இராசிபலன்கள் 17-02-2016 முதல் 23-02-2016 வரை

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

வார பலன், ஜாதகம், Weekly Astrology Tamil, Weekly Astrology In Tamil, Tamil Weekly Astrology, Tamil Astrology For This Week, Tamil Astrology Weekly Predictions, Astrology In Tamil, Free Tamil Astrology, Tamil Astrology Horoscope, Tamil Astrology Rashi, Tamil Astrology Rashi Chart

கதிரவனுக்காகக் கணித்து எழுதியவர் ஞானயோகி டாக்டர்.ப.இசக்கி,IBAM, RMP,DISM,தமிழ்நாடு, இந்தியா

 • சொந்த முயற்சியால் முதலிடத்தை பிடிப்பவர்களே! சூரியனும், புதனும் சாதகமாக இருப்பதால் உங்களின் நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பழைய வீட்டை இடித்து உங்கள் ரசனைக் கேற்ப மாற்றியமைப்பீர்கள். வி.ஐ.பிகள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். மகள் உங்களைப் புரிந்துக் கொள்வாள். மகனின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். தங்க ஆபரணம் வாங்குவீர்கள். உறவினர், தோழிகள் மத்தியில் அந்தஸ்து உயரும். என்றாலும் சனி, ராகுவின் போக்கு சரியில்லாததால் முடி உதிர்தல், இரத்த சோகை, கணுக்கால் வலி, வருங்காலம் குறித்த பயம், தோல்விமனப்பான்மை வந்துச் செல்லும். அரசியல்வாதிகளே! சகாக்களைப் பற்றிக் குறைக் கூற வேண்டாம். கன்னிப் பெண்களே! பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும். அனுபவ அறிவை பயன்படுத்தி முன்னேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 17, 19, 20 அதிஷ்ட எண்கள்: 2, 9 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, ரோஸ் அதிஷ்ட திசை: கிழக்கு

 • எங்கும் எப்போதும் உண்மையை விரும்புபவர்களே! புதனும், செவ்வாயும் சாதகமாக இருப்பதால் உங்களின் புகழ், கௌரவம் ஒருபடி உயரும். புது வேலை அமையும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். வீடு, மனை வாங்க முன் பணம் தருவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். குரு, ராகு, கேது மற்றும் சனி உங்களுக்கு சாதகமாக இல்லாததால் முன்கோபம், டென்ஷனால் முக்கியஸ்தர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். அடித்துப் போட்டார் போல உடம்பெல்லாம் அசதியாக இருக்கும். யாருக்கும் சாட்சி கையப்பமிட வேண்டாம். அரசியல்வாதிகளே! கட்சித் தலைமைக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். கன்னிப் பெண்களே! தவறான எண்ணங்களுடன் பழகியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். வியாபாரத்தில் குறைந்த லாபம் வைத்து விற்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும் என்றாலும் சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். எதிர்பார்ப்புகளில் சில நிறைவேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 18, 20, 21 அதிஷ்ட எண்கள்: 1, 4 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே அதிஷ்ட திசை: வடமேற்கு

 • பதவிக்காக ஆசைப்படாத நீங்கள், தகுதியிருந்தும் தள்ளியிருப்பீர்கள். புதனும், சனியும் சாதகமாக இருப்பதால் மனவலிமை அதிகரிக்கும். வி.ஐ.பிகளின் உதவியால் சில விஷயங்களை சாதித்துக் காட்டுவீர்கள். தோற்றப் பொலிவுக் கூடும். சிறுக சிறுக சேமிக்கத் தொடங்குவீர்கள். பூர்வீக சொத்தை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். சகோதரிக்கு இருந்த பிரச்னை தீரும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பள்ளி, கல்லூரி காலத் தோழியை சந்திப்பீர்கள். 5-ல் செவ்வாயும், 3-ல் குருவும் தொடர்வதால் அவ்வப்போது குழப்பமும், தடுமாற்றமும் வந்துச் செல்லும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணத்தின் பொருட்டு வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். அரசாங்க விஷயம் தாமதமாக முடியும். கன்னிப்பெண்களே! காதல் மற்றும் உயர்கல்வி சம்பந்தப்பட்ட குழப்பங்கள் நீங்கும். அரசியல்வாதிகளே! கட்சித் தலைமையுடனான மோதல்கள் விலகும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளின் அந்தரங்க விஷயங்களை வெளியிடாமல் தேக்கி வைப்பது நல்லது. புதிய பாதையில் பயணிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 19, 20, 21 அதிஷ்ட எண்கள்: 3, 5 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு அதிஷ்ட திசை: தெற்கு

 • களங்கமில்லாத பேச்சிற்கு சொந்தக்காரர்களே! குரு வலுவாக இருப்பதால் நினைத்தது நிறைவேறும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். எதிர்பார்த்திருந்த தொகை வந்து சேரும். கல்வியாளர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். வீடு கட்ட, வாங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். சனி 5-ல் நிற்பதால் பிள்ளைகளால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசித்து முடிவெடுக்கப்பாருங்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். கன்னிப் பெண்களே! பெற்றோர் உங்களின் விருப்பங்களை நிறைவேற்றுவார்கள். அரசியல்வாதிகளே! ஆதாரமில்லாமல் எதிர்கட்சிக்காரர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்வார்கள். சகிப்புத் தன்மையால் முன்னேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 17, 19, 21 அதிஷ்ட எண்கள்: 1, 3 அதிஷ்ட நிறங்கள்: கிளிப்பச்சை, பிங்க் அதிஷ்ட திசை: தென்மேற்கு

 • சுற்றியிருப்பவர்கள் சுகமாய் வாழ பாடுபடுபவர்களே! யோகாதிபதி செவ்வாய் 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் பெரிய திட்டத்தில் ஒன்று நிறைவேறும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். சகோதரிக்கு நிச்சயமாகும். அயல்நாட்டிலிருக்கும் தோழிகளால் ஆதாயமடைவீர்கள். 6-ல் சுக்ரனும், 7-ல் சூரியனும் நுழைந்திருப்பதால் வாகன விபத்து, சளித் தொந்தரவு, தொண்டை வலி வந்துச் செல்லும். எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் பழுதாகும். அரசாங்க விஷயம் தள்ளிப் போய் முடியும். ராசியிலேயே ராகுவும், குருவும் நிற்பதால் தோலில் நமைச்சல், பித்தம் அதிகரித்தல், மஞ்சள் காமாலை, காய்ச்சல் வந்துச் செல்லும். அரசியல்வாதிகளே! கட்சிக்குள் நடக்கும் கோஷ்டி பூசலில் தலையிடாமல் இருப்பது நல்லது. கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். அதிகாரிகள் சொல்வதை உடனே செயல்படுத்தப்பாருங்கள். ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 19, 20, 21 அதிஷ்ட எண்கள்: 4, 7 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம் அதிஷ்ட திசை: வடகிழக்கு

 • அடக்கு முறைக்கும், ஆணவத்துக்கும் அஞ்சாதவர்களே! சனி 3-ம் வீட்டிலும், சூரியன் 6-ல் அமர்ந்திருப்பதால் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். வழக்கில் வெற்றி உண்டு. வீடு கட்ட ப்ளான் அப்ரூவல் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. கடனாக கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். விலை உயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். சிலர் சொந்தமாக தொழில் தொடங்குவீர்கள். 2-ல் செவ்வாய் நிற்பதால் சகோதர வகையில் சங்கடங்கள், வீண் விவாதங்கள், கண் எரிச்சல் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. குரு 12-ல் மறைந்திருப்பதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச் செலவுகள் அதிகமாகும். திடீர் பயணங்கள் அதிகமாகும். அரசியல்வாதிகளே! அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். கன்னிப் பெண்களே! பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முக்கிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வியாபாரத்தில் பெரிய முதலீடுகள் செய்து விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொட்டது துலங்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 16, 19, 21 அதிஷ்ட எண்கள்: 5, 8 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், சில்வர் கிரே அதிஷ்ட திசை: தென்மேற்கு

 • உள்ளம் அழுதாலும் உதட்டில் புன்னகையை தவழவிடுபவர்களே! புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் புத்திசாலித்தனமாக செயல்பட்டு சவால்களை சமாளிப்பீர்கள். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வாகனத்தை மாற்றுவீர்கள். புது வேலை அமையும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். கேது 5-ல் தொடர்வதுடன், சூரியனும் 5-ல் நுழைந்திருப்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் வந்துப் போகும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தும் உட்கொள்ள வேண்டாம். பூர்வீக சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். கன்னிப் பெண்களே! உற்சாகமாக காணப்படுவீர்கள். உங்களிடம் மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கே சில ஆலோசனைகள் தருவீர்கள். புதிய பொறுப்புகள் கூடும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 18, 20, 21 அதிஷ்ட எண்கள்: 1, 4 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ப்ரவுன் அதிஷ்ட திசை: வடகிழக்கு

 • சமூக விழிப்புணர்வு கொண்டவர்களே! சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால் மதிப்பு, மரியாதைக் கூடும். அதிகார மையத்தில் இருப்பவர்கள் உதவுவார்கள். எதிர்பார்த்த பணம் வரும். பாதி முடிந்து அரைக்குறையாக இருந்த அரசு வேலைகள் உடனே முடியும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வீடு மாறுவீர்கள். சிலர் கூடுதல் அறைக் கட்டுவீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். ராசிநாதன் செவ்வாயின் போக்கு சரியில்லாததால் அடிவயிற்றில் வலி, சகோதர வகையில் மனத்தாங்கல், வீண் டென்ஷன், மறைமுக எதிர்ப்பு, சொத்துப் பிரச்னை வந்துச் செல்லும். ஜென்மச் சனி தொடர்வதால் உங்களைப் பற்றிய விமர்சனங்கள் தலைத்தூக்கும். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். அரசியல்வாதிகளே! சகாக்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். கன்னிப் பெண்களே! திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். இங்கிதமானப் பேச்சால் வெற்றி பெறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 18, 19, 20 அதிஷ்ட எண்கள்: 6, 9 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ஆலிவ் பச்சை அதிஷ்ட திசை: தென்கிழக்கு

 • பொதுவாக சட்ட திட்டங்களை மதிப்பவர்களே! சுக்ரன் சாதகமாக இருப்பதால் முகப்பொலிவுக் கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்த எண்ணுவீர்கள். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். சகோதரரின் மனசு மாறும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். ராகுவும், சனியும் சாதகமாக இல்லாததால் மறதியால் விலை உயர்ந்தப் பொருட்களை இழக்க நேரிடும். மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். அவ்வப்போது தூக்கம் குறையும். அரசியல்வாதிகளே! உங்களின் பொறுப்புணர்வை மேலிடம் பாராட்டும். கன்னிப் பெண்களே! போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரி உங்களிடம் அலுவலக ரகசியங்களைப் பகிர்ந்துக் கொள்வார். மதிப்பு, மரியாதைக் கூடும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 17, 19, 21 அதிஷ்ட எண்கள்: 2, 5 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு அதிஷ்ட திசை: வடக்கு

 • மனதில் பட்டதை பளிச்சென்று பேசுபவர்களே! ஆனால் கண், பல் வலி வந்து நீங்கும். யோகாதிபதி சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்ப வருமானம் ஓரளவு உயர வாய்ப்பிருக்கிறது. பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். நெருப்பு, மின்சாரத்தை கவனமாக கையாளுங்கள். மின்னணு சாதனங்கள் யாருக்கும் இரவல் தர வேண்டாம். சிலர் உங்களை விமர்சித்து பேசினாலும் நீங்கள் அமைதி காப்பது நல்லது. பெற்றோரால் அலைச்சல் இருக்கும். அரசியல்வாதிகளே! உங்களின் கோரிக்கையை மேலிடத்தில் ஏற்பார். கன்னிப்பெண்களே! உங்களின் தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் சந்தை நிலவரத்திற்கேற்ப மாற்றி யோசிப்பீர்கள். பழைய பாக்கி வசூலாகும். உத்யோகத்தில் அதிகாரிகளால் மறைமுகப் பிரச்னைகள் வந்துப் போகும். தைரியம், தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டிய வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 19, 20, 21 அதிஷ்ட எண்கள்: 3, 7 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மெரூண் அதிஷ்ட திசை: மேற்கு

 • படிப்பறிவுடன் பட்டறிவையும் பயன்படுத்தி பக்குமாகப் பேசுபவர்களே! ராசிக்குள் கேது நிற்பதுடன், சூரியனும் அமர்ந்திருப்பதால் வேனல் கட்டி, மாதவிடாய்க் கோளாறு, அடிவயிற்றில் வலி வந்து நீங்கும். உணவில் காய், கனிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். வேலைச்சுமை அதிகரிக்கும். பயன்படுத்த முடியாமல் போன நல்ல வாய்ப்புகளை நினைத்து கலங்குவீர்கள். குரு சாதகமாக இருப்பதால் சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். ஒரளவு பணவரவு உண்டு. சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். சமையலறையை நவீனமாக்குவீர்கள். உறவினர், தோழிகள் வீடு தேடி வருவார்கள். பயணங்களால் திருப்தி உண்டாகும். அரசியல்வாதிகளே! எந்த கோஷ்டியிலும் சேராமல் நடுநிலையாக இருக்கப்பாருங்கள். கன்னிப் பெண்களே! நீண்ட நாள் கனவு நனவாகும். வியாபாரத்தில் கமிஷன், துணி வகைகளால் லாபம் உண்டு. வேலையாட்களால் நிம்மதி குறையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். விவாதங்களை தவிர்க்க வேண்டிய வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 15, 20, 21 அதிஷ்ட எண்கள்: 5, 8 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கரு நீலம் அதிஷ்ட திசை: தென்மேற்கு

 • மன உறுதியும், விடாமுயற்சியும் கொண்டவர்களே! ராகு 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் எதையும் சாதிப்பீர்கள். வங்கியில் குறைந்த வட்டிக் கடன் கிடைக்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பூர்வீக சொத்தை விரிவுப்படுத்தி, அழகுப்படுத்துவீர்கள். புதிதாக வாகனம் வாங்குவீர்கள். வெள்ளிச் சாமான்கள் வாங்குவீர்கள். வேற்றுமதத்தவர்கள், வெளிநாட்டிலிருப்பவர்களால் உதவிகள் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். 6-ல் ராசிநாதன் குரு மறைந்திருப்பதாலும், 8-ல் செவ்வாய் நிற்பதாலும் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வழக்கில் அலட்சியம் வேண்டாம். நெடுநாட்களாக நீங்கள் நம்பிக் கொண்டிருந்தவர்களெல்லாம் உங்களுக்கு துரோகம் செய்ய வாய்ப்பிருக்கிறது. அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனே செலுத்தப்பாருங்கள். அரசியல்வாதிகளே! தலைமையிடம் சிலர் உங்களைப் பற்றி புகார் பட்டியல் வாசிப்பார்கள். கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் கவனம் செலுத்துங்கள். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் அதிருப்தி உண்டாகும். தொலை நோக்குச் சிந்தனையால் முன்னேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 17, 18, 21 அதிஷ்ட எண்கள்: 1, 7 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு அதிஷ்ட திசை: தெற்கு

http://www.kathiravan.com/?page_id=1302
Share with your friends


Submit