கதிரவனுக்காகக் கணித்து எழுதியவர் ஜோதிடமணி பிரம்மஸ்ரீ ரகுநாத ஐயர் தமிழ்நாடு, இந்தியா
-
வாழ்க்கை தரம் உயரும். எதிர்பாராத திருப்புமுனை இருக்கும். எதிர்கால நலன் பற்றிய சிந்தனை மனதினை ஆக்கிரமிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுப விசேஷங்கள் நடைபெறும் வாய்ப்பு உண்டு. பேச்சில் நகைச்சுவை கலந்திருக்கும். எவர் மனமும் புண்படாத வண்ணம் பேசுவதில் அதிக கவனம் செலுத்துவீர்கள். மீடியாக்களில் வரும் விவாத நிகழ்ச்சிகளில் ஆர்வம் கொள்வீர்கள். உறவினர்களின் வீட்டு விசேஷங்களில் முக்கியப் பொறுப்புகளை சுமக்க நேரிடும். கலைத்துறையினருக்கு எதிர்பாராத அலைச்சல் உண்டாகும். பிள்ளைகளின் கல்வி நிலை குறித்து கவலை கொள்வீர்கள். மாணவர்களுக்கு வீணான கற்பனையால் உண்டாகும் பயம் மன அழுத்தத்தைத் தரலாம். தம்பதியருக்குள் புரிந்துகொள்ளும் தன்மை கூடும். குடும்பப் பெரியவர்களின் ஆதரவோடு பூர்வீக சொத்து விவகாரங்களில் ஆதாயம் காண்பீர்கள். புதிதாக வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கு நேரம் சாதகமாக அமையும். உத்யோகம் பார்ப்போர் அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வினை அடைவர். திருப்புமுனையைத் தரும் வாரம் இது
-
சுறுசுறுப்பு கூடும். எந்த ஒரு காரியத்திலும் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவீர்கள். வாழ்க்கைத் தரம் உயர்வடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பண வரவு சிறப்பாகி பொருளாதார நிலை உயர்வடையும். சொன்ன வாக்கை காப்பாற்ற அதிக கவனம் கொள்வீர்கள். எதிர்பாராத விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பு கூடும். கலைத்துறையினருக்கு திருப்புமுனை இருக்கும். மாணவர்கள் முழு ஈடுபாட்டோடு செயல்பட்டு வெற்றி காண்பர். உடன்பிறந்தோருக்கு உதவி செய்ய நேரிடும். உறவினர்கள் தங்கள் வீட்டுப் பிரச்னைக்கு தீர்வு காண உங்களை நாடி வருவர். தம்பதியருக்குள் உறவு மேம்படும். பிள்ளைகளின் வழியில் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். எண்ணெய் பலகாரங்களைத் தவிர்ப்பது உடல்நலத்திற்கு நல்லது. குடும்பப் பெரியவர்களுக்குப் பணிவிடை செய்வதில் அதிக கவனம் செலுத்துவீர்கள். பணிக்குச் செல்வோர் அலுவலகத்தில் தங்கள் திறமையின் காரணமாக பதவி உயர்வினைக் காண்பர். கவுரவம் உயரும் வாரம் இது.
-
அலைச்சல் குறையும். நினைத்ததை சாதிப்பீர்கள். பேச்சில் அதிகாரம் இருக்கும். தள்ளிப்போட்டு வந்த காரியம் ஒன்றை முடிக்க கால நேரம் சாதகமாக அமையும். குடும்பத்தினரோடு மனஸ்தாபம் உருவாகலாம். பிரச்னைகளின் போது விவாதம் செய்யாமல் அமைதி காப்பது நல்லது. கலைத்துறையினருக்கு பண விவகாரங்களில் கூடுதல் கவனம் தேவை. அரசு தரப்பிலிருந்து எதிர்பார்த்த உதவி கிட்டும். செல்போன் முதலான தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் பணிச்சுமையை குறைக்கும். திடீர் பிரயாண வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் சுறுசுறுப்பான செயல்களைக் கண்டு பெருமிதம் கொள்வீர்கள். படபடப்பு, பித்தம், தலைசுற்றலால் உடல் அசதி ஏற்படும். வாழ்க்கைத்துணையோடு கலந்தாலோசித்து முக்கியமான விஷயங்களில் முடிவெடுக்க இயலாது தடுமாற்றம் அடைவீர்கள். வேலைக்குச் செல்வோர் அலுவலகத்தில் உடன் பணிபுரிவோரால் சில தொல்லைகளை சந்திப்பர். மாணவர்கள் தங்கள் முன்னேற்றத்திற்கு நண்பர்களை சார்ந்திருக்க நேரிடும். அறிவுத்திறனால் காரியத்தை சாதிக்கும் வாரம் இது.
-
பணிச்சுமை கூடும். எடுத்த பணிகள் எளிதில் முடியாமல் இழுபறி தரும். சாதாரண வேலையைக் கூட அதிக அலைச்சலுக்குப் பின்னரே சாதிக்க இயலும். குடும்பத்தில் அமைதி நிலவும். உங்கள் வார்த்தைகள் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் முக்கியத்துவம் பெறும். பொருளாதார நிலை உயர்வடையும். எனினும் குடும்பத்தில் சுபசெலவுகள் தொடரும். உறவினர் ஒருவர் உதவி கேட்டு செய்ய இயலாது போய் வீண் மனஸ்தாபம் தோன்றும். பொருட்களை எங்காவது மறதியாக வைத்துவிட்டு அல்லல்படுவீர்கள். கலைத்துறையினர் எதிர்பார்த்த காரியங்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக அமையும். பிள்ளைகளின் சுறுசுறுப்பான செயல்கள் உங்கள் கவுரவத்தை உயர்த்தும். அதிக அலைச்சலால் உடல் அசதிக்கு உள்ளாகும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகள் உரிய நேரத்தில் பயன்தரும். குடும்பப் பெரியவர்களோடு அநாவசிய கருத்து வேறுபாடு தோன்றலாம். வேலை பார்ப்போருக்கு அலுவலகத்தில் மதிப்பு கூடும். மாணவர்கள் எதிர்பார்த்த கல்விப்பிரிவில் இடம்பெற கூடுதலாக செலவழிக்க நேரும். பணிச்சுமை கூடும் வாரம் இது.
-
சுறுசுறுப்பு கூடும். எதிலும் உரிய கவுரவம் எதிர்பார்ப்பீர்கள். பிடிக்காதவர்களிடம் இருந்து விலகி இருப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சொல்ல நினைப்பதை நகைச்சுவையுடன் கறாராக வெளிப்படுத்துவீர்கள். புத்திசாலித்தனத்தால் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள குடும்பப் பிரச்னை ஒன்றிற்கு தீர்வு காண்பீர்கள். முன்பின் தெரியாத பெண்களால் ஏமாற்றப்படும் வாய்ப்பு உண்டு. கலைத்துறையினர் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உறவினர் ஒருவர் பணஉதவி கேட்டு உங்களை நாடி வரக்கூடும். பிள்ளைகளின் வழியில் சுபசெலவுகள் தோன்றும். இதய நோய் உள்ளவர்கள் உடல்நிலையில் சிறப்பு கவனம் அவசியம். வாழ்க்கைத்துணையின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வைப்பீர்கள். பணிக்குச் செல்வோர் அலுவலகத்தில் தனித்துவத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவார்கள். உயர்கல்வி மாணவர்கள் எதிர்பார்த்த பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும் நேரம் இது.
-
நினைத்த காரியத்தை சாதிக்க மதியூகத்தைப் பயன்படுத்துவீர்கள். அடுத்தவர்கள் அசந்து போகும் வண்ணம் உங்கள் செயல்திட்டங்கள் அமையும். யாருடைய மனமும் நோகாவண்ணம் செயல்படுவதோடு உங்கள் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்வீர்கள். குடும்பத்தில் புதிய பிரச்னைகள் தோன்றும். கடன் தொல்லை குறையும். சொன்ன சொல்லை காக்க சிரமப்படுவீர்கள். அரசு தரப்பிலிருந்து எதிர்பார்த்த உதவி கிட்டும். கலைத்துறையினருக்கு புதிய முயற்சிகள் விரயம் தரும். முக்கியமான நேரத்தில் செல்போன் முதலான தகவல் தொடர்பு சாதனங்கள் செயலிழந்து இழப்புகளை சந்திக்க நேரிடும். உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். மாணவர்கள் எதிர்பார்த்த பாடப்பிரிவில் எளிதாக இடம் கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாதமான செயல்கள் வருத்தம் தரும். உடல்நிலையில் சிறப்பு கவனம் தேவை. தம்பதியராக இணைந்து செய்யும் காரியங்களில் உடனுக்குடன் வெற்றி கிடைக்கும். உத்யோகம் பார்ப்போருக்கு அலுவலகத்தில் பணிச்சுமை உயரும். மனதில் மகிழ்ச்சி நிலவும் வாரம் இது
-
சங்கடங்களை சந்திக்க நேரும். எனினும் கவுரவம் கூடும். விருந்தினரை உபசரித்து உயர்வு காண்பீர்கள். நினைப்பது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருந்து மனம் வருந்தும். நெருக்கமானவர்களோடு மட்டும் மனநிலையைப் பகிர்ந்து கொள்வது நல்லது. குடும்ப உறுப்பினர்கள் உங்களை விட்டு விலகி நிற்பது போல் எண்ணுவீர்கள். எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் வெளிப்படையாகப் பேசுவது நல்லது. அண்டை வீட்டாரால் சங்கடங்களை சந்திக்க நேரும். அநாவசிய பிரயாணத்தைத் தவிர்ப்பது நன்மை தரும். உறவினர் வழியில் கலகம் உண்டாகலாம். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கவனம் தேவை. வாழ்க்கைத்துணையின் மனநிலையைப் புரிந்துகொண்டு அவருக்கு சாதகமாகப் பேசி சமாளிப்பீர்கள். கலைத்துறையினருக்கு செலவு கூடி கையிருப்பு கரையும். நெடுநாளைய கடன் பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். பணிக்குச் செல்வோர் அலுவலகத்தில் மேலதிகாரியின் பாராட்டு பெறுவர். மாணவர்கள் விரும்பிய பாடப்பிரிவில் இடம்பெற சற்று போராட வேண்டியிருக்கும். வளர்ச்சி தரும் வாரமிது
-
சுறுசுறுப்பாக செயல்பட்டு நினைத்த காரியத்தினை சாதித்துக் கொள்வீர்கள். எந்த ஒரு காரியத்தையும் உரிய விதிப்படி செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சலசலப்பு தோன்றி மறையும். குடும்பத்தினர் மத்தியில் உங்கள் வார்த்தைகள் முக்கியத்துவம் பெறும். சேமிப்பு சீரடையும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும் வாய்ப்பு உண்டு. நண்பர்களுக்கு அவ்வப்போது அறிவுரை கூறி வருவீர்கள். கலைத்துறையினர் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உறவினர்களால் உண்டான கலகங்கள் மறையும். புதிய வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கு நேரம் சாதகமாக அமையும். பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டியது அவசியம். உஷ்ணத்தின் காரணமாக உடலில் உபாதைகள் தோன்றலாம். தம்பதியருக்குள் கருத்து வேறுபாடு தோன்றி மறையும். பூர்வீக சொத்து விவகாரங்களில் புதிய பிரச்னை தோன்றும். பணிக்குச் செல்வோர் அலுவலகத்தில் உடன்பணிபுரிவோரை சார்ந்திருக்க நேரிடும். மாணவர்கள் எதிர்பார்த்த பாடப்பிரிவில் எளிதில் இடம்பிடிப்பர். நன்மை தரும் வாரம் இது.
-
வீண் பிரச்னைகளை சந்திக்க நேரலாம். சம்பந்தமில்லாத விவகாரங்களில் தலையிடுவது கூடாது. அடுத்தவர்களுக்கு உதவ போய் உபத்திரவத்திற்கு ஆளாகும் வாய்ப்பு உண்டு. சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் கவனம் செலுத்தி எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது அவசியம். குடும்பத்தில் அமைதி நிலவும். கடன் பிரச்னைகள் தலையெடுத்து பொருளாதார சிக்கல்களை சந்திப்பீர்கள். பிரச்னைகளை தவிர்க்க பேச்சில் கூடுதல் எச்சரிக்கை அவசியம். நேரத்தை உணர்ந்துகொண்டு அதிகம் பேசாது அமைதி காப்பது நல்லது. தம்பதியருக்குள் வீண் மனஸ்தாபம் உண்டாகலாம். பிரயாணத்தின் போது பொருளிழப்பு உண்டாகக் கூடும். பிள்ளைகளின் சுறுசுறுப்பான செயல்கள் உங்களுக்கு பெருமை தேடி தரும். உடல் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியம். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்பு தேடி வரும். மாணவர்கள் போட்டியான சூழலை உணர்வர். உத்யோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் வந்து சேரும். எதிலும் அவசரப்படாமல் நிதானத்தோடு செயல்பட வேண்டிய வாரம் இது.
-
சாதகமான சூழ்நிலையால் சுகத்திற்கு குறைவிருக்காது. நீண்ட நாள் ஆசை ஒன்று நிறைவேறும். மனதில் மகிழ்ச்சி குடிபுகும். குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் கலந்திருக்கும். செலவுகளை சமாளிக்கும் வகையில் வரவு உயரும். மனதில் உள்ளதை மறைக்காமல் வெளிப்படையாகப் பேசுவதால் சிலரோடு மனஸ்தாபம் தோன்றலாம். நண்பர்களிடம் எச்சரிக்கை தேவை. புதிய ஃபர்னிச்சர்கள், ஆடை, ஆபரணங்கள், அலங்காரப் பொருட்கள் வாங்குவீர்கள். வாழ்க்கை தரத்தினை உயர்த்திக் கொள்வதில் அதிக கவனம் செலுத்துவீர்கள். உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். நீண்ட நாள் கடன் பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். பிள்ளைகளின் வழியில் மனதிற்கு பிடித்தமான சம்பவங்கள் நிகழும். கழுத்து, தோள், முதுகுவலியால் அவதி இருக்கும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகள் வெற்றிக்கு துணைபுரியும். பணிக்குச் செல்வோருக்கு அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். கலைத்துறையினர் வாய்ப்பை பயன்படுத்தி கொள்வர். மாணவர்கள் விரும்பிய பாடப்பிரிவில் இடம்பிடிப்பர். சுகம் தரும் வாரம் இது.