இராசிபலன்கள் 13-07-2016 முதல் 19-07-2016 வரை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]
வார பலன், ஜாதகம், Weekly Astrology Tamil, Weekly Astrology In Tamil, Tamil Weekly Astrology, Tamil Astrology For This Week, Tamil Astrology Weekly Predictions, Astrology In Tamil, Free Tamil Astrology, Tamil Astrology Horoscope, Tamil Astrology Rashi, Tamil Astrology Rashi Chart

கதிரவனுக்காகக் கணித்து எழுதியவர் ஜோதிடமணி பிரம்மஸ்ரீ ரகுநாத ஐயர் தமிழ்நாடு, இந்தியா

 

 • எதிர்பார்ப்புகள் இன்றி பழகும் நீங்கள் எதிரிகளுக்கும் உதவுபவர்கள். ராசிநாதன் செவ்வாய் சனியுடன் நிற்பதால் அவ்வப்போது கோபப்படுவீ£கள். எந்த வேலையைத் தொட்டாலும் இழுபறியாகவே இருக்கிறதே என்று டென்ஷனாவீர்கள். உங்கள் வேகத்தை யாரும் புரிந்த கொள்ள மாட்டார்கள். சில நேரங்களில் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். தலைச்சுற்றல் வரும். சாலைகளை கடக்கும் போதும், வாகனத்தை இயக்கும் போதும் அலைபேசி உடைய பாடலைத் தவிர்க்கவும். சகோதரங்களால் செலவுகள் இருக்கும். 6&ல் நிற்கும் சனி யானை பலத்தை தருவது போல் தெரியும், ஆனால் அலட்சியமாக இருந்து விடாதீர்கள். முக்கிய விஷயங்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காதீர்கள். சுக்ரன் உங்களை யதார்த்தமாகப் பேச வைப்பார். உங்களின் அனுபவ அறிவை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்களும் அமையும். மனைவியின் கோபம் தணியும். வேறு டிசைனில் நகை வாங்குவீர்கள். வீட்டை விரிவுப்படுத்தி கட்டுவீர்கள். குரு உங்களின் குடும்ப வருமானத்தை உயர்த்த உறுதுணையாக இருப்பார். புதன் வக்ரமாவதால் பழைய கடனை நினைத்து அவ்வப்போது பயப்படுவீர்கள். உறவினர், நண்பர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். 16&ந் தேதி முதல் சூரியன் 4&ல் அமர்வதால் பிள்ளைகளின் உயர்கல்வி சேர்க்கை, திருமண விஷயங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். அரசியல்வாதிகளே! வீண் பேச்சில் காலம் கழிக்காமல் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது. கன்னிப் பெண்களே! திறமையான வகையில் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். வேலையாட்கள் அவ்வப்போது விடுப்பில் செல்வார்கள். வாடிக்கையாளர்களின் கருத்தைக் கேட்டு கடையை இடமாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரியின் ஆதரவால் செல்வாக்குக் கூடும். கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவீர்கள். வளைந்து நிமிர வேண்டிய வாரமிது. அதிஷ்ட தேதிகள்:11,13,14 அதிஷ்ட எண்கள்:1,4 அதிஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு,கிரே அதிஷ்ட திசை:தென்கிழக்கு

 • தொலை நோக்குச் சிந்தனை கொண்ட நீங்கள், அனைவரும் ஏற்றுக் கொள்ளும் கருத்தை சொல்வீர்கள். ராசிக்குள் நிற்கும் குரு சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை கொஞ்சம் காட்டும். யாருமே உங்களைப் புரிந்துக் கொள்வதில்லை என்று புலம்புவீர்கள். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். கை, கால் வலிக்கும். லோசாக தலை பாராமாக இருப்பதாக நினைப்பீர்கள். கண் பார்வையை பரிசோதித்துக் கொள்வது நல்லது. 16&ந் தேதி முதல் சூரியன் 3&ல் அமர்வதால் அதுமுதல் ஆரோக்யம் கூடும். மனஇறுக்கம் நீங்கும். அரசு விஷயங்கள் உடனே முடியும். வீடு, மனை வாங்குவது, விற்பது சுலபமாக முடிவடையும். வேலைக் கிடைக்கும். புதன் வக்ரமடைவதால் பிள்ளைகள் கோபப்படுவார்கள். கொஞ்சம் பொறுப்பில்லாமல் நடந்துக் கொள்வதால் நினைப்பீர்கள். அவர்கள் போக்கில் கொஞ்சம் விட்டுப் பிடியுங்கள். சுக்ரன் ராசிக்குள்ளேயே நிற்பதால் புது தெம்பு பிறக்கும். ஓரளவு பணவரவு உண்டு என்றாலும் தவிர்க்க முடியாத செலவுகளும் இருக்கும். 5&ல் செவ்வாயும், சனியும் தொடர்வதால் அடிவயிற்றில் வலி, தொண்டைப் புகைச்சல் வந்துப் போகும். சொந்த&பந்தங்களுடன் மோதல்கள் வந்து நீங்கும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். ராகுவும், கேதுவும் சரியில்லாததால் சிலர் மீது நம்பிக்கையின்மை, தர்ம சங்கடமான சூழ்நிலைகள் வந்துப் போகும். அரசியல்வாதிகளே! எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். கன்னிப் பெண்களே! பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் அதிரடி அறிவிப்புகள் மூலம் போட்டிகளை ஈடுகட்டுவீர்கள். வியாபார ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வேலையாட்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். பங்குதாரர்களால் விரயம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி சில நேரத்தில் கடிந்து பேசினாலும் பல சமயங்களில் கனிவாக நடந்துக் கொள்வார். சக ஊழியர்களால் நிம்மதி இழப்பீர்கள். கலைத்துறையினர்களே! வதந்திகள் ஒருபுறம் இருந்தாலும் மற்றொரு புறம் உங்களின் விடாமுயற்சியால் சாதித்துக் காட்டுவீர்கள். நிதானமும்,சகிப்புத்தன்மையும் தேவைப்படும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்:11,13,14 அதிஷ்ட எண்கள்:3,6 அதிஷ்ட நிறங்கள்:இளம்சிவப்பு,ப்ரவுன் அதிஷ்ட திசை:வடமேற்கு

 • பகட்டாகப் பேசாமல் யதார்த்தமான முடிவுகளால் எல்லோராலும் விரும்பப்படுபவர்களே! ராசிநாதன் புதன் வக்ரமாக இருப்பதால் வேலைச்சுமை அதிகமாகும். சில விஷயங்களை மூன்றாவது முயற்சியில் தான் முடிக்க வேண்டி வரும். சில நேரங்களில் அலுத்துக் கொள்வீர்கள். உறவினர்களிடம் அளவாகப் பழகுங்கள். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். உங்கள் பூர்வ புண்யாதிபதி சுக்ரன் சொந்த வீட்டிலேயே நீடிப்பதால் உருட்டி புரட்டி நிதி நிலையை சமாளிப்பீர்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். நண்பர்களும் உங்களிடம் அதிகம் எதிர்பார்ப்பார்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். 16&ந் தேதி முதல் ராசியை விட்டு சூரியன் விலகுவதால் வயிற்று வலி, தலை வலி, முன்கோபம் நீங்கும். ஆனால் கண், பல் வலி வந்துப் போகும். அரசாங்க அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். ராகு வலுவாக 6&ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பழைய பிரச்னைகளை தீர்க்க முயற்சி செய்வீர்கள். ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்கள் அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். அரசியல்வாதிகளே! சகாக்களைப் பற்றிக் குறைக் கூற வேண்டாம். கன்னிப் பெண்களே! எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும். உயர்கல்வியில் போராடி வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களால் மறைமுகப் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் மேலதிகாரியின் அறிமுகம் கிடைக்கும். சக ஊழியர்களின் குறைகளில் கவனம் செலுத்த வேண்டாம். கலைத்துறையினர்களே! உதாசினப் படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்:11,13,15 அதிஷ்ட எண்கள்:2,9 அதிஷ்ட நிறங்கள்:க்ரீம்வெள்ளை,ஊதா அதிஷ்ட திசை:வடக்கு

 • அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டுமென்று நினைப்பவர்களே! முயற்சி ஸ்தானமான மூன்றாம் வீட்டில் எதிர்மறை கிரகங்களான செவ்வாயும், சனியும் நிற்பதால் மாறுபட்ட கோணத்தில் யோசித்து பழைய சிக்கல்கள், பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். கோபப்படாமல் இருக்க வேண்டுமென நினைத்தாலும் முடிவதில்லையே என அலுத்துக் கொள்வீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்-. சகோதர வகையில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. குருவும், சுக்ரனும் சாதகமாக இருப்பதால் உங்களின் நிர்வாகத்திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகைக் கைக்கு வரும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். திருமணப் பேச்சு வார்த்தை கூடி வரும். மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். பழைய வீட்டை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். தந்தைவழியில் பக்கபலமாக இருப்பார்கள். 16&ந் தேதி முதல் சூரியன் ராசிக்குள் நுழைவதால் சோர்வு, களைப்பு, கண் எரிச்சல் வந்துப் போகும். வேலைச்சுமை அதிகமாகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். கேது வலுவாக இருப்பதால் தன்னைச் சுற்றியிருப்பவர்களின் பலம் பலவீனமறிந்து செயல்படத் தொடங்குவீர்கள். கோவில் கும்பாபிஷேகத்திற்கு நன்கொடை வழங்குவீர்கள். கன்னிப் பெண்களே! காதல் கைக்கூடும். சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ற பொருட்களை கொள்முதல் செய்து லாபத்தை பெருக்குவீர்கள். பணியாளர்களிடம் கண்டிப்பாக இருங்கள். பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். சக ஊழியர்கள் நேசக்கரம் நீட்டுவார்கள். கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புத் திறன் வளரும். செல்வம் செல்வாக்கு கூடும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்:12,14,15 அதிஷ்ட எண்கள்:4,7 அதிஷ்ட நிறங்கள்:மெரூண்,ஆலிவ்பச்சை அதிஷ்ட திசை:தெற்கு

 • பலரும் பலவாறு பேசினாலும் எடுத்த முடிவிலிருந்து மாறாதவர்களே! உங்கள் ராசிநாதன் சூரியன் குருவின் சாரத்தில் சென்று கொண்டிருப்பதால் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் சில விஷயங்களை முடிப்பீர்கள். வேலைக் கிடைக்கும். மூத்த சகோதரர் உதவுவார். கணவன்&மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சுக்ரன் சொந்த வீட்டில் அமர்ந்திருப்பதால் உங்களுக்கும் சொந்த வீடு வாங்கும் யோகத்தை தருவார். வங்கிக் கடன் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு பெரிய நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் கூடிய புது வேலைக் கிடைக்கும். டி.வி., ஃப்ரிட்ஜ் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். குரு 10&ல் தொடர்வதால் வேலைச்சுமையும், வீண் பழியும் வந்துப் போகும். யாருக்கு கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். செவ்வாயும், சனியும் 2&ல் நிற்பதால் சிலர் உங்கள் வாயைக் கிளறுவார்கள் கண்டு கொள்ளாதீர்கள். அந்தரங்க விஷயங்களை வெளியிட வேண்டாம். பணப்பற்றாக்குறை ஏற்படும். உடன்பிறந்தவர்கள் குறைப் பட்டுக் கொள்வார்கள். நிலம், வீடு வாங்குவது, விற்பதில் அவசரம் வேண்டாம். வழக்கை நிதானமாக கையாளுங்கள். 11&ந் தேதி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளே! கட்சியின் மூத்த உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசுவீர்கள். கன்னிப் பெண்களே! பெற்றோருக்கு சில ஆலோசனைகள் வழங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை தள்ளுபடி விலையில் விற்று முடிப்பீர்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். கலைத்துறையினர்களே! வருமானம் உயர வழி பிறக்கும். வேலைச்சுமை அதிகரிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்:12,15,16 அதிஷ்ட எண்கள்:8,9 அதிஷ்ட நிறங்கள்:மஞ்சள்,சில்வர்கிரே அதிஷ்ட திசை:தென்மேற்கு

 • தோல்வி கண்டு துவளாத நீங்கள் நகைச்சுவையாகப் பேசி சிந்திக்க வைப்பீர்கள். குருபகவான் 9&ம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு ஆதரவாக இருந்தாலும் செவ்வாயும், சனியும் ராசிக்குள் நிற்பதால் எதிலும் ஆர்வமில்லாமல் இருப்பீர்கள். எந்த வேலையும் உடனே முடியவில்லை என ஆதங்கப்படுவீர்கள். மனசு ஒத்துழைக்கும் போது உடம்பு மறுக்கிறது. காது வலி, கழுத்து வலி, தொண்டை புகைச்சலால் கொஞ்சம் சோர்வாக காணப்படுவீர்கள். சூரியனும், சுக்ரனும் சாதகமான இருப்பதால் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். வேலைக் கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்பு வரும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். வீடு கட்ட அனுப்பியிருந்த கட்டிட வரைபடத்திற்கு அரசு அனுமதி கிட்டும். புதன் வக்ரமாக இருப்பதால் பழைய நண்பர், உறவினர்களுடன் ஈகோ வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் இருக்கும். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். ராகு வலுவாக அமர்ந்திருப்பதால் சவால்களை சமாளிப்பீர்கள். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். வேற்றுமதம், மொழி, இனத்தவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். வெகு நாட்களாக போக நினைத்த அண்டை மாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு சாதகமாக அமையும். 12, 13 மற்றும் 14&ந் தேதி காலை 8 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சோர்வடைவீர்கள். அரசியல்வாதிகளே! எதிர்கட்சிக்காரர்கள் உதவுவார்கள். கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். வியாபாரத்தில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் கிடைக்கும். புது வேலையாட்கள் அமைவார்கள். வாடிக்கையாளர்களின் தேவையறிந்து செயல்படுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். சக ஊழியர்களுக்கு உதவி செய்வீர்கள். கலைத்துறையினர்களே! உங்கள் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். தொட்டது துலங்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்:11,15,17 அதிஷ்ட எண்கள்:1,5 அதிஷ்ட நிறங்கள்:பிஸ்தாபச்சை,பிங்க் அதிஷ்ட திசை:கிழக்கு

 • காத்திருந்து காய் நகர்த்துவதில் வல்லவர்களாகிய நீங்கள் ஏமாற்றங்களைக் கண்டு சோர்ந்து போக மாட்டீர்கள். உங்கள் யோபாதிபதி சனி 12&ல் செவ்வாயுடன் சேர்ந்து நிற்பதால் ஆடம்பரச் செலவுகளை கட்டுப்படுத்துங்கள். சகோதரங்கள், உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். சண்டை, சச்சரவுகளில் மூக்கை நுழைக்க வேண்டாம். கடுமையாக பட்டினி கிடந்து எந்த விரதத்தையும் இந்தக் காலக்கட்டத்தில் அனுஷ்டிக்க வேண்டாம். வழக்கில் அலட்சியம் வேண்டாம். சொத்துப் பிரச்னைக்கு பேச்சு வார்த்தை மூலம் சுமூக தீர்வு காண்பது நல்லது. சுக்ரன் 8&ல் நிற்பதால் அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். பயணங்கள் அதிகரிக்கும். வாகனம் அவ்வப்போது பழுதாகி சரியாகும். மின்சாதனங்களை கவனமாகக் கையாளுங்கள். புதன் சாதகமான வீடுகளில் பயணிப்பதால் ஓரளவு நிம்மதி கிட்டும். வீட்டை விரிவுப்படுத்துவது குறித்து கலந்தாலோசிப்பீர்கள். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். மனதிற்கு இதமான செய்திகள் வரும். 16&ந் தேதி முதல் சூரியன் 10&ல் நுழைவதால் புது வேலைக் கிடைக்கும். தந்தையுடனான மோதல்கள் விலகும். அவரின் உடல் நலம் சீராகும். 14&ந் தேதி காலை 8 மணி முதல் 15 மற்றும் 16&ந் தேதி இரவு 7.30 மணி வரை சந்திராஷ்டமம் நடப்பதால் எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். அரசியல்வாதிகளே! பொதுக்கூட்டம், போராட்டங்களில் முன்னிலை வகிப்பீர்கள். கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் தள்ளி இருங்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்த புது சலுகைகளை அறிமுகம் செய்வீர்கள். மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். வேலையாட்களிடம் கனிவாகப் பழகுங்கள். பங்குதாரரை அனுசரித்துப் போங்கள். மேலதிகாரி நேசக்கரம் நீட்டுவார். சக ஊழியர்களிடம் கொஞ்சம் இடைவெளிவிட்டு பழகுவது நல்லது. கலைத்துறையினர்களே! இழந்த புகழை மீண்டும் பெற எதார்த்தமான படைப்புகளை கொடுங்கள். அனுபவ அறிவால் முன்னேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்:12,13,17 அதிஷ்ட எண்கள்:7,9 அதிஷ்ட நிறங்கள்:மயில்நீலம்,ரோஸ் அதிஷ்ட திசை:வடகிழக்கு

 • தாமதமானாலும் நேர்வழியிலேயே சென்று இலக்கை அடைபவர்களே! ராசிநாதன் செவ்வாய் லாப வீட்டில் நிற்பதால் வீடு, மனை விற்பது, வாங்குவது சாதகமாக முடியும். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். அரசுப் பதவியில் இருப்பவர்களும் உதவுவார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். ஆனால் சனியுடன் சேர்ந்து நிற்பதால் அடிக்கடி கோபப்படுவீர்கள். அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். நீங்கள் யதார்த்தமாகப் பேசுவதை சிலர் வேறு விதமாகப் புரிந்துக் கொள்வார்கள். குருவும், சுக்ரனும் சாதகமாக இருப்பதால் கணவன்&மனைவிக்குள் அன்யோன்யம் உண்டு. மனக்கசப்பு நீங்கும். சகோதரிக்கு நல்ல வரன் அமையும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். நவீன ரக ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வெளியூர் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். மனைவிவழியில் ஆதாயம் உண்டு. சூரியன் 8&ல் நிற்பதால் முக்கியமான வேலைகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே நேரில் சென்று முடிப்பது நல்லது. அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். தந்தைக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும். 16&ந் தேதி இரவு 7.30 மணி முதல் 17&ந் தேதிகளில் சந்திராஷ்டமம் நடைபெறுவதால் வீண் கவலைகள் வந்துப் போகும். அரசியல்வாதிகளே! சிலர் உங்கள் பெயரை தவறாகப் பயன்படுத்துவார்கள். கன்னிப் பெண்களே! உங்களின் புதுத் திட்டங்களை பெற்றோர் ஆதரிப்பார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்கள் உங்களிடம் விசுவாசமாக நடந்து கொள்வார்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்கள் உங்களை முழுமையாக நம்புவார்கள். புது வாய்ப்புகளும் தேடி வரும். கலைத்துறையினர்களே! உங்களுக்கு பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும். இழுபறி வேலைகளை விரைந்து முடிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்:13,15,16 அதிஷ்ட எண்கள்:4,6 அதிஷ்ட நிறங்கள்:கிரே,வெள்ளை அதிஷ்ட திசை:மேற்கு

 • பாகுபாடு பார்க்காமல் பழகும் நீங்கள், பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடுவீர்கள். உங்கள் பூர்வபுண்யாதிபதியான செவ்வாய் 10&ல் வலுவாக நிற்பதால் சவால்களை எதிர்கொள்ளும் வல்லமை கிட்டும். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். மகளுக்கு நல்ல வரனாகப் பாருங்கள். பூர்வீக சொத்தை மாற்றி புது வீடு வாங்குவீர்கள். சிலர் கட்டிடம் கட்டத் தொடங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் மனம் விட்டு பேசுவார்கள். சனியும் 10&ம் வீட்டில் தொடர்வதால் மனஉளைச்சல், ஹார்மோன் பிரச்னை, தலைச்சுற்றல் வந்துப் போகும். சுக்ரன் 6&ல் நிற்பதால் பயோ டேட்டா பார்த்து ஏமாந்து விட வேண்டாம். திடீர் முடிவுகளும் எடுக்க வேண்டாம். ஒருமாதம் பொறுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். வாகனத்தை தடை செய்யப்பட்ட பகுதியில் நிறுத்திவிட்டு அபராதம் கட்ட வேண்டாம். மிதமான வேகம் போதும். உங்களுக்கு உதவ வேண்டிய குரு 6&ல் மறைந்து நிற்பதால் வேலைச்சுமையும், காரியத் தடைகளும், திடீர் செலவுகளும் தொடரும். முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. சூரியனின் போக்கு சாதகமாக இல்லாததால் மனைவிக்கு மருத்துவச் செலவு, வீண் டென்ஷன் வந்துப் போகும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். அரசியல்வாதிகளே! வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். கன்னிப் பெண்களே! பெற்றோருக்கு சில ஆலோசனைகள் வழங்குவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். வேலையாட்கள், பங்குதாரர்களால் தர்ம சங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டி வரும். வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகளுக்கு வேறொருவர் உரிமை கொண்டாடுவர். பொறுப்புகள் அதிகரிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்:11,13,15 அதிஷ்ட எண்கள்:6,9 அதிஷ்ட நிறங்கள்:ப்ரவுன்,ஆலிவ்பச்சை அதிஷ்ட திசை:வடமேற்கு

 • எதிலும் வெற்றியை விரும்பும் நீங்கள், தன்னம்பிக்கையுடன் போராடி தடைகளை கடந்துச் செல்வீர்கள்! உங்கள் யோகாதிபதி புதன் 11&ந் தேதி முதல் 6&ல் மறைந்தாலும் ஆட்சிப் பெற்று அமர்வதால் பணம் வரும். ஆனால் செலவுகளும் துரத்தும். வி.ஐ.பிகளின் நட்பால் இழுபறியான வேலைகளை முடிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். தூரத்து உறவினர்கள் தேடி வருவார்கள். குரு வலுவாக 5&ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பிள்ளைகள் நல்ல வழிக்கு திரும்புவார்கள். ஆலயங்களை புதுப்பிக்க உதவுவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். செவ்வாய் 9&ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும். சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். ஆனால் சனியுடன் நிற்பதால் செறிமானக் கோளாறு, வயிற்று வலி வந்துப் போகும். 15&ந் தேதி வரை சூரியன் 6&ல் அமர்ந்திருப்பதால் அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் திருப்பம் ஏற்படும். 16&ந் தேதி முதல் 7&ல் நுழைவதால் முன் கோபம் தலை காட்டும். மனைவிக்கு மருத்துவச் செலவு, வீண் டென்ஷன் வந்துப் போகும். அரசியல்வாதிகளே! தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் மேலிடத்துக்கு கொண்டு செல்லுங்கள். கன்னிப் பெண்களே! தவறான எண்ணங்களுடன் பழகியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் வரும். வேலையாட்கள் உங்களிடமிருந்து தொழில்யுக்திகளை கற்றுக்கொள்வார்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் புது பொறுப்பை ஒப்படைபார்கள். சக ஊழியர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். கலைத்துறையினர்களே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்:12,14,16 அதிஷ்ட எண்கள்:1,8 அதிஷ்ட நிறங்கள்:பிங்க்,க்ரீம் வெள்ளை அதிஷ்ட திசை:தென்கிழக்கு

 • அனுபவ அறிவு அதிகம் கொண்ட நீங்கள் ஆர்ப்பாட்டமில்லாமல் சாதிப்பீர்கள். உங்கள் ராசிநாதன் சனி எதிர்மறை கிரகமான செவ்வாயுடன் சேர்ந்திருப்பதால் உங்களைப் பற்றி நீங்களே, குறைத்து மதிப்பிடுவீர்கள். முன்கோபத்தால் இரத்த அழுத்தம் அதிகமாகும். உங்களை சிலர் தாக்கிப் பேசினாலும் நீங்கள் பொறுத்துப் போவது நல்லது. சிறுசிறு விபத்து வந்துப் போகும். சகோதரர் அதிக உரிமை எடுத்து கொள்வார். உங்கள் குடும்பத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்வார்கள். வதந்திகளை நம்பி உறவுகளைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். யோக கிரகம் சுக்ரன் சாதகமாக இருப்பதால் ஓரளவு பணம் வரும். பெற்றோர் உதவுவர். பூர்வீகச் சொத்துப் பிரச்னையில் சிக்கிக் கொள்ளாதீர்கள். பிறகு பார்க்கலாம். மகனுக்கு நல்ல மணப் பெண் அமைய வாய்ப்பிருக்கிறது. உறவினர்கள், நண்பர்களின் கனிவான விசாரிப்பால் ஆறுதல் அடைவீர்கள். 15&ந் தேதி வரை சூரியன் 5&ல் நிற்பதால் அலைச்சல், குழப்பம் வந்து நீங்கும். 16&ந் தேதி முதல் 6&ம் வீட்டில் நுழைவதால் பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். அரசாங்க விஷயங்கள் உடனே முடியும். வழக்கு வெற்றியடையும். அரசியல்வாதிகளே! கட்சி மேலிடம் உங்களை நம்பி சில போராட்டங்களுக்கு தலைமை தாங்க வைக்கும். கன்னிப் பெண்களே! எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வது நல்லது. வேலையாட்கள், பங்குதாரர்களால் நஷ்டம் வரும். உத்யோகத்தில் கால நேரமில்லாமல் உழைக்க வேண்டி வரும். சக ஊழியர்களுடன் அளவாகப் பழகுங்கள். கலைத்துறையினர்களே! தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். வர வேண்டிய சம்பள பாக்கியை போராடி பெறுவீர்கள். சகிப்புத்தன்மையால் சாதிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்:13,14,16 அதிஷ்ட எண்கள்:2,4 அதிஷ்ட நிறங்கள்:மஞ்சள்,இளம்சிவப்பு அதிஷ்ட திசை:வடக்கு

 • ஆன்மீகத்தை அதிகம் அறிந்து வைத்திருக்கும் நீங்கள், அன்பாகப் பேசினால் அடங்கிப் போவீர்கள். உங்கள் பூர்வ புண்யாதிபதி சந்திரன் சாதகமான வீடுகளில் செல்வதால் அடுக்கடுக்காக பிரச்னைகள் வந்தாலும் அதை எதிர் கொள்ளும் மனப்பக்குவம் உண்டாகும். உணர்ச்சிவசப்படாமல் தெளிவாக முடிவெடுக்க கற்றுக் கொள்வீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். சிலருக்கு குழந்தை பாக்யம் கிடைக்கும். சூரியன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் அரசாங்க விஷயங்கள் சாதகமாக அமையும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவல் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டு பயணம் சாதகமாக அமையும். தாய்வழி உறவினர்கள் மதிப்பார்கள். சுக்ரன் 3&ல் வலுவாக அமர்ந்திருப்பதால் மனோ பலம் அதிகரிக்கும். இங்கிதமாக, இதமாகப் பேசி பல காரியங்களை சாதிப்பீர்கள். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். கல்யாணம் கூடி வரும். பழைய சொந்த&பந்தங்கள் தேடி வருவார்கள். குரு கேதுவுடன் நிற்பதால் மூச்சுப் பிடிப்பு, மூச்சுத் திணறல், வேலைச்சுமை வந்துப் போகும். சனியும், செவ்வாயும் 7&ல் அமர்ந்திருப்பதால் மனைவியை பகைத்துக் கொள்ளாதீர்கள். சிறுசிறு அறுவை சிகிச்சையும், மாதவிடாய்க் கோளாறும் வந்துப் போகும். அரசியல்வாதிகளே! எந்த கோஷ்டியிலும் சேராமல் நடுநிலையாக இருக்கப்பாருங்கள். கன்னிப் பெண்களே! கல்வித் தகுதிக்கேற்ப புது வேலைக் கிடைக்கும். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து வேலையாட்களை மாற்றுவீர்கள். பெரிய ஒப்பந்தங்களை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் உங்கள் திறமையை மூத்த அதிகாரி பரிசோதிப்பார். சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கலைத்துறையினர்களே! வசதி, வாய்ப்புகள் பெருகும். புதிய முயற்சிகள் வெற்றியடையும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்:11,15,16 அதிஷ்ட எண்கள்:3,9 அதிஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு,அடர்நீலம் அதிஷ்ட திசை:தெற்கு

http://www.kathiravan.com/?page_id=1302