இராசிபலன்கள் 15-08-2016 முதல் 21-08-2016 வரை

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

வார பலன், ஜாதகம், Weekly Astrology Tamil, Weekly Astrology In Tamil, Tamil Weekly Astrology, Tamil Astrology For This Week, Tamil Astrology Weekly Predictions, Astrology In Tamil, Free Tamil Astrology, Tamil Astrology Horoscope, Tamil Astrology Rashi, Tamil Astrology Rashi Chart

கதிரவனுக்காகக் கணித்து எழுதியவர் ஜோதிடமணி பிரம்மஸ்ரீ ரகுநாத ஐயர் தமிழ்நாடு, இந்தியா

 • கடந்த காலத்தை மறக்காதவர்களே! கேது லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் மனதில் தோன்றும். ஷேர் லாபம் தரும். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். வாகனம் வாங்குவீர்கள். 17-ந் தேதி முதல் சூரியன் 5-ல் ஆட்சி பெற்று அமர்வதால் பிள்ளை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகள் தங்கள் தவறை உணருவார்கள். பூர்வீக சொத்தால் வருமானம் வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். புது வேலைக் கிடைக்கும். குலதெய்வ கோவிலுக்கு சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வந்துப் பேசுவார்கள். 6-ல் குருவும், 8-ல் சனியும் நிற்பதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச் சோர்வு வந்து நீங்கும். மறைமுக விமர்சனங்கள் அதிகமாகும். தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். அரசியல்வாதிகளே! கட்சி மேல்மட்டம் உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைக்கும். கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். வீரியத்தை விட்டு விட்டு காரியத்தில் கவனம் செலுத்தும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 15, 16, 19 அதிஷ்ட எண்கள்: 4, 6 அதிஷ்ட நிறங்கள்: நீலம், சில்வர்கிரே அதிஷ்ட திசை: வடமேற்கு

 • செய்நன்றி மறவாதவர்களே! சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால் எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். சிலர் வீடு மாறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. பணப்புழக்கம் அதிகரிக்கும். குரு 5-ல் நிற்பதால் குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். பூர்வீக சொத்து கைக்கு வரும். தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். கடன் பிரச்சனைகள் ஒரு பக்கம் விரட்டினாலும் இங்கிதமாகப் பேசி வட்டியை தருவீர்கள். நீண்ட காலமாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள். 7-ல் சனியும், 4-ல் ராகுவும் தொடர்வதால் ஏமாற்றம், மறதியால் பிரச்னை, வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள், வீண் பழி வந்துச் செல்லும். அரசியல்வாதிகளே! கோஷ்டி பூசலையும் தாண்டி முன்னேறுவீர்கள். கன்னிப் பெண்களே! பெற்றோர் உங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளால் தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உயரதிகாரிகளும், சக ஊழியர்களும் மதிக்கத் தொடங்குவார்கள். நிதானித்து செயல்படுவதால் நினைத்ததை சாதிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 17, 18, 21 அதிஷ்ட எண்கள்: 1, 9 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, வெள்ளை அதிஷ்ட திசை: வடக்கு

 • வருங்காலத்தைப் பற்றி அதிகம் யோசிப்பவர்களே! சுக்ரனும், புதனும் சாதகமாக இருப்பதால் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். தள்ளிப் போன அரசு காரியங்கள் விரைந்து முடியும். தோழிகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குரு 4-ல் அமர்ந்திருப்பதால் மனக்குழப்பம், முன்கோபம், தாயாருடன் விவாதங்கள், தாழ்வுமனப்பான்மை, வீண் வதந்திகளெல்லாம் வந்துச் செல்லும். 6-ல் சனியும், 3-ல் ராகுவும் வலுவாக அமர்ந்திருப்பதால் சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். வேற்றுமதத்தவர்களால் ஆதாயம் உண்டு. நீண்ட நாளாக எதிர்பார்த்த விசா வந்து சேரும். அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கடையை உங்கள் ரசனைக்கேற்றபடி மாற்றுவீர்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சமயங்களில் உங்களை கடிந்துப் பேசினாலும் அன்பாக நடந்து கொள்வார். மாறுபட்ட அணுகுமுறையால் முன்னேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 19, 20, 21 அதிஷ்ட எண்கள்: 3, 7 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், ஆரஞ்சு அதிஷ்ட திசை: தென்கிழக்கு

 • சமயோஜித புத்தி அதிகமுள்ளவர்களே! செவ்வாய் 5-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் உங்களின் நிர்வாகத்திறன் அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. முன்பணம் தந்து முடிக்காமல் இருந்த வீடு, மனையை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். சகோதரிக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். சுக்ரனும், புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் புது டிசைனில் நகை வாங்குவீர்கள். உறவினர், தோழிகளின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். சூரியன் ராசிக்குள் நிற்பதால் முன்கோபம், மாதவிடாய் கோளாறு, அடிவயிற்றில் வலி வந்து நீங்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். குரு 3-ம் இடத்தில் மறைந்திருப்பதால் புது முயற்சிகளில் தாமதம், வீண் டென்ஷன், செலவினங்கள், வேலைச்சுமை வந்துப் போகும். அரசியல்வாதிகளே! எதிர்ப்புகள் அடங்கும். கட்சித் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். கன்னிப் பெண்களே! பள்ளிக் கல்லூரி காலத் தோழியை சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புது சலுகைத் திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களை கவருவீர்கள். உத்யோகத்தில் இடையூறுகள் வரும். சவால்களை சமாளிக்க வேண்டிய வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 15, 16, 21 அதிஷ்ட எண்கள்: 4, 5 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், மஞ்சள் அதிஷ்ட திசை: கிழக்கு

 • யாருக்காகவும் கொள்கையை மாற்றிக் கொள்ளாதவர்களே! ராசிக்கு 2-ல் குருபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். இழுபறியாக இருந்து வந்த வேலைகள் முடிவடையும். குடும்பத்தில் அமைதி திரும்பும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளை கூடாப்பழக்கங்களிலிருந்து மீட்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். 17-ந் தேதி முதல் உங்கள் ராசிநாதன் சூரியன் ஆட்சி பெற்று உங்கள் ராசியிலேயே அமர்வதால் புகழ், கௌரவம் உயரும். எதிர்ப்புகள் அடங்கும். ஆட்சியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வீடு, மனை வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். வாகனத்தை சரி செய்வீர்கள். ராசியிலேயே ராகுவும், 4-ல் சனியும் தொடர்வதால் நெஞ்சு எரிச்சல், வாயுக் கோளாறு, வயிற்று உபாதை, பணப்பற்றாக்குறை, எதிர்மறை எண்ணங்கள் வந்துப் போகும். அரசியல்வாதிகளே! ஆதாரமின்றி எதிர்கட்சியினரை விமர்சிக்க வேண்டாம். கன்னிப் பெண்களே! பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். சிலர் புதுக் கிளைகள் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைக் கிடைக்கும். பிரபலங்களின் உதவியால் முன்னேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 15, 16, 17 அதிஷ்ட எண்கள்: 5, 8 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், கிரே அதிஷ்ட திசை: தென்மேற்கு

 • கலகலப்பாக பேசி சாதிப்பவர்களே! சனியும், கேதுவும் வலுவாக இருப்பதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டு மனை வாங்குவீர்கள். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்புக் கிடைக்கும். ஆன்மிகப் பயணங்கள் சென்று வருவீர்கள். பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். ஜென்ம குரு தொடர்வதால் பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரம்மை வந்து நீங்கும். எளிதில் செரிமானமாகும் உணவுகளை உட்கொள்ளுங்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன் வழக்கறிஞரை கலந்தாலோசிப்பது நல்லது. யூரினரி இன்பெக்ஷன், அலர்ஜி, அசதி, சோர்வு, கட்டை விரலில் அடிப்படுதல் வந்துப் போகும். திடீர் பயணம் அதிகரிக்கும். அரசு காரியங்கள் தாமதமாகி முடியும். அரசியல்வாதிகளே! உங்களின் செயல்பாடுகளை மேலிடம் உற்று நோக்கும். கன்னிப் பெண்களே! காதல் கசந்து இனிக்கும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமானாலும் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். திட்டமிட்டு செயல்படுவதால் பிரச்சனைகள் குறையும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 16, 18, 21 அதிஷ்ட எண்கள்: 1, 5 அதிஷ்ட நிறங்கள்: சிவப்பு, வெளிர்நீலம் அதிஷ்ட திசை: மேற்கு

 • பாகுபாடு பார்க்காமல் பழகுபவர்களே! சூரியன் வலுவான வீடுகளில் செல்வதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். நாடாளுபவர்களின் நட்பு கிட்டும். அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்க எதிர்பார்த்த வங்கியிலிருந்து கடன் கிடைக்கும். பதவிகள் தேடி வரும். அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடியும். புது வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். வழக்கு சாதகமாகும். ராசிக்கு 12-ல் குரு மறைந்திருப்பதால் பழைய கடன் நினைத்த கவலைகள், வீண் விரையம், எதிலும் ஆர்வமின்மை, திடீர் பயணங்கள், செலவுகள், வருங்காலம் குறித்த கவலைகளெல்லாம் வந்துச் செல்லும். அரசியல்வாதிகளே! சிலர் உங்களைப் பற்றி தவறான வதந்திகளை மேலிடத்திற்கு கொண்டு செல்லக்கூடும். விழிப்புடன் இருங்கள். கன்னிப் பெண்களே! போலியாக பழகியவர்களிடமிருந்து ஒதுங்குவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதிலும் ஏற்றம் நிறைந்த வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 17, 19, 21 அதிஷ்ட எண்கள்: 2, 6 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை அதிஷ்ட திசை: தென்கிழக்கு

 • நினைத்ததை மறைக்காமல் பேசுபவர்களே! ராசிக்கு லாப வீட்டில் குரு அமர்ந்திருப்பதால் தொட்ட காரியங்கள் துலங்கும். வி.ஐ.பிகளின் நட்பு கிட்டும். விசேஷங்களால் வீடு களைக்கட்டும். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். ஷேர் பணம் தரும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். புது பொறுப்புகள் தேடி வரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாத குணம் தளரும். தங்க ஆபரணம் வாங்குவீர்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். புது வேலைக் கிடைக்கும். உங்கள் ரசனைக் கேற்ற வீட்டிற்கு மாறுவீர்கள். உறவினர் மற்றும் தோழிகளில் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சர்ப்ப கிரகங்கள் மற்றும் சனியின் போக்கு சரியில்லாததால் உள்மனதில் ஒருபயம், சின்ன சின்ன போராட்டம் வந்துப் போகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். அரசியல்வாதிகளே! கட்சித் தலைமை பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். கன்னிப் பெண்களே! காதல் வேறு, நட்பு வேறு என்பதை உணருவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும். உத்யோகத்தில் உயர்வு உண்டு. அதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். தடைகளை தகர்த்தெறியும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 19, 20, 21 அதிஷ்ட எண்கள்: 7, 9 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆலிவ்பச்சை அதிஷ்ட திசை: வடக்கு

 • நெருக்கடி நேரத்திலும் தன்னிலை தவறாதவர்களே! கேது 3-ம் வீட்டில் நிற்பதால் மாறுபட்ட அணுகு முறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சிறுக சிறுக சேமித்து வைத்ததில் புறநகர் பகுதியிலாவது ஒரு கிரவுண்டு வீட்டு மனை வாங்க முயற்சி செய்வீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வழக்கில் நல்ல மாற்றம் வரும். வேற்றுமதத்தவர், மொழியினர்களின் சந்திப்பால் திடீர் திருப்பம் உண்டாகும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். குரு 10-ல் நிற்பதால் வேலைச்சுமை, மறைமுக அவமானம், தர்ம சங்கடமான சூழ்நிலைகளெல்லாம் வந்துப் போகும். அநாவசியமாக மற்றவர்களுக்கு உறுதிமொழி தர வேண்டாம். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். ஏழரைச் சனி தொடர்வதால் மறதியால் விலை உயர்ந்தப் பொருட்களை இழக்க நேரிடும். பழைய கசப்பான சம்பவங்களை நினைவுக் கூர்ந்து டென்ஷனாகாதீர்கள். அரசியல்வாதிகளே! எதிர்கட்சியினரை கேள்வி மேல் கேள்வி கேட்டு துலைத் தெடுப்பீர்கள். கன்னிப் பெண்களே! கல்யாணம் கூடி வரும். காதல் விவகாரத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் அலைச்சலும், இடமாற்றங்களும் வரக்கூடும். சாதுர்யமான பேச்சால் சாதிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 15, 16, 18 அதிஷ்ட எண்கள்: 2, 3 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், இளம்சிவப்பு அதிஷ்ட திசை: வடகிழக்கு

 • தன்மானம் தவறாதவர்களே! சனியும், செவ்வாயும் வலுவாக அமர்ந்திருப்பதுடன், குருவும் சாதகமாக இருப்பதால் புதிய திட்டங்கள் நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பூர்வீக சொத்து பங்கை கேட்டு வாங்குவீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசாங்க அனுமதி கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். உறவினர், தோழிகளுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். புது வேலைக் கிடைக்கும். சகோதரங்கள் பக்கபலமாக இருப்பார்கள். பழைய கடன் பிரச்சனையை தீர்க்க புது வழி பிறக்கும். சர்ப்ப கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இல்லாததால் மனஇறுக்கம், முன்கோபம், வீண் வாக்குவாதம், ஒருவித படபடப்பு வந்துச் செல்லும். அரசியல்வாதிகளே! கோஷ்டி பூசலாலும், உங்களைப் பற்றிய வதந்திகளாலும் உங்கள் புகழ் குறையும். கன்னிப் பெண்களே! நிஜம் எது, நிழல் என்பதை தெளிவாக உணர்வீர்கள். காதல் குழப்பங்கள் நீங்கும். உயர்கல்வியில் வெற்றி கிட்டும். வியாபாரத்தில் புது முயற்சிகள் பலிதமாகும். பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களைப் பற்றி நல்ல இமேஜ் உண்டாகும். புதிய பாதை தென்படும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 15, 16, 21 அதிஷ்ட எண்கள்: 5, 8 அதிஷ்ட நிறங்கள்: கிரே, பிஸ்தாபச்சை அதிஷ்ட திசை: தெற்கு

 • மகிழ்வித்து மகிழ்பவர்களே! சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளிடம் மறைந்திருந்த திறமைகளை இனம்கண்டறிந்து உற்சாகப்படுத்துவீர்கள். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். உறவினர், தோழிகளின் வருகையால் உற்சாகமடைவீர்கள். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். சகோதரி ஆதரிப்பார். சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததாலும், 8-ல் குரு மறைந்திருப்பதாலும் பல வருடங்கள் நெருக்கமாக பழகியவர்கள் கூட உங்களை குறை கூறுவார்கள். உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது. அரசியல்வாதிகளே! கட்சி மேல்மட்டத்தைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். கன்னிப் பெண்களே! உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். வேலையாட்கள் உங்களிடமிருந்து தொழில் யுக்திகளை கற்றுக் கொள்வார்கள். உத்யோகத்தில் அதிகாரிகளின் அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்ல வேண்டாம். சுற்றியிருப்பவர்களின் உள்மனசை அறியும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 15, 16, 17 அதிஷ்ட எண்கள்: 4, 7 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, வெள்ளை அதிஷ்ட திசை: வடக்கு

 • தொட்ட காரியத்தை ஓய்வெடுக்காமல் முடிப்பவர்களே! குரு 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்ப்பதால் அழகு, ஆரோக்யம் கூடும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். வருமானம் உயரும். கல்யாண முயற்சிகள் சாதகமாக முடியும். விலை உயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகள் நல்ல வழிக்கு திரும்புவார்கள். 17-ந் தேதி முதல் சூரியன் 6-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்வதால் எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அரசியலில் செல்வாக்குக் கூடும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். சுக்ரனும், புதனும் 6-ல் மறைந்திருப்பதால் சிறுசிறு விபத்து, தொண்டை வலி, சையனஸ் தொந்தரவு, கணவருக்கு அலைச்சல், வாகனப் பழுது வந்துச் செல்லும். அரசியல்வாதிகளே! வீண் பேச்சில் காலம் கழிக்காமல் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது. கன்னிப் பெண்களே! காதல் கசந்து இனிக்கும். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து புது முடிவுகள் எடுப்பீர்கள். பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் கடின உழைப்பை மூத்த அதிகாரிகள் புரிந்துக் கொள்வார்கள். தன் பலம் பலவீனம் உணர்ந்து செயல்படும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 15, 17, 19 அதிஷ்ட எண்கள்: 1, 6 அதிஷ்ட நிறங்கள்: அடர்நீலம், ப்ரவுன் அதிஷ்ட திசை: தெற்கு

http://www.kathiravan.com/?page_id=1302
Share with your friends


Submit