இராசிபலன்கள் 12-04-2016 முதல் 18-04-2016 வரை

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

வார பலன், ஜாதகம், Weekly Astrology Tamil, Weekly Astrology In Tamil, Tamil Weekly Astrology, Tamil Astrology For This Week, Tamil Astrology Weekly Predictions, Astrology In Tamil, Free Tamil Astrology, Tamil Astrology Horoscope, Tamil Astrology Rashi, Tamil Astrology Rashi Chart

கதிரவனுக்காகக் கணித்து எழுதியவர் ஞானயோகி டாக்டர்.ப.இசக்கி,IBAM, RMP,DISM,தமிழ்நாடு, இந்தியா

  • மன உறுதியும், விடாமுயற்சியும் கொண்ட நீங்கள், நினைத்ததை முடித்துக் காட்டுவீர்கள். உங்கள் ராசிக்கு சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் மற்றவர்களின் மனநிலையை உணர்ந்து பேசும் பக்குவம் உண்டாகும். ஓரளவு பணவரவு அதிகரிக்கும். சந்தர்ப்ப, சூழ்நிலையை அனுசரித்துப் போகக் கூடிய திறமையும் உண்டாகும். சின்ன இடமாவது வாங்க வேண்டுமென நினைப்பீர்கள். பழைய கடனைத் தீர்க்க புது யோசனை தோன்றும். வீடு கட்ட வங்கி உதவும். உறவினர், தோழிகள் தேடி வந்து உதவுவார்கள். 14-ந் தேதி முதல் சூரியன் ராசிக்குள் நுழைவதால் மாதவிடாய்க் கோளாறு, வீண் பயம், எதிர்பாராத பயணங்கள், தூக்கமின்மை வந்துச் செல்லும். பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். அரசு காரியங்கள் இழுபறியாகும். அஷ்டமத்துச் சனி தொடர்வதால் கடந்த காலத்தில் ஏற்பட்ட ஏமாற்றங்கள், இழப்புகளை நினைத்து அவ்வப்போது பெருமூச்சுவிடுவீர்கள். அரசியல்வாதிகளே! எந்த கோஷ்டியிலும் சேராமல் நடுநிலையாக இருக்கப்பாருங்கள். கன்னிப் பெண்களே! பெற்றோருக்கு சில ஆலோசனைகள் வழங்குவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் லாபம் குறையாது. உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். கடின உழைப்பால் இலக்கை எட்டும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 11, 13, 17 அதிஷ்ட எண்கள்: 2, 4 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட் அதிஷ்ட திசை: தென்மேற்கு

  • குடும்ப நலனுக்காக ஓடி ஓடி உழைக்கும் நீங்கள், தன்னலம் இல்லாத தியாகியைப் போல் வாழ்பவர்கள். சப்தமாதிபதி செவ்வாய் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. தடைப்பட்ட கல்யாணம் கூடி வரும். பெரிய பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிட்டும். மகனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். பூர்வீக சொத்தை சீர் திருத்தம் செய்வீர்கள். சகோதரிக்கு வேலைக் கிடைக்கும். அரசாங்க அதிகாரிகள் உதவுவார்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். குலதெய்வக் கோவிலுக்கு சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள். ராகு, கேது, குரு மற்றும் சனி உங்களுக்கு சாதகமாக இல்லாததால் ஒருவித படபடப்பு, ஏமாற்றம், சின்ன சின்ன இழப்புகள், சோர்வு, களைப்பு, வீண் கவலைகள், கை, கால் வலி வந்து நீங்கும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். அரசியல்வாதிகளே! சகாக்களைப் பற்றிக் குறைக் கூற வேண்டாம். கன்னிப் பெண்களே! சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர புது சலுகைத் திட்டங்களை அறிமுகப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் அதிகாரிகளைப் பற்றி விமர்சிக்க வேண்டாம். போராட்டங்களை கடந்து முன்னேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 12, 15, 16 அதிஷ்ட எண்கள்: 1, 9 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ஆலிவ்பச்சை அதிஷ்ட திசை: வடக்கு

  • எல்லோரும் நல்லவர்களே என நினைக்கும் நீங்கள் தன்னைச் சுற்றியிருப்பவர்கள் சுகமாய் வாழ பாடுபடுவீர்கள். முக்கிய கிரகங்கள் சாதகமாக இருப்பதால் நினைத்ததை முடிப்பீர்கள். புகழ், கௌரவம் பல மடங்கு உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். புதிதாக வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல திட்டமிடுவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தை உணர்வார்கள். அரசு சம்பந்தப் பட்ட விஷயங்கள் சாதகமாக முடியும். பழைய மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். கேதுவும், குருவும் சாதகமாக இல்லாததால் வேலைச்சுமை, மனயிறுக்கம், சிறுசிறு விபத்துகள், பசியின்மை வந்து செல்லும். கன்னிப்பெண்களே! கனவுத் தொல்லை, முகப் பரு வந்து நீங்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அரசியல்வாதிகளே! தலைமையின் ஆணையை மீறி தனி ஆவர்த்தனம் வேண்டாம். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். தொட்ட காரியம் துலங்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 13, 15, 17 அதிஷ்ட எண்கள்: 2, 8 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெள்ளை அதிஷ்ட திசை: தெற்கு

  • சமூக விழிப்புணர்வு கொண்ட நீங்கள், அடித்தட்டு மக்களை அரும்பாடுபட்டு முன்னேற்றுவீர்கள். சுக்ரன் சாதகமாக இருப்பதால் புத்திசாலித்தனம் வெளிப்படும். வாராது என்று நினைத்திருந்த பணம் வரும். வெள்ளிச் சாமான்கள் வாங்குவீர்கள். அவருக்கு தொழிலில் முன்னேற்றம் உண்டு. பிள்ளைகளால் மரியாதைக் கூடும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். பழைய இடத்தை விற்று புது வீடு வாங்குவீர்கள். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். அரசால் ஆதாயமடைவீர்கள். மூத்த சகோதரிக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உறவினர்கள், தோழிகள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால் அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். இடம், பொருள், ஏவலறிந்துப் பேசப்பாருங்கள். பழைய பிரச்னைகள் மீண்டும் வந்துவிடுமோ என்ற அச்சம் வரும். மச்சினருக்கு வேலைக் கிடைக்கும். அரசியல்வாதிகளே! கட்சி மேல்மட்டம் உங்களை நம்பி சில ரகசியப் பொறுப்புகளை ஒப்படைக்கும். கன்னிப் பெண்களே! கசந்த காதல் இனிக்கும். தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு உயரதிகாரி வியப்பார். சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 12, 14, 16 அதிஷ்ட எண்கள்: 1, 7 அதிஷ்ட நிறங்கள்: பழுப்பு, மெரூண் அதிஷ்ட திசை: கிழக்கு

  • மனதில் பட்டதை பளிச்சென்று பேசும் நீங்கள், சில நேரங்களில் கறாராகவும் நடந்து கொள்வீர்கள். செவ்வாய் ஆட்சிப் பெற்று 4-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் அலுப்பு, சலிப்பு நீங்கும். கறாராகப் பேசி பல வேலைகளையும் முடித்துக் காட்டுவீர்கள். வி.ஐ.பிகள் நண்பர்களாவார்கள். ஒரு சொத்தை விற்று சில பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள். உறவினர்கள், தோழிகளின் வருகையால் உற்சாகமடைவீர்கள். 4-ல் சனியும், ராசிக்குள் குருவும், ராகுவும் தொடர்வதால் இன்பெக்ஷன், தோலில் தடிப்பு, அல்சர், வாய்ப் புண், காரியத் தாமதம், முன்கோபம் வந்து செல்லும். சிறுசிறு விபத்துகளும் வரக்கூடும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதித்துக் கொள்வது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். மற்றவர்கள் விவகாரத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம். அரசியல்வாதிகளே! மேலிடம் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். கன்னிப் பெண்களே! உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன் அமையும். வியாபாரம் சுமாராக இருக்கும். வேலையாட்களால் விரையம் வரும். உத்யோகத்தில் ஒரே நேரத்தில் பல வேலைகளை பார்க்க வேண்டி வரும். விட்டுக் கொடுக்க வேண்டிய வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 14, 16, 17 அதிஷ்ட எண்கள்: 5, 8 அதிஷ்ட நிறங்கள்: வெளிர்நீலம், சிவப்பு அதிஷ்ட திசை: தென்கிழக்கு

  • பதவிக்காக ஆசைப்படாத நீங்கள், தகுதியிருந்தும் தள்ளியிருப்பீர்கள். பொதுவாக அமைதியை விரும்புவீர்கள். செவ்வாயும், சனியும் 3-ம் வீட்டில் வலுவாக இருப்பதால் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பணப்புழக்கம் அதிகமாகும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பாதியில் முடங்கிக் கிடந்த வீடு கட்டும் பணி முழுமையடையும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிள்ளைகள் தங்கள் தவறை உணருவார்கள். பழைய சொந்தங்கள் தேடி வரும். வெளிநாட்டிலிருப்பவர்கள், வேற்றுமதத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். புது வேலைக் கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். ஷேர் லாபம் தரும். சூரியன் சாதகமாக இல்லாததால் அடி வயிற்றில் வலி, வேனல் கட்டி, வீண் டென்ஷன் வந்துப் போகும். குரு 12-ல் மறைந்திருப்பதால் தூக்கமின்மை, இழப்பு, ஏமாற்றம் வந்துச் செல்லும். அரசியல்வாதிகளே! வீண் விமர்சனங்களை தவிர்த்து, செயலில் அக்கறை காட்டுங்கள். கன்னிப் பெண்களே! பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில திட்டங்கள் தீட்டுவீர்கள். வியாபாரத்தில் வெளிநாட்டு தொடர்புடைய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் உங்களுடைய புது முயற்சிகளை ஆதரிப்பார்கள். தொலைநோக்குச் சிந்தனையால் வெற்றி பெறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 15, 16, 17 அதிஷ்ட எண்கள்: 4, 6 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், சில்வர்கிரே அதிஷ்ட திசை: வடகிழக்கு

  • தாராளமாக தர்மம் செய்யும் நீங்கள், பழைய கலைப்பொருட்களை பாதுகாப்பவர்கள். ராகுவும், குருவும் லாப வீட்டிலேயே தொடர்வதால் மனோ பலம் அதிகரிக்கும். தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். திருமணப் பேச்சு வார்த்தைக் கைக்கூடும். குழந்தை பாக்யம் கிட்டும். மகள் உங்களைப் புரிந்துக் கொள்வாள். வீடு, வாகன வசதிப் பெருகும். வழக்கு சாதகமாக திரும்பும். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். சொந்த-பந்தங்களின் அன்புத்தொல்லை குறையும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். சுக்ரன் 6-ல் மறைந்திருப்பதால் சளித் தொந்தரவு, தொண்டைப் புகைச்சல், மின்னணு, மின்சார சாதனப் பழுது வந்து நீங்கும். அரசியல்வாதிகளே! ஆதாரமில்லாமல் எதிர்கட்சிக்காரர்களை விமர்சித்து பேசாதீர்கள். கன்னிப் பெண்களே! காதலில் தெளிவு பிறக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்கள் கோரிக்கையை ஏற்பர். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 15, 16, 17 அதிஷ்ட எண்கள்: 1, 3 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், பிஸ்தாபச்சை அதிஷ்ட திசை: தென்கிழக்கு

  • வெளுத்ததெல்லாம் பாலென நினைத்தாலும் பேச்சில் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்றே இருப்பீர்கள். சுக்ரன் சாதகமாக இருப்பதால் பிரச்னைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். பிரபலங்களின் உதவியால் இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். குலதெய்வப் பிரார்த்தனைகளை முடிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. புதனும் 6-ல் மறைந்திருப்பதால் நரம்புச் சுளுக்கு, தொண்டை வலி, உறவினர், தோழிகளுடன் மோதல்கள் வந்துச் செல்லும். 10-ல் ராகுவும், குருவும் தொடர்வதால் வேலைச்சுமையால் டென்ஷன் அதிகமாகும். வாக்குறுதிகளை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். வழக்கால் நிம்மதி குறையும். கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும். ஜென்மச் சனியும் நீடிப்பதால் மூச்சுத் திணறல், செரிமானக் கோளாறு, வயிற்று உப்புசம், நெஞ்சு எரிச்சல் வந்துப் போகும். சாப்பாட்டில் உப்பை குறைத்துக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகளே! கட்சியின் மூத்த உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசுவீர்கள். கன்னிப் பெண்களே! உங்களின் தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். அலுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டிய வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 12, 15, 17 அதிஷ்ட எண்கள்: 2, 7 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், பழுப்பு அதிஷ்ட திசை: வடமேற்கு

  • காலங்களும், காட்சிகளும் மாறினாலும் கலாச்சாரத்தை விட்டுக் கொடுக்காமல் வாழ்பவர்களே! கேது 3-ம் வீட்டில் வலுவாக நீடிப்பதால் புதிய திட்டங்கள் உதயமாகும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். கௌரவப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அதிகாரப் பதவிகள் தேடி வரும். தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணி தொடரும். பிள்ளைகளிடம் குவிந்துக் கிடக்கும் திறமைகளை இனம் கண்டறிந்து வளர்ப்பீர்கள். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். அரசால் ஆதாயமடைவீர்கள். வழக்கு சாதகமாகும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். ஏழரைச் சனி தொடர்வதால் பழைய கசப்பான அனுபவங்கள் நினைவுக்கு வரும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்தினாலும் மீண்டு வெளியே வருவீர்கள். அரசியல்வாதிகளே! அநாவசியமாக எதிர்கட்சிக்காரர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். கன்னிப் பெண்களே! நல்ல வரன் அமையும். வேற்றுமதத்தை சேர்ந்தவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். கமிஷன் மூலம் பணம் வரும். கடையை வேறு இடத்திற்கு மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சாதுர்யமான பேச்சால் சாதிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 13, 14, 16 அதிஷ்ட எண்கள்: 3, 6 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே அதிஷ்ட திசை: வடக்கு

  • சரிநிகர் சமத்துவத்திற்காக போராடும் நீங்கள், ஆண்டவன் படைப்பில் அடிமை யாருமில்லை என்று நினைப்பீர்கள். சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால் முயற்சிகள் கைக்கூடும். திடீர் யோகம் உண்டு. குழப்பம் நீங்கும். தைரியம் பிறக்கும். உங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். கடனாக கொடுத்தப் பணம் கைக்கு வரும். கணவரின் நம்பிக்கையை பெறுவீர்கள். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துக் கொள்வார்கள். வழக்கால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வீட்டில் கூடுதல் அறைக் கட்டுவது, தளம் அமைப்பது போன்ற முயற்சிகள் சாதகமாக முடியும். அரசாங்க அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். விலகிச் சென்ற தோழிகள் விரும்பி வருவார்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை உணர்வீர்கள். கோவில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. ராகு, கேது மற்றும் குரு உங்களுக்கு சாதகமாக இல்லாததால் முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளுங்கள். மற்றவர்களுக்காக ஜாமீன் கையப்பமிட வேண்டாம். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளே! எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். கன்னிப் பெண்களே! ஆடை, ஆபரணம் சேரும். பெற்றோரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திறமைகள் வெளிப்படும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 12, 13, 16 அதிஷ்ட எண்கள்: 1, 5 அதிஷ்ட நிறங்கள்: கிளிபச்சை, ஊதா அதிஷ்ட திசை: வடமேற்கு

  • கால ஓட்டத்தை உணர்ந்து அதற்கேற்ப காய்களை நகர்த்தும் வல்லமை கொண்ட நீங்கள் எப்போதும் எளிமையை விரும்புவீர்கள். குரு, செவ்வாயும் சாதகமாக இருப்பதால் உங்களுடைய நிர்வாகத் திறமை அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். உறவினர் வீட்டு விசேஷங்களை எடுத்து நடத்துவீர்கள். தோற்றப் பொலிவுக் கூடும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். பிள்ளைகளின் நட்பு வட்டம் விரியும். பூர்வீக சொத்தை மாற்றியமைப்பீர்கள். வெளியூர் பயணங்கள் சிறப்பாக அமையும். கடன் பிரச்சனைகள் ஒரு பக்கம் விரட்டினாலும் இங்கிதமாகப் பேசி வட்டியை தருவீர்கள். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததால் முன்கோபம் அதிகமாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். யாரையும் எளிதில் நம்பி விடாதீர்கள். அரசு காரியங்கள் தள்ளிப் போய் முடியும். அரசியல்வாதிகளே! தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். கன்னிப் பெண்களே! பெற்றோர் உங்களின் புது முயற்சிகளை ஆதரிப்பார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரி மனம் விட்டுப் பேசுவார். காத்திருந்து காய் நகர்த்தும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 13, 15, 17 அதிஷ்ட எண்கள்: 3, 7 அதிஷ்ட நிறங்கள்: வெளிர்மஞ்சள், பிங்க் அதிஷ்ட திசை: கிழக்கு

  • உள்மனது சொல்வதை மட்டும் செய்யும் நீங்கள், தகுதியற்றவர்களை புகழமாட்டீர்கள். ராகு வலுவாக 6-ல் நிற்பதால் சமூகத்தில் அந்தஸ்து ஒருபடி உயரும். உங்களிடம் இருக்கும் சின்ன சின்ன பலவீனங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமென்ற முடிவுக்கு வருவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. சிலர் புதிதாக வீடு கட்டத் தொடங்குவீர்கள். மகளுக்கு இருந்து வந்த கோபம் குறையும். மகன் குடும்ப சூழ்நிலையை உணர்ந்து பொறுப்பாக நடந்துக் கொள்வார். பாகப்பிரிவினை நல்ல விதத்தில் முடிவடையும். சிலருக்கு புது வேலைக் கிடைக்கும். புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள். சூரியனும், குருவும் சாதகமாக இல்லாததால் ஹார்மோன் பிரச்னை, கண் வலி, பார்வைக் கோளாறு, கணுக்காலில் அடிப்படுதல், வீண் பழி எல்லாம் வந்துச் செல்லும். அரசியல்வாதிகளே! தலைமையின் ஆணையை மீறி தனி ஆவர்த்தனம் வேண்டாம். கன்னிப் பெண்களே! நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த தோழியை சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் கடையை விரிவுப்படுத்துவது, அழகுப்படுத்துவது, புது ஏஜென்சி எடுப்பது, புது கிளைகள் தொடங்குவது இவையெல்லாம் சாதகமாக அமையும். உத்யோகத்தில் எவ்வளவு உழைத்தும் நல்ல பெயர் இல்லை என்று ஆதங்கப்படுவீர்கள். நேர்மறை எண்ணங்களால் சவால்களில் வெற்றி பெறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 11, 15, 17 அதிஷ்ட எண்கள்: 4, 8 அதிஷ்ட நிறங்கள்: கருநீலம், க்ரீம் வெள்ளை அதிஷ்ட திசை: தென்கிழக்கு

http://www.kathiravan.com/?page_id=1302
Share with your friends










Submit