இராசிபலன்கள் 10-1-2017 முதல் 17-1-2017 வரை

பிறப்பு : - இறப்பு :

வார பலன், ஜாதகம், Weekly Astrology Tamil, Weekly Astrology In Tamil, Tamil Weekly Astrology, Tamil Astrology For This Week, Tamil Astrology Weekly Predictions, Astrology In Tamil, Free Tamil Astrology, Tamil Astrology Horoscope, Tamil Astrology Rashi, Tamil Astrology Rashi Chart

கதிரவனுக்காகக் கணித்து எழுதியவர் ஜோதிடமணி பிரம்மஸ்ரீ ரகுநாத ஐயர் தமிழ்நாடு, இந்தியா

  • சந்திரன் சாதகமாகச் செல்வதால் உற்சாகமாக இருப்பீர்கள். தாயிடமிருந்து உதவிகள் கிடைக்கும். வெளிநாட்டில் இருப்போர் சொந்த ஊருக்கு வந்து போவார்கள். செவ்வாய் கேது சேர்க்கையால் வீண் பேச்சைத் தவிர்ப்பது நன்மை தரும். சுக்கிரன் பார்வையால் பெண் மூலம் லாபம் உண்டு. குடும்பப் பிரச்னை, கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். அவசரத் தேவைக்காக கடன் வாங்க வேண்டியிருக்கும். உத்யோகஸ்தர்களுக்கு சாதகமான காற்று வீசும். வியாபாரத்தில் நல்ல ஏற்றம் இருக்கும்.

  • ஏற்ற இறக்கம், அலைச்சல், சுகம் இணைந்த வாரம். சனிசந்திரன் பரஸ்பர பார்வை காரணமாக மனசஞ்சலம், படபடப்பு வந்து நீங்கும். நான்காம் வீட்டை மூன்று கிரகங்கள் பார்ப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு உடல் உபாதைகள் வந்து நீங்கும். புதன் பார்வை காரணமாக சொல்வாக்கு, செல்வாக்கு உயரும். போட்டி, பந்தயங்களில் வெற்றி உண்டு. உத்யோக வகையில் ஊர் விட்டு ஊர் செல்ல நேரிடும். வாகன வகையில் செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த செய்தி சற்று தாமதமானாலும், நல்ல தகவலாக வாரக் கடைசியில் வரும்.

  • தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம் பலம் பெறுவதால் முயற்சிகள் வெற்றி அடையும். மனக்குழப்பம் தீரும். கைமாற்றாக தந்த பணம் வந்து சேரும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு பெறுவதற்கான யோகம் உள்ளது. கேதுசுக்கிரன் சேர்க்கையால் பிள்ளைகளால் வருத்தம், செலவுகள் இருக்கும். செவ்வாயின் பார்வை காரணமாக சில அதிரடி முடிவுகளை எடுப்பீர்கள். கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகலாம். வெளிநாடு செல்வதற்கு விசா கிடைக்கும்.

  • ராசிநாதன் சந்திரன் உச்சமாக இருப்பது நல்ல அனுகூல நிலையாகும். குருவின் பார்வையால் தடைகள் நீங்கி, உங்கள் எண்ணங்கள் ஈடேறும். பணவரவு சாதகமாக இருந்தாலும், அவசிய, அநாவசிய செலவுகள் இருக்கும். நான்கு, ஐந்துக்கு உடையவர்கள் இரண்டாம் வீட்டை பார்ப்பதால் வீடு, நிலம் போன்றவற்றிலிருந்து நல்ல தகவல் வரும். கர்ப்பமாக இருப்பவர்கள் உரிய கவனத்துடன் இருப்பது அவசியம். பிரசித்தி பெற்ற கோயில்களுக்குச் சென்று வருவீர்கள். உத்யோகத்தில் ஏற்பட்ட சில மனக் கசப்புக்கள் மறையும்.

  • ராசிநாதன் சூரியன் தன் சொந்த நட்சத்திர சாரத்தில் செல்ல இருப்பதால் மறைமுக, நேர்முக எதிர்ப்புகள் நீங்கும். அதிரடியாக சில முடிவுகள் எடுப்பீர்கள். சனி 4ல் தொடர்வதால் அலைச்சல், வயிற்றுக் கோளாறுகள் இருக்கும். குருவின் சாரபலம் காரணமாக சொத்து சம்பந்தமாக நல்ல தகவல் வரும். தந்தையுடன் இருந்த மனக்கசப்புகள் மறையும். மாமன் வகை உறவுகளால் செலவுகள் ஏற்படும். குலதெய்வப் பிரார்த்தனைகளை செய்து முடிப்பீர்கள். உத்யோகத்தில் அலைச்சல் இருந்தாலும், ஆதாயம் கிடைக்கும்.

  • புதன் வக்கிர நிவர்த்தி அடைவதால் மனச்சலனம், சஞ்சலம் நீங்கி தெளிவு பெறுவீர்கள். சந்திரனின் சஞ்சாரம் காரணமாக எதிர்பார்த்த பதவி உயர்வு பற்றி தகவல் வரும். புத்திர பாக்கியத்தை எதிர்பார்த்தவர்களுக்கு இனிப்பான செய்தி உண்டு. கைமாற்றாக கொடுத்த பணம் வந்து சேரும். சுக்கிரன் 6ல் இருப்பதால் வாக்குவாதம், வாக்குறுதி வேண்டாம். உத்யோகத்தில் கூடுதல் பொறுப்புக்கள் ஏற்க வேண்டி வரும். கல்வி சம்பந்தமாக செலவுகள் இருக்கும். சொத்து விற்பனையில் ஏற்பட்ட தடை, தாமதம் நீங்கும்.

  • சூரியன் சாதகமாக இருப்பதால் முயற்சிகள் வெற்றியடையும். ராகு பலம் காரணமாக புதிய எலக்ட்ரானிக் சாதனங்கள் வாங்குவீர்கள். சனி 2ல் தொடர்வதால் கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. அக்கம், பக்கத்தாரிடம் வீண் விவாதம் வேண்டாம். மாமனார் உடல்நலம் பாதிக்கப்படலாம். உத்யோக வகையில் ஊர்விட்டு ஊர் செல்ல நேரிடும். ஆன்மிகதாகம் அதிகரிக்கும். புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உறவுகள் மூலம் சில மனவருத்தங்கள் வரலாம். எதிர்பார்த்த தகவல் வார மத்தியில் வரும்.

  • தைரியமாகவும், தெளிவாகவும் முடிவு எடுப்பீர்கள். தடைகளை எதிர்கொள்ளும் தைரியத்தை செவ்வாய் தருவார். பெண்கள் ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வார்கள். மருத்துவ சிகிச்சையில் இருந்தவர்கள் நலமடைவார்கள். சுக்கிரன் கேதுவால், வெளியூர் அல்லது வெளிநாட்டுப் பயணம் இருக்கும். புதன் தயவால் போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள். சந்திரனின் சஞ்சாரத்தால் பெண்களால் லாபம் வரும். தொழில், வியாபாரத்தால் லாபம் உண்டு. புதிய ஏஜென்சிகள் எடுப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள்.

  • ராசிநாதனான குரு யோக சாரத்தில் செல்வதால் அனுகூலம் உண்டு. கேளிக்கை, விருந்து என்று குதூகலம் அடைவீர்கள். சனி 12ல் தொடர்வதால் வருமானமும் அதற்கேற்ற செலவுகளும் இருக்கும். பாக்யஸ்தான பலம் காரணமாக குடும்பத்துடன் கோயில், குளம் என்று சென்று வருவீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் கணவன்மனைவிக்குள் அன்யோன்யம் கூடும். உயர்ந்த பதவியில் இருப்பவரின் உதவி கிடைக்கும். வழக்கில் ெஜயம் உண்டு. சகோதர உறவுகளிடையே சமரசமாகப் போவது நலம் பயக்கும். - See more

  • லாப ஸ்தானத்தில் ராசிநாதன் சனி, செவ்வாயுடன் பரிவர்த்தனை பெற்றிருப்பதால் காரிய வெற்றி, மனமகிழ்ச்சி, பணவரவு என்று ஏற்றமான நிலை இருக்கும். சொத்து விஷயமாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். இரண்டாம் வீட்டில் கூட்டு கிரக அமைப்பு இருப்பதால் பிறர் விஷயங்களில் கருத்து சொல்ல வேண்டாம். சந்திரன் மூலம் திடீர் பயணங்கள் வரலாம். புதிய பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வேலை தேடியவர்களுக்கு வார மத்தியில் நல்ல செய்தி உண்டு. காது, தொண்டை சம்பந்தமாக உபாதைகள் வந்து நீங்கும்.

  • சனி, சந்திரன், குரு, பார்வை நட்சத்திர சாரம் சுபமாக இருப்பதால் சாதகமான காற்று வீசும். நண்பர்களுடன் உல்லாசப் பயணம் சென்று வருவீர்கள். மாமன், மைத்துனர் வழியில் மகிழ்ச்சி உண்டு. வீட்டில் பராமரிப்புச் செலவுகள் உண்டாகும். மருமகள் வாரிசு தரப்போகும் இனிப்பான செய்தி கிடைக்கும். ராகுவால் கோபதாபங்கள் வந்தாலும் சுக்கிரனின் பார்வையால் சரியாகி விடும். உத்யோகத்தில் வேலைச்சுமை வந்து நீங்கும். பெண்களுக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. வியாபாரம் சீராக இருக்கும். பணத் தட்டுப்பாடு நீங்கும்.

  • பூர்வ புண்ணிய ஸ்தானம், குருபார்வை காரணமாக செல்வாக்கு உயரும். கொடுக்கல், வாங்கலில் இருந்த தேக்க நிலை நீங்கும். புதிய வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. தகப்பனார் மூலம் மருத்துவச் செலவுகள் இருக்கும். புதனின் பார்வை காரணமாக போட்டி, பந்தயங்களில் வெற்றி உண்டு. சொத்து விஷயமாக ஒருமித்த கருத்து உண்டாகும். சுக்கிரன், செவ்வாயால் உறவுப் பெண்கள் மூலம் சங்கடங்கள் வரலாம். வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள் கைகொடுக்கும்.

http://www.kathiravan.com/?page_id=1302
Share with your friends










Submit