இராசிபலன்கள் 10-02-2016 முதல் 16-02-2016 வரை

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

வார பலன், ஜாதகம், Weekly Astrology Tamil, Weekly Astrology In Tamil, Tamil Weekly Astrology, Tamil Astrology For This Week, Tamil Astrology Weekly Predictions, Astrology In Tamil, Free Tamil Astrology, Tamil Astrology Horoscope, Tamil Astrology Rashi, Tamil Astrology Rashi Chart

கதிரவனுக்காகக் கணித்து எழுதியவர் ஞானயோகி டாக்டர்.ப.இசக்கி,IBAM, RMP,DISM,தமிழ்நாடு, இந்தியா

  • தளராத தன்னம்பிக்கை உடையவர்களே! உங்கள் தனாதிபதி சுக்ரன் சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். செல்வாக்குக் கூடும். இடம், பொருள் ஏவலறிந்து பேசி சாதிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி உண்டாகும். திருமணம் கூடி வரும். வீடு, வாகனம் அமையும். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் பழசை மாற்றி புதியது வாங்குவீர்கள். யோகாதிபதி சூரியன் 13-ந் தேதி முதல் லாப வீட்டில் அமர்வதால் மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். புது வீடு புகுவீர்கள். பாகப்பரிவினை சுமூகமாக முடியும். புதன் சாதகமாக இருப்பதால் வீண் செலவுகளை குறைப்பீர்கள். சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் அல்லாதவர்களை இனங்கண்டறிவீர்கள். 7-ல் செவ்வாய் நீடிப்பதால் மனைவியுடன் கருத்து மோதல்கள், அவருக்கு மாதவிடாய்க் கோளாறு வந்துச் செல்லும். ராகு சரியில்லாததால் மனஉளைச்சல், வீண் டென்ஷன், பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் வரக்கூடும். என்றாலும் குரு 5-ல் அமர்ந்திருப்பதால் தடைப்பட்ட காரியங்கள் முடியும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வது பற்றி நம்பிக்கைக்குரியவர்களை கலந்தாலோசிப்பீர்கள். வேலையாட்களிடம் கறாராக இருக்க வேண்டாம். உத்யோகத்தில் அலுவலகச் சூழ்நிலை அமைதி தரும். சக ஊழியர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். கலைத்துறையினரே! உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். தொடர் முயற்சியால் சாதிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 10, 11, 14 அதிஷ்ட எண்கள்: 4, 8 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா அதிஷ்ட திசை: தென்மேற்கு

  • எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்களே! உங்களின் பூர்வ புண்யாதிபதியான புதன் சாதகமாக இருப்பதால் மனதிலே தைரியம் பிறக்கும். தயக்கமில்லாமல் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வெளிப்படையாக சில கருத்துகளை தெரிவிப்பீர்கள். கல்யாணம், கிரகப் பிரவேசம் என பரபரப்பாகக் காணப்படுவீர்கள். மகனுக்கு வேலைக் கிடைக்கும். உறவினர், நண்பர்கள் வீடு தேடி வருவார்கள். 12-ந் தேதி வரை தந்தையாரின் உடல் நிலை பாதிக்கும். 13-ந் தேதி முதல் சூரியன் 10-ல் நுழைவதால் புது வேலை அமையும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. பிதுர்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். ராசிநாதன் சுக்ரன் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் வீட்டை அழகுப்படுத்தி, விரிவுப்படுத்துவீர்கள். வி.ஐ.பிகள் நண்பர்களாவார்கள். ராகு 4-ல் தொடர்வதால் தாயாருக்கு கழுத்து, இடுப்பு வலி வந்துப் போகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். 7-ல் சனி நிற்பதால் கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வரும். என்றாலும் செவ்வாய் வலுவாக இருப்பதால் மனைவியின் ஆரோக்யம் சீராகும். சகோதர வகையில் பயனடைவீர்கள். கன்னிப் பெண்களே! பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். வேலையாட்கள் உங்களை தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகளால் மறைமுகத் தொந்தரவுகள் வந்துப் போகும். கலைத்துறையினரே! பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்குமளவிற்கு பிரபலமாவீர்கள். திட்டமிடுதல் மூலமாக வெற்றி பெறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 11, 13, 14 அதிஷ்ட எண்கள்: 1, 5 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வெள்ளை அதிஷ்ட திசை: வடக்கு

  • பாகுபாடு பார்க்காமல் பழகுபவர்களே! சுக்ரன் உங்கள் ராசியைப் பார்த்தக் கொண்டிருப்பதால் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். குழந்தை பாக்யம் கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பல மாதங்களாக தேடியும் உங்கள் ரசனைக் கேற்ப வீடு, மனை அமையாமல் போனதே இப்போது நீங்கள் எதிர்பார்த்தபடி அமையும். வங்கிக் கடன் கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வாகனம் வாங்குவீர்கள். கல்யாணம், காது குத்து என வீடு களைக்கட்டும். புது வேலை அமையும். பூர்வீக சொத்தால் வருமானம் வரும். ராகு 3-ல் நிற்பதால்வேற்றுமதத்தவர்கள் நண்பர்களாவார்கள். வழக்கில் வெற்றி உண்டு. பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். செவ்வாய் 5-ல் நிற்பதால் பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. சூரியனின் போக்கு சாதகமாக இல்லாததால் யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். கன்னிப் பெண்களே! தவறான எண்ணங்களுடன் பழகியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். வியாபாரம் செழிக்கும். பழைய வேலையாட்கள் மீண்டும் பணியில் வந்து சேர்வார்கள். வி.ஐ.பிகளும் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் ஒருபக்கம் வேலைச்சுமை அதிகமானாலும் மற்றொரு பக்கம் அதிகாரிகளின் பாராட்டுகளால் உற்சாகமடைவீர்கள். கலைத்துறையினர்களே! எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். விட்டுக் கொடுத்து விட்டதைப் பிடிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 12, 14, 11 அதிஷ்ட எண்கள்: 4, 8 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மயில் நீலம் அதிஷ்ட திசை: வடகிழக்கு

  • சுய கட்டுபாடுடையவர்களே! செவ்வாய் கேந்திர பலம் பெற்று அமர்ந்திருப்பதால் கோபம் குறையும். புது முயற்சிகள் முடியும். பணத்தட்டுபாடு விலகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சகோதரங்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். காலி மனையை விற்று புதிதாக வீடு வாங்கும் யோகம் உண்டாகும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். 7-ந் தேதி முதல் குரு உங்கள் ராசிக்கு 2-ல் அமர்வதால் பணவரவு அதிகரிக்கும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். தந்தையாரின் உடல் நிலை சீராகும். அவருடனான மோதல்கள் விலகும். சுக்ரன் 6-ல் மறைந்திருப்பதால் கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். வாகனத்தில் கவனம் தேவை. வீட்டில் குடி நீர் மற்றும் கழிவு நீர் குழாய் அடைப்பு வந்துச் செல்லும். புதன் சாதகமாக இருப்பதால் அசதி, சோர்வு விலகும். நட்பால் பலனடைவீர்கள். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். 5-ல் சனி தொடர்வதால் பிள்ளைகள் கொஞ்சம் கோபப்படுவார்கள். சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததால் எவ்வளவு பணம் வந்தாலும் கரையும். ஆரோக்யமான விவாதங்கள், வீண் பழி, வேலைச்சுமை, ஏமாற்றம் வந்துச் செல்லும். கன்னிப் பெண்களே! முடிவுகள் எடுப்பதில் இருந்த தடுமாற்றம் நீங்கும். புது நட்பு மலரும். வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் லாபம் குறையாது. பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மேலதிகாரி ஆதரிப்பார். கலைத்துறையினரே! கிசுகிசுத் தொந்தரவுகள், வதந்திகளெல்லாம் வந்தாலும் அஞ்சமாட்டீர்கள். பழைய நண்பர்களால் மறுமலர்ச்சி உண்டாகும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 8, 10, 11 அதிஷ்ட எண்கள்: 2, 7 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, மஞ்சள் அதிஷ்ட திசை: வடக்கு

  • மனசாட்சிக்கு விரோதமின்றி செயல்படுபவர்களே! உங்கள் ராசிநாதன் சூரியன் 12-ந் தேதி வரை சாதகமாக இருப்பதால் சவால்களை சமாளிப்பீர்கள். சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாகனம் வாங்குவீர்கள். சிலர் புது வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்வீர்கள். புது வேலைக் கிடைக்கும். மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைப் போல் நல்ல குடும்பத்திலிருந்து மணப்பெண் அமைவாள். மகள் உங்களைப் புரிந்துக் கொள்வாள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். சுக்ரன் சாதகமாக இருப்பதால் சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். வி.ஐ.பிகளின் அறிமுகத்தால் உற்சாகம் அடைவீர்கள். அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால் கோபப்படுவீர்கள். வேலைச்சுமையால் சோர்வு, களைப்பு, மனஇறுக்கம் வந்துச் செல்லும். ராகு ராசிக்குள் நிற்பதுடன், குருவும் உங்கள் ராசிக்குள் நுழைந்திருப்பதால் எதிலும் பிடிப்பற்றப் போக்கு, பிறர் மீது நம்பிக்கையின்மை, வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலி, செரிமானக் கோளாறு, மஞ்சள் காமாலை, காய்ச்சல், தோலில் நமைச்சளெல்லாம் வரக்கூடும். செவ்வாய் சாதகமாக இருப்பதால் உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புது சொத்து சேர்க்கை உண்டாகும். கன்னிப் பெண்களே! பெற்றோருக்கு சில ஆலோசனை வழங்குவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். கலைத்துறையினரே! புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். வெறுத்துப் போகாமல் பொறுத்து நின்றால் வெற்றி பெற வாய்ப்புள்ள வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 11, 12, 13 அதிஷ்ட எண்கள்: 2, 5 அதிஷ்ட நிறங்கள்: சிவப்பு, ஆலிவ் பச்சை அதிஷ்ட திசை: தென்கிழக்கு

  • கைமாறு கருதாமல் உதவுபவர்களே! சனி வலுவாக 3-ல் நிற்பதால் எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்களால் திருப்பம் உண்டாகும். பிள்ளைகள் உங்களின் அறிவுரைகளை ஏற்பார்கள். சுப நிகழ்ச்சிகள், உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். 5-ல் அமர்ந்து அவ்வப்போது உங்களை புலம்ப வைத்துக் கொண்டும், ஆத்திரப்படவும் வைக்கும் சூரியன் 13-ந் தேதி முதல் 6-ல் அமர்வதால் மனம் தெளியும். டென்ஷன் தீரும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். இழுபறியான வேலைகள் முடியும். சுக்ரன் சாதகமாக இருப்பதால் பணம் வரும். மனைவி ஒத்தாசையாக இருப்பார். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வாகனத்தை மாற்றுவீர்கள். புதிதாக வீடு, மனை அமையும். தந்தைவழியில் அனுகூலம் உண்டு. குரு சாதகமாக இல்லாததால் வேலைச்சுமை இருக்கும். தூக்கம் குறையும், இனந்தெரியாத கவலைகள் புரட்டும். செவ்வாய் 2-ல் நிற்பதால் பல் வலி, காது வலி, பேச்சால் பிரச்னை வந்துப் போகும். உடன்பிறந்தவர்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். சொத்து வாங்குவது, விற்பதில் அவசரம் வேண்டாம். ஆலயம் புதுப்பிக்க உதவுவீர்கள். கன்னிப்பெண்களே! பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சமயங்களில் உங்களை கடிந்துப் பேசினாலும் அன்பாக நடந்து கொள்வார். கலைத்துறையினரே! உங்களின் கற்பனைத் திறன் வளரும். அனுசரித்துப் போவதன் மூலம் அதிகாரம் பெறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 10, 11, 14 அதிஷ்ட எண்கள்: 4, 7 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், க்ரீம் வெள்ளை அதிஷ்ட திசை: கிழக்கு

  • கலாச்சாரத்தை விட்டுக் கொடுக்காமல் வாழ்பவர்களே! உங்கள் பாக்யாதிபதி புதன் சாதகமாக இருப்பதால் புது திட்டங்கள் மனதில் உதிக்கும். பழைய கடனைப் பைசல் செய்ய புது உதவிகள் கிட்டும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். குடும்ப சூழ்நிலை புரிந்து கொள்வார்கள். ஆனால் 13-ந் தேதி முதல் சூரியன் 5-ல் அமர்வதால் முன்கோபம், காரியத் தடை, தூக்கமின்மை, உறவினர்களால் அன்புத் தொல்லைகள் வந்து விலகும். ராசிநாதன் சுக்ரன் சாதகமாக இருப்பதால் ஆளமைத்திறன் அதிகரிக்கும். விலை உயர்ந்த எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்குவீர்கள். 11-ல் ராகு நிற்பதால் எதிர்பாராத பணவரவு உண்டு. உங்களின் மதிப்பு, மரியாதைக் கூடும். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். பாதச் சனி தொடர்வதால் வீண் செலவு, விரையம், கணுக்கால் வலி வந்துப் போகும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். ராசிக்குள் செவ்வாய் அமர்ந்திருப்பதால் சிறுசிறு விபத்துகள், முன்கோபம், சகோதர வகையில் பிரச்னைகள், வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்துச் செல்லும். கன்னிப் பெண்களே! காதல் மற்றும் உயர்கல்வி சம்பந்தப்பட்ட குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் பெரிய பொறுப்புக்கு தேர்தெடுக்கப்படுவீர்கள். சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். கலைத்துறையினரே! புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்வீர்கள். கலகலப்பாக பேசி காரியம் சாதிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 11, 13, 14 அதிஷ்ட எண்கள்: 3, 9 அதிஷ்ட நிறங்கள்: சில்வர்கிரே, மெரூண் அதிஷ்ட திசை: மேற்கு

  • அழுத்தமான கொள்கை பிடிப்புள்ளவர்களே! உங்கள் பிரபல யோகாதிபதி சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால் மாறுபட்ட அணுகுமுறையால் சாதிப்பீர்கள். வேலைக் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. சொத்துப் பிரச்னை தீரும். பகைவர்கள் ஒதுங்குவார்கள். வழக்கில் வெற்றி உண்டு. தாய்வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிநாட்டுப் பயணம் அமையும். விசா கிடைக்கும். புதனும், சுக்ரனும் சாதகமாக இருப்பதால் புது நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகமடைவீர்கள். பூர்வீக சொத்து சீர் செய்வீர்கள். உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். மகளின் திருமணப் பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடியும். மகனுக்கு வேலைக் கிடைக்கும். உங்கள் ரசனைக் கேற்ப வீடு அமையும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். ராசிக்கு 10-ல் தொடர்வதால் சிலர் உங்களை தவறான போக்கிற்கு தூண்டுவார்கள். சந்தேகத்தால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். சின்ன சின்ன மரியாதைக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும். ராசிநாதன் செவ்வாய் ராசிக்கு 12-ல் மறைந்திருப்பதால் கடன் பிரச்னைகள் அவ்வப்போது மனசை வாட்டும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திடாதீர்கள். சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். ஜென்மச் சனி தொடர்வதால் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். வியாபாரத்தில எதிர்பாராத தன லாபம் உண்டு. வேலையாட்களிடம் கறாராக இருங்கள். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். மேலதிகாரியுடன் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். வளைந்து, நெளிந்து பயணிக்க வேண்டிய வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 9, 12, 14 அதிஷ்ட எண்கள்: 2, 8 அதிஷ்ட நிறங்கள்: நீலம், ஆரஞ்சு அதிஷ்ட திசை: கிழக்கு

  • தோல்வி கண்டு துவளாதவர்களே! கேது 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் தொட்ட காரியங்கள் துலங்கும். மகான்கள், சித்தர்களின் ஜீவ சமாதிக்கு சென்று வருவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையை புரிந்து நடந்துக் கொள்வார்கள். உறவினர்கள் மத்தியில் இருந்த மனக்கசப்பு நீங்கும். பழைய வழக்குகளில் நல்ல தீர்ப்பு வரும். வேலைக் கிடைக்கும். கடந்த கால இனிய அனுபவங்களை அவ்வப்போது நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். 2-ல் அமர்ந்து ஏட்டிக்குப் போட்டியாக பேச வைக்கும் சூரியன் 13-ந் தேதி முதல் 3-ல் அமர்வதால் இங்கிதமாகப் பேசுவீர்கள். தடைப்பட்ட அரசு காரியங்கள் உடனே முடியும். புது வீடு கட்டத் தொடங்குவீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் மனைவியின் உடல் நிலை சீராகும். மனைவிவழியில் சொத்து சேரும். கல்யாண முயற்சிகள் வெற்றியடையும். செவ்வாய் 11-ம் வீட்டில் நிற்பதால் மகனுக்கு அயல்நாட்டுத் தொடர்புள்ள நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். உடன்பிறந்தவர்களுக்கிருந்த பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு. கன்னிப் பெண்களே! கெட்ட நண்பர்களின் சகவாசங்களிலிருந்தும் விடுபடுவீர்கள். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள். சக ஊழியர்கள் ஆச்சர்யப்படுமளவிற்கு சில வேலைகளை பரபரப்புடன் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினரே! உங்களின் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். பிரபலங்களால் ஆதாயமடையும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 10, 11, 12 அதிஷ்ட எண்கள்: 1, 9 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தாபச்சை, கிரே அதிஷ்ட திசை: கிழக்கு

  • அதிமேதாவித்தனம் அதிகம் உள்ளவர்களே! ராசிநாதன் சனிபகவான் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் கௌரவப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக் கடன் உதவி கிடைக்கும். உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உள் மனதில் தொக்கி நிற்கும் தாழ்வு எண்ணங்களை தூக்கி எறிவீர்கள். இங்கிதமாக இதமாகப் பேசுவீர்கள். கொஞ்சம் வளைந்துக் கொடுத்தால் வானம் போல் நிமிரலாம் என்பதை உணர்வீர்கள். ஷேர் பணம் தரும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். மகனுக்கு வேலைக் கிடைக்கும். 12-ந் தேதி வரை ராசிக்குள் நிற்கும் சூரியன் உங்களை சீண்டிப் பார்க்கும். கோபத்தை குறையுங்கள். வீடு மாற வேண்டிய நிர்ப்பந்தம் வரும். 13-ந் தேதி முதல் உங்கள் ராசியை விட்டு சூரியன் விலகுவதால் சோர்வு, களைப்பு, வயிற்று வலி நீங்கும். அவ்வப்போது உணர்ச்சிவசப்பட்டு பேசுவீர்கள். பார்வையை பரிசோதித்துக் கொள்ளுங்கள். புதன் சாதகமாக இருப்பதால் வாகனத்தை சீர் செய்வீர்கள். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் வாஞ்சையான விசாரிப்புகள் அதிகரிக்கும். பணம் ஓரளவு வரும். கன்னிப் பெண்களே! கசந்த காதல் இனிக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். பழைய சரக்குகளை தள்ளுபடி விலையில் விற்று முடிப்பீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்கள் டென்ஷன் வந்துப் போகும். உத்யோகத்தில் உங்கள் திறமையை மூத்த அதிகாரி பரிசோதிப்பார். கலைத்துறையினரே! உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். எதிர்ப்புகள் நீங்கி எதிர்பார்ப்புகளில் ஒரு சில நிறைவேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 10, 11, 13 அதிஷ்ட எண்கள்: 5, 8 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வைலெட் அதிஷ்ட திசை: தெற்கு

  • உழைப்பால் உயர்ந்தவர்களே! புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்களின் எண்ணங்கள் நிறைவேற வாய்ப்பிருக்கிறது. மாறுபட்ட அணுகுமுறையால் பழைய சிக்கல்களுக்குத் தீர்வு கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வரும். பிள்ளைகளிடம் முக்கியமான குடும்ப விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதில் தவறில்லை. மகளுக்கு நல்ல வரன் கூடி வரும். விலைவாசி ஏறிக்கிட்டே போகுது; வாடகையும் தாறுமாற கூடிக்கிட்டே போகுது. புறநகர் பகுதியிலாவது அறை கிரவுண்ட், ஒரு கிரவுண்ட் வாங்கினா பத்து வருஷம் கழித்து வீடு கட்டிக்கிட்டு செட்டிலாகி விடலாம் என்று யோசிப்பீர்கள். உங்கள் ராசிநாதன் சனிபகவான் வலுவாக இருப்பதால் சொந்த-பந்தங்களின் சுயரூபத்தை தெரிந்துக் கொண்டு அதற்கேற்ப இனி செயல்படுவீர்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். 13-ந் தேதி முதல் சூரியன் ராசிக்குள் நுழைவதால் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததால் மனைவிக்கு மருத்துவச் செலவுகள், இழப்புகள், ஏமாற்றம் வந்துச் செல்லும். கன்னிப் பெண்களே! சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த சில விளம்பர யுத்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சின்ன சின்ன பிரச்னைகள் தலைத்தூக்கினாலும் சாதுர்யமாகப் பேசி சரி செய்வீர்கள். கலைத்துறையினரே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். தன் பலம் பலவீனத்தை உணரும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 10, 12, 14 அதிஷ்ட எண்கள்: 1, 6 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், க்ரீம் வெள்ளை அதிஷ்ட திசை: மேற்கு

  • மனித நேயம் அதிகம் உள்ளவர்களே! ராகு 6-ம் வீட்டில் நிற்பதால் தைரியம் கூடும். பணவரவு உண்டு. வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். தள்ளிப் போன திருமணம் கூடி வரும். ஷேர் மூலம் லாபம் வரும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். ஆன்மிக அறிஞர்கள், கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் உறவினர், நண்பர்கள் சிலர் உங்கள் ஆலோசனையை நாடுவார்கள். நவீன ரக மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். சூரியன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் அரசாங்க விஷயங்கள் விரைந்து முடியும். பழைய கடனில் ஒரு பகுதி தீரும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். 8-ல் செவ்வாய் நிற்பதால் வாகன விபத்துகள், உடன்பிறந்தவர்களால் டென்ஷன், எதிர்பாராத செலவுகள் வந்துச் செல்லும். சொத்து வாங்கும் போது தாய்பத்திரத்தை சரி பார்த்து வாங்குங்கள். கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள். அவ்வப்போது விடுமுறையில் சென்ற வேலையாட்கள் இனி பொறுப்பாக நடந்துகொள்வார்கள். உத்யோகத்தில் கடினமான வேலைகளையும் மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். கலைத்துறையினரே! சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். எதிர்நீச்சலின்றி இலக்குகளை எட்டிப்பிடிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 11, 13, 14 அதிஷ்ட எண்கள்: 3, 5 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், கிரே அதிஷ்ட திசை: வடமேற்கு

http://www.kathiravan.com/?page_id=1302
Share with your friends










Submit