இராசிபலன்கள் 15-11-2016 முதல் 22-11-2016 வரை

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

வார பலன், ஜாதகம், Weekly Astrology Tamil, Weekly Astrology In Tamil, Tamil Weekly Astrology, Tamil Astrology For This Week, Tamil Astrology Weekly Predictions, Astrology In Tamil, Free Tamil Astrology, Tamil Astrology Horoscope, Tamil Astrology Rashi, Tamil Astrology Rashi Chart

கதிரவனுக்காகக் கணித்து எழுதியவர் ஜோதிடமணி பிரம்மஸ்ரீ ரகுநாத ஐயர் தமிழ்நாடு, இந்தியா.

 • ஆறில் குரு. நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அவர்கள் உங்களுக்கு வழிகாட்டிகளாகவும் செயல்படுவார்கள். கடன் அனுமதிக்காகக் காத்திருந்தவர்களுக்கு அது துரிதமாகக் கிடைக்கும். ஏற்கனவே வாங்கிய கடன்களை அடைக்கும் முயற்சி சுலபமாக நிறைவேறும். பதினோராம் வீட்டை ராகு பார்ப்பதால் வெளிநாடு சம்பந்தமான நன்மைகளும் லாபங்களும் கிடைக்கும். ஏழில் சூரியன் இருப்பதால் கணவன்-மனைவிக்குள் அதிகம் அனுசரித்துச் செல்லவேண்டியது வரும். எட்டாம் வீட்டில் புதன் இருப்பதால் ஆரோக்யம் நல்ல முறையில் இருக்கும்.

 • ஒன்பதாம் வீட்டில் செவ்வாய் இருப்பதால் தந்தையின் வாழ்வில் திடீர் நிகழ்ச்சி ஒன்று நிகழும். ஐந்தாம் வீட்டில் குரு இருப்பதால் குழந்தைகள் வெற்றியடைவார்கள்! பத்தாம் வீட்டில் கேது இருப்பதால் உங்கள் அறிவாற்றலால் உத்யோகம் சிறக்கும். நான்கில் ராகு என்பதால் வெளிநாட்டில் கல்வி கற்க எண்ணம் கொண்டவர்களுக்கு அந்த எண்ணம் நிறைவேறும். சனி பார்வை ராசிக்கு இருப்பதால் எதிலும் சிறு தடங்கல்களும் தாமதங்களும் இருந்தாலும் குரு பகவான் நல்ல நிலையில் இருப்பதால் பிரச்னையே இருக்காது. ஏழாம் வீட்டில் புதன் இருப்பதால் ஆரோக்யம் நல்ல முறையில் இருக்கும்.

 • ஏழில் சுக்கிரன் இருப்பதால் கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியான நெருக்கம் நிலவும். நான்காம் வீட்டில் குரு இருப்பதால் புதிய வீடு அல்லது வாகனம் வாங்குவீர்கள். மாணவர்களுக்கு இந்த காலகட்டத்தில் படிப்பில் ஆர்வம் அதிகரித்து வெற்றி பெற ஆரம்பிப்பார்கள். எட்டாம் வீட்டுக்கு குருவின் பார்வை இருப்பதால் ஆரோக்யம் நல்ல முறையில் இருக்கும். பத்தாம் வீட்டுக்கு குருபார்வை இருப்பதால் உத்யோகம் மற்றும் தொழில் சிறக்கும். லாபம் கூடும். ராசிக்கு சுக்கிரன் பார்வை கிடைப்பதால் கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும். காதல் வெற்றியடையும்.

 • ஆறாம் வீட்டில் சுக்கிரன் இருப்பதால் நண்பர்களுடன் நல்ல முறையில் நட்பு நிலவும். எதிர்பாலினத்தைச் சேர்ந்த நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஐந்தாம் வீட்டில் புதன் இருப்பதால் குழந்தைகள் புத்திசாலித்தனமாக செயல்பட்டு பாராட்டும், புகழும் பெறுவார்கள். ஒன்பதை குரு பார்க்கிறார். தந்தைக்கு லாபங்கள். தந்தையால் லாபங்கள் ஆகியவை ஏற்படும். ஐந்தில் சனி இருப்பதால் குழந்தைகளின் முன்னேற்றம் சற்று மெதுவாக இருக்க வாய்ப்பு உள்ளது. இரண்டில் ராகு இருப்பதால் குடும்பத்தில் யாரேனும் வெளிநாட்டிற்குச் செல்வார்கள்.

 • பத்தாம் வீட்டிற்கு குருவின் பார்வை உள்ளது. உத்யோகத்தில் நல்ல முறையில் முன்னேற்றம் இருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். ஐந்தில் உள்ள சுக்கிரன் குழந்தைகளை புகழ் பெற வைப்பார். நான்கில் புதன் இருப்பதால் பசுமை சூழ்ந்த வீடு வாங்க வாய்ப்புள்ளது. ஆறில் செவ்வாய். வீரச் செயல்கள் செய்து பாராட்டைப் பெறுவீர்கள். குரு பகவான் இரண்டில் இருப்பதால் குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். பேச்சினால் நன்மை அதிகரிக்கும். குடும்பத்தில் புதிய நபர்கள் சேருவார்கள். ராகு உங்கள் ராசியின் மீது அமர்ந்திருப்பதால் வெளிநாட்டு விவகாரங்களில் ஈடுபாடு அதிகரித்து நன்மை தரும்.

 • நாலில் சுக்கிரன். எனவே, கல்வி நிலையங்களில் மேடையேறிப் பாராட்டும் பரிசுகளும் கைதட்டல்களும் வாங்குவீர்கள். ஐந்தில் செவ்வாய் இருப்பதால் குழந்தைகள் புகழ் அடைவார்கள். குருபகவான் உங்கள் ராசியின்மீது அமர்ந்திருக்கிறார். ஐந்தாம் வீட்டிற்கு குரு பார்வை இருப்பதால் குழந்தைகள் வாழ்வில் முன்னேற்றம் இருக்கும். இதுவரை தள்ளிப் போய்க் கொண்டிருந்த கோயில் பயணங்கள் இப்போது அமையும். இரண்டில் சூரியன் பலவீனமாக இருப்பதால் குடும்பத்தில் சிற்சில குழப்பங்கள் ஏற்படக் கூடும்

 • நான்காம் வீட்டுக்கு குரு பார்வை இருப்பதால் தாயாருக்கு வீடு வாங்கும் யோகம் உண்டு. கல்வியில் மேம்பாடு அடைவீர்கள். இரண்டாம் வீட்டில் புதன் இருப்பதால் புத்திசாலித்தனமான பேச்சால் நன்மை அதிகரிக்கும். நான்காம் வீட்டில் செவ்வாய் இருப்பதால் புதிய வீடு வாங்குவீர்கள். மருத்துவக் கல்வி பயிலுபவர்கள் சிறந்த முறையில் வெற்றி பெறுவீர்கள். இரண்டில் சனி இருப்பதால் உங்கள் நிர்வாகத்திறமை அதிகரிக்கும். சனி இரண்டாம் வீட்டில் இருப்பதால் குழந்தைகளுக்கு நன்மை ஏற்படும்.

 • மூன்றாம் வீட்டுக்கு குருவின் பார்வை இருப்பதால் மூத்த சகோதர, சகோதரிகளின் வாழ்வில் நன்மை அதிகரிக்கும். ராசியின் மீது புதன் இருப்பதால் உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும்படியான காரியங்களில் ஈடுபடுவீர்கள். அவை உங்களின் திறமையையும் புகழையும் உலகிற்குப் புரிய வைக்கும். பதினோராம் வீட்டில் குரு இருப்பதால் லாபமும் வருமானமும் அதிகரிக்கும். பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும்.

 • இரண்டாம் வீட்டில் செவ்வாய் இருப்பதாலும், ஏழரைச் சனியின் பிடியில் இருப்பதாலும் பேச்சில் மிகுந்த கவனம் தேவை. எனினும் ராசியின் மீது சுக்கிரன் இருப்பதால் உங்கள் கவர்ச்சி அம்சம் அதிகரித்து செல்வாக்கு கூடும். இரண்டாம் வீட்டுக்கு சனி பகவானின் பார்வை கிடைத்திருப்பதால் குடும்ப நிகழ்வுகளில் சற்று மெதுவான போக்கு இருக்கலாம். அதைக் கண்டு பயம் எதுவும் வேண்டாம்.

 • இரண்டாம் வீட்டுக்கு ராகுவின் பார்வை இருப்பதால் குடும்பத்தில் யாரேனும் வெளிநாடு செல்வார்கள். எட்டில் ராகு இருப்பதால் கூடா நட்பு கேடாய் முடியும். ஆரோக்யத்தைக் கெடுக்கும் பழக்கம் வேண்டாம். ராசியின்மீது செவ்வாய் அமர்ந்திருப்பதால் திடீர் நிகழ்வுகள் ஏற்படும். குரு ஒன்பதாம் வீட்டில். உங்கள் தந்தையின் வாழ்விலும் உங்கள் வாழ்விலும் மகிழ்ச்சிகரமான மாறுதல்களை ஏற்படுத்துவார். தந்தைக்கு இவ்வளவு காலம் காத்திருந்த தடை ஒன்று விலகுவதன் மூலம் நிம்மதியும் மகிழ்ச்சியும் நன்மையும் லாபமும் ஏற்படும்

 • நான்காம் வீட்டுக்கு புதனின் பார்வை இருப்பதால் நீங்களோ தாயாரோ பசுமை சூழ்ந்த வீடு வாங்க வாய்ப்புள்ளது. குரு பகவான் பன்னிரண்டாம் வீட்டைப் பார்ப்பதால் சுபமான செலவுகள் ஏற்படும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்காக செலவழிப்பீர்கள். அதனால் நன்மையும் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும், பத்தாம் வீட்டில் கிரகங்கள் கூடியிருப்பதால் உத்யோகத்தில் பலவிதமான பணிகளைச் செய்ய வேண்டியிருக்கும். அதனால் அதிக லாபம் இல்லை என்பது போன்ற பிரமை ஏற்படும். எனினும் பத்தாம் வீட்டில் புதன் இருப்பதால் தொழிலில் மிகுந்த முன்னேற்றம் ஏற்படும்.

 • புதன் ஒன்பதாம் வீட்டில் இருப்பதால் உடல் நலக்குறைவு எந்த அளவு தீவிரமாக இருந்தாலும் அந்த அளவு பிரச்னையின்றி எளிதாக குணமாகி நிம்மதி அளிக்கும். பத்தாம் வீட்டில் சுக்கிரன் இருப்பதால் வேலை பார்க்கும் இடத்தில் பாராட்டும் புகழும் கிடைக்கும். குரு ஆறில் இருப்பதால் குடும்பத்தில் சுப காரியங்கள் நடப்பதில் சிறு குழப்பங்களோ தடைகளோ தாமதங்களோ ஏற்படக் கூடும். ராசிக்கு குருவின் பார்வை இருப்பதால் எல்லாம் நல்ல முறையில் முடியும். ராசியைப் பல கிரகங்கள் பார்ப்பதால் வாழ்க்கை ஒருநாள் இருந்தாற்போல் மற்றொரு நாள் இருக்காது. உங்கள் ராசிக்கே குரு பார்வை இருப்பதால் எதுமே நலமாய் முடியும்.

http://www.kathiravan.com/?page_id=1302
Share with your friends


Submit