இராசிபலன்கள் 10-2-2017 முதல்17-2-2017 வரை

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

வார பலன், ஜாதகம், Weekly Astrology Tamil, Weekly Astrology In Tamil, Tamil Weekly Astrology, Tamil Astrology For This Week, Tamil Astrology Weekly Predictions, Astrology In Tamil, Free Tamil Astrology, Tamil Astrology Horoscope, Tamil Astrology Rashi, Tamil Astrology Rashi Chart

கதிரவனுக்காகக் கணித்து எழுதியவர் ஜோதிடமணி பிரம்மஸ்ரீ ரகுநாத ஐயர் தமிழ்நாடு, இந்தியா

 • மனதில் தர்ம சிந்தனைகள் முக்கிய இடம் பிடிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் பேச்சு எதிராளிகள் மனதை புண்படுத்தக்கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் பேசுவது நல்லது. குடும்ப பொருளாதார நிலை உயரும். ஆடம்பர செலவுகள் கூடும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே உள்ள சலசலப்பை களைய முற்படுவீர்கள். எதிலும் தைரியத்துடன் செயல்பட்டு இறங்கிய காரியங்களில் வெற்றி காண்பீர்கள். புதிய மனை, வீடு வாங்குவதற்கு ஏற்ற காலமாக அமையும். மாணவர்களின் அறிவுத்திறன் வளரும். பிரயாணங்களினால் ஆதாயம் காண்பீர்கள். கேளிக்கை, கொண்டாட்டங்கள், விருந்துகளை அதிகம் விரும்புவீர்கள். பிள்ளைகள் குறித்த சிந்தனை மனதினில் பிரதானமாக இடம்பிடிக்கும். நேரத்திற்கு உணவருந்தி உடல்நிலையைப் பராமரிப்பது நல்லது. வாழ்க்கைத்துணை உங்களுக்கு மிகுந்த பக்கபலமாக செயல்படுவார். கலைத்துறையினர் கூடுதல் அலைச்சல் இருக்கும். பூர்வீக சொத்துகள் ஆதாயம் தரும். தொழில் ரீதியாக கூடுதல் அலைச்சலை சந்தித்தாலும் நல்ல தனலாபம் அடைவீர்கள். நன்மை தரும் வாரம் இது.

 • எண்ணிய காரியங்களில் தொடர்ந்து வெற்றி பெறுவீர்கள். முறையாகத் திட்டமிட்டு வைத்திருக்கும் செயல்களில் வேகம் கூடும். வரவிற்கு குறைவிருக்காது. ஆயினும் தான தருமங்களை அளவோடு செய்வது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடன்பிறந்தோரின் செயல்கள் சில நேரத்தில் தர்மசங்கடங்களை உருவாக்கும். அஞ்சல் வழி போக்குவரத்து, தகவல் தொடர்பு சாதனங்களில் உண்டாகும் தாமதங்களால் இழப்புகள் ஏற்படும். வாகனங்களில் பயணிக்கும்போது கூடுதல் கவனம் நல்லது. மாணவர்களின் கல்விநிலை உயரும். இறங்கிய செயல்களில் வெற்றி பெறுவது குறித்து சிந்தித்து ெசயலாற்றி எடுத்த காரியத்தை செய்து முடிக்கும்வரை ஓயமாட்டீர்கள். வாழ்க்கைத்துணையின் உறவினர்களால் நன்மைகள் உண்டாகும். கவுரவ செலவுகள் கூடும். ஆன்மிகப் பயண வாய்ப்புகள் உண்டு. கூட்டுத்தொழில் செய்பவர்கள் ஏற்றம் பெறுவர். அலுவலகத்தில் உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கும். கலைத்துறையினர் நினைத்ததை சாதிப்பர். நற்பலன்களைத் தரும் வாரம் இது.

 • நற்பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளுக்கான வாய்ப்புகள் உருவாகும். வரவு திருப்தியாக இருந்தாலும் கூட கைச்செலவிற்கு பணம் இல்லாது போகும். பெரிய அளவிலான முதலீடுகள் தொடரும். ஆயினும் சில்லறை செலவுகளுக்கு தட்டுப்பாடு இருக்கும். உடன்பிறந்தோரால் தர்ம சங்கடமான சூழ்நிலைக்கு ஆளாகக் கூடும். மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். திடீர் பிரயாணங்களுக்கான வாய்ப்புகள் உண்டு. தாயார் வழி சொத்துக்களினால் ஆதாயம் உண்டாகும். செய்ய நினைக்கும் செயல்களை மிக லாவகமாக செய்து முடிப்பதில் அதிக கவனம் செலுத்துவீர்கள். உடல்நிலை சீராக இருந்து வரும். வாழ்க்கைத்துணையின் செயல்களுக்கு உறுதுணையாக செயல்படுவீர்கள். குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்காக கூடுதலாக செலவு செய்ய வேண்டி வரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். கலைத்துறையினரின் தொழில்நிலை சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் உத்யோக உயர்விற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரிகள் சீரான தன லாபம் பெறுவார்கள். நற்பலனை காணும் வாரம் இது.

 • எதிலும் தனித்து செயல்படாது நண்பர்களோடு கூட்டுச் சேர்ந்து செயல்படுவது நல்லது. நண்பர்களை நம்பி ஒப்படைத்த காரியம் பூர்த்தி அடையும். வரவில் சுணக்கம் காண்பீர்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்ற சிரமம் இருக்கும். எச்சூழலிலும் தைரியம் இழக்காது செயல்படுவீர்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் பணிகளுக்கு துணைநிற்கும். மாணவர்கள் நண்பர்களோடு இணைந்து படிக்கும் கூட்டுப்பயிற்சி மூலம் கல்வித்தரத்தை உயர்த்தி கொள்வது நல்லது. பிரயாணங்களின்போது புதிய நண்பர்கள் சேருவார்கள். மனதை கற்பனைகள் அதிகம் ஆக்கிரமிக்கும். உடல்நிலையில் கூடுதல் கவனம் அவசியம். வாழ்க்கைத்துணை உங்களுக்கு மிகுந்த பக்கபலமாக இருந்து செயல்படுவார். குடும்பத்தில் நிம்மதி நிலவும். சுப செலவுகள் உண்டாகும். பூர்வீக சொத்துகளில் பாகப்பிரிவினைக்கான வாய்ப்புகள் உண்டு. கலைத்துறையினர் வெற்றி காண்பார்கள். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வு எதிர்பார்க்கலாம். நேரிடையாக செயல்படாது உடனிருப்பவர்களை இயக்கி வெற்றி காண வேண்டிய வாரம் இது.

 • சிரமமான சூழ்நிலையை சந்திக்க உள்ளீர்கள். நினைப்பது ஒன்றும் நடப்பது ஒன்றுமாக இருந்து வருத்தம் தரும். அதிக எதிர்பார்ப்புகள் வருத்தத்தை தோற்றுவிக்க கூடும். உடன்பிறந்தோரின் செயல்கள் சங்கடம் தரும். தகவல் தொடர்பு, அஞ்சல் வழி போக்குவரத்தில் தாமதம் ஆகியவற்றால் இழப்புகள் உண்டாகக்கூடும் என்பதால் கூடுதல் கவனம் தேவை. மாணவர்களின் கல்வி நிலை உயரும். பிரயாணத்தின்போது பொருளிழப்பு உண்டாகும் வாய்ப்பு உள்ளதால் கூடுதல் கவனம் நல்லது. அதிதீவிர சிந்தனையால் உடல்நிலை பாதிக்கப்படும் என்பதால் கவனம் அவசியம். வாழ்க்கைத்துணையுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நண்பர்களுடனான சந்திப்பு மகிழ்ச்சி தரும். தகப்பனார் வழி சொத்துகள் ஆதாயம் தரும். கலைத்துறையினர் ஓயாது பணி செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும். தொழிலில் நஷ்டத்தை தவிர்க்க கூடுதல் கவனம் நல்லது. தனித்திறமையைக் கொண்டு சமாளிக்க வேண்டிய சரிசமபலனைத் தரும் வாரம் இது.

 • செயல்திறனில் வேகம் அதிகரிக்கும். அடுத்தவர்கள் செய்யத் தயங்கும் காரியங்களில்கூட மிகத் திறமையாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். பொருளாதார நிலையில் குறைவிருக்காது. குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பீர்கள். உடன்பிறந்தோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தகவல்தொடர்பு சாதனங்கள் மிகுந்த பயன் தரும். ஞாபக மறதித் இருந்தாலும் மாணவர்கள் தங்களின் அயராத முயற்சியால் வெற்றி காண்பார்கள். வாகனங்களால் செலவுகள் கூடும். தேவையற்ற சிந்தனைகளும், கற்பனைகளும் உங்களுக்கு மன உளைச்சலை உண்டாக்கலாம் என்பதால் தனிமையைத் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத்துணையின் கருத்துகளுக்கு துணை செல்வீர்கள். அவரது செயல்களுக்கு தகுந்த பக்கபலமாக இருப்பீர்கள். ஆன்மிக ஈடுபாடுகள் அதிகமாகும். செலவுகளைக் குறைக்கும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். தொழில் நிலையில் குறிப்பிடத் தகுந்த முன்னேற்றம் உண்டு. கலைத்துறையினருக்கு நல்ல தனலாபம் உண்டாகும். நன்மை தரும் வாரம் இது.

 • எதிலும் கூடுதல் எச்சரிக்கை மற்றும் கவனம் அவசியம். அடுத்தவர்களின் பிரச்னைகளில் தலையிடாமல் இருப்பது நலம். எடுத்த காரியம் இழுபறி தரும். குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்கு குறைவு நேராமல் பார்த்து கொள்வீர்கள். பொருளாதார நிலை திருப்தி தரும். உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு தோன்றும். அஞ்சல், தகவல் தொடர்பு பரிமாற்ற இடையூறுகளால் சிரமத்தை சந்திக்க நேரிடும். மாணவர்களின் கல்வித் தரம் உயரும். வாகனங்கள், பிரயாணங்களால் ஆதாயம் காண்பீர்கள். எதிர்கால நலனுக்கான திட்டங்கள் வகுத்துக் கொள்ள வேண்டிய நேரம் இது. உடல்நிலையில் அவசியம் கவனம் செலுத்தவேண்டிய நேரமிது. கொடுக்கல் வாங்கலை தவிர்க்கவும். நண்பர்களின் துணையோடு பல விஷயங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வாழ்க்கைத்துணையின் செயல்பாடுகள் உங்கள் வெற்றிக்கு பக்கபலமாக அமையும். கலைத்துறையினர் பொறுமை காக்க வேண்டிய நேரம் இது. பூர்வீக சொத்துகளில் பாகப்பிரிவினைக்கான வாய்ப்புகள் உருவாகும். தொழில்ரீதியாக அலைச்சல் கூடும். சுமாரான பலன்களைத் தரும் வாரம் இது.

 • பொருளாதார நிலை, வாழ்க்கை தரம் முன்னேற்றம் காணும். எடுத்த செயல்களில் கூடுதல் அலைச்சல் இருந்தாலும் அதற்கேற்ற ஆதாயம் இருக்கும். அதே நேரத்தில் ஆடம்பர செலவுகளும் அதிகமாகும். குடும்பத்திற்குத் தேவையான நவீன பொருட்கள் வாங்குவீர்கள். நேரம் நன்றாக இருப்பதால் செலவுகளைக் குறைத்துக்கொண்டு சேமிப்பில் ஈடுபடுவது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெண்களால் நன்மை உண்டாகும். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். புதிய வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கு சாதகமான நேரம் இது. பிள்ளைகளின் வாழ்வில் சுபநிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். ரத்தக்கொதிப்பு நோய் உள்ளவர்கள் உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம். வாழ்க்கைத்துணை உங்களது வார்த்தைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து செயல்படுவார். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் நற்பெயர் காண்பார்கள். சுயதொழில் செய்வோர் தொழிலில் புதிய அணுகுமுறையை கையாண்டு லாபம் பெறுவர். கலைத்துறையினர் புதிய முயற்சியில் ஈடுபடும் வாய்ப்பு உருவாகும். சிறப்பான நற்பலன்களை தரும் வாரம் இது.

 • சுகமான சூழலைத் தரும் காலத்தைக் காணவிருக்கிறீர்கள். மனதில் இனம் புரியாத கலக்கம் இருக்கும். பொருளாதார நிலை மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சேமிப்புகளில் கவனம் திரும்பும். நீண்ட நாட்களாக செய்யத் தயங்கி வந்த காரியங்களை மிகுந்த தைரியத்துடன் செய்து முடிப்பீர்கள். நிலுவையில் இருந்து வந்த சொத்துப்பிரச்னைகள் ஏதேனும் ஒருவகையில் முடிவிற்கு வரும். மாணவவர்களின் கல்வித்தரம் உயரும். வண்டி, வாகனங்களால் ஆதாயம் காண்பீர்கள். பிள்ளைகளின் தைரியமான செயல்பாடுகள் உங்களை பெருமை கொள்ளச் செய்யும். வாழ்க்கைத்துணையோடு லேசான கருத்துவேறுபாடு கொள்வீர்கள். நண்பர்களை நம்பி ஒப்படைத்த காரியங்களில் சுணக்கம் தோன்றும். பூர்வீக சொத்துக்களில் பாகப்பிரிவினை பற்றிய பேச்சுக்கள் தலையெடுக்கும். உத்யோக ரீதியாக தற்காலிக இடமாற்றத்தினை சந்திக்க நேரலாம். கலைத்துறையினர் சிறப்பான தனலாபத்தினைக் காண்பார்கள். நற்பலனைக் காணும் வாரம் இது.

 • செயல்வேகம் கூடும். வேகத்தோடு விவேகமும் வெளிப்படும். வாய்ப்பிற்காகக் காத்திருந்தது போல திறம்பட செயல்பட்டு நற்பெயர் காண்பீர்கள். உங்கள் வேகத்திற்குத் தடையாக இருப்பவர்கள் காணாமல் போவார்கள். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தினரின் மனமகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. வாய்க்கு ருசியான உணவு வகைகளை சூடாக உண்பதில் தனி ஆர்வம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களுக்கு உதவி செய்ய நேரிடும். அநாவசிய பிரயாணங்களைத் தவிர்ப்பது நல்லது. சிந்தனையில் இருந்த குழப்பங்களுக்குத் தீர்வு காண முயற்சிப்பீர்கள். வாழ்க்கைத்துணை உங்கள் செயல்களுக்கு பக்கபலமாக இருந்து செயல்படுவதோடு, உங்கள் நலனில் தனி அக்கறை கொள்வார். கவுரவம் கருதி செய்யும் செலவுகளைத் தவிர்க்க இயலாது. பெற்றோர் உடல்நிலையில் கவனம் தேவை. உத்யோகஸ்தர்கள் அதிக உழைப்பினை வெளிப்படுத்தி அலுவலகத்தில் நற்பெயர் காண்பார்கள். கலைத்துறையினருக்கு நற்பெயரோடு சிறப்பான தனலாபமும் உண்டாகும். நற்பலன்கள் காணும் வாரம் இது.

 • சங்கடங்களை சந்திக்க நேரும். குழப்பம் கூடும். செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சலசலப்பு தோன்றும். மகிழ்ச்சி தரும் நற்செய்திகள் வந்து சேரும். தகவல் தொடர்பு சாதனங்கள் பயனுள்ள வகையில் அமையும். உடன்பிறந்தோர் உதவிகரமாய் செயல்படுவார்கள். மாணவர்கள் கல்வியில் மேம்பட தீவிர பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. முடிந்தவரை பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் வழியில் கூடுதல் செலவுகள் உண்டாகலாம். கடன் கொடுக்கல் வாங்கலில் பிரச்னைகள் தோன்றும். எதிலும் கூடுதல் எச்சரிக்கை தேவை. வாழ்க்கைத்துணையுடன் கொண்ட கருத்துவேறுபாட்டை களைய முயற்சிப்பீர்கள். நண்பர்களை நம்பி ஒப்படைத்த செயல்களில் தாமதம் உண்டாகும். பெற்றோரின் உடல்நிலையில் தீவிர கவனம் அவசியம். பூர்வீக சொத்துகளில் சில பிரச்னைகள் தோன்றக்கூடும். தொழில் முறையில் கூடுதல் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். கலைத்துறையினர் நற்பெயர் காண்பார்கள். சரிசமபலனைத் தரும் வாரம் இது.

 • அலைச்சல் அதிகரிக்கும். பெயர், புகழ் உயரும். தர்ம சிந்தனைகள் மனதை ஆக்கிரமிக்கும். பொருளாதார சூழலில் ஏற்ற இறக்கம் இருக்கும். செலவுகளை சமாளிக்கும் வகையில் வரவு தொடரும். குடும்பத்தில் சலசலப்புகள் தோன்றி மறையும். வாக்குவன்மை அதிகரிக்கும். பேச்சில் கண்டிப்பு இருக்கும். உடன்பிறந்தோரின் அணுகுமுறை ஆறுதல் தரும். மாணவர்களின் கல்வி தரம் உயரும். திடீர் பிரயாணங்கள் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். பிள்ளைகளின் விருப்பத்திற்காக அதிகம் செலவழிக்க வேண்டி இருக்கும். வாழ்க்கைத்துணை உங்களுக்கு பக்கபலமாக இருந்து செயல்படுவார். நண்பர்கள் நலனுக்காக உதவி செய்வீர்கள். பிரயாணத்தின்போது புதிய நண்பர்கள் சேரும் வாய்ப்பு உண்டு. கலைத்துறையினரின் செயல்திறன் கூடும். தகப்பனார் வழி சொத்துகளில் வில்லங்கம் உண்டாவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் கூடுதல் கவனம் நல்லது. தொழில்நிலை சிறக்கும். உத்யோகஸ்தர்களில் சிலருக்கு பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டு. நற்பலன்களை தரும் வாரம் இது.

http://www.kathiravan.com/?page_id=1302
Share with your friends


Submit