இராசிபலன்கள்: 10-11-2014முதல்16-11-2014வரை

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

கணித்து எழுதியவர் ஞானயோகி டாக்டர்.ப.இசக்கி ,
தமிழ்நாடு,இந்தியா

  • மேசராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும்..நவம்பர்10,11,12பொதுத் தொண்டு நிறுவனத்தவர்கள்,திருமண தகவல் மையங்கள் நடத்துபவர்கள்,ஆலயப் பணி செய்வோர்கள், அற நிலையத் துறை சார்ந்தவர்
    கள்,தங்கம் வெள்ளி போன்ற நகைவியாபாரிகள்,அநாதை ஆசிரமங்களை நடத்துபவர்கள், கம்யூட்டர் துறை சார்ந்தவர்கள்,இனிப்புப் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள்,நறுமண சம்ப்நதமான பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் நற் பலன்களை அடைவார்கள்.நவம்பர்13,14,15திருடு போன பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்ப கிடைக்கும். தாயின் உடல் வெகு நாட்களாக இருந்து வந்துள்ள உடல் நிலை பாதிப்புகள் குறைந்து காணப்படும். விவசாயம் செய்பவர்களுக்குப் புதிய முறை விவசாயங்களின் மூலமாக நல்ல லாபம் பெறுவார்கள்.மன தைரியமுடன் எடுத்த காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடிக்க வாய்ப்பு உள்ள காலமாகும்.ரேஸ் லாட்டரி போன்ற சூதாட்ட விசயங்களில் பணம் வந்து சேரும் என எண்ணி ஏமாற்றம் அடைய வேண்டாம்.நவம்பர்16வெகு காலமாக எதிர் பார்த்து ஈருந்த காதல் விசயங்கள் சம்பந்தமாக நல்ல தகவல்கள் வந்து சேரும் காலமாகும்.நாட்பட்ட விசா பிரச்சனைகள் தீருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. புதிய ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்குவதைச் சற்று தள்ளிப் போடுதல் நல்லது.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

    இராசியான எண்:-3
    இராசியான நிறம்:-மஞ்சள்
    இராசியான திசை:-வடகிழக்கு
    பரிகாரம்:-வியாழக் கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து அன்ன தானம் செய்து வரவும்.

  • ரிசபராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். நவம்பர்10,11,12நீண்ட காலமாக எதிர்பார்த்து இருந்த வங்கிக் கடன்கள் கை வந்து சேரும் காலமாகும்.பொது நலத் தொண்டுகளில் மிகவும் பிரியமுடன் ஈடு பட்டு நற்பெயர் புகழ் அடைய வாய்ப்பு உள்ளது.சகோதர சகோதரிகளின் தடை பட்ட திருமண காரியங்கள் மற்றவர்களின் உதவியால் நிறை வேறும் காலமாகும்.நவம்பர்13,14வெளி நாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் வெகு காலமாக எதிர் பார்த்து இருந்த நல்ல தகவல்கள் வந்து சேரும். பங்காளிகளுடன் சேர்ந்து கூட்டுத் தொழிற் செய்வதற்கான முயற்சிகளைத் தள்ளிப் போடவும். புதிய வீடுகள் மற்றும் வாகனங்களை வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடு படுவீர்கள்.உற்றார் மற்றும் உறவினர்களின் திடீர் வரவால் மன மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாகும்.வேற்று மதத்தவர்களால் எதிர் பார்த்து ஆதாயங்கள் கிடைக்க இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம்.நவம்பர்15,16புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள். ஒரு சிலருக்கு பணி செய்யும் இடங்கள் மற்றும் வீடுகளை இட மாற்றம் செய்வீர்கள்.இரும்பு இயந்திரம் இரசாயன சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,பழைய பொருட்களை விற்பனை செய்வோர்கள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள். தீராத நாட் பட்ட நோய்கள் தீர்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்வீர்கள்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

    இராசியான எண்:-8
    இராசியான நிறம்:-நீலம்
    இராசியான தஜசை:-தென்மேற்கு
    பரிகாரம்:-சனிக் கிழமையில் ஐயப்பன் வழிபாடு செய்து அன்ன தானம் செய்து வரவும்.

  • மிதுனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு கேது நன்மை தரும் கிரகமாகும்.நவம்பர்10,11முன் கோபம் தவிர்த்தல் நல்லது.விபரீதமான எண்ணங்களைகை விட்டுக் காரியத்தில் கவனமாய் இருப்பது நல்லது.உற்றார் மற்றும் உறவினர்களின் திடீர் வரவுகளால் எதிர் பாராத பொருட் செலவுகளும் மன நிம்மதிக் குறைவுகள் ஏற்படலாம்.உடம்பில் கண் காது தலை போன்ற பாகங்களில் சிற்சில உபாதைகள் வருவதன் மூலம் மருத்துவச் செலவுகள் ஏற்படலாம்.நவம்பர்12,13மீன் முட்டை மாமிசப் பொருட்கள் ஆகியன உற்பத்தி விற்பனை செய்வோர்கள், ஆலை அதிபர்கள்,இன்சினி
    யரிங்துறையை சார்ந்தவர்கள்,பழைய கழிவுப் பொருட்களின் வியாபாரிகள்,அலுவலக உதவிப் பணிகளைச் செய்வோர்கள்,துப்புரவுத் தொழிலாளர்கள்,அணு ஆராய்ச்pத் துறையில் பணி ஆற்றுபவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். யாத்திரையில் மிகுந்த கவனமுடன் சென்று வரவும்.நவம்பர்14,15,16வெளி நாடு சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளில் வேற்று மதத்தவரால் ஆதாயமும் நற் செய்திகளும் வந்து சேரும்.பொருளாதாரத்தில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் மாறி சற்று முன்னேற்றமான சூழ் நிலைகள் காணப்படும். ரேஸ் லாட்டரி போன்றவற்றின் மூலமாக திடீர் தன வரவுகள் உண்டாகும்.அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லதாகும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

    இராசியான எண்:-7
    இராசியான நிறம்:-கருஞ்சிகப்பு
    இராசியான திசை:-வடமேற்கு
    பரிகாரம்:-திங்கள் கிழமையில் விநாயகர் வழிபாடு செய்து அன்னதானம் செய்து வரவும்.

  • கடகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும்..நவம்பர்10,11காய்கறிகள் இலை பூ பழம் போன்ற பொருட்களை விற்பனை செய்வோர்கள்,சிறு தின் பண்ட வியாபாரிகள்,மருந்துவத் துறையைச் சார்ந்தவர்கள்,எழுத்
    தூளர்கள்,அச்சுத் தொழிற் செய்வோர்கள் ,தபால் தந்தித் துறையினர்கள், கவிஞர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள்.காதல் சம்பந்தமான விசயங்களில் உறவினர்களின் மூலமான நல்ல செய்திகள் வந்து சேரும்.. விட்டுப் போன பழைய உறவுகளில் இருந்து வந்த மனக் கசப்புகள் தீர்ந்து நல்ல சூழ்நிலை உருவாகும்.நவம்பர்12,13,14அரசியல் வாதிகளுக்கு எதிர் பார்த்த ஆதாயங்கள் கிடைக்கும். ஒரு சிலருக்குப் புதிய வீடு மாற்றம் ஏற்படலாம். செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக வேண்டி வரும் என்பதால் புதிய தொடர்புகளைத் தவிர்த்தல் நல்லது.தந்தையின் உடல் நிலையில் ஏற்பட்டு இருந்த பாதிப்புகள் சற்று குறைவதன் மூலம் மருத்துவச் செலவுகள் குறைய வாய்ப்பு உள்ளதுநவம்பர்15,16வீடு மற்றும் தொழிற்சாலைகளை இட மாற்றம் செய்வதற்கு வாய்ப்பு உள்ளது.பொதுத் தொண்டுகள் மற்றும் அநாதை இல்லங்களை நடத்துபவர்களுக்கு நற்பெயரும் புகழும் உண்டாகும். பிள்ளை இல்லாதவர்களுக்கு இறையருளால் புத்திர பாக்கியம் உண்டாகும்.மனைவிக்கு திடீரென நோய் வாய்ப்பட்டு மருத்துவச் செலவுகள் வந்து சேர இருப்பதால் எச்சரிக்கையுடன் இரு;கவும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

    இராசியான எண்:-5
    இராசியான நிறம்:-பச்சை
    இராசியான திசை:-வடக்கு
    புரிகாரம்:-புதன் கிழமையில் மஹாவி~;ணு ஆலய வழிபாடு செய்து அன்ன தானம் செய்து வரவும்.

  • சிம்மராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்..நவம்பர்10,11காதல் சம்பந்தமான விசயங்களில் மிகுந்த கவனமுடன் நடந்து கொள்வதுநல்லது.திருமண சம்பந்தமான முயற்சிகளை இன்னும் சற்று கால தாமதமாகவே நடத்துவது சிறந்ததாகும்.மாணவர்களுக்கு புதிய படிப்புகள் சம்பந்தமாக நல்ல தகவல்கள் கிடைக்கும்.பூர்வீகச் சொத்து வுpசயங்களில் இருந்து வந்துள்ள கருத்து வேறுபாடுகள் தீர்ந்து மன நிம்மதி அடைவீர்கள்.நவம்பர்12,13,14மின்சாரம் , இராணுவம்,எரி பொருட்கள்,
    காவல் துறை சார்ந்தவர்கள்,ஹோட்டல் தொழிற் செய்வோர்கள், சிற்றுண்டி உணவுப் பொருட்களின் வியாபாரிகள்,தரகு கமிசன் போன்ற தொழிற் செய்வோர்கள்,பூமி நில புலன்கள் விற்பனை செய்வோர்கள் ஆகியோர்கள் நல்ல பலனை அடைவார்கள்.நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமண காரியங்கள் நிறைவேறும்.விடு பட்டுப் போன பழைய வழக்குகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது.நவம்பர்15,16புதிய வீடு மற்றும் நில புலன்களை வாங்குவதற்காக புதிய கடன்களை வாங்குவீர்கள். தடை பட்டுப் போன சகோதர சகோதரிகளின் சுப காரிய சம்பந்தமாக நல்ல தகவல்கள் வந்து சேரும். கண் காதுகளில்கவனம்தேவை.உற்றார் மற்றும் உறவினர்களால் எந்த விதமான ஆதாயமும் இல்லை.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்..

    இராசியான எண்:-9
    இராசியான நிறம்:-சிகப்பு
    இராசியான திசை:-தெற்கு
    பரிகாரம் செவ்வாய் கிழமையில் முருகன் ஆலய வழிபாடு செய்து அன்னதானம் செய்து வரவும்.

  • கன்னிராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும்.நவம்பர்10,11புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பதற்கு முயற்சிப்பீர்கள்.பொருளாதாரத்தில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் தீர்ந்து மன நிம்மதி அடைவீர்கள்.வீடு வாகனங்களைப் பழுது பார்hதன் மூலமாகப் பொருட் செலவுகள் உண்டாகலாம்.உடம்பில் வாயு மற்றும் வயிறு போன்ற உபாதைகள் வந்து போகலாம்..; ஒரு சிலருக்கு உத்தியோகத்தில் வீண் பிரச்சனைகள் உருவாகி பணி இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.நவம்பர்12,13கணவன் மனைவி உறுகள் சுமாராகக் காணப்படும்.தீராத நாட் பட்ட நோய்கள் தீருவதற்காகப் புதிய மருத்துவர்களை நாடுவது நல்லது. காரணமற்ற மன சஞ்சலங்கள் வர இருப்பதால் புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்ப்பது உகந்ததாகும்.நவம்பர்14,15,16பொதுத் தொண்டுகளைச் செய்வோர்கள்,திருமணத் தகவல் மையங்களை நடத்துபவர்கள்,சினமா நாடகம் போன்ற கலைத் துறை சார்ந்தவர்கள்,கலைக் கல்லூரிப் பேராசிரியர்கள் மாணவர்கள்,ஆடம்பர அலங்காரப் பொருட்களை வாங்கி விற்பனை செய்வோர்கள்,கட்டிட சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள்.இது வரையில் பிரச்சனையில் இருந்து வந்துள்ள விசா சம்பந்தமான விசா சம்பந்தமான விசயங்களில் நல்ல தகவல்களை எதிர் பார்க்கலாம்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

    இராசியான எண்:-6
    இராசியான நிறம்:-வெள்ளை
    இராசியான திசை:-தென்கிழக்கு
    பரிகாரம்:-வெள்ளிக் கிழமையில் மஹா லட்சுமி ஆலய வழிபாடு செய்து அன்னதானம் செய்து வரவும்.

  • துலாம்ராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும்.நவம்பர்10புதிய ஆடைகள் மற்றும் அணிகலன்களை வாங்குவதற்கு வாய்ப்பு உள்ள காலமாகும்.வெகு காலமாகப் பிரிந்து போன கணவன் மனைவி இருவரும் ஒன்று சேருவார்கள்.நீண்ட நாட்களாக வராத கடன் கொடுத்து இருந்த பணம் பொருட்கள் திரும்பக் கை வந்து சேரும்.நவம்பர்11,12,13,14உடல் நிலையில் வாயு மற்றும் வாத சம்பந்தமான உபாதைகள் வந்து போகும்.புதிய நணபர்களின் சேர்க்கையைத் தவிர்த்தல் நல்லது.மாணவர்கள் கல்வியில் பரிசு மற்றும் பாராட்டுக்களைப் பெறுவதோடு அரசு உதவித் தொகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அரசுத் துறை சார்ந்த உயர் பதவிகள் வகிப்பவர்கள் ஜவுளி நூல் போன்ற பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள்,மருந்துப் பொருள்களின் வியாபாரிகள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள்,
    மருத்துவர்கள் மற்றும் இவைகளில் பணி புரியும் ஆசிரியர்கள்,விசைத்தறி தொழிலாளர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள்.நவம்பர்15,16காதல் சம்பந்தமான விசயங்களில் எதிர் பார்த்து இருந்த நல்ல செய்திகள் வந்து சேரும். வேலை இல்லாதவர்களுக்குப் புதிய Nவைலை வாய்ப்புகள் வந்து சேரும் காலமாகும். பழைய வாகனங்களை விற்றுப் புதிய வாகனம் வாங்குவதற்கான முயற்சிகளில் சற்று பின்னடைவுகள் ஏற்பட்டு விலகும். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

    இராசியான எண்:-1
    இராசியான நிறம்:-வெள்ளை
    இராசியான திசை:-கிழக்கு
    பரிகாரம்:-ஞயிற்றுக் கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து அன்னதானம் செய்து வரவும்.

  • விருச்சிகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும்.நவம்பர்10,11,12பெண்களால் தென்திசையில் இருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும். முதியோர் இல்லம் நடத்துபவர்கள்,நீர் வளத் துறை சார்ந்தவர்கள்,உப்பு வியாபாரிகள் கடல்துறை சார்ந்த அறிஞர்கள், தண்ணீர் மற்றும் குளிர்பான வியாபாரிகள்,
    பூஜைப் பொருள் வியாபாரிகள்,ஆகியோர்கள் நற்பலன்களை அடைவீர்கள். புதிய ஆடை அணி கலன்களை வாங்குவதற்கான முயற்சிகளில் சற்று பின்னடைவுகள் உண்டாகும். நவம்பர்13,14ரேஸ் லாட்டரி போன்றவற்றின் மூலமாகவோ அல்லது செய் தொழிலிலோ திடீர் அதிர்~;டம் மூலமாகப் பணம் வந்து சேர வாய்ப்பு உள்ளது.குடும்பச் சொத்துக்
    களில் வெகு காலமாக இருந்து வந்துள்ள பிரச்சனைகள் பெரிய மனிதர்களின் தலையிடுதலால் திரும்பக் கிடைக்கும். வங்கிகளில் இருந்து நீண்ட காலமாக எதிர் பார்த்து இருந்து கடன் உதவித் தொகைகள் நண்பர்களின் உதவியால் கிடைக்கும். நவம்பர்15,16குல தெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வருவதன் மூலம் மன திருப்தி அடைவீர்கள். உத்தியோகத் துறையினர்களுக்குப் பதவி உயர்வுகள் மற்றும் பணி இட மாற்றங்கள் உண்டாகலாம்.காதல் சம்பந்தமான விசயங்களில் நல்ல செய்திகள் கிடைப்ப
    தற்கான வாய்ப்புகள் உள்ளது.பழைய வாகனங்களை விற்றுப் புதிய வாகனங்களை வாங்குவதற்காக எதிர் பார்த்த வங்கிக் கடன்கள் கை வந்து சேரும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

    இராசியான எண்:-2;
    இராசியான நிறம்:-வெள்ளை
    இராசியான திசை:-மேற்கு
    பரிகாரம்:-திங்கள் கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு செய்து அன்ன தானம் செய்து வரவும்.

  • தனுசுராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்குசூரியன் நன்மை தரும் கிரகமாகும்..நவம்பர்10,11,12வெளி நாட்டில் வசிப்வர்கள் தாய் நாடு சென்று திரும்பி வரக் கூடிய காலமாகும்.அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் கவனமாகப் பேசப் பழகுவதால் வர இருக்கும் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். உத்தியோகத் துறையினர்களுக்கு மேலதிகாரிகளிடம் மனக் கசப்புகள் ஏற்பட்டு பணி இட மாற்றம் ஏற்பட இருப்தால் முன் கோபத்தை தவிர்த்துப் பணி ஆற்றுதல் சிறந்ததாகும்.நவம்பர்13,14உத்தியோகம் இல்லாதவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்.நண்பர்களின் வீட்டுச் சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொண்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள்.விளையாட்டுத் துறை சார்ந்தவர்கள் பரிசு மற்றும் பாராட்டுதல்களோடு அரசு ஆதரவுகளையும் பெறுவார்கள்.குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான முயற்சிகளைச் சற்று தள்ளிப் போடவும். நவம்பர்15,16கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும்.வெளி நாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் நல்ல செய்திகள் கிடைக்கும். புதிய வீடு நிலம் மற்றும் வாகனங்களை வாங்குவதற்காகப் புதிய கடன் வாங்குவீர்கள் அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லதாகும். வராத கடன் கொடுத்து இருந்த பணம் திரும்பக் கை வந்து சேரும்..பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

    இராசியான எண்:-1
    இராசியான நிறம்:-வெள்ளை
    இராசியான திசை:-கிழக்கு
    பரிகாரம்:-ஞாயிற்றுக் கிழமையில் சூரிய நமஸ்கார வழிபாடு செய்து அன்ன தானம் செய்து வரவும்.

  • மகரராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும்.நவம்பர்10,11மஹான்களின் எதிர் பாராத தரிசனங்களால் மன நிம்மதி அடைவதோடு புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்படும்.விவசாயம் செய்பவர்களுக்கு சுமாரான நற்பலனையே செய்யும்.மற்றவர்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்களைக் கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்.நவம்பர்12;,13தொழிற்சாலை மற்றும் வீடுகளை மாற்றம் செய்ய எண்ணுவீர்கள்.ஆடம்பரச் செலவுகளைச் செய்ய எண்ணி புதிய கடன்கள் வாங்குவீர்கள். பங்காளிகளுடன் சேர்ந்து புதிய கூட்டுத் தொழிற் செய்வதற்கான முயற்சிகளில் நல்ல பலன்களை எதிர் பார்க்கலாம்.தந்தை மகன் உறவுகளில் இருந்து வந்துள்ள பிரச்னைகள் குறைந்து ஒற்றுமை உண்டாகும். நவம்பர்14,15,16பழைய இரும்பு இயந்திரம் இரசாயனம் போன்ற துறையைச் சார்ந்தவர்கள்,
    அணு ஆராய்ச்சித் துறையில் பணி ஆற்றுபவர்கள்,அரசியல் அறிஞர்கள்,மீன் முட்டை மாமிசம் போன்ற உணவு பொருட்களின் வியாபாரிகள்,கம்யுட்டர் மற்றும் நாடகத்துறை சார்ந்தவர்கள, அலுவலக உதவிப்பணியாளர்கள்,துப்புரவுப் பணி செய்வோர்கள் ஆகியோர்
    கள் நற்பலன் அடைவார்கள்.தன்னிடம் பணி செய்யும் அடிமை ஆட்களால் பிரச்சனை
    களும் பொருள் இழப்பும் வர இருப்பதால்கவனம் தேவை. வீடு மற்றும் வாகனங்களைப் பழுது பார்ப்பதற்காகப் புதிய பொருட் செலவுகள் ஏற்படலாம்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

    இராசியான எண:-4
    இராசியான நிறம்:-கருப்பு
    இராசியான திசை:-வடமேற்கு
    புரிகாரம்:-ஞாயிற்றுக் கிழமையில் காளி மற்றும் பிதுர் வழிபாடு செய்து அன்ன தானம் செய்து வரவும்.

  • கும்பராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும்..நவம்பர்10,11,12யாத்திரையின் போது சம்பந்தம் இல்லாத நபர்களுடைய தொடர்புகளால் எதிர் பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள்.கட்டிட சம்பந்தமான செங்கல் மணல் மண் சிமிண்ட் போன்ற பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள்,ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள்,அழகு கலைக் கூடங்களை நடத்துபவர்கள்,நடிப்புத் துறை சார்ந்தவர்கள்,நறுமணப்பொருள் வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். வராத பணம் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது.நவம்பர்13 குல தெய்வ வழிபாடுகளைச் செய்து வருவது நல்லது.கோர்ட் சம்பந்தமான வழக்கு விசயங்களில் எதிர் பாரத்த சாதகமான நல்ல தீர்ப்புகள் கிடைக்கும்.தேவையற்ற மன சஞ்சலங்களைத் தவிர்க்கவும்.நவம்பர்14,15,16பூர்வீக சம்பந்தமான சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம்.தாயின் உடல் நிலையில் சில பாதிப்புகள் வரக் கூடுமாகையால் கவனமுடன் இருக்கவும்.வேலையாட்களால் எதிர் பார்த்த ஆதாயம் இல்லை.உடல் நிலையில் சுரம் மற்றும் உ~;ண சம்பந்தமான உபாதைகள் வந்து போகும்.புதிய வாகனங்களை வாங்குவதற்கான முயற்சிகளைச் சற்று தள்ளிப் போடுதல் நல்லது.மற்றவர்களின் விசயங்களில் அநாவசியமாகத் தலையிட்டு மன நிம்மதியை இழக்காதீர்கள்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

    இராசியான எண்:-6
    இராசியான நிறம்:-வெள்ளை
    இராசியான திசை:-தென்கிழக்கு
    பரிகாரம் வெள்ளிக் கிழமையில் மஹா லட்சுமி வழிபாடு செய்து அன்ன தானம் செய்து வரவும்.

  • மீனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். நவம்பர்10,11தாயின் உடல் நிலையில் இருந்து வந்துள்ள பாதிப்புகள் குறைந்து மனநிம்மதி அடைவீர்கள். புதிய கடன் வாங்கினால் திரும்பி செலுத்த இயலாமற் போகுமாகையால் கடன் வாங்குவதைத் தவிர்க்கவும்.கணவன் மனைவிக்குள் காரணமற்ற மனக் கசப்புகள் வந்து போகும். பிரிந்துபோன உறவுகளுடன் திரும்பவும் தொடர்புகள் ஏற்படக் கூடிய காலமாகும்.நவம்பர்12,13,14,15சகோதர சகோதரர்களின் சுப காரியங்களுக்
    கான முயற்சிகளில் ஈடு படுவீர்கள்.பொருளாதாரத்தில் சற்று முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும்.காணாமற் போன பொருட்கள் காவல் துறையினர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும்..இரும்பு,இயந்திரம்,இரசாயனம் போன்ற தொழில்கள் செய்வோர்கள், இன்சினி
    யரிங் கல்லூரியை சார்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பலசரக்கு கடை நடத்துபவர்கள்,பெட்ரோல் டீசல்,மண் எண்ணை போன்ற எண்ணைகளை உற்பத்தி மற்றும் விற்பனை செய்வோர்கள்,பழைய இரும்பு வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள்.நவம்பர்16பொதுநலச் சேவைகளைச் செய்வோர்கள் மிகவும் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது.ரேஸ் லாட்டரி போன்ற சூதாட்ட விசயங்களுக்காகப் பணம் பொருட்களை ஏமாறாமல் இருக்கவும். காதல் விசயங்களில் எதிர் பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

    இராசியான எண:-8
    இராசியான நிறம்:-நீலம்
    இராசியான திசை:-தென்மேற்கு
    பரிகாரம்:-சனிக் கிழமையில் ஆஞ்சனேயர் வழிபாடு செய்து அன்ன தானம் செய்து வரவும்.

    தொடரும்!

http://www.kathiravan.com/?page_id=1302
Share with your friends










Submit