இராசிபலன்கள் 16-05-2016 முதல் 23-05-2016 வரை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]
வார பலன், ஜாதகம், Weekly Astrology Tamil, Weekly Astrology In Tamil, Tamil Weekly Astrology, Tamil Astrology For This Week, Tamil Astrology Weekly Predictions, Astrology In Tamil, Free Tamil Astrology, Tamil Astrology Horoscope, Tamil Astrology Rashi, Tamil Astrology Rashi Chart

கதிரவனுக்காகக் கணித்து எழுதியவர்  ஜோதிடமணி பிரம்மஸ்ரீ ரகுநாத ஐயர் தமிழ்நாடு, இந்தியா

 • ஏட்டறிவுடன், பட்டறிவும் உள்ளவர்களே! குரு 5-ல் தொடர்வதால் மாறுபட்ட யோசனைகள் மனதில் உதயமாகும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். கல்வியாளர்களின் தொடர்பு கிடைக்கும். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். குடும்பத்தில் அமைதி திரும்பும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். மகனுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வேலைக் கிடைக்கும். சூரியன் உங்கள் ராசியை விட்டு விலகியதால் சோர்வு, சலிப்பு, படபடப்பு நீங்கும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். மனைவியின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள். லாப வீட்டில் கேது தொடர்வதால் பால்ய நண்பர்கள் உதவுவார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். அஷ்டமத்துச் சனி தொடர்வதால் உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள். மனிதர்களின் இரட்டை வேடத்தை நினைத்து கோபப்படுவீர்கள். சமூகத்தின் மீதும் சின்ன சின்ன கோபமெல்லாம் வந்து நீங்கும். கன்னிப் பெண்களே! திருமணத் தடை நீங்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். வாடிக்கையாளர்களை கவர புது சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் அதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள். கலைத்துறையினரே! உங்களின் படைப்புத் திறன் வளரும். எதிர்பாராத திடீர் திருப்பங்கள் உண்டாகும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 16, 18, 20 அதிஷ்ட எண்கள்: 5, 7 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், ஆலிவ் பச்சை அதிஷ்ட திசை: வடமேற்கு

 • நியாயத்தின் பக்கம் நிற்பவர்களே! சூரியன் உங்கள் ராசிக்குள் நுழைந்திருப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். அரசு காரியங்கள் தாமதமாகி முடியும். வேனல் கட்டி, உடல் உஷ்ணத்தால் அடி வயிற்றில் வலி வந்துப் போகும். செவ்வாய் 7-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் அனைத்து பிரச்னைகளையும் சமாளிக்கும் சக்தி உண்டாகும். சகோதரங்களால் பயனடைவீர்கள். கண்டகச் சனி தொடர்வதாலும், 4-ல் ராகு நீடிப்பதாலும் திடீர் நண்பர்களை நம்ப வேண்டாம். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. முடிந்த வரை முக்கிய விஷயங்களை நீங்களே, நேரில் சென்று முடிக்கப் பாருங்கள். பூர்வ புண்யாதிபதி புதனும், 19-ந் தேதி வரை ராசிநாதன் சுக்ரனும் 12-ல் மறைந்திருப்பதால் உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை நீங்களே செலவு செய்து முன்னின்று நடத்துவீர்கள். பழைய இனிமையான நினைவுகளில் அவ்வப்போது மூழ்குவீர்கள். பூர்வீக சொத்தில் சேர வேண்டிய பங்கை கேட்டு வாங்குவீர்கள். குரு 4-ல் தொடர்வதால் அவசர முடிவுகளை தவிர்க்கவும். தாயாருக்கு அசதி, சோர்வு, அவருடன் மனத்தாங்கல் வந்துச் செல்லும். கன்னிப் பெண்களே! பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். வேலையாட்கள், பங்குதாரர்களின் குறை, நிறைகளை சுட்டிக் காட்டுவீர்கள். உத்யோகத்தில் சவால்களை சந்திக்க வேண்டி வரும். கலைத்துறையினரே! அறிமுகக் கலைஞர்களால் ஆதாயமடைவீர்கள். ஆரோக்யத்தில் அக்கறை காட்ட வேண்டிய வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 17, 19, 21 அதிஷ்ட எண்கள்: 6, 9 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, கிரே அதிஷ்ட திசை: தென்கிழக்கு

 • அன்புக்குத் தலை வணங்குபவர்களே! ராகு 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் எதிர்பார்த்த காரியங்கள் வெற்றியடையும். ஷேர் மூலம் லாபம் வரும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். புது பதவிகள் தேடி வரும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் நன்மை உண்டாகும். சுக்ரனும், புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் அழகு, இளமைக் கூடும். பணவரவு உண்டு. உங்கள் ரசனைக் கேற்ப வீட்டை விரிவுப்படுத்தி கட்டுவீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். செவ்வாய் சாதகமாக இருப்பதால் கம்பீரமாக பேசுவீர்கள். சகோதரிக்கு வேலைக் கிடைக்கும். காலி இடத்தை விற்று புது வீடு வாங்குவீர்கள். சூரியன் 12-ல் மறைந்திருப்பதால் பல விஷயங்களையும் போராடி முடிக்க வேண்டி வரும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். திடீர் பயணங்கள் உண்டு. சில நாட்களில் தூக்கம் குறையும். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். கன்னிப் பெண்களே! காதல் இனிக்கும். தடைப்பட்ட உயர்கல்வியை தொடரும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களிடம் கறாராக இருங்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரித்தாலும் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். வர வேண்டிய சம்பள பாக்கி கைக்கு வரும். கலைத்துறையினரே! உங்களின் கற்பனைத் திறன் வளரும். புதிய திட்டங்கள் நிறைவேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 18, 20, 22 அதிஷ்ட எண்கள்: 1, 3 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு அதிஷ்ட திசை: வடக்கு

 • உதவும் கரங்கள் உடையவர்களே! முக்கிய கிரகங்கள் வலுவாக இருப்பதால் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அதிகாரப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். புது சொத்து சேரும். அரசால் அனுகூலம் உண்டு. சனி 5-ல் நிற்பதால் பிள்ளைகளை அதிகம் செலவு செய்து அவர்கள் விரும்பிய பாடப்பிரிவில் சேர்ப்பீர்கள். குருபகவான் 2-ல் நிற்பதால் பணபலம் உயரும். ஷேர் லாபம் தரும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வெளிநாடு, அண்டை மாநிலங்கள் செல்லும் வாய்ப்பு வரும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால் கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து அவ்வப்போது மனம் கலங்குவீர்கள். சிலர் எப்படியெல்லாம் போலித்தனமாக பழகி காரியத்தை சாதித்துக் கொள்கிறார்கள் என்பதை நினைத்தும் வருத்தப்படுவீர்கள். கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பங்குதாரர்கள் ஆதரிப்பார்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்களைப் புரிந்துக் கொண்டு வலிய வந்து உதவுவார்கள். எதிர்பார்த்த புது வாய்ப்புகளும், பொறுப்புகளும் தேடி வரும். கலைத்துறையினரே! வருமானம் உயர வழி பிறக்கும். தன்னம்பிக்கையால் சாதிக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 16, 17, 20 அதிஷ்ட எண்கள்: 4, 6 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தாபச்சை, ப்ரவுன் அதிஷ்ட திசை: தெற்கு

 • யார் நிழலிலும் வாழ விரும்பாதவர்களே! செவ்வாய் 4-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதுடன், உங்கள் ராசிநாதன் சூரியன் 10-ல் கேந்திரப்பலம் பெற்று அமர்ந்திருப்பதால் உங்களின் நிர்வாகத் திறமைக் கூடும். ஆட்சியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். புது வேலைக் கிடைக்கும். பிதுர்வழி சொத்துகள் சேரும். அரசு காரியங்கள் உடனே முடியும். வீடு கட்ட லோன் கிடைக்கும். வரைபட அனுமதி கிடைக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். புதிதாக சொத்து வாங்க முயற்சி செய்வீர்கள். சுக்ரனும், புதனும் சாதகமாக இருப்பதால் இதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய புது உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் புதிதாக வாங்குவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். ராசிக்குள் குருவும், ராகுவும் நிற்பதால் அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். சில நேரங்களில் ஏமாற்றங்களை உணர்வீர்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். வழக்கால் நிம்மதி இழப்பீர்கள். கன்னிப் பெண்களே! பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களுடன் போராட வேண்டி வரும். பெரியளவில் யாருக்கும் முன் பணம் தர வேண்டாம். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகளிடம் நெருக்கமும் வேண்டாம், பகையும் வேண்டாம். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கப்பாருங்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவீர்கள். கடினமாக உழைக்க வேண்டிய வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 18, 19, 22 அதிஷ்ட எண்கள்: 4, 6 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, மெரூண் அதிஷ்ட திசை: வடமேற்கு

 • ஆர்ப்பாட்டமில்லாமல் சாதிப்பவர்களே! செவ்வாயும், சனியும் 3-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் தொட்ட காரியம் துலங்கும். பணவரவு அதிகரிக்கும். மனதில் தொக்கி நிற்கும் தாழ்வு எண்ணங்களை தூக்கி எறிவீர்கள். அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். திருமணப் பேச்சு வார்த்தைக் கைக்கூடும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். புதிதாக வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்வீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். சூரியன் 9-ம் வீட்டில் நுழைந்திருப்பதால் தந்தைக்கு வேலைச்சுமை, அவருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். அரசாங்க விஷயங்கள் தாமதமாக முடியும். சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் பொது அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். ராசிநாதன் புதன் 8-ல் மறைந்திருப்பதால் வீண் அலைச்சல், செலவுகள், உறவினர், நண்பர்களுடன் மோதல்கள் வந்துச் செல்லும். 12-ல் குருவும், ராகுவும் மறைந்திருப்பதால் எதிர்பாராத பயணங்கள் உண்டு. பழைய கசப்பான அனுபவங்கள் அவ்வப்போது நினைவுக்கு வரும். தூக்கம் குறையும். கன்னிப் பெண்களே! காதல் மற்றும் உயர்கல்வி சம்பந்தப்பட்ட குழப்பங்கள் நீங்கும். கேது வலுவாக இருப்பதால் வியாபாரம் செழிக்கும். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வந்து இணைவார். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் இருந்த மோதல்கள் விலகும். சக ஊழியர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். கலைத்துறையினரே! புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். வி.ஐ.பிகளால் பாராட்டப் பெறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 16, 18, 20 அதிஷ்ட எண்கள்: 1, 7 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, கிளிப் பச்சை அதிஷ்ட திசை: மேற்கு

 • இளகிய மனசு கொண்டவர்களே! ராகுவும், குருவும் லாப வீட்டில் தொடர்வதால் சவாலான விஷயங்களையும் சாமர்த்தியமாக முடிப்பீர்கள். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டு மனை வாங்குவீர்கள். கௌரவப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு அறை அல்லது தளம் கட்டுவீர்கள். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். திருமணம் கூடி வரும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அயல்நாட்டிலிருக்கும் நண்பர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். புதன் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் உறவினர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு மகிழ்வீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். பாதச் சனி தொடர்வதால் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். அவ்வப்போது ஒருவித அச்சம், தயக்கம், தடுமாற்றம் வந்துச் செல்லும். சூரியன் 8-ல் மறைந்திருப்பதால் அரசால் ஆதாயம் உண்டு. வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். ராசிநாதன் சுக்ரன் 20-ந் தேதி முதல் 8-ல் நுழைவதால் சளித் தொந்தரவு, காய்ச்சல், அசதி, சோர்வு வந்து விலகும். ஆனால் சுக்ரன் ஆட்சிப் பெற்று அமர்வதால் மனப்போராட்டங்கள் ஓயும். கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் கனவுகள் நனவாகும். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். கலைத்துறையினரே! பழைய நிறுவனங்களிலிருந்து அழைப்பு வரும். விடாமுயற்சியால் இலக்கை எட்டும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 16, 17, 19 அதிஷ்ட எண்கள்: 2, 5 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, மஞ்சள் அதிஷ்ட திசை: வடகிழக்கு

 • புரட்சிகரமான சிந்தனை உடையவர்களே! ராசிநாதன் செவ்வாய் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் தடைகளும், போராட்டங்களும் இருந்தாலும் சளைக்காமல் சமாளிக்கும் சக்தி கிடைக்கும். எல்லாப் பிரச்னைகளிலிருந்தும் நூலிழையில் நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புதன் 6-ல் மறைந்திருப்பதால் நரம்புச் சுளுக்கு, தொண்டை வலி, கழுத்து வலி வந்துப் போகும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். சூரியன் 7-ல் அமர்ந்திருப்பதால் உடல் உஷ்ணம் அதிகமாகும். மனைவியுடன் சின்ன சின்ன மோதல்கள், அவருக்கு மாதவிடாய்க் கோளாறு, கர்ப்பப்பை வலி வந்துப் போகும். உங்களின் சப்தமாதிபதி சுக்ரன் 20-ந் தேதி முதல் 7-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்வதால் பணப்பற்றாக்குறை விலகும். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். குருவும், ராகுவும் 10-ல் தொடர்வதால் வேலைச்சுமையால் டென்ஷன் அதிகரிக்கும். உங்களின் உழைப்பை வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவார்கள். ஜென்மச் சனி தொடர்வதால் ஒருவித பதட்டம், படபடப்பு, கோபம் வந்துச் செல்லும். வழக்குகளில் வழக்கறிஞரின் போக்கு சரியாக இருக்கிறதா என்பதை அவ்வப்போது நீங்கள் ஆராய்வது நல்லது. கன்னிப் பெண்களே! மனதை அலைபாய விடாதீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். வேலையாட்கள், பங்குதாரர்களால் மறைமுகப் பிரச்னைகள் வந்து நீங்கும். உத்யோகத்தில் உங்களைவிட அனுபவம் குறைவானவர்கள், வயதில் சிறியவர்களிடமெல்லாம் நீங்கள் அடங்கிப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும். கலைத்துறையினரே! விமர்சனங்களும், கிசுகிசுத் தொந்தரவுகளும் வரக்கூடும். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்படவேண்டிய வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 19, 21, 22 அதிஷ்ட எண்கள்: 1, 9 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், இளம்சிவப்பு அதிஷ்ட திசை: தெற்கு

 • புதுமையுடன் பழமையை புகுத்துபவர்களே! சூரியன் 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் எப்படியும் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்த்தவர்கள் உங்களிடம் மனம் திருந்தி மன்னிப்பு கேட்பார்கள். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். வீடு கட்ட அனுப்பியிருந்த கட்டிட வரைபடத்திற்கு அரசு அனுமதி கிட்டும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். அரசியலில் செல்வாக்குக் கூடும். ராசிநாதன் குரு சாதகமாக இருப்பதால் அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்பொழுது நிறைவேறும். புது வேலை அமையும். 20-ந் தேதி முதல் சுக்ரன் 6-ல் மறைவதால் தொண்டை புகைச்சல், கழுத்து வலி, வேலைச்சுமை, வீண் டென்ஷன் வந்துப் போகும். வீண் சந்தேகம், ஈகோப் பிரச்னையால் கணவன்-மனைவிக்குள் பிரிவுகள் வரக்கூடும். டி.வி., ஃப்ரிட்ஜ் போன்ற மின்சார சாதனங்கள் பழுதாகும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியை தவிர்ப்பது நல்லது. சிறுசிற விபத்துகள் நிகழக்கூடும். கேது 3-ம் வீட்டில் தொடர்வதால் மனோபலம் கூடும். ஷேர் மூலம் பணம் வரும். வேற்றுமதத்தவர்கள், மாநிலத்தவர்களால் அனுகூலம் உண்டாகும். கன்னிப் பெண்களே! காதல் கசந்து இனிக்கும். எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை தள்ளுபடி விலையில் விற்று முடிப்பீர்கள். பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உயரதிகார்கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். கலைத்துறையினர்களே! உங்களுடைய படைப்புகளை வெளியிடுவதில் தடை, தாமதம் ஏற்படக்கூடும். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 17, 19, 20 அதிஷ்ட எண்கள்: 2, 8 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ் அதிஷ்ட திசை: தென்மேற்கு

 • சவால்களை கண்டு அஞ்சாதவர்களே! சனியும், செவ்வாயும் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் வசதி, வாய்ப்புகள் பெருகும். வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். மழலை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளின் தவறைச் சுட்டிக் காட்டித் திருத்துவீர்கள். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். என்றாலும் சூரியன் 5-ல் நிற்பதால் பிள்ளைகளால் அலைச்சல் ஏற்படும். பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் பழைய உறவினர், நண்பர்கள் வீடு தேடி வருவார்கள். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும். நவீன ரக செல்போன் வாங்குவீர்கள். குருவும், ராகுவும் 8-ல் மறைந்திருப்பதால் சிறுசிறு விபத்துகள், ஏமாற்றங்கள், பிறர் மீது நம்பிக்கையின்மை, தோலில் நமைச்சல், இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைபாடுகளெல்லாம் வந்துச் செல்லும். கன்னிப் பெண்களே! வருங்காலம் குறித்து சில புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். வேலையாட்கள் மதிப்பார்கள். பங்குதாரர்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலைப் பார்க்க வேண்டி வரும். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 18, 20, 21 அதிஷ்ட எண்கள்: 1, 9 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம்வெள்ளை, ப்ரவுன் அதிஷ்ட திசை: மேற்கு

 • சுற்றம் சூழ வாழ்வதை விரும்புபவர்களே! புதனும், சுக்ரனும் சாதகமாக இருப்பதால் உங்கள் செயலில் வேகம் கூடும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். பணவரவு திருப்தி தரும். உங்கள் ரசனைக் கேற்ப வீடு அமையும். பிள்ளைகளை அவர்கள் எதிர்பார்த்த நிறுவனத்தில், விரும்பிய பாடப்பிரிவில் சேர்ப்பீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். சிலர் வீடு மாற வேண்டுமென நினைப்பீர்கள். 7-ல் ராகுவும், ராசிக்குள் கேதுவும் தொடர்வதால் அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். மனைவியுடன் மோதல்கள், அவருக்கு அடி வயிற்றில் வலி மற்றும் மூட்டு வலி வந்துப் போகும். மற்றவர்களின் ஆலோசனையின்றி யோசித்து முடிவெடுக்கப்பாருங்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். செவ்வாய் 10-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். புதிதாக சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால் அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். தாயாரின் உடல் நிலை சீராகும். வழக்கு சாதகமாகும். கன்னிப் பெண்களே! பெற்றோர் பாசமழைப் பொழிவார்கள். வேற்றுமதத்தவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். வேலையாட்கள் விசுவாசமாக நடந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கலைத்துறையினரே! நீங்கள் எதிர்பார்த்த வாய்ப்புகள் தேடி வரும். வார்த்தைக்கு மதிப்புக் கூடும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 20, 21, 22 அதிஷ்ட எண்கள்: 3, 4 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், சில்வர்கிரே அதிஷ்ட திசை: தென்கிழக்கு

 • மனதில் பட்டதை பளிச்சென்று பேசுபவர்களே! புதன் 3-ல் நிற்பதுடன், சூரியனும் 3-ல் அமர்ந்திருப்பதால் புதிய முயற்சிகள் பலிதமாகும். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பூர்வீக சொத்தை மாற்றியமைப்பீர்கள். ராகு வலுவாக இருப்பதால் உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிவீர்கள். வேற்றுமதம், இனத்தவர்களால் ஆதாயம் உண்டு. கடந்த கால இனிய அனுபவங்களை அவ்வப்போது நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். சுக்ரன் சாதகமாக இருப்பதால் வாகன வசதிப் பெருகும். வீடு கட்ட லோன் கிடைக்கும். செவ்வாய் 9-ல் நிற்பதால் எதிர்ப்புகள் அடங்கும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். உங்கள் ராசிநாதன் குரு 6-ம் வீட்டில் மறைந்திருப்பதால் எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட பலமுறை போராடி முடிக்க வேண்டி வரும். முன்பின் தெரியாதவர்களிடம் அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. வங்கிக் காசோலையை முன்னரே கையெழுத்திட்டு வைக்க வேண்டாம். கன்னிப் பெண்களே! சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். வேலையாட்களை அவர்கள் போக்கிலே விட்டுப் பிடிப்பது நல்லது. கடையை உங்கள் ரசனைக்கேற்றபடி மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகப் பேச்சை குறைக்கவும். அதிகாரிகள் சொல்வதை உடனே செயல்படுத்துங்கள். கலைத்துறையினரே! ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகும். விவேகமான முடிவுகளால் அனைவரையும் அதிர வைக்கும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 16, 19, 22 அதிஷ்ட எண்கள்: 4, 8 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், மஞ்சள் அதிஷ்ட திசை: வடக்கு

http://www.kathiravan.com/?page_id=1302