இராசிபலன்கள் 05-05-2016 முதல் 12-05-2016 வரை

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

வார பலன், ஜாதகம், Weekly Astrology Tamil, Weekly Astrology In Tamil, Tamil Weekly Astrology, Tamil Astrology For This Week, Tamil Astrology Weekly Predictions, Astrology In Tamil, Free Tamil Astrology, Tamil Astrology Horoscope, Tamil Astrology Rashi, Tamil Astrology Rashi Chart

கதிரவனுக்காகக் கணித்து எழுதியவர்  ஜோதிடமணி பிரம்மஸ்ரீ ரகுநாத ஐயர் தமிழ்நாடு, இந்தியா

  • தவறுகளை தட்டிக் கேட்கும் நெஞ்சுரம் கொண்டவர்களே! பாக்யாதிபதி குருவும், ராசிநாதன் செவ்வாயும் வலுவாக இருப்பதால் யார் யாரிடம் எப்படி பழக வேண்டும், எப்படி நடந்துக் கொள்ள வேண்டுமென்ற சூட்சுமத்தை உணர்வீர்கள். சிலரின் மறுபக்கத்தை உணர்வீர்கள். பணம், வசதி இருந்தால் வெளியில் கிடைக்கும் மரியாதையை கண்டு வியப்பீர்கள். சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். புதன் ராசிக்குள் நிற்பதால் இங்கிதமாகப் பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. புது நட்பு மலரும். பயணங்களால் உற்சாகம் தங்கும். ராசிக்குள் சூரியனும், 5-ல் ராகுவும் தொடர்வதால் நீங்கள் சாந்தமாக இருந்தாலும் உங்களைச் சிலர் சீண்டிப் பார்ப்பார்கள். உணர்ச்சிவசப்படாதீர்கள். நெஞ்சு வலி, பைல்ஸ் வந்துப் போகும். பழங்கள் அதிகம் சாப்பிடுங்கள். கேது லாப வீட்டில் நிற்பதால் வருமானம் உயரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பணவரவு அதிகரிக்கும். வேற்றுமாநிலம், நாடு சென்று வருவீர்கள். கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். அஷ்டமத்துச் சனி தொடர்வதால் நம்பிக்கைக்குரியவர்கள் சிலர் நன்றி மறந்துப் பேசுவார்கள். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் மேலதிகாரி பக்கபலமாக இருப்பார். சக ஊழியர்களுடன் கனிவாகப் பழகுங்கள். கலைத்துறையினரே! தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். கோபத்தை கட்டுப்படுத்தினால் வெற்றி பெறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 5, 6, 8 அதிஷ்ட எண்கள்: 5, 8 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம் அதிஷ்ட திசை: தென்மேற்கு

  • காலம் கனியும் வரை காத்திருப்பவர்களே! செவ்வாய் ஆட்சிப் பெற்று 7-ல் அமர்ந்திருப்பதால் தன்னம்பிக்கை பிறக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். சுக ஸ்தானத்தில் குருவும், ராகுவும் தொடர்வதால் வேலைச்சுமை இருக்கும். சிறுசிறு விபத்துகள், தொண்டை வலி, சளித் தொந்தரவு வந்துப் போகும். தாயாருடன் விவாதம் வரும். அவருக்கு மருத்துவச் செலவுகளும் ஏற்படும். பிள்ளைகளின் கல்லூரி, பள்ளிச் சேர்க்கைக்காக அலைய வேண்டி வரும். ராசிநாதன் சுக்ரனும், பூர்வ புண்யாதிபதி புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் சுபச் செலவுகள் அதிகமாகும். வாகனம் சரி செய்வீர்கள். பழுதான ஃப்ரிட்ஜ், வாஷிங் மிஷின் மாற்றுவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். 12-ல் சூரியன் இருப்பதால் அடுத்தடுத்து பயணங்களும், செலவினங்களும் கூடும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். அரசு விவகாரங்களில் அலட்சியம் காட்டாதீர்கள். கண்டகச் சனி தொடர்வதால் உள்மனதில் ஒருபயம், சின்ன சின்ன போராட்டம், நிம்மதியற்றப் போக்கு வந்துப் போகும். மனைவியின் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். கன்னிப் பெண்களே! காதல் கசந்து இனிக்கும். உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்த புது சலுகைகளை அறிமுகம் செய்வீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவீர்கள். முயன்று தவறி முன்னேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 3, 6, 7 அதிஷ்ட எண்கள்: 6, 9 அதிஷ்ட நிறங்கள்: சில்வர்கிரே, ரோஸ் அதிஷ்ட திசை: மேற்கு

  • மலர்ந்த முகத்துடன் அனைவரிடமும் மனம் விட்டுப் பேசுபவர்களே! செவ்வாயும், சனியும் வலுவாக 6-ம் வீட்டில் நிற்பதால் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வீடு வாங்க, கட்ட லோன் கிடைக்கும். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள். வீடு மாறுவீர்கள். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். புறநகரில் வீட்டு மனை வாங்க முயற்சிப்பீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். 3-ல் குரு நீடிப்பதால் முயற்சிகள் தாமதமாகும். முன்கோபத்தை தவிர்க்கவும். 3-ல் ராகு வலுவாக நிற்பதால் எதிர்ப்புகள் அடங்கும். வேற்றுமதத்தவர், மாநிலத்தவர்கள் உதவுவார்கள். வெளிநாடு சென்று வருவீர்கள். லாப வீட்டில் சூரியன், புதன், சுக்ரன் நிற்பதால் அரசால் அனுகூலம் உண்டு. சவாலான விஷயங்களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். புது வேலை அமையும். ஆடை, ஆபரணம் சேரும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். நட்பு வட்டம் விரிவடையும். கன்னிப் பெண்களே! உங்களின் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். வி.ஐ.பிகளும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். அலுவலகத்தை விரிவுப்படுத்தி கட்டுவீர்கள். சக ஊழியர்களுடன் கசப்புணர்வுகள் வந்துச் செல்லும். கலைத்துறையினரே! வெளிநாட்டு புது நிறுவனங்கள் உங்களுக்கு வாய்ப்பளிக்கும். வசதி, வாய்ப்புகள் பெருகும் வாரமிது அதிஷ்ட தேதிகள்: 2, 3, 5 அதிஷ்ட எண்கள்: 1, 5 அதிஷ்ட நிறங்கள்: சிவப்பு, பிஸ்தாபச்சை அதிஷ்ட திசை: வடக்கு

  • கலங்கி நிற்கும் மனிதர்களை கலகலப்பாக்குபவர்களே! 10-ல் தொடரும் சூரியனும், புதனும் உங்களின் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றுவார்கள். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். எதிர்மறை எண்ணங்கள் விலகும். புண்ணிய ஸ்தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். பழைய நண்பர், உறவினர்களை சந்தித்து மகிழ்வீர்கள். உங்கள் கல்வித் தகுதியை மேம்படுத்திக் கொள்வீர்கள். 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் இருப்பதால் கண் வலி, பேச்சால் பிரச்னைகள், கணுக்கால் வலி வந்துப் போகும். வாகனத்தில் கவனம் தேவை. யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். யாருக்காகவும் சாட்சி கையப்பமிட வேண்டாம். 5-ல் செவ்வாய் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் பிள்ளைகளால் மதிப்புச் கூடும். சகோதர வகையில் நன்மை உண்டாகும். சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். சுக்ரன் சாதகமாக இருப்பதால் சுற்றுலா சென்று வருவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். தாய்வழி சொத்து கைக்கு வரும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். 2-ம் வீட்டில் குரு வலுவாக இருப்பதால் திடீர் பணவரவு உண்டு. குழந்தை பாக்யம் கிடைக்கும். கல்யாணம் கூடி வரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கன்னிப் பெண்களே! தவறான எண்ணங்களுடன் பழகியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். வியாபாரத்தில் அதிரடி அறிவிப்புகள் மூலம் போட்டிகளை ஈடுகட்டுவீர்கள். வேலையாட்கள், வாடிக்கையாளர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் உங்களுடைய கடின உழைப்பை உயரதிகாரி மெச்சுவார். கலைத்துறையினரே! உங்கள் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். திடீர் யோகம் தரும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 6, 7, 8 அதிஷ்ட எண்கள்: 2, 6 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே அதிஷ்ட திசை: கிழக்கு

  • மக்களின் நலனுக்காக அயராது போராடுபவர்களே! சுக்ரனும், புதனும் சாதகமாக இருப்பதால் தடைகள் பல வந்தாலும் சளைக்காமல் போராடும் மனப்பக்குவம் உண்டாகும். கடனாக கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வீடு, மனை, வாகனம் வாங்க உதவிகள் கிடைக்கும். சிலர் உங்கள் ரசனைக் கேற்ப வீட்டிற்கு மாறுவீர்கள். உறவினர், நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். அர்த்தாஷ்டமச் சனி, ஜென்ம குரு மற்றும் ராசிக்குள் ராகு நீடிப்பதால் கோபத்தை குறையுங்கள். சகிப்புத் தன்மையும் உங்களுக்கு அதிகம் தேவைப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பிரச்னைகளும், போராட்டங்களம் இருந்துக் கொண்டேயிருக்கும். உங்களுடைய திறமைக் குறைந்து விட்டதாக நீங்களே சில நேரங்களில் நினைத்துக் கொள்வீர்கள். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்கள் உங்களை சரியாக மதிக்கவில்லையென்றெல்லாம் ஆதங்கப்பட்டுக் கொள்வீர்கள். பணப்பற்றாக்குறை அதிகரிக்கும். தர்சங்கடத்திற்கு உள்ளாகுவீர்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் சின்ன சின்ன உடற்பயிற்சி, தினசரி நடைப்பயிற்சியை மேற்கொள்ளப்பாருங்கள். ஆனால் யோகாதிபதி செவ்வாய் 4-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கன்னிப் பெண்களே! பெற்றோர் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களைக் குறைக் கூறவார்கள். சக ஊழியர்களால் அலைக்கழிக்கப்படுவீர்கள். கலைத்துறையினரே! உங்களின் படைப்புத் திறன் வளரும். தன் கையே தனக்குதவி என்பதை உணரும் தருணமிது. அதிஷ்ட தேதிகள்: 3, 7, 8 அதிஷ்ட எண்கள்: 3, 9 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, பிங்க் அதிஷ்ட திசை: தென்கிழக்கு

  • பகைவனுக்கும் உதவும் பரந்த மனசு கொண்டவர்களே! செவ்வாயும், சனியும் 3-ம் வீட்டிலேயே முகாமிட்டிருப்பதால் பெரிய திட்டங்கள் நிறைவேறும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள். பாதிப்பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதித் தொகை தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். 8-ல் புதன் நிற்பதால் திடீர் பயணங்களும், சரியாக உறக்கமில்லாமலும் போகும். உறவினர், நண்பர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். சூரியனும் 8-ல் நிற்பதால் அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வி.ஐ.பிகளுடன் கருத்து மோதல்கள் வந்துப் போகும். சுக்ரன் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். வீட்டிற்கு தேவையான அடிப்படை சாதனங்கள் வாங்குவீர்கள். ராகுவும், குருவும் 12-ல் மறைந்திருப்பதால் வீண் அலைச்சல், ஏமாற்றம், மனஇறுக்கம் வந்துப் போகும். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். சாதுக்கள் உதவுவார்கள். கேது 6-ல் நிற்பதால் பழைய இனிய அனுபவங்களை நினைவுக் கூர்ந்து மகிழ்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். கன்னிப்பெண்களே! புதிய முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்வீர்கள். வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் அதிகப் பேச்சை குறைக்கவும். அதிகாரியால் சில நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். கலைத்துறையினரே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கடின உழைப்பால் சாதிக்கும் வேளையிது. அதிஷ்ட தேதிகள்: 2, 3, 5 அதிஷ்ட எண்கள்: 1, 7 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள் அதிஷ்ட திசை: கிழக்கு

  • விருப்பு வெறுப்பு இல்லாமல் எதையும் செய்பவர்களே! உங்கள் ராசிநாதன் சுக்ரன் 7-ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் பிரிந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். மனைவியுடனான மனஸ்தாபங்கள் விலகும். பணவரவு அதிகரிக்கும். சளித் தொந்தரவு, கழுத்து வலி நீங்கும். வாகனம் வாங்குவீர்கள். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். உறக்கம் வரும். வீடு மாறுவீர்கள். பாதச் சனி தொடர்வதால் பழைய பிரச்னைகளை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். மறதி அதிகரிக்கும். மற்றவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு மயங்காதீர்கள். யோசித்து செயல்படுங்கள். சூரியன் ராசியைப் பார்ப்பதால் சில நேரங்களில் உணர்ச்சிவசப்படுவீர்கள். குரு, புதன் மற்றும் ராகு உங்களுக்கு சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். ஷேர் மூலம் பணம் வரும். சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள். எதிர்பார்த்த விலைக்கு வீடு விற்கும். தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். கன்னிப் பெண்களே! காதலும் இனிக்கும், கல்வியும் இனிக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். கலைத்துறையினரே! தடைப்பட்டிருந்த உங்களுடைய படைப்புகள் ரிலீசாகும். உண்மையால் உயரும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 2, 3, 7 அதிஷ்ட எண்கள்: 5, 8 அதிஷ்ட நிறங்கள்: பச்சை, சில்வர்கிரே அதிஷ்ட திசை: வடமேற்கு

  • காசுபணத்திற்கு விலை போகாதவர்களே! ராசிநாதன் செவ்வாய் ஆட்சிப் பெற்று ராசியிலேயே அமர்ந்திருப்பதால் சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். தைரியம் பிறக்கும். வீடு, மனை விற்பது, வாங்குவது சாதகமாக அமையும். இழுபறியாக உள்ள வேலைகள் உடனே முடியும். உடன்பிறந்தவர்கள் உங்கள் அருமையைப் புரிந்துக் கொள்வார்கள். எதிர்ப்புகள் அடங்கும். சூரியன் 6-ல் தொடர்வதால் அதிக வட்டிக் கடனை தீர்க்க குறைந்த வட்டியில் கடன் உதவி கிட்டும். அரசாங்கத்தில் பெரிய பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வேலைக் கிடைக்கும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். புதனும், சுக்ரனும் 6-ல் மறைந்திருப்பதால் தொண்டைப் புகைச்சல், செரிமானக் கோளாறு, சளித் தொந்தரவு வந்துப் போகும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோப் பிரச்னையால் பிரிவுகள் வரக்கூடும். உறவினர், நண்பர்கள் விஷயத்தில் அத்துமீறி மூக்கை நுழைக்க வேண்டாம். செலவினங்களும், அலைச்சல்களும் தொடரும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். நிழல் கிரகங்களான ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால் மூச்சுப் பிடிப்பு, காய்ச்சல், தலைச்சுற்றல் அடிக்கடி வரக்கூடும். வாழ்க்கையில் வெற்றி பெற முடியுமோ, முடியாதோ என்றெல்லாம் சில நேரங்களில் சங்கடப்படுவீர்கள். கன்னிப் பெண்களே! சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். வேலையாட்கள், பங்குதாரர்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் உங்கள் திறமையை மூத்த அதிகாரி பரிசோதிப்பார். கலைத்துறையினரே! உங்களைப் பற்றிய விமர்சனங்களும், வதந்திகளும் அதிகமாகும். பொறுமையை கடைபிடிக்க வேண்டிய வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 4, 5, 8 அதிஷ்ட எண்கள்: 6, 9 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ஆரஞ்சு அதிஷ்ட திசை: தெற்கு

  • லட்சிய கனவுடன் வாழ்பவர்களே! ராசிநாதன் குருபகவானும், கேதுவும் வலுவாக இருப்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். ஆன்மிகப் பெரியோர்களின் ஆசிப் பெறுவீர்கள். வீடு கட்ட, வாங்க தாமதமான வங்கிக் கடன் கிடைக்கும். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். புது வேலை அமையும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். வேற்றுமொழி, இனத்தவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். தள்ளிப் போன திருமணம் கூடி வரும். சுக்ரனும், புதனும் சாதகமான நட்சத்திரங்களில் சென்றுக் கொண்டிருப்பதால் முடிக்கவே முடியாது என நினைத்திருந்த வேலைகளை கூட, முடித்துக் காட்டுவீர்கள். பழைய நண்பர், உறவினர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய வழி கிடைக்கும். 5-ல் சூரியன் தொடர்வதால் பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் அதிகமாகிக் கொண்டேப் போகும். திடீர் பயணங்கள் உண்டு. அரசாங்க விஷயங்கள் தள்ளிப் போய் முடியும். 9-ல் ராகு தொடர்வதால் சேமிப்புகள் கரையும். தந்தையாருக்கு வேலைச்சுமை, இரத்த அழுத்தம், நெஞ்சு வலி வந்துப் போகும். அவருடன் மனவருத்தமும் வரக்கூடும். கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ற பொருட்களை கொள்முதல் செய்து லாபத்தை பெருக்குவீர்கள். வேலையாட்கள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் சொந்த விஷயங்களை உங்களிடம் சொல்லி ஆறுதல் அடைவார்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள். திட்டமிட்ட காரியங்களில் ஒருசில வெற்றி பெறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 5, 7, 8 அதிஷ்ட எண்கள்: 2, 8 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன் அதிஷ்ட திசை: வடமேற்கு

  • உண்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களே! உங்கள் ராசிக்கு கேந்திர ஸ்தானமான 4-ம் இடத்தில் சூரியன், புதன் மற்றும் சுக்ரன் அமர்ந்திருப்பதால் மாறுபட்ட அணுகுமுறையால் எல்லோரையும் கவருவீர்கள். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். வீட்டை இடித்துக் கட்டுவது, மாறுவது, அழகுப்படுத்துவது, விரிவுப்படுத்துவது போன்ற முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். ஒரளவு பணம் வரும். சொந்த-பந்தங்களின் சுயரூபத்தைப் புரிந்துக் கொண்டு செயல்படத் தொடங்குவீர்கள். லாப வீட்டிலேயே சனியும், செவ்வாயும் வலுவாக அமர்ந்திருப்பதால் தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும். ரியல் எஸ்டேட், ஷேர் மூலமாக பணம் வரும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். ராசிக்கு 8-ல் ராகுவும், 2-ல் கேதுவும் தொடர்வதால் கண்ணில் சின்னதாக தூசி விழுந்தாலும் மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது. காலில் அடிப்பட வாய்ப்பிருக்கிறது. இடம், பொருள், ஏவலறிந்துப் பேசப்பாருங்கள். உங்களுக்கு பல வருட காலமாக நல்ல நண்பர்களாக இருப்பவர்களை மற்றவர்களுக்கு இப்போது அறிமுகப்படுத்தி வைக்க வேண்டாம். குருவும் 8-ல் நீடிப்பதால் ஒற்றையாக இருந்து எவ்வளவு தான் போராடுவது, எத்தனைக் காலத்திற்கு தான் இப்படி கஷ்டப்படுவது என்ற ஒரு ஆதங்கமும் அவ்வப்போது வெளிப்படும். கன்னிப் பெண்களே! உங்களுடைய புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள். வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு. திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். உத்யோகத்தில் உயரதிகாரிகள் பாரபட்சமாக நடந்துக் கொள்வார்கள். சக ஊழியர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்காதீர்கள். கலைத்துறையினரே! நல்ல வாய்ப்புகள் கிடைத்து அதிகம் சம்பாதிப்பீர்கள். சகிப்புத் தன்மையால் சங்கடங்கள் தீரும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 2, 8, 7 அதிஷ்ட எண்கள்: 1, 3 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க் அதிஷ்ட திசை: மேற்கு

  • தலைமைப் பண்பு அதிகமுள்ளவர்களே! சூரியன் சாதகமாக இருப்பதால் சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். மனஇறுக்கம் விலகும். அரசால் ஆதாயம் உண்டு. வேலை கிடைக்கும். குருவால் திடீர் பயணங்கள் உண்டு. பழைய சொந்த-பந்தங்களை சந்திப்பீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை முடிப்பீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். பிரபல யோகாதிபதி சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் பணவரவு அதிகரிக்கும். திட்டமிட்டு பல வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்தவற்றை இப்போது வாங்கித் தருவீர்கள். திருமணம், கிரகப் பிரவேசங்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். வீடு மாறுவீர்கள். காற்றோட்டம், தண்ணீர் வசதி உள்ள இடத்தில் வீடு கிடைக்கும். வாகனப் பழுது நீங்கும். புதன் வலுவாக இருப்பதால் வி.ஐ.பிகளால் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்தால் வருமானம் வரும். நட்பு வகையில் நல்ல செய்தி கேட்பீர்கள். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததால் அவ்வப்போது எதிர்காலம் பற்றிய பயம், வீண் விரையங்கள், கவலைகள், மனைவிக்கு அடிவயிற்றில் வலி, மாதவிடாய்க் கோளாறு வந்துப் போகும். கன்னிப் பெண்களே! உங்களின் எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் மேலதிகாரியின் குறை, நிறைகளை சுட்டிக் காட்டுவீர்கள். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். கலைத்துறையினரே! எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புதிய திட்டங்கள் நிறைவேறும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 2, 4, 5 அதிஷ்ட எண்கள்: 2, 8 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, மஞ்சள் அதிஷ்ட திசை: தென்கிழக்கு

  • போராட்டங்களை சளைக்காமல் எதிர்கொள்பவர்களே! 6-ல் நிற்கும் ராகுவும், 9-ல் ஆட்சிப் பெற்று அமர்ந்திருக்கும் செவ்வாயும் உங்கள் புகழ், கௌரவத்தை ஒரு படி உயர்த்தும். பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்வீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். ஆன்மீகவாதிகள், அரசியல்வாதிகள் உதவுவார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். சகோதரங்கள் உறுதுணையாக இருப்பார்கள். புதன் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் பொது அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். மனைவிவழியில் உதவிகள் உண்டு. சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் வீடு, வாகனம் அமையும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக அமையும். தூரத்து சொந்தம் தேடி வரும். வங்கி லோன் கிடைத்து புதிதாக வீடு கட்டத் தொடங்குவீர்கள். சூரியன் 2-ல் நிற்பதால் கண் எரிச்சல், பல் ஈறில் வலி, காது வலி வந்துப் போகும். எடுத்தோம், கவிழ்தோம் என்றெல்லாம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். நிதானம் அவசியம். ராசிநாதன் குரு 6-ல் மறைந்திருப்பதால் தோற்றுவிடுவோமோ என்ற ஒரு அவநம்பிக்கை வந்துப் போகும். தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். கன்னிப் பெண்களே! காதல் கைக்கூடும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். பழைய வேலையாட்கள், பங்குதாரர்கள் மீண்டும் வந்து இணைவார்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரிகள் பாராட்டுவார்கள். சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னைகள் வந்துப் போகும். கலைத்துறையினரே! எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். எதிர்பாராத திடீர் நன்மைகள் சூழும் வாரமிது. அதிஷ்ட தேதிகள்: 2, 3, 5 அதிஷ்ட எண்கள்: 3, 9 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, ரோஸ் அதிஷ்ட திசை: மேற்கு

http://www.kathiravan.com/?page_id=1302
Share with your friends










Submit