இராசிபலன்கள் 17-2-2017 முதல்24-2-2017 வரை

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

வார பலன், ஜாதகம், Weekly Astrology Tamil, Weekly Astrology In Tamil, Tamil Weekly Astrology, Tamil Astrology For This Week, Tamil Astrology Weekly Predictions, Astrology In Tamil, Free Tamil Astrology, Tamil Astrology Horoscope, Tamil Astrology Rashi, Tamil Astrology Rashi Chart

கதிரவனுக்காகக் கணித்து எழுதியவர் ஜோதிடமணி பிரம்மஸ்ரீ ரகுநாத ஐயர் தமிழ்நாடு, இந்தியா

  • எதிலும் தேவையற்ற சந்தேகங்கள் வரும். குழப்பம் இருக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். திறமையான பேச்சின் மூலம் காரியத்தை எளிதாக சாதிப்பீர்கள். தங்க, வெள்ளி நகைகள் வாங்க ஏற்ற தருணம் இது. புதிய வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கு எதிர்பார்க்கும் கடனுதவி கிட்டும். இனிப்பு வகைகளைத் தவிர்ப்பது உடல்நலத்திற்கு நல்லது. உடன்பிறந்தோர் தரப்பிலிருந்து மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். மாணவர்கள் பாடங்களை தெளிவாகப் புரிந்துகொண்டு படிக்க வேண்டியது அவசியம். வீட்டில் பழைய சாமான்களை சுத்தம் செய்யும் போது காணாமல் போன பொருள் ஒன்று கிடைக்கும். பிள்ளைகளின் சாமர்த்தியமான பேச்சை கண்டு பெருமை கொள்வீர்கள். தலைவலி பிரச்னைக்கு கண் பார்வையை பரிசோதித்துக் கொள்வது நல்லது. வாழ்க்கைத்துணையின் வார்த்தைகள் உங்கள் வெற்றிக்குத் துணை நிற்கும். கலைத்துறையினருக்கு கூடுதல் அலைச்சல் இருக்கும். வேலைக்குச் செல்வோர் பேச்சுத்திறமையால் வெற்றி காண்பர். சந்தேகத்தைத் துறந்து சந்தோஷம் கொள்ள வேண்டிய வாரம் இது.

  • செயல்திறன் கூடும். உங்கள் முக்கியத்துவத்தை மற்றவர்கள் உணரச் செய்வீர்கள். ஓயாமல் பணியாற்ற நேரிடும். எந்த ஒரு காரியத்தையும் முழு வைராக்யத்துடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சலசலப்புகள் தோன்றி மறையும். செலவுகளைச் சமாளிக்கும் வகையில் வரவு அமையும். கவுரவ செலவுகள் கூடும். கறாராகப் பேசி காரியத்தை சாதிப்பீர்கள். அண்டை, அயலாரோடு சுமூக உறவு தொடரும். நெருங்கிய உறவினர் ஒருவரோடு மனஸ்தாபம் தோன்றும். வீட்டினை சுத்தமாக வைத்துக்கொள்வதில் அதிக நாட்டம் கொள்வீர்கள். குடும்பத்தினர் குறித்த ஆதங்கம் இருக்கும். பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பது அவசியம். முதுகு, இடுப்பு வலியால் உடல்நிலையில் சிரமம் உண்டாகலாம். வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகள் முக்கியமான நேரத்தில் உதவியாய் அமையும். மாணவர்களுக்கு கூடுதல் எழுத்து பயிற்சி தேவை. முன்னோர் பற்றிய சிந்தனை அவ்வப்போது மனதில் இடம்பிடிக்கும். தொழில் முன்னேற்றம் காணும். கலைத்துறையினர் உரிய மரியாதை, கவுரவம் பெறுவர். முன்னேற்றம் தரும் வாரம் இது

  • எடுத்த காரியத்தில் தடைகள் உண்டாகும். மன உறுதி, புத்தி சாதுர்யத்தால் நினைப்பதை சாதீப்பீர்கள். நேரத்தை உணர்ந்து நிதானமாக செயல்படவும். குடும்பத்தில் அமைதி நிலவும். பொருளாதார முன்னேற்றத்தில் தடைகள் உண்டாகும். செலவுகள் கூடி சேமிப்பு கரையும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற இடைஞ்சல் உருவாகும். மாணவர்கள் உடனுக்குடன் பாடங்களைப் படிப்பது அவசியம். பிரயாணத்தின்போது பொருளிழப்பு நேரக்கூடும். நெருங்கிய உறவினர் ஒருவரோடு மனஸ்தாபம் தோன்றும். ஆடை, ஆபரணம் வாங்கும்போது கவனம் தேவை. பிள்ளைகளின் செயல்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக அமைந்தாலும் அவர்களால் உங்கள் கவுரவம் உயரும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் வரும். தலைவலி, பித்தம், வாந்தி, மயக்கத்தால் உடல்நிலை சிரமத்திற்கு உள்ளாகும். கவுரவ செலவுகள் கூடும். வேலைக்குச் செல்வோர் அலுவலகத்தில் போட்டியான சூழலை சமாளிக்க நேரும். பொதுவாக எல்லா விஷயங்களிலும் நிதானத்தோடு செயல்பட வேண்டிய வாரம் இது

  • காரியத்தடைக்கான அடிப்படைக் காரணத்தை ஆராய்ந்து உங்கள் நடவடிக்கைகளை மாற்றி அமைத்து வெற்றி காண்பீர்கள். அலைச்சல் அதிகரித்தாலும் எதையும் சாதகமாகவே எடுத்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் சலசலப்புகள் தோன்றி மறையும். அதிக செலவுகளால் சேமிப்பில் தேக்கம் உண்டாகும். உடன் பிறந்தாரோடு மனஸ்தாபம் தோன்றும். அடுத்தவர்களுக்கு உதவப்போய் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். மாணவர்கள் சிந்தனைச் சிதறலைத் தவிர்க்கப் போராடுவர். குடும்பப் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் ஒத்துழைப்பு இன்றி சிரமப்படுவீர்கள். பிள்ளைகள் பொறுப்பில்லாமல் செயல்படுவதாக எண்ணுவீர்கள். வீண் குழப்பத்தால் தலைவலி வரும். வாழ்க்கைத்துணையின் எண்ண ஓட்டத்தினைப் புரிந்து அவரது தேவைகளை நிறைவேற்றுவீர்கள். ஓயாது உழைத்து வரும் உங்களை யாரும் கண்டு கொள்வதில்லை என்று ஆதங்கம் கொள்வீர்கள். கலைத்துறையினர் திறமை உயரும். பணிக்குச் செல்வோருக்கு கூடுதல் பணிச்சுமை இருக்கும். சுயமுயற்சியால் வெற்றி பெறும் வாரம் இது

  • எடுத்த செயல்களில் வெற்றி உறுதியாகும். எடுத்த காரியத்தை அதே வேகத்தில் செய்து தடைகளைத் தாண்டி சிறப்பான வெற்றி காண்பீர்கள். செயல்வேகம் கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணவரவு நன்றாக இருக்கும். நெடுநாட்களாக வாங்க நினைத்த பொருள் ஒன்றை உடனடியாக வாங்குவீர்கள். அடுத்தவர்களின் குடும்ப பிரச்னைகளுக்குத் தீர்வு காண ஆலோசனை வழங்குவீர்கள். பிரச்னைகளை தயக்கமின்றி எதிர்கொள்வீர்கள். மாணவர்களின் எழுத்துத்திறன் கூடும். புதிய வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கு தடைகள் விலகி பணிகள் விரைவாக நடைபெறும். பிள்ளைகளின் பிடிவாதமான செயல்கள் மன வருத்தத்தைத் தரலாம். இரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகள் உங்களை சரியாகச் செயல்பட வைக்கும். கலைத்துறையினர் எதிர்பாராத இடைஞ்சலை சந்திப்பர். உத்யோகம் பார்ப்போர் அலுவலகத்தில் மேலதிகாரியிடம் நன்மதிப்பினைப் பெறுவார்கள். கவுரவம் கூடி சந்தோஷம் காணும் வாரம் இது

  • உங்களை சற்றே சோதித்துப் பார்க்கும் நேரம். வீண் வம்பு விவகாரங்கள் தேடி வரும். சம்பந்தமில்லாத விவகாரங்களை தவிர்ப்பது அவசியம். அடுத்தவர்களுக்கு உதவி செய்யப்போய் சங்கடத்திற்கு ஆளாக நேரிடும். குடும்பத்தில் அமைதி நிலவும். செலவுகளைச் சமாளிக்கின்ற வகையில் பணவரவு தொடரும். வாழ்க்கைத்துணையின் உடன்பிறந்தோருக்கு உதவி செய்ய நேரிடும். அடுத்த வீட்டுக்காரர்களோடு மனஸ்தாபம் தோன்றும். உறவினர் ஒருவர் பண உதவி கேட்டு மறுக்க வேண்டிய சூழலுக்கு ஆளாவீர்கள். புதிதாக வீடு கட்டும் முயற்சி தடைபடலாம். கடன்சுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்கள் மகிழ்ச்சி தரும். உஷ்ண உபாதைகளால் உடல்நிலையில் சிரமம் தோன்றும். வேலை பார்ப்போருக்கு பணிச்சுமை கூடும். குடும்பப் பெரியவர்களின் உடல்நிலையில் கவனம் தேவை. மாணவர்களுக்கு அறிவியல் பாடங்களில் கூடுதல் கவனம் அவசியம். கலைத்துறையினர் அலட்சியப்படுத்தும் விவகாரம் ஒன்று பெரிதாகி சிரமம் தரக்கூடும். பொதுவாக எச்சரிக்கையோடு செயல்பட வேண்டிய வாரம் இது

  • தடைபட்ட சுபகாரியங்கள் உடனடியாக நடந்தேறும். எந்த ஒரு காரியத்தையும் உரிய விதிமுறைபடி செய்ய நினைப்பீர்கள். சிறு தவறுகளைக் கூட அலட்சியப்படுத்தாது சரி செய்ய எண்ணுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பண வரவு தடையின்றி அமையும். சேமிப்பு சீராக உயர்வடையும். தங்க, வெள்ளி நகைகள், ஆடை, ஆபரணங்கள் வாங்க நேரம் சாதகமாக அமையும். தள்ளுபடியில் கிடைக்கும் பொருட்களை விரும்பாது தரமான பொருட்களைத் தேடி வாங்குவீர்கள். நண்பர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவர். பால்ய சிநேகிதர் ஒருவரின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். பொழுதுபோக்கு அம்சங்களைத் தவிர்த்து ஆன்மிக விவகாரங்களில் அதிக நாட்டம் கொள்வீர்கள். மாணவர்களின் எழுத்து வேகம் உயரும். பிள்ளைகளின் நடவடிக்கைகளைப் புரிந்துகொள்வதில் தடுமாற்றம் காண்பீர்கள். ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். உத்யோகம் பார்ப்போர் அலுவலகத்தில் அனுசரணையான அணுகுமுறை மூலம் தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்வார்கள். கலைத்துறையினருக்கு கடுமையான போட்டியிருக்கும். வெற்றி தரும் வாரம் இது

  • எந்த விவகாரத்தையும் அதிகம் அலட்டிக் கொள்ளாது கையாள்வீர்கள். பிரச்னையின் ஆணிவேரைக் கண்டுபிடித்து உரிய தீர்வு காண்பீர்கள். எதிலும் சிறப்பாக செயல்படுவீர்கள். வெற்றிக்குரிய வழிகளை எளிதாக அறிந்துகொள்வீர்கள். குடும்பத்தில் சலசலப்பும் கலகலப்பும் கலந்திருக்கும். பொருள் வரவு சிறப்பாக அமையும். சேமிப்பு உயர்வடையும். தங்க, வெள்ளி நகைகள் வாங்க நேரம் சாதகமாக அமையும். உறவினர்கள் இல்ல விவகாரங்களில் ஒதுங்கி நிற்பீர்கள். ஏதாவது பேசினால் வீண் வம்பு உருவாகிவிடுமோ என்று அமைதி காப்பீர்கள். பிள்ளைகளின் பிடிவாதமான செயல்கள் வருத்தம் தரும். மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை உடனுக்குடன் தெளிவு படுத்தி கொள்வது அவசியம். வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகள் உங்கள் வெற்றிக்குத் துணைபுரியும். நெருங்கிய நண்பர் ஒருவருக்கு உதவி செய்யப்போய் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். கலைத்துறையினருக்கு கற்பனைத்திறன் உயரும். உத்யோகம் பார்ப்போர் அலுவலகத்தில் தங்கள் திறமையை நிரூபித்து முக்கியத்துவம் பெறுவர். திறமை கூடும் வாரம் இது

  • எடுத்த செயல்களில் வெற்றி கிடைக்கும். நினைத்த காரியத்தை சாதிப்பதில் உங்கள் திறமை வெளிப்படும். திடீர் பிரச்னைகளை தைரியத்துடன் சமாளிக்கும் விதம் உடனிருப்போரை பிரமிக்க வைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தினர் தங்கள் தேவைக்கு பெரும்பாலும் உங்களையே சார்ந்திருப்பர். சேமிப்பு உயர்வடையும். வீட்டு உபயோகப் பொருட்கள் சேரும். வீட்டை சுத்தமாக வைத்திருப்பதில் அதிக கவனம் செலுத்துவீர்கள். கழிவுநீர் அடைப்பு சார்ந்த பிரச்னைகளால் அண்டை அயலாருடன் மனஸ்தாபம் தோன்றும். மாற்று மதத்தைச் சார்ந்தவர்களுடன் எச்சரிக்கை அவசியம். மாணவர்கள் முழுஈடுபாட்டுடன் பாடங்களை படிப்பது அவசியம். கலைத்துறையினரின் திறமைக்கு ஏற்ப வாய்ப்பு கிட்டும். பிள்ளைகளின் செயல்திறன் கண்டு பெருமிதம் கொள்வீர்கள். கொலஸ்ட்ரால் சார்ந்த பிரச்னைகள் சிரமம் தரும். வாழ்க்கைத்துணையின் எண்ணத்தினைப் புரிந்துகொள்வதில் தடுமாற்றம் உண்டாகும். பணிக்குச் செல்வோர் தங்கள் திறமையால் அலுவலகத்தில் முக்கியத்துவம் பெறுவர். வெற்றி தரும் வாரம் இது

  • சிரமங்கள் வெகுவாக குறையும். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். மனதிற்குப் பிடித்த சம்பவங்கள் நடைபெறும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். நவீன வீட்டு உபயோகப் பொருள் ஒன்று வாங்குவீர்கள். வீட்டை சுத்தப்படுத்தும்போது காணாமல் போனதாக நினைத்த விலையுயர்ந்த பொருள் ஒன்று திரும்பக் கிடைக்கும். பேச்சில் தத்துவம் வெளிப்படும். வித்தியாசமான முயற்சிகள் வெற்றி பெறும். நண்பர்களோடு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்வதிலும், பொது அறிவை வளர்த்துக் கொள்வதிலும் நாட்டம் உண்டாகும். பணத்தட்டுப்பாடு நீங்கும். கடன் சுமை குறையும். உறவினர் ஒருவர் உதவி கேட்டு உங்களை நாடி வரக்கூடும். பிள்ளைகளின் வழியில் மனதிற்கினிய சம்பவங்கள் நிகழும். பொழுதுபோக்கு அம்சங்களில் நாட்டம் கூடும். கலைத்துறையினர் புதிய முயற்சிகளில் வெற்றி காண்பர். வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை உடனுக்குடன் நிறைவேற்றி வைப்பீர்கள். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆலோசனை முக்கியமான சூழலில் பயன் தரும். பணிக்குச் செல்வோருக்கு அலுவலகத்தில் அந்தஸ்து உயரும். மகிழ்ச்சி தரும் வாரம் இது.

  • சிந்தனைத்திறன் கூடும். எடுத்த காரியத்தை முடிக்கும் வரை சதா அதே நினைவுடன் இருப்பீர்கள். ஆசைகள் நிறைவேறும். உங்களுக்கு உதவிட யாருமின்றி தனிமைப்பட்டுள்ளதாக உணர்வீர்கள். எவரையும் சாராது தனித்துச் செயல்பட்டு வெற்றி காண வேண்டும் என்ற வைராக்யம் மனதில் குடிபுகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணவரவு சீராக இருக்கும். சேமிப்பு உயர்வடையும். உங்களது ஆலோசனை குடும்பத்தினர் மத்தியில் முக்கியத்துவம் பெறும். மாணவர்கள் உற்சாகத்துடன் தேர்வை எதிர்கொள்வார்கள். ஆடை, ஆபரணம் வாங்கும்போது அதன் தரத்தை பரிசோதித்து வாங்குவது அவசியம். நெருங்கிய நண்பர் ஒருவர் நம்பிக்கைக்கு மாறாக செயல்படுவதை அறிந்து மனம் வேதனைக்குள்ளாகும். உறவினர் வழியில் புதிய கலகம் வரும். பிள்ளைகளின் செயல்கள் உங்கள் கவுரவத்தை உயர்த்தும். வயிற்றுவலி சார்ந்த உபாதைகளால் உடல்நிலையில் சிரமம் உண்டாகும். கலைத்துறையினரின் செயல்திறன் கூடும். வேலை பார்ப்போர் அலுவலகத்தில் தங்கள் திறமை மூலம் புகழ் பெறுவர். தனித்திறமையால் முன்னேற்றம் காணும் வாரம் இது

  • சாத்தியமான தைரியம் கூடும். எந்த ஒரு காரியமும் உங்கள் சுய முயற்சிக்குப் பின்னரே முடிவிற்கு வரும். எளிதில் முடிய வேண்டிய காரியத்தில் கூட சற்று சிரமப்பட்டுதான் வெற்றி காண இயலும். எடுத்த காரியத்தைச் செய்து முடிப்பதை கவுரவமாக எண்ணுவீர்கள். சுறுசுறுப்புடன் இயங்கினாலும் அவ்வப்போது மனசஞ்சலம் கொள்வீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். வீட்டிற்குத் தேவையான நவீன பொருட்கள் வாங்குவீர்கள். மின் சாதனங்களைக் கையாளும்போது அதிக எச்சரிக்கை தேவை. உறவினரிடமிருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நண்பர்கள் முக்கியமான நேரத்தில் உதவி செய்வார்கள். பால்ய சிநேகிதர் ஒருவருடனான சந்திப்பு தன்னம்பிக்கையை கூட்டும். மாணவர்கள் நிறைய மாதிரித் தேர்வுகளை எழுதிப் பார்க்கவும். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளை பெறுவர். கழுத்து, தோள்வலி, நரம்புத்தளர்ச்சியால் அவதிப்பட நேரிடும். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் ஏட்டிக்குப் போட்டியான சூழலைக் காண்பர். துணிவுடன் செயலாற்ற வேண்டிய வாரம் இது

http://www.kathiravan.com/?page_id=1302
Share with your friends










Submit