும், வாய்ப்புகளும் தேடி வரும். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. தந்தைவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சனி 5-ல் நிற்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். கர்ப்பிணிப் பெண்கள் எடைமிகுந்தப் பொருட்களை சுமக்க வேண்டாம். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால் திடீர் செலவுகள், முன்கோபம், பல் வலி, கண் எரிச்சல் வந்துச் செல்லும். வழக்கை நிதானமாக கையாளுங்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். புதனும், சுக்ரனும் சாதகமாக இருப்பதால் சொந்த-பந்தங்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். கன்னிப் பெண்களே! காதல் கசந்து இனிக்கும். தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரிகள் வியப்பார்கள். கலைத்துறையினரே! வருமானம் உயர வழி பிறக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 19, 20, 21 அதிஷ்ட எண்கள்: 4, 6 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன் அதிஷ்ட திசை: தெற்கு

 • அழுத்தமான கொள்கை பிடிப்புள்ளவர்களே! யோகாதிபதி செவ்வாய் கேந்திரபலம் பெற்ற அமர்ந்திருப்பதுடன், ராசிநாதன் சூரியனும் உச்சமாகிருப்பதால் எதிலும் தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். பேச்சில் நிதானம் வரும். ஓரளவு பணவரவு உண்டு. அரசால் ஆதாயம் உண்டு. வேலைக் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். என்றாலும் தந்தைக்கு அசதி, சோர்வு, வீண் செலவுகளெல்லாம் வந்துப் போகும். சுக்ரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் வீட்டை கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கி லோன் கிடைக்கும். குடிநீர், கழிவு நீர் குழாய் பிரச்னைகள் தீரும். அடகிலிருந்த நகைகளை மீட்பீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால் உங்கள் கொள்கை கோட்பாடுகளை விட்டுக் கொடுக்க வேண்டி வரும். சொன்ன சொல்லை காப்பாற்ற முடியவில்லையே என நினைப்பீர்கள். கால் வலி, முதுகுத் தண்டில் வலி, ஹார்மோன் பிரச்னைகளெல்லாம் வந்துப் போகும். ராசிக்குள் குருவும், ராகுவும் தொடர்ந்துக் கொண்டிருப்பதால் நெஞ்சு எரிச்சல், அப்ரண்டீஸ், இரத்த சோகை, கை, கால் மரத்துப் போகுதளெல்லாம் வந்துச் செல்லும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவது குறித்து யோசிப்பீர்கள். கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் தள்ளியிருங்கள். பெற்றோரின் ஆலோசனைக்கு செவி சாயுங்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். உத்யோகத்தில் நிம்மதி குறையும். சக ஊழியர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் ஆதாயமடைவீர்கள். தன் பலம், பலவீனத்தை உணரும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 20, 21, 22 அதிஷ்ட எண்கள்: 4, 6 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, மெரூண் அதிஷ்ட திசை: வடமேற்கு

 • கலாச்சாரத்தை விட்டுக் கொடுக்காமல் வாழ்பவர்களே! 3-ம் வீட்டில் சனியும், செவ்வாயும் வலுவாக அமர்ந்திருப்பதால் சவாலில் வெற்றி பெறுவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். வாகனம் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக போக நினைத்த சுற்றுலா பயணங்கள் சென்று வருவீர்கள். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டு மனை வாங்குவீர்கள். சகோதரங்களின் அரவணைப்பு அதிகரிக்கும். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். ராசிக்கு 12-ல் குருவும், ராகுவும் நீடிப்பதால் சில விஷயங்களை மூன்று, நான்கு முறை போராடி முடிக்க வேண்டி வரும். தூக்கமில்லாமல் போகும். அவ்வப்போது அலைச்சல், டென்ஷன் ஏற்படும். புதன் 8-ல் நிற்பதுடன், சூரியனும் 8-ல் நுழைந்திருப்பதால் திடீர் பணவரவு உண்டு. மறைமுகமாக செயல்பட்டவர்கள் இனம் கண்டு ஒதுக்குவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். கேது 6-ல் தொடர்வதால் வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். பங்குச் சந்தை மூலமாக பணம் வரும். கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் வேலையை பகிர்ந்துக் கொள்வார்கள். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கும். யதார்த்தமான முடிவுகளால் வெற்றி பெறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 19, 21, 23 அதிஷ்ட எண்கள்: 2, 7 அதிஷ்ட நிறங்கள்: கிரே, கிளிப் பச்சை அதிஷ்ட திசை: மேற்கு

 • கைமாறு கருதாமல் உதவுபவர்களே! புதன் உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் பேச்சைக் குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் நண்பர்களாவார்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். குருவும், ராகுவும் லாப வீட்டிலேயே தொடர்வதால் ஷேர், கமிஷன் மூலம் பணம் வரும். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்பொழுது நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்களுடன் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். வழக்கு சாதகமாக திரும்பும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். சூரியன் 7-ம் வீட்டில் நுழைந்திருப்பதால் உடல் உஷ்ணம் அதிகமாகும். மனைவியின் உடல் நலம் பாதிக்கும். அரசு காரியங்கள் தாமதமாகும். சுக்ரன் 6-ல் மறைந்திருப்பதால் கடன் தொல்லை, தொண்டை வலி, மின்னணு, மின்சார சாதனப் பழுது, சிறுசிறு விபத்துகள் வந்துச் செல்லும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பாதச் சனி தொடர்வதால் பேச்சில் கவனம் தேவை. கணுக்கால் வலிக்கும், பல் ஈறில் இரத்தம் கசிய வாய்ப்பிருக்கிறது. கன்னிப் பெண்களே! பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களின் பரந்த மனசை மூத்த அதிகாரி புரிந்துக் கொண்டு உதவுவார். சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். கலைத்துறையினரே! பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவிற்கு பிரபலமாவீர்கள். விட்டுக் கொடுத்து விட்டதைப் பிடிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 20, 22, 24 அதிஷ்ட எண்கள்: 2, 5 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, மஞ்சள் அதிஷ்ட திசை: வடகிழக்கு

 • ஆர்ப்பாட்டம் இல்லாமல் சாதிப்பவர்களே! சூரியன் 6-ல் நுழைந்திருப்பதால் எதிர்பார்த்த காரியங்கள் வெற்றியடையும். அரசால் அனுகூலம் உண்டு. மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். வேலைக் கிடைக்கும். பணவரவு கணிசமாக உயரும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு அயல் நாடு செல்லும் வாய்ப்பு வரும். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். புதன் 6-ல் மறைந்திருப்பதால் சளித் தொந்தரவு, நரம்புச் சுளுக்கு, உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள் வந்துப் போகும். சுக்ரன் சாதகமாக இருப்பதால் மனைவிவழி உறவினர்கள் உதவுவார்கள். சமையலறையை நவீனமயமாக்குவீர்கள். ராசிநாதன் செவ்வாய் ராசிக்குள் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் உடன்பிறந்தவர்களால் மகிழ்ச்சி தங்கும். சிறுக சிறுக சேமித்து வைத்ததில் புறநகர் பகுதியிலாவது ஒரு கால் கிரவுண்டு வீட்டு மனை வாங்க முயற்சி செய்வீர்கள். குரு, ராகு மற்றும் கேது சரியில்லாததால் சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். பண விஷயத்தில் யாருக்கும் ஜாமீன் போட வேண்டாம். கன்னிப் பெண்களே! காதல் மற்றும் உயர்கல்வி சம்பந்தப்பட்ட குழப்பங்கள் நீங்கும். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களைத் தாக்கிப் பேசினாலும் பதட்டப்படாதீர்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள். திட்டமிட்டு செயல்படுவதால் பிரச்சனைகள் குறையும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 19, 20, 22 அதிஷ்ட எண்கள்: 1, 9 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், இளம்சிவப்பு அதிஷ்ட திசை: தெற்கு

 • சுய கட்டுபாடுடையவர்களே! ராசிநாதன் குருபகவான் 9-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் நினைத்த காரியம் நிறைவேறும். திருமணம், சீமந்தம், காது குத்து போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். வி.ஐ.பிகள் உதவுவார்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். குழந்தை பாக்யம் கிடைக்கும். வாடகை வீட்டிலிருந்த சிலர் சொந்தமாக வீடு கட்டி குடிபுகுவீர்கள். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். செவ்வாய் 12-ம் வீட்டில் மறைந்தாலும் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் புது சொத்து வாங்குவீர்கள். சகோதரங்கள் மதிப்பார்கள். வழக்கு சாதகமாகும். சூரியன் 5-ல் நுழைந்திருப்பதால் தூக்கமின்மை, டென்ஷன் வந்துப் போகும். பிள்ளைகளிடம் கோபப்படாதீர்கள். புதனும், சுக்ரனும் சாதகமாக இருப்பதால் விலகிச் சென்ற நண்பர்கள், உறவினர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். மனதிற்கு இதமான செய்திகள் வரும். 3-ம் வீட்டில் கேது நிற்பதால் புது வேலை, பொறுப்புகள் தேடி வரும். அயல்நாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள். ஏழரைச் சனி தொடர்வதால் பண விஷயத்தில் சாக்குப் போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். கன்னிப் பெண்களே! கல்யாணப் பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும். வியாபாரத்தில் சந்தை நுணுக்கங்களை தெரிந்து கொண்டு முதலீடு செய்வீர்கள்.வேலையாட்கள், பங்குதாரர்கள் உங்களது கருத்துக்களை ஏற்றுக் கொள்வார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். கலைத்துறையினரே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். அடிப்படை வசதிகள் பெருகும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 21, 23, 24 அதிஷ்ட எண்கள்: 5, 8 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, வெள்ளை அதிஷ்ட திசை: தென்மேற்கு

 • பாகுபாடு பார்க்காமல் பழகுபவர்களே! லாப வீட்டில் செவ்வாயும், சனியும் தொடர்வதால் வருமானத்தை உயர்த்த புது வழி யோசிப்பீர்கள். புது வேலை அமையும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளின் பாசம் அதிகரிக்கும். புது வீடு மாறுவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். புதன் சாதகமாக இருப்பதால் தள்ளிப் போன விஷயங்கள் முடியும். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததால் வாகனத்தை கவனமாக இயக்கப் பாருங்கள். வீண் பகை, பொருள் இழப்பு, ஏமாற்றம் வந்து நீங்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். பயணங்கள் அலைச்சல் தருவதாக அமையும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். குரு 8-ல் மறைந்திருப்பதால் மனஇறுக்கம், வீண் அலைச்சல், வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் வந்துப் போகும். முக்கிய கோப்புகளை கவனமாக கையாளுங்கள். கன்னிப் பெண்களே! உங்களுடைய தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். பங்குதாரர்களுடன் மோதல்கள் வெடிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி சில நேரங்களில் எரிந்து விழுவார். நிரந்தரமற்ற சூழல் உருவாகும். சக ஊழியர்களிடம் உஷாராக பழகுங்கள். கலைத்துறையினரே! உங்களின் திறமைகள் வெளிப்படும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 22, 23, 24 அதிஷ்ட எண்கள்: 4, 9 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம்வெள்ளை, ப்ரவுன் அதிஷ்ட திசை: மேற்கு

 • எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்களே! சூரியன் 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் எதிர்பார்ப்புகள் நல்ல விதத்தில் முடிவடையும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். நாடாளுபவர்களின் உதவி கிட்டும். அரசியலில் செல்வாக்குக் கூடும். வீடு கட்ட அனுப்பியிருந்த கட்டிட வரைபடத்திற்கு அரசு அனுமதி கிட்டும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் அடிமனதிலிருக்கும் பயத்தை போக்குவீர்கள். சுக்ரனும், புதனும் சாதகமாக இருப்பதால் பொது அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். போட்டித் தேர்வில் வெற்றி கிடைக்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் கௌரவமும் ஒருபடி உயரும். மனைவிவழியில் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். ராகு, கேது சாதகமாக இல்லாததால் எல்லோருக்கும் நல்லது செய்தும் கெட்டப் பெயர்தான் மிஞ்சுகிறதே என ஆதங்கப்படுவீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். முக்கிய பத்திரங்களில் கையெழுத்திடும்போது சட்ட ஆலோசகரை கலந்து பேசுவது நல்லது. யோகா, தியானம் செய்வது நல்லது. ஒரு சொத்தை விற்று பழைய சிக்கலைத் தீர்ப்பீர்கள். கன்னிப் பெண்களே! தவறான எண்ணங்களுடன் பழகியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். 10-ல் செவ்வாய் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் வியாபாரத்தில் நவீன யுக்திகளை கையாளுவீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் அதிகாரிகள் பக்கபலமாக இருப்பார்கள். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புத் திறன் வளரும். இடையூறுகள், ஏமாற்றங்களிலிருந்து விடுபடும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 19, 20, 22 அதிஷ்ட எண்கள்: 1, 6 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், சில்வர்கிரே அதிஷ்ட திசை: தென்கிழக்கு

 • தளராத தன்னம்பிக்கை உடையவர்களே! 6-ல் ராகு வலுவாக அமர்ந்திருப்பதால் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்த்துப் பேசியவர்கள், வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வேற்றுமதத்தவர்கள் அறிமுகமாவார்கள். சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள். 9-ல் செவ்வாய் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் எதையும் சமாளிக்கும் வகையில் பணபலம் கூடும். வீட்டில் நிம்மதியுண்டாகும். வங்கியில் அடமானமாக வைத்திருந்த வீட்டுப் பத்திரத்தை மீட்பீர்கள். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பாதிபணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதி பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். புதனும், சுக்ரனும் சாதகமாக இருப்பதால் உற்சாகமாக பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். உறவினர்கள் சிலர் உங்களின் அதிரடியான வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுவார்கள். பால்ய நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். சூரியன் சாதகமாக இல்லாததால் பார்வைக் கோளாறு, வீண் வாக்குவாதங்கள் வந்துப் போகும். கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்தை விட லாபம் அதிகரிக்கும். பழைய வேலையாட்கள், வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சவால்களை சந்திக்க வேண்டி வரும். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவீர்கள். எதிலும் ஏற்றம் நிறைந்த வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 20, 21, 22 அதிஷ்ட எண்கள்: 2, 5 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், மஞ்சள் அதிஷ்ட திசை: வடக்கு

http://www.kathiravan.com/?page_id=1302