இராசிபலன்கள் 15-06-2016 முதல் 21-06-2016 வரை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]
வார பலன், ஜாதகம், Weekly Astrology Tamil, Weekly Astrology In Tamil, Tamil Weekly Astrology, Tamil Astrology For This Week, Tamil Astrology Weekly Predictions, Astrology In Tamil, Free Tamil Astrology, Tamil Astrology Horoscope, Tamil Astrology Rashi, Tamil Astrology Rashi Chart

கதிரவனுக்காகக் கணித்து எழுதியவர் ஜோதிடமணி பிரம்மஸ்ரீ ரகுநாத ஐயர் தமிழ்நாடு, இந்தியா

 • மனதில் பட்டதை பளீச்சென்று பேசுபவர்கள் நீங்கள். லாப வீட்டில் கேது வலுவாக அமர்ந்திருப்பதால் கடினமான காரியங்களை எளிதாக முடிப்பீர்கள். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். வி.ஐ.பிகள் மத்தியில் செல்வாக்கு கூடும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அதிகாரிகள் உதவுவார்கள். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். வங்கிக் கடன் கிடைக்கும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். ஷேர் மூலம் பணம் வரும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். குரு 5-ல் அமர்ந்திருப்பதால் சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். தங்க ஆபரணம் வாங்குவீர்கள். உயர்கல்வி தடைகள் நீங்கும். சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் கௌரவமும் ஒருபடி உயரும். புது நட்பு மலரும். அஷ்டமத்துச் சனி தொடர்வதால் உள்மனதில் ஒருபயம், சின்ன சின்ன போராட்டம் வந்துப் போகும். 15-ந் தேதி முதல் சூரியன் 3-ல் நுழைவதால் அரசால் அனுகூலம் உண்டு. அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். ராசிநாதன் செவ்வாய் 8-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருந்தாலும் சனியுடன் நிற்பதால் முன்கோபம், இரத்த அழுத்தம், அடிவயிற்றில் வலி வந்து நீங்கும். கன்னிப் பெண்களே! உங்களின் புதுத் திட்டங்களை பெற்றோர் ஆதரிப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். வேலையாட்களால் வியாபாரத்தின் தரம் உயரும். பங்குதாரர்களால் பிரச்னைகள் வெடிக்கும். கடையை விரிவுப்படுத்திக்கட்ட முடிவெடுப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சில ஊழியர்களுக்காக மேலதிகாரியிடம் பரிந்துப் பேசுவீர்கள். கலைத்துறையினரே! கௌரவிக்கப்படுவீர்கள். எடுத்த காரியங்களை முடித்துக் காட்டும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 14, 16, 18 அதிஷ்ட எண்கள்: 1, 5 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மெரூண் அதிஷ்ட திசை: தென்கிழக்கு

 • எதையும் திட்டமிட்டு செய்பவர்களே! ராசிநாதன் சுக்ரனும், பூர்வ புண்யாதிபதி புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் தடைப்பட்ட வேலைகளை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். வீடு மாற வேண்டுமென நினைப்பீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வாகனம் பழுதாகி சரியாகும். ஓரளவு பணவரவு உண்டு என்றாலும் சேமிக்க முடியாதபடி செலவுகளும் இருக்கும். 4-ல் குருவும், ராகுவும் நீடிப்பதால் உங்கள் திறமை மீது அவ்வப்போது சந்தேகம் வரும். கை, கால் மரத்துப் போகும். மூச்சுத் திணறல் வந்துப் போகும். ஆன்மீகத்தை மனம் நாடும். 15-ந் தேதி முதல் சூரியன் ராசியை விட்டு விலகி 2-ல் அமர்வதால் பேச்சால் பிரச்னை, பார்வைக் கோளாறு வரக்கூடும். வருமான வரி செலுத்துவதில் தாமதம் வேண்டாம். கண்டகச் சனி தொடர்வதால் வீண் அலைச்சல், மனைவிக்கு தைராய்டு பிரச்னை, மாதவிடாய்க் கோளாறு வந்துச் செல்லும். என்றாலும் சப்தமாதிபதி செவ்வாய் 7-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். கன்னிப் பெண்களே! பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த விளம்பர யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி நெருக்கமாக இருந்தாலும், உடன்பணிபுரிபவர்கள் குறை கூறத்தான் செய்வார்கள். கலைத்துறையினரே! உங்களின் கடின உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். மன உறுதியுடன் போராடி வெல்லும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 13, 16, 19 அதிஷ்ட எண்கள்: 4, 7 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, நீலம் அதிஷ்ட திசை: தெற்கு

 • யார் எந்த உதவி கேட்டாலும் உடனடியாக செய்து கொடுக்கும் குணம் கொண்ட மிதுன ராசி நண்பர்களே! உங்களுடைய ராசிநாதன் புதனும், பூர்வ புண்யாதிபதி சுக்ரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் புதிய எண்ணங்கள் செயல் வடிவம் பெறும். வி.ஐ.பிகள் உதவுவார்கள். உறவினர், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். குழந்தை பாக்யம் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பூர்வீக சொத்தை விற்று புது வீடு வாங்குவீர்கள். 15-ந் தேதி முதல் சூரியன் ராசிக்குள் நுழைவதால் முன்கோபம், அலைச்சல், காரியத் தாமதம், சையனஸ் தொந்தரவு, தொண்டை வலி வந்துச் செல்லும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். சனியும், செவ்வாயும் 6-ல் நிற்பதால் வழக்கு சுமூகமாகும். சகோதரங்களின் அரவணைப்பு அதிகரிக்கும். வேற்றுமதத்தவர்களால் உதவிகள் உண்டு. கேது 9-ம் இடத்தில் நிற்பதால் தந்தையாருக்கு மருத்துவச் செலவு, அவருக்கு வேலைச்சுமை, டென்ஷன் வந்துப் போகும். பழைய கடன் சுமையை நினைத்து அவ்வப்போது நிம்மதியிழப்பீர்கள். குரு 3-ல் மறைந்திருப்பதால் சின்ன சின்ன ஏமாற்றங்கள் வரக்கூடும். கோவில் முக்கிய நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். கன்னிப் பெண்களே! காதல் கைக்கூடும். தடைப்பட்ட உயர்கல்வியை தொடர வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களிடம் ரகசியங்களை பகிர்ந்துக் கொள்வார். சக ஊழியர்கள் விஷயத்தில் அத்துமீறி தலையிட வேண்டாம். நியாயத்தை பேசப் போய் பெயர் கெடும். கலைத்துறையினரே! வர வேண்டிய சம்பள பாக்கி கைக்கு வரும். விடாமுயற்சியால் விட்டதைப் பிடிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 13, 17, 19 அதிஷ்ட எண்கள்: 2, 6 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், ஆரஞ்சு அதிஷ்ட திசை: மேற்கு

 • பாரம்பரிய கௌரவம், பண்பாட்டை கட்டிக் காப்பவர்களே! 2-ம் வீட்டில் குரு வலுவாக அமர்ந்திருப்பதால் எதையும் சாதிப்பீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். பழைய வழக்கில் வெற்றி பெறுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். முக்கிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். கோவிலை புதுப்பிக்க உதவுவீர்கள். அயல்நாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். புதனும், சுக்ரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் மனதிற்கு இதமான செய்திகள் வரும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, மனை அமையும். உறவினர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். 15-ந் தேதி முதல் சூரியன் 12-ல் மறைவதால் திடீர் பயணங்கள், ஆழ்ந்த உறக்கமின்மை வந்துச் செல்லும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். 5-ல் சனி தொடர்ந்துக் கொண்டிருப்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். பிள்ளைகளின் பொறுப்பற்றப் போக்கை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் தொடர்வதால் பேச்சில் கடுமைக் காட்டாதீர்கள். வீண் வறட்டுக் கவுரவத்திற்காக சேமிப்புகளை கரைக்காதீர்கள். வாகனத்தில் கவனம் தேவை. சிறுசிறு விபத்துகள் வந்துப் போகும். கன்னிப் பெண்களே! தோற்றப் பொலிவுக் கூடும். உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரம் சூடுபிடிக்கும். வேலையாட்களிடம் கறாராக இருங்கள். கடையை நவீனமயமாக்குவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். பங்குதாரர் உங்களின் ஆலோசனையை ஏற்பர். உத்யோகத்தில் மதிப்பு, மரியாதைக் கூடும். சக ஊழியர்கள் நேசக்கரம் நீட்டுவார்கள். கலைத்துறையினரே! உங்கள் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். புயலாய் இருந்த நிலை மாறி தென்றல் வீசும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 17, 18, 19 அதிஷ்ட எண்கள்: 4, 9 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெள்ளை அதிஷ்ட திசை: வடக்கு

 • மன உறுதியும், விடாமுயற்சியும் கொண்ட நீங்கள், நினைத்ததை முடித்துக் காட்டுபவர்கள். 15-ந் தேதி முதல் ராசிநாதன் சூரியன் லாப வீட்டில் அமர்வதால் உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். திடீர் பணவரவு, செல்வாக்கு, கௌரவப் பதவிகள் தேடி வரும். புது வேலைக் கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். சுக்ரன் சாதகமாக இருப்பதால் சிறுக சிறுக சேர்த்து ஒரு வீட்டு மனையாவது ஊரைத் தள்ளியிருக்கும் பகுதியில் வாங்கி விட வேண்டுமென்று நினைப்பீர்கள். டி.வி., ஃப்ரிட்ஜ் வாங்குவீர்கள். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் உறவினர் மத்தியில் அந்தஸ்து உயரும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால் அசதி, சோர்வு, படபடப்பு வந்துச் செல்லும். யாரையும் விமர்சித்துப் பேசாதீர்கள். ராசிக்குள் குருவும், ராகுவும் நீடிப்பதால் சின்ன சின்ன உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. வெளி உணவுகளை தவிர்க்கப்பாருங்கள். காய்ச்சல், காலில் வீக்கம், இரத்த சோவை வரக்கூடும். ஓய்வெடுக்க முடியாதபடி உழைக்க வேண்டி வரும். செவ்வாய் 4-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் சகோதர வகையில் நன்மை உண்டாகும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் இருந்து வந்த வில்லங்கம் விலகும். கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். வியாபாரத்தில் புது யுக்திகளால் தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். பங்குதாரர்கள் உங்களைப் புரிந்துக் கொள்ள மாட்டார்கள். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். சக ஊழியர்களுடன் கவனமாக பழகுங்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவீர்கள். அதிரடி மாற்றங்கள் நிகழும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 14, 15, 16 அதிஷ்ட எண்கள்: 3, 5 அதிஷ்ட நிறங்கள்: இளம்சிவப்பு, ஊதா அதிஷ்ட திசை: வடமேற்கு

 • ஆர்ப்பாட்டம் இல்லாமல் எதையும் சாதித்துக் காட்டுபவர்களே! சனிபகவான் வலுவாக 3-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் மனோபலம் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் நட்பால் சாதிப்பீர்கள். குடும்பத்தில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பீர்கள். அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். சுக்ரன் சாதகமாக இருப்பதால் விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். ராசிநாதன் புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் புது வேலைக் கிடைக்கும். உறவினர்கள் உங்களைப் பற்றி பெருமையாகப் பேசுவார்கள். 15-ந் தேதி முதல் சூரியன் ராசிக்கு 10-ம் வீட்டில் நுழைவதால் புது பொறுப்புகள், பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். தந்தைக்கு இருந்த நோய் குணமாகும். அவருடன் இருந்த மனஸ்தாபம் விலகும். அரசால் அனுகூலம் உண்டு. குருவும், ராகுவும் 12-ல் மறைந்திருப்பதால் திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். கேது 6-ம் இடத்தில் தொடர்வதால் எல்லோராலும் மதிக்கப்படுவீர்கள். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். கன்னிப் பெண்களே! திருமணம் கூடி வரும். பெற்றோருக்கு சில ஆலோசனை வழங்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். சில்லரை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்திற்கு மாறுவீர்கள். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். கூடுதல் நேரம் ஒதுக்கி வேலைப் பார்க்க வேண்டி வரும். கலைத்துறையினரே! உங்களின் கற்பனைத் திறன் வளரும். நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 14, 16, 18 அதிஷ்ட எண்கள்: 6, 8 அதிஷ்ட நிறங்கள்: சில்வர்கிரே, ரோஸ் அதிஷ்ட திசை: கிழக்கு

 • ஒளிவு மறைவு இல்லாமல் உள்ளதை உள்ளபடி பேசுபவர்களே! லாப வீட்டில் குருவும், ராகுவும் தொடர்வதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். பணவரவு உண்டு. அறிஞர்கள், கல்வியாளர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். வேற்றுமொழி, மதத்தினர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். வழக்கில் வெற்றி கிட்டும். ஷேர் மூலம் பணம் வரும். ராசிநாதன் சுக்ரன் 9-ம் வீட்டிற்குள் நுழைந்திருப்பதால் உற்சாகமடைவீர்கள். பொது விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர்களால் மகிழ்ச்சியும், நண்பர்களால் ஆதாயமும் உண்டு. தந்தைவழியில் ஆதரவுப் பெருகும். பாதச் சனி தொடர்வதால் வீண் விரையம், பகை, விவாதங்கள் வந்துப் போகும். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சூரியனின் போக்கு சரியில்லாததால் தந்தைக்கு மருத்துவச் செலவுகள், அவருடன் மனத்தாங்கல் வந்துச் செல்லும். யாருக்காகவும் சாட்சி, கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். கன்னிப் பெண்களே! சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். வேலையாட்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். பழைய பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிகாரிகள் முக்கிய பொறுப்பை ஒப்படைப்பார்கள். கலைத்துறையினரே! வருமானம் உயர வழிப் பிறக்கும். திடீர் திருப்பங்கள் உண்டாகும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 15, 17, 19 அதிஷ்ட எண்கள்: 1, 3 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், சில்வர்கிரே அதிஷ்ட திசை: தென்மேற்கு

 • காலச்சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் தன்னை மாற்றிக் கொள்பவர்களே! ராசிக்கு 7-ம் வீட்டில் புதன் அமர்ந்து உங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதால் உங்களின் திறமைகள் வெளிப்படும். அழகு, இளமைக் கூடும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். திருமணம் கூடி வரும். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள். மனைவிவழியில் ஆதாயம் உண்டு. தங்க ஆபரணம் வாங்குவீர்கள். கடன் பிரச்சனைகள் ஒரு பக்கம் விரட்டினாலும் இங்கிதமாகப் பேசி வட்டியை தருவீர்கள். சுக்ரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். விலகிச் சென்ற உறவினர், நண்பர்கள் விரும்பி வந்துப் பேசுவார்கள். சங்கம், டிரஸ்ட் இவற்றில் சேருவீர்கள். ராசிக்குள் சனியும், 10-ல் ராகுவும், குருவும் தொடர்வதால் பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாகப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். தூக்கம் கெடும். மரியாதைக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். கன்னிப் பெண்களே! திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். காதல் விவகாரங்களில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களுடன் போராட வேண்டி வரும். திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி ஒப்பந்தங்கள் செய்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். அதிகாரிகளிடம் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. கலைத்துறையினரே! நழுவிச் சென்ற ஒப்பந்தங்கள் மீண்டும் கைக்கு வந்து சேரும். போராட்டங்களை கடந்து சாதிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 16, 18, 19 அதிஷ்ட எண்கள்: 2, 7 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, சிவப்பு அதிஷ்ட திசை: தென்மேற்கு

 • சுற்றுப் புறச் சூழலுக்கு கட்டுப்படாமல் தனக்கென தனிப்பாதையில் செல்பவர்களே! கேது வலுவாக 3-ம் வீட்டில் தொடர்வதால் வீரியத்தை விட காரியம் தான் முக்கியம் என்பதை உணருவீர்கள். பொது அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். கடந்த கால இனிய அனுபவங்களை அவ்வப்போது நினைவுக் கூர்ந்து மகிழ்வீர்கள். 13-ந் தேதி முதல் சுக்ரன் ராசிக்கு 7-ல் அமர்ந்து உங்களது ராசியைப் பார்க்கயிருப்பதால் சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். வீண் சந்தேகம், ஈகோப் பிரச்னையால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். புதன் 6-ல் மறைந்திருப்பதால் அலைச்சலும், செலவுகளும் இருக்கும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். உறவினர்களில் சிலர் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். ஏழரைச் சனி தொடர்ந்துக் கொண்டிருப்பதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். 15-ந் தேதி முதல் சூரியன் 7-ல் நுழைவதால் கோபப்படுவீர்கள். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, முதுகுத் தண்டில் வலி வந்துப் போகும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். கன்னிப் பெண்களே! தவறான எண்ணங்களுடன் பழகியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையாட்கள், பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் உங்களுடைய கடின உழைப்பை உயரதிகாரி மெச்சுவார். சக ஊழியர்கள் உங்களின் ஆதரவுக் கிட்டும். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகள் வெளியாவதில் இருந்து வந்த தடைகள் நீங்கும். முற்போக்குச் சிந்தனையால் முன்னேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 14, 17, 18 அதிஷ்ட எண்கள்: 8, 9 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், அடர் நீலம் அதிஷ்ட திசை: தென்கிழக்கு

 • கலங்கி வருபவர்களின் கண்ணீரை துடைப்பவர்களே! லாப வீட்டில் செவ்வாயும், சனியும் நிற்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். கட்டிட வேலையை தொடங்குவீர்கள். பங்குச் சந்தை மூலமாக பணம் வரும். மகளின் திருமணத்தை சீரும் சிறப்புமாக நடத்துவீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். 15-ந் தேதி முதல் சூரியன் 6-ல் அமர்வதால் அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். சிலர் வெளிநாடு சென்று வருவீர்கள். அதிக வட்டிக் கடனை பைசல் செய்வீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். புதன் சாதகமாக இருப்பதால் வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வரும். பூர்வீக சொத்தால் வருமானம் வரும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். 13-ந் தேதி முதல் சுக்ரன் 6-ல் சென்று மறைவதால் தொண்டைப் புகைச்சல், சளித் தொந்தரவு, வாகனப் பழுது, சிறுசிறு விபத்துகள், வீண் செலவுகள் வந்துப் போகும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. மனைவிக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். கன்னிப் பெண்களே! காதல் கசந்து இனிக்கும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ற பொருட்களை கொள்முதல் செய்து லாபத்தை பெருக்குவீர்கள். வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரியின் ஆலோசனையின்றி செயல்பட வேண்டாம். சக ஊழியர்களால் மறைமுகப் பிரச்னைகள் வந்துப் போகும். கலைத்துறையினரே! உங்களைப் பற்றிய விமர்சனங்களும், வதந்திகளும் வரக்கூடும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 15, 16, 19 அதிஷ்ட எண்கள்: 4, 7 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம்வெள்ளை, சிவப்பு அதிஷ்ட திசை: மேற்கு

 • லட்சிய கனவுடன் வாழ்பவர்களே! புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்கள் செயலில் வேகம் கூடும். பழைய வீட்டை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வி.ஐ.பிகள் உதவுவார்கள். எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். உறவினர், நண்பர்களால் இருந்து வந்த அன்புத் தொல்லை குறையும். குரு சாதகமாக இருப்பதால் திருமணப் பேச்சு வார்தைக் கூடி வரும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். ஆனால் ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால் மனைவிக்கு கை, காலில் வலி வந்துப் போகும். சிலர் உங்களைத் தவறானப் போக்கிற்கு தூண்டுவார்கள். கூடாப் பழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது. தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும். 15-ந் தேதி முதல் சூரியன் 5-ல் நுழைவதால் மனஉளைச்சல், மனைவியுடன் வாக்குவாதம் வந்துச் செல்லும். பிள்ளைகளை கண்டிக்கிறேன் என்ற பேரில் கஷ்டப்படுத்தாதீர்கள். அன்பாகச் சொல்லி புரிய வையுங்கள். கன்னிப் பெண்களே! பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்களிடம் தொழில் சம்பந்தமான ரகசியங்களை சொல்ல வேண்டாம். பங்குதாரர்களின் தொந்தரவுகளை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் உங்களைப் பாரபட்சமாக நடத்திய அதிகாரி வேறு இடத்திற்கு மாறுவார். சின்ன சின்ன சலுகைகளும் கிடைக்கும். கலைத்துறையினரே! அறிமுக கலைஞர்களின் நட்பால் ஆதாயமடைவீர்கள். உழைப்பால் உயரும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 17, 18, 19 அதிஷ்ட எண்கள்: 1, 4 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, சாம்பல் நிறம் அதிஷ்ட திசை: வடக்கு

 • அனைத்தை அறிந்திருந்தும் அதை தனக்காக பயன்படுதாதவர்களே, ராகு 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிரபலங்களின் சுப காரியங்களின் பங்கேற்கும் அளவிற்கு நெருக்கமாவீர்கள். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். பணவரவு அதிகரிக்கும். பிள்ளைகளின் அடிமனதிலிருக்கு பயத்தை போக்குவீர்கள். புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் திடீர் யோகம் உண்டாகும். மனைவிவழியில் ஒத்தாசையாக இருப்பார்கள். பூர்வீக சொத்தால் ஆதாயமடைவீர்கள். புதிதாக ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால் வீட்டை கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். தாய்மாமன், அத்தை வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குரு 6-ல் மறைந்திருப்பதால் உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். கன்னிப் பெண்களே! தடைப்பட்ட திருமணம் கூடி வரும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வதற்கு பண உதவிகள் கிடைக்கும். அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் சொந்த விஷயங்களை உங்களிடம் சொல்லி ஆறுதல் அடைவார்கள். சக ஊழியர்களால் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். கலைத்துறையினரே! உங்களின் படைப்புத் திறன் வளரும். தைரியமாக முக்கிய முடிவுகள் எடுக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 14, 15, 16 அதிஷ்ட எண்கள்: 5, 9 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, மஞ்சள் அதிஷ்ட திசை: தெற்கு

http://www.kathiravan.com/?page_id=1302