இராசிபலன்கள் 07-08-2016 முதல் 14-08-2016 வரை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]
வார பலன், ஜாதகம், Weekly Astrology Tamil, Weekly Astrology In Tamil, Tamil Weekly Astrology, Tamil Astrology For This Week, Tamil Astrology Weekly Predictions, Astrology In Tamil, Free Tamil Astrology, Tamil Astrology Horoscope, Tamil Astrology Rashi, Tamil Astrology Rashi Chart

கதிரவனுக்காகக் கணித்து எழுதியவர் ஜோதிடமணி பிரம்மஸ்ரீ ரகுநாத ஐயர் தமிழ்நாடு, இந்தியா

 • எங்கும், எதிலும் புதுமையை புகுத்தும் நீங்கள், தன்மானச் சிங்கங்கள். சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்களின் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பூர்வீக சொத்து கைக்கு வரும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வீட்டை விரிவுப்படுத்தி, அழகுப்படுத்துவீர்கள். நட்பு வட்டம் விரியும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பழைய கடனில் ஒரு பகுதியை தீர்க்க வழி பிறக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். சூரியன் 4&ல் நிற்பதால் முன்கோபம் அதிகரிக்கும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். 2&ந் தேதி முதல் குரு 6&ல் மறைவதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். வங்கிக் காசோலையில் முன்னரே கையப்பமிட்டு வைக்காதீர்கள். ஒற்றை தலை வலி, கட்டை விரலில் அடிப்படுதல், மனைவிக்கு தைராய்டு பிரச்னை, முதுகுத் தண்டில் வலி வந்துப் போகும். அரசியல்வாதிகளே! எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமாராக இருக்கும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்யோகத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலைப் பார்க்க வேண்டி வரும். இங்கிதமான பேச்சால் எதையும் முடிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 4, 6, 7 அதிஷ்ட எண்கள்: 4, 9 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் அதிஷ்ட திசை: வடக்கு

 • தன் கையே தனக்குதவி என்று வாழும் நீங்கள், தோல்வி கண்டு துவளமாட்டீர்கள். 2&ந் தேதி முதல் குருபகவான் 5&ம் இடத்தில் அமர்வதால் உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். மாறுபட்ட யோசனைகள் மூலமாக பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வி.ஐ.பிகளின் உதவியுடன் சில காரியங்களை சாதிப்பீர்கள். புது வேலை அமையும். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையறிந்துப் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். சொந்த&பந்தங்களின் சுயரூபம் தெரிய வரும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். 7&ல் சனியும், 4&ல் ராகுவும் வீண் சந்தேகம், தலைச்சுற்றல், அசதி, தூக்கமின்மை, வீண் பழி, பிறர் மீது நம்பிக்கையின்மை, தாயாருடன் மோதல்கள் வந்துச் செல்லும். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. கன்னிப் பெண்களே! நிஜம் எது நிழல் எது என்பதை உணர்வீர்கள். நீங்கள் நினைத்தது நிறைவேறும். அரசியல்வாதிகளே! கட்சி தலைமை மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிகாரிகளும், சக ஊழியர்களும் மதிக்கத் தொடங்குவார்கள். தடைகளை தகர்த்தெறியும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 2, 6, 7 அதிஷ்ட எண்கள்: 1, 7 அதிஷ்ட நிறங்கள்: வெளிர்நீலம், மெரூண் அதிஷ்ட திசை: கிழக்கு

 • ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று கருதும் நீங்கள், கடலளவு அன்பு கொண்டவர்கள். ராசிநாதன் புதனும், பூர்வ புண்யாதிபதி சுக்ரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் பொது அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். போட்டித் தேர்வில் வெற்றி கிடைக்கும். அழகு, இளமைக் கூடும். வீட்டை மாற்றுவது, விரிவுப்படுத்திக் கட்டுவது போன்ற முயற்சிகள் சாதகமாக முடியும். குறைந்த வட்டிக்கு வங்கிக் கடன் கிடைக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். புது வேலைக் கிடைக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் பலிதமாகும். 2&ந் தேதி முதல் குரு 4&ல் அமர்வதால் விபத்து, செலவு, தாயாருடன் விவாதங்கள், வாகனப் பழுது வந்துச் செல்லும். வெளிவட்டாரத்தில் தனிநபர் விமர்சனங்களை தவிர்கக்ப்பாருங்கள். சனியும், ராகுவும் வலுவாக இருப்பதால் ஷேர் லாபம் தரும். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டு மனை வாங்குவீர்கள். அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் பாராட்டப்ப டுவீர்கள். கன்னிப் பெண்களே! காதல் விவகாரங்களில் சிக்கிக் கொள்ளாதீர்கள். பள்ளிக் கல்லூரி காலத் தோழியை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். புதிய நட்பால் முன்னேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 1, 3, 4 அதிஷ்ட எண்கள்: 5, 6 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ஊதா அதிஷ்ட திசை: தெற்கு

 • தளராத தன்னம்பிக்கையுடைய நீங்கள், தடை கற்களை படிகட்டுகளாக்கி பயணிப்பவர்கள். ராசிக்குள் நிற்கும் சூரியன் உங்களை அவ்வப்போது டென்ஷனாக்கினாலும் சுக்ரனும், புதனும் சாதகமாக இருப்பதால் பிரச்னைகளை போராடி சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். உறவினர், நண்பர்களின் பாசமான விசாரிப்புகள் ஆறுதலாக இருக்கும். டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சொத்து வாங்குவது, விற்பது சுமூகுமாக முடியும். 2&ந் தேதி முதல் குரு 3&ல் மறைவதால் புதிய முயற்சிகள் தாமதமாகி முடியும். வி.ஐ.பிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். 2&ல் ராகுவும், 8&ல் கேதுவும் தொடர்வதால் வீண் வாக்குவாதம், பல், காது, கண் வலி வந்துப் போகும். காலில் அடிப்பட வாய்ப்பிருக்கிறது. யாருக்காகவும் சாட்சி கையப்பமிட வேண்டாம். அரசியல்வாதிகளே! தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் மேலிடத்திற்கு கொண்டுச் செல்லுங்கள். கன்னிப் பெண்களே! நண்பர்கள் சிலரின் சுயரூபத்தை இப்பொழுது உணருவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளால் லாபம் குறையும். வேலையாட்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் மற்றவர்களை வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். மறப்போம் மன்னிப்போம் என்றிருக்க வேண்டிய வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 1, 4, 6 அதிஷ்ட எண்கள்: 3, 6 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, சில்வர்கிரே அதிஷ்ட திசை: தென்மேற்கு

 • நியாயத்திற்காக போராடும் நீங்கள், பிரச்சனைகளை கண்டு பின்வாங்கமாட்டீர்கள். 2&ந் தேதி முதல் குரு 2&ம் வீட்டில் நுழைவதால் அழகு, ஆரோக்யம் கூடும். தள்ளிப் போன காரியங்களெல்லாம் நல்ல விதத்தில் முடியும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். பிரிந்திருந்த கணவன்&மனைவி ஒன்று சேருவீர்கள். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். உறவினர், நண்பர்களின் அன்புத் தொல்லை குறையும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சூரியன் மறைந்திருப்பதால் திடீர் பயணங்கள், தூக்கமின்மை வந்துப் போகும். சனி 4&ல் நிற்பதால் சேமிப்புகள் கரையும். தாயார் கோபப்படுவார். சொத்து வாங்கும் போது தாய்பத்திரத்தை சரி பார்த்து வாங்குங்கள். ராசிக்குள் ராகு நிற்பதால் பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரம்மை வந்து நீங்கும். நெஞ்சு எரிச்சல், வாயுக் கோளாறு, வயிற்றுப் புண் வந்துச் செல்லும். அரசியல்வாதிகளே! பெரிய பொறுப்புகள், பதவிகள் வரும். கோஷ்டி பூசல்கள் மறையும். கன்னிப் பெண்களே! உயர்கல்வி நல்ல விதத்தில் அமையும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். புதிய பாதை தென்படும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 3, 5, 7 அதிஷ்ட எண்கள்: 2, 5 அதிஷ்ட நிறங்கள்: நீலம், மஞ்சள் அதிஷ்ட திசை: வடக்கு

 • மலர்ந்த முகத்துடன், உபசரித்து உதவும் குணம் கொண்ட நீங்கள், பாரம்பரியத்தை மறவாதவர்கள். சூரியன் லாப வீட்டில் நிற்பதால் எதிலும் உங்கள் கை ஓங்கும். மாறுபட்ட அணுபவங்களைப் பயன்படுத்தில் வெற்றி பெறுவீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். வீடு கட்ட அனுப்பியிருந்த கட்டிட வரைபடத்திற்கு அரசு அனுமதி கிட்டும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் பிடிவாதம் தளரும். புது வேலை அமையும். அரசால் அனுகூலம் உண்டு. உறவினர்களுக்கு மத்தியில் ஒருபடி உயர்ந்து நிற்க வேண்டுமென எண்ணுவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். புதிதாக சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். 2&ந் தேதி முதல் குரு ராசிக்குள் நுழைந்து ஜென்ம குருவாக வருவதால் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். கணவன்&மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோப் பிரச்னையால் பிரிவுகள் வரக்கூடும். யூரினரி இன்பெக்ஷன், அலர்ஜி, படபடப்பு, ஏமாற்றம், மறைமுக அவமானம் வந்து செல்லும். தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பிக் கொண்டிருக்காதீர்கள். அரசியல்வாதிகளே! வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். கன்னிப் பெண்களே! பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் விளம்பர யுக்திகளை கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். அதிகாரிகள், சக ஊழியர்களுடன் அளவாகப் பழகுங்கள். சின்ன சின்ன சுகவீனங்களை தந்தாலும் ஒரளவு முன்னேற்றம் தரும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 2, 4, 6 அதிஷ்ட எண்கள்: 2, 8 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், மயில்நீலம் அதிஷ்ட திசை: வடமேற்கு

 • விருப்பு, வெறுப்பின்றி நடுநிலையாக செயல்படும் நீங்கள், உண்மைக்குப் புறம்பாக எதையும் செய்ய மாட்டீர்கள். 10&ல் சூரியனும், 11&ம் வீட்டில் ராகுவும் தொடர்வதால் எதிர்பார்ப்புகள் வெற்றியடையும். பணம் வரும். கைமாற்றாக வாங்கியிருந்ததையும் கொடுத்து முடிப்பீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். கணவன்&மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள். திருமணப் பேச்சு வார்த்தைக் கைக்கூடும். உறவினர், நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதித் தொகை தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். குரு 2&ந் தேதி முதல் 12&ல் மறைவதால் வீண் செலவு, திடீர் பயணங்கள், வருங்காலம் பற்றிய பயம் வந்துப் போகும். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்துக் கொண்டிருக்க வேண்டாம். அவ்வப்போது தூக்கம் குறையும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அரசியல்வாதிகளே! எதிர்ப்புகள் அடங்கும். கன்னிப் பெண்களே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். காதல் கனியும். புது முதலீடுகள் செய்து வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் மறைமுகத் தொந்தரவுகள் வந்தாலும் அதிகாரிகளால் ஆதாயம் உண்டு. அடிப்படை வசதி, வாய்ப்புகள் பெருகும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 2, 3, 7 அதிஷ்ட எண்கள்: 1, 8 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம், வெள்ளை அதிஷ்ட திசை: மேற்கு

 • முன் வைத்த காலைப் பின்வைக்காமல் முன்னேறும் குணமுடைய நீங்கள், தீவிரமாக யோசித்து மிதமாகச் செயல்படுபவர்கள். 2&ந் தேதி முதல் குரு லாப வீட்டில் அமர்வதால் தடைகளெல்லாம் விலகும். தொட்ட காரியம் துலங்கும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல், குழப்பம் விலகும். வீட்டில் தடைப்பட்டு வந்த விசேஷங்களெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வீடு கட்டத் தொடங்குவீர்கள். வங்கி லோன் கிடைக்கும். வாகன வசதிப் பெருகும். உறவினர்கள் சிலர் உங்களின் அதிரடியான வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். ராகு, கேது சரியில்லாததால் தயக்கம், தடுமாற்றம், ஒருவித படபடப்பு, வீண் பழி, மறைமுக எதிர்ப்பு வந்துச் செல்லும். அரசியல்வாதிகளே! கட்சி மேல்மட்டத்திற்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். கன்னிப் பெண்களே! உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் போராட்டங்கள் விலகும். அதிகாரிகளால் உங்களின் கடின உழைப்பை புரிந்துக் கொள்வார்கள். பழைய பிரச்னைகளில் ஓன்று தீரும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 5, 6, 7 அதிஷ்ட எண்கள்: 6, 9 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், பிஸ்தாபச்சை அதிஷ்ட திசை: வடகிழக்கு

 • பிரதிபலன் பாராமல் உதவும் நீங்கள், எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்கள். சுக்ரனும், புதனும் சாதகமாக இருப்பதால் தளர்ந்திருந்த நீங்கள், உற்சாகமடைவீர்கள். பழைய இடத்தை விற்று உங்கள் ரசனைக் கேற்ப புது வீடு வாங்குவீர்கள். எதிர்பார்த்த பணவரவு உண்டு. பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். விலகிச் சென்ற உறவினர், நண்பர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். வழக்கு சாதகமாகும். 8&ல் சூரியன் நிற்பதால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். தந்தையின் உடல் நலம் பாதிக்கும். அரசாங்க அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். 2&ந் தேதி முதல் குரு 10&ல் நுழைவதால் வேலைச்சுமை, தர்ம சங்கடமான சூழ்நிலை, மறைமுக அவமானம், உங்களைப் பற்றிய வதந்திகளெல்லாம் வந்துச் செல்லும். அரசியல்வாதிகளே! கட்சியில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். கன்னிப் பெண்களே! உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் உங்களிடமிருந்து தொழில் யுக்திகளை கற்றுக் கொள்வார்கள். கடையை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர்கள். உத்யோகத்தில் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். மூத்த அதிகாரிகளிடம் நெருக்கமும் வேண்டாம், பகையும் வேண்டாம். தன் பலம் பலவீனம் உணர்ந்து செயல்பட வேண்டிய வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 1, 2, 7 அதிஷ்ட எண்கள்: 2, 7 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், சிவப்பு அதிஷ்ட திசை: தென்மேற்கு

 • அறிவுப்பூர்வமாக எதையும் யோசிக்கும் நீங்கள், காரண காரியமில்லாமல் கோபப்பட மாட்டீர்கள். 2&ந் தேதி முதல் குரு 9&ம் வீட்டில் நுழைவதால் எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடிவடையும். திடீர் பணவரவு உண்டு. சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பணப்பற்றாக்குறையால் பாதியில் நின்ற வீட்டை கட்டத் தொடங்குவீர்கள். வங்கி லோன் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துக் கொள்வார்கள். சிலர் புதிதாக வாகனம் வாங்குவீர்கள். உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அடகிலிருந்த நகை, பத்திரங்களை மீட்பீர்கள். கண்டும் காணாமல் சென்றுக் கொண்டிருந்தவர்களெல்லாம் வலிய வந்து உறவாடுவார்கள். ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால் புதியவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும். முக்கிய கோப்புகளை கவனமாக கையாளுங்கள். அரசியல்வாதிகளே! கட்சித் தலைமை அறிவிக்கும் போராட்டங்களில் கலந்துக் கொண்டு முக்கிய நிர்வாகிகளின் மனதில் இடம் பிடிப்பீர்கள். கன்னிப் பெண்களே! காதல் கசந்து இனிக்கும். எதிர்காலத்தைப் பற்றி யோசியுங்கள். வியாபாரத்தில் புது முயற்சிகள் பலிதமாகும். பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். தொடர் முயற்சியால் சாதிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 2, 3, 4 அதிஷ்ட எண்கள்: 1, 3 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன் அதிஷ்ட திசை: கிழக்கு

 • வெளுத்ததெல்லாம் பால் என நினைத்து ஏமாறும் நீங்கள், இளகிய மனசு கொண்டவர்கள். சுக்ரனும், புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் அடிப்படை வசதிகளை பெருக்குவீர்கள். பணவரவு உண்டு. கல்யாணம் கூடி வரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளை உற்சாகப்படுத்த கேட்டதை வாங்கித் தருவீர்கள். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். உறவினர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். 2&ந் தேதி முதல் குரு 8&ல் மறைவதால் வீண் அலைச்சல்கள், செலவினங்கள் அதிகமாகும். நெருங்கிய நண்பர்களில் ஒருசிலர் உங்களை விட்டு விலகுவார்கள். உங்களை சிலர் தவறானப் போக்கிற்கு தூண்டுவார்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும். அரசியல்வாதிகளே! கட்சி மேலிடம் உங்களை நம்பி சில போராட்டங்களுக்கு தலைமை தாங்க வைக்கும். கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். உயர்கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடி அறிவிப்புகள் மூலமாக லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் எதிர்ப்புகளை தாண்டி முன்னேறுவீர்கள். மன உறுதியால் வெல்லும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 3, 5, 6 அதிஷ்ட எண்கள்: 4, 5 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், பிங்க் அதிஷ்ட திசை: தென்கிழக்கு

 • சுற்றம் சூழ வாழ்வதை விரும்பும் நீங்கள், மகிழ்வித்து மகிழ்பவர்கள். ராகு வலுவாக இருப்பதால் நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். நீண்ட காலமாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். 2&ந் தேதி முதல் குரு ராசிக்கு 7&ல் அமர்வதால் மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். தோற்றப் பொலிவுக் கூடும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். கணவன்&மனைவிக்குள் இருந்து வந்த மோதல்கள் விலகும். தள்ளிப் போன திருமணம் கூடி வரும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். சுக்ரனும், புதனும் 6&ல் மறைந்திருப்பதால் வீண் கவலைகள், கணவருக்கு ஆரோக்ய குறைவு, மின்னணு, மின்சார சாதனப் பழுது, சிறுசிறு விபத்துகள் வந்துச் செல்லும். உறவினர், நண்பர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். அரசியல்வாதிகளே! தலைமை உங்களை நம்பி சில பொறுப்புகளை கொடுக்கும். தொகுதியில் நல்ல மதிப்பு கிடைக்கும். கன்னிப் பெண்களே! மனதில் ஒரு தெளிவு பிறக்கும். காதல் விவகாரத்தில் தள்ளி இருங்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். உழைப்பால் உயரும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 2, 3, 7 அதிஷ்ட எண்கள்: 6, 8 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, பிஸ்தாபச்சை அதிஷ்ட திசை: தெற்கு

http://www.kathiravan.com/?page_id=1302